_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, October 16, 2009

ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-3

ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-3

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
ஏழை, ஏழையாக இருப்பதேன்?...
ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-2

ஏழ்மைக்கான காரணங்கள் ஆயிரங்கள் இருந்தாலும் அவற்றை உலகிலிருந்து கழைவது இன்னும் ஆராய்வு வடிவிலேயே இருப்பதுதான் நம்மில் பலருக்கு இருக்கும் கேள்விகள். பொருளாதர கொள்கைகளாக இப்போதைக்கு நம்மில் இருப்பவை தனியுடமை/முதலாளித்துவமும் தான். சோவியத் யூனியன் பிரிவிற்கு பின் தனியுடமை கொள்கை கேள்விக்குறியவைகளாக ஆனாலும் சீனாவில் ஏற்புடையதாகவே இருக்கின்றது. சீனாவின் பொருளாதாரக் கொள்கை உலக நாடுகளை பயம்கொள்ள வைகின்றது என்பதும் உண்மைதான். அதே போல உலகின் பல நாடுகள் அமெரிக்காவை நம்பியே இருக்கின்றது. அமெரிக்காவின் பொருளாதரக் கொள்கை முதலாளித்துவம் முதலில் வெற்றியை கொடுத்தாலும் பின்னர் பின்னடைவையும் சந்திக்கதான் செய்கின்றது. இரண்டிலும் நலது கெட்டது இருந்தாலும் தேவையான சூழ்நிலைக்கு அவைகள் ஏற்புடையதாக்கப்படுகின்றது. இதற்கு இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில்தான் இந்தியா இருந்து வருகின்றது. இந்த நிலை தற்போதைக்கு சாதகமாக இருந்தாலும் இது ஒரு ஆபத்தான நிலைதான். இவற்றிலிருந்து தன்னை பாதுக்காத்துக்கொள்ள ஒரு சுயமான பொருளாதார கொள்கை தேவை என்பதை நாம் மறுக்க முடியாது.

அதுபோல இந்தியா தன்னை தனித்தன்மையாக காட்டிகொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் ஏற்றுகொள்கின்றார்களோ இல்லையோ சில மாற்றங்களை செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலைதான் இன்றைய இந்தியா. ஏழைகள் டாட்டா, பிர்லா போன்று பணக்காரர்களாக ஆக வேண்டாம் சாதாரணமாக கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் கிடைத்தாலே நாம் மகிழ்ச்சியடைவோம். அப்படிப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் மக்கள் முறைப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டுமே. அதற்கு தற்பொழுது உள்ள சனநாயக முறையால் கட்டுப்படுத்த முடியுமா? என்றால் சந்தேகமே. இன்று வளர்ந்து வரும் பல நாடுகளில் மக்களுக்கு உரிமைகள் எந்த அளவிற்கு கொடுக்கின்றதோ அந்த அளவிற்கு உரிமையை சரியாக பயன்படுத்தாதவர்களுக்கு தண்டனைகளும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கின்றது. இதில் சனநாயக நாட்டில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் மறைமுகமாகவோ மாற்று வழிகளிலோ கொடுக்கப்படுகின்றது என்றால் நம்பமுடியாது ஆனாலும் நிருபிக்க வாய்பில்லா உண்மை.


சந்திரனுக்கு விண்கலம் அனுப்பி சாதனைகள் புரிந்தாலும் இன்னும் இந்தியாவில் பிச்சைகாரர்கள் இருக்கின்றார்கள் என்றால் யாரை குறைசொல்ல முடியும். எவ்வளவு நாட்களுக்கு அரசாங்கத்தையே குறைசொல்லிக்கொண்டு இருக்க போகின்றோம். எத்தனை பிச்சைகாரர்கள் வேலை செய்ய தாயாராக இருக்கின்றார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். சுமார் 25 வருடங்களுக்கு முன் தொழு நோயாளிகள் பலர் தெருவோரம் பிச்சை எடுத்துகொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு தகுந்த இலவச கட்டாய சிகிச்சைகளும் பின்னர் மறுவாழ்வு மையங்களும் செய்துகொடுத்து இன்று அப்படிப்பட்ட சூழல்களை இல்லாமல் செய்துள்ளார்கள் என்றால் நாம் இந்த இந்திய அரசிற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இன்றும் தொழுநோய்க்கான சிகிச்சை அரசு சுகாதார மையங்களில் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றதை நான் பார்த்துள்ளேன். அவற்றுகெல்லாம் என்னுடைய நன்றியின் கரகோசம் உண்டு. திருச்சி மாவட்டத்திலுள்ள செம்பட்டு என்ற கிராமத்தில் கத்தோலிக்க கிருஸ்துவ அமைப்பால் ஒரு தோழுநோயாளி மறுவாழ்வு மையம் இயங்கி வருகின்றது. இங்கு அவர்களுக்கு வேலையும் சிகிச்சையும் கிடைக்கின்றது.


