1947 ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த சமையம் பண்டித் ஜவர்கலால் நேரு இந்தியாவில் பொருளியல் நிலைமை போதிய அளவு இல்லாததால் நாட்டு மக்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் கோரிகையிட்டார், " கல்வி மற்றும் மருத்துவத்திற்கு சேவைகள் செய்யுங்கள்" என்றார். அதன்படி சில அமைப்புகள் தனது சேவையை செய்தது. இதில் முக்கிய பங்கழித்தது கிருஸ்துவ அமைப்புதான் என்பது பாராட்டகூடியது. மருத்தவத்திற்கும் கல்விக்கும் இருந்த சேவை மனப்பன்மை இன்று இல்லை என்பது வருத்தப்படகூடிய ஒன்று. இன்றொ கல்வியும், மருத்துவமும் காசு சம்பாரிக்கும் இடமாக இருக்கின்றது.
மத்திய அரசின் முக்கிய திட்டமான அவசர சேவை ஆம்புலன் 108 அந்த வகையில் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்களின் சேவை மெச்சும்படியாக உள்ளது. அதை முறைப்படி அமுல்படுத்தும் தமிழக அரசுக்கும் ஒரு சலூட்...... ஒவ்வொரு அம்புலன்ஸிலும் பயிற்சிப்பெற்ற செவிலியர்கள் இருப்பதும் அவர்களுக்கு சமூக மனப்பாண்மை மற்றும் சேவை மனப்பாண்மை இருப்பது பாராட்டாமல் இருக்கமுடியாது. நூற்றுக்கு மேற்பட்ட பிரசவம் ஆம்புலஸிலேயே நடந்துள்ளது. அந்த அளவிற்கு வண்டியில் எல்லா வசதிகளும் பயிற்சி பெற்ற செவிலியர்களும் இருப்பது பாராட்டியே ஆகவேண்டும்...
மறைந்துவரும் சேவை மனப்பாண்மை இவர்களால் துளிர்விட்டுக்கொண்டுள்ளது. இவரைகளை பாராட்டுவதின் மூலம் இன்னும் இதுபோன்ற அமைப்புகள் வளர வாய்ப்பழிப்போம்...... இதில் முக்கியமாக நான் பார்த்தது கையூட்டும், அன்பளிப்பும் இவர்கள் எதிர்ப்பாக்கவில்லை.........
நமது நண்பரும் பதிவருமான கோவை சக்திக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது , சென்னை Viveka Educatinal & Charitable trust மூலமாக திரு பொன் பரமகுரு M.A, B.L, I.P.S அவர்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
நண்பர் சக்தி மென்மேலும் சிறப்பாக சேவைகள் செய்ய வாழ்த்துவதுடன் பாராட்டுகளும் சொல்வோம். நம்முடைய பாராட்டுகள் அவரை செம்மைப்படுத்தும் என்று நம்புகின்றேன். நண்பர்களே! வாழ்த்துங்கள் அவரை.......
அன்று வழங்கப்பட்ட விருதுவின் புகைப்படமும்,... அவருக்கு விருது வழங்கும் நிகழ்வும் புகைப்படங்களாக பதிந்துள்ளேன்...
நான் ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து விமானம் வழியாக சென்னைக்கு ஆப்பில் பழம் எடுத்து வந்தேன். சுங்க அதிகாரிகள் அவற்றை பார்த்துவிட்டு " சார் பழத்தை சாப்பிட்டதும் விதைகளை எரித்து விடுங்கள்" என்று கூறினார். பின்னர் அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் " நம் நாட்டின் நலன் கருதி எரித்து விடுங்கள் நம் நாட்டு சூழலை கெடுத்துவிடும் அதே போல நம் நாட்டின் தனி தன்மையையும் பாழ்படும் என்றார்". அவர் கூறிய விளக்கம் என்னை சிந்திக்க வைத்தது. அன்று முதல் நான் பழங்களை எடுத்து வருவதில்லை. ( இன்று உலகமயமாக்கலில் எல்லாம் கலந்துவிட்டது என்பது ஒரு வருத்தமான விடயம். இந்திய நாட்டின் தனி தன்மையும் அழிந்தே வருகின்றது என்பதும் உண்மை).
அதே போலதான் வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள், நம் நாட்டு நாய்களின் தனித்தன்மையை அழிக்கும் நிலையில் உள்ளது. நம் முன்னோர்கள் நாய்களை வேட்டைக்காகவும், காவலுக்காகவும் மேலும் அழகுக்காகவும் செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார்கள். அதற்கான ஆதாரங்கள் பழங்கால கல்வெட்டுகளில் காணமுடிகின்றது. சிந்து சமவெளி மக்கள் நாய்களை தங்களுடன் வளர்த்து வந்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.
நமது மன்னர்கள் நாய்களை வேட்டைக்காகவும் காவலுக்காகவும் வளர்த்து வந்துள்ளார்கள். அப்படி மன்னர்கள் வழிவந்த நாய்களில் ஒன்று ராஜபாளையம் நாய்கள். அப்படி அரிகிவரும் நாய் இனத்தை பாதுக்காக்கும் எண்ணம் இல்லாத நமது அரசு, வெளிநாடுகளிருந்து நாய்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கின்றது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நாய் விருது காட்சியில் சிலர் அதற்கான எதிர்ப்பையும் முன் வைத்தார்கள்.
