_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

இவர்களால்தான் நான் உற்சாகமாக இருக்கிறேன்

Monday, December 21, 2009

அன்புடன் ஆ.ஞானசேகரன்...

Photobucket

வலை நண்பர்களுக்கு வணக்கம்..
வேலையிடத்து பணியழுத்தம் காரணமாக, பல நாட்கள் இணையம் பக்கம் வரமுடியவில்லை வந்தாலும் பின்னூட்டமிட இயலாத நிலைக்கு வருந்துக்கின்றேன். அதுபோல வரும் 24/12/2009 முதல் இரண்டு வாரங்களுக்கு இந்தியா செல்ல இருப்பதால் (திருச்சி அண்ணாநகர்) உங்களோடு பகிர்ந்துக்கொள்ளும் நேரம் கொடுக்க முடியாமைக்கு வருத்தமே ( திருச்சி பக்கம் வந்தால் குரல் கொடுங்கள் சந்திக்கலாம்). பகிர்ந்துக்கொள்ளும் நேரம் குறைவாக இருந்தாலும் நினைவுகள் அனைத்தும் மனதினுள் வந்துசெல்கின்றது.



ஆங்கில வருடப் புத்தாண்டையும் , தமிழ் வருடப் புத்தாண்டையும்.... எதிர் நோக்கியுள்ளோம்

புதுவருட வாழ்த்துப்பா

புது மகளே! வருக வருக....
காட்டாற்று வெள்ளம் போல
கரைப்புரண்டு வருக!....

வரும் முன் நிற்க,
உன் வருகையின் நிமித்தம்.....
என் நண்பனுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
என் உறவினனுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
என் மனைவி மக்களுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
மாறாக,....
உனக்கு மட்டுமே என் வாழ்த்துகள்!

வாழ்த்துகளோடு உன்முன்...
கனிவான எச்சரிக்கை!
பொங்கும் புதுபொழிவோடு
வருவாய் என்று தெரியும்,...
நீ! சாக்கரதை..

வெள்ளம் என்று புயல் என்றும்
உன்னை சரித்திரத்தில்
பதித்து விடலாம்....

சுனாமி என்று பூகம்பம் என்றும்
உன்னை பக்கங்களில்
நிறப்பி விடலாம்....

வந்தார்கள் சுட்டார்கள் என்றும்
உன்னைப் பற்றி
கலங்கம் படுத்தலாம்...

பசி வந்தது பஞ்சம் வந்தது என்றும்
உன் நினைவலைகளை
நசுக்கப்பட்டு விடலாம்....

நோய் வந்தது நொடி வந்தது என்றும்
உன் பெயர்மேல்
அச்சடிக்கப் படலாம்...

வாழ்த்துகள் இருந்துவிட்டு போகட்டும்
உனக்கு என் எச்சரிக்கை!....
வரலாற்று சுவடுகள் உன் நினைவுகளை
சொல்லவேண்டும்...
உன்னோடு உன் நினைவுகளும் இனிதாக
இருக்கவேண்டும்...

புதுமகளே! உனக்குதான்
என் வாழ்த்துகள்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்



Saturday, December 12, 2009

நீ! ஒரு நாயகன் 2 (புகைப்படங்கள்)

நீ! ஒரு நாயகன் 2 (புகைப்படங்கள்)

ஒரு நடிகனாக தொடங்கி பின் தமிழகத்தின் முதலமைச்சராக பத்தாண்டுகாலம் அதாவது சாகும் காலம் வரை பணிசெய்து மக்கள் தொண்டனாக இருந்தவர் டாக்டர் புரட்சித்தலைவர் M.G. ராமச்சந்திரன் ஆவார். அவர் மக்களின் நாயகனாகவே இருந்தார் என்பது அவரின் வாழ்நாட்களை கவணித்தவர்கள் சொல்லிட முடியும். இவரைப்பாற்றிய என் முந்தய இடுகை நீ! ஒரு நாயகன்...

அந்த நாயகனின் வாழ்நாள் புகைப்படங்கள் சில மின்னஞ்சலின் கிடைத்தது. இந்த புகைப்படங்கள் உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி.

பொன்மனசெம்மல்


நடிகர் திலகம் சிவாசி கணேசனுடன் MGR



AVM சரவணனுடன் MGR



கிருபாணந்தா வாரியாருடன் MGR



தனது நண்பர் டாக்டர் கலைஞருடன் MGR..


நரிக்குறவர்களுடன் MGR. "ஒளிவிளக்கு" எனற திரைப்படத்தில் நரிகுறவன் வேடம் கொண்டு நடித்து அவர்களின் மனங்களில் இடம் பிடித்தவர்.. தனது ஆட்சிக் காலத்தில் செய்ய தவறிய ஒன்று இவர்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து தாழ்த்தப்பட்ட பிரிவுக்கு மாற்றாமல் விட்டது.



