_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, September 29, 2008

குறவர்களும் வாழ்வியல் விஞ்ஞானமும்!

குறவர்களும் வாழ்வியல் விஞ்ஞானமும்!

இலக்கியங்கள், கதைகள், பாடல்கள், சினிமாக்கள் என்று அனைத்திலும் குறவன் குறத்தியைப்பற்றி சொல்லாத ஊடகங்கள் இல்லை!! ஆனால் இவர்கள் இந்திய சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான் எனபது பலருக்கும் புரியாத புதிர். இதற்கு இவர்களின் சமுக அமைப்பும் சமுக கட்டுபாடும் மற்ற சமுகத்திடமிருந்து விளக்கியுள்ளது. தேர்தல் சமயத்தில் மட்டுமே இவர்களை இந்தியர்களாக மதிப்பதும் பிறகு மறந்துவிடுவதும் வாடிக்கையாகும்.

குறவர்கள் நாடோடி இனத்தை சார்ந்தவர்கள், இவர்களின் தொழில் மற்றும் சமுக அமைப்பு முறைகளில் 20வது வகை குறவர்கள் இருப்பதாக கூறுகின்றனர். குறவன் என்றவுடன் நமக்கு நினைவிக்கு வருவது தெருவோரங்களில் படுத்து உறங்கும் நரிக்குறவர்களைதான். ஆனால் குறவன் என்ற சமுகத்திற்கும் நரிக் குறவனுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அவர்களது மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்கள் சாதாரண் குறவர் இன மக்களின் பழக்கவழக்கங்களில் இருந்து மாறுப்பட்டதாகும். தமிழ் நாட்டில் எத்தனை வகை குறவர் பிரிவுகள் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். 1. குறவர் 2. உப்புக்குறவர் 3. தப்பைக்குறவன் 4. கந்தர்வக் கோட்டை குறவர் 5. ஆத்தூர் கீழநாடு குறவர்(சேலம்) 6. தாடிக் குறவர் (தஞ்சை திருச்சி) 7. மலைக்குறவர் 8. இஞ்சிக்குறவர் (தஞ்சை திருச்சி) 9. கொரவர்(செங்கல்ப்பட்டு) 10. தனிக்குறவர் 11. தோகமலைக் குறவர் 12. வரக நேரிக்குறவர் 13. களிஞ்சிதப்பை கொரவர் (த்ஞ்சை புதுகோட்டை) 14. மோண்டா குறவர் 15. பொன்னைக்குறவர் (வடாஅற்காடு)16. தனிக்குறவர் 17. சேலம் மேலநாடு கொரவர்(மதுரை ,கோவை ,ஈரோடு, புதுகை,திருச்சி,சேலம்) 18. சக்கரத் தாமடை குறவர் 19. சேலம் உப்பு குரவர் 20. சாருங்கப்பள்ளி குறவர் இப்படி பலவகை குறவர்கள் இருந்தாலும் எல்லோரும் பிந்தங்கிய நிலையில்தான் உள்ளனர்.

குறவர்களை சினிமாக்களில் கேளிக்கையாகதான் சித்தரிக்க படுகின்றார்கள். பொதுவாக இவர்களின் தொழில் வேட்டையாடுதல், மணிக்கொர்த்தல் என்பதாக இருந்தாலும். இவர்களின் பிழைப்புக்காக பலவிதமான தொழில்கள் செய்வதும்முண்டு.

குறவர்கள் மராட்டிய வழிவந்தவர்கள் என்றும், மாராட்டிய சிவாஜியின் படைவீரர்கள் என்றும் சொல்லுவதுமுண்டு. மேலும் இவர்கள் லம்பாடி இனத்தை சார்ந்தவர்கள் என்றும் சொல்லுவதுமுண்டு. குறவர் இனத்தில் பெண்கள் அழகுள்ளவர்கள், ஆணுக்கு நிகரானவர்கள். குறவர்களிடம் பெண்ணடிமை என்பது இல்லை. ஆனால் மாலை 6மணிக்குள் வெளியில் சென்ற பெண் கணவனை அடைய வேண்டும் என்பது இவர்களின் கட்டுப்பாடு. விதவை மருமணம், வெளிப்படையான பாலுரவு இவர்களின் சமுகத்தில் உண்டு. பாலுரவுக்கு பஞ்சமில்லை என்பதால் இவர்களிடம் விபச்சாரம் என்பதில்லை.

