_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, December 4, 2009

உனக்கென்ன? எனக்கென்ன?....... எனக்கென்ன? உனக்கென்ன?....... உன் அப்பனுகென்ன??????....

உனக்கென்ன? எனக்கென்ன?....... எனக்கென்ன? உனக்கென்ன?....... உன் அப்பனுகென்ன??????....

சமூகம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள், சாதி /மதம் / இனம் என்று மனிதனை கூறுபோடும் பிரச்சனைகள், குழந்தைகள் மற்றும் மகளிர்களுக்கு சமூகத்தால் கொடுக்கப்படும் அவலங்கள் இப்படி எல்லா வகைப்பிரச்சனைகளையும் சொல்லியும் பேசியும், எழுதியும் வருகின்றோம். இதெல்லாம் இருக்கட்டும் நமக்குள் இருக்கும் சின்ன சின்ன கேவலமான செயல்களை, இச்சைகளை, சின்னபிள்ளைதனமுன்னு சொல்லுவாங்களே அதுபோல மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் செயல்களை நாம் கவணிக்கின்றோமா? அல்லது அதை தவிர்க்க ஏதாவது சிந்தனைகளை எடுத்துக்கொள்கின்றோமா? என்றால் இல்லை.... இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படிதான் ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் மருந்தகம் சென்றேன். மருத்துவர் வரும் நேரம் இன்னும் ஆகவில்லை அருகில் உள்ள இருக்கையில் உட்கார்ந்து காத்திருந்தேன். காய்ச்சல் என்பதால் மற்றவர்களுக்கு தோந்தரவாக இருக்க வேண்டாமே என்று ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன். இளம் வயது மதிக்கதக்க ஒருவன் வந்தான், மருந்தக‌ அலுவலகத்தில் விசாரித்துவிட்டு அவனும் காத்திருக்க இருக்கையில் அமர என் அருகில் வந்து காலை அகட்டி எனக்கேன்னா? என்று அமர்ந்தான். என்னை உரசிக்கொண்டே இருந்தான் எனக்கோ உடல்நிலை சரியில்லாமல் மேலும் எரிச்சலை உண்டாக்கியது. நான் அவனை ஒரு ஏக்கத்துடன் பார்ப்பதைக்கூட அவனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. வேறு வழியில்லாமல் வேறு இடம் சென்று அமர்ந்தேன்.

மேலே சொன்னது போல பலர் ( அவர்கள் நம் நண்பர்களாய் கூட இருக்கலாம்) பேருந்தில், தொடருந்தில், மற்றும் பொது இடங்களில் உட்காரும் பொழுது கிட்டதட்ட இரண்டு இருக்கைகளை ஆக்ரமித்துக்கொண்டும் அதே சமயம் பக்கத்தில் ஒரு சீவன் இருப்பதாக நினைத்துக்கூட பார்க்கமுடியாமல் அப்படி இப்படி ஆடிக்கொண்டே இருப்பார்கள். இது போன்ற சம்பவங்கள் எனக்குமட்டும் இல்லை எல்லோருக்கும் வந்திருக்கும். அருகில் இருக்கும் சக மனிதனின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடியாத இவர்களால்தான் சமூக அவலங்களை சீர்தூக்கிப்பார்த்து களைய முடியும் என்று எதிர்ப்பார்கின்றோமா?

எத்தனை பேர்களால் நரிக்குறவர்கள் அருகில் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்ய முடிகின்றது? எத்தனை பேர்களால் ஒரு நீக்ரோவின் கைபிடித்து குழுக்கும்பொழுது மனம் சலனம் இல்லாமல் இருக்க முடிகின்றது? எத்தனை மனிதர்களால் சக நண்பனின் புண்ணிற்கு மருந்திட முடிகின்றது? எத்தனை பேர்கள் முதியோர்களின் தோலினை பார்த்து முகம் சுழிக்காமல் இருக்க முடிகின்றது? இதெல்லாம் முடியாத நம்மால்தான் இந்த சமூக அவலைங்களை களை எடுக்க முடியும் என்று நம்புகின்றோமா? நமக்கு இழைக்கப்படும் அவலங்களை வேரெடுக்க குரலெழுப்பும் அதே சமயம் நம்மால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் அவலங்களை கண்டுகொள்கின்றோமா? சிறிதுதேனும் எண்ணிப்பாருங்கள் மக்களே!....

