





இன்று செப்டம்பர் 28ம் தேதி மாதக்கடைசி ஞாயிறு உலக
இருதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உயிர்களின் வாழ்வில் இதயம் முக்கிய பங்கு பெறுகின்றது. இதயமே சக்திகளை மூளை மற்றும் இதறபாகங்களுக்கும் எடுத்து செல்கின்றது. இப்படி முக்கியமான இதயத்தை நோயின்றி காப்பாற்றவும், இதயநோய் பற்றிய விழிப்புனர்வு ஏற்படுத்தவும் உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் விரிவான செய்திகளை தினமலர் சுட்டியை சுட்டி பார்க்கவும்...

நன்றி தினமலர்:
சாதி ,மதம், இனத்திற்கு அப்பால் இன்னுமும் மனிதம் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றது. மாணவன் இதயேந்திரனை இழந்த பெற்றோருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரியபடுத்துவோம்.... இறந்தும் இறவா மாணவன் இதயேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி!........


இதுபொல 10-09-2008 ஆனந்த விகடனில் பெரியாருடன் வாழ்ந்து அவர் கொள்கையில் ஈர்க்கப்பட்ட பெருமாள் தற்பொது தினம் இரண்டு வேலை பூஜை செய்து நெற்றியில் விபூதியுடன் வாழ்கின்றார். இவர் சொல்வதை அருகில் உள்ள படத்தை அமுக்கி காணலாம்,.. நாம் நல்லதை பண்ணணும் அதை பெரியார் பேரால பண்ணினா என்னா... பிள்ளையார் பேரால பண்ணினா என்னா?.... என்று சொல்லும் பெருமாள்...
எங்கள் ஊரில் மூக்குப்பொடிக்காரர் என்று எல்லோராலும் சொல்லும் ஒருவர்.(ஏனெனில் மூக்குப்பொடி அதிகம் போடுவார்) முற்போக்கு கருத்துகளை சொல்லுவார்.. பெளடர் டப்பா தகரத்தில் விசில், காற்றாடி போன்றவற்றை செய்துகொண்டு எல்லா ஊர்களுக்கும் சென்று வருவார். நல்ல மனிதர் சமூக அக்கறையுள்ளவர் ஆனால் மனநிலையில் குழம்பியுள்ளார்.. இவரிடம் குழப்பம்தான் என்ன? நாத்திகத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் நடந்த போராட்டத்தில் வெற்றி பெராமலே இவரின் இந்த நிலை!,.. மேலெயுள்ள பெருமாள் அவர்கள் மனதளவில் வெற்றிப் பெற்றதால்தான், இன்று அவர் அந்த நிலையில் உள்ளார்,......
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கவியரசு கண்ணதாசன், போலி மதவாதிகளையும் போலி சாமியார்களையும் கண்ட வெறுப்பில் கிருஸ்துவ பாதியாரிடம் சென்று நான் மதம்மாற வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு அந்த பாதிரியார் ஒரு மதம் பிடிக்கவில்லை என்பதற்காக மதம் மாறவேண்டாம் உங்கள் மனதிற்கு பிடித்தால் மட்டுமே மாறுங்கள். உங்கள் மனசாந்திக்காக பைபிளை படிங்கள் என்று ஒரு பைபிள் கண்ணதாசனிடம் கொடுத்தாராம். அந்த பைபிளை படித்துதான் ஏசு காவியம் எழுதினார். அப்பொழுது எனக்கு தெரிந்த கவிஞர் ஒருவர், கவிஞனுக்கு தன் முடிவுகாலத்தை கனிக்க முடியும் அவ்வாறு கண்ணதாசன் தன்னை கனித்துவிட்டதால்தான் ஏசு காவியம் எழுதுகின்றார் என்று கூறினார் ( அதேபோல ஏசு காவியம் முடித்ததும் இயற்கை எய்தினார்) மேற்கண்ட செய்தி செவிவழி கேட்டதே.....
தாழ்த்தப்பட்ட சமுகத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்டவர்களுக்காக அரும்பாடுப்பட்ட டாக்டர் அம்பேத்கார், தான் சார்ந்த இந்துமதத்தில் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக பார்க்கின்றது என்று, நான் ஒரு இந்துவாக சாக விரும்பவில்லை இந்திய சட்டத்தில் மதம் சாராமைக்கு பிரிவு இல்லை என்பதால் அவர் பெரியாரில் அலோசனையின் பேரில் புத்த மதத்தில் சேர்ந்தார்,....
