_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, August 30, 2009

பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... இறுதி பாகம்

பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... இறுதி பாகம்

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
பசியோடு... மனிதன் போராட்டங்கள்!...

பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... பாகம்-2

என்னதான் அறிவியல் சாதனைகளில் புதுமைகள் பல செய்தாலும் மனிதன் உயிர் வாழ்வது என்பது அந்த ஒரு சாண் வயிற்று பசிக்காகத்தானே!. போராட்டங்கள், புரட்சிகள் பல வெடித்ததும் இந்த பசிக்காகத்தானே!. பல புரட்சிக்கு பின்னும் இந்த பசியின் கொடுமை ஒழிந்தப்பாடில்லை எனபதுதான் கொடுமை.


முன்பு ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டதாம். அப்பொழுது ஒரு வகை களிமண்ணில் ரொட்டி சுட்டு சாப்பிட்டதாக என் பாட்டி சொல்லுவார்கள். அப்பொழுது நான் நம்பவில்லை, இன்றும் தெனாப்பிரிக்காவில் சில இடங்களின் மண்ணாலான ரொட்டிகள் சாப்பிட்டு பல குழந்தைகள் இறந்ததாக செய்திகளில் படித்துள்ளேன். உலகில் ஒரு புறம் பட்டினியால் சாவுகள், மறுபுறம் உணவுப்பொருள்களை வீணாக்குதல். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. சமீபத்தில் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சிங்கப்பூர் உலகிலேயே சிறிய நாடு என்ற வரிசையில் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. இதன் பரப்பளவு அளவில் சிறிய இடம் என்பதால் இங்கு விவசாயம் இல்லை. ஒரு சில இடங்களில் மாதிரிக்காக கீரை வகைகள் பயிர் செய்கின்றனர். இப்படி துளிக்கூட விவசாயம் செய்யாத நாட்டில் ஒருவர் கூட சாப்பிட உணவு இல்லை என்ற நிலை இல்லை. எல்லா உணவுப்பொருள்களும் இங்கு இறக்குமதியாகின்றது. உலகிலேயே 24 மணிநேரமும் எந்த இடத்திலும் எல்லாவகையான உணவுகள் கிடைக்கும் என்றால் அது சிங்கப்பூர்தான் என்றால் மிகையாகாது. வெளிநாட்டில் வேலை செய்துகொண்டு ஏதோ அந்த நாட்டை பீற்றிக்கொள்வதாக எண்ணவேண்டாம். இந்நிலைக்காக இந்நாட்டின் அரசு முனைப்புடன் செயல்படுகின்றதை பார்க்க முடிகின்றது. சரியான தலைவரும் முறையான கட்டமைப்பும் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதை கண்முன் காணமுடிகின்றது. சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு அதனால்தான் இது சாத்தியமாக்கபட்டுள்ளது என்பதை விட எந்த விதமான விவசாயமும் இல்லாத நாட்டில் சாத்தியப்படும்பொழுது எல்லா வளங்களும் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஏன் முடியாது என்று சுய பரிசோதனை செய்வது நல்லது. இந்தியாவின் இன்று மிகபெரிய வளம் குறைவு என்னவென்றால் தன்னலமற்ற தலைவர்களும், சுத்தமுள்ள அரசு அதிகாரிகளும்தான். அரசு அதிகாரிகளின் பொறுப்பின்மைதான் நாட்டை சின்னா பின்னாமாக்கிக் கொண்டுள்ளது.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையேந்த வேண்டும் அயல்நாட்டில்

எல்லா வளங்கள் இருந்தும் முறையற்ற கட்டமைப்பாலும் சுய நலம் கொண்ட தலைவர்களாலும் நாட்டை வறுமையில் சிக்கவைக்கின்றனர். ஒருவர் ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு குறைவான வருமானம் என்றால் அது வறுமை என உலக வங்கி நிர்ணயத்துள்ளது. அப்படி பார்த்தால் இந்தியாவில் 41% மக்கள் வறுமையில் இருக்கின்றனர். இது ஆப்பிரிக்கா நாட்டைவிட அதிகம் என சொல்லப்படுகின்றது. 2015 ல் இன்னும் அதிகமானோர் வறுமையில் இருப்பார்கள் என்ற எச்சரிக்கையும் நம்மை கலங்க வைக்கின்றது. இப்படிப்பட்ட வறுமையின் காரணமாக பெற்ற பிள்ளைகளையே விற்கும் அவலங்களும் செய்திகளில் பார்க்க முடிகின்றது.

இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு பின் உலகில் கடுமையான உணவு பஞ்சம் வரும் என பிரபல பொருளாதார நிபுணர் பிரவத் பட்நாயக் எச்சரித்துள்ளார். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அரிசி உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. சுமார் 10 மில்லியன் டன் அரிசி உற்பத்தி குறைய வாய்புள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழல்களில் பசி பட்டினிகளிலிருந்து காப்பாற்றுவதும் மேலும் ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையாகும். நலிந்து வரும் விவாசயத்தை ஊக்குவிக்க கிராமங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்துதல். விவசாயிகளின் ஆரோக்கியம், கல்வி, உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம் மேன்படுத்துதல், நவீன விவசாய முறைகளை அறிமுகம் செய்தல் போன்றவைகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும் என்பதை அரசும் அரசு அதிகாரிகளும் புரிந்துக் கொள்ளவேண்டும். மேலும் தானும் தன்னை சார்ந்தவர்களின் மேன்பாட்டுக்காக நடந்துவரும் அரசின் போக்கில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.

