
ஆதி மனிதன் கொண்டுவந்த எத்தனையோ பழக்கங்கள் நம்மை விட்டு விழகினாலும், கடவுளும் கடவுளைப்பற்றிய நம்பிக்கையும் நின்றுவிடவில்லை. உண்மையில் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? ம்ம்ம்ம்... இருக்கின்றார் மக்களின் மனங்களில் இருக்கின்றார். மக்கள் நம்பும் நம்பிக்கையில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றார். இதன் தொடர்புள்ள மற்றொரு என் இடுகை கடவுள் நம்பிக்கையில் ஓர் அழுவுனி ஆட்டம்...
மெற்கண்ட சுட்டியையும் படித்துவிட்டு வந்திருப்பீர்கள், நீங்களே சொல்லுங்கள் கடவுள் வாழ்கின்றாரா? இல்லையா? அதற்கு முன் எல்லொருக்கும் தெரிந்த ஒரு சிறிய கதை. ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் சீடர்களுக்கு சொன்ன கதைகளில் இதுவும் ஒன்று. குரு தம் சீடர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கின்றார். அப்பொழுது சீடர்களிடம் சில அறிவுரைகளையும் சொல்கின்றார். " நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வைக்கவேண்டும் ஏனெனில் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் இருக்கின்றார் எனவே அந்த உயிர்களிடம் அன்பு வைப்பவர்கள் கடவுளிடம் அன்பானவர்களாக இருப்பார்கள்" என்றார். சீடர்களும் தங்களுக்கு தெரிந்தவரை தலையை ஆட்டிவைத்தார்கள். குருகுலத்திலிருந்து கோவில் சிறிது தொலைவில் இருந்தது. சீடர்கள் அனைவரும் காலையில் குளித்துவிட்டு கோவிலுக்கு செல்கின்றார்கள். அப்பொழுது எதிரில் ஒரு யானைப்பாகன் " ஓடுங்கள்... ஓடுகங்கள் யானை மதம் கொண்டு வருகின்றது " என்று சொல்லிக்கொண்டே ஓடுகின்றான். எல்லா சீடர்களும் அதை கேட்டதும் ஓடிவிடுகின்றார்கள். ஆனால் ஒருவன் மட்டும் ஓடாமல் இருந்தான், மதம் கொண்ட யானையும் வந்தது யானை அவனை ஒரு சுற்று சுற்றி வீசி எரிந்தது.
மயக்க நிலையில் அவனை மற்ற சீடர்கள் தம் குருவிடம் தூக்கி சென்றார்கள். குருவும் அவனுக்கு வைத்தியம் செய்தார், அவன் மயக்க நிலை தெளிந்ததும் குரு அவனிடம் " யானை வருவதை அறிந்ததும் எல்லா மாணவர்களும் ஒடிவிட்டார்கள் ஏன் நீ மட்டும் ஓடவில்லை" என்று கேட்டார். அவன் " குருவே நீங்கள்தான் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வாழ்கின்றார் அவைகளிடம் அன்பு செய்யுங்கள் என்று சொன்னீர்கள் அதுதான் நான் ஓடவில்லை" என்றான்.... அதற்கு குரு " யானை பாகன் எச்சரிக்கை செய்தான் இல்லையா! அவனிடத்திலும் கடவுள் இருக்கின்றாரே, ஏன் அவன் சொல்வதை ஏற்கவில்லை" என்று கேட்டார்.
மேற்கண்ட கதையில் இப்படியும் சொல்லலாம்: "இருக்கின்ற கடவுள் அந்த யானைக்கு மதம் பிடிக்காமல் வைத்திருக்கலாமே?"
அதேபோல் கடவுளின் நம்பிக்கையில் இருக்கும் வாதங்கள் நின்றுவிடவில்லை. வாதங்களில் எந்த அளவிற்கு உண்மை உணரப்படுகின்றதோ. அந்த அளவிற்கு எதிர்வாதங்களிலும் உண்மை இருக்கதான் செய்கின்றது. வெறும் வாத சாட்சியங்களை வைத்துக்கொண்டு கடவுள் வாழ்கின்றார் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
என்னை பொருத்தவரை மனிதனின் தேடல்களும் ஆசைகளும் இருக்கும் வரை கடவுளின் மேல் இருக்கும் நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட மனிதன் மனங்களில் அவன் காணாத கடவுள் வாழ்ந்துக்கொண்டே இருக்கின்றார்.
"நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதால் அங்கு எதுவும் இல்லை என்று சொல்லவும் முடியவில்லை. நாம் நம்புவதால் இல்லாத ஒன்று இருக்கு என்றும் சொல்வதிற்கில்லை".... காணாத ஒன்றை நம்பும் மனிதன் காணும் மனிதனிடம் என்று அன்பு வைகின்றானோ அன்றே கடவுள் வாழ்கின்றார்.......
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.