உங்கள் வீட்டின் அருகில் நல்ல ஆரோக்கியமானவர்கள் பிச்சை எடுத்துக்கொண்டு வருகின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறு வேலைகளை கொடுத்து பின் நல்ல பணம் தருவதாக கூறிப்பாருங்கள். ஒன்று அவர்கள் செய்ய மாட்டார்கள் அல்லது செய்வதுபோல நடித்து கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். இப்படிதான் அரசாங்கம் கொடுக்கும் மறுவாழ்வு திட்டங்களும் நாசமா போகின்றது. இவற்றிக்கு நாமும் முறையற்ற அரசு அதிகாரிகளும் காரணமாகின்றனர். இப்படிப்பட்ட மறுவாழ்வு திட்டங்கள் சரியாக செயல்பட வேண்டும் என்றால் முறைகேடுகளுக்கு காரணம் எதுவாயினும் மன்னிப்பு இல்லா தண்டனைகள் வழங்கப்பட்டுதான் ஆக வேண்டும். இது ஒரு சர்வாதிகாரம் என்றாலும் வரவேற்கதான் வேண்டும். அதை விட எல்லோருக்கும் விழிபுணர்வும் தேவை. எத்தனை மாட்டு கடன், எத்தனை ஆட்டுக்கடன், எத்தனை சிறுதொழில் கடன் பயன் இல்லாமல் போய்கொண்டுள்ளது.

இயற்கை வளங்கள் அதிகம் இருந்தும் இன்னும் ஏழ்மையின் சதவிகிதம் கூடிகொண்டே இருப்பதற்கு காராணம் இந்த பொருளாதாரக்கொள்கை, அரசு, மற்றும் சமூக அமைப்பு என்று சொல்லிகொண்டே இருப்பதை விட நம்மில் இருக்கும் சோம்பேறி தனம், பொறுப்பின்மையை, நேர்மையின்மையை அறுத்தெடுக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று, இன்றைய சிந்தனைகளாகச் சொல்லி............ உங்களின் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.

இன்னும் இதைப்பற்றி வரும் இடுகைகளில் சிந்திக்கலாம்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

36 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சிறந்த கருத்தாய்வுக் கட்டுரை ஞானம்!

ஆ.ஞானசேகரன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சிறந்த கருத்தாய்வுக் கட்டுரை ஞானம்!//
நன்றிங்க ஜோதிபாரதி

வால்பையன் said...

//சந்திரனுக்கு விண்கலம் அனுப்பி சாதனைகள் புரிந்தாலும் இன்னும் இந்தியாவில் பிச்சைகாரர்கள் இருக்கின்றார்கள்//

எல்லா பிச்சைகாரர்களும் இயலாமையால் பிச்சை எடுக்கவில்லை!

சிலருக்கு அதில் வரும் வருமானம் தேவைக்கு அதிகமாகவே உள்ளது!
தர்மம் செய்தால் புண்ணியம் என்று பிச்சைகாரர்களை ஊக்குவிக்கும் ஆன்மிக பழங்கள் இருக்கும் வரை பிச்சைகாரர்களை ஒழிக்க முடியாது!

ஊடகன் said...

//ஏழ்மையின் சதவிகிதம் கூடிகொண்டே இருப்பதற்கு காராணம் இந்த பொருளாதாரக்கொள்கை, அரசு, மற்றும் சமூக அமைப்பு என்று சொல்லிகொண்டே இருப்பதை விட நம்மில் இருக்கும் சோம்பேறி தனம், பொறுப்பின்மையை, நேர்மையின்மையை அறுத்தெடுக்க வேண்டும் என்பதே//

உண்மைதான்......... இந்த கனவு எப்பொழுது நிசமாகும்.............