ஆதி மனிதன் காடுகளின் சுற்றி திரிந்து கண்டதை திண்று வாழ்ந்த காலங்களுக்கு பின் என்று விவசாயம் செய்ய கற்றுக்கொண்டானோ அன்று முதல் தனித்தனி குழுக்காளாக வாழ ஆரம்பித்தான். அப்பொழுது தன் குழுவில் சேர்த்துக்கொண்ட முதல் பிராணி நாய்தான் என்றும் சொல்லப்படுகின்றது.
வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்களுக்கு லட்சகணக்கில் செலவு செய்கின்றார்கள். இப்படிப்பட்ட நாய்களை வளர்ப்பதால் ஒரு அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றார்கள். அதற்காக வெளிநாட்டு பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள். அந்த நாய்களுக்கு பயிற்சி கொடுக்க சிறப்பு பணியாளர்களும் உள்ளார்கள்.
நம்நாட்டில் சிறப்புமிக்க நாய்கள் இருக்கின்றது. அப்படிபட்ட அரிய நாய்கள் இன்று கலப்பினங்களாக இருக்கின்றது. கலப்பினங்களின் நன்மைகள் சில நேரங்களில் இருக்கலாம் ஆனால் அந்த நாயின் தனிதன்மை கெட்டுபோகும். வெளிநாடுகளிலிருந்து நாய்களை இறக்குமதி செய்யும் எண்ணங்களை விட்டுவிட்டு அரிகிவரும் நம்நாட்டு நாய்களை பாதுகாக்கலாமே!. ஒருவகை இந்திய நாய்களுக்கு ஆஸ்திரியாவில் மதிப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. அங்கு விவசாயம் செய்பவர்கள் வளர்க்கின்றார்களாம்.
அரிகிவரும் நாய் இனத்தை கண்டுபிடித்து பாதுகாப்போம்... வெளிநாட்டு நாய்களின் மேல் இருக்கும் மோகத்தை விட்டுவிட்டு நம் நாட்டு நாய்களின் தனிதன்மையை வெளிகொணர்வோம்... நம் நாட்டு நாய்களுக்காக விருது காட்சியும் நடத்துவோம்.....
மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...
மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியின் வெற்றியாளர்கள் திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் மூவரும் ஒரு வாரம் காலம் சிங்கப்பூரில் வெற்றியின் பரிசாக சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்கள். வெற்றியாளர்களின் இரண்டாம் நாள் நிகழ்வாக சிங்கப்பூர் வலைப்பதிவருகளுடன் ஒரு மாபெரும் சந்திப்பாக 23-05-2010 மாலை 4:30 மணிற்கு மேல் மேற்குகடற்கரை பூங்காவில் நடைப்பெற்றது. வெற்றியாளர்களும் சிங்கப்பூர் பதிவர்களும் தங்களின் மகிழ்வை பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாகதான் இருக்கும். சந்திப்பு மற்றும் BBQ பாபிக்கியூ உணவும் உண்டு மகிழ்ந்தனர். உணவின் முத்தாய்ப்பாக சிங்கை நாதனின் பாதாம் அல்வா சிறப்பான இடத்தை பிடித்தது.
விழாவின் சிறப்புகளை நமது பதிவர்கள் பகிர்ந்துக்கொள்வார்கள். மேலும் இதன் தொடர் நிகழ்வுகள் "சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்" தில் வெளியாகும். அன்று நடைபெற்ற நிகழ்வுகளை புகைப்படமாக பதியப்பட்டது. அப்படிப்பட்ட வரலாற்று புகைப்படங்களை சுட்டியை சுட்டி காணுங்கள்..... தாங்களும் அந்த மகிழ்வை பகிர்ந்துக்கொள்வதில் ஆணந்தமே.......
வலை நண்பர்களுக்கு வணக்கம்.. வேலையிடத்து பணியழுத்தம் காரணமாக, பல நாட்கள் இணையம் பக்கம் வரமுடியவில்லை வந்தாலும் பின்னூட்டமிட இயலாத நிலைக்கு வருந்துக்கின்றேன். அதுபோல வரும் 24/12/2009 முதல் இரண்டு வாரங்களுக்கு இந்தியா செல்ல இருப்பதால் (திருச்சி அண்ணாநகர்) உங்களோடு பகிர்ந்துக்கொள்ளும் நேரம் கொடுக்க முடியாமைக்கு வருத்தமே ( திருச்சி பக்கம் வந்தால் குரல் கொடுங்கள் சந்திக்கலாம்). பகிர்ந்துக்கொள்ளும் நேரம் குறைவாக இருந்தாலும் நினைவுகள் அனைத்தும் மனதினுள் வந்துசெல்கின்றது.
