_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, March 11, 2009

சிறிய யோசனை,... பெரிய உபயோகம்....

சிறிய யோசனை,... பெரிய உபயோகம்....

மனித வாழ்வில் சந்தற்பச் சூழ்நிலைகளில் சிறிய உதவி மற்றும் சிறிய யோசனைகள் கூட பல நேரங்களில் ஒரு பெரிய மகிழ்ச்சியையும், பெரிதும் பயன்ப்பட கூடியவகையாக அமைந்து விடுவதும் உண்டு. ஒருமுறை நண்பர் ஒருவர் ஸ்கேனர் இருக்கின்றதா? என்று கேட்டார், நான் என்னிடம் இல்லை எதற்காக என்று கேட்டேன். விமான டிக்கட் மின் அஞ்சலில் அனுப்பவேண்டும் "ஈ டிக்கட்" ஒரு நண்பர் வீட்டில் பிரிண்ட் எடுத்துவிட்டேன். அவரிடம் ஸ்கேனர் இல்லை ஸ்கேன் எடுத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பவேண்டும் என்றார். நீங்கள் அப்படியே சேமித்து மின்னஞ்சல் செய்யலாமே என்றேன். அந்த தளத்தில் சேமிக்க வழிச்செய்யவில்லை அதுதான் பிரிண்ட் எடுத்தேன் என்றார்.

தற்போது விமான சேவைகள் அனைத்தும் இணையத்தளம் மூலம் நேரடியாக "ஈ டிக்கட்" பெறக் கூடிய சேவை அறிமுகப் படுத்தியுள்ளன. இதனால் பயணிகள் சுலபமாக தங்களில் பயண சீட்டை பெறப்படுகின்றது. அப்படி எடுக்ககூடிய "ஈ டிக்கட்" சில தளங்களில் சேமிக்க வழிவகை செய்யவில்லை ( பாதுக்காப்பு முன்னிட்டு என்று நினைக்கின்றேன்) . இது போன்ற சமயங்களில் PDF முறையில் சேமித்து வைக்கவோ அல்லது மின்னஞ்சல் செய்யவோ முடியும்.

ஒன்று. இந்த முறையில் டிக்கட் பக்கம் வந்ததும், டிக்கட்டை பிரிண்ட் கொடுக்கவும் பின் " Microsoft Office Document Image Writer" என்பதை தேர்வு செய்யவும் பின் பிரிண்ட் என்பதை அழுத்தவும் தற்போது save as "Tagged Imege file Format என்பதை தேர்வு செய்து சேமிக்கவும் இது ஒரு Imege file லாக சேமிக்கப் பட்டிருக்கும் இதை மின்னஞ்சல் முலம் அனுப்பி பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம் மிகவும் சுலபமான வழி. இதற்கு உங்கள் கனனியில் Microsoft Office Document Imaging நிறுவப்பட்டிருந்தால் போதும். மேலும் கீழ் உள்ள படத்தை பார்க்கவும்
இரண்டு. உங்கள் கனனியில் ஏதாவது ஒரு PDF Creator நிறுவியிருந்தால் PDF file லாக செமித்து மின்னஞ்சல் செய்யலாம். இதுவும் ஒரு சுலபமான வழிதான். சில PDF Creator கள் இணையத்தில் இலவசமாக இறக்கம் செய்ய முடிகின்றது. இதன் மூலம் PDF file லாக சேமிக்கவும், மேலும் மின்நூல் உருவாக்கவும் PDF file லாக convet பன்னவும் இந்த மின்பொருள் பயன்படுகின்றது. இங்கே சுட்டி PDF Creator ரை இறக்கி உங்கள் கனனியில் நிறுவிக்கொள்ளலாம். இலவசமாக கிடைப்பது மேலும் ஒரு மகிழ்ச்சியான ஒன்று...




மேற்கண்ட விளக்கம் புரியும்படி இருக்கும் என்று நினைக்கின்றேன். நான் கணணி சார்ந்த துறையில் இல்லாததால் என்னால் முடிந்தமட்டும் எழுதியுள்ளேன்...

அன்புடன்,.

ஆ.ஞானசேகரன்.

11 comments:

ஹேமா said...

இப்படி நாங்கள் விமான டிக்கட்டுக்களை எடுத்துக்கொள்வது லாபமும் கூட.டிக்கட் செய்து தரும் நிறுவனங்கள் இதற்கான சேவைப் பணத்தை எங்களிடமிருந்தே அறவிட்டுக்கொள்கின்றன.எனவே நாங்களே டிக்கட்டைச் செய்துகொண்டால் லாபம்தானே

ஆதவா said...

நிச்சயம் இது சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரிய உபயோகமாக இருக்கும்.....

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...
இப்படி நாங்கள் விமான டிக்கட்டுக்களை எடுத்துக்கொள்வது லாபமும் கூட.டிக்கட் செய்து தரும் நிறுவனங்கள் இதற்கான சேவைப் பணத்தை எங்களிடமிருந்தே அறவிட்டுக்கொள்கின்றன.எனவே நாங்களே டிக்கட்டைச் செய்துகொண்டால் லாபம்தானே//

வணக்கம் ஹேமா, உங்கள் வருகைக்கு நன்றி!

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...
நிச்சயம் இது சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரிய உபயோகமாக இருக்கும்.....//

வாங்க ஆதவா,. நீங்கள் சொல்வது போல உபயோகப்பட்டால் மகிழ்ச்சிதான்..

Anonymous said...

nice

Rajeswari said...

//ஆதவா said...
நிச்சயம் இது சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரிய உபயோகமாக இருக்கும்..//

வழிமொழிகிறேன்.பயனுள்ள பதிவு

ஆ.ஞானசேகரன் said...

//Rajeswari said... வழிமொழிகிறேன்.பயனுள்ள பதிவு//

வணக்கம் Rajeswari, உங்கள் வருகைக்கு நன்றி!

butterfly Surya said...

அருமை.

பயனுள்ள பதிவு.

நிறைய எழுதுங்கள்..

ஆ.ஞானசேகரன் said...

//வண்ணத்துபூச்சியார் said...
அருமை.

பயனுள்ள பதிவு.

நிறைய எழுதுங்கள்//

ஊக்கப்படுத்தி வாழ்த்தியதற்கு நன்றி வண்ணத்துபூச்சியார்..

priyamudanprabu said...

பயனுள்ள பதிவு.

நிறைய எழுதுங்கள்..

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...
பயனுள்ள பதிவு.

நிறைய எழுதுங்கள்..//

நன்றி பிரபு...