மரணத்தின் விளிம்பில் உள்ள மனிதன் தளர்ந்த நிலையில் மனதை அமைதிப்படுத்த நம்பியோ! நம்பாமலோ! கடவுளின் தஞ்சம் புகுந்துவிடுவது இயற்கையே! கொடூர கொலையாலி ஆட்டோ சங்கர் தனது மரணத் தண்டனையின் போது கையில் பைபிள் வைத்திருந்தானாம்..
இப்படி மனிதன் பல்வேறு சூழ்நிலைகளில் தன்னை மாற்றி அமைத்துக்கொள்வது தன்னை சார்ந்தவர்களுக்காகவும், தனது மனம் நிம்மதியாக இருந்துவிட்டு போகட்டும் என்ற எண்ணத்தினாலுமே!......
ஜெனிவா: உலகின் மிகப்பெரிய "பிக்-பேங்' (பெரிய
வெடிப்பு) இயற்பியல் பரிசோதனை பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் வெற்றிகரமாக நடந்துள்ளது. ஒருமுறை எங்கள் கிராமத்தில்யுள்ள ஆலயத்திற்க்கு ஜேர்மனிலிருந்து ஒரு பாதிரியார் வந்திருந்தார். இவர் சக்திவாய்ந்தவர் என்றும், இவர் ஜெபம் செய்தால் நோய் மற்றும் சிரமங்கள் எல்லாம் தீரும் என்றும், பேய் கெட்ட ஆவிகளை விரட்டி விடுவார் என்றும் எங்கள் கிராமத்தில் எல்லொரும் அவரிடம் ஜெபம் செய்ய சென்றனர். நானும் எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் தெரிந்துக்கொள்ள வேண்டும் ஆசையில் வரிசையில் நின்றேன். அந்த பாதிரியார் ஒவ்வொருவராக அவர்கள் தலையில் கைவைத்து ஜேபம் செய்தார். அப்படி ஜேபம் செய்யும்போது அவர்கள் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள், இப்பொது எல்லா பினி பிசாசுகள் சென்றுவிட்டதாக அவர்களும் நம்பி மகிழ்ந்தனர். என்முறை வந்தது என்தலைமேல் கைவைத்து ஜெபம் செய்தார் ஒன்றும் நடக்கவில்லை அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். உனக்கு நம்பிக்கையில்லை மீண்டு நன்றாக ஜெபம் செய்துவிட்டு வா என்று அருகிலிருந்த அவர் உதவியாளர் சொன்னார். நான் மறுபடியும் செல்லவில்லை
சிங்கபூர் ஒலி 96.8 வானொலியில் நல்லிரவு நிகழ்சியில் பேய் கதைகள் நேயர்கள் தொலைபேசியில் பகிர்ந்து கொள்ளுதல் நிகழ்ச்சி. அவரவர் தான் கண்டதாக பல பேய்கதைகள் சொல்லுவார்கள். தற்பொது இல்லை என்று நினைக்கின்றேன். நானும் கலந்துக்கொண்டு இந்த கதை என்தாத்தா சொன்னதாக சொன்னேன். ஒரு பாதிரியார் பேய் பிசாசுக்கு பயப்படகூடாது, கடவுள் மேல் நம்பிக்கை வைய்யுங்கள் என்பார். நான் நல்லிரவில் சுடுகாடுவரை என்னால் செல்லமுடியும் என்றதும், அவ்வூரில் சிலர் அப்படியானால் நல்லிரவில் சுடுகாடு சென்று இந்த ஆணியை அடித்துவிட்டு வாருங்கள் என்றார்கள். அதேபோல் அன்று இரவு சென்றார் ஆனால் திரும்பி வாரவேயில்லை. காலையில் எல்லொரும் சென்றுபார்த்தனர் அந்த பாதியார் சுடுகாட்டில் இறந்து கிடந்தார். அருகில் சென்று பார்த்ததும்தான் தெரிந்தது அவர் இரவில் ஆணியை அடிக்கும்போது அவர் அங்கியையும் சேர்த்து அடித்துவிட்டார். அடித்த மகிழ்ச்சியில் செல்லும்பொது அங்கியை யாரோ இழுப்பதாக உணர்ந்து அதிர்ச்சியில் இறந்துவிட்டார் என்று... இந்த கதையை சொன்னதும் நிகழ்ச்சியாளர் நம்பிக்கையிருந்தால்தான் பேய்கள் கண்ணுக்கு தெரியும் என்று முடித்துக்கொண்டார்..
இந்த நூற்றாண்டுவரைலும் நம்பிக்கைக்கும் நம்பிக்கையில்லாமைக்கும், பகுத்தறிவுக்கும் ஆன்மீகத்துக்கும் போராட்டம் இருந்துகொண்டே இருக்கின்றது. நாளைய நம்முடிவு நமக்கு தெரியாதவரை இந்த பொராட்டம் இருந்துக்கொண்டேதான் இருக்கும். ஆசையும் அதை அடையவேண்டும் என்ற எண்ணம் இருக்குமேயானால் இப்பட்டி பட்ட நிலை இருக்கத்தான் செய்யும் என்பது என் எண்ணம்.........