ஆங்கில வருடப் புத்தாண்டையும் , தமிழ் வருடப் புத்தாண்டையும்.... எதிர் நோக்கியுள்ளோம்
புதுவருட வாழ்த்துப்பா
புது மகளே! வருக வருக.... காட்டாற்று வெள்ளம் போல கரைப்புரண்டு வருக!....
வரும் முன் நிற்க, உன் வருகையின் நிமித்தம்..... என் நண்பனுக்கு வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை... என் உறவினனுக்கு வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை... என் மனைவி மக்களுக்கு வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை... மாறாக,.... உனக்கு மட்டுமே என் வாழ்த்துகள்!
வாழ்த்துகளோடு உன்முன்... கனிவான எச்சரிக்கை! பொங்கும் புதுபொழிவோடு வருவாய் என்று தெரியும்,... நீ! சாக்கரதை..
வெள்ளம் என்று புயல் என்றும் உன்னை சரித்திரத்தில் பதித்து விடலாம்....
சுனாமி என்று பூகம்பம் என்றும் உன்னை பக்கங்களில் நிறப்பி விடலாம்....
வந்தார்கள் சுட்டார்கள் என்றும் உன்னைப் பற்றி கலங்கம் படுத்தலாம்...
பசி வந்தது பஞ்சம் வந்தது என்றும் உன் நினைவலைகளை நசுக்கப்பட்டு விடலாம்....
நோய் வந்தது நொடி வந்தது என்றும் உன் பெயர்மேல் அச்சடிக்கப் படலாம்...
வாழ்த்துகள் இருந்துவிட்டு போகட்டும் உனக்கு என் எச்சரிக்கை!.... வரலாற்று சுவடுகள் உன் நினைவுகளை சொல்லவேண்டும்... உன்னோடு உன் நினைவுகளும் இனிதாக இருக்கவேண்டும்...
" சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல...அதுபோல படங்கள் பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் சில செய்திகளையாவது சொல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி நான் பார்த்ததும் சுட்டப்படங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளலாம் என்று ஒரு ஆசையில் உருவான என் மற்றொரு பக்கம் கண்டதும் சுட்டதும்.
எப்படியோ பதிவர்கள் சோர்வை போக்கும் விதமாக அவ்வப்பொழுது ஏதாவது ஒரு தொடர் விளையாட்டு வந்துக்கொண்டுதான் இருக்கின்றது. பதிவர்களும் ஆர்வம் குறையாமல் கலந்துக்கொள்வது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு. இதில் எனக்கு இன்னும் கொஞ்சம் சிந்தனைகள் தூண்டும்படியாக இருந்தால் நல்லாயிருக்குமே என்ற எண்ணங்கள் உண்டு. அதே போல் ஒரு விழிப்புணர்வு கொடுக்கும் தலைப்புகள் இருக்கலாம் என்றே தோன்றுகின்றது. இருப்பினும் பலரின் பார்வையில் ஒரு தலைப்பின் கீழ் பார்க்கும்பொழுது அதுவும் சிறப்பாகதான் இருக்கு. முதலில் இப்படிப்பட்ட தொடரை தவிற்த்து விடலாம் என்ற எண்ணம் தோன்றினாலும் பலரின் கருத்துகளுடன் நம் கருத்து எப்படியிருக்கு என்ற ஆசைகளுடன் நானும் கலந்துக்கொள்கின்றேன்.
நண்பர் உழவன் (Uzhavan) உழவனின் உளறல்கள், வலையுலக தம்பி அன்பு மதி OPEN HEART யும் "தீபாவளி சிறப்பு பதிவு 2009" அழைப்பை கொடுத்துள்ளனர். இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும். எனக்கும் தீபாவளிக்கும் உள்ள தூரம் அதிகம் என்றே நினைக்கின்றேன். பொதுவாக திருவிழாக்களில் ஈடுப்பாடு இல்லாதவனாக இருக்கின்றேன் (தற்பொழுது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுடன் இருப்பதுண்டு). எனவே இங்கு கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பொய்யாகதான் பதில் சொல்லவேண்டி வரும். இருந்தாலும் சிலது உங்களுக்காக நான்ன்ன்ன்ன்ன்ன்......
1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ? என்னைப்பற்றி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஏதும் இல்லை. நான் நானாக வாழ்ந்துக்கொண்டுள்ள சாதாரணமானவன். திருச்சியிலிருந்து பிழைப்புக்காக சிங்கப்பூரில் வேலைசெய்துக்கொண்டுள்ளேன். பார்த்ததில் உணர்ந்ததில் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள இந்த வலைப்பூ.....
2)தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம் ? நினைவில் இருக்கும் அளவிற்கு எந்த ஈடுப்பாடும் இல்லை.
3)2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ? சிங்கப்பூரில்,
4)தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள்? சிங்கப்பூர் அரசு தீபாவளி கொண்டாடும் விதமாக அரசு விடுமுறை அளித்துள்ளது. பட்டாசுகள் வெடிக்க அரசு தடையுள்ளது ஆனால் மத்தாப்பு மட்டும் கொழுத்தி மகிழலாம். இங்குள்ள ஒரு பகுதி குட்டி இந்தியா (Little India) தீபாவளி சிறப்புக்காக வண்ணத் தோரணங்கள், வண்ண விளக்குகளுடன் பார்க்க சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் இந்த அளவிற்கு இந்திய பண்டிகை சிறப்பாக கொண்டாடுவது ஒரு மகிழ்ச்சியான விடயம்தான்.