இரும்பு மனிதர் ராஜாஜியுடன் MGR

சகலகலா வல்லவர் MGR இவர் நடிகர் என்றாலும் எல்லா துறைகளிலும் திரண் கொண்டவராக இருந்தார். இவர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தனது சத்துணவு திட்டத்தின் முன்னோடி காமராஜ் அவர்களுடன் MGR


டாகடர் கலைஞருடன் MGR


நகைசுவை மன்னன் நாகேஷ் அவர்களின் திரையரங்கம் திறப்பு விழாவில் MGR



அறிஞர் அண்ணாவுடன் MGR



கவிஞர் கண்ணதாசனுடன் MGR


சந்திர பாபுவுடன் MGR

நாகேஷ் மற்றும் அசோகனுடன் MGR



இந்திரா காந்தியுடன் MGR மத்திய அரசுடன் நல்ல இணக்கம் கொண்டவர்.


விடுதலை புலிகளின் தலைவன் வேலைப்பிள்ளை பிரபாகரனின் சந்திப்பு



மக்கள் கலைஞன் MGR


பெரியாருடன் MGR



மூத்த நடிகர், இயக்குனர் சாந்தா ராம் (ஹிந்தி) அவர்களுடன் MGR தமிழக அரசியலில் காலில் விழும் கலாச்சரம் இவர் மூலம்தான் ஆரம்பமாகி இருக்கலாம். செல்வி ஜெயலலிதா அவர்கள் இதில் கொடிக்கட்டி பறப்பவர்.



போப்வுடன் MGR இவர் ஒரு நாத்திகராக இருந்தாலும் மதத்தலைவர்களுக்கு மரியாதைக் கொடுப்பவர்.



சாண்டோ சின்னப்பத்தேவருடன் MGR


முப்பெரும் தலைவர்கள் நெடுஞ்செழியன், கலைஞர் மற்றும் MGR



அறிஞர் அண்ணாவுடன் சீடர்கள்....



NT ராமாராவ் வுடன் MGR









Tuesday, December 8, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 9

ஏன்? எதற்கு? எப்படி?..... 9

சென்ற ஏன்? எதற்கு? எப்படி? இடுகையில் வட்டம் மற்றும் வட்டம் சார்ந்த இயக்கங்களின் மனிதன் கண்டுபிடிப்பை பார்த்தோம். அதே போல் பூமியும் தன்னைத்தானே சுற்றும் இயக்க கோடும் ஒரு வட்டம்தான், ஏனெனில் பூமியும் கோளவடிவத்தில் இருக்கின்றது. பூமி தன்னைத்தானே சுற்றிவர ஆகும் காலம் ஒரு நாள் என்று கணிக்கப்படுகின்றது. துள்ளியமாக சொன்னால் பூமி தன்னை ஒரு அச்சில் சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் 23 மணி 56 நிமிடம் 4 வினாடி ஆகும். அப்படியென்றால் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகத்தை ( பூமியில் சுற்றளவு/23.56.4 மணி) கொண்டு கணக்கிடலாம்.


செயற்கைக்கோள்கள் என்பன பூமியை சுற்றுகின்றதா? அது எவ்வாறு சுற்றுகின்றது? செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றுகின்றன என்று சொல்வதை விட பூமியை இடம் வகிக்கின்றது என்பதுதான் சரியாக இருக்கும். பூமி தன்னைதானே இடம் சுழியாக சுற்றுகின்றது. அதாவது நாம் பூமியின் மேல் இருப்பதாகக் கொண்டால் நாம் மேற்கிலிருந்து கிழக்காக செல்கின்றோம். அதனால்தான் நிலையாக உள்ள சூரியன் நம் கண்ணுக்கு கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றதாக தெரிகின்றது. பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் 66,600 கி.மீ/மணிக்கு என்று கணகிடப்பட்டுள்ளது. அந்த வேகம் ஒவ்வொரு புள்ளிக்கும் மாறுபடும், காரணம் வட்டசார்பு இயக்கம் ஆரம் மாறுகின்றபொழுது வேகமும் மாறுபடும்.

செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து 350 கி.மீட்டர் உயரத்தில் சுற்றுகின்றது. சில 600 கி.மிட்டர் உயரத்திலும் சில 36,000 கி.மீட்டர் உயரத்திலும் அமைந்தப்படி சுற்றுகின்றது. இப்படி பல சுற்றுப்பாதைகளில் 800 செயற்கைகோள்களுக்கு மேலாக சுற்றுகின்றதாக தெரிகின்றது. பல செயற்கைக்கோள்கள் மனிதன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருப்பதும் உண்டு. இவற்றை செயலிழந்த செயற்கைக்கோள் என்று குறிப்பிடுகின்றனர். செயலிழந்த செயற்கைக்கோள் என்றால் என்ன? என்பதை பின்னர் பார்க்கலாம்.

பெரும்பான்மையான செயற்கைக்கோள்கள் மேற்கிலிருந்து கிழக்காக பூமி சுழற்ச்சியோடு சேர்ந்தே சுற்றுகின்றது. அவைகள் பூமியின் வேகத்தையும் செயற்கை கோளின் உயரத்தையும் துள்ளியமாக கணக்கிட்டு பூமியின் இடம் வகிக்கின்றது. அதாவது இந்தியா அனுப்பிய "கல்பனா" செயற்கைக்கோள் இந்தியாவை நோக்கி பார்த்தபடியே இருக்கின்றது. "கல்பனா" செயற்கைக்கோள் பூமியிலிருந்து 36,000 கி.மீட்டர் உயரத்திலிருந்து தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு, வானிலை போன்றவற்றிக்கு பயன்பட்டு வருகின்றது.

