சிந்திப்பதற்காக என்று நினைக்க வேண்டாம் கொஞ்சம் நையாண்டி நகைச்சுவை என்று வைத்துக்கொள்ளலாமே.
=>ஒரு முறை மகாத்மா காந்தியும் நேரு மாமாவும் தோட்டத்தில் பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள். வழியில் ஒரு சிறிய வாய்க்கால் இருந்தது அதை கடக்க வேண்டிய சூழலில் நேரு பின்னாடி சிறிது தூரம் சென்று வேகமாக ஓடிவந்து வாய்க்காலை லாபகமாக தாண்டி அடுத்த பக்கம் சென்று விட்டார். காந்தியோ பொறுமையாக மெதுவாக நடந்து வாய்காலில் இறங்கி அடுத்தப் பக்கம் சென்றார். அதை பார்த்த நேரு நக்கலாக சிரித்தார். அதுக்கு காந்தி நேருவிடம் " நீ இந்த ஐந்தடி வாய்க்காலை தாண்ட நீர் பின்னாடி பதினைந்தடிகள் சென்றாய் நான் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை எந்த நேரத்திலும் நிதானமாக ஒவ்வொரு அடிகளையும் வைக்கின்றேன்" என்றாராம். இதை கேட்டதும் நேருவின் முகம் ஆச்சரியத்தில் வியந்ததாம்.
=>மற்றொருமுறை காந்தியும் நேருவும் ஒரு சத்திரத்தில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போழுது ஒரு நாய் அவர்களை பார்த்து முறைச்சிகிட்டே இருந்தது. நேரு அவர் தட்டில் இருந்த கொஞ்சம் சாப்பாடை எடுத்து நாய்க்கு போட்டார். நாய் அதை சாப்பிட்ட பிறகு மீண்டும் அவர்களை பார்த்து முறைத்தது. இந்த முறை காந்தி தன் தட்டிலிருந்து கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து நாய்க்கு போட்டார். நாய் அதை சாப்பிடாமல் அவர்களை பார்த்து முறைச்சிகிட்டே இருந்தது....... "ஏனா காந்தி கையில் கைதடி இருந்ததாம்"
அடுத்து பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... கடைசி பாகத்தில் சந்திக்கலாம் அன்புடன் ஆ.ஞானசேகரன்.
உணவின் அவசியம் மற்றும் தேவைகள் நாட்டில் அதிகரித்து வருகின்ற பொழுதும் இந்திய அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது மிக வருத்தப்பட கூடியது. உலக நாடுகளில் இயற்கை வளங்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருந்தாலும் அதை முறைப்படி பயன்படுத்தாத நாடாகதான் இன்றும் இருக்கின்றது. நான் படித்த வரலாற்று பாடங்களில் அந்த அரசன் கோவில் கட்டினான், இந்த அரசன் குளங்கள் வெட்டி அணைகள் கட்டினான் என்றுதான் படித்துள்ளேன். ஆனால் நாளைய வரலாற்று பாடங்களில் அந்த அரசு இலவச கஞ்சி ஊத்துச்சி, இந்த அரசு இலவச கோவணம் கொடுத்துச்சி என்றுதான் படிக்க வேண்டி வரும். அந்த அளவிற்கு தொலை நோக்கு திட்டங்கள் இன்று நடந்துக்கொண்டு உள்ளது. அந்த கால அரசர்கள் மக்களை சுறுசுறுப்புடன் வைத்திருந்து வேலைகளை கொடுத்து கூலியும் அதற்காக உணவும் கொடுத்தான் என்பதுதான் வரலாறு. குளங்கள் தூறு வாருதல், சாலைகள் அமைத்தல், சாலையோரம் மரங்கள் நடுதல் போன்ற வேலைகளை கொடுத்து மக்களுக்கு உணவளித்தான். இன்று கிட்டதட்ட 20 வருடங்கள் மேலாக எந்த குளமும் தூறு வாரவில்லை என்பதுதான் கவலைக்கிடமான விடயம். மக்கள் தொகை அதிகரிப்பு, நலிந்து வரும் விவசாயம் போன்றவைகள் நாளை உணவின் பற்றாகுறை மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதுதான் உண்மை. இனிமேலும் இதனை கவணிக்காமல் விட்டுவிட்டால் ஒரு பெரிய வறட்சியை பார்க்க வேண்டி வரும் என்பதுதான் ஆய்வாளர்களின் எச்சரிக்கை.
தரமான பிஸா கிடைக்கவில்லையே என்பது உயர் மட்ட மக்களின் எண்ணம். நாங்கள் பிஸா சாப்பிட்டோம் என்பது நடுதர மக்களின் மகிழ்ச்சி. என்றுமே பட்டினி என்பது கீழ் தட்ட மக்களின் நிலை. இதுதான் இன்றய இந்தியாவின் மாபெரும் வளர்ச்சி. காடுகளை அழித்து குளங்கள் வெட்டி நாடாக்கினான் என்பது வரலாறு. வயல்காடுகளை அழித்து துண்டுப்போட்டு வீட்டு மனையாக்கி காசாக்கியதுதான் இன்றைய நிலை. பல ஏரிகள் குப்பை காடாக காட்சியளிக்கும் நிலை.
