_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, August 26, 2009

பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... பாகம்-2

பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... பாகம்-2

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
பசியோடு... மனிதன் போராட்டங்கள்!...

உணவின் அவசியம் மற்றும் தேவைகள் நாட்டில் அதிகரித்து வருகின்ற பொழுதும் இந்திய அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது மிக வருத்தப்பட கூடியது. உலக நாடுகளில் இயற்கை வளங்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருந்தாலும் அதை முறைப்படி பயன்படுத்தாத நாடாகதான் இன்றும் இருக்கின்றது. நான் படித்த வரலாற்று பாடங்களில் அந்த அரசன் கோவில் கட்டினான், இந்த அரசன் குளங்கள் வெட்டி அணைகள் கட்டினான் என்றுதான் படித்துள்ளேன். ஆனால் நாளைய வரலாற்று பாடங்களில் அந்த அரசு இலவச கஞ்சி ஊத்துச்சி, இந்த அரசு இலவச கோவணம் கொடுத்துச்சி என்றுதான் படிக்க வேண்டி வரும். அந்த அளவிற்கு தொலை நோக்கு திட்டங்கள் இன்று நடந்துக்கொண்டு உள்ளது. அந்த கால அரசர்கள் மக்களை சுறுசுறுப்புடன் வைத்திருந்து வேலைகளை கொடுத்து கூலியும் அதற்காக உணவும் கொடுத்தான் என்பதுதான் வரலாறு. குளங்கள் தூறு வாருதல், சாலைகள் அமைத்தல், சாலையோரம் மரங்கள் நடுதல் போன்ற வேலைகளை கொடுத்து மக்களுக்கு உணவளித்தான். இன்று கிட்டதட்ட 20 வருடங்கள் மேலாக எந்த குளமும் தூறு வாரவில்லை என்பதுதான் கவலைக்கிடமான விடயம். மக்கள் தொகை அதிகரிப்பு, நலிந்து வரும் விவசாயம் போன்றவைகள் நாளை உணவின் பற்றாகுறை மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதுதான் உண்மை. இனிமேலும் இதனை கவணிக்காமல் விட்டுவிட்டால் ஒரு பெரிய வறட்சியை பார்க்க வேண்டி வரும் என்பதுதான் ஆய்வாளர்களின் எச்சரிக்கை.


தரமான பிஸா கிடைக்கவில்லையே என்பது உயர் மட்ட மக்களின் எண்ணம். நாங்கள் பிஸா சாப்பிட்டோம் என்பது நடுதர மக்களின் மகிழ்ச்சி. என்றுமே பட்டினி என்பது கீழ் தட்ட மக்களின் நிலை. இதுதான் இன்றய இந்தியாவின் மாபெரும் வளர்ச்சி. காடுகளை அழித்து குளங்கள் வெட்டி நாடாக்கினான் என்பது வரலாறு. வயல்காடுகளை அழித்து துண்டுப்போட்டு வீட்டு மனையாக்கி காசாக்கியதுதான் இன்றைய நிலை. பல ஏரிகள் குப்பை காடாக காட்சியளிக்கும் நிலை.

ஒரு வேளை உண்பவன் யோகி (யோகம் பன்னுகிறவன்),... இரு வேளை உண்பவன் போகி,... முன்று வேளை உண்பவன் ரோகி (நோயுடையவன்),... என்பார்கள். உணவின் தேவைகள் அப்படி அதேபோல் உணவின் அவசியம் அப்படி. எல்லா உயிர்களுக்கும் இயற்கையே உணவழிக்கும் என்றாலும் அப்படி இயற்கையால் உணவழிக்க முடியாத சுழல் வந்தால் இயற்கையே உயிர்களை சமன் செய்துவிடும். அப்படிதான் உயிரை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தன காலரா, மலேரியா, அம்மை போன்ற நோய்கள். இவற்றிலிருந்து மனிதன் தன்னை காப்பாற்றிக்கொள்ள கற்றுகொண்டான் ஆனால் இன்னும் உணவிற்கான சமன்பாட்டை கற்றுகொள்ளவில்லை. மாறிவரும் சூழல்களில் பட்டினிசாவுகள் அதிகரிக்கின்றன.

மரபியல் ஆராய்ச்சி மட்டும் வெற்றி கிடைக்காமல் போயிருந்தால் இன்று மனிதன் உணவிற்கான சமன்பாட்டில் அழிந்தேயிருப்பான். இன்று 50% உணவை மரபணு மாற்றம் வெற்றியினால் கிடைக்கின்றது. இறைச்சி, காய்கறிகள் எல்லாம் மரபணு மாற்றம் முறைகளால் உற்பத்தியை அதிகப்படுத்தியும் அதே போல் குறைந்த கால வளர்ச்சியும் கொடுக்கின்றது. இதன் பின் விளைவாக சில நோய்களையும் சம்பாரிக்கின்றான் என்பது உணமை. உணவின் தேவையை கருதியும் வியாபார வெற்றிக்காகவும் ஆராய்ச்சியாளர்கள வெளியில் சொல்வதில்லை. இதுபோன்ற மரபணு பின்னனியில் சார்ஸ், பறைவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் வந்திருக்கலாம் என்பது ஒரு சிலரின் கருத்துகள். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.

முன்பெல்லாம் நெல் விளைச்சல் 10 மாதம் முதல் ஒரு வருடம்வரை கால வளர்ச்சிக்கு எடுத்துக்கொள்ளும். ஆனால் இன்றைய நிலை பல ரக நெல்மணிகள் வந்துள்ளது. மரபணு மாற்றம் பயனாக குறைந்த பச்ச நாள் 60 முதல் 80 நாட்களின் முழு வளர்ச்சியை பெறுகின்றது. அதே போல்தான் பழங்களும் விரைவாக பழுக்க பல ரசாயண முறைகளை பயன்படுத்துவதன் மூலம் மனிதன் நோய்க்கு அழாக வேண்டிய நிலையுள்ளது.

"உழுதவன் கணக்கு பார்த்தால் ஒழக்கு கூட மிஞ்சாது" என்பது பழமோழி. அந்த அளவிற்கு லாபமே இல்லாத தொழிலாக இருந்து வருவதால் எந்த ஒரு விவசாயியும் தன் மகனை விவசாயம் பார்க்க அனுமதிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் உணவுக்காக அன்னிய நாடுகளில் கையேந்த வேண்டிய நிலைதான் வரும். இதற்கு முக்கிய பிரச்சனை நீர் பங்கீடு , வேலை செய்ய ஆள் இல்லா பற்றாகுறை. அதன் பின் கொள்முதலில் குறைபாடுகள். இதனால் இன்னும் நான்கு ஐந்தாண்டுக்களில் அரசிடம் உள்ள உணவு கையிருப்பு இல்லாமல் போய்விடும் என்பதுதான் யோசிக்க வேண்டிய நிலை.

விவசாயச்துறையில் இந்தியா விஞ்ஞானத்துவத்தில் பின் தங்கியுள்ளது. இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது நாம் 30 வருடம் பின் தங்கிய நிலையில்தான் இருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில்தான் நாம் வல்லரசு கனவில் இருக்கின்றோம். விவசாயம் மற்றும் உணவுப் பற்றாகுறையை சமாளிக்க வழிகாணுதல் இல்லாமல் இந்தியா வல்லரசு என்ற சொல்லுக்கே இடமில்லை என்பதுதான் உண்மை.

