_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, July 30, 2009

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்.... பகுதி-1

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-1

நீர் இல்லா நிலையை இந்த பூமியில் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதேபோல் நீர் இல்லாமல் உயிரின் ஒரு அணுவும் அசையாது என்பதும் உண்மையே. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமி வெறும் பாறையாகதான் இருந்ததாக அறிவியல் சொல்கின்றது. அப்பொழுது எந்த உயிர்களும் இல்லை. முதலில் செடி கொடிகள்தான் இந்த பூமியை கண்ட உயிர் என்றே சொல்கின்றார்கள். இதற்கெல்லாம் மூலமாக இருப்பது நீர். இந்த செடி கொடிகள்தான் சுவாசித்தலின் மூலம் ஆக்ஸிசனை (O2) வெளியிட்டு பூமியில் ஆக்ஸிசனை நிறப்பியது. இந்த ஆதாரம்தான் மனிதனை போல விலங்கினங்கள் உருவாக காரணமாக இருந்தது.

பூமி பந்தின் நிலப்பரப்பு தற்பொழுது இருப்பது பல மாற்றங்களுக்கு பிறகு வந்த நிலைதான். அதற்கு முன் இந்தியா ஆசியா கண்டத்திலேயே இல்லை ஆப்ரிகாவுடன் இணைந்திருந்தது. இயற்கையின் பல மாற்றங்களுக்கு பின் உருவானதுதான் இன்றைய உலகம். பூமி பந்தின் மைத்தியில் வயிற்று பகுதியை தவிர வடக்கிலும் தெற்கிலும் எல்லாமே பனி பாறைகள்தான். இவற்றை பனி பாலைவனங்கள் என்றே சொல்லலாம்.

இப்படிப்பட்ட பனிப் பாலைவனங்களை மனிதன் வாழ்வதற்கு தவிர்க்கப்பட்டது. இயற்கை செய்த விளையாட்டில் சுமார் 17,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெப்பஉயர்வு பூமி பந்தின் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டதாக அறிவியலர்கள் கூறுகின்றார்கள். அந்நாளில் ஏற்பட்ட வெப்ப உயர்வு உலகின் பருவநிலையில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டது. இந்த நிகழ்வுதான் நாகரிகத்தின் ஆதாரமாக அமைந்துவிட்டது என்றால் மிகையாகாது.

அந்த பருவநிலை மாற்றங்கள் உலகில் தொடர்ந்தது. அந்த மாற்றம்தான் உலகை மாற்றியமைக்க முதன்மையான காரணமாக அமைந்துவிட்டது. தெற்கிலும் வடக்கிலும் உள்ள பனிப்பாறைகள் வெப்ப உயர்வு காரணமாக உருக ஆரப்பித்தது. பனி உருகி நீராகியது. நீர் நதிகளாகி கடலில் கலந்தது. அதனால் கடல்மட்டம் உயர்ந்தது.

வெப்ப அதிகரிப்பால் கடல் நீர் நீராவியாக மாறி மேலே கிளம்பி பின் மழையாக கொட்டியது. இதனால் ஏரி , குளங்கள் நதிகளாக ஓட ஆரம்பித்தது. இந்த நதிக்கரைதான் மனித நாகரிக வளர்ச்சியின் ஆதாரம். இந்த நதிக்கரை நாகரிகம்தான் மனித வரலாற்றை மாற்றியமைக்கப்பட்டது என்றே சொல்லலாம். இதற்கு பின் பருவநிலை மாற்றங்கள் உருவாகின.