ஒரு வேளை உண்பவன் யோகி (யோகம் பன்னுகிறவன்),... இரு வேளை உண்பவன் போகி,... முன்று வேளை உண்பவன் ரோகி (நோயுடையவன்),... என்பார்கள். உணவின் தேவைகள் அப்படி அதேபோல் உணவின் அவசியம் அப்படி. எல்லா உயிர்களுக்கும் இயற்கையே உணவழிக்கும் என்றாலும் அப்படி இயற்கையால் உணவழிக்க முடியாத சுழல் வந்தால் இயற்கையே உயிர்களை சமன் செய்துவிடும். அப்படிதான் உயிரை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தன காலரா, மலேரியா, அம்மை போன்ற நோய்கள். இவற்றிலிருந்து மனிதன் தன்னை காப்பாற்றிக்கொள்ள கற்றுகொண்டான் ஆனால் இன்னும் உணவிற்கான சமன்பாட்டை கற்றுகொள்ளவில்லை. மாறிவரும் சூழல்களில் பட்டினிசாவுகள் அதிகரிக்கின்றன.
மரபியல் ஆராய்ச்சி மட்டும் வெற்றி கிடைக்காமல் போயிருந்தால் இன்று மனிதன் உணவிற்கான சமன்பாட்டில் அழிந்தேயிருப்பான். இன்று 50% உணவை மரபணு மாற்றம் வெற்றியினால் கிடைக்கின்றது. இறைச்சி, காய்கறிகள் எல்லாம் மரபணு மாற்றம் முறைகளால் உற்பத்தியை அதிகப்படுத்தியும் அதே போல் குறைந்த கால வளர்ச்சியும் கொடுக்கின்றது. இதன் பின் விளைவாக சில நோய்களையும் சம்பாரிக்கின்றான் என்பது உணமை. உணவின் தேவையை கருதியும் வியாபார வெற்றிக்காகவும் ஆராய்ச்சியாளர்கள வெளியில் சொல்வதில்லை. இதுபோன்ற மரபணு பின்னனியில் சார்ஸ், பறைவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் வந்திருக்கலாம் என்பது ஒரு சிலரின் கருத்துகள். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.
முன்பெல்லாம் நெல் விளைச்சல் 10 மாதம் முதல் ஒரு வருடம்வரை கால வளர்ச்சிக்கு எடுத்துக்கொள்ளும். ஆனால் இன்றைய நிலை பல ரக நெல்மணிகள் வந்துள்ளது. மரபணு மாற்றம் பயனாக குறைந்த பச்ச நாள் 60 முதல் 80 நாட்களின் முழு வளர்ச்சியை பெறுகின்றது. அதே போல்தான் பழங்களும் விரைவாக பழுக்க பல ரசாயண முறைகளை பயன்படுத்துவதன் மூலம் மனிதன் நோய்க்கு அழாக வேண்டிய நிலையுள்ளது.
"உழுதவன் கணக்கு பார்த்தால் ஒழக்கு கூட மிஞ்சாது" என்பது பழமோழி. அந்த அளவிற்கு லாபமே இல்லாத தொழிலாக இருந்து வருவதால் எந்த ஒரு விவசாயியும் தன் மகனை விவசாயம் பார்க்க அனுமதிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் உணவுக்காக அன்னிய நாடுகளில் கையேந்த வேண்டிய நிலைதான் வரும். இதற்கு முக்கிய பிரச்சனை நீர் பங்கீடு , வேலை செய்ய ஆள் இல்லா பற்றாகுறை. அதன் பின் கொள்முதலில் குறைபாடுகள். இதனால் இன்னும் நான்கு ஐந்தாண்டுக்களில் அரசிடம் உள்ள உணவு கையிருப்பு இல்லாமல் போய்விடும் என்பதுதான் யோசிக்க வேண்டிய நிலை.
விவசாயச்துறையில் இந்தியா விஞ்ஞானத்துவத்தில் பின் தங்கியுள்ளது. இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது நாம் 30 வருடம் பின் தங்கிய நிலையில்தான் இருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில்தான் நாம் வல்லரசு கனவில் இருக்கின்றோம். விவசாயம் மற்றும் உணவுப் பற்றாகுறையை சமாளிக்க வழிகாணுதல் இல்லாமல் இந்தியா வல்லரசு என்ற சொல்லுக்கே இடமில்லை என்பதுதான் உண்மை.
மேலும் பசி மற்றும் உணவின் தேவைகளையும், உற்பத்திகளையும் பின் வரும் இடுகையில் பார்க்கலாம். உங்களின் ஆலோசனைகள் பின்னூட்டத்தில் எதிர்ப்பார்க்கின்றேன்.
என்ன தான் உலகம் ஒரு மாயை வலைக்குள் சென்றாலும் ஆங்காங்கே மானுடம் காக்கப்படுகின்றதை நம்மால் உணரமுடிகின்றது. இதில் சமீபத்தில் கண்டநெகிழ்வு சகப்பதிவர் செந்தில் நாதனுக்கு உதவிய அன்பு நெஞ்சங்கள். அந்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை பார்க்கின்ற பொழுது இன்னும் மனித உணர்வுகள் இருக்கின்றது நிருபணம் ஆகின்றது. அதே போல் என் வலைப்பக்கத்தில் செந்தில் நாதனுக்கு உதவி வேண்டி இணைப்பு கொடுத்துள்ளேன். என் வலைப்பக்கம் வரும் நண்பர் ஒருவர் அந்த சுட்டியையும் பார்த்துவிட்டு தாமாகவே என்னிடம் ஒரு சிறு உதவியை கொடுத்தார். அந்த சிறு உதவியும் செந்தில் நாதனை நலமாக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் உண்டானது. நண்பர் கிருஷ்ணமூர்த்தி, நண்பர் லூயிஸ் அவர்களுக்கு சிங்கை தமிழ் பதிவர் குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி.