இந்தியாவில் தற்பொழுது தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது அதேபோல் வறுமையின் அளவும் அதிகரித்துள்ளது என்பதை கணக்கிடும்பொழுது. அரசின் கட்டமைப்பில் கோளாருகள் இருப்பதை உணரமுடிகின்றது. கள்ளப்பணம், பதுக்கல், முறையற்ற முறையில் செல்வம் சேர்த்தல், தனிமனிதன் சொத்துகள் ஓரிடத்தில் சேர்தல் போன்ற காரணங்களால் பட்டினி சாவுகளும் அதிகரிக்கின்றது என்பதை இந்த அரசும் உணரவேண்டும். அளவிற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் என்பது தனி மனித திறமை என்றாலும் அது பல உயிர்கள் உயிர் வாழவேண்டிய உணவு என்பதை உணரும் நிலை ஏற்பட வேண்டும். அந்த உள்கட்டமைப்பை அரசுதான் நிர்ணயம் செய்ய வேண்டும்.

நாட்டின் நீரின் தேவையை கருதி நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும். நதி நீர் பங்கீட்டை ஒழுங்கு படுத்த அரசு முன்வரவேண்டிய கட்டாயத்தை உணரவேண்டும்.

வங்கத்தில் ஓடிவரும் நீரின் விசையால்-மையத்து
நாடுகளில் பயிர் செய்வோம்....(பாரதியார்)

கனவுகளும் கர்ப்பனைகள் மட்டும் இந்நாட்டை வளப்படுத்த முடியாது. வளமான செயல்பாடுகள் தேவையாகின்றது என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணரவேண்டும். நாளைய வளமான உலகம் நம்கைகளில் இருப்பதை உணந்துகொண்டாலே போதும் மகிழ்ச்சியான சமூகத்தை பார்க்க முடியும்.

அடுத்த கட்ட சிந்தனைகள் ஏழை, ஏழையாக இருப்பதேன்?.. என்ற தலைப்பின் கீழ்
சிந்தனைகளுடன்
.....
ஆ.ஞானசேகரன்

54 comments:

முனைவர் சே.கல்பனா said...

சமூக சிந்தனையின் வெளிப்பாடு.......உங்கள் பதிவில்..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

”இந்தி”யாவிலா?

அவர்களின் தேசிய உணவே ரொட்டிதானே!

சப்பாத்தி குருமாவுக்கு வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டபோது உ.பி ஆட்சி கவிழ்ந்தது தெரியாதா என்ன?

நாங்கள் தமிழ் நாடு

எங்கள் உணவு கேப்பைக் கூழ்,சோறு

ஈழத்து மக்கள் பிட்டு உண்பது வழக்கம். அதுவும் கேப்பையில செஞ்சதுதான்.(இறைவன் கூட பிட்டுக்குத் தானே மண் சுமந்தார்... அப்படின்னு சொல்றாங்க, படிக்கிறோம்...:))

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர் சே.கல்பனா said...

சமூக சிந்தனையின் வெளிப்பாடு.......உங்கள் பதிவில்..//

மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

”இந்தி”யாவிலா?

அவர்களின் தேசிய உணவே ரொட்டிதானே!

சப்பாத்தி குருமாவுக்கு வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டபோது உ.பி ஆட்சி கவிழ்ந்தது தெரியாதா என்ன?

நாங்கள் தமிழ் நாடு

எங்கள் உணவு கேப்பைக் கூழ்,சோறு

ஈழத்து மக்கள் பிட்டு உண்பது வழக்கம். அதுவும் கேப்பையில செஞ்சதுதான்.(இறைவன் கூட பிட்டுக்குத் தானே மண் சுமந்தார்... அப்படின்னு சொல்றாங்க, படிக்கிறோம்...:))//

பின்னூட்டம் தவறான இடத்தில் வந்துவிட்டதாக தெரிகின்றது ஜோதிபாரதி சார்

Anonymous said...

சம்மந்தபட்டவங்க யோசிச்சா பலனுண்டு..ரொம்ப ஆழமா சிந்திச்சி கொடுத்து இருக்கீங்க சேகர் இந்த தொடர் பதிவை... நிறைய யோசிக்க வைக்கிறது வருமை ஒழிய என்று வழி பிறக்குமோ?

[பி]-[த்]-[த]-[ன்] said...

பாய்ஸ் படத்துல செந்தில் சொல்லும் ஒரு வசனம் தான் ஞாபகத்துக்கு வருது, அது தான் உண்மையும் கூட...

பசியால் மக்கள் இறக்கும் நம் நாட்டில் தான், பணக்காரர்கள் பல கோடியில் திருமணம் செய்கின்றனர்...

பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கின்றனர், ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர்....

போகின்ற போக்கை பார்த்தால் இந்தியா பணக்காரர்கள் மட்டுமே வாழ தகுந்த நாடாக மாறிவிடும் போலிருக்கிறது...