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றபொழுது என் ஆசிரியர் ஒருவர் (பெயர் சித்திரமூர்த்தி திருவெறும்பூர் ஒன்றியம்) எங்களை குடியரசு தின விழாவிற்கு தேவராயநேரி குறவர் காலணிக்கு அழைத்து சென்றார். நாங்கள் 20வது பேர் அங்கு சென்றோம். நரிகுறவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி வர வேண்டும் என்ற நோக்கத்தில் எங்களை அந்த ஆசிரியர் அங்கு அழைத்து சென்றார். அங்கு பல விளையாட்டு போட்டிகள் எங்களோடு சேர்ந்து நடத்தி பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் எல்லோருக்கும் சத்துணவும் வழங்கினார்கள், எங்களில் சிலர் சாப்பிட மறுத்துவிட்டார்கள், நான் சாப்பிட்டேன் ஆனால் என்னால் மனம் சலனப்படாமல் இருக்க முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். சிங்கபூரில் சில சீனர்கள் இந்தியர்கள் அருகில் உட்கார சங்கடப்படுகின்றார்கள்( தற்பொழுது குறைந்துள்ளது, இல்லை என்று சொல்லும் அளவிற்கு என்றால் சிங்கப்பூர் அரசிற்கு நன்றி சொல்ல வேண்டும்) என்று பார்த்த பொழுது முதலில் கோபம் வந்தாலும் எனக்குள் இருந்த அந்த சம்பவம் என்னை செம்மைப்படுத்தியது.

நம்மை ஒருவர் அடக்கியாழும் பொழுது நமக்கு வலி எடுப்பது உண்மை என்றால் அதே போல நாம் நமக்கு கீழ் உள்ளவர்களை ஆளுமை படுத்தும்பொழுது அவர்களுக்கும் அதே வலிதான் இருக்கும் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் இல்லாமல் எந்த மாற்றத்தையும் இந்த சமூகத்தில் உருவாக்கிட முடியாது......

உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

56 comments:

தேவன் said...

மொதல்ல நான் தான்,

பின்தொடர்பவர்கள் நூறு பேரை தொட்டமைக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்ல பகிர்வு சேகர்..இது நாம் அனைவரும் ஏதோ ஒரு சூழலில் சந்திக்கும் அனுபவமே...ஒரு சாராசரி நாகரீகம் கூட அறியாமல் இப்படி சிலர் அணுகத்தான் செய்கிறார்கள்.. 100 ப்ளோயருக்கு வாழ்த்துக்கள் சேகர்..

தேவன் said...

தவிற்க - தவிர்க்க (1)

அழ்மை - ஆளுமை (6)

/// உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது... ///

சபாஷ் சரியாச் சொன்னிங்க !

தேவன் said...

மேல ரெண்டு திருத்தம் இருக்கிறது திருத்தி விடுங்களேன்.

cheena (சீனா) said...

அன்பின் ஞான சேகரன்

தட்டச்சுப் பிழை தவிர்த்தல் நலம்

லகர ளகர ழகர வேறுபாடுகள்

வழி - வலி என இருக்க வேண்டுமோ
கவணிக்க - கவனிக்க

இத்தனை பெரிய இடுகையில் ஒன்றிரண்டு பிழைகள் வரத்தானே செய்யும் எனக் கோபப்பட வேண்டாம் - திருத்துக

நிற்க - கருத்து அருமை - சிந்தனை அருமை

நல்வாழ்த்துகள்

அப்பாவி முரு said...

