_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, June 17, 2009

அம்மா நான் கடலை ஆயப்போறேன்...

அம்மா நான் கடலை ஆயப்போறேன்...
வணக்கம் நண்பர்களே சென்ற பதிவில் ன்மீது கல்லெரிந்தவர்கள்-புளியமரம் பற்றி படித்த சில நண்பர்கள் அலைபேசியில் அழைத்து "இனிய நினைவுகளை நினைவுப் படுத்திவிடீர்கள் மிக்க நன்றி" என்று கூறினார்கள். அதேபோல் ஒரு நண்பர் புளியங்கொட்டையில் செய்த காகித புட்டியை எடுத்துக்கொண்டு கடலை ஆய செல்வதையும் எனக்கு ஞாபகப்படுத்திவிட்டார். ஆமாங்க சிறுவகளாய் இருக்கும் பொழுது தோட்டதிற்கு கடலை ஆய சென்ற ஒரு மகிழ்ச்சியான அனுபவம் அவற்றையும் உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சியே.

புன்சை நிலங்களிலும், வானம்பார்த்த நிலங்களிலும் துவரைப் பயிருக்கு ஊடுப்பயிராக நிலக்கடலையும் பயிர் செய்வார்கள். துவரைக்கு முன்பாகவே அக்டோபர், நவம்பர் மாதங்களில் கடலை பக்குவத்திற்கு வந்துவிடும். கடலை செடி குத்துக்கடலை, கொடிக்கடலை என இரு வைகை உண்டு. பக்குவத்திற்கு வந்த கடலைச்செடியை லாபகமாக கடலையுடன் பிடுங்குவார்கள். குத்துக்கடலை செடி புடுங்க சுலபமாகவும், கொடிக்கடலை கொஞ்சம் சிரமமாகவும் இருக்கும். கொடிக்கடலையில் ஒரு காயில் மூன்று பருப்புகள் என அதிகமாக இருக்கும். குத்துக்கடலையில் பொதுவாக ஒரு காயில் இரண்டு பருப்புதான் இருக்கும்.

இப்படி லாபகமாக புடுங்கிய கடலைச்செடியை போரைப்போல் குவித்து வைத்திருப்பார்கள். அந்த கடலைகளை செடிகளிருந்து ஆயத்தான் நாங்கள் அந்த காகித புட்டியை எடுத்துக்கொண்டு செல்வோம். பள்ளிக்கு சென்ற நேரம் போக கடலை ஆய நாங்கள் செல்வோம். கடலை ஆயும் பொழுது கொல்லைகார தாத்தாவிற்கு தெரியாமல் சில கடலைகளை வாயிலும் சிலகடலைகள் புட்டியிலும் வைப்போம். எப்படியும் தூரத்திலிருந்து அந்த தாத்தா நாங்கள் சாப்பிடுவதை பார்த்துவிடுவார். " எலேய் யாருட கடலை ஆயமா கடலையை சாப்பிடுவது அப்பறம் வயித்துக்கு நோவுனா என்ன சொல்லக்கூடாது" என்று வாஞ்சையுடன் தாத்தா கத்துவார்.

நான்கு புட்டி கடலை ஆய்ந்தால் ஒரு புட்டி கூலியாக கொடுப்பார்கள். நாங்கள் திண்ன மீதிதான் புட்டிக்கு கடலை வரும். கூலி கடலைக்காக வருகின்றோமோ இல்லையோ கடலையை தாத்தாவிற்கு தெரியாமல் சாப்பிடுவதற்காகவே அடிக்கடி கடலை ஆய வருவோம். கடலையை காம்பு இல்லாமல் ஆயவேண்டும் காம்பு அதிகம் இருந்தால் ஐந்து புட்டிக்கு ஒரு புட்டிதான் கூலியாக கிடைக்கும். காம்பு அதிகமாக இருந்தால் ஆயவேண்டாம்
என்று தடுத்துவிடுவார்கள். நான் மட்டும் காம்பு இல்லாமல் ஆய மிகவும் சிறமப்படுவேன்.

சாப்பிட்ட கடலைக்கு கண்டிப்பாக தலைவலியோ வயிற்றுவலியோ வரும் என்று பாதுகாப்பாக அம்மா வெல்லக்கட்டி கொடுத்து அனுப்புவாள். எல்லோரும் அப்படிதான் வெல்லக்கட்டி எடுத்து வருவார்கள். கடலையை சாப்பிட்டதும் வெல்லக்கட்டி சாப்பிட்டால் நோவு வராது என்பது அனுபவம். கடலை ஆய சென்றால் கடலையும் கிடைக்கும் வெல்லக்கட்டியும் கிடைக்கும் என்பதில் எத்தனை மிகிழ்ச்சி.