:(

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

சம்மந்தபட்டவங்க யோசிச்சா பலனுண்டு..ரொம்ப ஆழமா சிந்திச்சி கொடுத்து இருக்கீங்க சேகர் இந்த தொடர் பதிவை... நிறைய யோசிக்க வைக்கிறது வருமை ஒழிய என்று வழி பிறக்குமோ?//

வாங்க தமிழ்..
ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்க வேண்டிய ஒன்றுதான்..

நாளை உலகம் நன்றாக இருக்குமா என்று பார்க்கலாம்?

ஆ.ஞானசேகரன் said...

/// [பி]-[த்]-[த]-[ன்] said...

பாய்ஸ் படத்துல செந்தில் சொல்லும் ஒரு வசனம் தான் ஞாபகத்துக்கு வருது, அது தான் உண்மையும் கூட...

பசியால் மக்கள் இறக்கும் நம் நாட்டில் தான், பணக்காரர்கள் பல கோடியில் திருமணம் செய்கின்றனர்...

பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கின்றனர், ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர்....

போகின்ற போக்கை பார்த்தால் இந்தியா பணக்காரர்கள் மட்டுமே வாழ தகுந்த நாடாக மாறிவிடும் போலிருக்கிறது...

:(///

உங்களின் கருத்தும் மிக சரியா இருக்கு நண்பா,... மிக்க நன்றிபா

குறை ஒன்றும் இல்லை !!! said...

:((((((

ஒண்ணும் சொல்ல முடியலேயங்க...

ஆ.ஞானசேகரன் said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...

:((((((

ஒண்ணும் சொல்ல முடியலேயங்க...//

வாங்க நண்பா...
வருகை மகிழ்ச்சியே

நட்புடன் ஜமால் said...

களி மண் உணவா

கற்பனை செய்தே பார்க்க இயலவில்லை.

ஆ.ஞானசேகரன் said...

// நட்புடன் ஜமால் said...

களி மண் உணவா

கற்பனை செய்தே பார்க்க இயலவில்லை.//

என்ன செய்வது நண்பா,... பசியின் கோரம் அப்படி..

சிலவகை மண்ணை ரொட்டியாக சாப்பிட்டால் சிலவகை நோய் சரியாகும் என்பதை கேள்விப்பட்டுள்ளேன்

மிக்க நன்றி நண்பா

RajK said...

//மனிதன் உயிர் வாழ்வது என்பது அந்த ஒரு சாண் வயிற்று பசிக்காகத்தானே.//

உயிர்வாழ்வது பசிக்காக அல்ல; பசி என்பது உயிர்வாழ்வதற்காக. பார்ப்பதற்கு சூரியன் நம்-பூமியை சுற்றுவது போல் தான் இருக்கும். ஆனால், உண்மை அதுவல்ல. பல வியசங்களில் நம்முடைய எண்ணங்களும், அதற்கான தீர்வுகளும் அதுபோலவே எதிர்மறையாக உள்ளது. பணக்காரர்களை திட்டி ஒரு புண்ணியமும் இல்லை. அப்பணத்தை, அவர்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். ஏழையின் பொருளாதார வளர்ச்சி இலவச திட்டங்களில் இல்லை. அரசு அதிகாரிகளும் இந்த சமூகத்திலிருந்தே வருகின்றார்கள். அவர்களின் நடத்தை இந்த சமூகத்தின் கலாச்சார பண்பாட்டையே காட்டுகின்றது. மக்கள் 'வாழ்க' மற்றும் 'தலைவா' கோசங்களை நிறுத்தி, சினிமா நடிகனையெல்லாம் தலைவனாகப் பார்ப்பதை நிறுத்தி, பொருளாதாரம், அரசியல், கலை, அறிவியல், வர்த்தகம் என பலவற்றிலும் தேர்ந்த தலைவர்களை கண்டுகொள்ள வேண்டும்.

ஆ.ஞானசேகரன் said...

[[//மனிதன் உயிர் வாழ்வது என்பது அந்த ஒரு சாண் வயிற்று பசிக்காகத்தானே.//

உயிர்வாழ்வது பசிக்காக அல்ல; பசி என்பது உயிர்வாழ்வதற்காக. பார்ப்பதற்கு சூரியன் நம்-பூமியை சுற்றுவது போல் தான் இருக்கும். ஆனால், உண்மை அதுவல்ல. பல வியசங்களில் நம்முடைய எண்ணங்களும், அதற்கான தீர்வுகளும் அதுபோலவே எதிர்மறையாக உள்ளது. பணக்காரர்களை திட்டி ஒரு புண்ணியமும் இல்லை. அப்பணத்தை, அவர்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். ஏழையின் பொருளாதார வளர்ச்சி இலவச திட்டங்களில் இல்லை. அரசு அதிகாரிகளும் இந்த சமூகத்திலிருந்தே வருகின்றார்கள். அவர்களின் நடத்தை இந்த சமூகத்தின் கலாச்சார பண்பாட்டையே காட்டுகின்றது. மக்கள் 'வாழ்க' மற்றும் 'தலைவா' கோசங்களை நிறுத்தி, சினிமா நடிகனையெல்லாம் தலைவனாகப் பார்ப்பதை நிறுத்தி, பொருளாதாரம், அரசியல், கலை, அறிவியல், வர்த்தகம் என பலவற்றிலும் தேர்ந்த தலைவர்களை கண்டுகொள்ள வேண்டும்.]]