5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ? மன்னிக்கவும், அந்த அளவிற்கு ஈடுப்பாடு இல்லை.
6)உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ? நண்பர் வீட்டில் கிடைத்த விருந்தில் பலகாரம் சாப்பிட்டேன்.
8)தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ? இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல்நாள் இரவுப்பணி முடிந்ததும் மறுநாள் தூக்கம். முடிந்ததும் நண்பர் அழைப்பில் சிறிது உணவு......
9)இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள் ? வாய்ப்பு கிடைத்தால் செய்வதுண்டு.
10)நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள் ? இப்படியே சென்றால் அடுத்த வருடம் தீபாவளி வந்துவிடும் எனவே என்னோடு முடித்துவிட்டேன்.
அடுத்த விளையாட்டுக்கு அழைத்திருப்பவர்கள் தலைமை ஆசிரியை அருணா அன்புடன் அருணாஅவர்களும் நம்ம டாக்டர் தேவன் மாயம் தமிழ்த்துளிஅவர்களும் பிடித்ததும் பிடிக்காததும் என்ற தலைப்பின் கீழ் அழைத்துள்ளனர். பிடிக்காதவர்களை சொல்லும் அளவிற்கு என்னிடம் துணிச்சல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதைவிட பிடிக்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு என்னிடம் புரிதலும் இல்லை என்று சொல்லிக்கொள்ள துணிச்சல் இருக்கு. இங்கு கொடுக்கப்பட்ட வினாக்கள் என்னை யோச்சிக்க வைக்கவில்லை. உண்மையில் எதைப்பற்றியும் சிந்தனை என்னிடம் முழுமையில்லை. நான் பார்த்த, உணர்ந்த விடயங்களை உங்களுடன் பகிந்துக்கொள்ளத்தான் இந்த வலைப்பூ தவிற என்னுடை திறமையை வெளிப்படுத்த இல்லை. இசை, இலக்கியம்,கலை போன்றதுறைகளில் வியாக்கியானம் சொல்லும் அளவிற்கு என்னிடம் ஆர்வமும் ஞானமும் இல்லை என்பது எனக்கு தெரியும். எனவே பிடித்தது பிடிக்காதது என்று சொல்லும் அளவிற்கு என்னால் செல்ல முடிவில்லை. இருந்தாலும் உங்களின் அன்பின் காரணமாக எல்லோரையும் போல பிடித்தவைகளை சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணங்களுடன் ஆ.ஞானசேகரன்.
1.அரசியல் தலைவர் : வம்பில் மாட்டிக்கொள்ள முடியாது... கலைஞரிடம் பிடித்தது: தினம் ஒரு அறிக்கையிட்டு தொண்டர்களை அன்பில் கட்டிவைப்பது. பிடிக்காதது: தினம் ஒரு அறிக்கையிட்டு மக்களை ஏமாற்றுவது.
செல்லி ஜெயலலிதாவிடம் பிடித்தது: அரசியலில் இருக்கும் மன உறுதி பிடிக்காதது: மக்களுக்கு நல்லது செய்யும் வாய்ப்புகள் இருந்தும் செய்யாத உறுதி 2.எழுத்தாளர்: எழுத்துக்களை பிடிக்கும், குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு படிக்கவில்லை.
4.இயக்குனர்: பாக்கியராஜின் திரைக்கதை, இயக்கம் பற்றிய பாதிப்பு எனக்குண்டு.. அதன் வரிசையில் வரும் இயக்கங்கள் பிடிக்கும் தொடர்பு படுத்தி பார்ப்பதுண்டு. கமல் இயக்கிய விருமாண்டி பட இயக்கம் பாக்கியராஜ் பாதிப்பு இருப்பதாக தெரியும்.
5.நடிகர்: பிடித்த படத்தில் நடித்த நடிகரை பிடிக்கும். பிடித்த படம் தனியாக சொல்லமுடியவில்லை.
6.நடிகை: அழகான..........
7.இசையமைப்பாளர்: பிடித்த இசை தாலாட்டு....... தாலாட்டு இசைப்பவர்
இந்த தொடர் அனேகமாக எல்லோரையும் அடைந்துவிட்டது. இருந்தாலும் ஒரு சிலரை அழைக்கலாம் என்ற எண்ணங்கள்
வலைநண்பர்களே! என்னுள் இருக்கும் சோம்பல் மற்றும் பணியிடத்தில் வேலைகளின் காரணமாக அடுத்தடுத்த இடுகைக்கு இடைஞ்சலாகவே இருக்கு. அப்படியே இணைத்தில் வந்து இடுகைக்கு தயாரானாலும் எண்ணங்களின் ஓட்டம் வற்றியே காணப்படுகின்றது. எப்படியும் இன்று உங்களுடன் தொடர்பு கொண்டே ஆக வேண்டும் என்றாலும் சொல்ல வரும் விடயங்கள் ஒழிந்து விளையாடுகின்றது. அடுத்து வரும் இடுகை ஒரு சிந்தனையை தூண்டும்படியாக அமைய வேண்டும் என்றே ஆசைப்படுகின்றேன்.