குறவர்களை பொருத்தவரை தொழில், உணவு, உறக்கம் அவ்வளவுதான், வாழ்கையைப்பற்றி பெரிதாக எதுவும் நினைப்பதில்லை. இவர்கள் கேளிக்கை ரசிப்பவர்கள், சினிமா என்றால் கொள்ளைப் பிரியம். MGR படம் என்றால் அனைவரும் பார்ப்பார்கள்.

இப்படி இந்திய சமுகத்திலிருந்து ஒதுங்கி இருக்கும் சமுதாயத்தை சீர்திருத்தவோ, கல்வியறிவு கொடுக்கவோ எந்த தொண்டுநிர்வணங்கள் முன் வருவதில்லை. காரணம் இவர்களின் சமுக கட்டுப்பாடு மற்றும் இவர்கள் குளிக்காமல் அழுக்கு மயமாக இருப்பதும்தான்.

சில கிருஸ்துவ அமைப்புகள் இவர்களுடன் வாழ்ந்து இவர்களுக்கு கல்வியறிவு மற்றும் தொழில்முறைகளை கற்றுக் கொடுத்தல் போன்றவைகள் செய்து வருகின்றார்கள். பல குறவர்கள் கிருஸ்துவராகியும் உள்ளார்கள். (என்குறிப்பு: கலாச்சாரம், மதம், சமுகம் சீரமைப்பு என்று சொல்லித் திரியும் அரசியல் மற்றும் அமைப்புகள் இவர்களை சீண்டுவதாக் இல்லை,.. பிள்ளையாரை சாடிய பெரியார் கிருஸ்துவத்தை அவ்வளவாக பேசாமைக்கு காரணம் சமுகத்தால் நசுக்கப்பட்டவர்களுக்கு இங்கு ஓரளவுக்கு அடைக்கலம் கிடைகின்றது என்பதால்).

குறவர்கள் வாழ்க்கை நாடோடி வகையை சார்ந்ததால், இவர்களின் வாழ்வில் நடைமுறை விஞ்ஞானமும் கலந்தே இருக்கும்.

குறவர்கள் சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் அறிந்தவர்கள். நாடிப்பார்த்து நோய்க்குறி சொல்லுவார்கள். இன்றய நவீன மருத்துவம் வந்ததும் இவர்களை ஏமாற்றுகாரகளாக சமுகம் சொல்லுகின்றது.

குறத்தி குறிசோசியம் இலக்கிய காலத்திலிருந்து பெறுமைவாய்ந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை முகம் பார்த்து மனோத்தத்துவ முறையில் குறிசொல்லுகின்றனர்.

பாட்டுப்பாடி பச்சை குத்துவதும் குறத்திகளின் தொழில், இன்றும் நவீனமாக நாகரிக பச்சை குத்திக்கொள்கிறனர்.

பொதுவாக கல்யாணம் போன்ற விழாக்களில் குறவன் குறத்திகள் சாப்பிட வருவார்கள். சிலர் அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பார்கள் சிலர் கொடுப்பதும்மில்லை. கொடுக்காததைப்பற்றி கவலைப்படமாட்டார்கள், பலர் சாப்பிட்ட இலையில் இருக்கும் எச்சில் சாதத்தை எடுத்து செல்வார்கள். என்னதான் சாப்பாடு கொடுத்தாலும் சாப்பிட்டு முடித்ததும் எச்சில் இலை சாதம் எடுக்காமல் போகமாட்டார்கள். இப்படி எடுக்கப்பட்ட சாதத்தை எடுத்து சென்று நீரில் நன்றாக கழுவி வெயிலில் காய வைத்து சேகரித்து வைத்து கொண்டு தேவைப்படும்பொது சிறிது எடுத்து சுடுநீரில் போட்டு மறுபடியும் சாதமாக்கி சாப்பிடுவார்கள். இதே தத்துவம்தான் நூடுல்ஸ் போன்ற பதப்படுத்திய உணவு வகைகள்...

குறவர்கள் கூடாரங்களில் வசிப்பவர்கள் தற்ப்பொது அரசாங்கம் இலவச வீடு மற்றும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி வருகின்றது. குறவர்கள் பிழைப்புக்காக ஊர் ஊராக சுற்றுவார்கள். எங்கு சென்றாலும் அவர்கள் பொருள்களையும் எடுத்தே செல்வார்கள். பொழுதுபோக்குகாக ரேடியோவை தோலில் கயிறுக்கட்டி வைத்துக்கொண்டு பாட்டுக் கேட்டவண்ணம் இவர்கள் வேலையை பார்ப்பார்கள். தற்ப்பொது நாகரீகமாக கையடக்க ரேடியோ(walk man) கேட்டு மகிழ்கின்றோம்.