உங்களின் கருத்துரைகளும் சிந்திக்க வைகின்றது. மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

///மக்கள் 'வாழ்க' மற்றும் 'தலைவா' கோசங்களை நிறுத்தி, சினிமா நடிகனையெல்லாம் தலைவனாகப் பார்ப்பதை நிறுத்தி, பொருளாதாரம், அரசியல், கலை, அறிவியல், வர்த்தகம் என பலவற்றிலும் தேர்ந்த தலைவர்களை கண்டுகொள்ள வேண்டும்.///

சுயநலமில்லா தலைவர்களுக்காக மக்கள் காத்துக்கொண்டுள்ளார்கள் என்பதும் உண்மையே! காமராஜ் படிக்காதவர் என்றாலும் கல்வி கண் திறந்தவராயிற்றே

Information said...

ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்ட அற்புதமான பதிப்பு.

ஆ.ஞானசேகரன் said...

/// Information said...

ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்ட அற்புதமான பதிப்பு.//

மிக்க நன்றிங்க

ஹேமா said...

ஞானம் உங்கள் சிந்தனைகள் விரிவடைந்தபடி.அருமை.

ஞானம் பசித்தபோது உணவில்லை.
உறவுகள் கூடி இருந்தது. இப்போ...வீடு நிறைய உணவு நிறைந்து கிடந்தும் உண்ண
யாருமே இல்லாமல்
தனிமை மட்டுமே உறவாய் !

அடுத்த பதிவை எதிர்பார்த்தபடி.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானம் உங்கள் சிந்தனைகள் விரிவடைந்தபடி.அருமை.//

மிக்க நன்றி ஹேமா,..

// பசித்தபோது உணவில்லை.
உறவுகள் கூடி இருந்தது. இப்போ...வீடு நிறைய உணவு நிறைந்து கிடந்தும் உண்ண
யாருமே இல்லாமல்
தனிமை மட்டுமே உறவாய் !//


ரசனையான வரிகளில் வலிகள்..

sakthi said...

இன்றும் தெனாப்பிரிக்காவில் சில இடங்களின் மண்ணாலான ரொட்டிகள் சாப்பிட்டு பல குழந்தைகள் இறந்ததாக செய்திகளில் படித்துள்ளேன். உலகில் ஒரு புறம் பட்டினியால் சாவுகள், மறுபுறம் உணவுப்பொருள்களை வீணாக்குதல்.

வருத்தமான விஷயம் இரண்டுமே

sakthi said...

இப்படி துளிக்கூட விவசாயம் செய்யாத நாட்டில் ஒருவர் கூட சாப்பிட உணவு இல்லை என்ற நிலை இல்லை. எல்லா உணவுப்பொருள்களும் இங்கு இறக்குமதியாகின்றது. உலகிலேயே 24 மணிநேரமும் எந்த இடத்திலும் எல்லாவகையான உணவுகள் கிடைக்கும் என்றால் அது சிங்கப்பூர்தான் என்றால் மிகையாகாது.

அப்படியா புதிய தகவல் இது சேகரன்

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...

இன்றும் தெனாப்பிரிக்காவில் சில இடங்களின் மண்ணாலான ரொட்டிகள் சாப்பிட்டு பல குழந்தைகள் இறந்ததாக செய்திகளில் படித்துள்ளேன். உலகில் ஒரு புறம் பட்டினியால் சாவுகள், மறுபுறம் உணவுப்பொருள்களை வீணாக்குதல்.

வருத்தமான விஷயம் இரண்டுமே//

ம்ம்ம் உண்மையும் வலியும்
=> நன்றி சக்தி

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...

இப்படி துளிக்கூட விவசாயம் செய்யாத நாட்டில் ஒருவர் கூட சாப்பிட உணவு இல்லை என்ற நிலை இல்லை. எல்லா உணவுப்பொருள்களும் இங்கு இறக்குமதியாகின்றது. உலகிலேயே 24 மணிநேரமும் எந்த இடத்திலும் எல்லாவகையான உணவுகள் கிடைக்கும் என்றால் அது சிங்கப்பூர்தான் என்றால் மிகையாகாது.

அப்படியா புதிய தகவல் இது சேகரன்//

தகவல் மட்டும் இல்லை உண்மையும்

=> நன்றி சக்தி

சி.கருணாகரசு said...

அருமை நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// சி.கருணாகரசு said...

அருமை நண்பா//
மிக்க நன்றி

பிரியமுடன்...வசந்த் said...

//கனவுகளும் கர்ப்பனைகள் மட்டும் இந்நாட்டை வளப்படுத்த முடியாது. வளமான செயல்பாடுகள் தேவையாகின்றது என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணரவேண்டும்.//

கண்டிப்பாக

நல்ல சிந்தனைகள் நண்பா’

தொடரட்டும் தங்கள் சிந்தனைகளும் கருத்துக்களும்

RajK said...