ஏன்?எதற்கு? எப்படி? எண்ணங்களையும் தொடர வேண்டும் என்ற ஆசைகள் உண்டு. இந்த கேள்விகளும் எண்ணங்களும் எனது சிறுவயதில் உள்ள கேள்விகளும் அதற்கான தேடல்களும்தான். அந்த தேடல்கள் சரியாக சென்றடைந்திருந்தால் இன்னும் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் என் தேடல்களில் பல நையாண்டிகளாகவே அமைந்தது. அதற்கும் நானே பொறுப்பாக வேண்டும். ஏனனில் தேடல்களில் பொருமையின்மை அதனால் கிடைத்த கூலிதான் அந்த நையாண்டிகள். எந்த ஒரு செயலிலும்" ஏன்?" என்ற கேள்வியை உனக்குள் கேட்டுப்பார்! இது எல்லோருக்கும் தெரியும் அதேபோல் நானும் கேட்டு அதன் பதிலுக்காக நானே எனக்குள் தேடியதுண்டு.
"நீராவில் புகைவண்டி ஓடுகின்றதாம்" நானும் ஒரு வண்டி செய்ய ஆசைப்பட்டேன். அட்டையில் வண்டி செய்து அதன் மேல் ஒரு குப்பியில் தண்ணீர் வைத்து, மெழுகுவர்த்தியால் தண்ணீரை சூடு செய்து நீராவியை உண்டாக்கினேன். நீராவியும் வந்தது வண்டி ஓடவில்லை. கடைசியில் வண்டி நெருப்புக்கு இறையானது. அப்படியே நாட்கள் ஓடியது பேட்ரியில் கார் ஓடுகின்றதாக செய்திகளில் படித்ததும் ஒரே மகிழ்ச்சி என்னிடம் ஒரு பழைய பேட்ரி செல் இருந்தது. சிகரட் அட்டையில் உள்ள வெள்ளித்தாள் உதவிக்கொண்டு அந்த பேட்ரியில் மின் விளக்கு (Light) எரியவிட்டு மகிழ்ந்த எனக்கு காரையும் ஓட்டலாம் என்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உடனே தயாரானது ஒரு அட்டைக்கார் சோடா மூடிதான் சக்கரம் பேட்ரியின் மின்சாரம் லாபகமாக அதே வெள்ளித்தாள் துணையுடன் சகரத்தில் செலுத்தப்பட்டது. செலுத்தினேன்..... செலுத்தினேன்... கார் நகரவில்லை, காற்றில் சிறிது அசைந்தாலும் கார் நகர தாயாராகின்றதாக ஒரு எண்ணம். பிறகு என்ன அதே போல நாட்கள் ஓடியது. இப்படி பல நையாண்டி சோதனைகள் எனக்குள் உண்டு.
எந்த ஒரு தேடல்களிலும் வெற்றிப்பெற்றதாக எனக்கு தெரியவில்லை ஆனால் அதற்காக நான் கவலைப்பட்டதும் இல்லை. எல்லாம் ஒரு பசுமையான இன்பங்களாகவே இருந்தது. அன்று கேட்ட கேள்விகள் இன்று உங்களோடு பகிர்துகொள்வதுதான் இந்த ஏன்? எதற்கு? எப்படி?.... இப்படிப்பட்ட கேள்விகள் நமது வயதிற்கு தெரிந்தவைகளாக இருந்தாலும் கேட்பதில் ஒரு சுகமாக இருப்பதாக தெரிகின்றது. எனவே இன்னும் தொடரும் என்றே ஆசைகள்.
மனிதனும் அவனின் சிந்தனைகளுக்கும் எல்லைகள் உண்டா? இந்த எல்லையில்லா சிந்தனைகள் சரியான பாதைகளில்தான் செல்கின்றதா? அப்படியே சென்றாலும் கட்டுப்பாடு இருக்கின்றதா? இப்படிப்பட்ட கேள்விகளும் என்னிடம் இருக்கதான் செய்கின்றது. நான் சரி என்று நினைத்த ஒன்று மற்றவர்களுக்கு தவறாகப்படுகின்றதே ஏன்? மற்றவர்கள் சரி என்று ஒப்புக்கொண்ட ஒன்று எனக்கு சரியாக படவில்லையே ஏன்? இப்படிப்பட்ட முறன்பாடுகளுக்கு காரணமாக இருப்பது அந்த செயலா? இல்லை மனிதனா? இதுவும் புரியவைக்கபடாத ஒன்றுதான். அப்படி பார்க்கையில் மனித இனத்தில் குடிபுகுந்து பல்லாயிரம் ஆண்டுகாளாக பழகிபோன ஒன்றைப்பற்றி அடுத்து வரும் இடுகையில் சிந்திக்கலாம் என்ற எண்ணங்கள் உள்ளது. அப்படிப்பட்ட ஒன்றுதான் மூடப்பழக்கங்கள். பலவகையான மூடப்பழக்கங்கள் மனிதனின் காலாச்சரத்தோடு இணைந்துள்ளது. அப்படி இணைந்துள்ளதால் அவற்றை கழைவது அவ்வளவு எளிதான விடயமும் இல்லை என்பதை நான் கண்டுள்ளேன். இதைப்பற்றி ஆழ்ந்து உங்களோடு சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... என்ற தலைப்பின்கீழ் அடுத்து சந்திப்போம்.