மேலும் பசி மற்றும் உணவின் தேவைகளையும், உற்பத்திகளையும் பின் வரும் இடுகையில் பார்க்கலாம். உங்களின் ஆலோசனைகள் பின்னூட்டத்தில் எதிர்ப்பார்க்கின்றேன்.

அடுத்த சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.



59 comments:

வால்பையன் said...

//மரபியல் ஆராய்ச்சி மட்டும் வெற்றி கிடைக்காமல் பொயிருந்தால் இன்று மனிதன் உணவிற்கான சமன்பாட்டில் அழிந்தேயிருப்பான். இன்று 50% உணவை மரபணு மாற்றம் வெற்றினால் கிடைக்கின்றது. //

இந்த கருத்தில் நான் முரண்படுகிறேன்!
உற்பத்தியை பெருக்கவேண்டி ரசாயன மாற்றம் செய்து கொண்டுவரப்பட்டதே மரபணு விதைகள், இவற்றின் பெரும் குறைபாடு மலட்டுதன்மை, மரபணுவிதைகளிலிருந்து வரம் விளைச்சலில் உங்களால் விதை எடுக்கமுடியாது!

மேலும் மரபணு விதைகளுக்கு கண்டிப்பாக பூச்சி மருந்து அடிக்க வேண்டும்!, பசுமை புரட்சி என்ற பெயரில் விசத்தை சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்!.

மண்ணின் தரமும் போய், மனிதனும் ஆரோக்கியமும் போய் நடைபிணமாக திரிகிறோம்!

நீங்கள் கொடுத்துள்ள ஆப்பிரிக்க நாடுகளில் மழை பெய்யாது என்று நினைக்கிறீர்களா?
பெய்யும் ஆனால் விளைச்சல் இருக்காது, வல்லரசு நாடுகள் தங்கள் கழிவுகளை கொட்ட தேர்ந்தெடுக்க பட்டுள்ள நாடுகள் தான் அவைகள், அதை பற்றிய செய்திகளை சேகரித்து கொண்டிருக்கிறேன்!

விரைவில் முதலாளித்துவத்தின் வெறியாட்டம் பற்றி எழுதுகிறேன்!

ஆ.ஞானசேகரன் said...

///வால்பையன் said...

//மரபியல் ஆராய்ச்சி மட்டும் வெற்றி கிடைக்காமல் பொயிருந்தால் இன்று மனிதன் உணவிற்கான சமன்பாட்டில் அழிந்தேயிருப்பான். இன்று 50% உணவை மரபணு மாற்றம் வெற்றினால் கிடைக்கின்றது. //

இந்த கருத்தில் நான் முரண்படுகிறேன்!
உற்பத்தியை பெருக்கவேண்டி ரசாயன மாற்றம் செய்து கொண்டுவரப்பட்டதே மரபணு விதைகள், இவற்றின் பெரும் குறைபாடு மலட்டுதன்மை, மரபணுவிதைகளிலிருந்து வரம் விளைச்சலில் உங்களால் விதை எடுக்கமுடியாது!///

நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கின்றது. உணவின் தற்காலிய தேவையை இந்த மரபணு மாற்றம்தான் பூர்த்தியாக்கிகொண்டுள்ளது.. இதையும் மறுக்க முடியாதே

//மேலும் மரபணு விதைகளுக்கு கண்டிப்பாக பூச்சி மருந்து அடிக்க வேண்டும்!, பசுமை புரட்சி என்ற பெயரில் விசத்தை சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்!.//

அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பது உண்மை... தனி ஒரு ஒருவன் இந்நிலையை மாற்ற முடியாத சூழல்

//நீங்கள் கொடுத்துள்ள ஆப்பிரிக்க நாடுகளில் மழை பெய்யாது என்று நினைக்கிறீர்களா?
பெய்யும் ஆனால் விளைச்சல் இருக்காது, வல்லரசு நாடுகள் தங்கள் கழிவுகளை கொட்ட தேர்ந்தெடுக்க பட்டுள்ள நாடுகள் தான் அவைகள், அதை பற்றிய செய்திகளை சேகரித்து கொண்டிருக்கிறேன்!

விரைவில் முதலாளித்துவத்தின் வெறியாட்டம் பற்றி எழுதுகிறேன்!//

விரைவில் அப்படிபட்ட இடுகையை எதிர்ப்பார்க்கின்றேன்

நட்புடன் ஜமால் said...

தரமான பிஸா கிடைக்கவில்லையே என்பது உயர் மட்ட மக்களின் எண்ணம். நாங்கள் பிஸா சாப்பிட்டோம் என்பது நடுதர மக்களின் மகிழ்ச்சி. என்றுமே பட்டினி என்பது கீழ் தட்ட மக்களின் நிலை. இதுதான் இன்றய இந்தியாவின் மாபேரும் வளர்ச்சி]]

இது எல்லா நாடுகளிலும் தான் இருக்கு

-----------------

மேலும் வால்ஸ் சொன்னதையும் வழிமொழிகிறேன்.

ஹேமா said...

ஞானம்,பசி என்றால் வறுமை - வயிற்றோடுதான் போராட்டம் என்று நினைத்திருந்தேன்.இவ்வளவு விஷயங்கள் இருக்கா.வாலபையன் முரண்பட்ட கருத்துக்களையும் கொண்டு வருகிறார்.அப்போ இன்னும் நிறைய பசியோடு போரடலாம்.

ஆ.ஞானசேகரன் said...

// நட்புடன் ஜமால் said...

தரமான பிஸா கிடைக்கவில்லையே என்பது உயர் மட்ட மக்களின் எண்ணம். நாங்கள் பிஸா சாப்பிட்டோம் என்பது நடுதர மக்களின் மகிழ்ச்சி. என்றுமே பட்டினி என்பது கீழ் தட்ட மக்களின் நிலை. இதுதான் இன்றய இந்தியாவின் மாபேரும் வளர்ச்சி]]

இது எல்லா நாடுகளிலும் தான் இருக்கு

-----------------

மேலும் வால்ஸ் சொன்னதையும் வழிமொழிகிறேன்.//

வாங்க நண்பா,...
உங்களுடைய கருத்துரைக்கும் மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானம்,பசி என்றால் வறுமை - வயிற்றோடுதான் போராட்டம் என்று நினைத்திருந்தேன்.இவ்வளவு விஷயங்கள் இருக்கா.வாலபையன் முரண்பட்ட கருத்துக்களையும் கொண்டு வருகிறார்.அப்போ இன்னும் நிறைய பசியோடு போரடலாம்.//

வணக்கம் ஹெமா,
வால்பையன் சொல்வதும் ஞாயம் என்றாலும் அவற்றையும் முழுமையாக ஏற்றுகொள்ள முடியாது. மாறி வரும் மாற்றங்களின் விளைவு. தற்பொழுது வேண்டாம் என்று நிலையில் நாம் இல்லை வேண்டும் என்றால் குறைகளை சொல்லலாம் அவ்வளவே... மிக்க நன்றி ஹேமா...

Sanjai Gandhi said...

yer otta vendiyavan ellam keyboard thatta poitu arasangathai matum kurai sonna epdi?

வால்பையன் said...

மாறி வரும் மாற்றங்களின் விளைவாக நம் வாழ்வியல் ஆதரத்தை தான் விலையாக கொடுக்க வேண்டுமா!?

நமது நாடு அடிப்படையில் விவசாயத்தை தொழிலாக கொண்டது, ஆனால் இன்று விவசாயிக்கே சோறில்லை. ஏன்?