இவ்வகை செயற்கைக்கொள்கள் ஒருமுறை பூமியை வலம் வர பூமியை போலவே
23 மணி 56 நிமிடம் 4 வினாடி எடுத்துக்கொள்வதால் அவைகள் நிலையாக இருப்பதுபோல இருக்கும். 36,000 கி.மீட்டர் உயரத்தில் இருக்கும் செயற்கைகோள் பூமியை 23 மணி 56 நிமிடம் 4 வினாடி சுற்றிவர மணிக்கு 11,000 கி.மீட்டர் வேகத்தை எடுத்துக்கொள்கின்றது.

பெருன்பான்மையான செயற்கைக்கோள்கள் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றினாலும் சில வகை செயற்கைக்கோள்கள் வடக்கிலிருந்து தெற்காகவும் சுற்றுகின்றது. இந்தியா அனுப்பிய ஐ.ஆர்.எஸ் செயற்கைக்கோளும் இவ்வாறே சுற்றுகின்றது. ரஷ்யா,நார்வே,கனடா போன்ற நாடுகள் அனுப்புகின்ற செயற்கைக்கோள்கள் வடக்கிலிருந்து தெற்காக சுற்றும் பாதையைதான் தேர்வு செய்யப்படுகின்றது. அதற்கு காரணம் அதன் புவியியல் அமைப்பாகும்.

இப்படி செயற்கைக்கோள்கள் பூமியை சரியான வேகத்தில் சுற்றிவர எரிப்பொருள் தேவையா? ஆம் என்றாலும் செயற்கைக்கோள்கள் சுற்றுவதற்கு எரிபொருள் பயன்படுத்தவில்லை. செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றது. அந்த ராக்கெட்களுக்கு எரிபோருள் தேவை. ராக்கெட்கள் நியூட்டனின் விதிப்படி "எந்த ஒரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு" என்ற தத்துவத்தில் இயங்குகின்றது. செயற்கைக்கோள்களை ராக்கெட்டுடன் அமைக்கப்பட்ட நுட்பமான அமைப்புகள் அதன் சுற்றுப்பாதையில் உந்திவிடப்படுகின்றது. அப்படி உந்தப்பட்ட செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் தொடர்ந்து சுற்றுகின்றது. செயற்கைக்கோள்கள் சுற்றும் பாதை வெற்றிடமாக தேர்வுசெய்துள்ளதால் அது தொடர்ந்து சுற்றிவருகின்றது. அதாவது நியூட்டனின் மற்றொரு விதிப்படி "எந்த ஒரு புறவிசை தாக்காவிடின் அசையா பொருள் அசையாமலும் அசையும் பொருள் அசைந்துகொண்டே இருக்கும்". அப்படி பார்த்தால் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதை வெற்றிடமாக இருப்பதால் புறவிசைகள் இல்லை எனவே உந்தம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும். ஆகவே எரிப்பொருள் தேவைப்படவில்லை.

அப்படி உந்தப்பட்ட செயற்கைகோள்களின் வேகம் சீராகவே இருக்கவேண்டும். ஆனால் பலக்காரணங்களால் அதன் வேகம் சிறிது மாறுபடலாம் அவற்றை எப்படி சரிசெய்யப்படுகின்றது? செயற்கைக்கோள்களில் எல்லா புறங்களிலும் எரிப்பொருளுடன் கூடிய சிறியவகை ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் இவற்றை பீச்சிட செய்து செயற்கைக்கோளை முன்னும் பின்னும் நகர்த்தி சரிசெய்யப்படுகின்றது. இவற்றை எதிர் ராக்கெட்டுகள் என்று கூறுவதுண்டு. இப்படி எதிர் ராக்கெட்டுகள் கணனி மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது. எதிர் ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிப்பொருள் இருக்கும் வரைதான் நம்மால் கட்டுப்படுத்த முடியும். அப்படி எரிப்பொருள் தீரும் பச்சத்தில் அந்த செயற்கைக்கோள்
செயலிழந்தாக கருதப்படுகின்றது. ஒரு செயற்கைக்கோள் ஆயுள் என்பது அதன் எரிப்பொருள் தேவையை பொருத்தே இருக்கின்றது. எரிப்பொருள் முடிந்ததும் அந்த செயற்கைக்கோளின் ஆயுளும் முடிந்துவிடுகின்றது.

மேலும் ஒரு துண்டு செய்தி: செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதை வெற்றிடமாக இருக்க வேண்டும் எனவேதான் அவற்றினை பூமியிலிருந்து 350 கி.மீட்டர் உயரத்திற்கு மேல் உந்திவிடப்படுகின்றது. ரஷ்யா, நார்வே, கனடா போன்ற நாடுகளின் புவியில் அமைப்பு பூமியின் சுற்றுமையத்திற்கு அருகில் இருப்பதால்தான் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதையை வடக்கிலிருந்து தேற்காக தேர்வு செய்யப்படுகின்றது. மேலும் இவ்வகை சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவர 12 மணி நேரம் எடுத்துக்கொள்கின்றது. எனவே இரண்டு மூன்று செயற்கைக்கோள்கள் மூலம் பணியை சரியாக செய்ய பயன்படுத்துகின்றனர். ஒரு செயற்கைக்கோள் அந்த நாட்டை 8 மணி நேரம் அதன் பகுதியில் இருந்து அதன் பணியை செய்யும்.