//எத்தனை பேர்களால் நரிக்குறவர்கள் அருகில் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்ய முடிகின்றது? எத்தனை பேர்களால் ஒரு நீக்ரோவின் கைபிடித்து குழுக்கும்பொழுது மனம் சலனம் இல்லாமல் இருக்க முடிகின்றது? எத்தனை மனிதர்களால் சக நண்பனின் புண்ணிற்கு மருந்திட முடிகின்றது? எத்தனை பேர்கள் முதியோர்களின் தோலினை பார்த்து முகம் சுழிக்காமல் இருக்க முடிகின்றது?//

குட் கொஸ்டின்ஸ், பட்?

வால்பையன் said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது, மாற்றத்தை நம்மிடமிருந்தே ஆரம்பிப்போம்!

ப்ரியமுடன் வசந்த் said...

பொது இட நாகரீகமும் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஜடம்தான் அவர்கள்..

மாறுவோம்...

100 பின் தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள் சேகர்

ஆ.ஞானசேகரன் said...

// கேசவன் .கு said...

மொதல்ல நான் தான்,

பின்தொடர்பவர்கள் நூறு பேரை தொட்டமைக்கு வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா,...

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

நல்ல பகிர்வு சேகர்..இது நாம் அனைவரும் ஏதோ ஒரு சூழலில் சந்திக்கும் அனுபவமே...ஒரு சாராசரி நாகரீகம் கூட அறியாமல் இப்படி சிலர் அணுகத்தான் செய்கிறார்கள்.. 100 ப்ளோயருக்கு வாழ்த்துக்கள் சேகர்..//

வாங்க தமிழ்
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

[[ கேசவன் .கு said...

தவிற்க - தவிர்க்க (1)

அழ்மை - ஆளுமை (6)

/// உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது... ///

சபாஷ் சரியாச் சொன்னிங்க !]]

நன்றிபா மாற்றிவிடுகின்றேன்...

ஆ.ஞானசேகரன் said...

// cheena (சீனா) said...

அன்பின் ஞான சேகரன்

தட்டச்சுப் பிழை தவிர்த்தல் நலம்

லகர ளகர ழகர வேறுபாடுகள்

வழி - வலி என இருக்க வேண்டுமோ
கவணிக்க - கவனிக்க

இத்தனை பெரிய இடுகையில் ஒன்றிரண்டு பிழைகள் வரத்தானே செய்யும் எனக் கோபப்பட வேண்டாம் - திருத்துக

நிற்க - கருத்து அருமை - சிந்தனை அருமை

நல்வாழ்த்துகள்//

வணக்கம் ஐயா,..
பிழைகளை திருத்திவிட்டேன்... மிக்க நன்றிங்க...
வாழ்த்துகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

ஆ.ஞானசேகரன் said...

99 அப்பாவி முரு said...

//எத்தனை பேர்களால் நரிக்குறவர்கள் அருகில் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்ய முடிகின்றது? எத்தனை பேர்களால் ஒரு நீக்ரோவின் கைபிடித்து குழுக்கும்பொழுது மனம் சலனம் இல்லாமல் இருக்க முடிகின்றது? எத்தனை மனிதர்களால் சக நண்பனின் புண்ணிற்கு மருந்திட முடிகின்றது? எத்தனை பேர்கள் முதியோர்களின் தோலினை பார்த்து முகம் சுழிக்காமல் இருக்க முடிகின்றது?//

குட் கொஸ்டின்ஸ், பட்?]]

பட் தவிற்க முடியவில்லை..

வாங்க நண்பா, மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது, மாற்றத்தை நம்மிடமிருந்தே ஆரம்பிப்போம்!//

கண்டிப்பாக நண்பா,...

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன்...வசந்த் said...

பொது இட நாகரீகமும் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஜடம்தான் அவர்கள்..

மாறுவோம்...

100 பின் தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள் சேகர்//

மிக்க நன்றி நண்பா,...

பிரபாகர் said...

சிங்கை வந்த புதிதில் எனக்கு ஒரு சில அனுபவங்கள் கிடைத்தது. இப்போது அவ்வளவாயில்லை அல்லது பழகிவிட்டது...