இப்படி கூலியாக கிடைத்த கடலையை வீட்டில் வைத்திருந்து அடைமழை காலங்களில் உப்பிட்டு வேகவைத்தும், வறுத்தும் சாப்பிட்டால் அடைமழையின் சீற்றம் தெரியாமலே போய்விடும். இப்படி இயற்கையான வாழ்க்கையை இன்று இழந்துவிட்டோம் என்பதுதான் மனதின் வருத்தம்.

இப்படிப்பட்ட கிராமத்து அனுபவங்களுடன்
ஆ.ஞானசேகரன்.

55 comments:

காமராஜ் said...

மனது கணக்கிறது,
எனது நடுச்சூரங்குடி அடை மழையும், பசித்த நாட்களும்
கண்களில் நீராய் நிற்கிறது. இந்தா எனது அன்பு முத்தம் .
கைகொடு தோழா கைகுடு.

காமராஜ் said...

ஐயோ, நான் போன பதிவைப்பார்க்க வில்லையே
மன்னித்துவிடு ஞானசேகரா ( ஒருமைமயில் அழைக்கலாமா? )
அழைப்பேன்.

ஆ.ஞானசேகரன் said...

// காமராஜ் said...

மனது கணக்கிறது,
எனது நடுச்சூரங்குடி அடை மழையும், பசித்த நாட்களும்
கண்களில் நீராய் நிற்கிறது. இந்தா எனது அன்பு முத்தம் .
கைகொடு தோழா கைகுடு.//

வணக்கம் தோழா,
என்னோடு பகிர்ந்த வார்த்தைகளில் என்நெஞ்சமும் கனகின்றது. வார்த்தைகளில் இல்லா இந்த நன்றி முத்தங்கள்..

ஆ.ஞானசேகரன் said...

//காமராஜ் said...

ஐயோ, நான் போன பதிவைப்பார்க்க வில்லையே
மன்னித்துவிடு ஞானசேகரா ( ஒருமைமயில் அழைக்கலாமா? )
அழைப்பேன்.//

வாங்க தோழா.. உங்களின் நட்பு இனிதாகட்டும். சென்ற பதிவையும் பார்த்துவிட்டு என்னை ஊக்கப்படுத்துங்கள்

காமராஜ் said...

அருமை...
அவித்த கடலை, வறுத்த கடலை
பச்சைக்கடலை, வெல்லக்கட்டி
செவக்காடு, தோட்டக்காராரரெல்லாமே
மீண்டு வருகிறது.

ஆ.ஞானசேகரன் said...

// காமராஜ் said...

அருமை...
அவித்த கடலை, வறுத்த கடலை
பச்சைக்கடலை, வெல்லக்கட்டி
செவக்காடு, தோட்டக்காராரரெல்லாமே
மீண்டு வருகிறது.//

நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பா

காமராஜ் said...

என் மகனும், மனைவியும் ஏன் அழுகிறீர்களளென்று
கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்ல என் கடந்த
காலமும் உங்கள் பதிவுகளும் நிறைய்ய இருக்கிறது
தோழா.

ஆ.ஞானசேகரன் said...

// காமராஜ் said...

என் மகனும், மனைவியும் ஏன் அழுகிறீர்களளென்று
கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்ல என் கடந்த
காலமும் உங்கள் பதிவுகளும் நிறைய்ய இருக்கிறது
தோழா.//

இப்படிபட்ட நினைவுகள் இல்லா கிராமத்தான் இல்லை என்றே சொல்ல வேண்டும். என்றும் நினைவுகளுடன்
ஆ.ஞானசேகரன்

காமராஜ் said...

let world to smell that wet redsoil.

காமராஜ் said...

கடலைச்செடி பிடுங்கும்போது உடலில் வரையப்பட்ட
செம்மண் சித்திரங்களை வலையில் நிரப்புங்கள்.
வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// காமராஜ் said...

let world to smell that wet redsoil.//

முற்றிலும் முத்தான வாக்கியம்... இன்றைக்கும் நிருபணமாகும் உண்மை

ஆ.ஞானசேகரன் said...

//காமராஜ் said...