முக்கிய குறிப்பு: நான் படித்த, அறிந்தவைகளை தொகுத்துள்ளேன் தவறுகள் இருக்கலாம். சாதரணமான என்னால் புரிந்த அளவிற்கு சொல்லியுள்ளேன். தவறுகள் இருந்தால் தாரளமாக சுட்டிக்காட்டுங்கள் திருத்திவிடலாம். ( கட்டுரை நீண்டுவிட்டது, முக்கியமான செய்திகளாக நான் கருதியதால்)

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

Friday, December 4, 2009

உனக்கென்ன? எனக்கென்ன?....... எனக்கென்ன? உனக்கென்ன?....... உன் அப்பனுகென்ன??????....

உனக்கென்ன? எனக்கென்ன?....... எனக்கென்ன? உனக்கென்ன?....... உன் அப்பனுகென்ன??????....

சமூகம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள், சாதி /மதம் / இனம் என்று மனிதனை கூறுபோடும் பிரச்சனைகள், குழந்தைகள் மற்றும் மகளிர்களுக்கு சமூகத்தால் கொடுக்கப்படும் அவலங்கள் இப்படி எல்லா வகைப்பிரச்சனைகளையும் சொல்லியும் பேசியும், எழுதியும் வருகின்றோம். இதெல்லாம் இருக்கட்டும் நமக்குள் இருக்கும் சின்ன சின்ன கேவலமான செயல்களை, இச்சைகளை, சின்னபிள்ளைதனமுன்னு சொல்லுவாங்களே அதுபோல மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் செயல்களை நாம் கவணிக்கின்றோமா? அல்லது அதை தவிர்க்க ஏதாவது சிந்தனைகளை எடுத்துக்கொள்கின்றோமா? என்றால் இல்லை.... இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படிதான் ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் மருந்தகம் சென்றேன். மருத்துவர் வரும் நேரம் இன்னும் ஆகவில்லை அருகில் உள்ள இருக்கையில் உட்கார்ந்து காத்திருந்தேன். காய்ச்சல் என்பதால் மற்றவர்களுக்கு தோந்தரவாக இருக்க வேண்டாமே என்று ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன். இளம் வயது மதிக்கதக்க ஒருவன் வந்தான், மருந்தக‌ அலுவலகத்தில் விசாரித்துவிட்டு அவனும் காத்திருக்க இருக்கையில் அமர என் அருகில் வந்து காலை அகட்டி எனக்கேன்னா? என்று அமர்ந்தான். என்னை உரசிக்கொண்டே இருந்தான் எனக்கோ உடல்நிலை சரியில்லாமல் மேலும் எரிச்சலை உண்டாக்கியது. நான் அவனை ஒரு ஏக்கத்துடன் பார்ப்பதைக்கூட அவனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. வேறு வழியில்லாமல் வேறு இடம் சென்று அமர்ந்தேன்.

மேலே சொன்னது போல பலர் ( அவர்கள் நம் நண்பர்களாய் கூட இருக்கலாம்) பேருந்தில், தொடருந்தில், மற்றும் பொது இடங்களில் உட்காரும் பொழுது கிட்டதட்ட இரண்டு இருக்கைகளை ஆக்ரமித்துக்கொண்டும் அதே சமயம் பக்கத்தில் ஒரு சீவன் இருப்பதாக நினைத்துக்கூட பார்க்கமுடியாமல் அப்படி இப்படி ஆடிக்கொண்டே இருப்பார்கள். இது போன்ற சம்பவங்கள் எனக்குமட்டும் இல்லை எல்லோருக்கும் வந்திருக்கும். அருகில் இருக்கும் சக மனிதனின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடியாத இவர்களால்தான் சமூக அவலங்களை சீர்தூக்கிப்பார்த்து களைய முடியும் என்று எதிர்ப்பார்கின்றோமா?


எத்தனை பேர்களால் நரிக்குறவர்கள் அருகில் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்ய முடிகின்றது? எத்தனை பேர்களால் ஒரு நீக்ரோவின் கைபிடித்து குழுக்கும்பொழுது மனம் சலனம் இல்லாமல் இருக்க முடிகின்றது? எத்தனை மனிதர்களால் சக நண்பனின் புண்ணிற்கு மருந்திட முடிகின்றது? எத்தனை பேர்கள் முதியோர்களின் தோலினை பார்த்து முகம் சுழிக்காமல் இருக்க முடிகின்றது? இதெல்லாம் முடியாத நம்மால்தான் இந்த சமூக அவலைங்களை களை எடுக்க முடியும் என்று நம்புகின்றோமா? நமக்கு இழைக்கப்படும் அவலங்களை வேரெடுக்க குரலெழுப்பும் அதே சமயம் நம்மால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் அவலங்களை கண்டுகொள்கின்றோமா? சிறிதுதேனும் எண்ணிப்பாருங்கள் மக்களே!....