=>வாங்க ரஜினி சார்! நல்லது செய்ய தொனுச்சினா வாங்க ரஜினி சார்!
=>வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவீர்களாமே! வாங்க ரஜினி சார்!
=>நல்லது செய்யனும்னா நல்லநாள் நேரம் தேவையில்லை, தொண்டுழியனை யார் தடுக்க முடியும் வாங்க ரஜினி சார்!
=>வாய்ஸ் மட்டுமே கொடுப்பதை நிருத்திவிட்டு ஏதாவது நல்லது செய்யுங்க ரஜினி சார்!
=>இங்கே அரசியல் செய்ய ஆயிரம் பேருள்ளனர், இமயமலை சாக்கு சொல்லாமல் நல்லது செய்யனும் ரஜினி சார்!
=>இயக்குனர் பாரதிராஜாவின் "முதல்மரியதை" பாணியில் எனக்கு ஒரு உண்மை தெரியுனும், உங்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் நாலுகாசு பாக்கலாம் என்று காத்திருப்பவர்களுக்காக நிர்பந்தம் காரணமாக அரசியலுக்கு வருவீர்களாமே! நல்ல பெரும்தன்மை ரஜினி சார்! ஏதாவது நல்லது செய்யுங்க ரஜினி சார்!
=>கடினப்பட்டு தூக்கிய கையை படம்பிடித்து பின் பின்னனியிசையிட்டு, தொழில்நூட்பக் கலைஞர்களின் பெருமுயற்சியில் ஸ்டைலாக காட்டி ரசிகனின் சாபாஸ் வாங்கலாம்! அரசியலில் ஏதாவது நல்லது செய்யனும் ரஜினி சார்!
=>"ஒருதுளி ஓருபவுனு" கவிஞர் வைரமுத்து வரிகளுக்கு வாயசைத்தது போதும் வாங்க சார் ஏதாவது நல்லது செய்யுங்க ரஜினி சார்!
=>நல்லா படித்த நண்பர் நான்காவது முறையாக பாபா படம் பார்க்க சென்றார் ஏனெனில் தலைவர் அரசியலுக்கு வருவதாக இந்தப் படத்தில் சொல்வதாக சொன்னார்கள் தெரியவில்லை அதுதான் எங்கேயாவது சொல்லியுள்ளாரா என்று பார்க்கப் போறேன் என்றார்.. எனக்கு தலைசுற்றியது அரசியலுக்கு வருவதை ஏன் படத்தில் சொல்லவேண்டும்? பத்திரிக்கையாளர்களிடம் சொன்னா பொதுமே.... இவர்கள்தான் உங்கள் வாக்கு வங்கிகள், இவர்களுக்கு ஏதாவது நல்லது செய்யனும் ரஜினி சார்!
=>ஏதாவது நல்லது செய்யனும் ரஜினி சார்! 25 ஆண்டுகளாக திரைப்படதுறைக்கு என்ன செய்தீர்களோ? அதுபொல ஏதாவது செய்யனும் ரஜினி சார்!
=>சுனாமி காலங்களில் ஓடோடி வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினீர்கள் அதுபொல ஏதாவது செய்யனும் ரஜினி சார்!
=>குசராத் பூகம்பத்தில் உங்கள் சேவை உங்கள் மன்றத்தின் சேவைகளை பாராட்டதவர்களில்லை அதுபொல ஏதாவது செய்யுங்க ரஜினி சார்!
=>திட்டமிடாத காவேரி கங்கை இணைப்பு திட்டதிற்கு ஒரு கோடி நன்கொடை செய்ததுபொல ஏதாவது செய்யுங்க ரஜினி சார்!
=>இந்தியா உலகிலே முழுஜனநாயக நாடாகும். இங்கு யார்வேனாலும் அரசியலுக்கு வரலாம்.. உங்களை பொன்ற மக்கள் பலம்கொண்டவர்கள் ஏதாவது நல்லது செய்யனும் ரஜினி சார்!
=>சிவாஜி படத்துக்கு சங்கர் கதை வசனம் எழுதிக்கொடுத்தார். அரசியலில் நீங்கள்தான் எழுதனும் செயல்படுத்தனும்(நடிக்கனும்) . நல்லது செய்யுனும்ன்னு தோனுச்சினா வாங்க ரஜினி சார்! ஏதாவது செய்யுங்க! பொங்கி வரும் வெள்ளத்தை யார் தடுக்க முடியும்..