உலகமயமாக்கலில் விளைநிலங்கள் கம்பெனிகளாகி விட்டன! பலருக்கு வேலை கிடைக்கும், ஆனால் சோறு எங்கிருந்து கிடைக்கும், லட்சங்கள் சம்பளம் வாங்கினாலும் இன்னும் சிறிது நாளில் ஒரு மாத சோத்துக்கே பத்தாதே!

ஏன் பருப்பு கிலோ நூறு ருபாய்?
படிப்படியாகவா ஏறியது, இரண்டு மாத்திற்கு முன் வெறும் 38 ருபாய் தானே! பின் எப்படி? பருப்பு தேவைக்கு இல்லை என்று இறக்குமதி செய்வது ஒரு விவசாய நாட்டுக்கு அழகா!?

உங்களை போல், என்னை போல் உள்ளவர்கள் காலத்தை தள்ளிவிடலாம், ஆனால் விளிம்புநிலை மனிதர்கள், குப்பைமேட்டிலும், கூவம் அருகிலும் இருந்தாலும் மூன்று வேளையும் பசிக்குமே! எதை சாப்பிடுவார்கள்!?

கொஞ்சம் விவசாய விளைநிலங்கள் பக்கம் வந்து பாருங்கள், மரபணு விதைகளின் விசமத்தனத்தை நேரில் தெரிந்து கொள்ளலாம்!

உமா said...

வெக்கம் இதுவெக்கம் வெம்பசியால் புல்தின்னும்
மக்கள் ஒருபக்கம் வற்றியுடல் சக்கையாய்
கண்ணில் தெரியும் குழந்தை களெருபக்கம்
விண்தொடும் வீடு வசதியாய் வாகனம்
மண்ணின் மறுபக்கம் வண்ணமிகு வாழ்க்கையதில்
சன்னல் கதவுக்கும் சீலை.

ஆ.ஞானசேகரன் said...

// SanjaiGandhi said...

yer otta vendiyavan ellam keyboard thatta poitu arasangathai matum kurai sonna epdi?//

வளர்ந்துவரும் விஞ்ஞானத்தையும் விட்டுவிட முடியாதே நண்பா? அதே சமயம் விவசாயத்தையும் விட்டுவிட்டா சோறுக்கு டாட்டாதான்.... மிக்க நன்றி நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

மாறி வரும் மாற்றங்களின் விளைவாக நம் வாழ்வியல் ஆதரத்தை தான் விலையாக கொடுக்க வேண்டுமா!?

நமது நாடு அடிப்படையில் விவசாயத்தை தொழிலாக கொண்டது, ஆனால் இன்று விவசாயிக்கே சோறில்லை. ஏன்?//

இதே கேள்வியின் நோக்கம்தான் என் இடுகையின் விளைவு.. இதில் குறிப்பிட்டது போல் இதற்கு முக்கிய பிரச்சனை நீர் பங்கீடு , வேலை செய்ய ஆல் இல்லா பற்றாகுறை. அதன் பின் கொள்முதலில் குறைபாடுகள். இவற்றையும் சரிசெய்யும் நிலை இருக்கே நண்பா!

//கொஞ்சம் விவசாய விளைநிலங்கள் பக்கம் வந்து பாருங்கள், மரபணு விதைகளின் விசமத்தனத்தை நேரில் தெரிந்து கொள்ளலாம்!//

நானும் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவந்தான். மாறிவந்த மாற்றங்களை ஏற்றுகொண்டாயிற்று. கூர் கலப்பை முதல் போஸ்ட் கலப்பை என்று சொல்லப்படும் நவீன கலப்பை தற்பொழுது ட்ராக்டர் எல்லா மாற்றங்கள்தான்.. எல்லாம் ஏற்றுகொண்டாகிவிட்டது. அதே போல் இயற்கை உரங்களிலிருந்து யூரியா போன்ற செயற்கை உரங்களுக்கு மாறியாச்சு பல பூச்சு கொல்லி மருந்துக்கும் மாறியாச்சு மீண்டும் பழநிலைக்கு திரும்ப முடியாத நிலை<,,, தற்பொழுது என்ன செய்ய முடியும்... ஒரு குடும்பம் தற்பொழுது பத்து குடுப்பமாச்சு.... விளைநிலம் அதேதானே என்ன செய்யமுடியும்... மாற்றங்களையும் ஏற்றுகொள்ளதானே வேண்டும் அதுகூடவே கொடிய நோய்களையும் ஏற்று கொள்ளதான் வேண்டும்.... இதை பற்றி அடுத்த இடுகையில் எழுதலாம் என்று இருந்தேன்... மேலும் எழுதுகின்றேன். மிக்க நன்றி நண்பா>..

ஆ.ஞானசேகரன் said...

/// உமா said...

வெக்கம் இதுவெக்கம் வெம்பசியால் புல்தின்னும்
மக்கள் ஒருபக்கம் வற்றியுடல் சக்கையாய்
கண்ணில் தெரியும் குழந்தை களெருபக்கம்
விண்தொடும் வீடு வசதியாய் வாகனம்
மண்ணின் மறுபக்கம் வண்ணமிகு வாழ்க்கையதில்
சன்னல் கதவுக்கும் சீலை.//

இப்படி மாறுபட்ட சூழல் இருப்பதும் உண்மைதான் உமா.. உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மரபியல் ஆராய்ச்சி மட்டும் வெற்றி கிடைக்காமல் பொயிருந்தால் இன்று மனிதன் உணவிற்கான சமன்பாட்டில் அழிந்தேயிருப்பான். இன்று 50% உணவை மரபணு மாற்றம் வெற்றினால் கிடைக்கின்றது. இறைச்சி, காய்கறிகள் எல்லாம் மரபணு மாற்றம் முறைகளால் உற்பத்தியை அதிகப்படுத்தியும் அதே போல் குறைந்த கால வளர்ச்சியும் கொடுக்கின்றது. இதன் பின் விளைவாக சில நோய்களையும் சம்பாரிக்கின்றான் என்பது உணமை. உணவின் தேவையை கருதியும் வியாபார வெற்றிக்காகவும் ஆராய்ச்சியாளர்கள வெளியில் சொல்வதில்லை.//

இது நிறைய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

பொதுவுடமை வாதிகள் இருக்கும் வரை கவலை இல்லை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஏறத்தாழ, உரம் ஆயிரம் ரூபாயும், நெல்லு முன்னூறும் வித்தா எவன் அந்த தொழில செய்வான்.

மழை வெள்ள அழிவு,

தூர்வாராத, ஆக்கிரமிக்கப்பட்ட குளம்,
வடிகால் இல்லாமை, தூர்ந்து போன ஆறு, நதிகள்....

2020 வ.......சு? வா கூசுது! ம்ம்ம்ஹும்!

சான்சே இல்லே...!

பொன்னி,பாசுமதி, ஐஆர்20, கலுசர்,..... எல்லாம் நாம சைனாவுல இருந்து இறக்குமதி செய்யும் காலம் வந்தால் ஆச்சர்யப் பட வேண்டாம்.

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்.

நம்மாளு சொல்லி இருக்கார்.