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றபொழுது என் ஆசிரியர் ஒருவர் (பெயர் சித்திரமூர்த்தி திருவெறும்பூர் ஒன்றியம்) எங்களை குடியரசு தின விழாவிற்கு தேவராயநேரி குறவர் காலணிக்கு அழைத்து சென்றார். நாங்கள் 20வது பேர் அங்கு சென்றோம். நரிகுறவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி வர வேண்டும் என்ற நோக்கத்தில் எங்களை அந்த ஆசிரியர் அங்கு அழைத்து சென்றார். அங்கு பல விளையாட்டு போட்டிகள் எங்களோடு சேர்ந்து நடத்தி பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் எல்லோருக்கும் சத்துணவும் வழங்கினார்கள், எங்களில் சிலர் சாப்பிட மறுத்துவிட்டார்கள், நான் சாப்பிட்டேன் ஆனால் என்னால் மனம் சலனப்படாமல் இருக்க முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். சிங்கபூரில் சில சீனர்கள் இந்தியர்கள் அருகில் உட்கார சங்கடப்படுகின்றார்கள்( தற்பொழுது குறைந்துள்ளது, இல்லை என்று சொல்லும் அளவிற்கு என்றால் சிங்கப்பூர் அரசிற்கு நன்றி சொல்ல வேண்டும்) என்று பார்த்த பொழுது முதலில் கோபம் வந்தாலும் எனக்குள் இருந்த அந்த சம்பவம் என்னை செம்மைப்படுத்தியது.

நம்மை ஒருவர் அடக்கியாழும் பொழுது நமக்கு வலி எடுப்பது உண்மை என்றால் அதே போல நாம் நமக்கு கீழ் உள்ளவர்களை ஆளுமை படுத்தும்பொழுது அவர்களுக்கும் அதே வலிதான் இருக்கும் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் இல்லாமல் எந்த மாற்றத்தையும் இந்த சமூகத்தில் உருவாக்கிட முடியாது......

உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது...


அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Monday, November 30, 2009

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 4

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 4

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டுங்கள்
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 3

மேலே உள்ள சுட்டிகளில் பார்கின்றபொழுது மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது பயமும், தேவைக்கு அதிகமான ஆசைகளும் என்று தெரிகின்றது. அதே போல எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்ற மெத்தன போக்கும் உண்டு. பின்னர் நமக்கு என்ன?/ எவனோ?/ எப்படியோ? செய்கின்றான் என்ற சுயநலமும் ஒரு காரணமாக அமைகின்றது.

இன்றைய மனிதனை என்னதான் அறிவியல் வளர்த்தாலும் தேவையில்லா மூடப்பழக்கங்கள் மனதை பாதிக்கத்தான் செய்கின்றது. அதற்கு முன்பே கூறியது போல மரபியியல் பண்பும் ஒரு காரணமாககூட இருக்கலாம். இப்படிப்பட்ட மனபோக்கை மாற்ற முறையான பயிற்சி தேவை என்பதை மட்டும் மறக்க முடியாது.

வீட்டை விட்டு வெளியில் போகும்பொழுது எங்கே போகின்றாய்? என்று கேட்டால் போகின்ற செயல் நல்லபடியாக நடக்காது என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கு. இப்படி ஒரு பழக்கம் தெரியாதவரை உன்னையும் என்னையும் பாதிக்க போவதில்லை ஆனால் இந்த ஒரு நம்பிக்கை தெரிந்துவிட்டால் (மனதில் பதிந்துவிட்டால்) அதனை எதிர்க்க மனதில் திடம் இல்லாமல் போகின்றதே ஏன்? போகின்ற செயல் நல்லபடியாக நடக்கவேண்டும் என்ற ஆசை. அப்படி ஏதேனும் தவறு நடக்குமோ என்ற பயம். எல்லோரும் நம்புகின்றார்களே நாமும் நம்புவதால் என்ன ஆகபோகின்றது என்ற மெத்தன போக்கு. இப்படியே சின்ன சின்ன மூடப்பழக்கங்களை இந்த சமுகத்திற்கு நம் முன்னோர்கள் விட்டு சென்றது ஏராலம்.

எனக்கு தெரிந்த ஒருவர் எப்பொழுதுமே ஜாதகம், ஜோசியம் என்ற மனப்போக்கில் இருப்பார். நான் அவரை "ஏன்யா இந்த காலத்திலும் இப்படி இருக்க? என்று கேட்பேன்". அதற்கு அவர் "அவர்கள் சொல்வது உண்மையோ பொய்யோ என் மனதிற்கு ஆறுதல் தருகின்றது அதனால் நம்புகின்றேன்" என்று வியாக்கானம் சொல்லுவார். இப்படிப்பட்டவர்களை என்ன சொல்லி திருத்தமுடியும். நடிகர் ரஜினி சார் ஒரு படத்தில் "சாவுகின்ற காலம் தெரிந்தால் வாழுகின்ற காலம் நரகம்" என்று சொல்லுவார். அதேபோல ஜொசியம், ஜாதகம் உண்மையாகவே இருந்தாலும் அதை முன்னரே தெரிந்துக்கொண்டு வாழுகின்ற காலத்தை நரகமாக்கிக்கொள்ளும் மனிதர்களை என்னவென்று சொல்லுவது. இப்படிப்பட்ட மனிதர்கள் தன்னுடைய கையாலாகாத தனத்தை தன் பிள்ளைகள் மூலம் மூடப்பழக்கம் என்ற விதைகளை உலகில் தெளித்துவிட்டு செல்கின்றார்கள். விதைகள் முளைத்து இன்று ஆலமரங்களாக இருக்கின்றது.