=0=0=0=
என்ன தான் எழுதி எழுதி வந்தாலும் ஊக்கங்களும் பாராட்டுகளும் எழுதுபவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் துளியும் சந்தேகங்கள் இல்லை. அப்படிதான் பதிவர்களுக்குள் கொடுக்கப்படும் பாராட்டுகளும் விருதுகளும். அப்படிப்பட்ட மகிழ்வான விருதை நண்பர் ராச குமாரன் - குறை ஒன்றும் இல்லை!!! மற்றும் நண்பர் சூர்ய கண்ணன் - சூர்ய கண்ணன் அவர்களும் எனக்கு விருதுகளை வழங்கி மகிழ்வித்தார்கள். அவர்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றியையும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். இதன் மரபுப்படி நானும் இந்த விருதை பத்து பேருக்கு கொடுக்க வேண்டுமாம். இந்த விருதின் பெயர் Scrumptious blog award (தமிழில் தெரியவில்லைபா). இந்த விருதை உங்கள் தளத்திற்கு அடிக்கடி வருபவர்களுக்கு உங்களை ஊக்கப்படுத்துபவர்களுக்கு உங்களை பிடித்தமானவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டுமாம். அப்படிப்பட்ட சிலரில் பத்து பேர்கள் ...
ஹேமா அவர்கள் என் இடுகைகளை படித்துவிட்டு என்றுமே பாராட்ட தயங்காத தோழி. வாங்கஉப்புமடச் சந்திக்கு கதைப் பேசலாம் என்று அழைத்து என்னை இந்த தொடர் பதிவுக்கு வித்திட்டார்.அழகு,காதல்,பணம், கடவுள்? இவைகளைப் பற்றிய உங்களின் நினையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. முதலில் அந்த ஐவரை அழைத்துவிட்டு பின்னர் அழகு, காதல்,பணம், கடவுள்? இவைகளைப் பற்றிய என் நிலையில் நான் நினைப்பதையும் சொல்லி விடுகின்றேன்.
முதலில் இந்த தொடருக்கு அழைப்பு விடுத்த தோழி ஹேமாவிற்கு வணக்கங்களும் நன்றியும். முதலில் அழகு, காதல், பணம், கடவுள் என்று பார்க்கின்றபொழுது மிக எளிதாகதான் தெரிந்தது பின்னர் அதை பற்றி யோசிக்கின்றபொழுது அதனின் அழுத்தமும் தேவையும் புரிய ஆரம்பித்துவிடுகின்றது. இவற்றை தனியாக பார்ப்பதைவிட அவற்றின் தலையில் அன்பு என்ற மந்திரத்தை வைத்து பார்த்தால்தான் அவற்றின் உண்மை நிலை புரியும். அழகின் தலையில் அன்பை வைக்கவேண்டும், காதல் தலையில் அன்பை வைக்கவேண்டும், பணத்தின் தலையில் அன்பை வைக்கவேண்டும், கடவுளின் தலையில் அன்பை வைக்கவேண்டும். இவற்றிலிருந்து அந்த அன்பை எடுத்துவிட்டு அவற்றின் மேல் அன்பு வைத்தோமேயானால் அதன் உண்மை திரிந்தே போய்விடுகின்றதை நம்மால் உணரமுடியும்.
அழகு: ஒரு உணவிற்கு சுவை என்பது அந்த உணவில் இல்லை நாம் சாப்பிடும் பொழுது நாவில் உணரப்படுகின்றது. எப்படி சுவை என்பது உணவில் இல்லாமல் உணரும் நாவில் உள்ளதோ அதைப் போல அழகு என்பதும் அந்த உருவத்தில் இல்லை பார்த்து சுவைக்கும் கண்களிதான் இருக்கின்றது. உலக அழகியாக இருந்தாலும் அன்பினால் உணரமுடிந்தால்தான் உண்மையான நிரந்தரமான அழகாக இருக்கும். பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துர்நாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும். அதே போல என்னதான் அழகானவளா, அழகானவணா இருந்தாலும் அவர்களிடத்தில் அன்பு இல்லை என்றால் நம்முடைய கால் தூசிக்கு சமமானதே.
காதல்:
காலை முதல் மாலை வரை..
எப்பொழுதும் அவள்(ன்) நினைவுகள்தான். கண்ணுரங்கும் பொழுதிலும்.. அப்போழுதும் அவள்(ன்) நினைவுகள்தான்... நான் நடந்த கால் சுவடுகளில்.. அவள்(ன்) நினைவுகளாய் பார்க்கின்றேன்.. ஓ நான் அவளை(னை) காதல் கோண்டேனோ!....
காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்களை விட கல்யாணம் செய்து காதலிப்பவர்களிடம் அதிகம் அன்பு இருப்பதுபோல நான் உணர்கின்றேன். நானும் கல்யாணம் செய்து காதலிப்பவன் என்பதாலோ என்னவோ!. காதல் இல்லா உயிரும் இல்லை அதைவிட அன்பில்லா காதலுமில்லை. வெறும் காதல் மட்டும் வீடு வந்து சேராது, வீதியிலேயே போய்விடும். காதலுக்காக வாழ்கின்றோம் என்று சொல்வதை விட காதலில் வாழ்கின்றோம் என்பதுதான் நிஜம்.
பணம்: பொய்யான உருவதிற்கு மதிப்பையும் கொடுத்து அதன் பின்னால் நாம் செல்கின்றோம் என்பது ஒரு வேடிக்கையான விடயம்தான். பண மதிப்பை பற்றிய முந்தய இடுகைசாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு. பணம் எல்லோரிடம் இருக்கலாம் பண இருப்பவர்கள் மதிக்கப்படலாம் ஆனால் பணம் எங்கே மதிக்கப்படுகின்றது என்றால் அது அன்பு உள்ளவர்களிடம் தான்.