CorTexT (Old) said...

ஒரு சிறு கட்டுமான பணிக்கும், பெரிய கட்டுமான பணிக்கும் மிகப் பெரிய வேறுபாடுகள் உண்டு. சின்ன சின்ன சிக்கல்கள் பூதாகரமாக மாறி அது கட்டுக்கடங்காமல் போகும். சிங்கப்பூர் போன்ற அமைப்பை இந்தியாவிற்கு அப்படியே பயன்படுத்த முடியாது. சர்வாதிகாரம், சோம்பேரிகளுக்கு தண்டனை போன்றவற்றின் நடைமுறை சாத்தியங்களைப் பற்றி நன்றாக யோசித்து பாருங்கள்; யாரை நம்பி அதை ஒப்படைக்கப் போகின்றீர்கள்; எந்த சதாம் கிட்ட? எந்த போலிஸ் கிட்ட? சோம்பேரிகளுக்கு தண்டனை போன்ற சின்ன வட்டத்தை விட்டு சற்று பெரிய பார்வைக்கு வாருங்கள். ஏனென்றால் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய பார்வை தேவை.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல கட்டுமானங்கள் தேவை. அவற்றை இரு பிரிவுகளாக பிரிக்கின்றனர்: மெது மற்றும் கடின கட்டுமானங்கள் (Soft and Hard infrastructures). அரசியல், சட்டம், வங்கி, கல்வி, பத்திரிக்கை ஆகிய அமைப்புகள் மெது கட்டுமானங்கள் ஆகும்; கட்டிடங்கள், சாலை மற்றும் இரயில் போக்குவரத்து அமைப்புகள் கடின கட்டுமானங்கள் ஆகும். சைனாவை விட இந்தியாவின் மெது கட்டுமானங்கள் சிறந்தாக இருப்பினும், சைனா நம்மை விட சிறந்த கடின கட்டுமானங்கள் கொண்டுள்ளது.

பொதுவாக கம்மூனிச அரசியல் அமைப்பு பொதுவுடமை பொருளாதாரத்தை பயன்படுத்துகின்றது. அதனால் அரசியல் அமைப்பையும் பொருளாதார அமைப்பையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். சைனாவின் அபரீத பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் முதலாளித்துவ திறந்தவெளி சந்தையை (Open Market) அவர்கள் இந்தியாவை விட சீக்கரமாக ஏற்று கொண்டது தான்.

ரோஸ்விக் said...

//முறைகேடுகளுக்கு காரணம் எதுவாயினும் மன்னிப்பு இல்லா தண்டனைகள் வழங்கப்பட்டுதான் ஆக வேண்டும்//

தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட்டால்....நாம் விரைவில் முன்னேறலாம். அனைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது கண்டிக்க தக்கது.

ஈரோடு கதிர் said...

வால்பையன் கருத்தோடு முழுதும் உடன்படுகிறேன்

நல்லதொரு பகிர்வு ஞானசேகரன்

பாராட்டுகள்

S.Gnanasekar said...

ஏழை, ஏழையாக இருப்பதேன்?...
உழைக்கும் என்னம் சில பேருக்கு வருவதே இல்லை உழைப்பில் கிடைப்பதைவிட பிச்சை எடுப்பதில் அதிகம் கிடைத்து விடுகிறது சோம்பேறிகள் ஆகிவிடுகிறார்கள்.
உங்கள் வீட்டின் அருகில் நல்ல ஆரோக்கியமானவர்கள் பிச்சை எடுத்துக்கொண்டு வருகின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறு வேலைகளை கொடுத்து பின் நல்ல பணம் தருவதாக கூறிப்பாருங்கள். ஒன்று அவர்கள் செய்ய மாட்டார்கள் அல்லது செய்வதுபோல நடித்து கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். இப்படிதான் அரசாங்கம் கொடுக்கும் மறுவாழ்வு திட்டங்களும் நாசமா போகின்றது
பொருளாதார கொள்கையானாலும் மறுவாழ்வு திட்டங்கங்கள் ஆனாலும் முறையாக செயல்படும் வரை ஏழை, ஏழையாகவேதான் இருப்பார்கள். நல்ல சிந்திக்க வேண்டியபதிவு.

சோ.ஞானசேகர்.

ஹேமா said...