இப்படி செல்லும்போது கைகுழந்தையும் தன் தோலில் துணியை அடக்கமாக கட்டி அதன்மேல் குழந்தையை அமர்த்தி எடுத்துக்கொண்டு தன் வேலைகளில் ஈடுபடுவார்கள். தற்ப்பொது தன் குழந்தையை எடுத்துச்செல்ல தோலில் எடுத்து செல்லும் பை (baby sling) பயன் படுத்துகின்றோம்.

குறவர்கள் மணிக்கோர்க்கும் போது பாசிமணி ஊசி மற்றும் இதரப்பொருள்களை இடுப்பில்( பெண்கள் கழுத்தில்) பை அல்லது டப்பா கட்டி வைத்துக் கொண்டு சுலபமாக வெலைச் செய்வார்கள். தற்ப்பொது இடுப்புபை (pouch) பயன் படுத்துகின்றோம்.

இதுபோல் குறவர்கள் வாழ்வில் கலந்துவிட்ட விஞ்ஞானம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். குறவர்கள் வாழ்க்கை இயற்கையோடு சேர்ந்தே இருப்பதால் இவர்களின் வாழ்கையின் அனுபவ விஞ்ஞானம் அதிகம் காணமுடியும்......

11 comments:

கோவி.கண்ணன் said...

எங்கே பிடிச்சிங்க இவ்வளவு தகவல்களை, நல்லா இருக்கு !

ஆ.ஞானசேகரன் said...

//கோவி.கண்ணன் said...
எங்கே பிடிச்சிங்க இவ்வளவு தகவல்களை, நல்லா இருக்கு !//
நன்றி கண்ணன்!, எங்கள் ஊருக்கு பக்கத்தில்தான் தேவராயநெரி குறவர் காலணியுள்ளது. டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. அங்கிருந்துதான் எனக்கு அறியப்பட்டது. மேலும் நான் 5ம் வகுப்பு படிக்கும் போது எங்கள் ஆசிரியர் குறவர் காலணி பள்ளிக்கு இரண்டு நாள் அழைத்து சென்றார். எங்களை அக்குழந்தைகளுடன் சேர்ந்து படிக்க விளையாட செய்தார். அதன் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கினார். இப்பொழுது அங்கு பட்டதாரி பெண் இருவர் மற்றும் இளஞர்கள் உள்ளனர் என்பது தனி சிறப்பு......

காமராஜ் said...

குறவர் என்ற தலைப்பைப் பார்த்ததும்
வழக்கம் போல ஏதோ நையாண்டிதானோ
என்று நினைத்தேன். நல்லவேளை,
அப்படி ஏதும் இல்லை.

நல்ல பதிவு. ஆனால் பெரும்பாலானோர்
எட்டிப்பார்க்கமாட்டார்கள் கருத்தும் வராது.
தளராமல் தொடர்க.

பெரியார்- நல்ல கோணம்.

ஜாதியமயமானது இந்த இந்தியச் சமூகம்.
நமது வீடுகள் செங்கல், சிமெண்ட், மனலோடு
ஜாதியும் சேர்த்துக் கட்டப்பட்டது.

சளைக்காமல் சொல்லவேண்டும்
வாழ்த்துக்கள் ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

//காமராஜ் said...
குறவர் என்ற தலைப்பைப் பார்த்ததும்
வழக்கம் போல ஏதோ நையாண்டிதானோ
என்று நினைத்தேன். நல்லவேளை,
அப்படி ஏதும் இல்லை.

நல்ல பதிவு. ஆனால் பெரும்பாலானோர்
எட்டிப்பார்க்கமாட்டார்கள் கருத்தும் வராது.
தளராமல் தொடர்க.

பெரியார்- நல்ல கோணம்.

ஜாதியமயமானது இந்த இந்தியச் சமூகம்.
நமது வீடுகள் செங்கல், சிமெண்ட், மனலோடு
ஜாதியும் சேர்த்துக் கட்டப்பட்டது.

சளைக்காமல் சொல்லவேண்டும்
வாழ்த்துக்கள் ஞானசேகரன்.//

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா..

கலகலப்ரியா said...

ஒப்பீடு எல்லாம் நல்லா இருக்கு.. ! எனக்கென்னமோ.. இயந்திரத்துடன் இயந்திரமாகி விட்ட ஜனங்களிடையே இவர்கள் அழகான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று சற்றுப் பொறாமையாக இருக்கு..! :(

ஆ.ஞானசேகரன் said...