கடவுள்: என்னை பொருத்தவரை கடவுள் என்பது ஒரு நிருபிக்க முடியாத ஒரு கற்பனை, அது ஒரு அலுவுனியாட்டம். இந்த அழுவுனியாட்டம் பற்றிய என் முந்தய இடுகை கடவுள் நம்பிக்கையில் ஓர் அழுவுனி ஆட்டம். கடவுளை பற்றிய நிருபணமும் இல்லை அதே போல் இல்லை என்பதற்கும் நிருபணமும் இல்லை. கடவுளை சொல்லி ஏமாற்றுவர்களை விட இல்லை என்று சும்மா இருப்பதே மேல். கடவுள் இருப்பதாகவே வைத்துக்கொண்டால் இத்தனை மதங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் சண்டைகளுக்கு வாய்ப்புகள் இல்லை. கடவுள் இருந்துவிட்டு போகட்டும் அது எழைகளின் நீதி மன்றம். மதம்பிடித்த மதங்கள் அழிந்துபோகட்டும். அன்புக்கு நிகரான கடவுளை பார்த்தவர்கள் சொல்லுங்களேன்.
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உயிர் வாழ உணவு அவசியம். உயிர்களின் உடம்பில் சக்தி தேவைப்படும்பொழுது அதன் தூண்டுதலால் ஏற்படுவதுதான் பசி. இந்த பசி இல்லா உயிர் இல்லை. அப்படிப்பட்ட பசியை போக்க உணவு மிக அவசியம். பசியை படைத்த இயற்கை கூடவே அந்தந்த உயிர்களுக்கான உணவையும் படைத்துள்ளது. இருப்பினும் உலகெங்கும் பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்'' என்றான் பாரதி. ஆனால் இன்றைய நிலைமையில் பட்டினி சாவுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. இந்தியாவில் வறுமையின் காரணமாக 20 கோடி மக்கள் உணவின்றி பட்டினிகிடக்கின்றார்கள். என்று அண்மையில் ஒரு தொண்டுநிறுவனம் ஆய்வு ஒன்றில் தெரியப்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உணவில்லை என்ற நிலை உள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த நிலையில்லை உலகின் பணக்கார வரிசையில் உள்ள அமேரிக்கா போன்ற நாடுகளில் கூட பட்டினி சாவுகள் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட நிலைக்கு காரணம் மனிதனா? இயற்கையா?..
"மத்தேயு-6:26.(பைபிள்) ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?....." மேற்கண்ட பைபிள் வாசகம் சரி என்றால் பட்டினி சாவுக்கு காரணம் யார்? இதுதான் இன்றய கேள்வி... உண்டு கொழுப்பவன் ஒரு புறம் இருக்க, பட்டியால் சாவோர் மறுபுறம் ஏன்? மனிதனின் மாறுப்பட்ட கொள்கைகளால் மடிந்துபோகும் மக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லமை பெற்ற நாடுகளும் இருக்கு, சோமாலியா போன்ற வறுமைகள் உள்ள நாடுகளும் இருக்கு. இதில் எந்த மனுதருமம் பொது உடமைப் பற்றி பேச போகின்றது.
பசி என்றால் பத்தும் பறந்துபோகுமாம். ஒருமுறை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு மனநோயாளி என்று நினைக்கின்றேன், தான் வாந்தி எடுத்த உணவை தன் பசிக்காக எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். என்ன கொடுமை பாருங்கள்! இந்த நிலமைதான் இன்றைய இந்தியாவில் இருக்கின்றது. உலக பணக்காரர் வரிசைகளில் எட்டு இடங்கள் நமக்குதான். அதே போல் இந்தியாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் உணவின்றி பட்டினி. இதுதான் நம் நாட்டின் இறையாண்மை.
"வசதியிருக்கின்றவன் தரமாட்டான் வயிறுப் பசித்தவன் விடமாட்டான்" உண்மைதான் வயிறுப் பசித்தவன் ஒருநாள் பிச்சி சாப்பிடும் காலங்களும் வரலாம். இன்றுவரை நில உச்சவரம்பு சட்டம் இந்தியாவில் அமுல் படுத்த முடியால் இருப்பதற்கு காரணம் என்ன? பல நிலப்பிரபுகள் அதிகார வர்க்கத்தில் இருப்பதால்தானே!.
பசியில்லா உணர்வும் ருசிக்காது அதற்காக பசியே வாழ்கையாக இருப்பதும் வெட்ககேடு. ஆதி மனிதன் தொட்டு இன்றைய மனிதன் வரை பசிக்காக அவற்றிக்கான உணவுக்காக போராட்டங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. குழுக்காளாக வாழ்ந்த மனித இனம் தனது உணவை சேமித்து வைக்கும் பழக்கம் வந்தது. இப்படி சேமித்த உணவுகளை வலியவர்கள் வந்து அபகரிப்பதும் இன்றைய தினம் வரை நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொல்வதுபோல்... "பசியும் சுண்டல் ருசியும் போனால்,.. பக்தியில்லை பசனையில்லை சுத்தமான சோம்பேறிகளின் வேசத்திலே!" பசியும் அந்த உணவிற்கான ருசியும் இல்லை என்றால் வாழ்வில் போராட்டங்கள் இருக்க வாய்பில்லை என்றே சொல்லலாம். அதேபோல் மனிதன் வாழ்க்கை முறைகள் பசியும் உணவையும் பொருத்தே வளர்ந்து வருகின்றது. அப்படிப்பட்ட பசியை பற்றி இன்னும் கொஞ்சம் அடுத்த இடுகைகளில் சிந்திப்போம்...
மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....(சிங்கை தமிழ்ப் பதிவர்கள் குழுமத்திற்காக)
உலக நாடுகளிலேயே எந்த நேரமும் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கும் நகரம் என்றால் அது சிங்கப்பூர் என்றே சொல்லலாம். தற்போழுது நாம் பார்க்கும் சிங்கப்பூர் ஏதோ திடீர் என குதித்துவிட்ட நாடு இல்லை. சிங்கப்பூரும் மற்ற நாடுகளை போல பல படிகளை கடந்துதான் இந்த நிலையை தொட்டுயுள்ளது. இந்த புதிய சிங்கப்பூரை உருவாக்கிய பெருமை பெரும் பகுதியை முன்னால் பிரதமரும் இன்று மூத்த அமைச்சருமாய் உள்ள திரு. லீ குவான் யூ வை சாரும்.
பச்சை முத்து தாத்தாவும் நானும்...பச்சை முத்து தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர். இந்திய மக்களால் நேதாஜி என்று அன்புடன் அழைகப்படும் சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அன்பாலும் சிந்தனைகளாலும் ஈக்கப்பட்டு அவர் வழியில் போராடிய ஒரு சுதந்திர போராட்ட வீரர்தான் என்றாலும், இன்றைய இந்திய அரசால் சுதந்திர போராட்ட வீரர்களுக்காண உதவிதொகை பெறமுடியாதவர். இந்திய தேசிய ராணுவத்தில்(INA) சேர்ந்து சுபாஸின் வழியில் போராடிய பலருக்கு இந்த உதவித்தொகை கிடைக்கவில்லை என்பது இவர் சொல்லிதான் எனக்கு தெரியும். போராட்டக் காலத்தில் இவர் சிங்கபூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக அடிக்கடி சொல்லுவார். சுதந்திர போராட்டத்தில் தன் வாழ்வில் பெரும்பகுதி இருந்துவிட்டதால் திருமணம் ஆகாமலே இருந்துவிட்டார். நான் ஊருக்கு எப்பொழுது சென்றாலும் இவரை பார்க்காமல் வருவதில்லை....
நான்: தாத்தா நல்லாயிருக்கிங்களா?
தாத்தா: யாரு சேகரா? வாப்பா பேராண்டி எப்படியிருக்க? சிங்கபூரிலிருந்து எப்ப வந்த? மனைவி பிள்ளைங்க எல்லாம் நல்லாயிருக்காங்களா?
நான்: நாங்க எல்லாம் நல்லாயிருக்கோம் தாத்தா. நீங்க எப்படியிருக்கீங்க? நம்ம நாட்டின் 63வது சுதந்திர தினம் வருகின்றது. உங்களை போன்றவர்களை பார்ப்பதில் பெருமையா இருக்கு தாத்தா. இந்த வயதிலும் கம்பீரமாக இருக்கின்றீர்கள் எப்படி தாத்தா?
தாத்தா: இந்த உடம்பு வெள்ளக்காரனுக்கு முன்னாடி துப்பாக்கியை தோளுல தூக்கிய உடம்பு. ஒருபக்கம் காந்திமகான் அமைதி வழியிலேயும் மறுபக்கம் சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் போன்றவர்கள் ஆயுதம் ஏந்தியும் போராடி பெற்ற சுதந்திரம் தான் நாம் இப்பொழுது அனுபவிப்பது. இவர்களுகுள் கருத்து வேறுபாடு இருந்ததென்னவோ உண்மைதான் ஆனால் நோக்கம் ஒன்னுதான், இந்தியா அடிமை தளத்திலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணங்கள இவர்களுக்கு இருந்தது. ம்ம்ம்.. இப்ப என்ன சொல்லுரதுன்னு தான் தெரியல மறுபடியும் இந்த அரசியல்வாதிகள் நாட்டை துண்டு போட்டு அந்த ஆங்கிலேயனுக்கே வித்துவிடுவானுங்க போல இருக்கு. நான் சாகரதுக்குள்ள அப்படியெல்லாம் நடக்க கூடாதுப்பா....
நான்: அப்படியெல்லாம் நடக்காது தாத்தா இந்த காலத்து இளைஞர்கள் தெளிவா இருக்கின்றார்கள். நாளைய அரசியலிலும் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு தாத்தா. (என்று தாத்தாவிற்காக சொன்னாலும் நடந்துவரும் லஞ்சம், அரசியல் அராசகம் எல்லாம் பார்த்தால் என்னாலும் பொறுக்க முடியவில்லைதான்)
தாத்தா: நீ சொல்லுரதும் சரிதான் ஆனால் இப்ப நடக்குர சாதிக்கலவரம், படிக்கரதுக்கு காசு வாங்குரானுங்க, நோவுனு போனா பணம் பணமுனு பேயா அழையுரானுங்க. இதெல்லாம் பார்க்க முடியலப்பா. வெள்ளைக்காரனுக்கு எதிரா துப்பாக்கி ஏந்திய எனக்கு இந்த கொள்ளை காரனுக்கு எதிரா ஏந்தனுமோ என்ற எண்ணம்தான் இருக்கு. வயசாயிருச்சி கண்ணும் மங்கி போச்சு ஆனா நம்ம நாடு நல்லாயிருக்கனும் என்ற வேறி மட்டும் அடங்கலப்பா சேகர்.
நான்: நீங்க சொல்லுரதும் சரிதான் தாத்தா. இதுகெல்லாம் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டதான் முடியும்னு தோனுது. லஞ்சம் வாங்குறவன், பணம் பணமுனு பேயா அழையுறவன் எல்லாம் யாரு தாத்தா. நம்மல ஒருத்தன் தானே! நம்ம அண்ணனோ தம்பியோ தானே! இவங்கள நாம திருத்த முடியாதா என்ன?
தாத்தா: பேராண்டி நீயும் சரியாதான் பேசுர ... அதுகெல்லாம் என்ன செய்யலாம்னு நீ நினைகிற? சுதந்திரம் வாங்கி 62 வருசம் ஆகியும் ஏழை ஏழையாதான் இருக்கான், பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிட்டான்.