கடலைச்செடி பிடுங்கும்போது உடலில் வரையப்பட்ட
செம்மண் சித்திரங்களை வலையில் நிரப்புங்கள்.
வாழ்த்துக்கள்.//

உங்கள் வாழ்த்துகளுக்கு என் ஆணந்த கண்ணீரின் காணிக்கை

ஷண்முகப்ரியன் said...

’ கடலை ஆய்வதின்’ மூலம் நினைவுகளின்’கடலையே’ஆய்ந்திருக்கிறீர்கள்.அருமை.
ஸ்தல விருட்சத்தின் தமிழ்ச் சொல் ‘கோவில் ம்ரம்’ என்று கூற்லாம் என நினைக்கிறேன்,ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

// ஷண்முகப்ரியன் said...

’ கடலை ஆய்வதின்’ மூலம் நினைவுகளின்’கடலையே’ஆய்ந்திருக்கிறீர்கள்.அருமை.
ஸ்தல விருட்சத்தின் தமிழ்ச் சொல் ‘கோவில் ம்ரம்’ என்று கூற்லாம் என நினைக்கிறேன்,ஞானசேகரன்.//

உங்களின் பாராட்டுகளுக்கும், நல்ல யோசனைகளுக்கும் மிகவும் நன்றி சண்முகப்ரியன் சார்... உங்களின் ஊக்கம் எனக்கே மருந்தாக
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ச.பிரேம்குமார் said...

கிராமங்களை நினைவுப்படுத்தும் அருமையான இடுகை. வாழ்த்துகள்

ச.பிரேம்குமார் said...

அவசரத்தில “அம்மா நான் கடலை போடப்போறேன்” அப்படின்னு படிச்சு தொலைச்சுட்டேன் :))))

ஆ.ஞானசேகரன் said...

// ச.பிரேம்குமார் said...

கிராமங்களை நினைவுப்படுத்தும் அருமையான இடுகை. வாழ்த்துகள்//

மிக்க நன்றி நண்பா,...

//அவசரத்தில “அம்மா நான் கடலை போடப்போறேன்” அப்படின்னு படிச்சு தொலைச்சுட்டேன் :))))//

என்ன சில்மிசம்... நல்ல நகைசுவை உணர்வு நண்பரே

தேவன் மாயம் said...

கடலை பிடுங்கிய
அனுபவம் அருமை!!
எங்கள்
சிவகங்கை
மாவட்டத்தில்
கடலை
போடுவதில்லை!!

ஆ.ஞானசேகரன் said...

// thevanmayam said...

கடலை பிடுங்கிய
அனுபவம் அருமை!!
எங்கள்
சிவகங்கை
மாவட்டத்தில்
கடலை
போடுவதில்லை!!//

வாங்க டாக்டர் சார்,
சிவகங்கை
மாவட்டத்தில்
கடலை
போடுவதில்லை!! என்பது எனக்கு புதிய செய்தி.. மிக்க நன்றி சார்...

sakthi said...

கடலை ஆயும் பொழுது கொல்லைகார தாத்தாவிற்கு தெரியாமல் சில கடலைகளை வாயிலும் சிலகடலைகள் புட்டியிலும் வைப்போம்.

அதானே விஷயமே...

உங்கள் மலரும் நினைவுகள் அருமை

Anonymous said...

மலரும் நினைவுகளை மனம் அசைப் போடும் சுகமே அலாதி தான்....உங்க கூட நாங்களும் கடலைப் போட்ட மாதிரி ஹைய்யோ தப்பு தப்பு கடலை ஆய வந்த மாதிரி இருந்தது சேகர்....

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...

கடலை ஆயும் பொழுது கொல்லைகார தாத்தாவிற்கு தெரியாமல் சில கடலைகளை வாயிலும் சிலகடலைகள் புட்டியிலும் வைப்போம்.

அதானே விஷயமே...

உங்கள் மலரும் நினைவுகள் அருமை//

வாங்க சக்தி மிக்க நன்றிபா

Anbu said...

நன்றாக இருக்கிறது அண்ணா..

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

மலரும் நினைவுகளை மனம் அசைப் போடும் சுகமே அலாதி தான்....உங்க கூட நாங்களும் கடலைப் போட்ட மாதிரி ஹைய்யோ தப்பு தப்பு கடலை ஆய வந்த மாதிரி இருந்தது சேகர்....//

ம்ம்ம்ம் வாங்க தோழி...
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// Anbu said...

நன்றாக இருக்கிறது அண்ணா..//

வணக்கம் தம்பி
மிக்க நன்றி

புதியவன் said...

