_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, August 4, 2009

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-3

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-3

இதற்கு முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-1


நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-2

நீரின் அவசியமும் அதேபோல் நீரினை சேமிக்கும் விழிப்புணர்வும் வேண்டும் என்பதால்தான் இந்த மூன்றாவது பகுதிக்கு செல்கின்றோம். இயற்கையின் விசித்திரமான விளையாட்டில் பூமியில் மூன்று பங்கு நீரால் சூழப்பட்டாலும் குடிந்நீரின் அளவில் 3% தான் இருக்கின்றது. இதில் பெரும்பான்மை இடங்களில் நிலத்தடிநீரை நம்பிதான் வாழ்கின்றோம். மக்களின் நீர் தேவைகள் அதிகரிப்பால் நிலந்தடிநீர் எடுக்கப்பட்டு நிலத்தடி நீர் குறையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வு கூறுகின்றது.


குடிக்க தண்ணீர் இல்லாமல் நா வறண்டு போன நிலையில் தான் ஒரு சொட்டு தண்ணீரின் அருமை நமக்கு புரியும். இயற்கை நமக்கு கொடுத்த கொடைகளில் குறை வைக்கவில்லை. ஆனால் நாம்தான் இயற்கையை பேணிக்காக்க தவறிவிட்டோம்.

"தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே" என்ற பழமொழி உண்டு. அந்த அளவிற்கு நம் முன்னோர்கள் தண்ணீரை பற்றி அறிந்தே வந்துள்ளார்கள். பூமியில் இருக்கும் எல்லா வளத்திற்கும் ஆதாரம் முதன்மை என்பது தண்ணீர்தான். பூமியை தவிர எந்த கோள்களிலும் உயிர்கள் இல்லை ஏனெனில் அங்கெல்லாம் நீர் இல்லை. உயிர்களின் ஆதாரம் நீர்தான் என்பதிலிருந்து நீரின் முக்கியதுவம் புரிகின்றது.

மனித கழிவுகள், தொழிற்சாலைகளில் வெளியேரும் வேதிக்கழிவுகள், மாமிச கழிவுகள் எல்லாம் ஏரிகளிலும், நதியோரங்களிலும் கலந்து விடப்படுவதால் நீரின் தன்மை மாற்றம் கண்டு அது அதனை சார்ந்த நிலத்தடிநீர் மாசுப்பட்டு உவர்ப்பு தன்மைக்கு கொண்டு செல்கின்றது. அதனால் அங்கு வளரும் தாவரங்கள் உயிரிழக்க நேரிடுகின்றது. தாவரங்களின் அழிவு நம் இயற்கை சூழலை மாசுப்பட வைக்கின்றது. இதனால் ஆக்ஸிசனின் அளவும் வளிமண்டலத்தில் குறைகின்றது. இதனால் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் பாதிக்க வாய்ப்புள்ளதாக 1980 ல் கண்டறியப்பட்டது.

நம்நாட்டு பொருளாதர கொள்கையின் அடிப்படையில் (உலகமயமாக்கல்) பண்நாட்டு வர்த்தகங்கள் கோக்கோ கோலா போன்ற நிர்வணங்கள் பல இடங்களின் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடிநீரை உருஞ்சி தண்ணீரை காசாக்கி பார்க்கின்றனர். இப்படி ஆழ்குழாய்கள் மூலம் நீரை உறிஞ்சப்படுவதால் அருகில் உள்ள கிராமங்களுக்கு நிலத்தடிநீர் தட்டுபாடாகவும், கிடைக்கும் நீர் உவர்ப்பாகவும் ஆக்கப்பட்டு வருகின்றது. மேலும் அதனின் கழிவுகள் விளைநிலங்களை மாசுப்படுத்தி விளைச்சலை பாதிக்க செய்துவிட்டது. இது போன்ற நிலைகளை அரசுகள் பொறுப்பற்ற நிலையில் நடந்துக்கொள்வதன் மூலம் நாட்டின் நீர் செல்வத்தை வீணடிக்கின்றது.
நிலத்தடிநீரை பாதுக்காக இடதுசாரி கட்சிகள் போராடியும் எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட நிலை நீடித்தால் நாளைய சந்ததியர் நீருக்காக போராடும் நிலைதான் உருவாகும். இதை கவணத்தில் கொண்டு அரசுகள் நிலத்தடி நீரை பாதுக்காக்க தோலைநோக்கு திட்டங்களை அறிமுகம் படுத்த வேண்டும். மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

