சந்தோச(மகிழ்ச்சி) நரம்புகள் புடைக்கட்டும்
மனம் ஒரு குரங்குனு சொல்லுவாங்க சோகத்தையும் மகிழ்ச்சியையும் ஒன்றாக பார்க்கின்ற பக்குவம் அதற்கு கிடையாது. ஒரு சிலர் சோகம் என்றால் அப்படியே ஒரு மூலையில் ஒதுங்கிவிடுவார்கள். அட சந்தோசம் என்றால் ஒரே ரகளைதான் போங்க.
எல்லா மனிதனுக்கும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதுதான் நினைக்கும் எண்ணங்கள். அப்படி எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா என்றால் எதோ ஒரு காரணதிற்காக மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் இருக்கின்றோம். பணம் செல்வங்கள் இல்லை என்று ஒருவன், பணம் செல்வங்கள் இருந்தும் மகிழ்ச்சியில்லையே என்று ஒருவன். ...
இப்ப எல்லோருக்கும் தெரிந்த நான் படித்த கதை ஒன்று, ... ஒரு பெரிய செல்வந்தர் எல்லா செல்வங்களும் இருந்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக மகிழ்ச்சியின்றி வாழ்வையே வெறுக்கின்றான். ஒன்றுமே இல்லாத சாமியார்கள் நன்றாக மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் நான் ஏன் எப்போழுதும் சோகமாக இருக்கின்றேன். ஒரு நாள் தன்னுடைய எல்லா செல்வங்களையும் ஒரு மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு ஒரு சாமியாரிடம் செல்கின்றார். அவரிடம் சென்று என்னிடம் எல்லா செல்வங்கள் இருந்தும் என்னிடம் சந்தோசம் இல்லை. இந்த செல்வங்களை எடுத்துக்கொண்டு எனக்கு சந்தோசமான வாழ்க்கையை கொடுங்கள் என்றார். அந்த சாமியார் அவரை ஒருவாறு பார்த்துவிட்டு அவர் எடுத்து வந்த செல்வங்கள் மூட்டையை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தார்.. அந்த செல்வந்தர் ஆகா நாம் ஒரு போலி சாமியாரிடம் நம் செல்வங்களை கொடுத்துவிட்டோம் என்று அந்த சாமியாரை துரத்த ஆரம்பித்தார்..... அந்த சாமியார் சந்து பொந்துகள் எல்லாம் ஓடி கடைசியில் அதே இடத்திற்கு வந்து அந்த செல்வங்களை வைத்துவிட்டார். சாமியாரை விரட்டி வந்த செல்வந்தர் தன்னுடைய செல்வங்கள் மீண்டும் கிடைத்ததில் மிகவும் சந்தோசமானான்.. அந்த சாமியார் அவனிடம் இதே செல்வங்கள்தான் வரும்போது வைத்திருந்தும் சந்தோசம் இல்லை என்று என்னிடம் வந்தாய்.. இப்போழுதும் இதே செல்வங்கள் கிடைத்தது சந்தோசமாக இருக்கின்றாய்..
ஆமங்க சந்தோசம் என்பது நம்மிடம் இருக்கும் செல்வத்தில் இல்லைங்க நம்முடைய மனதில். சந்தோசமாக இருங்கள்!.. வாழ்வை வளமாக்குவோம்!...
பின்குறிப்பு; உயிர்க்கும் உடமைக்கும் உத்தரவாதம் இல்லாமல் வன்னிகாடுகளில் இன்னல்படும் உறவுகளுக்கு சந்தோசத்தை எப்படி கொடுப்போம்.... சித்திரை ஒன்று தமிழர் புத்தாண்டா? அல்லது சித்திரைத் திருநாளா?? என்று பட்டிமன்றம் செய்து முடிவில் சந்தோசத்தை வன்னிகாடுகளுக்கு அனுப்பிவைப்போம்.....
புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம்- பாரதிதாசன்
என்றும்
ஆ.ஞானசேகரன்
Tuesday, April 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
//ஆமங்க சந்தோசம் என்பது நம்மிடம் இருக்கும் செல்வத்தில் இல்லைங்க நம்முடைய மனதில். சந்தோசமாக இருங்கள்!.. வாழ்வை வளமாக்குவோம்!...//
இன்றைய நல்நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு.நல்ல நாளில் நல்ல கருத்தோடு ஒரு கதையில் செய்தி.நன்றி ஞானசேகரன்.
/// ஹேமா said...
//ஆமங்க சந்தோசம் என்பது நம்மிடம் இருக்கும் செல்வத்தில் இல்லைங்க நம்முடைய மனதில். சந்தோசமாக இருங்கள்!.. வாழ்வை வளமாக்குவோம்!...//
இன்றைய நல்நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு.நல்ல நாளில் நல்ல கருத்தோடு ஒரு கதையில் செய்தி.நன்றி ஞானசேகரன்.//
வணக்கம் ஹேமா உங்களுக்கும் என் வளமான சந்தோச பகிர்வு
வாழ்த்துகள் சிங்கை ஞானியார் அவர்களே!
சரி, வந்த வேலையப் பாக்கலாம்!! இஃகிஃகி!!!
//சந்தோச(மகிழ்ச்சி) நரம்புகள்//
உவகை(மகிழ்ச்சி) நரம்புகள்
//மகிழ்ச்சியா இருக்கவேண்டும்//
மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்
//கோடுங்கள் //
கொடுங்கள் /தாருங்கள்
//இன்னல்ப்படும்//
இன்னல்படும்
//சித்திரை ஒன்று புத்தாண்டா இல்லை சித்திரை திருநாளா //
சித்திரை ஒன்று புத்தாண்டா? அல்லது சித்திரை திருநாளா??
இஃகிஃகி! நம்ம பக்கத்துக்கு வரும்போதும், பிழைகள் இருந்தா சுட்டிட்டு போங்க என்ன?!
// பழமைபேசி said...
வாழ்த்துகள் சிங்கை ஞானியார் அவர்களே!//
நன்றி நண்பா
அருமையான பதிவு.
நல்ல கதையொன்றை சொல்லி அமர்க்களபடுத்திவிட்டீர்கள் ஞானசேகரன் சார்.
இப்படி இன்னும் நிறைய குட்டி கதையோடு எழுதுங்கள்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
பழமைபேசி
நன்றி நண்பரே பிழைகளை சரி செய்துவிட்டேன்
//ஆ.முத்துராமலிங்கம் said...
அருமையான பதிவு.
நல்ல கதையொன்றை சொல்லி அமர்க்களபடுத்திவிட்டீர்கள் ஞானசேகரன் சார்.
இப்படி இன்னும் நிறைய குட்டி கதையோடு எழுதுங்கள்.
புத்தாண்டு வாழ்த்துகள்.//
வணக்கம் ஆ.முத்துராமலிங்கம் சார்
உங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சியே!!
உங்களுக்கும் நல்நாள் வாழ்த்துகள்...
அவன் அயோக்கியன் இல்லை! இந்த வாக்கியம் சரியா? தவறா?? தவறுன்னு சொல்லுதுங்க, போப் அடிகளோட தமிழ்க் கையேடு! ஆமுங்க, அவன் அயோக்கியன் அல்ல அப்படீங்றதுதான் சரி! எங்கயெல்லாம் இருக்கு அல்லது உண்டுன்னு சொல்ல முடியுமோ, அங்க மட்டுந்தான் இல்லைங்றதும் வரும். அவன் அயோக்கியன் உண்டுன்னு எழுத முடியுமா? முடியாது அல்ல?? அப்ப, அவன் அயோக்கியன் இல்லைங்றதும் முடியாது. அவன் அயோக்கியன் அல்ல என்பதே சரி! என்னிடம் அறிவு இல்லைங்றது சரி, ஏன்னா என்னிடம் அறிவு உண்டுன்னு சொல்ல முடியுமே?? இஃகிஃகி!!
ஆகவே, சித்திரை ஒன்று புத்தாண்டா? அல்லது சித்திரை திருநாளா??ங்றதுதான் சரி!
//பழமைபேசி said...