அவர்காலத்துலயும் அப்படித்தான் இருந்துச்சு( நம்ம காலம் தான்)

ஆ.ஞானசேகரன் said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மரபியல் ஆராய்ச்சி மட்டும் வெற்றி கிடைக்காமல் பொயிருந்தால் இன்று மனிதன் உணவிற்கான சமன்பாட்டில் அழிந்தேயிருப்பான். இன்று 50% உணவை மரபணு மாற்றம் வெற்றினால் கிடைக்கின்றது. இறைச்சி, காய்கறிகள் எல்லாம் மரபணு மாற்றம் முறைகளால் உற்பத்தியை அதிகப்படுத்தியும் அதே போல் குறைந்த கால வளர்ச்சியும் கொடுக்கின்றது. இதன் பின் விளைவாக சில நோய்களையும் சம்பாரிக்கின்றான் என்பது உணமை. உணவின் தேவையை கருதியும் வியாபார வெற்றிக்காகவும் ஆராய்ச்சியாளர்கள வெளியில் சொல்வதில்லை.//

இது நிறைய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

பொதுவுடமை வாதிகள் இருக்கும் வரை கவலை இல்லை.///


எல்லாவற்றிக்கும் ஒரு சில பின் விளைவுகள் இருக்கதான் செய்யும் சிலவற்றை வேறு வழியின்றி ஏற்றுகொண்டுதான் இருக்கின்றோம்..
தற்பொழுது கண்டிபிடித்த பன்றிக்காய்ச்சல் தடுப்பு ஊசியும் சில பின் விளைவுகள் இருப்பதாக சொல்கின்றார்கள்..

ஆ.ஞானசேகரன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஏறத்தாழ, உரம் ஆயிரம் ரூபாயும், நெல்லு முன்னூறும் வித்தா எவன் அந்த தொழில செய்வான்.

மழை வெள்ள அழிவு,

தூர்வாராத, ஆக்கிரமிக்கப்பட்ட குளம்,
வடிகால் இல்லாமை, தூர்ந்து போன ஆறு, நதிகள்....

2020 வ.......சு? வா கூசுது! ம்ம்ம்ஹும்!

சான்சே இல்லே...!

பொன்னி,பாசுமதி, ஐஆர்20, கலுசர்,..... எல்லாம் நாம சைனாவுல இருந்து இறக்குமதி செய்யும் காலம் வந்தால் ஆச்சர்யப் பட வேண்டாம்.

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்.

நம்மாளு சொல்லி இருக்கார்.

அவர்காலத்துலயும் அப்படித்தான் இருந்துச்சு( நம்ம காலம் தான்)///

சரியா சொன்னீங்க நண்பரே,... மிக்க நன்றி

குடந்தை அன்புமணி said...

விளைச்சலை அதிகப்படுத்த உரங்களை அள்ளிக் கொட்டச் சொல்லி இன்று விவசாயிகளின் வயிற்றில் அடித்த விஞ்ஞான முறையை தவிர்த்து இயகை முறையில் விவசாயம் செய்தால் நல்ல விளைச்சலையும், வருவாயையும் குறைந்த செலவில் பெறலாம் என்று கூறும் நம்மாழ்வார் வழியில் என்று விவசாயிகள் பயணிக்கிறார்களோ அன்றுதான் விவசாயம் உருப்படும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

SanjaiGandhi said...
yer otta vendiyavan ellam keyboard thatta poitu arasangathai matum kurai sonna epdi?//

அவன் பாவம்.

மடமா நடத்துறான்.

எங்க லாபம் இருக்கோ, உழைப்புக்கு மரியாதை இருக்கோ அங்கு செல்வதில் தவறேதும் இல்லை.

இடு பொருள்களின் விலை உயர்வு, இயற்கை சீரழிவு, தண்ணீர் இன்மை, விற்கும் போது நெல் விலை குறைவு.
கூட்டி கழிச்சு பாத்தா அவன் பாவங்க சாமியோவ்! அவன விட்டுடுங்க...

வருடாந்தம் நஷ்டபட்டு குடிமுழுகிப் போவ எவனாவது உழைப்பானா?

நனும் வெவசாயிதான்...!

குடந்தை அன்புமணி said...

இயற்கை முறையில் விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் நம்மாழ்வார்.

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...

விளைச்சலை அதிகப்படுத்த உரங்களை அள்ளிக் கொட்டச் சொல்லி இன்று விவசாயிகளின் வயிற்றில் அடித்த விஞ்ஞான முறையை தவிர்த்து இயகை முறையில் விவசாயம் செய்தால் நல்ல விளைச்சலையும், வருவாயையும் குறைந்த செலவில் பெறலாம் என்று கூறும் நம்மாழ்வார் வழியில் என்று விவசாயிகள் பயணிக்கிறார்களோ அன்றுதான் விவசாயம் உருப்படும்.//

அப்படிபட்ட சூழ்நிலைக்கு திருப்பமுடியுமா என்பது கேள்வி குறி? உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

SanjaiGandhi said...
yer otta vendiyavan ellam keyboard thatta poitu arasangathai matum kurai sonna epdi?//

அவன் பாவம்.

மடமா நடத்துறான்.

எங்க லாபம் இருக்கோ, உழைப்புக்கு மரியாதை இருக்கோ அங்கு செல்வதில் தவறேதும் இல்லை.

இடு பொருள்களின் விலை உயர்வு, இயற்கை சீரழிவு, தண்ணீர் இன்மை, விற்கும் போது நெல் விலை குறைவு.
கூட்டி கழிச்சு பாத்தா அவன் பாவங்க சாமியோவ்! அவன விட்டுடுங்க...

வருடாந்தம் நஷ்டபட்டு குடிமுழுகிப் போவ எவனாவது உழைப்பானா?

நனும் வெவசாயிதான்...!///


அட உங்க கஷ்டத்த சொல்லிபுட்டிங்க

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...

இயற்கை முறையில் விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் நம்மாழ்வார்.//

நல்ல செய்தி அன்பு ,,, இதுபோன்ற நிலையை கூட்டு முயற்சியாக செய்தால் நன்றாக இருக்கும்... அரசு ஆவான செய்யுமா?

அன்புடன் நான் said...

நண்பா, முன்பெல்லாம் சாலையோரங்களில் பசுமையிருக்கும்...இப்போதெல்லாம் கட்டடங்களாக இருக்கு. இது எங்க கொண்டுபோய் விடுமோ தெரியல. உங்க கட்டுரை மகத்தான சேவை.

sakthi said...

ஆனால் நாளைய வரலாற்று பாடங்களில் அந்த அரசு இலவச கஞ்சி ஊத்துச்சி, இந்த அரசு இலவச கோவணம் கொடுத்துச்சி என்றுதான் படிக்க வேண்டி வரும்.

நிச்சயமாக சேகரன்

வெட்கித்தலைகுனிய வேண்டிய வேதனையான விஷயமிது

அன்புடன் அருணா said...

உருப்படியான பதிவு...பூங்கொத்து!

ஈரோடு கதிர் said...

//20 வருடங்கள் மேலாக எந்த குளமும் தூறு வாரவில்லை //

எத்தனை குளங்களை மூடி வீடு கட்டி விட்டார்கள்

//மரபியல் ஆராய்ச்சி மட்டும் வெற்றி கிடைக்காமல்//

இதில் உணவு உற்பத்தி குறைந்த நிலத்தில் அதிகமாக ஏற்படுத்தப் பட்டிருக்கிறது, ஆனால் சத்தான பொருட்கள் கிடைக்கவில்லை என்பது என் கருத்து

//லாபமே இல்லாத தொழிலாக இருந்து வருவதால் எந்த ஒரு விவசாயியும் தன் மகனை விவசாயம் பார்க்க அனுமதிப்பதில்லை//
கசப்பான உண்மைதான். விவசாயத்தை மதிக்காத அரசு மற்றும் நாகரீக உலகத்தின் விளைவு இது

அற்புதமான இடுகை நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

//சி. கருணாகரசு said...
நண்பா, முன்பெல்லாம் சாலையோரங்களில் பசுமையிருக்கும்...இப்போதெல்லாம் கட்டடங்களாக இருக்கு. இது எங்க கொண்டுபோய் விடுமோ தெரியல. உங்க கட்டுரை மகத்தான சேவை.//

உண்மைதான் நண்பா,.உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...
ஆனால் நாளைய வரலாற்று பாடங்களில் அந்த அரசு இலவச கஞ்சி ஊத்துச்சி, இந்த அரசு இலவச கோவணம் கொடுத்துச்சி என்றுதான் படிக்க வேண்டி வரும்.