நன்றாய் அலசியிருக்கிறீர்கள் நண்பரே... தொடர்பு எண் தாருங்கள்! பேசுவோம்...

பிரபாகர்.

jothi said...

கண்டிப்பாக வித்தியாசமான பார்வை. வால்பையன் சொன்னது போல் மாற்றத்தை நம்மிடமிருந்தான் ஆரம்பிக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

தேவன்மாயம் said...

உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்கள் மிதிப்பவர்கள் இங்கு அதிகம்தான்!!
இந்நிலை மாறத்தான் வேண்டும்!!

ஆ.ஞானசேகரன் said...

//பிரபாகர் said...
சிங்கை வந்த புதிதில் எனக்கு ஒரு சில அனுபவங்கள் கிடைத்தது. இப்போது அவ்வளவாயில்லை அல்லது பழகிவிட்டது...

நன்றாய் அலசியிருக்கிறீர்கள் நண்பரே... தொடர்பு எண் தாருங்கள்! பேசுவோம்...

பிரபாகர்.
//
வணக்கம் பிரபாகர்,... மிக்க நன்றிங்க.
மின்னஞ்சலில் தொடர்புக்கொள்கின்றேன்... aammaappa@gmail.com

ஆ.ஞானசேகரன் said...

//jothi said...
கண்டிப்பாக வித்தியாசமான பார்வை. வால்பையன் சொன்னது போல் மாற்றத்தை நம்மிடமிருந்தான் ஆரம்பிக்க வேண்டும். வாழ்த்துக்கள்.//

வணக்கம் நண்பா,... கண்டிப்பாக மாற்றத்தை நம்மிடமிருந்து ஆரம்பிக்கலாம்.. மிக்க நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

//தேவன்மாயம் said...
உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்கள் மிதிப்பவர்கள் இங்கு அதிகம்தான்!!
இந்நிலை மாறத்தான் வேண்டும்!!//

வாணக்கம் டாக்டர்... இந்நிலை மாறவேண்டும்... மாற்றத்தை நம்மிடமிருந்து ஆரம்பிக்கலாம் வாங்க... மிக்க நன்றி டாக்டர்

priyamudanprabu said...

///

எத்தனை பேர்களால் நரிக்குறவர்கள் அருகில் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்ய முடிகின்றது? எத்தனை பேர்களால் ஒரு நீக்ரோவின் கைபிடித்து குழுக்கும்பொழுது மனம் சலனம் இல்லாமல் இருக்க முடிகின்றது? எத்தனை மனிதர்களால் சக நண்பனின் புண்ணிற்கு மருந்திட முடிகின்றது? எத்தனை பேர்கள் முதியோர்களின் தோலினை பார்த்து முகம் சுழிக்காமல் இருக்க முடிகின்றது? இதெல்லாம் முடியாத நம்மால்தான் இந்த சமூக அவலைங்களை களை எடுக்க முடியும் என்று நம்புகின்றோமா? நமக்கு இழைக்கப்படும் அவலங்களை வேரெடுக்க குரலெழுப்பும் அதே சமயம் நம்மால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் அவலங்களை கண்டுகொள்கின்றோமா? சிறிதுதேனும் எண்ணிப்பாருங்கள் மக்களே!....
////

அருமையான வரிகள் நண்பா

priyamudanprabu said...

///
நம்மை ஒருவர் அடக்கியாழும் பொழுது நமக்கு வலி எடுப்பது உண்மை என்றால் அதே போல நாம் நமக்கு கீழ் உள்ளவர்களை ஆளுமை படுத்தும்பொழுது அவர்களுக்கும் அதே வலிதான் இருக்கும் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் இல்லாமல் எந்த மாற்றத்தையும் இந்த சமூகத்தில் உருவாக்கிட முடியாது......

///

சரியா சொன்னீர்கள்

priyamudanprabu said...

100 பின் தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

அருமையான வரிகள் நண்பா

அன்புடன் அருணா said...

