குழந்தைகள் எதிர்நோக்கும் அபாயம்..
குழந்தைகளை தெய்வதிற்கு சமமாக கருதுவதுண்டு. மனதளவில் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றே சொல்லி வருகின்றோம். அப்படி பட்ட குழந்தைகளுக்கு இந்த சமுகத்தால் இழைக்கப்படும் அபாயம் ஏராளம் ஏராளம்....
குழந்தைகளை பொறுத்தவரை அவர்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள் சிசு பெண் கொலைகள்,பெண்சிசு வதைகள், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், பெண் குழந்தைகளிடம் வன்செயல்கள் புரிதல், ஆண் குழந்தைகளிடம் அளவிற்கு அதிகமாக வேலை வாங்குதல்,பெரியவர்களும் பெற்றோர்களும் தங்களின் இயலாமையை குழந்தைகளிடம் காட்டுதல் போன்ற கொடுமைகள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கின்றது.
இவற்றுகெல்லாம் காரணம் குழந்தைகள் பிறந்தவுடன் பெரியோர்களையும் பெற்றோர்களையும் அண்டி வாழவேண்டிய சூழல். இதனால் இவர்களால் இன்னலுக்கு ஆளாகவேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் தடுக்க அரசும் சமுகம்சார்ந்த நிறுவனங்களும் நடவடிக்கைகள் எடுத்தாலும், இன்னும் இப்படிபட்ட கொடுமைகள் அதற்கு மேலும் நடக்கதான் செய்கின்றன. இதை தடுக்க போதிய சட்டம் இல்லை என்றே தோன்றுகின்றது.
இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தைகளை கடத்தி ஊனம் செய்து பிச்சை எடுக்க வைத்தல், குழந்தை இல்லாதவர்களுக்கு விற்றுவிடுதல் பொன்ற செயல்களும் நடக்கின்றன. இப்படி செய்பவர்களை என்னை பொறுத்தவரை குறைந்தப் பச்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான். இந்த வார (01-07-2209) குமுதத்தில் படித்து பதறவைத்த செய்திதான் என்னை இப்படி எழுத தூண்டியது. ஒரு கும்பல் குழந்தைகளை கடத்தி விற்பதும், பிச்சை எடுகக் செய்வதும், திருட பயன்படுத்துவதுமாக உள்ளது. ஆட்டோ ஓட்டுனர் ஜோசப் என்பவரால் அடையாளம் காணப்பட்ட கும்பலின் விவரம் பின் உள்ள படத்தை சுட்டி பெரிதாக்கி படிக்கவும்.
நம் நாட்டை பொறுத்தவரை நாம் கேள்விப்படுவதை காட்டிலும் பெரிய அளவில் வன் செயல்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கின்றது. இதை அரசும் சட்டங்களும் தடுத்தாலும் பெற்றோர்களிடம் ஒரு விழிப்புணர்வும் தேவை என்றே தோன்றுகின்றது. குழந்தைகளால் ஒன்றும் செய்ய முடியாது எனவே பெரியவர்களாகிய நாம் இப்படிப்பட்ட கொடுமைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும். வளர்கின்ற இவர்களை வழிநடத்த வேண்டும்.
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
Saturday, July 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
The kidnapping starts at the delivery ward itself.Nice post Gnanaseharan with social concern.
இப்படி செய்பவர்களை என்னை பொறுத்தவரை குறைந்தப் பச்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான்.
உண்மை தான் சேகரன்
// Muniappan Pakkangal said...
The kidnapping starts at the delivery ward itself.Nice post Gnanaseharan with social concern.//
Thanks sir
// sakthi said...
இப்படி செய்பவர்களை என்னை பொறுத்தவரை குறைந்தப் பச்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான்.