நிச்சயமாக சேகரன்

வெட்கித்தலைகுனிய வேண்டிய வேதனையான விஷயமிது//

ம்ம்ம்... மிக்க நன்றி சக்தி

ஆ.ஞானசேகரன் said...

//அன்புடன் அருணா said...
உருப்படியான பதிவு...பூங்கொத்து!//


மிக்க நன்றிங்க அருணா

ஆ.ஞானசேகரன் said...

///கதிர் - ஈரோடு said...
//20 வருடங்கள் மேலாக எந்த குளமும் தூறு வாரவில்லை //

எத்தனை குளங்களை மூடி வீடு கட்டி விட்டார்கள்//

மிக்க உண்மைதாங்க‌

/////மரபியல் ஆராய்ச்சி மட்டும் வெற்றி கிடைக்காமல்//

இதில் உணவு உற்பத்தி குறைந்த நிலத்தில் அதிகமாக ஏற்படுத்தப் பட்டிருக்கிறது, ஆனால் சத்தான பொருட்கள் கிடைக்கவில்லை என்பது என் கருத்து///

உண்மைதான் என்றாலும் வேறுவழியில்லை மாற்றுவழிக்கு ஆய்வு மேற்கொண்டால் நல்லது

////லாபமே இல்லாத தொழிலாக இருந்து வருவதால் எந்த ஒரு விவசாயியும் தன் மகனை விவசாயம் பார்க்க அனுமதிப்பதில்லை//
கசப்பான உண்மைதான். விவசாயத்தை மதிக்காத அரசு மற்றும் நாகரீக உலகத்தின் விளைவு இது

அற்புதமான இடுகை நண்பரே///

உஙகளின் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே

CorTexT (Old) said...

சில இரசாயண முறைகள் (மருந்துகளைப் போலவே) தாவரங்களுக்கும், மற்றும் நமக்கு பின் விளைவுகளைத் தருகின்றன. ஆனால், மரபணு பொறியியலில் உருவாக்கப்பட்ட உணவில் நமக்கு எந்த பெரிய பின் விளைவுகளும் இருக்காது. ஏனென்றால், அதுவும் அதே இயற்கை மரபணு மொழியிலேயே உள்ளது. ஒரு ஆட்டை மரபணு பொறியியலில் உருவாக்கினால், அது அந்த‌ ஆட்டிற்கு ந‌ன்மையோ, தீமையோ த‌ர‌லாம்; ஆனால் அத‌ன் மாமிசம் வெறும் மாமிச‌மே.

//இதுபோன்ற மரபணு பின்னனியில் சார்ஸ், பறைவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் வந்திருக்கலாம் என்பது ஒரு சிலரின் கருத்துகள் //

இதை எங்கிருந்து ப‌டித்தீர்க‌ள் என்று தெரிய‌வில்லை. இது போன்ற‌ த‌வறான க‌ருத்துக்கள் ப‌ரவுவ‌தை த‌விர்க்க‌வும். பறைவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற‌வை ஆதியிலிருந்தே இருப்ப‌வை. அவை வரலாற்றில் கொள்ளை நோய்களாக பல முறை பரவியுள்ளன. வைரஸ் என்பது முற்றிலும் வித்தியாசமான ஒன்று. அதை சற்று புரிந்து கொள்வதும் நல்லது.(http://sites.google.com/site/artificialcortext/putiya-parvai/uyir-tolirnutpam)

சார்ஸ், பறைவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், HIV போன்ற‌வை ம‌ற்ற‌ உயிரின‌ங்க‌ளிலிருந்து ம‌னித‌னுக்கு தாவிய‌ வைர‌ஸ்க‌ள். வைர‌ஸ்க‌ள் அதிவேக‌மாக‌ ம‌ரபுபிழை மாற்ற‌ம் காண‌க்கூடிய‌வை. அதனால், ஒவ்வொரு முறை ப‌ர‌வும் பறைவை காய்ச்சலும், பன்றிக்காய்ச்சலும் வேறுமாதிரியாக‌ இருக்க‌லாம். இது போன்ற‌ வைர‌ஸ்க‌ள் ம‌னித‌ குல‌த்திற்கு எப்பொழுதுமே மிக‌ப்பெரிய‌ அச்சுறுத்த‌ல். இதற்கான WHO (World Health Organization) ம‌ற்றும் ஆராய‌ச்சியாள‌ர்க‌ளின் உழைப்பு மிக‌ப்பெரிய‌து. இதைப்ப‌ற்றி அறிய‌ முய‌லுங்க‌ள்.

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...
சில இரசாயண முறைகள் (மருந்துகளைப் போலவே) தாவரங்களுக்கும், மற்றும் நமக்கு பின் விளைவுகளைத் தருகின்றன. ஆனால், மரபணு பொறியியலில் உருவாக்கப்பட்ட உணவில் நமக்கு எந்த பெரிய பின் விளைவுகளும் இருக்காது. ஏனென்றால், அதுவும் அதே இயற்கை மரபணு மொழியிலேயே உள்ளது. ஒரு ஆட்டை மரபணு பொறியியலில் உருவாக்கினால், அது அந்த‌ ஆட்டிற்கு ந‌ன்மையோ, தீமையோ த‌ர‌லாம்; ஆனால் அத‌ன் மாமிசம் வெறும் மாமிச‌மே.//

இதில் எனக்கு சிலசந்தேகங்கள் உண்டு. நான் பத்திரிக்கை வாயிலாக படித்தது இப்படிப்பட்ட மாமிசங்களில் நோய் கிருமிகள் எழிதாக தாக்குவதாகவும் அவைகளை நாம் சாப்பிடுபொழுது அந்த கிருமி நம்மை தாக்கும் தம்மை உள்ளதாக கூறியுள்ளது. கோழிகள் நோயுற்றால் கோழிகளை அழிப்பது எதனால். மரபணு முறையில் உருவாக்கும் கோழிகளை எழிதாக நோய் தாக்குவது உண்மைதானே> அப்படிப்பட்ட கோழி இறைச்சியை நாம் சாப்பிடும்பொழுது நமக்கு வரும் வாய்ப்பு உள்ளது நிஜம்தானே...