//
விரிவான விளக்கம்.. தமிழ்மேல் உள்ள ஆர்வம் பாராட்டுகள்... நண்பா
Chithirai puthaandu & thirunaal,ur short story is nice.
நல்ல பதிவு நண்பா. எல்லாமே நாம வகுத்து கொண்டது தான். சந்தோஷம் துக்கம் எல்லாமே மனம் சார்ந்தது. சில நேரங்களில் சமுதாயத்தையும் சார்ந்தும் அமைந்து வடுகிறது.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்து நடையும் எளிமையாக அழகாக இருக்கிறது. தொடருங்கள் நண்பா.
நண்பரே... மிக அருமையான பதிவு... எனக்கும் இந்தமாதிரி பதிவெல்லாம் போடனும்னு தான் ஆசை...
ஆனா பாருங்க ஸ்டைலை ரஜினிதான் பண்ணனும் மற்றவங்க பண்ணுனா அது என்ன? என்று நான் சொல்ல வேண்டியது இல்லை....
கதை சொல்லிப் பதிவு.பக்கத்துல பாக்யா படம் வேறு.எங்கூரு குசும்பனோட பாதிப்போ:)
//Muniappan Pakkangal said...
Chithirai puthaandu & thirunaal,ur short story is nice.//
வணக்கம் சார்.. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.... அடிக்கடி வாருங்கள்
//கடையம் ஆனந்த் said...
நல்ல பதிவு நண்பா. எல்லாமே நாம வகுத்து கொண்டது தான். சந்தோஷம் துக்கம் எல்லாமே மனம் சார்ந்தது. சில நேரங்களில் சமுதாயத்தையும் சார்ந்தும் அமைந்து வடுகிறது.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்து நடையும் எளிமையாக அழகாக இருக்கிறது. தொடருங்கள் நண்பா.///
வாங்க நண்பரே... உங்களின் பாராட்டுக்கு நன்றி....
// நையாண்டி நைனா said...
நண்பரே... மிக அருமையான பதிவு... எனக்கும் இந்தமாதிரி பதிவெல்லாம் போடனும்னு தான் ஆசை...
ஆனா பாருங்க ஸ்டைலை ரஜினிதான் பண்ணனும் மற்றவங்க பண்ணுனா அது என்ன? என்று நான் சொல்ல வேண்டியது இல்லை....
வாங்க நண்பா உங்களின் முதல் வருகை மகிழ்ச்சி..
//ராஜ நடராஜன் said...
கதை சொல்லிப் பதிவு.பக்கத்துல பாக்யா படம் வேறு.எங்கூரு குசும்பனோட பாதிப்போ:)//
வணக்கம் சார்... நல்ல செய்தி யார் சொன்னாலும் பாதிக்கதான் செய்யும்... ரொம்ப நன்றி சார்...
சந்தோசம் என்பது நம்மிடம் இருக்கும் செல்வத்தில் இல்லைங்க நம்முடைய மனதில். சந்தோசமாக இருங்க
நல்ல செய்தியோடு கூடிய வாழ்த்துக்கள்
சொல்லி இருக்கிங்க
உங்களுக்கும் சித்திரைத்திருநாள்
(புத்தாண்டு) வாழ்த்துக்கள்
வித்தியாசமான கதைதான்.. இதுவரைக்கும் வந்த கதைகளெல்லாம் செல்வம் இருந்தால் சந்தோஷம் போய்விடும் என்றுதான் கருத்தைச் சொல்லும்... !!!
நல்ல கதைங்க. பகிர்ந்தமைக்கு நன்றி!! மனசுதானே எல்லாத்துக்கும் காரணமா இருக்கு!!!!
நல்ல கருத்துடன் கூடிய கதை.. அதை சரியான நேரத்தில் சொல்லி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் நண்பா
// புன்னகை said...