உண்மை தான் சேகரன்//
நன்றி சக்தி
//.இதை அரசும் சட்டங்களும் தடுத்தாலும் பெற்றோர்களிடம் ஒரு விழிப்புணர்வும் தேவை என்றே தோன்றுகின்றது. //
மிகச் சரி. குழந்தைகளிடம் பிறரிடம் பழகுவதைப் பற்றி புரிந்து கொண்டு செயல்படும் விழிப்புணர்வை வளர்க்க வேண்டும்
உண்மை
/// கோவி.கண்ணன் said...
//.இதை அரசும் சட்டங்களும் தடுத்தாலும் பெற்றோர்களிடம் ஒரு விழிப்புணர்வும் தேவை என்றே தோன்றுகின்றது. //
மிகச் சரி. குழந்தைகளிடம் பிறரிடம் பழகுவதைப் பற்றி புரிந்து கொண்டு செயல்படும் விழிப்புணர்வை வளர்க்க வேண்டும்///
நீங்கள் சொல்வதும் மிக சரி கண்ணன்.
வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க
// பனையூரான் said...
உண்மை//
மிக்க நன்றி நண்பா
இப்படி செய்திகள் நெஞ்சு பதற் வைக்கின்றன்!!
நல்ல பதிவு நண்பா
//தேவன் மாயம் said...
இப்படி செய்திகள் நெஞ்சு பதற் வைக்கின்றன்!!//
ஆமாங்க டாக்டர்..
// பித்தன் said...
நல்ல பதிவு நண்பா//
மிக்க நன்றி நண்பா
"திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்.அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துகொண்டே இருக்கும்.திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"என்ற வரிகளுக்கு ஏற்ப எவ்வளவுதான் காவல்துறை விழிப்புடன் செயல்பட்டாலும் அதற்கு மக்களும் ஒத்துழைப்பு ஒடுக்காவிட்டால் குற்றங்களை தடுக்க முடியாது.குற்றம்செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது.
நல்ல பதிவு.வாழ்த்துகள்.
குழந்தைகளுக்கு கடத்தல் மட்டும் அபாயமல்ல, பலவிதமான அபாயங்கள் சூழ்ந்திருக்கிறது. தற்காப்பின்மை உள்ள அனைவருக்கும் இவ்வகை அபாயங்கள் உள்ளன...
அதென்னங்க அரசு சார்ந்த நிர்வணங்கள்>?
குழந்தை வளர்ப்பவர்கள் (பெற்றோர் அல்லது காப்பாளர்) பொறுப்புடனும் கடமையுணர்வுடனும், பாசத்துடனும் செயல்படவேண்டும்!!
// ராம்.CM said...
"திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்.அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துகொண்டே இருக்கும்.திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"என்ற வரிகளுக்கு ஏற்ப எவ்வளவுதான் காவல்துறை விழிப்புடன் செயல்பட்டாலும் அதற்கு மக்களும் ஒத்துழைப்பு ஒடுக்காவிட்டால் குற்றங்களை தடுக்க முடியாது.குற்றம்செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது.
நல்ல பதிவு.வாழ்த்துகள்.//
வணக்கம் ராம்,
மிக்க நன்றிங்க.. சில நேரங்களில் திருடனா பார்த்து திருந்தும் வரை எதிர்பார்க்கவும் முடியாது. அதற்கான கடுமையான தண்டனையும்,பொறுப்புணர்வும் வேண்டும். கண்டிப்பாக மக்கள் ஒத்துழைப்பு இன்றி காவல்துறை மட்டும் ஒன்றும் செய்யமுடியாது. முழுமையான பொறுப்புணர்வும், விழிப்புணர்வும் தேவைதான்....
மிக்க நன்றி நண்பா
//ஆதவா said...
குழந்தைகளுக்கு கடத்தல் மட்டும் அபாயமல்ல, பலவிதமான அபாயங்கள் சூழ்ந்திருக்கிறது. தற்காப்பின்மை உள்ள அனைவருக்கும் இவ்வகை அபாயங்கள் உள்ளன...
அதென்னங்க அரசு சார்ந்த நிர்வணங்கள்>?