இந்த பனி உருகல் சுமார் 3000 ஆண்டுகள் தொடர்ந்ததாக கணக்கிடப்படுகின்றது. இதனால் நதிகளும் ,கிளை நதிகளும் உருவாகின அதனோடு மனித நாகரிகமும் வளர்ச்சிப்பெற்றது. அதே போல் கடல் மட்டம் உயர்வால் பல நிலப்பரப்புகள் துண்டிக்கப்பட்டது, பல நீரினால் மூழ்கடிக்கப்பட்டது. நதிகள் போக்கால் நிலப்பரப்பும் நகர்த்தப்பட்டது. இப்படிப்பட்ட நிகழ்வுக்கு பின் உருவானதுதான் இன்றைய உலகப்படத்தில் காணும் உலகம். நதிகள் பொதுவாக மேற்கிலிருந்து கிழக்காக ஓடி கடலில் கலக்கும் இதற்கு பூமி பந்தின் வலம் சுழற்சியே காரணம்.

பூமியில் நான்கில் மூன்று பங்கு நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் கடல் நீர் உவர்ப்பாக இருக்கும். நீருக்கு சுவையும் மணமும் கிடையாது என்றாலும் அந்த நீர் இருக்கும் நிலத்தின் தன்மையைக்கொண்டு சுவையும் மணமும் இருக்கும்.

உயிர்கள் வாழ நீர் மிக முக்கியம் . நீரை நன்னீர், கடினநீர் எனப்பிரிக்கலாம். நன்னீரில் வேதி உப்புகளும் திண்ம உலோகங்களும் குறைவாக இருக்கும். இந்த நீர்தான் மனிதன் குடிப்பதற்கும் வேளாண்மைக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

நன்னீர் எங்கெல்லாம் கிடைக்கின்றது? நதி, ஏரி,குளம், ஊற்று, நிலத்தடியில், கேணிகள் மூலம் கிடைக்கின்றது.

நன்னீர் எப்படி உருவாகின்றது? பனி உருகுதல் மூலமும், மழையினாலும் நன்னீர் கிடைக்கின்றது.

நன்னீரின் நிலை என்ன? நன்னீர் மூன்று நிலைகளில் காணலாம். நீர்,பனிகட்டி,நீராவி ஆகும். இது மூன்றையும் ஒரே நேரத்தில் காண்பது அரிது. ஆனால் 4 டிகிரி செல்சியசில் இந்த மூன்றையும் காணலாம்..!

இப்படிப்பட்ட நன்னீர்தான் நாம் உயிர்வாழ பயன்ப்படுகின்றது. கடலிருந்து சூரியவெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று பின் குளிர்ந்து மழையாக பெய்கின்றது இதில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியிருந்தும் குடிநீருக்காக நாம் இன்று சிரமப்படுவதேன்?

இயற்கையாக கிடைக்கும் நன்னீர் மற்றும் நிலத்தடிநீருக்கு மனிதனால் ஏற்பட்ட தீங்குதான் என்ன? இவற்றையெல்லாம் சிந்திப்பதற்குதான் இந்த இடுகையின் நோக்கம். அன்று ஏற்பட்ட வெப்ப உயர்வால் ஏற்பட்ட மாற்றம்தான் இன்றைய நாகரிகம். ஆனால் இன்று மனிதனால் ஏற்பட்ட இயற்கை அழிவால் ஏற்பட்ட மாற்றத்தால் உலகம் வெப்பம் சிறிது உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் வெப்பம் உயர்ந்துகொண்டே இருக்கின்றது. இவற்றால் நன்மையா? தீமையா?. பொதுவாக மனித உயிர்களுக்கு தீமைதான் இதை தடுக்க வேண்டும் என்று சொல்கின்றது பொது அறிவியல். இன்றைய நிலையில் பருவநிலை மாற்றங்களை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். நீரினால் நோய்கள், குடிநீருக்காக போராட்டங்கள். காசுக்கு வாங்கி நீரை குடிக்கும் நிலை மனிதனுக்கு மனிதனே காரணமாகின்றான். நீரை தனி ஒரு பொருளாக உருவாக்கவும் முடியாது என்பதுதான் உண்மை.