எனக்கு தெரிந்து "ஏன்?" என்று கேட்ககூடிய ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே. அப்படி "ஏன்?" என்ற கேள்வியை கேட்க வேண்டிய இடத்தில் கேட்காமல் இருந்துவிட்டால் அந்த" ஏன்?" க்கு பின்னால் இருக்கும் குறிபோல வாழ்க்கையும் வலைந்து போய்விடும். பல மூடப்பழக்கங்கள் இந்த "ஏன்?" என்ற கேள்வியை கேட்காமலே இருந்ததால்தான் இன்று மனிதன் அந்த பழக்கங்களுக்கு பின்னால் செல்லவேண்டியுள்ளது. இன்றாவது அந்த கேள்வியை கேட்டுப்பாருங்கள் எப்படியும் ஒரு மூடப்பழக்கமாவது அற்றுப்போய்விடும்.

(புகைப்படம் நன்றி தமிழ் ஓவியா)

மூடப்பழக்கம் என்பது மக்களின் கலாச்சரத்துடன் ஒன்றி ஒழிந்துக்கொண்டுள்ளது. அப்படி ஒழிந்துக்கொண்டுள்ளதால் அப்படிப்பட்ட பழக்கங்களை விடுவதும் சாதாரண விடயமும் இல்லை. தாலிக்கட்டுதல் என்பது நமது சமுகத்தில் இருக்கும் பழக்கம் இதை மாற்றங்கள் செய்யமுடிமே ஒழிய மறுக்க முடியாது. பெரியார் இயக்கத்தினர் தாலிக்கட்டுதலை எதிர்கின்றார்கள் அப்படிப்பட்ட இயக்கத்தினரால்தான் பெரியார் நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவிக்கின்றார்கள். அங்கேயும் "ஏன்" என்ற கேள்விக்கு பதில் குழப்பமாகதான் இருக்கும். நமது கலாச்சாரமும் அறிவிற்கு அப்பாற்பட்ட பழக்கங்களை கொண்டுள்ளது. அவற்றையெல்லாம் அறிவு ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் மனம் ஏற்றுகொள்கின்றது.

மூடப்பழக்கங்களை எந்த அளவிற்கு சிலர் நம்புகின்றார்களோ அதை போல சிலர் வன்முறையாக மூடப்பழங்களை எதிர்ப்பதும் அறிவற்ற செயலாகதான் இருக்கும். அவரவர்களே "ஏன்?" என்று கேட்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டுசெல்ல முடியாது.

இன்னும் இதைப்பற்றி சிந்திப்போம் (உங்களுக்கு தெரிந்தவற்றையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே!)
ஆ.ஞானசேகரன்.

Tuesday, November 24, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 8

ஏன்? எதற்கு? எப்படி?..... 8

வலைமக்களே! மீண்டும் ஒரு ஏன்? எதற்கு? எப்படி?.... என்ற தலைப்பின் கீழ் சந்திப்பதில் மகிழ்ச்சி. மனிதர்களுக்குள் எழும் கேள்விகளை அனைவரோடு பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. நமக்குள் இருக்கும் கேள்விகள்தானே ஆறாவது அறிவின் அடிநாதம். ஒவ்வொரு அறிவியல் கண்டுப்பிடிப்புக்களுக்கு பின்னால் இருப்பது இந்த கேள்விகள்தான். அப்படிப்பட்ட கேள்விகளின் பதிலாகத்தான் ஒவ்வொரு கண்டுப்பிடிப்புகளும் கிடைத்ததுள்ளது.(இன்றைய தமிழகத்தில் கேள்விகளை மனிதன் மனதிலிருந்து அப்பறப்படுத்த எடுக்கும் நடவடிக்கைத்தான் தொலைக்காட்சியும் அதன் தொடர் இம்சை நாடகங்களும். எந்த ஒரு கேள்வியையும் கேட்க திரணியிள்ளா உணர்வை வளர்ப்பதற்கு தொலைக்காட்சியின் சேவை பெரிதும் துணையாக நிற்கின்றது. நம்பிக்கையில்லை என்றால் தொடர்ந்து 24 மணிநேரமும் இரண்டு நாள் சூரிய தொலைக்காட்சியை பார்த்துவிட்டு உங்களின் மனதை கவணித்துப்பாருங்கள் புரிந்துவிடும் நாம் திரணியற்றவர்கள் என்பது இதைதான் அரசும் அசூர வேகத்தில் செய்துவருகின்றது).

மனிதனின் தேவையும் சாதகமான சூழ்நிலையும் கிடைக்கப்பெற்றால் அறிவியல் கண்டுப்பிடிப்புகள் வந்தடையும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிதான் எல்லா கண்டுப்பிடிப்புகளும் வந்துள்ளது என்றாலும் ஒரு சில கண்டுப்பிடிப்புகள் தற்காலிகமாக நடந்த நிகழ்வுகளாய் இருக்கும். அதுவும் நம்முடைய தேவையின் காரணமாகவே நம்மோடு வந்தடையும். ஆதிக்கால மனிதனின் முதன்மையான கண்டுப்பிடிப்பாக இருப்பது வட்டமும் அதன் அச்சு சார்ந்த சுழற்சியும் என்றால் மிகையாகாது. இந்த வட்டத்தின் பயன்பாடுகள் மட்டும் நம்மை அடையாமல் இருந்திருந்தால் இன்றைய வளர்ச்சியை நம்மால் எட்டிப்பார்க்கவே முடியாது.