மழை நீர் சேமிப்பின் அவசியம்: சாதாரணமாக நிலத்தில் பெய்யும் மழை நீர் 40% நிலத்தில் ஓடி கடலில் கலந்துவிடுகின்றது. 35% சூரிய வெப்பத்தால் ஆவியாகியும் மீதம் உள்ளநீர் பூமியில் உறிஞ்சப்பட்டு மண்ணின் ஈரப்பதம் போக அதில் 5% தான் நிலத்தடி நீருக்கு செல்கின்றது. மேலும் நகரங்களில் உள்ள கட்டங்கள், சிமெண்ட் காரைகள் மற்றும் தார் ரோடுகளின் காரணமாக மழை நீர் நிலத்தில் ஓடி சாக்கடைகளில் கலந்து வீனாகின்றது. மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக நீரின் தேவையும் அதிகரிக்கும் பொழுது மழை நீரை சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்பதில் சந்தேகங்கள் இல்லை.

2001 ல் முன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த வீடுகளில் மழை நீர் சேமிக்கும் திட்டம் பலனை கொடுத்தாலும் அதன் பின் வந்த அரசு திட்டத்தை உடப்பில் போட்டதுமில்லாமல், அதற்கான நல்வழிகளையும் அறிமுகம் பன்னாமாலும், ஆய்வு செய்யாமலும் விட்டது வருத்தப்படவைகின்றது. அதே போல் விவசாய கிணறுகளில் மழை நீர் சேமிக்கும் திட்டமும் காணாமல் போய்விட்டது.

மழைநீரை சேமிக்க வீடுகளில் கட்டிடங்களை சுற்றி ஆங்காங்கே 3 அடி ஆழமும் 12 அங்குல விட்டமும் கொண்ட துளைகளை அமைத்து அதில் கூலாங்கல், மணல் போன்றவற்றல் நிறப்பி தூவாரங்கள் உள்ள சிலாப்பில் மூடிவிடலாம். இதன் மூலம் இரண்டு வருடங்களில் நிலத்தடி நீரை உயர்த்த முடியும் என்று சொல்லப்படுகின்றது. பழங்காலங்களில் மழைக்காலங்களில் கூரைகளில் வரும் நீரை சுண்ணாம்பினால் வடிகட்டி தொட்டிகளில் சேமித்து பயன்படுத்தினார்கள் என்று சில வரலாறுகள் சொல்கின்றது. மகாத்மா காந்தியடிகள் தன் வீட்டில் இதுபோன்ற தோட்டிகள் மூலம்தான் நல்ல தண்ணீரை பயன்படுத்தினாராம்.

என்னதான் இயற்கை நமக்கு நீரை வழங்கினாலும் நாமும் நீரை சேமித்து பயன்ப்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் நாளைய உலகம் நம்கைகளில். இந்த இடுகையில் நீரை சேமிக்கும் அவசியம் பற்றி பார்த்தோம். அடுத்து வரும் இடுகைகளில் நீரை எவ்வாறு சேமிக்கலாம் என்பதையும். எப்படிப்பட்ட முறைகளில் நீரை சிக்கனமாக பயன்படுத்த முடியும் என்பதைப்பற்றி கலந்து யோசிப்போம்.

நீர் சேமிப்பு பற்றிய நல்ல காணோளி கண்டிப்பாக பார்க்கவும்.

இன்னும் நீரை பற்றிய யோசனையில்
ஆ.ஞானசேகரன்.

26 comments:

sakthi said...

கலக்குங்க சேகரன்

வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...

கலக்குங்க சேகரன்

வாழ்த்துக்கள்//

வாங்க சக்தி மிக்க நன்றிபா

உமா said...

வீடு கட்டும் முன் மழைநீர் சேமிப்பு கட்டாயமாக்கப்பட்டாலும் ஒரு குழாயை முறையின்றி வைத்துவிட்டு மழைநீர் சேகரிப்பு செய்வதாக கணக்கு காட்டிவிட்டு பிளான் அப்ரூவல் வாங்கிவிடுகிறார்கள். யாரை யார் ஏமாற்றுகிறார்கள் எனததெரியவில்லை. நீரில்லை என்றால் குடத்தை எடுததுக்கொண்டு, அரசாங்கத்தை திட்டியபடியே நீண்டவரிசையில் நிற்கிறார்கள். சண்டையிட்டுக் கொள்கிறார்கள். மக்களும் நிறைய செய்யவேண்டும்.

ஆ.ஞானசேகரன் said...

//உமா said...