///இதை எங்கிருந்து ப‌டித்தீர்க‌ள் என்று தெரிய‌வில்லை. இது போன்ற‌ த‌வறான க‌ருத்துக்கள் ப‌ரவுவ‌தை த‌விர்க்க‌வும். பறைவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற‌வை ஆதியிலிருந்தே இருப்ப‌வை. அவை வரலாற்றில் கொள்ளை நோய்களாக பல முறை பரவியுள்ளன. வைரஸ் என்பது முற்றிலும் வித்தியாசமான ஒன்று. அதை சற்று புரிந்து கொள்வதும் நல்லது.(http://sites.google.com/site/artificialcortext/putiya-parvai/uyir-tolirnutpam)

சார்ஸ், பறைவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், HIV போன்ற‌வை ம‌ற்ற‌ உயிரின‌ங்க‌ளிலிருந்து ம‌னித‌னுக்கு தாவிய‌ வைர‌ஸ்க‌ள். வைர‌ஸ்க‌ள் அதிவேக‌மாக‌ ம‌ரபுபிழை மாற்ற‌ம் காண‌க்கூடிய‌வை. அதனால், ஒவ்வொரு முறை ப‌ர‌வும் பறைவை காய்ச்சலும், பன்றிக்காய்ச்சலும் வேறுமாதிரியாக‌ இருக்க‌லாம். இது போன்ற‌ வைர‌ஸ்க‌ள் ம‌னித‌ குல‌த்திற்கு எப்பொழுதுமே மிக‌ப்பெரிய‌ அச்சுறுத்த‌ல். இதற்கான WHO (World Health Organization) ம‌ற்றும் ஆராய‌ச்சியாள‌ர்க‌ளின் உழைப்பு மிக‌ப்பெரிய‌து. இதைப்ப‌ற்றி அறிய‌ முய‌லுங்க‌ள்.///


இதுவும் சமீபத்தில் செய்திகளில் படித்த ஒன்றுதான். மரபணு பரிசோதனை தவ்றுகளால் சார்ஸ், பன்றிக்காய்ச்சல் உருவாகும் கிரிமிகள் உருவாகியிருக்கலாம் என்றும் அறிந்தேன்...( வெப்துனியாவில் என்று நினைக்கின்றேன்)

மிக நல்ல கருத்து பரிமாற்றத்திற்கு மிக்க நன்றிபா

CorTexT (Old) said...

எப்படி பட்ட வழியில் வந்தாலும், நோய் உற்ற உயிரன மாமிசத்தை உண்பது கெடுதல் தான். மரபணு பொறியியலுக்கு செல்வதே, இயற்கையாக ஏற்படும் பரிணாம வளர்ச்சியில் கிடைத்த நல்லவற்றை அதிககரிக்கவும், கெட்டவற்றை குறைக்கவும் தான். இயற்கையில் நிகழும் குறைபாடு போல், சில குறைகள் இதிலும் இருக்கும். பயன்பாட்டிலிருந்து அதை கற்று கழைய முடியும். இயற்கையாக நடக்கும் கெடுதல்களை இயற்கையென்று எளிதாக ஏற்றுகொள்கின்றோம். ஆனால், செயற்கையாக நாமே செய்தால், அதிலுள்ள சிறு குறைகளைக்கு கூட தாம்-தீம் என்று குதிக்கின்றோம். வாக்சினேசன் குத்துவதிலும் சில குறைகள் உண்டு; ஆனால், எவ்வாறு போலியோ போன்றவற்றை தடுத்தோம் என்பதை மறந்து விடக்கூடாது.

சமீபத்திய சார்ஸ், பறைவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்றவை எங்கிருந்து நிகழ்ந்து என்று ஓரளவு நமக்கு தெரியும். அதற்கான ஆராய்ச்சி குழுவும் WHO-வில் உண்டு. மற்ற உயிரனங்களிலிருந்து வைரஸ் மனிதனுக்கு தாவுவதற்கு பல வழிகள் இயற்கையாகவே உண்டு. சில அறிவியல் சோதனைகள் மூலமும் பரவ வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. அதற்காக பல பாதுகாப்பு செய்முறைகள் உண்டு. உண்மையில் உலகிலுள்ள பல சுகாதாரமற்ற இடங்களிலிருந்தே (சைனா, சில தென்-கிழக்கு ஆசிய நாடுகள், மற்றும் பல) பெருன்பான்மையான வைரஸ் பரவுகின்றன. இப்பொழுதுள்ள உலகமயமாக்கல் பரவும் வேகத்தை மிக எளிதாக்கியுள்ளது.

Large Hadron Collider (LHC) என்ற அதிசக்தி துகள் முடுக்க கருவி Block-Hole உருவாக்கி பூமியை உட்கொள்ளும் என்று பரப்பிய, அரைகுறையாக புரிந்து கொண்ட மடையர்களும் உண்டு. போலியான ராசிபலனையும், இல்லாத பேய்களையும் நம்பும் உலகம் இது. அறிவியலை புரிந்து கொள்ளுங்கள்; வெறுமனே தெரிந்து கொண்டால், போலிகளுக்கு ஆளாக நேரிடும்.

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...

எப்படி பட்ட வழியில் வந்தாலும், நோய் உற்ற உயிரன மாமிசத்தை உண்பது கெடுதல் தான். மரபணு பொறியியலுக்கு செல்வதே, இயற்கையாக ஏற்படும் பரிணாம வளர்ச்சியில் கிடைத்த நல்லவற்றை அதிககரிக்கவும், கெட்டவற்றை குறைக்கவும் தான். இயற்கையில் நிகழும் குறைபாடு போல், சில குறைகள் இதிலும் இருக்கும். பயன்பாட்டிலிருந்து அதை கற்று கழைய முடியும். இயற்கையாக நடக்கும் கெடுதல்களை இயற்கையென்று எளிதாக ஏற்றுகொள்கின்றோம். ஆனால், செயற்கையாக நாமே செய்தால், அதிலுள்ள சிறு குறைகளைக்கு கூட தாம்-தீம் என்று குதிக்கின்றோம். வாக்சினேசன் குத்துவதிலும் சில குறைகள் உண்டு; ஆனால், எவ்வாறு போலியோ போன்றவற்றை தடுத்தோம் என்பதை மறந்து விடக்கூடாது.//

நான் ஒட்டுமொத்த அறிவியியலை குறை சொல்லவில்லை, சில குறைபாடுகளும் இருக்கு என்று சுட்டிக்காட்டியுள்ளேன்.


//சமீபத்திய சார்ஸ், பறைவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்றவை எங்கிருந்து நிகழ்ந்து என்று ஓரளவு நமக்கு தெரியும். அதற்கான ஆராய்ச்சி குழுவும் WHO-வில் உண்டு. மற்ற உயிரனங்களிலிருந்து வைரஸ் மனிதனுக்கு தாவுவதற்கு பல வழிகள் இயற்கையாகவே உண்டு. சில அறிவியல் சோதனைகள் மூலமும் பரவ வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. அதற்காக பல பாதுகாப்பு செய்முறைகள் உண்டு. உண்மையில் உலகிலுள்ள பல சுகாதாரமற்ற இடங்களிலிருந்தே (சைனா, சில தென்-கிழக்கு ஆசிய நாடுகள், மற்றும் பல) பெருன்பான்மையான வைரஸ் பரவுகின்றன. இப்பொழுதுள்ள உலகமயமாக்கல் பரவும் வேகத்தை மிக எளிதாக்கியுள்ளது.

Large Hadron Collider (LHC) என்ற அதிசக்தி துகள் முடுக்க கருவி Block-Hole உருவாக்கி பூமியை உட்கொள்ளும் என்று பரப்பிய, அரைகுறையாக புரிந்து கொண்ட மடையர்களும் உண்டு. போலியான ராசிபலனையும், இல்லாத பேய்களையும் நம்பும் உலகம் இது. அறிவியலை புரிந்து கொள்ளுங்கள்; வெறுமனே தெரிந்து கொண்டால், போலிகளுக்கு ஆளாக நேரிடும்.//

உங்களின் விரிவான விளக்கங்களுக்கு நன்றி,... செய்திகளில் சிலவற்றை சுருங்க சொல்லி வைப்பதால், புரிதலில் சில குறைகள் ஏற்படுகின்றது ,... நோய் பரவுகின்றது என்பதும் உண்மை அதுவும் வீரியமிக்க கிருமியாக உள்ளதும் உண்மை..