2025ல் ஆசியா ஆப்பிக்கா நாடுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் உருவாகலாம் என்று கணக்கிடப்படுகின்றது. ஏன் நீருக்காக ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்கும் காலமும் வரலாம் என்று எச்சரிக்கை விடப்படுக்கின்றது. இருந்தாலும் மக்களிடம் எந்த விதமான விழிப்புணர்வும் வரவில்லை என்பதுதான் கவலைக்கிடமான ஒன்று. வளர்ந்துவரும் நாடுகள் கூட இதைப்பற்றி பெரிதுப்படுத்திக்கொண்டதாக தெரியவில்லை. வளர்ந்த நாடுகளோ நமக்கென்ன என்ற நிலையில் இருக்கின்றது.

குடிநீர் எப்படி மாசுப்படுகின்றது? நிலத்தடிநீர் குறைய காரணம் என்ன? உலக வெப்ப மயமானதிற்கும் குடிநீருக்கும் தொடர்பு உண்டா? இதை தடுக்க நாம் செய்ய் வேண்டிய கடமை என்ன? என்பதை பற்றி அடுத்து வரும் இடுகைகளில் பார்க்கலாம்.

அதுவரை அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

(சில ஆதாரங்கள் மதன் எழுதிய கிமு. கிபி தொடரில் எடுக்கப்பட்டது.)

51 comments:

கோவி.கண்ணன் said...

அடுத்த தொடரா ? வாழ்த்துகள் !

"நீரி(இ)ன்றி யமையா உலகு" என்பது போல்,

"நீரின்றி அழியும் உலகு" ங்கிறிங்க ! சரிதான்

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் கண்ணன்..
மிக்க நன்றிங்க

Suresh Kumar said...

நண்பா நீரின் தேவையை உணர்ந்து நீரும் நிலமும் என்ற தொடரை எழுதுகிறீர்கள் பல நல்ல விசயங்களை சொல்லியிருக்கிறீர்கள் . அடுத்த தொடர்களையும் எதிர் பார்கிறேன்

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

நண்பா நீரின் தேவையை உணர்ந்து நீரும் நிலமும் என்ற தொடரை எழுதுகிறீர்கள் பல நல்ல விசயங்களை சொல்லியிருக்கிறீர்கள் . அடுத்த தொடர்களையும் எதிர் பார்கிறேன்//

மிக்க நன்றி நண்பா

சி. கருணாகரசு said...

நல்ல பதிவு, வாழ்த்துகள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல கருத்துகள்.. நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்..

சொல்லரசன் said...

இன்றைய அவசியதேவை நீர்,இதை பற்றிய உங்கசமூக பார்வை பதிவு அருமை. அடுத்த பாகத்தை படிக்க‌ ஆவலாக உள்ளோம்

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...

நல்ல பதிவு, வாழ்த்துகள்//

வணக்கம் சி.கருணாகரசு

மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல கருத்துகள்.. நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்..//

நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...

இன்றைய அவசியதேவை நீர்,இதை பற்றிய உங்கசமூக பார்வை பதிவு அருமை. அடுத்த பாகத்தை படிக்க‌ ஆவலாக உள்ளோம்//

வாங்க சொல்லரசன்...
உங்களின் கருத்துரைக்கு நன்றிபா

RajK said...

நன்று. சொல்லவரும் கருத்து புரிகின்றது. ஆனால், மிகைபடுத்தலுக்கவோ மற்ற மொழி அழகியலுக்காவோ பயன்படுத்திய சில கருத்துக்கள் சரியாக இல்லை.

//நீர் இல்லா இந்த உலகத்தை நினைத்துகூட பார்க்க முடியாது.//

உலகம், இந்த பூமி மட்டுமே என்றால், நீர் இல்லா உலகத்தை நினைத்துகூட பார்க்க சற்று கடினம் தான். ஆனால், இந்த உலகம் மிக பெரியது; அதில் இந்த பூமி சிறு தூசியை விட சிறியது. கோடான கோடி நட்சத்திரங்களுக்கு சுடர் தரும், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் இல்லா உலகை நினைத்து பார்ப்பது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம். நீரில்லா உயிரை நினைத்து பார்ப்பதும் சற்று கடினம் தான். ஆனால், மற்ற மூலக்கூறுகளிலிருந்து, வேறுவிதமான உயிர்கள், மற்ற அயல் கிரகத்தில் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லாமலும் இல்லை.