வீடு கட்டும் முன் மழைநீர் சேமிப்பு கட்டாயமாக்கப்பட்டாலும் ஒரு குழாயை முறையின்றி வைத்துவிட்டு மழைநீர் சேகரிப்பு செய்வதாக கணக்கு காட்டிவிட்டு பிளான் அப்ரூவல் வாங்கிவிடுகிறார்கள். யாரை யார் ஏமாற்றுகிறார்கள் எனததெரியவில்லை. நீரில்லை என்றால் குடத்தை எடுததுக்கொண்டு, அரசாங்கத்தை திட்டியபடியே நீண்டவரிசையில் நிற்கிறார்கள். சண்டையிட்டுக் கொள்கிறார்கள். மக்களும் நிறைய செய்யவேண்டும்.//

உண்மைதான் உமா....
நீர் சேமிப்பின் பொறுப்புணர்ச்சியும் விழிப்புணர்ச்சியும் மக்களிடம் இல்லை.

முதலின் நீரின் தேவையும் அவற்றில் சேமிப்புப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் கொண்டுவர வேண்டும்...

நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்பது உண்மை

மிக்க நன்றி உமா

louis said...

ஐயா மிக அருமையான பதிவு

ஆ.ஞானசேகரன் said...

// louis said...

ஐயா மிக அருமையான பதிவு//

நன்றி ஐயா

Anonymous said...

ஞானசேகர் இந்த பதிவின் மூலம் உங்கள் எழுத்தின் மதிப்பு மேலும் உயர்வடைந்துள்ளது...உபயோகமான பதிவு என்ற ஒரு வார்த்தை போதாது...அனைவரையும் போய் சேர வேண்டிய விஷயம்... நன்றாக ஆழமாய் யோசித்து பதிவை பதிவு செய்து இருக்கிறீர்கள்.. எல்லாம் அறிந்தும் நாம் அறியாதவர்களாய் நடந்து கொள்ளும் விஷயங்களில் இதுவும் ஒன்று,,,,

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

ஞானசேகர் இந்த பதிவின் மூலம் உங்கள் எழுத்தின் மதிப்பு மேலும் உயர்வடைந்துள்ளது...உபயோகமான பதிவு என்ற ஒரு வார்த்தை போதாது...அனைவரையும் போய் சேர வேண்டிய விஷயம்... நன்றாக ஆழமாய் யோசித்து பதிவை பதிவு செய்து இருக்கிறீர்கள்.. எல்லாம் அறிந்தும் நாம் அறியாதவர்களாய் நடந்து கொள்ளும் விஷயங்களில் இதுவும் ஒன்று,,,,//

வாங்க தமிழ்..
உங்கள் கருத்துரைக்கும் மிக்க நன்றிமா..

கார்த்திகைப் பாண்டியன் said...

பயனுள்ள இடுகை.. படிப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.. அருமை தலைவரே..

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

பயனுள்ள இடுகை.. படிப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.. அருமை தலைவரே..//

வணக்கம் கார்த்திகைப் பாண்டியன்
மிக்க நன்றி தலைவா

Suresh Kumar said...

அரசுக்கு எவ்வளவு பொறுப்புணர்வு இருக்கோ அதே போல் மக்களுக்கும் இருக்க வேண்டும்

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

அரசுக்கு எவ்வளவு பொறுப்புணர்வு இருக்கோ அதே போல் மக்களுக்கும் இருக்க வேண்டும்//

உண்மைதான் நண்பா...
மிக்க நன்றி

Muniappan Pakkangal said...

Nalla thodar Gnanseharan,you are right on the importance of maintaining groundwater level.

Anonymous said...

பயனுள்ள இடுகை..

குறை ஒன்றும் இல்லை !!! said...

அருமையான பகிர்வுங்க...வாழ்க வளமுடன்!!!

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
Nalla thodar Gnanseharan,you are right on the importance of maintaining groundwater level.//

மிக்க நன்றி சார்..

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...
பயனுள்ள இடுகை..//


வாங்க நண்பா.. மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...
அருமையான பகிர்வுங்க...வாழ்க வளமுடன்!!!//


வணக்கம் நண்பரே! வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிமா

கிரி said...

//2001 ல் முன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த வீடுகளில் மழை நீர் சேமிக்கும் திட்டம் பலனை கொடுத்தாலும் அதன் பின் வந்த அரசு திட்டத்தை உடப்பில் போட்டதுமில்லாமல், அதற்கான நல்வழிகளையும் அறிமுகம் பன்னாமாலும், ஆய்வு செய்யாமலும் விட்டது வருத்தப்படவைகின்றது. அதே போல் விவசாய கிணறுகளில் மழை நீர் சேமிக்கும் திட்டமும் காணாமல் போய்விட்டது.//

இது எனக்கு ரொம்ப வருத்தம்..