நான்: ஆமாம் தாத்தா இந்தியா ஒரு ஏழை நாடு ஆனால் பணம் படைத்தவர்கள் அதிகம் உள்ள நாடு. அம்பானி வாழ்க்கை சரித்திரம் புத்தகம் ஒன்றில் படித்தேன் " நான் எனது முன்னேற்றதிற்கு காரணம் இந்திய அரசை நான் சரியாக புரிந்துக்கொண்டேன்" என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு சரியான அர்த்தம் நமக்கு புரியாமலா போகும். ஆமாம் தாத்தா பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கவே லஞ்சம் வாங்கியவர்கள் தானே நம்முடைய பிரதிநிதிகள். இவர்களை சட்டதிற்கு முன் நிறுத்தி தண்டனை பெறமுடியுற காரியமா என்ன?...
தாத்தா: அதுக்குதான் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் சொன்னாரு. நீங்கள் எல்லாம் அரசியலுக்கு போங்க நல்லது செய்யுங்க.
நான்: தாத்தா நீங்க சொல்லுவது பேச்சுக்கு நல்லாதான் இருக்கு ஆனா இந்த பாழபோன அரசியலுல போராடி வெற்றிபெற முடியுமா? அப்படி வெற்றி பெற வேண்டும் என்றால், அவர்கள் செய்யுற தவற்றைதான் நாமும் செய்யனும். அதுல என்ன ஞாயம் இருக்கு?
தாத்தா: நீ நினைப்பதை போல மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சுபாஸ்சந்திர போஸ், பகத்சிங் போன்றவர்கள் நினைத்துருந்தால் இன்றைய சுதந்திர இந்தியாவை பார்க்கமுடியுமா? பேராண்டி... "போராடினால்தான் வெற்றி! உழைத்தால்தான் உணவு!"
நான்: இப்படிதான் தோழர் கக்கன் போன்றோர் நேர்மையா அரசியல் பன்னுனாங்க அவர்களுக்கு இந்த சமுதாயம் என்ன செய்தது? ஒரு தகர பெட்டியும், உடுத்திகொள்ள ஒரு சில வேஷ்டியும் தானே இருந்தது.
தாத்தா: அப்படி நேர்மையா இருந்ததாலேதான் அவரைப் பற்றி பெருமையா நீ பேசுகின்றாய்.. அப்படிதான் நல்லது செய்யனும், ஒதுங்கி நின்னு கேள்வியை கேட்டுட்டு போரதுல என்ன முன்னேற்றம் காணமுடியும். ஏரில இறங்கி கலக்கினாதான் மீன் பிடிக்க முடியும். அப்படிதான் நாங்க அந்த வெள்ளையனை எதிர்த்து நின்னோம். அப்ப எங்கள் மனசுல நினைத்தது எல்லாம் நம்ம நாடு, நாட்டின் சுதந்திரம் மட்டும்தானே!
நான்: தாத்தா போன பாராளுமன்ற தேர்தலில் (2009) சென்னை சேப்பாக்கம் தொகுதில் படித்த இளைஞர் சரத் பாபு நின்றார். நல்ல நேர்மையாக உள்ளவர் அவருக்கு இந்த மக்கள் வாக்களித்தார்களா? இதை பார்த்த எந்த இளைஞன் அரசியலுக்கு வருவான்.
தாத்தா: அரசியலுக்கு வரவேண்டும் என்றால் தேர்தலில் நின்று வெற்றி பெர வேண்டும் என்று யார் சொன்னது. அப்படி வெற்றிப்பெற்றால் அவர்கள் செய்வதைதான் நீங்களும் செய்வீர்கள். போராடனும் சேவை செய்யனும் அதுதான் அரசியல். அப்படிதான் காமராஜர், அறிஞர் அண்ணா போன்றவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்னக்கி எல்லா கிராமத்திலயும் பள்ளிகூடம் இருக்குனா காமராஜர் புண்ணியம்தானே. அப்படிப்பட்ட அரசியல்வாதிகளை வேண்டிதான் நாம் நாடு இருக்கு... வெற்றி பெற்று சட்டசபைக்கோ நாடாளும் மன்றதிற்கோ போனால்தால் மக்களுக்கு நல்லது பன்னமுடியுமா? அப்படி அங்கே போனவர்களுக்கு நாமதானே புரியவைக்கனும். அதுக்கு மக்களோட மக்களாதானே போராடனும் சேவையும் செய்யனும்..
நான்: நீங்கள் வெள்ளையனை எதிர்த்து போராடினீங்க. வெற்றியும் கண்டீர்கள். நாங்கள் எதுக்காக போராடனும் எங்களின் அடிப்படை உரிமைகளை கொடுப்பது அரசின் கடமையள்ளவா?... பிறகு ஏன் அது மறுக்கப்படுகின்றது?
தாத்தா: அதுக்குதான் நீங்களெல்லாம் அரசிலுக்கு போங்கனு சொல்லுறேன். நல்லது பன்னுங்க யாரு வேனாமுன்னு சொன்னாங்க?.. விவேகாணந்தர் சொன்னது போல இந்நாட்டை வளப்படுத்த துடிப்புள்ள 100 இளைஞர்கள் போதுமே, தேவை நேர்மையும் உழைப்பும் மட்டும்தானே!... என்ன புரியுதா பேராண்டி?.....
