ஓடுகின்ற பேருந்திலிருந்து இறங்கினால் நாமும் சிறிது தூரம் ஓடிய பின்னர்தான் நிற்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே பேருந்தின் வேகம் அதிகமாக இருந்தால் நம்மால் இறங்க முடியுமா?
நாம் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் புகைவண்டியில் பிரயாணம் செய்துக்கொண்டுள்ளோம். புகைவண்டியுடன் நாமும் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் வேகத்தை நம்மால் உணரமுடிவதில்லை ஏன்?
அதே புகைவண்டியில் உற்கார்ந்த நிலையில் ஒரு ஆப்பிளை எடுத்து மேலே தூக்கிப்போட்டு பிடிக்கின்றோம். நாம் புகைவண்டியுடன் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக்கொண்டுள்ளோம், ஆனால் ஆப்பிளை தூக்கிப்போடும் பொழுது புகைவண்டிக்கும் ஆப்பிளுக்கும் தொடர்பில்லை அப்படியிருந்தும் ஆப்பிள் நம் கையை வந்தடைவது எப்படி? ஆப்பிளை 80 கிலோமீட்டர் வேகத்திலா தூக்கிபோட்டோம்?
அதே புகைவண்டியில் பிரயாணம் செய்யும் பொழுது நம் மேல் ஒரு "ஈ" உற்காருகின்றது நாம் அதை விரட்டினால் பக்கத்தில் உள்ளவரிடம் சென்று உட்காருகின்றது. "ஈ " 80 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தா பக்கத்தில் உள்ளவரிடம் சென்றடைகின்றது?...
ஒரு விண்கலம் பூமிலிருந்து 380 கிலோமீட்டர் உயரத்தில் பூமியை சுற்றிவரும்பொழுது அந்த விண்கலம் 27,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகின்றது. விண்கலத்தில் பயணம் செய்யும் விண்வெளி வீரர் விண்கலத்திலிருந்து வெளியே வர முற்பட்டால் அவரின் நிலை என்ன?அப்படி சில சமயம் பணியின் காரணமாக விண்வெளி வீரர்கள் வெளியில் வருவதும் உண்டு அவற்றிக்கு விண்வெளி உலா என்று சொல்கின்றனர். முதல் முதலில் ரஷ்ய வீரர் அலெக்சேய் லியானோவ் என்பவர் 1965 ல் இந்த சாதனையை நிகழ்த்தினார். அதன் பிறகு பலர் இந்த உலாவில் ஈடுபடுகின்றனர். விண்வெளி வீரர் விண்கலத்திலுருந்து வெளியே வந்தாலும் அவரும் ஒரு விண்கலம் போல அதே வேகத்தில் பூமியை சுற்றுவார். மாறாக பூமியை நோக்கி கீழே விழமாட்டார். விண்வெளி உலாவின் போது வீரர்கள் அதற்கான சிறப்பு உடை அணிந்திருப்பார்கள். அதே போல் விண்கலத்திற்கும் அவருக்கும் நீண்ட குழாயுடன் இணைந்தவராக இருப்பார். சில சமயம் இணைப்பு இல்லாமலும் செல்வதும் உண்டு அதற்காக ஒரு அழுத்தமான காற்று அடைக்கப்பட்ட சிலிண்டரை தன் முதுகில் கட்டி வைத்துருப்பார்கள். அந்த சிலிண்டரில் சிறு துளை வழியாக காற்றை பீச்சி வலது, இடது என போகவேண்டிய இடத்திற்கு செல்கின்றனர். மேலும் சுவாசக் காற்றையும் வைத்துருப்பார்.
விண்வெளியில் வீண்வெளி வீரர்களுக்கு கால்களிருந்தும் நடக்க முடிவதில்லையே ஏன்? பூமியில் நடப்பதற்கு கால் மட்டும் போதுமா? தரையில் எண்ணெய் கொட்டியிருந்தால் அவற்றில் மேல் நடக்க முடிவதில்லை ஏன்?
இது போன்ற சிந்தனைகள் வந்தாலும் வரலாம்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.