_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்
Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Saturday, November 7, 2009

என்னையும் அழைத்த தொடர் விளையாட்டு.....

என்னையும் அழைத்த தொடர் விளையாட்டு....

எப்படியோ பதிவர்கள் சோர்வை போக்கும் விதமாக அவ்வப்பொழுது ஏதாவது ஒரு தொடர் விளையாட்டு வந்துக்கொண்டுதான் இருக்கின்றது. பதிவர்களும் ஆர்வம் குறையாமல் கலந்துக்கொள்வது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு. இதில்
எனக்கு இன்னும் கொஞ்சம் சிந்தனைகள் தூண்டும்படியாக இருந்தால் நல்லாயிருக்குமே என்ற எண்ணங்கள் உண்டு. அதே போல் ஒரு விழிப்புணர்வு கொடுக்கும் தலைப்புகள் இருக்கலாம் என்றே தோன்றுகின்றது. இருப்பினும் பலரின் பார்வையில் ஒரு தலைப்பின் கீழ் பார்க்கும்பொழுது அதுவும் சிறப்பாகதான் இருக்கு. முதலில் இப்படிப்பட்ட தொடரை தவிற்த்து விடலாம் என்ற எண்ணம் தோன்றினாலும் பலரின் கருத்துகளுடன் நம் கருத்து எப்படியிருக்கு என்ற ஆசைகளுடன் நானும் கலந்துக்கொள்கின்றேன்.

நண்பர் உழவன் (Uzhavan) உழவனின் உளறல்கள், வலையுலக தம்பி அன்பு மதி OPEN HEART யும் "தீபாவளி சிறப்பு பதிவு 2009" அழைப்பை கொடுத்துள்ளனர். இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும். எனக்கும் தீபாவளிக்கும் உள்ள தூரம் அதிகம் என்றே நினைக்கின்றேன். பொதுவாக திருவிழாக்களில் ஈடுப்பாடு இல்லாதவனாக இருக்கின்றேன் (தற்பொழுது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுடன் இருப்பதுண்டு). எனவே இங்கு கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பொய்யாகதான் பதில் சொல்லவேண்டி வரும். இருந்தாலும் சிலது உங்களுக்காக நான்ன்ன்ன்ன்ன்ன்......



1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
என்னைப்பற்றி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஏதும் இல்லை. நான் நானாக வாழ்ந்துக்கொண்டுள்ள சாதாரணமானவன். திருச்சியிலிருந்து பிழைப்புக்காக சிங்கப்பூரில் வேலைசெய்துக்கொண்டுள்ளேன். பார்த்ததில் உணர்ந்ததில் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள இந்த வலைப்பூ.....

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
நினைவில் இருக்கும் அளவிற்கு எந்த ஈடுப்பாடும் இல்லை.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
சிங்கப்பூரில்,

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
சிங்கப்பூர் அரசு தீபாவளி கொண்டாடும் விதமாக அரசு விடுமுறை அளித்துள்ளது. பட்டாசுகள் வெடிக்க அரசு தடையுள்ளது ஆனால் மத்தாப்பு மட்டும் கொழுத்தி மகிழலாம். இங்குள்ள ஒரு பகுதி குட்டி இந்தியா (Little India) தீபாவளி சிறப்புக்காக வண்ணத் தோரணங்கள், வண்ண விளக்குகளுடன் பார்க்க சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் இந்த அளவிற்கு இந்திய பண்டிகை சிறப்பாக கொண்டாடுவது ஒரு மகிழ்ச்சியான விடயம்தான்.

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
மன்னிக்கவும், அந்த அளவிற்கு ஈடுப்பாடு இல்லை.

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
நண்பர் வீட்டில் கிடைத்த விருந்தில் பலகாரம் சாப்பிட்டேன்.

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
ஈடுப்பாடு இல்லாததால் தவிற்த்துவிட்டேன்.

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல்நாள் இரவுப்பணி முடிந்ததும் மறுநாள் தூக்கம். முடிந்ததும் நண்பர் அழைப்பில் சிறிது உணவு......

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
வாய்ப்பு கிடைத்தால் செய்வதுண்டு.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
இப்படியே சென்றால் அடுத்த வருடம் தீபாவளி வந்துவிடும் எனவே என்னோடு முடித்துவிட்டேன்.