//சுயநலமில்லா தலைவர்களுக்காக மக்கள் காத்துக்கொண்டுள்ளார்கள் என்பதும் உண்மையே! காமராஜ் படிக்காதவர் என்றாலும் கல்வி கண் திறந்தவராயிற்றே//

காமராஜர் பள்ளி சென்று படிக்கவில்லை; ஆனால் படித்தவர். படிப்பின் அவசியத்தை உணர்ந்தவர். பள்ளிகூடங்களையும், தொழிற்சாலைகளையும் கட்டிய அவருடைய தொலைநோக்கு பார்வை, தலைவர்களுக்கும், அப்படி பட்ட தலைவர்களை கண்டுகொள்ளும் பாங்கு மக்களுக்கும் வேண்டும். காமராஜர் ஒரு விதிவிலக்கு. ஒருசில நல்ல விதிவிலக்குகள் மட்டுமே ஒரு நீண்ட மேன்பட்ட சமூகத்தை உருவாக்க முடியாது. காமராஜரின் தொலைநோக்கு பார்வையை அன்றைய மக்கள் எந்த அளவு புரிந்து கொண்டார்கள் என்பது எனக்கு சந்தேகமே. ஒரு நல்ல தலைவனுக்கான தகுதி நேர்மை, அறிவு, தொலைநோக்கு பார்வை, நிர்வாகத் திறமை என பல உண்டு. 'சுயநலமற்று' இருக்க வேண்டும் என்பது வெறும் போலிகளையே உருவாக்கும்.

அரசியல்வாதிகளை கண்டபடி திட்டும் நண்பன் ஒருவன், MLA வின் பெண்ணை திருமணம் செய்தபிறகு பெருமையாக சொன்னான்: "அந்த ஏரியாவிலுள்ள அனைத்து ரோடு, காலேஜ் கான்ட்ராக்ட் என் மாமனார் கையில்". இவ்வளவு பெரிய நாட்டில், திறமையான நல்ல தலைவர்களுக்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கும் அவசியமும் இல்லை. அவர்களுக்கு திறமையான தலைவர்களை கண்டுகொள்ள தெரியவில்லை.

கதிர் - ஈரோடு said...

அழுத்தமான சிந்தனைகள் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

[[// RajK said...

//சுயநலமில்லா தலைவர்களுக்காக மக்கள் காத்துக்கொண்டுள்ளார்கள் என்பதும் உண்மையே! காமராஜ் படிக்காதவர் என்றாலும் கல்வி கண் திறந்தவராயிற்றே//

காமராஜர் பள்ளி சென்று படிக்கவில்லை; ஆனால் படித்தவர். படிப்பின் அவசியத்தை உணர்ந்தவர். பள்ளிகூடங்களையும், தொழிற்சாலைகளையும் கட்டிய அவருடைய தொலைநோக்கு பார்வை, தலைவர்களுக்கும், அப்படி பட்ட தலைவர்களை கண்டுகொள்ளும் பாங்கு மக்களுக்கும் வேண்டும். காமராஜர் ஒரு விதிவிலக்கு. ஒருசில நல்ல விதிவிலக்குகள் மட்டுமே ஒரு நீண்ட மேன்பட்ட சமூகத்தை உருவாக்க முடியாது. காமராஜரின் தொலைநோக்கு பார்வையை அன்றைய மக்கள் எந்த அளவு புரிந்து கொண்டார்கள் என்பது எனக்கு சந்தேகமே. ஒரு நல்ல தலைவனுக்கான தகுதி நேர்மை, அறிவு, தொலைநோக்கு பார்வை, நிர்வாகத் திறமை என பல உண்டு. 'சுயநலமற்று' இருக்க வேண்டும் என்பது வெறும் போலிகளையே உருவாக்கும்.

அரசியல்வாதிகளை கண்டபடி திட்டும் நண்பன் ஒருவன், MLA வின் பெண்ணை திருமணம் செய்தபிறகு பெருமையாக சொன்னான்: "அந்த ஏரியாவிலுள்ள அனைத்து ரோடு, காலேஜ் கான்ட்ராக்ட் என் மாமனார் கையில்". இவ்வளவு பெரிய நாட்டில், திறமையான நல்ல தலைவர்களுக்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கும் அவசியமும் இல்லை. அவர்களுக்கு திறமையான தலைவர்களை கண்டுகொள்ள தெரியவில்லை.]]


ஒரு நல்ல தலைவனுக்கான தகுதி நேர்மை, அறிவு, தொலைநோக்கு பார்வை, நிர்வாகத் திறமை எல்லாம் இருக்க வேண்டும் என்பது உண்மைதான் இதில் சுயநலம் சேர்ந்தால் எல்லாமே சும்மாதான்..

அரசு என்பது ஒரு குழு சேர்ந்து நடத்தப்படுவதால் திறமையாளர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் வேண்டியது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள்

ஆ.ஞானசேகரன் said...

// கதிர் - ஈரோடு said...

அழுத்தமான சிந்தனைகள் நண்பா//
மிக்க நன்றி நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன்...வசந்த் said...

//கனவுகளும் கர்ப்பனைகள் மட்டும் இந்நாட்டை வளப்படுத்த முடியாது. வளமான செயல்பாடுகள் தேவையாகின்றது என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணரவேண்டும்.//

கண்டிப்பாக

நல்ல சிந்தனைகள் நண்பா’

தொடரட்டும் தங்கள் சிந்தனைகளும் கருத்துக்களும்//


உங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆழமான கருத்துகள்.. நல்ல தொடர்.. வாழ்த்துகள் தலைவரே..

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

ஆழமான கருத்துகள்.. நல்ல தொடர்.. வாழ்த்துகள் தலைவரே..//

வணக்கம் கார்த்திகைப் பாண்டியன்,..

மிக்க நன்றிங்க

RajK said...

