இதயம் என்று எடுத்துக்கொண்டாலே கனிந்த உள்ளம் என்ற பொருள் மறைந்தே இருக்கும், அவற்றில் இரக்க குணமும் இதயத்தை சார்ந்தே சொல்லப்படுகின்றது. கல்நெஞ்சக்காரனை இதயமில்லாதவன் என்றே கூறுகின்றோம்.
கவிஞர் கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்துமதம்" என்ற நூலில், தாய் அன்பை பற்றி சொல்ல வருகையில் ஒரு காதலியின் கதையையும் சொல்லுகின்றார். உலகில் உள்ள அனைத்து அன்புகளில் தாய் அன்பை உயர்ந்தது என பெருமையுடன் கூறுகின்றார். ஒரு காதலனிடம் அவன் காதலி நான் உன்னை மணமுடிக்க வேண்டும் என்றால் உன் தாயின் அன்பு இதயம் எனக்கு காணிக்கையாக வேண்டும் என்று கூறுகின்றாள். அந்த காதலனும் தன் தாயின் இதயம் வேண்டி தாயிடம் சென்று தன்னுடைய கத்தியால் தன் தாயின் நெஞ்சை பிளந்து இதயத்தை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியில் இதயத்தை தன் காதலிக்கு கொடுக்க வேண்டி வேகமாக ஓடுகின்றான், ஓடும்போழுது வழியில் கால் தடுக்கி விழுகின்றான், அப்பொழுது அந்த தாயின் இதயம் என்னபா வழிக்கின்றதா?, என்று கேட்கின்றது.=> இங்கே ஒரு தாயின் இதயம் அழுகின்றது.......... (மேலும் செய்தி: கவிஞர் கண்ணதாசனிடம் வாசகர் ஒருவர் கேட்கின்றார், தாய் அன்பே உலகில் சிறந்தது என கூறுகின்றீர்கள் அப்படி என்றால் தாய் ஏன் பிள்ளைகளிடம் பாரபச்சமான அன்பை கொடுக்கின்றாள் என்றார். கவிஞரோ உண்மையான தாய் அன்பைதான் இங்கே கூறியுள்ளேன் தாயை போல உள்ளவர்களை இல்லை என்றார்.....)
பைபிள் லூக்கா23: இயேசுவை யுதர்கள் பிலாத் மன்னனிடம் புகார் செய்ய கூட்டி சென்றார்கள். பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: மக்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனிதனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள். நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை என்றார், முடிவில் அவர்கள் அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்... வேறுவழியின்றி அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்தான்.... அதன்படி தண்டனை கொடுக்க இயேசுவை சிலுவை சுமக்க செய்து அடித்து சென்றார்கள்... அப்பொழுது திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்சென்றார்கள்... இயேசு அவர்களை பார்த்து எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றார். மேலும்
இதோ மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள்வரும்.
அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.....
=>இங்கேயும் இதயங்கள் அழுகின்றது......
இப்படிபட்ட அழும் இதயங்களுக்கு முன் இலங்கை தமிழர்களின் இதயங்களும் அழுதுக்கொண்டுதான் இருக்கின்றது. இவர்களிடம் உள்ள இதயங்களுக்கு ஆறுதல் கிடைக்குமா? தமிழ்நாட்டின் தொப்புள் கோடிகள் ஆறுதல் அடையுமா?
பைபிள் மத்தேயு5: துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
இங்கே அழுகின்ற இதயங்கள் அமைதி பெறும்..... ஆறுதலடைவார்கள் என்பது உறுதி!.....
புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம்- பாரதிதாசன்
என்றும் அன்புடன்....
ஆ.ஞானசேகரன்