// கலகலப்ரியா said...

ஒப்பீடு எல்லாம் நல்லா இருக்கு.. ! எனக்கென்னமோ.. இயந்திரத்துடன் இயந்திரமாகி விட்ட ஜனங்களிடையே இவர்கள் அழகான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று சற்றுப் பொறாமையாக இருக்கு..! :(//

உங்கள் கருத்துரைக்கும் நன்றிங்க

Anonymous said...

MY NAME IS PRABHAKARAN MY NATIVE PLACE PARAMAKUDI RAMNAD DIST I AM ALSO KURAVAN WE ARE NOW GOOD CONTIONS I AM WORKING DUBAI. I HAVE TWO BROTHERS WE HAVE MSP INTERNET CENTRE PARAMAKUDI.WE ARE NRIS MY UNCLE IS SINGAPURE. THAT IS WAY WE ARE ALSO DUBAI , SINGAPURE. WE ARE HAPPY NOW.DONT WORRY KURAVANS, IN FUTURE WE ARE DEVELOP OUR LIFE EVERYBODY SAYING KURAVARS.DONT WORRY GOD WILL HELP. I WILL PRAY TO GOD OUR PEOPLE GO UP LIFE. MY EMAIL ID muthuprabha79@yahoo.com

ஆ.ஞானசேகரன் said...

//Anonymous said...
MY NAME IS PRABHAKARAN MY NATIVE PLACE PARAMAKUDI RAMNAD DIST I AM ALSO KURAVAN WE ARE NOW GOOD CONTIONS I AM WORKING DUBAI. I HAVE TWO BROTHERS WE HAVE MSP INTERNET CENTRE PARAMAKUDI.WE ARE NRIS MY UNCLE IS SINGAPURE. THAT IS WAY WE ARE ALSO DUBAI , SINGAPURE. WE ARE HAPPY NOW.DONT WORRY KURAVANS, IN FUTURE WE ARE DEVELOP OUR LIFE EVERYBODY SAYING KURAVARS.DONT WORRY GOD WILL HELP. I WILL PRAY TO GOD OUR PEOPLE GO UP LIFE. MY EMAIL ID muthuprabha79@yahoo.com//

மகிழ்ச்சி நண்பரே..
உங்களின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சி மேலும் வளர வாழ்த்துகள்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

நிலா said...

http://tamizyan.blogspot.com/2011/01/blog-post_07.html

வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

// நிலா said...

http://tamizyan.blogspot.com/2011/01/blog-post_07.html

வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க நிலா

Anonymous said...

[p]Huge scale continuing [url=http://www.cheapuggonlinesale.co.uk]ugg boots 5825[/url] development of naval energy . It appears to be living practice is usually fast and high . You can buy uggs online website along with affordable price along with totally free . coming from diploma and bottle of spray inside a back-and-forth activity diligently [url=http://www.cheapuggonlinesale.co.uk]cheap ugg boots uk[/url] and also uniformly like the stitches . There are many tips these individuals [url=http://www.cheapuggonlinesale.co.uk]ugg boots uk online[/url] clean and almost innovative once more . voi product 3mm, this quality is usually soft, adaptable, bringing challenge along with dress in weight, so faithfully deformation, offers fine buffer, seismic, cold weather insulation, water weight, chemical tolerant etc; Your third level fabric having fabrics, genuine fleece protector, Sydney as quite cozy . Linked Reports : girls, chololate, shoes or boots,





Email this short article into a Companion!

[url=http://www.cheapuggonlinesale.co.uk]ugg boots uk[/url] Receive Content articles such as this one primary to the email field!Join at no cost nowadays!

Choose Preferred Uggs Traditional Cardy Shoes and boots

Recommendations on When you ought to enable collection on Them: an individual rather small known actuality about the Ugg sheepskin boots standard Cardy boot styles could possibly be the reality which could possibly perhaps be donned perfectly practically almost any time . Related Content articles - Uggs Norge, Uggs Quarterly report, Real Ugg boot,





Email this Article into a Buddy!

Get Articles or blog posts like this one lead to your mail container!Sign up for free currently!

Low-priced Reliable Ugg boot To be found in All [url=http://www.cheapuggonlinesale.co.uk]ugg boots uk sale[/url] Women Measurements

Shoes or boots are completely a new hot product amongst people today, no matter the young or old, without make a difference people.[/p]