வட்டம் என்பது என்ன? ஒரு துகள் ஒரு மையத்தை நோக்கி உள்ள விசையும் மற்றும் மையத்தை விலக்கி செல்லும் விசையும் சமமாக இருக்க அந்த துகள் சுற்றிவரும் பாதை வட்டம் என்று சொல்லலாம். அந்த மைத்திற்கும் துகளுக்கும் உள்ள தூரத்தை ஆரம் என்று சொல்லுகின்றோம். ( வண்டிச்சக்கரத்தின் கைகளை ஆரம் என்றே அழைக்கின்றோம்).

நாடேடியாக வாழ்ந்து வந்த மனிதன் சிறு சிறு கூட்டங்களாக இருப்பிடங்கள் அமைத்து வாழத்தொடங்கினான். இருப்பிடங்களின் தனக்கு தேவையான உணவுகளை சேமித்து வைத்துக்கொள்ளவும் பழகிக்கொண்டான். பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நேரங்களில் தரையில் போட்டு இழுத்து செல்லும் பழக்கம் இருந்தது. காலம் அவனுக்கு அறிவியல் கற்றுக்கொடுத்தது, இழுத்து செல்லும் பொருள்களுக்கிடையில் சிறு சிறு உருளை கட்டைகளை வைத்து இழுக்கும்பொழுது பளுக்குறைவாகவும் வேகமாகவும் இருப்பதை கண்டுக்கொண்டான். இதுதான் அவன் கண்ட மகிழ்ச்சியான கண்டுப்பிடிப்பு. அவனுக்கு கட்டைகளை எடுத்து வைக்க சிரமாகவும், அதற்காக ஒருவரும் தேவைப்பட்டது. அவனும் சிந்திக்க தொடங்கினான், ஆறாவது அறிவையும் பயன்படுத்த அன்றுதான் பழகிக்கொண்டான். கட்டைகளுக்கு பதிலாக அச்சுகளில் சுற்றிவரும் சக்கரம் ஒன்றை உருவாக்கினான். இதுதான் நம்முடைய காலசக்கரம் ஆரம்பமாக ஆதாரமாக இருந்தது.

எந்த ஒரு நேர் இயக்கங்களும் நம்மை விட்டு கடந்து சென்றுவிடும். ஆனால் வட்டம் சார்ந்த இயக்கம் மட்டுமே ஒர் இடத்தை நோக்கியே இருக்கும். இப்படிப்பட்ட வட்டம் சார்ந்த இயக்கத்தை மனிதன் தன் கைகளில் வைத்துக்கொண்டதன் விளைவாகத்தான். இன்றைய நாகரிகத்தை நம்மால் அடைய முடிந்தது. மனிதனின் இயக்கங்களுக்கு ஆதாரமாக இருப்பதே இந்த வட்டம்தான். நாம் வாழும் பூமியின் சுழற்சி ஆதாரமும் வட்டம்தான் என்பதிலிருந்தே தெரிகின்றது வட்டத்தின் முக்கியத்துவம். தொழிற்புரட்சிக்கு ஆதரவாக இருந்தது இந்த வட்டமும் வட்டம்சார்ந்த இயக்கங்களும்.


ஆர்க்டிக் வட்டம்: பூமி பந்தின் உலக நடுகோட்டில் வடதுருவத்தில் இருப்பதுதான் இந்த ஆர்க்டிக் வட்டம். இந்த பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதால் குறைவான மக்களே வாழ்கின்றனர். ஆர்க்டிக் வட்டத்திற்கு ஒத்ததாக தென் துருவப்பகுதியை அண்டார்டிக் வட்டம் என்று அழைக்கின்றோம். ஆர்க்டிக் வட்டத்தில் பெரும்பாலும் குளிர்ந்தே காணப்படுவதால் பனிப்பாறைகளாக உள்ளது.(தற்பொழுது பெருகி வரும் உலக வெப்பமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளதாக அறிவியல் அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்).

ஆர்க்டிக் வட்டம் எட்டு நாடுகளை கடந்து செல்கின்றது. ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல் உள்ளது. இது பெரும்பாலும் பனிக்கட்டிகளாகவே இருக்கும். ஆர்க்டிக் வட்டம் நார்வே, சுவீடன்,பின்லாந்த், ரஷ்யாவின் சிலபகுதி, கனடா,கிரீஸ்லாந்த்,ஐஸ்லாந்து,ஐக்கிய அமேரிக்கா போன்ற எட்டு நாடுகளை கடந்து வருகின்றது. இப்பகுதிகளில் எண்ணெய் வளங்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

Friday, November 20, 2009

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 3

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 3

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டுங்கள்
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

மேலேயுள்ள சுட்டிகளில் மூடப்பழக்கங்கள் பற்றிக்கொள்ள நம்மை ஆட்கொள்ளும் பயமும் அதன் மீது கொண்ட அறியாமையாலும் வருகின்றது என்பதை பார்த்தோம். அதேபோல் மனிதனிடம் உள்ள அதிகமான ஆசைகளாலும் அதன் மேல் கொண்டுள்ள ஈப்பாலும் மனிதனை மூடப்பழக்கங்களுக்கு கொண்டுச் செல்கின்றது. என்னை பொருத்தவரை எப்படிப்பட்ட மூடப்பழக்கங்கள் இருக்கின்றது என்று ஆராய்வதை விட ஏன் மனிதனை இந்த பழக்கம் கவ்விக்கொள்கின்றது என்று ஆராயவேண்டும் என்ற நோக்கில்தான் இந்த தொடர் தொடங்கினேன்.