//சுயநலம் சேர்ந்தால் எல்லாமே சும்மாதான்..//
சுயநலம் அற்றவர்கள் யாரும் இல்லை. அன்னை தெரசாவின் பணியிலும் சுயநலம் உண்டு. அது மனதளவில் உங்களை விட அதிகமாகவே இருந்திருக்கலாம். அவர்களின் கடிதங்களை படித்துப்பாருங்கள் புரியும். தன்நலமற்ற தங்க தலைவர் என்று ஏமாளி தொண்டர்கள் வேண்டுமானால் கூவிகொண்டிருப்பார்கள்.

ஒருவன் அவனுடைய வாழ்க்கையை, சந்தோசத்தை கவணித்து கொண்டு, அவனுடைய பணியில் (பொதுபணி உட்பட) நேர்மையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன். ஒருவன் தன் வாழ்க்கையை சுயநலமின்றி தியாகம் செய்வதை நீங்கள் ஏன் விரும்புகின்றீர்கள் என எனக்கு தெரியவில்லை.

//அரசு என்பது ஒரு குழு சேர்ந்து நடத்தப்படுவதால் திறமையாளர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.//
திறமையாளர்களை பயன்படுத்த முதலில் திறமை வேண்டும். நாட்டின் பொருளாதாரம், நிர்வாகம் முதலியவை மிகவும் சிக்கலானது; அதை புரிந்து கொண்டவன் நாட்டை கவனிப்பான். புரியாதவன் அரசியல் விளையாடிக்கொண்டிருப்பான்.

ஆ.ஞானசேகரன் said...

[[ RajK said...

//சுயநலம் சேர்ந்தால் எல்லாமே சும்மாதான்..//
சுயநலம் அற்றவர்கள் யாரும் இல்லை. அன்னை தெரசாவின் பணியிலும் சுயநலம் உண்டு. அது மனதளவில் உங்களை விட அதிகமாகவே இருந்திருக்கலாம். அவர்களின் கடிதங்களை படித்துப்பாருங்கள் புரியும். தன்நலமற்ற தங்க தலைவர் என்று ஏமாளி தொண்டர்கள் வேண்டுமானால் கூவிகொண்டிருப்பார்கள்.

ஒருவன் அவனுடைய வாழ்க்கையை, சந்தோசத்தை கவணித்து கொண்டு, அவனுடைய பணியில் (பொதுபணி உட்பட) நேர்மையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன். ஒருவன் தன் வாழ்க்கையை சுயநலமின்றி தியாகம் செய்வதை நீங்கள் ஏன் விரும்புகின்றீர்கள் என எனக்கு தெரியவில்லை.]]

நேர்மை வேண்டும் என்பதை நானும் வரவேற்கின்றேன்

[[
திறமையாளர்களை பயன்படுத்த முதலில் திறமை வேண்டும். நாட்டின் பொருளாதாரம், நிர்வாகம் முதலியவை மிகவும் சிக்கலானது; அதை புரிந்து கொண்டவன் நாட்டை கவனிப்பான். புரியாதவன் அரசியல் விளையாடிக்கொண்டிருப்பான்.]]

உண்மைதான் அப்படிபட்டவர்கள் அரசியலுக்கு வருவதில்லையே

வால்பையன் said...

//அரசு அதிகாரிகளின் பொறுப்பின்மைதான் நாட்டை சின்னா பின்னாமாக்கிக் கொண்டுள்ளது.//


பாயிண்டை பிடிச்சிட்டிங்க!

ஆ.ஞானசேகரன் said...

[[ வால்பையன் said...
//அரசு அதிகாரிகளின் பொறுப்பின்மைதான் நாட்டை சின்னா பின்னாமாக்கிக் கொண்டுள்ளது.//


பாயிண்டை பிடிச்சிட்டிங்க!]]

வணக்கம் நண்பா,... மிக்க நன்றிங்க‌

RajK said...

//அப்படிபட்டவர்கள் அரசியலுக்கு வருவதில்லையே//
பரிணாம கோட்பாடு மிகவும் பொதுவானது: சூழலுக்கு ஏற்ப சில வெற்றிபெற்று வளர்ச்சி அடையும்; மற்றவை அழிந்து போகும். இப்பொழுது உள்ள சூழல் இப்படிபட்ட அரசியல்வாதிகளையே வெற்றி கொள்ள செய்கின்றது. இச்சூழலை பல காரணிகள் நிர்ணயித்தாலும், மக்களே அதற்கு அடிப்படை காரணம்.

வலசு - வேலணை said...

//
இந்தியாவின் இன்று மிகபெரிய வளம் குறைவு என்னவென்றால் தன்னலமற்ற தலைவர்களும், சுத்தமுள்ள அரசு அதிகாரிகளும்தான்.
//
உண்மை

ஆ.ஞானசேகரன் said...

[[RajK said...
//அப்படிபட்டவர்கள் அரசியலுக்கு வருவதில்லையே//
பரிணாம கோட்பாடு மிகவும் பொதுவானது: சூழலுக்கு ஏற்ப சில வெற்றிபெற்று வளர்ச்சி அடையும்; மற்றவை அழிந்து போகும். இப்பொழுது உள்ள சூழல் இப்படிபட்ட அரசியல்வாதிகளையே வெற்றி கொள்ள செய்கின்றது. இச்சூழலை பல காரணிகள் நிர்ணயித்தாலும், மக்களே அதற்கு அடிப்படை காரணம்.]]