நல்ல பதிவு! பூங்கொத்து!

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன் பிரபு said...
100 பின் தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க பிரபு

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...
அருமையான வரிகள் நண்பா//

வாங்க நண்பா,... மிக்க நன்றிபா,...

ஆ.ஞானசேகரன் said...

// அன்புடன் அருணா said...
நல்ல பதிவு! பூங்கொத்து!//

மகிழ்ச்சி ,. மிக்க நன்றிங்க அருணா

thiyaa said...

குட் பிளக் பதிவுக்கு நல்வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//தியாவின் பேனா said...
குட் பிளக் பதிவுக்கு நல்வாழ்த்துகள்//

மிக்க நன்றிங்க‌

கலகலப்ரியா said...

//நிற்க - கருத்து அருமை - சிந்தனை அருமை//

அதே..! :)

ஆ.ஞானசேகரன் said...

[[ கலகலப்ரியா said...
//நிற்க - கருத்து அருமை - சிந்தனை அருமை//

அதே..! :)]]

ப்ரியா.... வாங்க வணக்கம்,.. நன்றிமா!

S.A. நவாஸுதீன் said...

//நம்மை ஒருவர் அடக்கியாழும் பொழுது நமக்கு வலி எடுப்பது உண்மை என்றால் அதே போல நாம் நமக்கு கீழ் உள்ளவர்களை ஆளுமை படுத்தும்பொழுது அவர்களுக்கும் அதே வலிதான் இருக்கும் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் இல்லாமல் எந்த மாற்றத்தையும் இந்த சமூகத்தில் உருவாக்கிட முடியாது......//

அருமையான இடுகை நண்பா. பாராட்டுக்கள்

பின்னோக்கி said...

அருமையான விஷயம். சமூகத்திற்கு உதவுகிற விஷயங்களை எழுதுகிறீர்கள்.

ஆ.ஞானசேகரன் said...

[[S.A. நவாஸுதீன் said...

//நம்மை ஒருவர் அடக்கியாழும் பொழுது நமக்கு வலி எடுப்பது உண்மை என்றால் அதே போல நாம் நமக்கு கீழ் உள்ளவர்களை ஆளுமை படுத்தும்பொழுது அவர்களுக்கும் அதே வலிதான் இருக்கும் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் இல்லாமல் எந்த மாற்றத்தையும் இந்த சமூகத்தில் உருவாக்கிட முடியாது......//

அருமையான இடுகை நண்பா. பாராட்டுக்கள்]]

வணக்கம் நண்பா,.. மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// பின்னோக்கி said...

அருமையான விஷயம். சமூகத்திற்கு உதவுகிற விஷயங்களை எழுதுகிறீர்கள்.//

வாங்க பின்னோக்கி... நன்றிங்க

ஹேமா said...

நல்ல தேவையான பகிர்வு ஞானம்.நான் பார்த்தவரை வெள்ளைக்காரனில் இந்தப் பாகுபாடுகள் இல்லவே இல்லை.

எங்கள் நாடுகளில்,ஏன் எங்கள் மக்கள் வெளிநாடுகளுக்கும்கூட சாதி சமயச் சங்கதிகள் பிரிவினை படிப்பில் தொழிலில்கூட உயர்மட்டம் என்று கையோடு கொண்டு வந்துதான் காலத்தைக் கடத்துகிறார்கள்.என்ன செய்யலாம் இவர்களை !

சில சமயம் எங்கள் வருங்காலக் குழந்தைகள் இதிலிருந்து விடுபட வாய்ப்பு இருக்கு.அதையும் சில பெற்றோர்கள் மூளைச்சலவை பண்ணுகிறார்களே !

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
நல்ல தேவையான பகிர்வு ஞானம்.நான் பார்த்தவரை வெள்ளைக்காரனில் இந்தப் பாகுபாடுகள் இல்லவே இல்லை.//

ஆமாம் ஹேமா,... வெள்ளைக்காரனால் மாறமுடிகின்றது. இத்துபோன நம்மால்தான் மாறமுடியவில்லை. வரட்டு கெளரவம் இவர்களை இன்னும் அப்படியே வைத்துவிடுகின்றது.