வால்பையன் சரியகவே சொல்லியிருக்கிறார்.நானும் அதைத்தான் நினைக்கிறேன்.

ஞானம்,இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

தீப்பெட்டி said...

மக்களிடம் சமூக அக்கறையை ஊடகவியலாளர்களும், மாணவர்களிடம் ஆசிரியர்களும் ஏற்படுத்த வேண்டும்..
பொது நலமுள்ள சமூகநல ஆர்வலர்களின் தேவை அதிகமிருக்கிறது.. 120 கோடிக்கு 1 கோடி பேராவது தேவை.. இதற்கு ஊடகவியலாளர்களின் பங்கும் ஆசிரியர்களின் பங்கும் மிக முக்கியமானது..

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

சொல்லரசன் said...

//இப்படிப்பட்ட மறுவாழ்வு திட்டங்கள் சரியாக செயல்பட வேண்டும் என்றால் முறைகேடுகளுக்கு காரணம் எதுவாயினும் மன்னிப்பு இல்லா தண்டனைகள் வழங்கப்பட்டுதான் ஆக வேண்டும். இது ஒரு சர்வாதிகாரம் என்றாலும் வரவேற்கதான் வேண்டும்.//

உண்மைதான் இது போன்ற தண்டனைகள் தற்போது இந்தியாவிற்கு அவசியம்.

ஆ.ஞானசேகரன் said...

[[ வால்பையன் said...
//சந்திரனுக்கு விண்கலம் அனுப்பி சாதனைகள் புரிந்தாலும் இன்னும் இந்தியாவில் பிச்சைகாரர்கள் இருக்கின்றார்கள்//

எல்லா பிச்சைகாரர்களும் இயலாமையால் பிச்சை எடுக்கவில்லை!

சிலருக்கு அதில் வரும் வருமானம் தேவைக்கு அதிகமாகவே உள்ளது!
தர்மம் செய்தால் புண்ணியம் என்று பிச்சைகாரர்களை ஊக்குவிக்கும் ஆன்மிக பழங்கள் இருக்கும் வரை பிச்சைகாரர்களை ஒழிக்க முடியாது!]]

உஙகளின் கருத்துக்கு நானும் உடன்படுகின்றேன் நண்பா. சமீபத்தில் ஒருவர் வருத்தப்பட்டார் அப்பா திவசத்திற்க்கு பிச்சையிட தற்பொழுது பிச்சைகாரர்கள் கிடைப்பது கடினமாக இருக்கு. அப்படியே இருந்தாலும் சாப்பாடு வேண்டாம் காசா கொடுங்கள் என்று சொல்ல்கின்றனர் என்றார். என்ன கொடுமை நண்பா, இதற்கு என்னதான் சொல்லமுடியும். நான் வெறுமனே சிரித்துவிட்டு சென்றேன்.

ஆ.ஞானசேகரன் said...

[[ ஊடகன் said...
//ஏழ்மையின் சதவிகிதம் கூடிகொண்டே இருப்பதற்கு காராணம் இந்த பொருளாதாரக்கொள்கை, அரசு, மற்றும் சமூக அமைப்பு என்று சொல்லிகொண்டே இருப்பதை விட நம்மில் இருக்கும் சோம்பேறி தனம், பொறுப்பின்மையை, நேர்மையின்மையை அறுத்தெடுக்க வேண்டும் என்பதே//

உண்மைதான்......... இந்த கனவு எப்பொழுது நிசமாகும்.............]]

வாங்க ஊடகன், வணக்கம் நானும் அதேதான் எதிர்ப்பார்க்கின்றேன். கூடிய விரைவில் நடக்கும் என்றே நம்புவோம்

ஆ.ஞானசேகரன் said...

[[ RajK said...
ஒரு சிறு கட்டுமான பணிக்கும், பெரிய கட்டுமான பணிக்கும் மிகப் பெரிய வேறுபாடுகள் உண்டு. சின்ன சின்ன சிக்கல்கள் பூதாகரமாக மாறி அது கட்டுக்கடங்காமல் போகும். சிங்கப்பூர் போன்ற அமைப்பை இந்தியாவிற்கு அப்படியே பயன்படுத்த முடியாது. சர்வாதிகாரம், சோம்பேரிகளுக்கு தண்டனை போன்றவற்றின் நடைமுறை சாத்தியங்களைப் பற்றி நன்றாக யோசித்து பாருங்கள்; யாரை நம்பி அதை ஒப்படைக்கப் போகின்றீர்கள்; எந்த சதாம் கிட்ட? எந்த போலிஸ் கிட்ட? சோம்பேரிகளுக்கு தண்டனை போன்ற சின்ன வட்டத்தை விட்டு சற்று பெரிய பார்வைக்கு வாருங்கள். ஏனென்றால் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய பார்வை தேவை.]]