குழந்தை வளர்ப்பவர்கள் (பெற்றோர் அல்லது காப்பாளர்) பொறுப்புடனும் கடமையுணர்வுடனும், பாசத்துடனும் செயல்படவேண்டும்!!//
வாங்க ஆதவா.. நீண்ட இடைவெளியில் சந்திப்பதில் மகிழ்ச்சியே...
நிர்ணங்கள்-நிறுவனங்கள் பிழை திருத்தப்பட்டுவிட்டது.
குழைந்தைகளின் நலனை பேணிகாக்க யுனைடெட் நேசனல் என்ற சமுகம் சார்ந்த நிறுவனம் செயல்படுகின்றது.
நீங்கள் சொல்வதை போல பொறுப்புணர்வும், விழிப்புணர்வும் மிக முக்கியம்தான்....
மிக்க நன்றி ஆதவா>...
இம்மாதிரி படுபாவிகளை கொடும்பாவிகளாய் நடுரோட்டில் கொழுத்த வேண்டும் ஒருத்தனை கொழுத்தினால் அடுத்தவனுக்கு பயம் வரும் சட்டம் தண்டனை காத்திருத்தல் மட்டுமே மிஞ்சும் அதற்குள் கடத்தல் எண்ணிக்கை அதிகரிக்கும்...யாரைக் கேட்டு கடத்துகிறான் அரசைக் கேட்டு தண்டிக்க? வலித் தெரியாத வஞ்சகர்கள் இவர்களிடம் வாய்மை ஏன்?
//தமிழரசி said...
இம்மாதிரி படுபாவிகளை கொடும்பாவிகளாய் நடுரோட்டில் கொழுத்த வேண்டும் ஒருத்தனை கொழுத்தினால் அடுத்தவனுக்கு பயம் வரும் சட்டம் தண்டனை காத்திருத்தல் மட்டுமே மிஞ்சும் அதற்குள் கடத்தல் எண்ணிக்கை அதிகரிக்கும்...யாரைக் கேட்டு கடத்துகிறான் அரசைக் கேட்டு தண்டிக்க? வலித் தெரியாத வஞ்சகர்கள் இவர்களிடம் வாய்மை ஏன்?//
ஞாயமான கோபங்கள்...யாரை கேட்டு கடத்துகிறான் அரசைக் கேட்டு தண்டிக்க?...
நல்ல கேள்வி தோழி
கருத்துரைக்கு மிக்க நன்றிமா
கவலைக்குரிய விசயம். இது பற்றி அனைவரும் விழிப்புணர்வை வளர்ப்பதுடன் பொறுப்புணர்வுடன் நடந்து கோள்ள வேண்டும்
நல்ல பதிவு.. பெற்றோரும் குழந்தைகளிடம் பொறுப்பும் அக்கறையும் காட்ட வேண்டும் நண்பா..
இப்படி செய்பவர்களை என்னை பொறுத்தவரை குறைந்தப் பச்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான். ///////////////
நானும் ஆமோதிக்கிறேன் ஆனால் தீர்ப்பு எப்ப வந்து எப்ப நிறைவேற்ற
// ’டொன்’ லீ said...
கவலைக்குரிய விசயம். இது பற்றி அனைவரும் விழிப்புணர்வை வளர்ப்பதுடன் பொறுப்புணர்வுடன் நடந்து கோள்ள வேண்டும்//
உண்மைதான் டொன் லீ..
மிக்க நன்றி
//கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல பதிவு.. பெற்றோரும் குழந்தைகளிடம் பொறுப்பும் அக்கறையும் காட்ட வேண்டும் நண்பா..//
ஆமாங்க கார்திகைப் பாண்டியன்...
// Suresh Kumar said...
இப்படி செய்பவர்களை என்னை பொறுத்தவரை குறைந்தப் பச்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான். ///////////////
நானும் ஆமோதிக்கிறேன் ஆனால் தீர்ப்பு எப்ப வந்து எப்ப நிறைவேற்ற//
உங்களின் கேள்வியும் ஞாயமானதுதான்... நாமலே தீயிட்டு கொழுத்த வேண்டும் என்பது சரிதானே நண்பா!...