அடுத்த விளையாட்டுக்கு அழைத்திருப்பவர்கள்
தலைமை ஆசிரியை அருணா அன்புடன் அருணா அவர்களும் நம்ம டாக்டர் தேவன் மாயம் தமிழ்த்துளி அவர்களும் பிடித்ததும் பிடிக்காததும் என்ற தலைப்பின் கீழ் அழைத்துள்ளனர். பிடிக்காதவர்களை சொல்லும் அளவிற்கு என்னிடம் துணிச்சல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதைவிட பிடிக்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு என்னிடம் புரிதலும் இல்லை என்று சொல்லிக்கொள்ள துணிச்சல் இருக்கு. இங்கு கொடுக்கப்பட்ட வினாக்கள் என்னை யோச்சிக்க வைக்கவில்லை. உண்மையில் எதைப்பற்றியும் சிந்தனை என்னிடம் முழுமையில்லை. நான் பார்த்த, உணர்ந்த விடயங்களை உங்களுடன் பகிந்துக்கொள்ளத்தான் இந்த வலைப்பூ தவிற என்னுடை திறமையை வெளிப்படுத்த இல்லை. இசை, இலக்கியம்,கலை போன்றதுறைகளில் வியாக்கியானம் சொல்லும் அளவிற்கு என்னிடம் ஆர்வமும் ஞானமும் இல்லை என்பது எனக்கு தெரியும். எனவே பிடித்தது பிடிக்காதது என்று சொல்லும் அளவிற்கு என்னால் செல்ல முடிவில்லை. இருந்தாலும் உங்களின் அன்பின் காரணமாக எல்லோரையும் போல பிடித்தவைகளை சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணங்களுடன் ஆ.ஞானசேகரன்.


1.அரசியல் தலைவர் : வம்பில் மாட்டிக்கொள்ள முடியாது...
கலைஞரிடம் பிடித்தது: தினம் ஒரு அறிக்கையிட்டு தொண்டர்களை அன்பில் கட்டிவைப்பது.
பிடிக்காதது: தினம் ஒரு அறிக்கையிட்டு மக்களை ஏமாற்றுவது.

செல்லி ஜெயலலிதாவிடம் பிடித்தது: அரசியலில் இருக்கும் மன உறுதி
பிடிக்காதது: மக்களுக்கு நல்லது செய்யும் வாய்ப்புகள் இருந்தும் செய்யாத உறுதி


2.எழுத்தாளர்:
எழுத்துக்களை பிடிக்கும், குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு படிக்கவில்லை.

3.கவிஞர்:
மக்களைப்பற்றி சிந்தித்ததால் பட்டுக்கொட்டை கல்யாணசுந்தரம்.

4.இயக்குனர்:
பாக்கியராஜின் திரைக்கதை, இயக்கம் பற்றிய பாதிப்பு எனக்குண்டு.. அதன் வரிசையில் வரும் இயக்கங்கள் பிடிக்கும் தொடர்பு படுத்தி பார்ப்பதுண்டு. கமல் இயக்கிய விருமாண்டி பட இயக்கம் பாக்கியராஜ் பாதிப்பு இருப்பதாக தெரியும்.

5.நடிகர்:
பிடித்த படத்தில் நடித்த நடிகரை பிடிக்கும். பிடித்த படம் தனியாக சொல்லமுடியவில்லை.

6.நடிகை:
அழகான..........

7.இசையமைப்பாளர்:
பிடித்த இசை தாலாட்டு....... தாலாட்டு இசைப்பவர்

இந்த தொடர் அனேகமாக எல்லோரையும் அடைந்துவிட்டது. இருந்தாலும் ஒரு சிலரை அழைக்கலாம் என்ற எண்ணங்கள்

1.வானம் வெளித்த பின்னும் "ஹேமா".

2.உழவனின் உள்றல்கள் "உழவன்"

3.
Globetrotter "மலர்"

4.என் கனவில் தென்பட்டது "நசரேயன்"

5.பின்னோக்கி "பின்னோக்கி"


அன்புடன்
ஆ.ஞானசேகரன்
.

Sunday, August 23, 2009

என்னை அழைத்த தொடர் இடுகை...

என்னை அழைத்த தொடர் இடுகை...

ஹேமா அவர்கள் என் இடுகைகளை படித்துவிட்டு என்றுமே பாராட்ட தயங்காத தோழி. வாங்க உப்புமடச் சந்திக்கு கதைப் பேசலாம் என்று அழைத்து என்னை இந்த தொடர் பதிவுக்கு வித்திட்டார். அழகு,காதல்,பணம், கடவுள்? இவைகளைப் பற்றிய உங்களின் நினையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. முதலில் அந்த ஐவரை அழைத்துவிட்டு பின்னர் அழகு, காதல்,பணம், கடவுள்? இவைகளைப் பற்றிய என் நிலையில் நான் நினைப்பதையும் சொல்லி விடுகின்றேன்.