// நீர் இன்றி உலகில் ஒரு அணுவும் அசையாது என்பதுதான் உண்மை.//

நீர், அணுவினால் உருவாக்கப்பட்ட ஒரு மூலக்கூறு; அணுவின்றி நீரில்லை. ஒருவேளை நீங்கள் கூறவருவது உயிரணுவாக இருக்கலாம்.

//ஆனால் இந்த பூமி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வெறும் பாறையாகதான் இருந்ததாக அறிவியல் சொல்கின்றது. அப்பொழுது எந்த உயிர்களும் இல்லை. முதலில் செடி கொடிகள்தான் இந்த பூமியை கண்ட உயிர் என்றே சொல்கின்றார்கள்.//

இன்னும் சரியான பார்வைக்கு:
http://sites.google.com/site/artificialcortext/putiya-parvai/uyir-entiram
(இது என் site என்பதால் அல்ல; அறிவியல் காணும் ஆர்வத்தால்)

கதியால் said...

பயனுள்ள பதிவு...தொடரட்டும் வாழ்த்துக்கள்...!!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

பயனுள்ள இடுகை...சில தகவல்களில் தவறு உள்ளது.. சரி செய்து விடுங்கள் தலைவரே.. அடுத்த இடுகையை எதிர்பார்க்கிறேன்..

நையாண்டி நைனா said...

பயனுள்ள இடுகை...அடுத்த இடுகையை எதிர்பார்க்கிறேன்..

" உழவன் " " Uzhavan " said...

நல்ல பதிவின் தொடக்கம். உரைக்கும் படியாக எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

sakthi said...

இந்தியா ஆசியா கண்டத்திலேயே இல்லை ஆப்ரிகாவுடன் இணைந்திருந்தது. இயற்கையின் பல மாற்றங்களுக்கு பின் உருவானதுதான் இன்றைய உலகம். பூமி பந்தின் மைத்தியில் வயிற்று பகுதியை தவிர வடக்கிலும் தெற்கிலும் எல்லாமே பனி பாறைகள்தான். இவற்றை பனி பாலைவனங்கள் என்றே
சொல்லலாம்.

புதிய தகவல்

தொடர் இடுகைகளா

வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

//RajK said...
நன்று. சொல்லவரும் கருத்து புரிகின்றது. ஆனால், மிகைபடுத்தலுக்கவோ மற்ற மொழி அழகியலுக்காவோ பயன்படுத்திய சில கருத்துக்கள் சரியாக இல்லை.//

நீங்கள் சொல்லும் கருத்திற்கு உடன்படுகின்றேன்.. சில அழகுபடுத்துதலில் வந்த குறைகள்.. வரும் இடுகைகளில் தவிற்க முயற்சிகின்றேன்..

ஆ.ஞானசேகரன் said...

// கதியால் said...
பயனுள்ள பதிவு...தொடரட்டும் வாழ்த்துக்கள்...!!!!
//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// நையாண்டி நைனா said...
பயனுள்ள இடுகை...அடுத்த இடுகையை எதிர்பார்க்கிறேன்..//


மிக்க நன்றி நைனா

ஆ.ஞானசேகரன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
பயனுள்ள இடுகை...சில தகவல்களில் தவறு உள்ளது.. சரி செய்து விடுங்கள் தலைவரே.. அடுத்த இடுகையை எதிர்பார்க்கிறேன்..//


மிக்க நன்றி நண்பா.. தவறுகளை சுட்டுங்கள் கழைந்துவிடலாம்...

ஆ.ஞானசேகரன் said...