கலைஞர் தொலைக்காட்சியில் டாக்டர் முனியப்பன் அன்பு நண்பர்களே! நமது சக பதிவர் டாக்டர் முனியப்பன் (முனியப்பன் பக்கங்கள்) அவர்கள் நாளை (10/10/2009) மாலை 9.00 மணிக்கும் 24/10/2009 அன்று மாலை 9.00 மணிக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் ரோஸ் நேரம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கின்றார். சந்தர்ப்பம் உள்ளவர்கள் பார்த்து பின்னர் உங்களின் கருத்துகளை அவர்களின் தளத்தில் தெரியப்படுத்துங்கள். டாக்டர் முனியப்பனின் தளம் "முனியப்பன் பக்கங்கள்".
இவர் மதுரையை சார்ந்தவர். தனது சொந்த அனுபவங்கள் மற்றும் தான் ருசித்த சம்பவங்களை அவரின் தளத்தில் எழுதி வருகின்றார். அதேபோல் நல்ல இடுகைகளை பார்த்து பாராட்டவும் செய்கின்றார். டாக்டர் முனியப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள்! (சிங்கப்பூரில் கலைஞர் தொலைக்காட்சி பார்க்க இயலாததால் வருந்துகின்றோம்).
வணக்கம்! இரண்டு வாரக் காலம் இணையம் பக்கம் வராததால் பல விடயங்கள் என் பார்வையில் படாமலே போய்விட்டது. இருந்தாலும் இந்தியா சென்றதால் நான் பார்த்த, ரசித்த, சந்தித்த பல விடயங்கள் மகிழ்ச்சியை கொடுத்தது. அவற்றையெல்லாம் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி. அதே போல் வேலையின் பளு மற்றும் நேரமின்மையால் சிலர் அழைத்த தொடர் இடுகையும் தொடர முடியாமல் போனதிற்கு வருந்துகின்றேன். இளமைக்கால பள்ளிக்கூட அனுபவங்களைஎழுத சொல்லிய தோழி தமிழரசி எழுத்தோசை அவர்களுக்கு என் நன்றி. காலம் கிடைக்கும் பொழுது தோடர்கின்றேன். அதே போல் நண்பர் டாகடர் SUREஷ் பழனியிலிருந்து (கனவுகளே)அவர்கள் அழைத்த a,b,c,d தொடர் இடுகைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். நான் எனது சொந்த மண்ணுக்கு சென்று வர வாழ்த்துகளைஅள்ளி வழங்கிய நண்பர்களையும் நினைவு கூறுகின்றேன். நண்பர் கோவி.கண்ணன் அவர்கள் எனது பத்தாண்டு மணநாள் வாழ்த்துகளை சுவரொட்டி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.அவர்களுக்கு நன்றி!. அவற்றில் எனக்கு வாழ்த்துகள் கூறியுள்ள அணைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். அதே போல் நண்பர் கதிர் ஈரோடு அவர்கள் வழங்கிய [விதைப்போம் அன்பை விருதுகள் மூலம்] scrumptious blog விருதிற்கு பணிவான நன்றி.
பரந்து விரிந்துகிடக்கும் உலகில் பாரதத்தை நினைத்தால் மனதில் ஒரு மனநிறைவு வரத்தான் செய்கின்றது. பல முரண்பாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டி கண்ணில் படும் அபார வளர்ச்சிகளை பாராட்டாமல் இருக்கமுடியாது. ஏழ்மையின் மத்தியிலும் மனிதன் முகத்தில் மகிழ்ச்சி இருக்கின்றது என்றால் அது இந்திய நாடு என்றால் மிகையாகாது. இந்த முறை எனது ஊரை பார்க்கின்ற பொழுது தூர்ந்து போன வாய்க்கால் தூர்வாரப்பட்டிருந்தது. அந்த கட்டளை வாய்க்காலில் நீர் ததும்பி செல்லும்பொழுது தூர்வாரிய தமிழக அரசிற்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியாது. ஆனாலும் பல்லிளிக்கும் சாலைகளை பார்க்கின்ற பொழுது அந்த மகிழ்ச்சியில் கறைபடிகின்றது என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதேபோல் நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தும் பணியிடங்களில் எந்த விதமான பாதுக்காப்பு விதிகளை கடைபிடிக்காமல் இருப்பதும் மனதை ரணப்படுத்துகின்றது. நீண்ட பெரும் நெடுஞ்சாலைகளை பார்கின்றபொழுது மகிழ்ச்சியும் நாம் வளர்கின்றோம் என்ற நம்பிக்கையும் தெரிகின்றது. திருச்சியில் ஐ டி பார்க் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக துணை முதல்வர் மூ.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கயுள்ளார் என்ற செய்தியும் உள்ளது. 2010 முடிவில் எல்லா வேலைகள் முடிக்கப்படும் என்று எல்காட் நிறுவனம் சொல்லியுள்ளது.