கடல் கடந்து வந்தும் கடலை ஞாபகங்களை
மறக்காமல் மலரும் நினைவுகளாக்கி இருக்கிறீர்கள்
பதிவு பசுமையா இருக்கு ஞானசேகரன்...

ஆ.ஞானசேகரன் said...

// புதியவன் said...

கடல் கடந்து வந்தும் கடலை ஞாபகங்களை
மறக்காமல் மலரும் நினைவுகளாக்கி இருக்கிறீர்கள்
பதிவு பசுமையா இருக்கு ஞானசேகரன்...//

வாங்க புதியவன்,, மிக்க நன்றி..

Suresh Kumar said...

இப்படி கூலியாக கிடைத்த கடலையை வீட்டில் வைத்திருந்து அடைமழை காலங்களில் உப்பிட்டு வேகவைத்தும், வறுத்தும் சாப்பிட்டால் அடைமழையின் சீற்றம் தெரியாமலே போய்விடும். இப்படி இயற்கையான வாழ்க்கையை இன்று இழந்துவிட்டோம் என்பதுதான் மனதின் வருத்தம்./////////////

நினைவுகளை கண் முன்னே நிறுத்தியிருக்கிறீர்கள் .

சொல்லரசன் said...

ஞானஸ் கட்டைய‌ ச்சே.... பட்டைய கிளப்ப‌றீங்க,அப்புறம் கடலை போடும்
அனுபவத்தை சொல்லுங்க நம்ம கரைக்குடி மருத்துவர் தெரிந்துகொள்ளட்டும்

Muniappan Pakkangal said...

We call it Naatu kadalai & company kadalai.Kadalai with karupaati,athuvum kadalaiai varuthu karupaati pottu idichu saapitta romba nalla irukkum.We still do kadalai vivasayam.Nandri Gnanaseharan for a kadali post.

"உழவன்" "Uzhavan" said...

என்ன நண்பா ஒரே கொசுவத்திப் பதிவா இருக்கு.. கலக்குங்க :-)

மாதேவி said...

கிராமத்து நினைவுகள் படங்கள் நன்று.

ராம்.CM said...

அழகாக சொல்லியுள்ளீர்கள்... இன்னும் நிறைய நமது கிராமங்களை பற்றிய பதிவுகளை வரவேற்கிறேன். எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

//Suresh Kumar said...
இப்படி கூலியாக கிடைத்த கடலையை வீட்டில் வைத்திருந்து அடைமழை காலங்களில் உப்பிட்டு வேகவைத்தும், வறுத்தும் சாப்பிட்டால் அடைமழையின் சீற்றம் தெரியாமலே போய்விடும். இப்படி இயற்கையான வாழ்க்கையை இன்று இழந்துவிட்டோம் என்பதுதான் மனதின் வருத்தம்./////////////

நினைவுகளை கண் முன்னே நிறுத்தியிருக்கிறீர்கள் .//////

வாங்க சுரேஷ்குமார் மிக்க நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லரசன் said...
ஞானஸ் கட்டைய‌ ச்சே.... பட்டைய கிளப்ப‌றீங்க,அப்புறம் கடலை போடும்
அனுபவத்தை சொல்லுங்க நம்ம கரைக்குடி மருத்துவர் தெரிந்துகொள்ளட்டும்//

வணக்கம் சொல்லரசன், மிக்க நன்றிங்க.. எந்த கடலை போடுதலைப் பற்றி சொல்லுரீங்க. விவரமா சொல்லிருங்க விவகாரமா நினைப்பாங்க‌

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
We call it Naatu kadalai & company kadalai.Kadalai with karupaati,athuvum kadalaiai varuthu karupaati pottu idichu saapitta romba nalla irukkum.We still do kadalai vivasayam.Nandri Gnanaseharan for a kadali post//

thanks Muniappan sir

ஆ.ஞானசேகரன் said...

//" உழவன் " " Uzhavan " said...
என்ன நண்பா ஒரே கொசுவத்திப் பதிவா இருக்கு.. கலக்குங்க :-)//


மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//மாதேவி said...
கிராமத்து நினைவுகள் படங்கள் நன்று.//


நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

//ராம்.CM said...
அழகாக சொல்லியுள்ளீர்கள்... இன்னும் நிறைய நமது கிராமங்களை பற்றிய பதிவுகளை வரவேற்கிறேன். எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்//

வாங்க ராம்.. முடிந்தவரை கிராமத்து நினைவுகளை பதிவிடுகின்றேன். உஙகளின் கருத்துகளுக்கும் நன்றி நண்பா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமையான பதிவு ஞானம்,
பழைய ஞாபகங்கள் வந்து போவுது!