//எங்கள் நாடுகளில்,ஏன் எங்கள் மக்கள் வெளிநாடுகளுக்கும்கூட சாதி சமயச் சங்கதிகள் பிரிவினை படிப்பில் தொழிலில்கூட உயர்மட்டம் என்று கையோடு கொண்டு வந்துதான் காலத்தைக் கடத்துகிறார்கள்.என்ன செய்யலாம் இவர்களை !//
தவறாக என்ன வேண்டாம் இலங்கை தமிழர்களிடம் சாதி பாகுபாடு அதிகம் இருப்பதை பார்த்துள்ளேன். இதில் யாழ்பான மக்களிடம் குறைவு.

//சில சமயம் எங்கள் வருங்காலக் குழந்தைகள் இதிலிருந்து விடுபட வாய்ப்பு இருக்கு.அதையும் சில பெற்றோர்கள் மூளைச்சலவை பண்ணுகிறார்களே !//

இதில் மூளை சலவைதான் படுகேவலமான விடயம். உணர்வுகளால் நாம் மாற்றம் காணும் நாள் இருக்கின்றதாக நம்புவோம்.

நல்ல பகிர்வுக்கு நன்றி ஹேமா

சொல்லரசன் said...

//உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது...//

உண்மைதான் ஞான்ஸ்,வாழ்த்துகள் 100 பேரை கவர்ந்தமைக்கு

RAMYA said...

100 பின் தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள் சேகர்!!

RAMYA said...

//
உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது...
//

ஆமாம் சேகர் நீங்க கூறி இருப்பது அக்மார்க் உண்மை!

சரியா சொல்லி இருக்கீங்க!

RAMYA said...

நல்ல பகிர்வு, நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க!

நல்ல மனம் உங்களுக்கு! வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

[[ சொல்லரசன் said...
//உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது...//

உண்மைதான் ஞான்ஸ்,வாழ்த்துகள் 100 பேரை கவர்ந்தமைக்கு]]

வணக்கம் சொல்லரசன்,
மிக்க நன்றிங்க... அடிக்கடி வந்துவிட்டு போங்க..

ஆ.ஞானசேகரன் said...

[[RAMYA said...
100 பின் தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள் சேகர்!!]]

வாங்க ரம்யா,.. மிக்க நன்றிங்க‌

[[//
உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது...
//

ஆமாம் சேகர் நீங்க கூறி இருப்பது அக்மார்க் உண்மை!

சரியா சொல்லி இருக்கீங்க!]]

மீண்டும் நன்றுங்க... அடிக்கடி வாங்க நல்லத சொல்லுங்க.. வெலைப்பளு என்று நினைக்கின்றேன்.. வேலைக்கு பின் வாருங்கள்

[[
நல்ல பகிர்வு, நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க!

நல்ல மனம் உங்களுக்கு! வாழ்த்துக்கள்!]]

மிக்க மகிச்சிங்க ரம்யா

கிரி said...

//சிங்கபூரில் சில சீனர்கள் இந்தியர்கள் அருகில் உட்கார சங்கடப்படுகின்றார்கள்( தற்பொழுது குறைந்துள்ளது, இல்லை என்று சொல்லும் அளவிற்கு என்றால் சிங்கப்பூர் அரசிற்கு நன்றி சொல்ல வேண்டும்) என்று பார்த்த பொழுது முதலில் கோபம் வந்தாலும் எனக்குள் இருந்த அந்த சம்பவம் என்னை செம்மைப்படுத்தியது//

என்னைக்கூட!

இங்கே சீனர்கள் செய்வதை (புறக்கணிப்பதை) பார்க்கும் போது நரிக்குறவர்களுக்கும் இப்படித்தானே மனம் பாடுபடும் என்று நன்றாக அனுபவபூர்வமாக உணரமுடிகிறது.