சந்தோசம் என்பது நம்மிடம் இருக்கும் செல்வத்தில் இல்லைங்க நம்முடைய மனதில். சந்தோசமாக இருங்க
நல்ல செய்தியோடு கூடிய வாழ்த்துக்கள்
சொல்லி இருக்கிங்க
உங்களுக்கும் சித்திரைத்திருநாள்
(புத்தாண்டு) வாழ்த்துக்கள்//
உங்களின் முதல் வருகை மகிழ்ச்சி புன்னகை உங்களுக்கும் நன்னாள் வாழ்த்துக்கள்.. கருத்துரைக்கு நன்றி
//ஆதவா said...
வித்தியாசமான கதைதான்.. இதுவரைக்கும் வந்த கதைகளெல்லாம் செல்வம் இருந்தால் சந்தோஷம் போய்விடும் என்றுதான் கருத்தைச் சொல்லும்... !!!
நல்ல கதைங்க. பகிர்ந்தமைக்கு நன்றி!! மனசுதானே எல்லாத்துக்கும் காரணமா இருக்கு!!!!
//
வாங்க ஆதவா, உங்களின் பகிர்வுக்கு மகிழ்ச்சியே! இன்று விடுமுறையை எப்படி கழித்தீர்கள்.. எனக்கு night shif புறப்பட்டுக்கொண்டுள்ளேன்...நன்றி.. நன்னாள் வாழ்த்துக்கள்
//கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல கருத்துடன் கூடிய கதை.. அதை சரியான நேரத்தில் சொல்லி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் நண்பா//
வாங்க கார்த்திகைப் பாண்டியன்.. வணக்கங்கள் பல உங்களின் பாராட்டுக்கு நன்றி நண்பா
//விரிவான விளக்கம்.. தமிழ்மேல் உள்ள ஆர்வம் பாராட்டுகள்... நண்பா//
ஆனா, நீங்க மாத்தலையே? அவ்வ்வ்....
///சித்திரை ஒன்று தமிழர் புத்தாண்டா? அல்லது சித்திரைத் திருநாளா?? //
அப்பாடி மாற்றிவிட்டேன் நன்றி பழமைபேசி ...
//tamil cinema said...
ஒரு முறை வாருங்கள். உங்களுக்கு பிடித்த புக்மார்க் தளம்
நெல்லைத்தமிழ்//
நன்றி
சித்திரை ஒன்று தமிழர் புத்தாண்டா? அல்லது சித்திரைத் திருநாளா??
ஆகா உங்களுக்கும் இதுதான் சந்தேகமா? இப்பதான் இது பற்றி பதிவு போட்டு வந்தேன்,வாருங்கள் நம்ம பதிவுக்கு.
//சொல்லரசன் said...
சித்திரை ஒன்று தமிழர் புத்தாண்டா? அல்லது சித்திரைத் திருநாளா??
ஆகா உங்களுக்கும் இதுதான் சந்தேகமா? இப்பதான் இது பற்றி பதிவு போட்டு வந்தேன்,வாருங்கள் நம்ம பதிவுக்கு//
ஆகா.. நல்லாதான் சந்தேகம், சரி சரி வருகின்றேன் நண்பா
வாழ்த்துகள்.
வால்பையனுக்குப் பிறந்த நாள் அன்றைக்கு மாத்திரம் வால்த்துகள்.
// தமிழ்நெஞ்சம் said...
வாழ்த்துகள்.
வால்பையனுக்குப் பிறந்த நாள் அன்றைக்கு மாத்திரம் வால்த்துகள்.//
வாங்க தமிழ்நெஞ்சம்... உங்களுக்கும் நட்சத்திர வாழ்த்துக்கள்
நல்ல கதை
///
//ஆமங்க சந்தோசம் என்பது நம்மிடம் இருக்கும் செல்வத்தில் இல்லைங்க நம்முடைய மனதில். சந்தோசமாக இருங்கள்!.. வாழ்வை வளமாக்குவோம்!...//
//பிரியமுடன் பிரபு said...
நல்ல கதை
///
//ஆமங்க சந்தோசம் என்பது நம்மிடம் இருக்கும் செல்வத்தில் இல்லைங்க நம்முடைய மனதில். சந்தோசமாக இருங்கள்!.. வாழ்வை வளமாக்குவோம்!...////
வாங்க பிரபு... நன்றி
Post a Comment