1.அகநாழிகை-பொன்.வாசுதேவன்
2.சில கவிதைகள்-உமா
3.லக லக லக- நையாண்டி நைனா
4.அன்புடன் அருணா-அருணா
5.அடர் கருப்பு-காமராஜ்


முதலில் இந்த தொடருக்கு அழைப்பு விடுத்த தோழி ஹேமாவிற்கு வணக்கங்களும் நன்றியும். முதலில் அழகு, காதல், பணம், கடவுள் என்று பார்க்கின்றபொழுது மிக எளிதாகதான் தெரிந்தது பின்னர் அதை பற்றி யோசிக்கின்றபொழுது அதனின் அழுத்தமும் தேவையும் புரிய ஆரம்பித்துவிடுகின்றது. இவற்றை தனியாக பார்ப்பதைவிட அவற்றின் தலையில் அன்பு என்ற மந்திரத்தை வைத்து பார்த்தால்தான் அவற்றின் உண்மை நிலை புரியும். அழகின் தலையில் அன்பை வைக்கவேண்டும், காதல் தலையில் அன்பை வைக்கவேண்டும், பணத்தின் தலையில் அன்பை வைக்கவேண்டும், கடவுளின் தலையில் அன்பை வைக்கவேண்டும். இவற்றிலிருந்து அந்த அன்பை எடுத்துவிட்டு அவற்றின் மேல் அன்பு வைத்தோமேயானால் அதன் உண்மை திரிந்தே போய்விடுகின்றதை நம்மால் உணரமுடியும்.

அழகு: ஒரு உணவிற்கு சுவை என்பது அந்த உணவில் இல்லை நாம் சாப்பிடும் பொழுது நாவில் உணரப்படுகின்றது. எப்படி சுவை என்பது உணவில் இல்லாமல் உணரும் நாவில் உள்ளதோ அதைப் போல அழகு என்பதும் அந்த உருவத்தில் இல்லை பார்த்து சுவைக்கும் கண்களிதான் இருக்கின்றது. உலக அழகியாக இருந்தாலும் அன்பினால் உணரமுடிந்தால்தான் உண்மையான நிரந்தரமான அழகாக இருக்கும். பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துர்நாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும். அதே போல என்னதான் அழகானவளா, அழகானவணா இருந்தாலும் அவர்களிடத்தில் அன்பு இல்லை என்றால் நம்முடைய கால் தூசிக்கு சமமானதே.

காதல்:
காலை முதல் மாலை வரை..
எப்பொழுதும் அவள்(ன்) நினைவுகள்தான்.
கண்ணுரங்கும் பொழுதிலும்..
அப்போழுதும் அவள்(ன்) நினைவுகள்தான்...
நான் நடந்த கால் சுவடுகளில்..
அவள்(ன்) நினைவுகளாய் பார்க்கின்றேன்..
ஓ நான் அவளை(னை) காதல் கோண்டேனோ!....

காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்களை விட கல்யாணம் செய்து காதலிப்பவர்களிடம் அதிகம் அன்பு இருப்பதுபோல நான் உணர்கின்றேன். நானும் கல்யாணம் செய்து காதலிப்பவன் என்பதாலோ என்னவோ!. காதல் இல்லா உயிரும் இல்லை அதைவிட அன்பில்லா காதலுமில்லை. வெறும் காதல் மட்டும் வீடு வந்து சேராது, வீதியிலேயே போய்விடும். காதலுக்காக வாழ்கின்றோம் என்று சொல்வதை விட காதலில் வாழ்கின்றோம் என்பதுதான் நிஜம்.

பணம்: பொய்யான உருவதிற்கு மதிப்பையும் கொடுத்து அதன் பின்னால் நாம் செல்கின்றோம் என்பது ஒரு வேடிக்கையான விடயம்தான். பண மதிப்பை பற்றிய முந்தய இடுகை சாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு. பணம் எல்லோரிடம் இருக்கலாம் பண இருப்பவர்கள் மதிக்கப்படலாம் ஆனால் பணம் எங்கே மதிக்கப்படுகின்றது என்றால் அது அன்பு உள்ளவர்களிடம் தான்.

கடவுள்: என்னை பொருத்தவரை கடவுள் என்பது ஒரு நிருபிக்க முடியாத ஒரு கற்பனை, அது ஒரு அலுவுனியாட்டம். இந்த அழுவுனியாட்டம் பற்றிய என் முந்தய இடுகை கடவுள் நம்பிக்கையில் ஓர் அழுவுனி ஆட்டம். கடவுளை பற்றிய நிருபணமும் இல்லை அதே போல் இல்லை என்பதற்கும் நிருபணமும் இல்லை. கடவுளை சொல்லி ஏமாற்றுவர்களை விட இல்லை என்று சும்மா இருப்பதே மேல். கடவுள் இருப்பதாகவே வைத்துக்கொண்டால் இத்தனை மதங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் சண்டைகளுக்கு வாய்ப்புகள் இல்லை. கடவுள் இருந்துவிட்டு போகட்டும் அது எழைகளின் நீதி மன்றம். மதம்பிடித்த மதங்கள் அழிந்துபோகட்டும். அன்புக்கு நிகரான கடவுளை பார்த்தவர்கள் சொல்லுங்களேன்.

என்றும் உங்களுடன்.
ஆ.ஞானசேகரன்