மனிதனின் அறிவிற்கு முரனாண பழக்கங்கள் ஆண் பெண், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரன், சிறியவர் பெரியவர் என பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் இருக்கின்றது என்பதுதான் இதில் ஒரு குழப்பம். இப்படிப்பட்ட நம்பிக்கைகள் அறிவு சார்ந்த விடயமா? அல்லது அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வா? என்ற குழப்பங்கள்தான் மீதம் வெளிப்படுகின்றது.

ஒன்றைப் பற்றி நாம் முழுமையாக அறியாமல் இருக்கும் வரை இந்த நம்பிக்கையின் நாடியும் அடங்க மறுக்கின்றது. அதே போல் "பயம்" என்பது மனிதனின் வளரும் சூழ்நிலைகளால் வருகின்றனவா? அல்லது பாரம்பரிய செல்களால் கடந்து வந்துள்ளதா? என்ற ஆய்வின் முடிவின் கைகளில் இந்த நம்பிக்கையும் இருக்கின்றது. பிறந்ததிலிருந்து ஒவ்வொன்றாக கற்று வருகின்றோம் நாம் அறியா ஒன்றை அறியும் வரை அதன் மேல் உள்ள பயமும் நம்மை விட்டு நீக்கிவிடுவதில்லை. அதனை பற்றி அறிந்த பின் அந்த பயம் மட்டும் மூளையில் பிரதி எடுத்து வைத்துக்கொள்கின்றது. பின்னர் அதேபோல் அல்லது அதனை ஒத்த நிகழ்வுகள் வரும் பொழுது அந்த பயமும் படமெடுக்கின்றது என்பதுதான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியுள்ளது. எத்தனை சீர்திருத்த வாதிகள் தோன்றினாலும் இந்த மூடப்பழக்கங்கள் அழிந்தபாடில்லை ஏன்?

பெண்களுக்கு கல்வியறிவு வளர்க்க வேண்டும் அப்படி பெண்கள் கல்வியறிவு பெற்றால்தான நம் சமூகம் இந்த மூடப்பழக்கங்களிலிருந்து விடுபடும் என்று பெரியார் சொன்னார். உண்மைதான், இன்றை நிலையில் படிக்காத பெண்களை விட படித்த பெண்களிடம் இப்படிப்பட்ட மூடப்பழக்கம் அதிகமாகவும் மிக சாதுர்த்தியமாகவும் இருப்பதை உணரமுடிகின்றது. இந்த நாளில் இந்த விரதம் இருந்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று பட்டியல் போட்டுடல்லாவா சொல்லுகின்றார்கள். அப்படியே தன் கணவன் குடுப்பத்தரையுமல்லவா தன்வயப்படுத்தியுள்ளார்கள். இவற்கெல்லாம் அவர்களிடம் உள்ள ஆசைகள்தான் காரணம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. தன் குடும்பத்தினரிடம் உள்ள பற்று அதுவே ஆசைகளாக வந்தடைவதன் காரணமே இப்படிப்பட்ட மூடப்பழக்கங்களுக்கு வித்தாக அமைந்துவிடுகின்றது.


இதுவரை கண்டுள்ள ஆசைகளிலே மிக கொடூரமான ஆசைகளா இருப்பது பதவியாசை. ஒருவன் ஒரு பதவியை சுவைத்துவிட்டான் என்றால் அதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுதரமாட்டான் என்பதுதான் வரலாறு சொன்ன பாடம். அந்த பதவிக்காக யாகங்கள் வைப்பது, பூஜைகள் செய்வது, ஏன் பலியிடுதல் செய்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகளை பலியிட்டால் நிரந்தரமாக பதவியில் இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டு அதற்காக யாகங்கள் நடத்தவும் செய்கின்றார்கள் என்ற செய்திகளை படிக்கின்ற பொழுது தலையே சுற்றுவதில் ஆச்சரியமில்லை. வயதான பின்னரும் இளம் நங்கையை மணம் முடித்தால் பதவியில் நீண்டு இருக்கலாம் என்று மணம் செய்தவர்களையும் வரலாறு பார்த்துள்ளது. இப்படிப்பட்ட மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது இந்த ஆசைகள்......

இவற்றிலிருந்து பார்கின்றபொழுது மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது பயமும், அதிகமான ஆசைகளும் என்று தெரிகின்றது. அதே போல எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்ற மெத்தன போக்கும் உண்டு. அப்படி எல்லொரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்று சொல்லும் மூடப்பழக்கங்களைப்பற்றி தொடர்ந்து வரும் பகுதியில் சிந்திக்கலாம்.

இன்னும் இதைப்பற்றி சிந்திப்போம்
ஆ.ஞானசேகரன்.


சமீபத்தைய இடுகைகள்