_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, November 27, 2008

முழுமையான தமிழை காணமுடியுமா?.. பகுதி-2

முழுமையான தமிழை காணமுடியுமா?.. பகுதி-2

தமிழ், தமிழ் என்று சொல்லும் பொழுது முடிவில் அமிழ்து என்ற ஒலியே முடியும். தமிழ் மொழி ஒரு அமுதம்தான் தமிழில் இல்லாத, வெளிப்படுத்தாத கருத்துகள் இல்லை என்றே சொல்லலாம். வேறு எந்த மொழியில் இந்த அளவிற்க்கு கருத்து கலஞ்சியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட நம்மொழிக்கு நாம் செய்யும் சேவைதான் என்ன? குறைந்தபச்சம் மொழிக்கலப்பை தவிற்கலாம் என்றே தோன்றுகின்றது.
தமிழ்நாட்டில் பல்லவர் காலத்தில்தான் தமிழ் மொழியில் வடமொழிச்சொல் கலப்பு ஆரம்பமானதாக வரலாறு கூறுகின்றது. மேலும் முகலாயர்கள் வருகையால் அரபு மொழியும் சேர்ந்தே கலப்பானதாக கூறுகின்றனர். பின்னர் ஆங்கிலேயர் படையெடுப்புக்கு பின் ஆங்கிலமும் தன்பங்கிற்கு கொலை செய்யும் அளவிற்க்கு தமிழை ட்தமிலாக்கியது. இதற்கு நம்முடைய பொறுப்பின்மையும் காரணம்தான். ட்தமில் பேசுவதை நாகரிகமாக நினைப்பவர்களும் இருப்பதை நினைக்கும் போழுது தமிழ் நம் காலத்திலேயே அழிந்துவிடும் என்றே தோன்றுகின்றது.

பல காலகட்டங்கலாக தமிழில் கலப்பு நடந்துவிட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் இதை முழுவதும் மாற்ற முடியாது என்றாலும் கூட குறைந்தபச்ச கலப்புமொழியை தவிற்ப்பதாலும், தமிழ் சொற்களை பாவிப்பதாலும் முழுமையான தமிழை நம் சந்நதிக்கு கொடுக்க முடியும் என்பதே என் நோக்கம்.

அச்சு இயந்திரங்கள் வந்த காலத்தில் வீரமாமுனிவர்(ஜோசப் பெஸ்கின்- சோசப் பெசக்கின்) வெண்பா, செய்யுள், கவிதை நடையிலிருந்து வேறுப்பட்டு உரைநடையில் நூலாக்கம் செய்தார். தமிழ் இலக்கிய மரபில் இது புது வரவு. தமிழ்மேல் கொண்ட அன்பால் தன் பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டார்...

டாக்டர் MG ராமச்சந்திரன் அவர்கள் முதவராக வந்தபின் பெரியாரின் சீர்திருத்த எழுத்துகளை செயல்வடிவம் கொடுத்து சட்டமாக்கினார். னா,ணா, னை,ணை, போன்ற எழுத்துக்கள் புது வடிவம் கொடுக்கப்பட்டது. இதை நாம் கனனிகளில் பயன் படுத்தும்பொழுது நன்மையாக படுகின்றது. இதுபோல சிரிதாயினும் மொழிக்கு காலத்திற்கேற்றவாறும் புதினங்களுக்காகவும் மாற்றத்தை கொண்டுவரவேண்டும். இப்படிப்பட்ட முயற்சிகளால் நம் சந்நதிகளுக்கு முழுமையான தமிழைக் கொடுக்கமுடியும் என்பதே என் நோக்கம்.

வடமொழிச்சொற்கள் தமிழில் கலந்துவிட்டதனால் கூடவே வடமொழி எழுத்தையும் கடன் வாங்க வேண்டியதாயிற்று. முழுமையான தமிழுக்கு வட எழுத்து தேவைப்படாது என்றே தோன்றுகின்றது. உதாரணமாக புஸ்பம் என்பதை மலர் என்றே சொல்லலாமே. விஷயம் என்பதை விடயம் என்றே சொல்லலாமே. இதுபோல ஆங்கில இடைசொருகலையும் தவிற்த்தால் முழுமையான தமிழை நம் சந்நதிக்கு கொடுக்க முடியும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.