வணக்கம் ராஜ் இப்படிபட்ட கட்டுமானங்கள்தான் நாட்டை வழிநடத்திக்கொண்டுள்ளது உண்மைதான். ஆனால் இந்த கட்டுமானங்களையும் சிதைக்கும் சோம்பேறிகளை என்ன செய்வது. தற்பொழுது போடப்படும் நெடுந்சாலை பணிகளுக்கு எத்தனை வழக்குகள் இருக்கின்றன. அதுவும் எத்தனை நிலுவையில் உள்ளன. நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கும் சீர்திருத்தங்களூகும் அவசரக்கால சட்டங்களும் தேவை என்பதை காலம் அவ்வப்பொழுது பதில் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றது.



[[ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல கட்டுமானங்கள் தேவை. அவற்றை இரு பிரிவுகளாக பிரிக்கின்றனர்: மெது மற்றும் கடின கட்டுமானங்கள் (Soft and Hard infrastructures). அரசியல், சட்டம், வங்கி, கல்வி, பத்திரிக்கை ஆகிய அமைப்புகள் மெது கட்டுமானங்கள் ஆகும்; கட்டிடங்கள், சாலை மற்றும் இரயில் போக்குவரத்து அமைப்புகள் கடின கட்டுமானங்கள் ஆகும். சைனாவை விட இந்தியாவின் மெது கட்டுமானங்கள் சிறந்தாக இருப்பினும், சைனா நம்மை விட சிறந்த கடின கட்டுமானங்கள் கொண்டுள்ளது.]]

சைனாவின் கடின கட்டுமானங்கள் சிறப்பாக இருக்க அங்குள்ள சட்டங்கள்தான் காரணம். அதைதான் நாமும் மேற்கொண்டாக வேண்டும்..


[[பொதுவாக கம்மூனிச அரசியல் அமைப்பு பொதுவுடமை பொருளாதாரத்தை பயன்படுத்துகின்றது. அதனால் அரசியல் அமைப்பையும் பொருளாதார அமைப்பையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். சைனாவின் அபரீத பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் முதலாளித்துவ திறந்தவெளி சந்தையை (Open Market) அவர்கள் இந்தியாவை விட சீக்கரமாக ஏற்று கொண்டது தான்.]]


உண்மைதான் திறந்தவெளிச்சந்தையால் சில நன்மைகள் இருப்பினும் ஆரம்பத்தில் உள்ளூர் தொழில் நசிவுகள் இருக்குமே. அவற்றை ஒழுங்குப்படுத்த அப்படிப்பட்ட திட்டங்களும் சட்டங்களும் தேவை....
உங்களின் பல்நோக்கு பார்வையில் உள்ள கருத்துகளுக்கு மிக்க நன்றி ராஜ்...

ஆ.ஞானசேகரன் said...

[[ரோஸ்விக் said...
//முறைகேடுகளுக்கு காரணம் எதுவாயினும் மன்னிப்பு இல்லா தண்டனைகள் வழங்கப்பட்டுதான் ஆக வேண்டும்//

தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட்டால்....நாம் விரைவில் முன்னேறலாம். அனைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது கண்டிக்க தக்கது.]]

உண்மைதான் நண்பா. உங்களின் வருகை எனக்கு மகிச்சி,,, மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

[[கதிர் - ஈரோடு said...
வால்பையன் கருத்தோடு முழுதும் உடன்படுகிறேன்

நல்லதொரு பகிர்வு ஞானசேகரன்

பாராட்டுகள்]]

வணக்கம் மிக்க நன்றி கதிர்

ஆ.ஞானசேகரன் said...