நல்ல அரசியல் வாதிகள் வெற்றி பெறாமைக்கு பொதுமக்கள் மட்டுமே காரணம் இல்லை. இன்றைய பொறுபற்ற அரசு அதிகாரிகளும்தான். இவர்களின் பொறுமின்மைதான் நாட்டின் அதிகபடியான சிக்கலுக்கு காரணம்.

ஆ.ஞானசேகரன் said...

[[ வலசு - வேலணை said...
//
இந்தியாவின் இன்று மிகபெரிய வளம் குறைவு என்னவென்றால் தன்னலமற்ற தலைவர்களும், சுத்தமுள்ள அரசு அதிகாரிகளும்தான்.
//
உண்மை]]
வாங்க நண்பா,.. மிக்க நன்றிங்க‌

RajK said...

//நல்ல அரசியல் வாதிகள் வெற்றி பெறாமைக்கு பொதுமக்கள் மட்டுமே காரணம் இல்லை. இன்றைய பொறுபற்ற அரசு அதிகாரிகளும்தான். இவர்களின் பொறுமின்மைதான் நாட்டின் அதிகபடியான சிக்கலுக்கு காரணம்.//
அதுவும் ஒரு காரணம் தான். ஆனால் அதன் மூலக்காரணம் என்ன? அவர்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா? அவர்களும் நம்மில் ஒருவர் தானே. ஒரு சில கெட்ட கனிகள் எல்லாவற்றிலும் உண்டு. ஆனால், அரசு அதிகாரிகளில் ஒரு சிலர் தான் கெட்ட கனிகளா? பெரும்பான்மையான அரசு அதிகாரிகள் கெட்ட கனிகள் என்றால், அது ஏன்? யோசித்து பாருங்கள் அதில் ஒரு சிக்கலான சுழற்ச்சி இருக்கும் (a cycle based on legislative, executive and judicial branches of India). அதன் மையத்தில் மக்களே/சமூகமே இருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

[[ RajK said...

//நல்ல அரசியல் வாதிகள் வெற்றி பெறாமைக்கு பொதுமக்கள் மட்டுமே காரணம் இல்லை. இன்றைய பொறுபற்ற அரசு அதிகாரிகளும்தான். இவர்களின் பொறுமின்மைதான் நாட்டின் அதிகபடியான சிக்கலுக்கு காரணம்.//
அதுவும் ஒரு காரணம் தான். ஆனால் அதன் மூலக்காரணம் என்ன? அவர்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா? அவர்களும் நம்மில் ஒருவர் தானே. ஒரு சில கெட்ட கனிகள் எல்லாவற்றிலும் உண்டு. ஆனால், அரசு அதிகாரிகளில் ஒரு சிலர் தான் கெட்ட கனிகளா? பெரும்பான்மையான அரசு அதிகாரிகள் கெட்ட கனிகள் என்றால், அது ஏன்? யோசித்து பாருங்கள் அதில் ஒரு சிக்கலான சுழற்ச்சி இருக்கும் (a cycle based on legislative, executive and judicial branches of India). அதன் மையத்தில் மக்களே/சமூகமே இருக்கும்]]

அதனால்தான் மாற்றம் வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றோம்,..

உமா said...

அழகான சிந்தனை. முதலில் நீராதாரம், பசி பின் ஏழ்மை ஆஹா மிக முக்கியமான சிந்திக்க வேண்டிய கருத்துக்களை கையாண்டுள்ளீர்கள்.சிறப்பு. வாழ்த்துக்கள். எண்ணங்கள் எப்பவும் செயலாகும். அப்படி ஒரு எண்ண அலையை நீங்கள் உருவாக்குகிறீர்கள். படிப்பவர்கள் தங்கள் தங்கள் நிலையில் சற்றேனும் யோசித்தாலும் அது இப் பதிவின் வெற்றியே. வாழ்த்துகக்கள்.
அன்புடன் உமா

ஆ.ஞானசேகரன் said...

[[ உமா said...

அழகான சிந்தனை. முதலில் நீராதாரம், பசி பின் ஏழ்மை ஆஹா மிக முக்கியமான சிந்திக்க வேண்டிய கருத்துக்களை கையாண்டுள்ளீர்கள்.சிறப்பு. வாழ்த்துக்கள். எண்ணங்கள் எப்பவும் செயலாகும். அப்படி ஒரு எண்ண அலையை நீங்கள் உருவாக்குகிறீர்கள். படிப்பவர்கள் தங்கள் தங்கள் நிலையில் சற்றேனும் யோசித்தாலும் அது இப் பதிவின் வெற்றியே. வாழ்த்துகக்கள்.
அன்புடன் உமா]]
வாங்க உமா,... உங்களின் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிங்க. உங்களை போன்றவர்களின் ஊக்கமே என்னை நல்ல விடயங்களை எடுத்து கையாளவைக்கின்றது... மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி...

Muniappan Pakkangal said...

Nandraha ezhuthukireergal Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Nandraha ezhuthukireergal Gnanaseharan.//
மிக்க நன்றி சார்... உங்களின் கட்டுரை மணற்கேணிக்கு வந்துள்ளது. மிக்க நன்றி சார்

க.பாலாஜி said...