//" உழவன் " " Uzhavan " said...
நல்ல பதிவின் தொடக்கம். உரைக்கும் படியாக எழுதுங்கள். வாழ்த்துக்கள்!
//


மிக்க நன்றி நண்பா.... முடிந்தவரை முயற்சிகின்றேன்..

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...
இந்தியா ஆசியா கண்டத்திலேயே இல்லை ஆப்ரிகாவுடன் இணைந்திருந்தது. இயற்கையின் பல மாற்றங்களுக்கு பின் உருவானதுதான் இன்றைய உலகம். பூமி பந்தின் மைத்தியில் வயிற்று பகுதியை தவிர வடக்கிலும் தெற்கிலும் எல்லாமே பனி பாறைகள்தான். இவற்றை பனி பாலைவனங்கள் என்றே
சொல்லலாம்.

புதிய தகவல்

தொடர் இடுகைகளா

வாழ்த்துக்கள்//

வாங்க சக்தி.. மிக்க நன்றிங்க‌

ஷண்முகப்ரியன் said...

பயனுள்ள தகவலகள்.வாழ்த்துகள்,ஞானசேகரன்.

கிரி said...

//மக்களிடம் எந்த விதமான விழிப்புணர்வும் வரவில்லை என்பதுதான் கவலைக்கிடமான ஒன்று//

இது கவலை அளிக்கும் விஷயம்..மக்களும் இதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது வருத்தமளிக்கிறது (அரசு உட்பட)..இந்த விசயத்தில் ஜெ வை பாராட்டலாம்

ஹேமா said...

//2025ல் ஆசியா ஆப்பிக்கா நாடுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் உருவாகலாம் என்று கணக்கிடப்படுகின்றது. ஏன் நீருக்காக ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்கும் காலமும் வரலாம் என்று எச்சரிக்கை விடப்படுக்கின்றது.//

ஞானசேகரன்,நீர் பற்றிய அரிய தேவையான தகவல்கள் சொல்லிப் பயத்தையும் உண்டாக்கிவிட்டீர்கள்.
தொடரும் நீரின் பதிவுக்காக தாகத்தோடு காத்திருக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

// ஷண்முகப்ரியன் said...

பயனுள்ள தகவலகள்.வாழ்த்துகள்,ஞானசேகரன்.//

வணக்கம் ஷண்முகப்ரியன் சார்...
உங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

ஆ.ஞானசேகரன் said...

/// கிரி said...

//மக்களிடம் எந்த விதமான விழிப்புணர்வும் வரவில்லை என்பதுதான் கவலைக்கிடமான ஒன்று//

இது கவலை அளிக்கும் விஷயம்..மக்களும் இதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது வருத்தமளிக்கிறது (அரசு உட்பட)..இந்த விசயத்தில் ஜெ வை பாராட்டலாம்///

உண்மைதான் கிரி.. ஜெ வின் மழை நீர் சேமிப்பு திட்டம் தற்பொழுது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஆ.ஞானசேகரன் said...

/// ஹேமா said...

//2025ல் ஆசியா ஆப்பிக்கா நாடுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் உருவாகலாம் என்று கணக்கிடப்படுகின்றது. ஏன் நீருக்காக ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்கும் காலமும் வரலாம் என்று எச்சரிக்கை விடப்படுக்கின்றது.//

ஞானசேகரன்,நீர் பற்றிய அரிய தேவையான தகவல்கள் சொல்லிப் பயத்தையும் உண்டாக்கிவிட்டீர்கள்.
தொடரும் நீரின் பதிவுக்காக தாகத்தோடு காத்திருக்கிறேன்.///

வாங்க ஹேமா...
உங்ககளின் தாகம் தீர்க தகவல்களின் உந்துதல்களை தேடுகின்றேன்... மிக்க நன்றி ஹேமா

சந்ரு said...

நல்லதொரு இடுகை வாழ்த்துக்கள் நண்பரே. நல்ல பல கருத்துக்களை இடுகைகளாக வழங்கும் உங்கள் பணி தொடரட்டும்.