அருமையான பதிவு...பூங்கொத்து!
// அன்புடன் அருணா said...
அருமையான பதிவு...பூங்கொத்து!//
மிக்க நன்றி தோழி
//இப்படி செய்பவர்களை என்னை பொறுத்தவரை குறைந்தப் பச்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான்.
உண்மை தான் சேகரன்//
மறுக்கிறேன். 1000 கல்லை எடுத்து கொள்ள வேண்டும். 10 மீட்டர் நின்று எல்லோரும் அடிக்கவேண்டும். செத்தால் அவன் அதிஷ்டம், பிழைத்தால் அவன் துரதிர்ஷ்டம்
//இம்மாதிரி படுபாவிகளை கொடும்பாவிகளாய் நடுரோட்டில் கொழுத்த வேண்டும் ஒருத்தனை கொழுத்தினால் அடுத்தவனுக்கு பயம் வரும் சட்டம் தண்டனை காத்திருத்தல் மட்டுமே மிஞ்சும் அதற்குள் கடத்தல் எண்ணிக்கை அதிகரிக்கும்...யாரைக் கேட்டு கடத்துகிறான் அரசைக் கேட்டு தண்டிக்க? வலித் தெரியாத வஞ்சகர்கள் இவர்களிடம் வாய்மை ஏன்?//
இதுவும் நல்ல யோசனைதான்
//jothi said...
//இப்படி செய்பவர்களை என்னை பொறுத்தவரை குறைந்தப் பச்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான்.
உண்மை தான் சேகரன்//
மறுக்கிறேன். 1000 கல்லை எடுத்து கொள்ள வேண்டும். 10 மீட்டர் நின்று எல்லோரும் அடிக்கவேண்டும். செத்தால் அவன் அதிஷ்டம், பிழைத்தால் அவன் துரதிர்ஷ்டம்//
உங்களின் ஆதங்கம்தான் எனக்கும்.. சட்டத்தையும் கையில் எடுப்பது தவறாகுமே...
மிக்க நன்றிங்க
// jothi said...
//இம்மாதிரி படுபாவிகளை கொடும்பாவிகளாய் நடுரோட்டில் கொழுத்த வேண்டும் ஒருத்தனை கொழுத்தினால் அடுத்தவனுக்கு பயம் வரும் சட்டம் தண்டனை காத்திருத்தல் மட்டுமே மிஞ்சும் அதற்குள் கடத்தல் எண்ணிக்கை அதிகரிக்கும்...யாரைக் கேட்டு கடத்துகிறான் அரசைக் கேட்டு தண்டிக்க? வலித் தெரியாத வஞ்சகர்கள் இவர்களிடம் வாய்மை ஏன்?//
இதுவும் நல்ல யோசனைதான்///
உண்மைதான்
இது போல் யார் செய்தாலும் அவர்களுக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் கொடுக்கலாம.
ஆமாம் மனம் பதறுகிறது.
சிறுகுழந்தைகளை இதுபோல் தவறாக உபயோகப் படுத்துதல் மிகவும் கொடுமையான விஷயம்.
இதுபோல் செய்பவர்கள் அவர்களாகவே திருந்த வேண்டும்.
தண்டனைகள் கூட அவர்களை ஒன்றும் செவதில்லை.
சிறிது நாட்கள் உள்ளே இருந்து விட்டு சிபாரிசின் பேரில் வெளியே வந்து மறுபடியும் ஆரம்பித்து விடுவார்கள்.
// RAMYA said...
இது போல் யார் செய்தாலும் அவர்களுக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் கொடுக்கலாம.
ஆமாம் மனம் பதறுகிறது.
சிறுகுழந்தைகளை இதுபோல் தவறாக உபயோகப் படுத்துதல் மிகவும் கொடுமையான விஷயம்.