[[S.Gnanasekar said...
ஏழை, ஏழையாக இருப்பதேன்?...
உழைக்கும் என்னம் சில பேருக்கு வருவதே இல்லை உழைப்பில் கிடைப்பதைவிட பிச்சை எடுப்பதில் அதிகம் கிடைத்து விடுகிறது சோம்பேறிகள் ஆகிவிடுகிறார்கள்.
உங்கள் வீட்டின் அருகில் நல்ல ஆரோக்கியமானவர்கள் பிச்சை எடுத்துக்கொண்டு வருகின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறு வேலைகளை கொடுத்து பின் நல்ல பணம் தருவதாக கூறிப்பாருங்கள். ஒன்று அவர்கள் செய்ய மாட்டார்கள் அல்லது செய்வதுபோல நடித்து கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். இப்படிதான் அரசாங்கம் கொடுக்கும் மறுவாழ்வு திட்டங்களும் நாசமா போகின்றது
பொருளாதார கொள்கையானாலும் மறுவாழ்வு திட்டங்கங்கள் ஆனாலும் முறையாக செயல்படும் வரை ஏழை, ஏழையாகவேதான் இருப்பார்கள். நல்ல சிந்திக்க வேண்டியபதிவு.

சோ.ஞானசேகர்.]]

வணக்கம் ஐயா, மிக்க நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

[[ஹேமா said...
வால்பையன் சரியகவே சொல்லியிருக்கிறார்.நானும் அதைத்தான் நினைக்கிறேன்.

ஞானம்,இனிய தீபாவளி வாழ்த்துக்கள்]]

வாங்க ஹேமா, உங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

[[தீப்பெட்டி said...
மக்களிடம் சமூக அக்கறையை ஊடகவியலாளர்களும், மாணவர்களிடம் ஆசிரியர்களும் ஏற்படுத்த வேண்டும்..
பொது நலமுள்ள சமூகநல ஆர்வலர்களின் தேவை அதிகமிருக்கிறது.. 120 கோடிக்கு 1 கோடி பேராவது தேவை.. இதற்கு ஊடகவியலாளர்களின் பங்கும் ஆசிரியர்களின் பங்கும் மிக முக்கியமானது..

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..]]

உங்களுடைய கருத்தும் சிந்திக்க வைக்கின்றது. மிக்க நன்றி நண்பா... இனிய தீபாவளி வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

[[ சொல்லரசன் said...
//இப்படிப்பட்ட மறுவாழ்வு திட்டங்கள் சரியாக செயல்பட வேண்டும் என்றால் முறைகேடுகளுக்கு காரணம் எதுவாயினும் மன்னிப்பு இல்லா தண்டனைகள் வழங்கப்பட்டுதான் ஆக வேண்டும். இது ஒரு சர்வாதிகாரம் என்றாலும் வரவேற்கதான் வேண்டும்.//

உண்மைதான் இது போன்ற தண்டனைகள் தற்போது இந்தியாவிற்கு அவசியம்.]]

வணக்கம் சொல்லரசன் மிக்க நன்றிங்க நண்பா

தமிழ் said...

நல்ல கட்டுரை நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

// திகழ் said...

நல்ல கட்டுரை நண்பரே//
மிக்க நன்றிங்க

Muniappan Pakkangal said...

I differ with you Gnanaseharan.The % of people below poverty line is coming down.You can see all categories of people working.Vettipayal,viruthaapayal number has come down.I have not seen beggers coming to the house for more than 10 years.The younger generation is much more active &i hope in the near future almost 85 % of families will be above poverty line.Nalla pathivu Gnanaseharan.

நேசமித்ரன் said...

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

நல்ல பதிவு,பகிர்வு!!!

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

I differ with you Gnanaseharan.The % of people below poverty line is coming down.You can see all categories of people working.Vettipayal,viruthaapayal number has come down.I have not seen beggers coming to the house for more than 10 years.The younger generation is much more active &i hope in the near future almost 85 % of families will be above poverty line.Nalla pathivu Gnanaseharan.//

வணக்கம் சார், உங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சியும் நன்றியும். சமீபத்தில் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் 33 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளார்கள் என்று சொல்லுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் பிச்சை எடுப்பவர்கள் குறைந்துள்ளார்கள் என்பதும் யோசிக்க வேண்டியதே. ஆனாலும் அவர்கள் எல்லாம் நல்ல வழிகளில்தான் சென்றுள்ளார்களா என்றும் பார்க்க வேண்டும். அடுத்துவரும் காலங்களில் பிச்சை எடுப்பது குறையும் ஆனால் எடுத்து பறிப்பவர்கள் அதிகமாகுமோ என்ற எண்ணங்கள் இருகின்றது. மக்களிடையே உழைக்கும் எண்ணமும் நேர்மையும் குறைவதாக நான் கருதுகின்றேன். இந்த காரணங்கள் கூட வறுமையை அதிகப்படுத்தும்.... மிக்க நன்றி சார்..