சங்கம் வளர்த்த மதுரையில் பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நண்பர்களுடன் பழகி பேசும் வாய்ப்புகள் கிடைத்தது. சீனா ஐயாவை பார்க்க முடியாமல் போனது ஒரு ஏமாற்றமே. தருமி ஐயாவிடம் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. மேலும் அனைத்து நண்பர்களுடம் பேசியதில் இன்னும் அந்த மகிழ்ச்சியின் ஈரம் காயவில்லை. சந்திபின் புகைப்படங்கள்தருமி ஐயா தளத்தில் காணலாம். மேலும் புகைப்படங்களை பார்க்க சுட்டியை தட்டவும் மதுரையில் ஒரு சந்திப்பு அறிய புகைப்படம். சந்திப்பு 29-09-2009 ஞாயிற்று கிழமை மாலை நான்கு மணியளவில் அமெரிக்கன் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் நடைப்பெற்றது.
அன்பில் ஓர் விடுமுறை விண்ணப்பம்... நண்பர்களே! குறுகியக் கால விடுமுறையின் காரணமாக இந்தியா ( திருச்சி அண்ணாநகர்) செல்ல இருப்பதால் என்னால் இந்த இரு வாரங்களுக்கு இணையம் பக்கம் வர இயலாது எனவே இந்த இரு வாரங்களுக்கு அம்மா அப்பா வலைப்பக்கம் புதிய இடுகைகளை காண்பிக்க இயலாது என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகின்றேன். நண்பர்கள் அதுவரை புதிய புதிய சிந்தனைகளுடன் சிந்தித்து பின் சந்திப்போம் என்ற ஆசைகளில்....
என்ன தான் உலகம் ஒரு மாயை வலைக்குள் சென்றாலும் ஆங்காங்கே மானுடம் காக்கப்படுகின்றதை நம்மால் உணரமுடிகின்றது. இதில் சமீபத்தில் கண்டநெகிழ்வு சகப்பதிவர் செந்தில் நாதனுக்கு உதவிய அன்பு நெஞ்சங்கள். அந்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை பார்க்கின்ற பொழுது இன்னும் மனித உணர்வுகள் இருக்கின்றது நிருபணம் ஆகின்றது. அதே போல் என் வலைப்பக்கத்தில் செந்தில் நாதனுக்கு உதவி வேண்டி இணைப்பு கொடுத்துள்ளேன். என் வலைப்பக்கம் வரும் நண்பர் ஒருவர் அந்த சுட்டியையும் பார்த்துவிட்டு தாமாகவே என்னிடம் ஒரு சிறு உதவியை கொடுத்தார். அந்த சிறு உதவியும் செந்தில் நாதனை நலமாக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் உண்டானது. நண்பர் கிருஷ்ணமூர்த்தி, நண்பர் லூயிஸ் அவர்களுக்கு சிங்கை தமிழ் பதிவர் குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி.
=0=0=0=
என்ன தான் எழுதி எழுதி வந்தாலும் ஊக்கங்களும் பாராட்டுகளும் எழுதுபவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் துளியும் சந்தேகங்கள் இல்லை. அப்படிதான் பதிவர்களுக்குள் கொடுக்கப்படும் பாராட்டுகளும் விருதுகளும். அப்படிப்பட்ட மகிழ்வான விருதை நண்பர் ராச குமாரன் - குறை ஒன்றும் இல்லை!!! மற்றும் நண்பர் சூர்ய கண்ணன் - சூர்ய கண்ணன் அவர்களும் எனக்கு விருதுகளை வழங்கி மகிழ்வித்தார்கள். அவர்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றியையும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். இதன் மரபுப்படி நானும் இந்த விருதை பத்து பேருக்கு கொடுக்க வேண்டுமாம். இந்த விருதின் பெயர் Scrumptious blog award (தமிழில் தெரியவில்லைபா). இந்த விருதை உங்கள் தளத்திற்கு அடிக்கடி வருபவர்களுக்கு உங்களை ஊக்கப்படுத்துபவர்களுக்கு உங்களை பிடித்தமானவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டுமாம். அப்படிப்பட்ட சிலரில் பத்து பேர்கள் ...
ஹேமா அவர்கள் என் இடுகைகளை படித்துவிட்டு என்றுமே பாராட்ட தயங்காத தோழி. வாங்கஉப்புமடச் சந்திக்கு கதைப் பேசலாம் என்று அழைத்து என்னை இந்த தொடர் பதிவுக்கு வித்திட்டார்.அழகு,காதல்,பணம், கடவுள்? இவைகளைப் பற்றிய உங்களின் நினையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. முதலில் அந்த ஐவரை அழைத்துவிட்டு பின்னர் அழகு, காதல்,பணம், கடவுள்? இவைகளைப் பற்றிய என் நிலையில் நான் நினைப்பதையும் சொல்லி விடுகின்றேன்.