இதுபோல் செய்பவர்கள் அவர்களாகவே திருந்த வேண்டும்.
தண்டனைகள் கூட அவர்களை ஒன்றும் செவதில்லை.
சிறிது நாட்கள் உள்ளே இருந்து விட்டு சிபாரிசின் பேரில் வெளியே வந்து மறுபடியும் ஆரம்பித்து விடுவார்கள்.//
வாங்க ரம்யா,..
இது ஒரு கொடுமையான விடயம்ங்க..
இன்று இது அதிகமாகின்றது என்பதுதான் வேதனை. இன்னும் மேலும் ஒரு கொடுமை பள்ளிகளிலும் சிறார் பாலியல் வன்கொடுமை. இதற்கெல்லாம் ஒரு பாதுகாப்பாக கடுமையான தண்டனை வேண்டும் என்பது என் எண்ணங்கள். தவற்றை முளையிலேயே எடுக்க இந்த கடும்சட்டம் உபயோகப்படும்..
மிக்க நன்றி நம்யா....
நல்லபதிவு. இது போன்ற பதிவுகளை நீங்கள் தொடர்ந்து எழுதினால் நல்லாயிருக்கும். குழந்தைகளை கடத்தி தீய வழியில் பயன்படுத்தும் அந்த கல்நெஞ்ச சதிகாரர்களையும் கண்டறிந்து தண்டிக்கும் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வர வேண்டும். வரும்.
வாழும் போதே மனிதன் மனிதாக வாழ வேண்டும். அப்போது தான் தெய்வ நிலைக்கு உயர முடியும்.
ஞானசேகரன் தொடருங்கள். இது போன்ற பதிவுகளை.
//கடவுள் said...
நல்லபதிவு. இது போன்ற பதிவுகளை நீங்கள் தொடர்ந்து எழுதினால் நல்லாயிருக்கும். குழந்தைகளை கடத்தி தீய வழியில் பயன்படுத்தும் அந்த கல்நெஞ்ச சதிகாரர்களையும் கண்டறிந்து தண்டிக்கும் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வர வேண்டும். வரும்.
வாழும் போதே மனிதன் மனிதாக வாழ வேண்டும். அப்போது தான் தெய்வ நிலைக்கு உயர முடியும்.
ஞானசேகரன் தொடருங்கள். இது போன்ற பதிவுகளை.//
வணக்கம் நண்பா,..
முடிந்தமட்டும் மானுடம் சொல்லும் பதிவுகளை சொல்ல கடமையாய் உள்ளேன்..
மிக்க நன்றி நண்பா
இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தைகளை கடத்தி ஊனம் செய்து பிச்சை எடுக்க வைத்தல், குழந்தை இல்லாதவர்களுக்கு விற்றுவிடுதல் பொன்ற செயல்களும் நடக்கின்றன. இப்படி செய்பவர்களை என்னை பொறுத்தவரை குறைந்தப் பச்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான்
////
சரியா சொன்னீங்க
// பிரியமுடன் பிரபு said...
இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தைகளை கடத்தி ஊனம் செய்து பிச்சை எடுக்க வைத்தல், குழந்தை இல்லாதவர்களுக்கு விற்றுவிடுதல் பொன்ற செயல்களும் நடக்கின்றன. இப்படி செய்பவர்களை என்னை பொறுத்தவரை குறைந்தப் பச்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான்
////
சரியா சொன்னீங்க///
மிக்க நன்றி பிரபு
பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என எல்லாரும் அவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். தற்காப்பு கலைகளையும் கற்றுத்தந்தால் பயன்படும். டான்ஸ் கிளாஸ், பாட்டு கிளாஸ் என்பதைவிட இது முக்கியம்.
இதுபோன்ற வன்செயல்களை மிக அதிகமாகவே செய்திகளில் காணமுடிகிறது. பெற்றோரக்ள் மிகக் கவனமாக குழந்தைகளுக்கு இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
//குடந்தை அன்புமணி said...
பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என எல்லாரும் அவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். தற்காப்பு கலைகளையும் கற்றுத்தந்தால் பயன்படும். டான்ஸ் கிளாஸ், பாட்டு கிளாஸ் என்பதைவிட இது முக்கியம்.//
நீங்கள் சொல்வதும் சரி என்றே படுகின்றது நண்பா
// " உழவன் " " Uzhavan " said...
இதுபோன்ற வன்செயல்களை மிக அதிகமாகவே செய்திகளில் காணமுடிகிறது. பெற்றோரக்ள் மிகக் கவனமாக குழந்தைகளுக்கு இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.//
மிக்க நன்றி நண்பா
விழிப்புணர்வைக் கோரும் நல்ல பதிவு ஞானசேகரன். உழவனும் இதுகுறித்து கவிதை படைத்திருந்தார் சமீபத்தில்.
//குழந்தைகளை கடத்தி ஊனம் செய்து பிச்சை எடுக்க வைத்தல், குழந்தை இல்லாதவர்களுக்கு விற்றுவிடுதல் பொன்ற செயல்களும் நடக்கின்றன.//
'என்ன இது உடனுக்குடன் ஒரு சுட்டியைத் தருகிறாரே இவர்’ என நீங்கள் தவறாக எடுக்க மாட்டீர்கள் என்றால் கீழ்வரும் பதிவுகளை நேரம் கிடைத்தால் பார்க்க வேண்டுகிறேன்:
புன்னகைப் பூவே பூமிகா
சேற்றிலே செந்தாமரைகளும்...
//அரசும் சட்டங்களும் தடுத்தாலும் பெற்றோர்களிடம் ஒரு விழிப்புணர்வும் தேவை என்றே தோன்றுகின்றது.//
உண்மை
// ராமலக்ஷ்மி said...
விழிப்புணர்வைக் கோரும் நல்ல பதிவு ஞானசேகரன். உழவனும் இதுகுறித்து கவிதை படைத்திருந்தார் சமீபத்தில்.
//குழந்தைகளை கடத்தி ஊனம் செய்து பிச்சை எடுக்க வைத்தல், குழந்தை இல்லாதவர்களுக்கு விற்றுவிடுதல் பொன்ற செயல்களும் நடக்கின்றன.//
'என்ன இது உடனுக்குடன் ஒரு சுட்டியைத் தருகிறாரே இவர்’ என நீங்கள் தவறாக எடுக்க மாட்டீர்கள் என்றால் கீழ்வரும் பதிவுகளை நேரம் கிடைத்தால் பார்க்க வேண்டுகிறேன்:
புன்னகைப் பூவே பூமிகா
சேற்றிலே செந்தாமரைகளும்...//
மிக்க நன்றி..
சுட்டிகளையும் படித்தேன்...
பதபதைத்தது...
// நசரேயன் said...
//அரசும் சட்டங்களும் தடுத்தாலும் பெற்றோர்களிடம் ஒரு விழிப்புணர்வும் தேவை என்றே தோன்றுகின்றது.//
உண்மை//
நன்றி நண்பா
இவர்களை போன்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.. ஆனால் நம் டுபாக்கூர் சட்டம் மூலம் இவர்கள் எளிதாக வெளி வந்து விடுகிறார்கள்..பயமே இல்லாமல் போய் விட்டது
//கிரி said...
இவர்களை போன்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.. ஆனால் நம் டுபாக்கூர் சட்டம் மூலம் இவர்கள் எளிதாக வெளி வந்து விடுகிறார்கள்..பயமே இல்லாமல் போய் விட்டது//
உண்மைதான் கிரி என்னபன்னுறது. நாமும் ஏதாவது செய்யதான் வேண்டும். மிக்க நன்றி கிரி.
மிகவும் பயனுள்ள பதிவு
// வலசு - வேலணை said...
மிகவும் பயனுள்ள பதிவு//
நன்றி நண்பா
Post a Comment