ஆ.ஞானசேகரன் said...

// நேசமித்ரன் said...

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்//

நன்றி! உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்..

ஆ.ஞானசேகரன் said...

//அன்புடன் அருணா said...

நல்ல பதிவு,பகிர்வு!!!//

வணக்கம் அருணா,... மிக்க நன்றிங்க.. இனிய தீபாவளி வாழ்த்துகள்

Muniappan Pakkangal said...

When i was doing my medicine,i was taught India is a poor country,itz not now like that.People work & earn.Like you said there are cheaters in the form of Police & Govt officials.If things are made easy for the people to lead a normal life the poverty will go of completely.Yesterday there was a survey published in the newspaper Hindu noting that Hunger in India has come down.Nandri Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

When i was doing my medicine,i was taught India is a poor country,itz not now like that.People work & earn.Like you said there are cheaters in the form of Police & Govt officials.If things are made easy for the people to lead a normal life the poverty will go of completely.Yesterday there was a survey published in the newspaper Hindu noting that Hunger in India has come down.Nandri Gnanaseharan.//

வணக்கம் சார்.. நீங்கள் சொல்வதும் சரிதான்... காவல் துறையும் அரசு அதிகாரிகளும் சரியாக வேலை செய்தால் நாடு முன்னேற்றமடைய அதிக வாய்ப்புகள் இருக்கு நன்றி சார்

Anonymous said...

ஏழ்மையின் சதவிகிதம் கூடிகொண்டே இருப்பதற்கு காராணம் இந்த பொருளாதாரக்கொள்கை, அரசு, மற்றும் சமூக அமைப்பு என்று சொல்லிகொண்டே இருப்பதை விட நம்மில் இருக்கும் சோம்பேறி தனம், பொறுப்பின்மையை, நேர்மையின்மையை அறுத்தெடுக்க வேண்டும் என்பதே//

இதே இதே ...உண்மை

அன்புடன் நான் said...

ஏழை ஏழயாக இருப்பதேன்.... பணகாரனை... மேலும் பணக்காரன் ஆக்கத்தான்.

ஆ.ஞானசேகரன் said...

[[ தமிழரசி said...

ஏழ்மையின் சதவிகிதம் கூடிகொண்டே இருப்பதற்கு காராணம் இந்த பொருளாதாரக்கொள்கை, அரசு, மற்றும் சமூக அமைப்பு என்று சொல்லிகொண்டே இருப்பதை விட நம்மில் இருக்கும் சோம்பேறி தனம், பொறுப்பின்மையை, நேர்மையின்மையை அறுத்தெடுக்க வேண்டும் என்பதே//

இதே இதே ...உண்மை]]

வாங்க தமிழ்.., வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா...

ஆ.ஞானசேகரன் said...

[[ சி. கருணாகரசு said...

ஏழை ஏழயாக இருப்பதேன்.... பணகாரனை... மேலும் பணக்காரன் ஆக்கத்தான்.]]

வணக்கம் நண்பா,
எழையை நசுக்க பணக்காரனுக்கு எந்த அளவிற்கு பலம் இருகின்றதோ, அதை விட பலம் எழைக்கும்(நமக்கும்) பல மடங்கு இருக்கு என்பதை நம்பி செயல்ப்பட்டால் வெற்றியும் செல்வமும் நமக்கே...

Smart Plan said...

your way of speech good.I am Enton packiaraj i need to start a small business can u tell me where it is give me loan for government.

ஆ.ஞானசேகரன் said...

//Smart Plan said...
your way of speech good.I am Enton packiaraj i need to start a small business can u tell me where it is give me loan for government.//


தமிழ் நாடு சிறுதொழில் நிறுவணத்திடம்(சிக்கோ) கேட்டுப்பாருங்கள். அவர்கள் நல்ல ஆலோசனைகள் வழங்குவார்கள்