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு நடந்த சம்பவம் ஒன்று. அவரசமான வேலையாக சென்றுக்கொண்டிருந்தார், கடைவீதி என்பதால் மக்கள் கூட்டம் நெரிசல் அதிகமாக இருந்தது. அந்த கூட்டத்திலும் ஒரு தாய் கைகுழந்தையுடன் "அண்ணா குழந்தை பசிக்காக அழுகின்றது உதவி செய்யுங்கள்" என்று சட்டையை பிடித்து கேட்டாள். கொஞ்சம் இரக்க குணம் உள்ளவர் வேறு வழியின்றி பணப்பையை சட்டையிலிருந்து எடுத்து உதவி செய்துவிட்டு அவசரமாக சென்று பேருந்து ஏறியதும்தான் தெரிந்தது அவரின் பணப்பை காணவில்லை. என்ன பன்னுவது உதவி செய்ததிற்கு கிடைத்த சன்மானம் ஏற்றுக்கொள்ளதானே வேண்டும். இதை அவர் வழியாக நான் கேட்டதிலிருந்து அப்படிப்பட்ட உதவிகளை நான் செய்வதில்லை என்றே சொல்லாம். ஏனனில் பயமும் ஒரு காரணம்.இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் மேலே ஜென் கதை ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. சாது ஒருவன் குதிரையில் மலைப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தார். மாலை நேரம் இன்னும் நகரத்தை அடைய வெகுதூரம் இருந்ததால் வேகத்தை கூட்டினார். போகும் வழியில் ஒருவன் சாலை ஒரம் மயங்கி கிடந்தான். அதை கண்டதும் சாது குதிரையை விட்டு இறங்கி அவனை நகர்த்தி பார்த்தார். அவன் அசையாமல் கிடந்ததால் குதிரையில் தொங்கவிடப்பட்ட குடுவையில் நீரை எடுத்து முகத்தில் தெளித்து பின் சிறிது அவனை அருந்த செய்து அவனை குதிரையின் மேல் ஏற்றினார். குதிரையில் அந்த நபர் ஏறி குதிரையின் கடிவாளத்தை ஆட்டியதும் குதிரை சிட்டாக பறந்தது. குதிரை சென்று சிறிது நேரத்திற்கு பின் தான் சாதுக்கு புரிந்தது வந்தவன் திருடன் என்றும் தன்னுடைய குதிரை களவாட பட்டது என்றும். இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதையும் புரிந்துக் கொண்டார் சாது.
குதிரையை பறிக்கொடுத்துவிட்டு மெதுவாக நகரத்தை நோக்கி நடக்க தொடங்கினார். பொழுது புலரும் நேரத்தில் நகரத்தை அடைந்தார். பின் குளித்து உடை மாற்றிக்கொண்டு சந்தைக்கு சென்றார் சாது. சந்தையில் தன் குதிரையுடன் அந்த திருடன் நின்றுக்கொண்டிருந்தான். மெதுவாக சாது அவன் பின் புறம் கையால் தட்டினார். திருடன் பேயறைந்தது போல நின்றான்.
சாது மெல்ல சிரித்துகொண்டே "சொல்லாதே" என்றார். அவனோ என்னவென்று புரியாது விழித்தான்.
சாது சொன்னார் " குதிரையை நீயே வைத்துக்கொள் ஆனால் நீ அந்த குதிரையை எப்படி பெற்றாய் என்ற வித்தையை மட்டும் சொல்லி விடாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரிந்தால் எதிர் காலத்தில் உண்மையிலேயே மயங்கிகிடக்கும் ஒருவனுக்கு உதவி செய்யமாட்டார்கள் என்ன புரிகின்றதா? " என்று சாது கூறியதும் திருடன் கலங்கினான்.
இப்படிப்பட்ட ஏமாற்றுவாதிகள் இருப்பதால் தான் உண்மையில் உதவி கிடைக்க வேண்டியவர்களுக்கு உதவி கிடைக்காமலே போய் விடுகின்றது. அதே போல் லஞ்சமும் பொய் வாக்குறுதிகளும் கொடுக்கும் அரசியல் வாதிகள் மத்தியில் தோழர் கக்கன் போன்றவர்களுக்கு மதிப்பு இல்லாமலே போய்விடுகின்றது. உண்மையும் எதார்த்தமான வாழ்க்கையும் புதைந்துகொண்டுள்ளது என்பது தான் நாளைய உலகத்தின் கேள்விக்குறி?????........
நீரையும் நிலத்தையும் பற்றி சொல்லிகொண்டே போனால் முடிவுக்கு வருவது சிரமம்தான், ஆனாலும் இதற்கு மேல் சொல்லிக்கொண்டே போனாலும் அலுப்பு வந்துவிடும். அதனால் இந்த பகுதியை இறுதியாக வைத்துக்கொள்வதுதான் உத்தமம். இருந்தாலும் சமயம் கிடைக்கும் பொழுது மேலும் யோசிக்கலாமே!.....
பூமியில் உள்ள உயிர்கள் தோற்றதிற்கு ஆதாரமே நீர்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல் நீரின் தேவைகள் இன்று அதிகரித்துள்ளது என்பது நமக்கு தெரிந்ததே ( அனுபவித்துக் கொண்டுள்ளோம்). ஒவ்வொரு துளி நீரும் ஏதோ ஒரு உயிர் அணுவை இயக்கிகொண்டுதான் இருக்கின்றது. "ஆக்கமும் பெண்ணாலே அழிவும் பெண்ணாலே" என்ற ஒரு பழமொழி வழக்கில் இருக்கின்றது அதுபோல உயிரின் ஆக்கத்திற்கும் நீரே, உயிரின் முடிவிலும் நீரே என்று எண்ணங்கள் இருக்கின்றது.