கலைஞர் இதிலும் கூட போட்டி பொறாமையால் விட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது.

இலவச திட்டங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இதில் கால் பங்கு கூட கொடுக்கப்படவில்லை.

ஹேமா said...

//ஞானசேகரன்...இன்னும் நீரை பற்றிய யோசனையில்
ஆ.ஞானசேகரன்.//

சாப்பாடு இல்லாமக்கூட கொஞ்சா நாளைக்கு உயிரோட இருந்திடலாம்.தண்ணீர் இல்லாமல் குறைந்தது 3 நாடகளில் சோர்ந்துவிடுவோம்.தண்ணி குடிச்சுக்க்கிட்டே யோசியுங்க.

நீர் சேமிப்புப் பற்றிய காணொளி பிரயோசனமானது.மிக மிகப் பிரயோசனமான பதிவு.
ஆவணப்பதிவும் கூட.

இப்படியான பதிவுகள் ஏன்தான் தமிழ்மணத்தில் பரிந்துரை செய்யப்படுவதில்லையோ தெரியவில்லை.ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத பதிவுகளெல்லாம் பரிந்துரை செய்யப்பட்டவையாம்.

ஆ.ஞானசேகரன் said...

/// கிரி said...
//2001 ல் முன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த வீடுகளில் மழை நீர் சேமிக்கும் திட்டம் பலனை கொடுத்தாலும் அதன் பின் வந்த அரசு திட்டத்தை உடப்பில் போட்டதுமில்லாமல், அதற்கான நல்வழிகளையும் அறிமுகம் பன்னாமாலும், ஆய்வு செய்யாமலும் விட்டது வருத்தப்படவைகின்றது. அதே போல் விவசாய கிணறுகளில் மழை நீர் சேமிக்கும் திட்டமும் காணாமல் போய்விட்டது.//

இது எனக்கு ரொம்ப வருத்தம்..

கலைஞர் இதிலும் கூட போட்டி பொறாமையால் விட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது.

இலவச திட்டங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இதில் கால் பங்கு கூட கொடுக்கப்படவில்லை.
///

உண்மைதான் கிரி...
அதற்காக நாம் இயற்கையை பாதுகாக்காமல் இருப்பது நம் சன்நதினருக்கு நல்லது இல்லை. உங்களின் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி கிரி...

ஆ.ஞானசேகரன் said...

/// ஹேமா said...
//ஞானசேகரன்...இன்னும் நீரை பற்றிய யோசனையில்
ஆ.ஞானசேகரன்.//

சாப்பாடு இல்லாமக்கூட கொஞ்சா நாளைக்கு உயிரோட இருந்திடலாம்.தண்ணீர் இல்லாமல் குறைந்தது 3 நாடகளில் சோர்ந்துவிடுவோம்.தண்ணி குடிச்சுக்க்கிட்டே யோசியுங்க.

நீர் சேமிப்புப் பற்றிய காணொளி பிரயோசனமானது.மிக மிகப் பிரயோசனமான பதிவு.
ஆவணப்பதிவும் கூட.

இப்படியான பதிவுகள் ஏன்தான் தமிழ்மணத்தில் பரிந்துரை செய்யப்படுவதில்லையோ தெரியவில்லை.ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத பதிவுகளெல்லாம் பரிந்துரை செய்யப்பட்டவையாம்.///

மிக்க நன்றி ஹேமா,... தமிழ்மணம் பரிந்துரைகளைவிட உங்களை போன்ற நண்பர்களின் பாராட்டுகள் நல்ல ஊக்கம் கொடுக்கின்றது, மீண்டும் நன்றி ஹேமா.

சந்ரு said...

அருமையான தொடர் பதிவு நண்பரே......... வாழ்த்துக்கள்.......

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

அருமையான தொடர் பதிவு நண்பரே......... வாழ்த்துக்கள்....//

மிக்க நன்றி நண்பா

சி.கருணாகரசு said...

நல்லது ஞானசேகரன்.அக்கறையுள்ள... அவசியமான பதிவு தொடர்க தொண்டு.

ஆ.ஞானசேகரன் said...

//சி.கருணாகரசு said...
நல்லது ஞானசேகரன்.அக்கறையுள்ள... அவசியமான பதிவு தொடர்க தொண்டு//
மிக்க நன்றி நண்பரே