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

நல்லதொரு இடுகை வாழ்த்துக்கள் நண்பரே. நல்ல பல கருத்துக்களை இடுகைகளாக வழங்கும் உங்கள் பணி தொடரட்டும்.//

வணக்கம் சந்துரு
உங்களின் பாராட்டுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிபா

முனைவர் சே.கல்பனா said...

வணக்கம் நீரின் இன்றியமையாமையை உணர்ந்த நம்முடைய பாட்டன் வள்ளுவனார் வான் சிறப்பு என்ற அதிகரத்தையே படைத்துள்ளார்.இளங்கோவடிகளும் மாமழை போற்றுதும் என நீரினைப் போற்றுவார்...........

உமா said...

நல்ல பதிவு. வாழ்த்துகள். சில ஆதாரங்களை ஆராய்ந்து எழுதினீர்களென்றால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

உமா said...

RajK ன் பதிவைப் பார்த்தீர்களா. அடிப்படையான் சி்ல அறிவியல் கருத்துக்களை அழகாக சொல்லியிருக்கிறார். வாழ்த்துக்கள் RajK க்கு.

உமா said...

RajK ன் பதிவைப் பார்த்தீர்களா. அடிப்படையான் சி்ல அறிவியல் கருத்துக்களை அழகாக சொல்லியிருக்கிறார். வாழ்த்துக்கள் RajK க்கு.

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர் சே.கல்பனா said...

வணக்கம் நீரின் இன்றியமையாமையை உணர்ந்த நம்முடைய பாட்டன் வள்ளுவனார் வான் சிறப்பு என்ற அதிகரத்தையே படைத்துள்ளார்.இளங்கோவடிகளும் மாமழை போற்றுதும் என நீரினைப் போற்றுவார்...........//


வணக்கம்...
நீங்கள் கூறுவதுபோல் நம் பாட்டனார்கள் உணர்ந்த அளவிற்கு நான் உணரவில்லை என்றே தோன்றுகின்றது

மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// உமா said...

நல்ல பதிவு. வாழ்த்துகள். சில ஆதாரங்களை ஆராய்ந்து எழுதினீர்களென்றால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.//

வணக்கம் உமா...
மிக்க நன்றிங்க, என்னால் முடிந்தவரை ஆராய்ந்து எழுத முயற்சிகின்றேன்...

ஆ.ஞானசேகரன் said...

// உமா said...

RajK ன் பதிவைப் பார்த்தீர்களா. அடிப்படையான் சி்ல அறிவியல் கருத்துக்களை அழகாக சொல்லியிருக்கிறார். வாழ்த்துக்கள் RajK க்கு.//

படித்தேன் நன்றாக சொல்லியுள்ளார்

வால்பையன் said...

பகிர்தலுக்கு நன்றி!

முதன் முதலில் நீர் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்று எதாவது ஐடியா இருக்கா?

RajK said...

தங்கள் வழிமொழிதலுக்கு நன்றி உமா!

//வால்பையன் said...
பகிர்தலுக்கு நன்றி!
முதன் முதலில் நீர் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்று எதாவது ஐடியா இருக்கா?//

நீர், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களிலிருந்து உருவான முலக்கூறு. உலகில் நீர் மிக அரிதானது எனவும், அது பூமியில் மட்டுமே உள்ளது எனவும் பொதுவாக கருத்து உள்ளது. ஆனால், நீர் மற்ற கிரகங்களிலும், விண்கற்களிலும், நட்சத்திரங்களிடையே உள்ள இடைவெளியில் உள்ள மேகத்திலும் உள்ளது. ஆனால், அவையெல்லாம் பனியாக உறைந்துபோய் உள்ளது. செவ்வாய் கிரத்தின் வெப்பநிலையை உயர்த்தினால் (எப்படி என்று நமக்கு தெரியாதா என்ன? அதை செய்துதான் நாம் பூமியை படுத்திவிட்டோமே! Greenhouse வாயுக்களை செலுத்த வேண்டும்) அதன் பனிநீர் உருகும். இவ்வாறு அதை உயிர்வாழ ஏற்ற இடமாக மாற்ற வாய்ப்புள்ளது.