CorTexT (Old) said...

வீரியமிக்கது என்றால் என்ன? வைரஸ், பாக்டீரியா போன்றவை எளிய உயிரினம் என்பதால், மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யும்; அதனால் அதன் மரபுபிழைகளும் அதிகம். அதில் சில, நம் மருந்துக்கு அடங்காமல் போகும்; அவை இப்பொழுது வேகமாக இனப்பெருக்கம் செய்யும் (இது புதிய சூழலுக்கு ஏற்ப எல்லா உயிரனங்களுக்கும் நடைபெறும் சாதாரண பரிணாம வளர்ச்சி). இவைகளைத் தடுக்க வேறொரு மருந்து வேண்டும். ஒவ்வொரு முறை, நம் நோய்-எதிர்ப்பு-சக்தி வெற்றி கொள்ளும் போதும் அல்லது நம் மருந்து வெற்றி கொள்ளும் போதும், புதிய வகை கிருமிகள் உருவாக சூழலை உருவாக்குகின்றோம். அதைத் தான் வீரியமிக்க கிருமி என்கின்றோம்.

நாம் பலவகை மருந்துகள் மற்றும் வாக்சின் மூலம் நம்மை சில தெரிந்த கிருமிகளுக்கு எதிராக தற்காத்து கொள்ளும் போது, புதிய கிருமிகள் உருவாகும் சூழலை உருவாக்குகின்றோம். எனவே மருந்துகளை தகுந்த அளவில், தேவையானபடி பயன்படுத்து முக்கியம்.

இது மனிதன் என்ற பலவகையான நோய்-எதிர்ப்பு-செய்முறைகளை கொண்ட, ஆனால் மெதுவாக பரிணாம வளர்ச்சியடையும் உயிரனத்திற்கும்... எளிய, ஆனால் அதிவேகமாக பரிணாம வளர்ச்சியடையும் கிருமி என்ற உயிரனத்திற்கும்... நடைபெறும் வாழ்கை போராட்டம். அதில் நம் அறிவு மற்றொரு பாதுகாப்பு அரண்.

கிடுகுவேலி said...

பசியோடு மனிதனின் போராட்டங்கள்...இது தான் வாழ்வென்று நினைத்து இன்றும் முகாம்களில் பசியால் வாடும் எம் தமிழ் உறவுகளை நினைத்தால்.....! முடியல..!!

கலையரசன் said...

நல்பதிவு நண்பா... வேற என்னத்தை சொல்ல?
எல்லாதையும்தான் அலசி காயபோட்டுடீங்களே?

Anonymous said...

unmaiyai velicham pottu velimbi erukinga? intha arivu poorvamana pathivukku karuthu sollum arivu enaku illai....ethai nokki nam payanam endru velangavillai?

vizhipunarvu pathivu.....vazhthukkal sekhar

பழமைபேசி said...

நல்ல இடுகை...

"உழவன்" "Uzhavan" said...

உணவிற்குப் பதிலாக ஒரு சில விட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட்டு உயிர் வாழும் நிலையும் வருமோ..

ஆ.ஞானசேகரன் said...

/// RajK said...

வீரியமிக்கது என்றால் என்ன? வைரஸ், பாக்டீரியா போன்றவை எளிய உயிரினம் என்பதால், மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யும்; அதனால் அதன் மரபுபிழைகளும் அதிகம். அதில் சில, நம் மருந்துக்கு அடங்காமல் போகும்; அவை இப்பொழுது வேகமாக இனப்பெருக்கம் செய்யும் (இது புதிய சூழலுக்கு ஏற்ப எல்லா உயிரனங்களுக்கும் நடைபெறும் சாதாரண பரிணாம வளர்ச்சி). இவைகளைத் தடுக்க வேறொரு மருந்து வேண்டும். ஒவ்வொரு முறை, நம் நோய்-எதிர்ப்பு-சக்தி வெற்றி கொள்ளும் போதும் அல்லது நம் மருந்து வெற்றி கொள்ளும் போதும், புதிய வகை கிருமிகள் உருவாக சூழலை உருவாக்குகின்றோம். அதைத் தான் வீரியமிக்க கிருமி என்கின்றோம்.>>>>>>>>>//
உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி ராஜ்

ஆ.ஞானசேகரன் said...

// கதியால் said...

பசியோடு மனிதனின் போராட்டங்கள்...இது தான் வாழ்வென்று நினைத்து இன்றும் முகாம்களில் பசியால் வாடும் எம் தமிழ் உறவுகளை நினைத்தால்.....! முடியல..!!//
உங்கள் வலிகள் எங்களால் உணர்ந்துக்கொள்ள முடிகின்றது. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// கலையரசன் said...

நல்பதிவு நண்பா... வேற என்னத்தை சொல்ல?
எல்லாதையும்தான் அலசி காயபோட்டுடீங்களே?//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

unmaiyai velicham pottu velimbi erukinga? intha arivu poorvamana pathivukku karuthu sollum arivu enaku illai....ethai nokki nam payanam endru velangavillai?

vizhipunarvu pathivu.....vazhthukkal sekhar//


வாங்க தமிழ்,.. உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றி.. என்ன பதிவு பக்கம் காணவில்லை வேலை பளுவா? வாழ்த்துகள் தமிழ்

ஆ.ஞானசேகரன் said...

//பழமைபேசி said...

நல்ல இடுகை...//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//உழவன் " " Uzhavan " said...

உணவிற்குப் பதிலாக ஒரு சில விட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட்டு உயிர் வாழும் நிலையும் வருமோ..//

வாங்க நண்பா,... வரலாம் என்றே தோன்றுகின்றது.. என்னத்த சொல்ல!

மிக்க நன்றி நண்பா

ஷண்முகப்ரியன் said...

அருமையான இடுகை.ஆழமான பின்னூட்டங்கள்,ஞானசேகரன்.
வேர்களைப் பற்றிக் கவலைப் படாமல்.கனிகளைப் பறிக்க மட்டும் கவலைப் படும் மனிதர்கள்.
ஒட்டுமொத்த உலகச் சிந்தனைகளும் செயல்களும் மாற வேண்டும்.
இந்தத் தலைமுறையில் நடக்கும் என்று தெரியவில்லை.

Admin said...

நல்லதொரு இடுகையும் கருத்துக்களும்.

இன்று விவசாயத்துக்கு செயற்கை உரங்கள் கிருமி நாசினிகள் பாவிப்பதால் மனிதனின் உடலில் சிறிது சிறிதாக நண்சுஉட்டப்படுவதாக பல ஆராச்சிகள் சொல்கின்றன. செயற்கை உரங்கள் பாவிக்காமல் இயற்கையாகவே தரமான விளைச்சலை பெற முடியும் ஆனால் விவசாயிகள் அதனை பின்பற்றுவதில்லை.

எனது கிராமம் கூட பாரிய விவசாயக் கிராமம் நாளொன்றுக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ மிளகாய் அறுவடை செய்யப் படுகின்றது. இங்கே செயற்கை உரங்கள், கிருமி நாசினிகள் பாவிப்பதனை கைவிட்டு இயற்கை முறையினை பின்பற்றும் திட்டத்தினை விவசாயத்துறை சார்ந்த அமைப்புகள் இரண்டு ஒருங்கமைத்தன அதிலே விவசாயிகள் பாரிய வெற்றியினைக் கண்டனர். நல்ல விளைச்சலும் கிடைத்தன.