எனக்கு ஐந்து வயது இருக்கும்பொழுது என் அம்மாச்சி(அம்மாவின் அம்மா) பத்து காசு கொடுத்தார்கள். என்னிடம் பத்துகாசு கொடுத்ததும் மிக மகிழ்ச்சியாக நான் விளையாடினேன். எனக்கு சின்ன பொருள்களை வாயில் போட்டு விளையாடும் பழக்கம் இருந்திருக்கின்றது, அதேபோல் அந்த பத்து காசையும் வாயில் போட்டு விளையாடும் பொழுது விழுங்கிவிட்டேன். விழுங்கிய காசு தொண்டையில் படுக்கை வசமாக நின்று விட்டது. என்ன செய்தும் காசை எடுக்க முடியவில்லை. மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் ஓடியது. என் அதிஸ்ட்டம் (தமிழில் சொல்லுங்களேன்) பத்து காசின் ஓரங்களில் வலைவுகள் இருக்கும், அதனால் நீர் ஆகாரங்கள் உள்ளே செல்லமுடிந்தது. அந்த நீர்தான் என்னை இப்பொழுதும் உங்ளுடன் பேச வைத்துள்ளது என்றால் நீரின் முக்கியத்துவம் புரிகின்றது. பின்னர் மருத்துவமனையில் அந்த காசை எடுத்துவிட்டார்கள் என்பது வேறு விடயம்.
வயதானவர்களுக்கு திட உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு செறிமானம் ஆக சிரமம் வந்துகொண்டு இருக்கும். அதனால் அதிகம் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளுவார்கள். அதே போல் உயிர் போகும் நிலையில் இருக்கும் வயதானவர்கள் சிறிது பால் அல்லது நீரே ஆகாரமாக கொண்டு சிலநாட்கள் வாழ்வார்கள். அந்த நீரும் நின்று போனால் உறவினர்களுக்கு சொல்லி அனுப்பிவிடுவார்கள். ஒரு மனிதன் வாழ்வில் கடைசி மூச்சு இருக்கும் வரை நீரே ஆதாரமாக இருக்கின்றது. இப்படி மனித வாழ்வில் ஒட்டியே வரும் நீரை நமக்கு பின் உள்ள சந்ததினர்களுக்கு எப்படிப்பட்ட நிலையில் விட்டு செல்கின்றோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியது நம் கடமை.
இயற்கையை நாம் என்னதான் கட்டி காப்பாற்றினாலும் ( அப்படி இல்லை என்பது வேறு விடயம்) அவற்றின் சில மாற்றங்களை நாம் சந்தித்துதான் ஆகவேண்டும். சுனாமி போன்ற மாற்றங்களையும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். பருவ சூழ்நிலை காரணிகள்தான் ஒரு உயிரின் பரிணாம வளர்ச்சிக்கு காரணமாகின்றது. அப்படிப்பட்ட பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்தான் நாம் ஏற்றுக்கொண்ட மனித பாத்திரமும். ஒவ்வோரு காரணிகளின் அடிப்படையில் பரிணாம வளர்ச்சியில் சில மாறுதல்கள் இருப்பதை அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். இன்று நம் குழந்தைகளின் அறிவுத்திரண் நாம் அந்த வயதில் இல்லை என்பதும் உண்மைதானே.
மாறி வரும் பருவக்காலங்கள், உலகின் வெப்பம் அதிகரித்தல், குடிநீரின் பற்றாகுறை இப்படி பல காரணிகளால் நாளைய பரிணாம வளர்ச்சியில் என்ன மாற்றங்களை நாம் (மனிதன்) காண போகின்றோமோ????? யார்கண்டது! மாறிவரும் பருவ காலங்களால் உடலில் உரோமங்கள் அதிகரிக்கலாம். வெப்பத்தின் அதிகரிப்பால் தலையில் கொம்புகள் முளைக்கலாம். குடிநீரின் பற்றாகுறையால் ஒட்டகம் போல முதுகில் நீர்ப்பையுடன் பிறக்கலாம். கணனியில் உற்கார்ந்து உற்கார்ந்து கூனி குறுகி மீண்டும் நான்கு கால்களில் நடக்கலாம்..
கவலையை விடுங்கள் இப்படிபட்ட பரிணாம மாற்றங்கள் காண பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்... இருந்தாலும் நாம் இயற்கை கொடுத்த கொடைகளை நாம் தீண்டாதவரை இயற்கையும் நமக்காகவே இருக்கும்.... இயற்கை இயற்கையாக
அதற்காக மரங்களை எல்லாம் வெட்டி சாய்த்து விட்டு பசுமை புரட்சியை பற்றி பேசவேண்டாம். காடுகள் மழையின் ஆதரமாக இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை குறைசொல்வதை விட்டுவிட்டு நாமும் குறைந்து வரும் நீர் வளத்தை காப்பாற்ற ஏற்ற நடவடிக்கை எடுக்கலாம். நாம் வீணாக செலவழிக்கும் நீரின் ஒரு துளியும் நாளைய உலகின் சொத்து என்பதை கவணத்தில் கொள்வது நல்லது. வீட்டு தோட்டங்களின் இன்றைக்கு ஒரு மரமாவது நட்டுவையுங்கள். வீட்டின் தோட்டத்தில் காரைத்தளங்களை எடுத்துவிட்டு புள்வெளிகளை உருவாக்குங்கள் மழைநீர் சேமிக்கப்படும். என்னை பொருத்தவரை மனிதன் நினைத்தால் கல்லும் கவிபாடும்! கன இரும்பும் நடனமாடும்!..... ஆம் தோழர்களே! நீரை சேமித்து நாளைய உலகை வளமாக்குவோம்!....
தினமலரில் வந்த சில ஆவணப்புகைப்படம்....
ஒரு காணோளி பகிர்வு...
என்று அன்புடன் ஆ.ஞானசேகரன்.
(அடுத்து எதைப்பற்றி அலசல் ஆரம்பிக்கலாம் என்று சொல்லுங்கள் நட்புகளே!)
நான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.