அருமையான அழுத்தமான ஒரு பகிர்வு அன்பரே...முதல் முறையாக இப்போதுதான் தங்களது பதிவினை படிக்கிறேன்...

சமூகத்தின் சாபக்கேடான பசி, பட்டினி இவைகளை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்...இதற்கு காரணமாய் தாங்கள் சொல்வதும் சரியே...உள்கட்டமைப்பு என்று சரிசெய்யப்படுகிறதோ, அன்றுதான் நமது ஜனநாயகம் சிறக்கும்....

நன்றி...
க. பாலாஜி (மயிலாடுதுறை)

ஆ.ஞானசேகரன் said...

[[க.பாலாஜி said...
அருமையான அழுத்தமான ஒரு பகிர்வு அன்பரே...முதல் முறையாக இப்போதுதான் தங்களது பதிவினை படிக்கிறேன்...

சமூகத்தின் சாபக்கேடான பசி, பட்டினி இவைகளை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்...இதற்கு காரணமாய் தாங்கள் சொல்வதும் சரியே...உள்கட்டமைப்பு என்று சரிசெய்யப்படுகிறதோ, அன்றுதான் நமது ஜனநாயகம் சிறக்கும்....

நன்றி...
க. பாலாஜி (மயிலாடுதுறை)]]

வாங்க க.பாலாஜி உங்களின் முதல் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியே. அதேபோல் உங்களின் கருத்துக்கள் மிக அழகு மேலும் உங்களின் பாராட்டுகளுக்கு நன்றியை சொல்லிக்கொள்கின்றேன்.. அடிக்கடி வந்து உங்களின் ஊக்கங்களை கொடுங்கள்... மிக்க நன்றி
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

பா.ராஜாராம் said...

ரமதான் வேலைகள் என்பதால் ஆசுவாசம் வாய்க்க காணோம் சேகர்.இன்று உங்களின் இந்த மூன்று இடுகையும் ஒருமூச்சில் வாசித்தேன்..என்ன சொல்லட்டும்..நீங்கள்,நண்பர்கள் ஜமால்,நவாஸ் மூன்றுபேருடைய சமுதாயம்,மனிதநேயம் மிக்க அக்கறை கலந்த கட்டுரைகள் பிரமிக்க வைக்கிறது.இந்த வகையான பிரபஞ்ச நேசிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகுமே.
அடர் கானகங்கள்
மழையின் ஆதாரம்.
மழை
பசுமையின்
காரணம்.
ஒன்ரோன்று
பின்னி கிடக்கும்
பிரபஞ்ச ரகசியம்
சொல்லி தா
சக்தி...
உலக இயக்க காரணம் அல்லது சக்தி..சேகர்,ஜமால்,நவாஸ் போன்ற எல்லோருக்கும் நல்லது நினைக்கும் மனசு காரணமாகலாம்தான்.நல்லது மக்கா..தொடருங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// பா.ராஜாராம் said...

ரமதான் வேலைகள் என்பதால் ஆசுவாசம் வாய்க்க காணோம் சேகர்.இன்று உங்களின் இந்த மூன்று இடுகையும் ஒருமூச்சில் வாசித்தேன்..என்ன சொல்லட்டும்..நீங்கள்,நண்பர்கள் ஜமால்,நவாஸ் மூன்றுபேருடைய சமுதாயம்,மனிதநேயம் மிக்க அக்கறை கலந்த கட்டுரைகள் பிரமிக்க வைக்கிறது.இந்த வகையான பிரபஞ்ச நேசிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகுமே.
அடர் கானகங்கள்
மழையின் ஆதாரம்.
மழை
பசுமையின்
காரணம்.
ஒன்ரோன்று
பின்னி கிடக்கும்
பிரபஞ்ச ரகசியம்
சொல்லி தா
சக்தி...
உலக இயக்க காரணம் அல்லது சக்தி..சேகர்,ஜமால்,நவாஸ் போன்ற எல்லோருக்கும் நல்லது நினைக்கும் மனசு காரணமாகலாம்தான்.நல்லது மக்கா..தொடருங்கள்.//

தோழர் பா.ராஜாராம் அவர்களுக்கு உங்களின் வாசிப்பு மற்றும் மனதார பாராட்டும் நற்குணம் என்னை மகிழசெய்கின்றது. உங்களை போன்றவர்களின் ஊக்கம் என்னை போன்றவர்களுக்கு மேலும் மேலும் நல்ல விடயங்களை துணிவுடன் எழுத சொல்லும்... மிக்க நன்றி தோழரே...

சந்ரு said...

// சரியான தலைவரும் முறையான கட்டமைப்பும் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதை கண்முன் காணமுடிகின்றது.//


முற்றிலும் உண்மைதான் நண்பா. "பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... " தொடர் மூலம் பல விடயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

சந்ரு said...

விரைவில் அடுத்த தொடரினை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

[[ சந்ரு said...

// சரியான தலைவரும் முறையான கட்டமைப்பும் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதை கண்முன் காணமுடிகின்றது.//


முற்றிலும் உண்மைதான் நண்பா. "பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... " தொடர் மூலம் பல விடயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.]]

உங்களின் பாராட்டுகளுக்கும் நன்றி நண்பா

[[விரைவில் அடுத்த தொடரினை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.]]

கண்டிப்பாக...