ஸ், ஷ், ஸ்ரீ, ஹ் போன்ற வட எழுத்துக்கு இணையான எழுத்தை காண்பதில் அறிஞர்கள் செயல்பட அரசும் ஆவனைச் செய்தால் மேலும் தமிழுக்கு துணையாக இருக்கலாம். என் தமிழாசிரியர் (அருள்மொழிதேவன்) ஒருமுறை சொன்ன விவரங்கள், நம் மொழியில் கல்வெட்டுகளில் இன்னும் தமிழ் எழுத்துக்கள் புதைந்துள்ளது. இதை வெளிக்கொணர்ந்தால் தமிழ் மொழிக்கு எழுத்துகளை கடன் வாங்க தேவை இருக்காது என்றார். இதுபோல் கீழ் கண்ட எழுத்து 'f', fa. faa போன்ற ஒலி கொடுக்ககூடிய எழுத்துகள் உண்டு என்றும் ஆனால் முறைப்படுத்தாமல் இதற்காக வட எழுத்தை கடன் வாங்குகின்றோம் என்றார்.

உண்மையில் அரசும் அறிஞர்களும் முயற்சித்தால் புதினங்கள் உருவாக்க முடியும் என்பது தெளிவாகின்றது. எதோ ஒரு கவர்ச்சிக்காக அன்னிய மொழியில் கலப்பும் கடன் வாங்குவதும் தொடர்ந்தால் தமிழ் அழிவதைவிட தமிழ் பேசும் நாம் அழிவோம் என்பதும் உண்மை. மொழி என்பது மனிதனின் அடையாளம். மொழி என்பது மனிதனின் வாழ்க்கை முறை. மொழி என்பது பேசும் மனிதனின் கலாச்சாரம். எனவே மொழியை இழந்தால் அவனை இழப்பதோடு அவனின் அடையாளத்தை, வாழ்க்கை முறையை, கலாச்சாரத்தை இழக்க வேண்டும் என்பதும் உண்மை.

ஆங்கில பெயர்கள் மற்றும் பிறமொழி பெயர்கள் சொல்லும் பொழுதும் எழுதும் பொழுதும் அதற்கு தேவையான ஒலியும் எழுத்தும் தமிழில் குறைவு என்பதை ஒத்துகொள்ளகூடியதே. அதற்காக ஒரு ஆராட்சியும் தேவைப்படுவதும் உண்மைதான். அதற்காக முழுமையாக வட எழுத்துகளையும் சொற்களையும் கையாழுவது ஆரோக்கியம் இல்லை என்றே சொல்லலாம். எனவேதான் புதினங்கள் கலத்திற்கேற்றவாறு உருவாக்க வேண்டும் என்பதும் அரசும் , மொழி அறிஞர்களும் செய்யவேண்டியது. இப்படியே விட்டுவிட்டால் முழுமையான தமிழ் நம் கண்முன்னே சாகும்.

இன்றிலிருந்து நாம் செய்யவேண்டியது தமிழில் உள்ள சொல்களை பாவிக்க ஊக்குவித்தல். புதிய சொல்களை தமிழ் மொழிக்கு ஏற்றாவாறு உருவாக்குதல். புதிய சொல்கள் தமிழ் மொழி ஒலிக்கு ஏற்றவாறு பாவித்தல். அன்னிய மொழிச் சொல்லுக்கு ஏற்றவாறு உள்ள சொல் தமிழில் தேடுதல். தேடிய சொல்களை முறையாக பாவித்தல். மேலும் தமிழில் கலந்துவிட்ட கலப்பு மொழியை ஒவ்வொன்றாக கழைதல் என்பதும் முக்கியம்... முடிந்தவரை தமிழ் எழுத்துகளை பாவித்தல் மற்றும் புதிய எழுத்துகள் காணுதல். இதுபோல நாமும் அறிஞர்களும் செய்வதனால் முழுமையான தமிழை காண முடியும் என்பதை யாராலும் தடுக்க முடியாது..

வாழிய தமிழ்! வாழ்க தமிழர்!

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

2 comments:

Anonymous said...

மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். தமிழை செம்மொழியாக்கி அரசாணை இயற்றினால் மட்டும் போத்தாது. அதை வளர்பதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும். அதை செய்வதற்கு நிறைய முயற்சிகள், ஊக்கங்கள் தேவை. நன்றி. இராகவன், நைஜிரியா

ஆ.ஞானசேகரன் said...

//இராகவன், நைஜிரியா said...
மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். தமிழை செம்மொழியாக்கி அரசாணை இயற்றினால் மட்டும் போத்தாது. அதை வளர்பதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும். அதை செய்வதற்கு நிறைய முயற்சிகள், ஊக்கங்கள் தேவை. நன்றி. இராகவன், நைஜிரியா//


நன்றி இராகவன், நைஜிரியா.. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி! நைஜிரியாவில் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் எப்படியுள்ளனர்? அனைவருக்கும் என் வாழ்த்துகள்! அடிக்கடி என் வலைபூக்கு வருகைதந்து ஊக்கம் தாருங்கள்..