ஆனால் இன்று மீண்டும் படிப்படியாக இரசாயன உரப் பாவனையினை பலர் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.

எல்லாம் மனிதனால் வந்த வினைதான்

ஆ.ஞானசேகரன் said...

//ஷண்முகப்ரியன் said...
அருமையான இடுகை.ஆழமான பின்னூட்டங்கள்,ஞானசேகரன்.
வேர்களைப் பற்றிக் கவலைப் படாமல்.கனிகளைப் பறிக்க மட்டும் கவலைப் படும் மனிதர்கள்.
ஒட்டுமொத்த உலகச் சிந்தனைகளும் செயல்களும் மாற வேண்டும்.
இந்தத் தலைமுறையில் நடக்கும் என்று தெரியவில்லை.//

வணக்கம் ஷண்முகப்ரியன் சார்,.. உங்களின் கருத்துரைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி,.. நீங்கள் சொல்வது போல இந்த தலைமுறையில் மாறுமா? என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கு. இருந்தாலும் மாற வேண்டும் என்பது எல்லோருடைய ஆசைகள்

ஆ.ஞானசேகரன் said...

///சந்ரு said...
நல்லதொரு இடுகையும் கருத்துக்களும்.

இன்று விவசாயத்துக்கு செயற்கை உரங்கள் கிருமி நாசினிகள் பாவிப்பதால் மனிதனின் உடலில் சிறிது சிறிதாக நண்சுஉட்டப்படுவதாக பல ஆராச்சிகள் சொல்கின்றன. செயற்கை உரங்கள் பாவிக்காமல் இயற்கையாகவே தரமான விளைச்சலை பெற முடியும் ஆனால் விவசாயிகள் அதனை பின்பற்றுவதில்லை.

எனது கிராமம் கூட பாரிய விவசாயக் கிராமம் நாளொன்றுக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ மிளகாய் அறுவடை செய்யப் படுகின்றது. இங்கே செயற்கை உரங்கள், கிருமி நாசினிகள் பாவிப்பதனை கைவிட்டு இயற்கை முறையினை பின்பற்றும் திட்டத்தினை விவசாயத்துறை சார்ந்த அமைப்புகள் இரண்டு ஒருங்கமைத்தன அதிலே விவசாயிகள் பாரிய வெற்றியினைக் கண்டனர். நல்ல விளைச்சலும் கிடைத்தன.

ஆனால் இன்று மீண்டும் படிப்படியாக இரசாயன உரப் பாவனையினை பலர் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.

எல்லாம் மனிதனால் வந்த வினைதான்//

வணக்கம் சந்ரு,.. முதலில் உஙகள் நல்ல கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிபா,.. இயற்கை உரங்கள் பாவிப்பதில் ஒரு சிக்கல் என்னவென்றால் அருகில் உள்ள விவசாயும் செயற்கை உரம் பாவிக்காமல் இருந்தால் நல்லது. பக்கத்தில் பூச்சுக்கொல்லி பாவித்து நாம் பாவிக்காமல் விட்டுவிட்டால் நம்முடைய பயிர் நாசமடையும். இப்படி எல்லோரும் கூட்டு முயற்சியாக செய்தால்தான் பலன் கிடைக்கும். அந்த நிலை ஷண்முகப்ரியன் சார் சொல்வதை போல இந்த தலைமுறையில் நடக்குமா? என்பதும் கேள்விக்குறிதான்..... மிக்க நன்றி நண்பா

Muniappan Pakkangal said...

Nice post with social consciousness Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
Nice post with social consciousness Gnanaseharan.//

Thank you sir,..

சி.கருணாகரசு said...

மிக அருமையான பதிவு நண்பா. உங்களின் உலக பார்வையை வியக்கிறேன் நண்பா... பராட்டுக்கல்.

சி.கருணாகரசு said...

மிக அருமையான பதிவு நண்பா. உங்களின் உலக பார்வையை வியக்கிறேன் நண்பா... பராட்டுக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// சி.கருணாகரசு said...

மிக அருமையான பதிவு நண்பா. உங்களின் உலக பார்வையை வியக்கிறேன் நண்பா... பராட்டுக்கள்.//

நண்பா, உங்களின் பாராட்டுகள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. மிக்க நன்றி நண்பா,... உங்களின் ஊக்கம் என்னை இன்னும் நல்ல இடுகைகளை கொடுக்கும் என்று நம்புகின்றேன்

jothi said...

//விவசாயம் மற்றும் உணவுப் பற்றாகுறையை சமாளிக்க வழிகாணுதல் இல்லாமல் இந்தியா வல்லரசு என்ற சொல்லுக்கே இடமில்லை என்பதுதான் உண்மை.//

வழி மொழிகிறேன்.

இது போன்ற தரமான பதிவுகளை மிக மிக எதிர்பார்க்கிறேன்

ஆ.ஞானசேகரன் said...

//// jothi said...

//விவசாயம் மற்றும் உணவுப் பற்றாகுறையை சமாளிக்க வழிகாணுதல் இல்லாமல் இந்தியா வல்லரசு என்ற சொல்லுக்கே இடமில்லை என்பதுதான் உண்மை.//

வழி மொழிகிறேன்.

இது போன்ற தரமான பதிவுகளை மிக மிக எதிர்பார்க்கிறேன்//

மிக்க நன்றி நண்பா,...
உங்களை போன்றோர்களின் பாராட்டுகள் கிடைத்தால் இன்னும் நன்றாக எழுதலாம்..

நிஜமா நல்லவன் said...

/SanjaiGandhi said...

yer otta vendiyavan ellam keyboard thatta poitu arasangathai matum kurai sonna epdi?
/

பாஸ்...அரசாங்கம் பண்ணின கூத்துல தான் மூணு போகம் ரெண்டாகி அப்புறம் ஒண்ணாகி இப்ப ஒரு போகத்துக்கும் வழியில்லாம விவசாயிகள் எல்லாம் தலைல துண்டை போட்டுட்டு இருக்காங்க....காவிரி தண்ணி பல வருஷமா எங்க ஊரு பக்கம் எட்டி பார்க்காததால நல்லா விளைஞ்சிட்டு இருந்த எங்க விவசாய பூமி எல்லாம் இப்ப காடாதான் கிடக்கு....இதுக்கு இப்ப யாரை குறை சொல்லணும்????

ஆ.ஞானசேகரன் said...

/// நிஜமா நல்லவன் said...

/SanjaiGandhi said...

yer otta vendiyavan ellam keyboard thatta poitu arasangathai matum kurai sonna epdi?
/

பாஸ்...அரசாங்கம் பண்ணின கூத்துல தான் மூணு போகம் ரெண்டாகி அப்புறம் ஒண்ணாகி இப்ப ஒரு போகத்துக்கும் வழியில்லாம விவசாயிகள் எல்லாம் தலைல துண்டை போட்டுட்டு இருக்காங்க....காவிரி தண்ணி பல வருஷமா எங்க ஊரு பக்கம் எட்டி பார்க்காததால நல்லா விளைஞ்சிட்டு இருந்த எங்க விவசாய பூமி எல்லாம் இப்ப காடாதான் கிடக்கு....இதுக்கு இப்ப யாரை குறை சொல்லணும்????///

நீங்க சொல்வதும் நிஜமான உண்மை நண்பா