=> என்றும் நல்லதுக்காக காத்திருக்கும் மக்களின் ஒருவன்
குரங்கு சேட்டைகளை ரசிகாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அப்படி ரசித்த ஒரு சிலதான் இந்த பதிவு.

இதற்கு முன்னரும் மத ரீதியான சிக்கல்களை நமது நாடு சந்தித்துள்ளது.
ம் பிரச்சனையாக்கப்பட்டு அதன் காரணமாக கலவரம் வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டது அரசியல் ரீதியான பலனை - ஆட்சியைப் பிடிக்க வகை செய்யும் வாக்கு வங்கியை - உருவாக்கியதால் அதனையே ஒரு அரசியல் வழிமுறையாக இந்து மதவாத சக்திகள் மட்டுமின்றி, மற்ற மதவாத சக்திகளும் பயன்படுத்தத் துவங்கியுள்ளதால் நமது நாட்டின் சுதந்திரத்திற்கும், சமூக கட்டமைப்பிற்கும், அரசியல் போக்கிற்கும் ஒரு பெரும் ஆபத்தை விளைவிக்கக் காத்திருக்கிறது.
ல்லை. இமய மலைப் பகுதியில் உள்ள புனித அமர்நாத் கோயிற்குச் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாகத் தங்கி, இளைப்பாறிச் செல்ல பால்டால் என்ற இடத்தில் அவர்களுக்கு தற்காலிகமாக தங்குமிடங்களை அமைக்க (கட்டிக்கொள்வதற்கு அல்ல) ஸ்ரீ அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு 40 ஹெக்டேர் நிலத்தை ஜம்மு-காஷ்மீர் அரசு ஒதுக்கியது. இது தற்காலிகமான ஒதுக்கீடு என்று அறிவித்தே அரசு உத்தரவும் பிறப்பித்தது.
செய்துகொடுத்து, அவர்கள் பாதுகாப்பாகத் திரும்ப அமர்நாத் கோயில் நிர்வாகம் அமைக்கப்பட்டது. ஏனேன்றால், 1995ஆம் ஆண்டு அமர்நாத் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பல யாத்ரிகர்கள் உயிரிழந்தனர். எனவே அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க அமர்நாத் கோயில் நிர்வாகம் அமைக்கப்பட்டது. 
த் பிரச்சனையை பெரிதாக்கி, அங்கு காங்கிரஸ் அரசைக் கவிழ்த்து அரசியல் குளிர்காய்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, டெல்லி அரசியலில் காங்கிரஸ் ஆட்சி காப்பாற்றப்பட ஆதரவளித்தார். அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையால் பெரும்பான்மை இழந்த மன்மோகன் சிங் தலைமையிலான அரசு நம்பிக்கைத் தீர்மானத்தை கொண்டுவந்த போது அரசை ஆதரித்து உரையாற்றிய உமர் அப்துல்லா, காஷ்மீரின் நிலம் அபகரிக்கப்படுவதை உயிரைக் கொடுத்தாவது தடுப்போம் என்று மக்களவையில் முழுக்கமிட்டார்.
இதேபோன்ற வேடத்தை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவி மெஹ்பூபா முப்ஃதியும் அணிந்து காஷ்மீரில் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான அரசிற்கு ஆதரவாக வாக்களித்தார். என்ன அடிப்படையில்? மதவாத சக்திகளுக்கு எதிராகவாம்!ஆட்சியைப் பிடிக்க கொள்கையோ திட்டமோ இல்லாமல், மத ரிதியாக மக்களைப் பிளக்கும் அரசியல் கட்சிகள் மதச்சார்பின்மை பற்றிப் பேசுகின்றன.
சுவாமி லட்சுமானந்த சரசுவதியை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்தான் சுட்டுக் கொன்றிருக்கக் கூடும் என்று உறுதியாக சந்தேகிக்கும் அளவிற்கு செய்திகள் வந்துள்ளபோது, இவர்கள் கிறித்தவர்களையும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் தாக்குவதும், தீ வைத்துக் கொளுத்துவதும் எதற்கு?
ஏற்கனவே, 1999ஆம் ஆண்டு ஒரிசாவில் ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த ஸ்டெய்ன் என்ற பாதிரியாரும், அவருடைய இரண்டு மகன்களும் இரவு தங்கள் வாகனத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த மதவெறியாளர்களால் கொளுத்திக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையை திட்டமிட்டுச் செய்த தாராசிங் மற்றும் இரண்டு பேர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.
ஜெயலலிதா அழுத்தமாக உள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதை கேட்கும்போது, இது கூட உண்மையாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இல்லையென்றால், அவருடைய கட்சி தொடர்ந்து ஆதரித்துவந்த ஒரு திட்டத்தை இவ்வளவு மூர்க்கமாக எதிர்ப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.