என்னப்பா உலகம் ஒரே அவசர காலமா போச்சு.. காலை எழுந்து நானும் வேலைக்கு கிளம்பனும் மனைவிக்கும் உதவிகளை செய்யனும் மனைவியும் வேலைக்கு போகனும்... குழந்தைகளுக்கு தேவைகளை எல்லாம் செய்யனும். அப்பறம் அலுவலக வேலைகள் எல்லாம் முடிந்தது சாய்காலம் வீடுக்கு சென்றால் ஓய்வே இல்லாமல் மீண்டும் வேலைகள். ம்ம்ம் 24 மணி நேரம் பத்த மாட்டேங்குதே! யாராச்சும் 2 மணி நேரம் அதிகமா வாங்கி கொடுங்கப்பா,... இப்படி பல காலப்பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் மனிதன் வாழ்ந்துக்கொண்டு உள்ளான்.
காலம் என்றால் என்ன? அது யாரால் கொடுக்கப்பட்டது? எப்படி கணகீடப்படுகின்றது?மனிதனில் வாழ்நாளில் காலம் ஒரு அங்கமாகி போய்விட்டது. காலம் மனிதனை துரத்துகின்றதா? அல்லது மனிதன் காலத்தை துரத்துகின்றானா? இன்னும் புரிய வைக்கப்படாத கேள்விகள். ஆனாலும் துரத்தல்கள் நின்றபாடில்லை.
பசித்தது சாப்பிட்டேன், பின்னர் பசி எடுத்ததும் சாப்பிடுகின்றேன், அதன் பிறகு பசி எடுத்தால் சாப்பிடுவேன். இது ஒரு செயல், இந்த செயலுக்கு இடையில் இருப்பதுதான் நேரம் என்று சொல்லப்படுகின்ற காலம். அதாவது ஒரு செயலுக்கும் அடுத்து வரும் செயலுக்கும் இடைப்பட்ட இடைவெளியைதான் காலம் அல்லது நேரம் என்று சொல்லுகின்றோம்.( புரியவில்லை என்றால் மீண்டும் படித்துப் பார்க்கவும்). இப்பொழுது நம்முடைய சிந்தனைக்கு!..... இங்குள்ள செயலை நீங்கி விட்டால் காலத்திற்கு மதிப்பு உள்ளதா? இல்லையா?. ஒரு செயல் நடக்காவிடில் அங்கு காலம் பூஜியமாக்கப்பட்டுள்ளதே. இதிலிருந்து காலம் என்பது இருக்கா? இல்லையா? என்ற கேள்வியும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. இந்த அண்டம் ஆற்றல்களால் நிறப்பட்டுள்ளது. அந்த ஆற்றல்கள் பல இயக்கங்களாக உள்ளது. இந்த இயக்கங்கள் நின்று போனால் காலமும் நேரமும் அர்த்தங்களை கொடுக்காது (காலத்தை கணித்து கொடுக்கப்படும் ஜோசியங்கள் எப்படி சரியாக இருக்கும் என்பதை யோசிக்கவும்). எல்லா இயக்கங்களும் காலத்தினால் இயக்கப்படுகின்றதா? இல்லை இயக்கங்கள் காலத்தால் அளவிடப்படுகின்றதா? இயக்கங்கள் காலத்தால் அளவிடப்படுகின்றது என்பதுதான் சரியாக இருக்கும். இரண்டு புள்ளிகளுக்கிடையில் தூரம் இல்லை என்றால் அளவீடுகளும் இல்லை.
இயக்கங்களின் இடைவெளியில் இருப்பது காலம் என்றால் அதை எப்படி கணக்கிடுவது? சாப்பிடும் செயலை எடுத்துகொண்டால் அதன் இடைவெளி சமபாகங்களாக இல்லை எனவே இவற்றை கணக்கீட முடியாது. சம இடைவெளியில் தொடர் இயங்கங்ளால்தான் காலத்தை கணக்கீட முடியும். சூரியனும் சந்திரனும் காலத்தை அளவிட சமசீர் இயக்கங்களை கொண்டுள்ளன. இவற்றின் இயக்கங்களை வைத்து மனிதன் காலத்தை கணக்கிட்டான். பகல், இரவு என்றும் பின்னர் ஒரு பகல் ஒரு இரவை ஒரு நாள் என்றும் காலக்கணக்கீடுகள் உண்டாக்கப்பட்டன.
காலம் என்பது அண்டத்தின் அடிப்படையான கூறுகள் இவற்றை கணக்கீட முடியும் என்பது ஒரு சிலரின் வாதங்களாக இருந்தாலும் காலம் என்பது மனிதனின் அறிவு கூறுகளால் உருவாக்கப்பட்ட அளவீடுகள் என்று கூறுவதுதான் சரியாகப்படுகின்றது. தொடர் நிகழ்வுகளையும் அவற்றின் இடைவெளியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கால அளவீடுகள் உருவாக்கப்பட்டன. சூரியனின் இயக்கம். பூமியின் சுழற்சி, சந்திரனின் தேய்பிறை வளர்பிறை இவற்றை அடிப்படையாக கொண்டே காலங்கள் அளக்கப்படுகின்றன. மேலும் துள்ளியமாக அளக்க ஊசல்கள் (Pendulum),ஆணுக்கருவில் வெளியாகும் எலக்ட்ரான்களின் இடைவெளி பயன் படுத்தப்படுகின்றது. இதன் அடைப்படையில் கடிகாரங்கள் உருவாகப்பட்டது. ஆரம்பத்தில் மணற்கடிகாரம்,நிழல்க்கடிகாரம் இருந்தாலும் பின்னர் ( pendulum) ஊசல்களின் இயக்கம், குவாட்ஸ் கடிகாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.என்னதான் காலம் நம்மை ஆட்கொண்டாலும் காலத்தை வெல்லுவதைதான் மனிதனும் மனிதனின் முயற்சிகளும் இருக்கின்றன. வேகம் வேகம் என்று கால இடைவெளியை கைகுள் வைப்பதன் விளைவுதான் கைகடிகாரம் என்றே நினைக்கின்றேன்.
மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.
பிடித்திருந்தால் சொல்லுங்கள் இன்னும் வரும்...