ஆ.ஞானசேகரன் said...

//வால்பையன் said...
பகிர்தலுக்கு நன்றி!

முதன் முதலில் நீர் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்று எதாவது ஐடியா இருக்கா?
//
வணக்கம் நண்பா.
உங்களின் கேள்விக்கு நண்பர் ராஜ் மிக அழகாக சொல்லியுள்ளார். நானும் அதை அறிந்துகொண்டேன்.. அதேபோல் தனி ஒரு பொருளாக நீரை தயாரிக்க முடியவில்லை என்பது இன்றைய கருத்து. அப்படி ஒரு நிலை வந்தால் நம் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படலாம்.

ஆ.ஞானசேகரன் said...

/// RajK said...
தங்கள் வழிமொழிதலுக்கு நன்றி உமா!

//வால்பையன் said...
பகிர்தலுக்கு நன்றி!
முதன் முதலில் நீர் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்று எதாவது ஐடியா இருக்கா?//

நீர், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களிலிருந்து உருவான முலக்கூறு. உலகில் நீர் மிக அரிதானது எனவும், அது பூமியில் மட்டுமே உள்ளது எனவும் பொதுவாக கருத்து உள்ளது. ஆனால், நீர் மற்ற கிரகங்களிலும், விண்கற்களிலும், நட்சத்திரங்களிடையே உள்ள இடைவெளியில் உள்ள மேகத்திலும் உள்ளது. ஆனால், அவையெல்லாம் பனியாக உறைந்துபோய் உள்ளது. செவ்வாய் கிரத்தின் வெப்பநிலையை உயர்த்தினால் (எப்படி என்று நமக்கு தெரியாதா என்ன? அதை செய்துதான் நாம் பூமியை படுத்திவிட்டோமே! Greenhouse வாயுக்களை செலுத்த வேண்டும்) அதன் பனிநீர் உருகும். இவ்வாறு அதை உயிர்வாழ ஏற்ற இடமாக மாற்ற வாய்ப்புள்ளது.///


உங்களின் நல்ல பகிர்தல்... பாராட்டுகள், நீங்களும் இதைப்பற்றி விளக்கமான இடுகை இடலாம் என்பது என் கருத்து

RajK said...
This comment has been removed by the author.
Muniappan Pakkangal said...

Nalla pathivu Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Nalla pathivu Gnanaseharan.//

வணக்கம் மிக்க நன்றி சார்

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Anonymous said...

It is actually a great and useful piece of information.
I'm happy that you shared this useful information with us. Please keep us up to date like this. Thanks for sharing.
My web site - free iphone

Anonymous said...

This post is invaluable. When can I find
out more?
Here is my website ; piano lessons

Anonymous said...

Your mode of describing all in this paragraph is genuinely fastidious, every one be capable of easily understand it, Thanks a lot.
My site > drum tobacco

Anonymous said...

Just wish to say your article is as astonishing. The clearness
in your post is just spectacular and i can assume you are
an expert on this subject. Well with your permission let
me to grab your RSS feed to keep up to date with forthcoming post.
Thanks a million and please carry on the enjoyable work.
Feel free to visit my web blog ... old holborn

Anonymous said...

You are so awesome! I do not think I've read anything like this before. So great to find another person with some genuine thoughts on this issue. Really.. many thanks for starting this up. This website is something that is needed on the internet, someone with a little originality!
Here is my webpage - amphora tobacco

Anonymous said...

Its like you read my mind! You seem to understand so much about this, such as you wrote the guide in it or something.

I believe that you just can do with some % to force the message house a bit, however instead of that, this is great blog. An excellent read. I'll certainly be back.
My weblog ... mac baren