அதேபோல் சில நாட்களுக்கு பின் முல்லா அந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் "முன்பு கொடுத்ததை விட பெரிய பானை ஒன்று இரவல் கொடுக்க முடியுமா?" என்று கேட்டார். பக்கத்துவீட்டுகாரர் ஒன்றுக்கு இரண்டாக கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் பெரிய பானை ஒன்றை கொடுத்தார். பல நாட்கள் ஆகியும் முல்லா பானையை திருப்பி தரவில்லை. பின் தயங்கி தயங்கி பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து பானையை திருப்பி கேட்டார். " அத ஏன் கேக்கறீக அந்த பானை நேற்றுதான் செத்து போச்சு" என்றார் முல்லா. கோபம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் "என்னது என்னை என்ன இழிச்சாவாயன் என்று நினைத்தாயா? பானை எப்படி செத்து போகும் " என்று கோபமுற்றார். அதற்கு முல்லா " பானை குட்டி போட்டதை நம்பு பொழுது ஏன் செத்து போனதை நம்பமுடியாது? " என்று முல்லா கேட்டதும் பக்கத்து வீட்டுக்காரர் தலைகுனிந்து சென்றுவிட்டார்......ஆமங்க பொய் சொல்வது எவ்வளவு தப்புனு நினைக்கின்றோமோ அதை விட பொய் என்று தெரிந்தும் நம்புவது மிக பெரிய தப்புங்கோ.... அதுபோல தவறு என்று தெரிந்தும் அதையே செய்யுறது எவ்வளவு தப்பு?... ஆனா அதை நாம் செஞ்சுக்கொண்டே இருக்கின்றோமே ஏன்? அதை பற்றி அடுத்த பதிவுல பாக்கலாங்க.....
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