முதலில் இந்த தொடருக்கு அழைப்பு விடுத்த தோழி ஹேமாவிற்கு வணக்கங்களும் நன்றியும். முதலில் அழகு, காதல், பணம், கடவுள் என்று பார்க்கின்றபொழுது மிக எளிதாகதான் தெரிந்தது பின்னர் அதை பற்றி யோசிக்கின்றபொழுது அதனின் அழுத்தமும் தேவையும் புரிய ஆரம்பித்துவிடுகின்றது. இவற்றை தனியாக பார்ப்பதைவிட அவற்றின் தலையில் அன்பு என்ற மந்திரத்தை வைத்து பார்த்தால்தான் அவற்றின் உண்மை நிலை புரியும். அழகின் தலையில் அன்பை வைக்கவேண்டும், காதல் தலையில் அன்பை வைக்கவேண்டும், பணத்தின் தலையில் அன்பை வைக்கவேண்டும், கடவுளின் தலையில் அன்பை வைக்கவேண்டும். இவற்றிலிருந்து அந்த அன்பை எடுத்துவிட்டு அவற்றின் மேல் அன்பு வைத்தோமேயானால் அதன் உண்மை திரிந்தே போய்விடுகின்றதை நம்மால் உணரமுடியும்.
அழகு: ஒரு உணவிற்கு சுவை என்பது அந்த உணவில் இல்லை நாம் சாப்பிடும் பொழுது நாவில் உணரப்படுகின்றது. எப்படி சுவை என்பது உணவில் இல்லாமல் உணரும் நாவில் உள்ளதோ அதைப் போல அழகு என்பதும் அந்த உருவத்தில் இல்லை பார்த்து சுவைக்கும் கண்களிதான் இருக்கின்றது. உலக அழகியாக இருந்தாலும் அன்பினால் உணரமுடிந்தால்தான் உண்மையான நிரந்தரமான அழகாக இருக்கும். பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துர்நாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும். அதே போல என்னதான் அழகானவளா, அழகானவணா இருந்தாலும் அவர்களிடத்தில் அன்பு இல்லை என்றால் நம்முடைய கால் தூசிக்கு சமமானதே.
காதல்:
காலை முதல் மாலை வரை..
எப்பொழுதும் அவள்(ன்) நினைவுகள்தான். கண்ணுரங்கும் பொழுதிலும்.. அப்போழுதும் அவள்(ன்) நினைவுகள்தான்... நான் நடந்த கால் சுவடுகளில்.. அவள்(ன்) நினைவுகளாய் பார்க்கின்றேன்.. ஓ நான் அவளை(னை) காதல் கோண்டேனோ!....
காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்களை விட கல்யாணம் செய்து காதலிப்பவர்களிடம் அதிகம் அன்பு இருப்பதுபோல நான் உணர்கின்றேன். நானும் கல்யாணம் செய்து காதலிப்பவன் என்பதாலோ என்னவோ!. காதல் இல்லா உயிரும் இல்லை அதைவிட அன்பில்லா காதலுமில்லை. வெறும் காதல் மட்டும் வீடு வந்து சேராது, வீதியிலேயே போய்விடும். காதலுக்காக வாழ்கின்றோம் என்று சொல்வதை விட காதலில் வாழ்கின்றோம் என்பதுதான் நிஜம்.
பணம்: பொய்யான உருவதிற்கு மதிப்பையும் கொடுத்து அதன் பின்னால் நாம் செல்கின்றோம் என்பது ஒரு வேடிக்கையான விடயம்தான். பண மதிப்பை பற்றிய முந்தய இடுகைசாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு. பணம் எல்லோரிடம் இருக்கலாம் பண இருப்பவர்கள் மதிக்கப்படலாம் ஆனால் பணம் எங்கே மதிக்கப்படுகின்றது என்றால் அது அன்பு உள்ளவர்களிடம் தான்.
கடவுள்: என்னை பொருத்தவரை கடவுள் என்பது ஒரு நிருபிக்க முடியாத ஒரு கற்பனை, அது ஒரு அலுவுனியாட்டம். இந்த அழுவுனியாட்டம் பற்றிய என் முந்தய இடுகை கடவுள் நம்பிக்கையில் ஓர் அழுவுனி ஆட்டம். கடவுளை பற்றிய நிருபணமும் இல்லை அதே போல் இல்லை என்பதற்கும் நிருபணமும் இல்லை. கடவுளை சொல்லி ஏமாற்றுவர்களை விட இல்லை என்று சும்மா இருப்பதே மேல். கடவுள் இருப்பதாகவே வைத்துக்கொண்டால் இத்தனை மதங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் சண்டைகளுக்கு வாய்ப்புகள் இல்லை. கடவுள் இருந்துவிட்டு போகட்டும் அது எழைகளின் நீதி மன்றம். மதம்பிடித்த மதங்கள் அழிந்துபோகட்டும். அன்புக்கு நிகரான கடவுளை பார்த்தவர்கள் சொல்லுங்களேன்.
நான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.