நான் சென்னையில் இருந்த போது நகர பேருந்தில் ஒரு பெண் (ஐயர் பெண் என்று நினைக்கிறேன்) அருகே ஒரு நரிக்குறவ பெண் உட்கார்ந்தவுடன் அந்த பெண் அதிர்ந்து நரிக்குறவ பெண்ணை பார்த்து எதோ கூறி எழுந்து நின்று விட்டார் அத்தனை பேரின் முன்னால்.

இதனால் கடும் அவமானமடைந்த அந்த நரிக்குறவ பெண் தாங்கமுடியாமல் அழுதது இன்றும் என் மனதில் அப்படியே இருக்கிறது :-(

(அவர்கள் சுத்தம் இல்லாமல் இருப்பதும் ஒரு சிலர் வெறுக்க காரணம்)

ஆ.ஞானசேகரன் said...

[[ கிரி said...

]]

வணக்கம் கிரி,...
உங்களின் அனுபவ பகிர்வுக்கு மிக்க நன்றிங்க.. அப்படிபட்ட மனநிலை பாதிப்பு நமக்கும் கிடத்த வலி உணரமுடிகின்றது. நீங்கள் சொல்வதை போல நரி குறவர்கள் சுத்தம் இல்லை என்ற காரணம் இருந்தாலும் அவர்களின் கலாச்சாரமும் ஒரு காரணம்.(தற்பொழுது நல்ல மாற்றம் காணமுடிகின்றதது படித்தவர்களும் நிறையவே உள்ளார்கள் அதற்கு கிருஸ்துவ குழுவினர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.)

நம்மை பார்த்து சீனர்கள் சொல்லும் காரணமும் இதே சுத்தமின்மைதான். அவர்கள் கண்ணில் நாம் அப்படி... எது எப்படியோ உணர்வுகளுக்கு மதிப்பளிக்க எப்பொழுது மனிதன் கற்றுக்கொள்ள போகின்றானோ??????

நசரேயன் said...

நல்ல அலசல்

ஆ.ஞானசேகரன் said...

// நசரேயன் said...
நல்ல அலசல்//

மிக்க நன்றி நண்பா

Muniappan Pakkangal said...

Equality and tolerance,ithu eppo nadakkum Gnanseharan? Unga sinthanaihal nalla irukku.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...

Equality and tolerance,ithu eppo nadakkum Gnanseharan? Unga sinthanaihal nalla irukku.//

வணக்கம் சார்..
நடந்தா நல்லது, அது ஒரு கனவுதான் இருந்தாலும் இன்னும் குறைந்தால் நல்லது.

உங்களின் பாராட்டுகள் நல்ல ஊக்கத்தை கொடுகின்றது. மிக்க நன்றி சார்

"உழவன்" "Uzhavan" said...

நல்ல நியாயமான பிரச்சனையை அலசியிருக்கிறீர்கள். அருமையான கட்டுரை

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...

நல்ல நியாயமான பிரச்சனையை அலசியிருக்கிறீர்கள். அருமையான கட்டுரை//

வாங்க உழவன் மிக்க நன்றிங்க

ராமலக்ஷ்மி said...

//நம்மை ஒருவர் அடக்கியாழும் பொழுது நமக்கு வலி எடுப்பது உண்மை என்றால் அதே போல நாம் நமக்கு கீழ் உள்ளவர்களை ஆளுமை படுத்தும்பொழுது அவர்களுக்கும் அதே வலிதான் இருக்கும் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் இல்லாமல் எந்த மாற்றத்தையும் இந்த சமூகத்தில் உருவாக்கிட முடியாது......

உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது...//

மிகச் சரி ஞானசேகரன். நல்ல இடுகை.

தொடருபவர் எண்ணிக்கை சதம் தாண்டியிருப்பதற்கும் என் நல்வாழ்த்துக்கள்!

உமா said...

மிக அழகா சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//உமா said...

மிக அழகா சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//

வணக்கம் உமா, மிக்க நன்றிங்க