நசரேயன் said...

நல்ல கொசுவத்தி

ஆ.ஞானசேகரன் said...

// ஜோதிபாரதி said...
அருமையான பதிவு ஞானம்,
பழைய ஞாபகங்கள் வந்து போவுது!//

வணக்கம் ஜோதிபாரதி,
மிக்க நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

// நசரேயன் said...
நல்ல கொசுவத்தி//

மிக்க நன்றி நண்பா

priyamudanprabu said...

இப்படி இயற்கையான வாழ்க்கையை இன்று இழந்துவிட்டோம் என்பதுதான் மனதின் வருத்தம்.
/////
ஆமாங்க

priyamudanprabu said...

என் கணினியில் பிரச்சனை , எனவே சில வலைப்பூக்களை திறந்தால் கணினி நின்றுவிடுகிறது, எனவே உங்கள் வலைபூவை படித்த போதும் பின்னூட்டம் இடவில்லை, தொடர்ந்து எழுதுங்கள்

priyamudanprabu said...

கடலை ஆய்ந்த / போட்ட அனுபவம் எனக்கு இல்லை

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...

என் கணினியில் பிரச்சனை , எனவே சில வலைப்பூக்களை திறந்தால் கணினி நின்றுவிடுகிறது, எனவே உங்கள் வலைபூவை படித்த போதும் பின்னூட்டம் இடவில்லை, தொடர்ந்து எழுதுங்கள்//

மிக்க நன்றி பிரபு,..

உங்களுக்கு வந்ததுபோல எனக்கும் வருகின்றது. இது Internet expoler ல் பிரச்சனை என்று நினைக்கின்றேன். அதனால் நான் தற்பொழுது firefox பயன்படுத்துகின்றேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்

priyamudanprabu said...

i got like thi
s


internet explorer cannot open the internet site
.....
operation aborted

ஆ.ஞானசேகரன் said...

//i got like thi
s


internet explorer cannot open the internet site
.....
operation aborted//

ஆமாம் பலருக்கு வருகின்றதாக தெரிகின்றது. Firefox பயன்படுத்துங்கள்....

வலசு - வேலணை said...

//
கிடைத்த கடலையை வீட்டில் வைத்திருந்து அடைமழை காலங்களில் உப்பிட்டு வேகவைத்தும், வறுத்தும் சாப்பிட்டால் அடைமழையின் சீற்றம் தெரியாமலே போய்விடும்
//

ஆகா! :-)
அடைமழைக்கு, பிளேன்ரீயும் வறுத்த நிலக்கடலையும்.
நினைக்கவே வாயூறுது.

ஆ.ஞானசேகரன் said...

//வலசு - வேலணை said...
//
கிடைத்த கடலையை வீட்டில் வைத்திருந்து அடைமழை காலங்களில் உப்பிட்டு வேகவைத்தும், வறுத்தும் சாப்பிட்டால் அடைமழையின் சீற்றம் தெரியாமலே போய்விடும்
//

ஆகா! :-)
அடைமழைக்கு, பிளேன்ரீயும் வறுத்த நிலக்கடலையும்.
நினைக்கவே வாயூறுது.//


நன்றி நண்பா

கிரி said...

//இயற்கையான வாழ்க்கையை இன்று இழந்துவிட்டோம் என்பதுதான் மனதின் வருத்தம்.//

உண்மை தான்

ஆ.ஞானசேகரன் said...

// கிரி said...

//இயற்கையான வாழ்க்கையை இன்று இழந்துவிட்டோம் என்பதுதான் மனதின் வருத்தம்.//

உண்மை தான்//

வணக்கம் கிரி,
ரொம்ப நன்றிங்க

cheena (சீனா) said...

ஆகா ஆகா - மல்ரும் நினைவுகள் - அசை போடுதல் சிறப்பு.

ந்ல்ல இடுகை - கடலை உண்ணத் தெரியும் - ஆயவோ போடவோ தெரியாது.

நன்றி நண்ப - தகவல்களுக்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// cheena (சீனா) said...

ஆகா ஆகா - மல்ரும் நினைவுகள் - அசை போடுதல் சிறப்பு.

ந்ல்ல இடுகை - கடலை உண்ணத் தெரியும் - ஆயவோ போடவோ தெரியாது.

நன்றி நண்ப - தகவல்களுக்கு நன்றி//

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி