_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, July 31, 2009

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-2

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-2

இதற்கு முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-1

குடிநீரும் அதன் அவசியமும் சொல்ல தேவையில்லை. தாவரங்கள் முதல் மனிதன் வரை உயிர்வாழ மிக அவசியமானதாகும். மனிதனின் உடலில் பிரதான சக்தி நீராக இருக்கின்றது.


மனிதன் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் தேவை நீர். நம் பூமியானது நான்கில் மூன்று பகுதி நீரால் சூழப்பட்டிருந்தாலும். மனிதனின் தேவைக்கு மழை நீரையும், நிலத்தடி நீரை பயன்ப்படுத்த வேண்டியுள்ளது. கடல் நீர் உப்புத்தன்மையும் கடினதன்மையும் உள்ளதால் நேரடியாக விவசாயத்திற்கோ இல்லை குடிநீராகவோ பயன்படுத்த முடியவில்லை. கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் இருந்தும் நடைமுறைக்கு இன்னும் வரவில்லை. இதன் செலவினங்கள் அதிகம்.. ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் காட்டாற்று தண்ணீரையும் நதிநீரையும் சேமிக்காமல் கடலில் கலக்க செய்துவிட்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை தீட்டுகின்றார்கள். உபரியாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து குடிநீராக்கும் திட்டங்களை கொண்டு வரலாமே!

மனிதன் நாகரிகம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி என்றால் இந்த நூறு வருடங்களை எடுத்துகொள்ளலாம். அதிலும் அதீத வளர்ச்சி என்றால் ஒரு 50 வருடங்களை சொல்லலாம். அந்த 50 வருடங்களில் 40 வருடங்களை நான் கடந்து வந்ததில் எனக்குள் மகிழ்ச்சியே. நான் கண்ட குடிநீர் மாற்றங்களையும் பிரச்சனைகளையும் சொன்னாலே போதுமானதாக இருக்கலாம்.

ஆதிகால மனிதன் நாடோடியாக காடுகளில் சுற்றி திரிந்துக் கொண்டும் கண்ணில் கண்ட பழங்கள் கிழங்குகளை உண்டும் வாழ்த காலங்களை தாண்டி, என்று மனிதன் குழுக்களாக ஓர் இடத்தில் தங்கி வாழத்தொடங்கினானோ அன்றுதான் மனித நாகரிகமும் வளர்ச்சிக் கண்டது. அதேபொல் அவனால் உண்டாக்கப்பட்ட கழிவுகளும் பிரச்சனைகளாக உருவாகிவிட்டது.

இயற்கையான கழிவுகளை இயற்கையே சமன் செய்துவிடும். ஆனால் மனிதன் நாகரிக வளச்சிப்பாதையில் உண்டான தொழிற்ச்சாலை வேதியியல் கழிவுகள் நதியிலும் ஆற்று படுகைகளிலும் கலந்து விடப்பட்டன. இதனால் நதிநீரும் மாசுப்பட்டது அதனைச் சார்ந்து நிலத்தடிநீரும் உவர்ப்பானது. இதன் காரணமாக பல நோய்களும் வர ஆரம்பித்துவிட்டது. 65 சதவிகிதம் நோய்கள் நீரினால் பரவுகின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நாம் வரலாற்று பாடங்களில் படித்துள்ளோம், குளங்களை வெட்டினார் அணைகள் கட்டினார்கள் ஆனால் இன்று நடப்பது குளங்கள் தோரும் துண்டு போட்டு வீடுகள் கட்டினோம். தப்பி தவறி இருக்கும் குளங்கள் தூரு வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் இன்றைய நிலை.

நான் சிறுவனாக இருக்கும் பொழுது வயல்களில் களைப்பறிக்கும் என் பாட்டிக்கு சோறு எடுத்து செல்வதுண்டு. அப்பொழுது குடிக்க தண்ணீர் எடுத்து செல்வதில்லை வயல்வெளிகளில் உள்ள வாய்க்காலில் வரும் தண்ணீரை மேலாக வரும் தூசிகளை நீக்கிவிட்டு ஒரு குவளையில் எடுத்து குடிப்பார்கள். நானும் குடித்துள்ளேன் அந்த தண்ணீரின் சுவையை இன்று நான் சுவைக்கவில்லை. மழை நீர் மற்றும் காட்டாற்று தண்ணீரை சேமித்து வைப்பதுதான் அந்த குளம். குளத்தின் நீர் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படுகின்றது. சிறு சிறு மாசுகள் கலந்திருப்பினும் இயற்கையே அதை சமன் படுத்திவிடும். ஆனால் இன்று மனித கழிவுகளும் பக்கத்து தொழிச்சாலையில் வரும் கழிவுகளும் நேரடியாக கலந்துவிடுகின்றது. இதனால் அந்த ஊரின் நிலத்தடிநீரும் உவர்ப்பாகிவிடுகின்றது.

மனித நாகரிக வளர்ச்சிதான் இந்த சீர்கேடுக்கு காரணம் என்று சொல்வதிற்கில்லை. நாகரிக வளர்ச்சியையும் நாம் ஏற்றுகொள்ளதான் வேண்டும். அதே வேலையில் தொலை நோக்குப்பார்வையில் சில நடவடிக்கைகளும் நாம் மேற்கொண்டால்தான் இந்த பூமியை நாளைய தலைமுறைக்கும் விட்டு செல்ல முடியும்.

தனிப்பட்ட மனிதனின் முன்னேற்ற வழிகளை அவனால் பார்த்துக்கொள்ளமுடியும். பார்த்துக்கொள்ளதான் வேண்டும். ஆனால் குளங்களை வெட்டுவது, அவற்றை தூர்வாறுவது, நதிகளின் போக்கை பயன்படும்படி நடவடிக்கை எடுப்பது, அணைகள் கட்டி பாசன வசதியை அதிகப்படுத்துவது எல்லாம் நாம் நமக்காக ஏற்படுத்திய அரசுதான் செய்ய வேண்டும். அதுதான் அரசின் தலையான கடமையும் கூட. நாம் காண்பது இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்குதல், இலவச வேட்டி சேலை வழங்குதல்.

முன்பெல்லாம் ஊர் திருவிழாக்களில் தண்ணீர் பந்தல் வைப்பார்கள். எனக்கு தெரிந்து கோடைக்காலங்களில் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் தண்ணீர் பந்தல் ஒரு சேவையாக செய்வார்கள். ஆனால் இன்று குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதுதான் இன்றைய மிகப்பெரிய கவலை. இந்த நிலை வெறும் பத்தாண்டுகளில் தான் நடந்துள்ளது என்றால் நாம் எதோ ஒன்றை தவறவிட்டுவிட்டோம் என்பதுதான் உண்மை.

எங்கள் ஊரில் ஒரு குளம் ஒன்று இருக்கும் . இந்த குளத்தில் மழையின் நீரை தேக்கி வைக்கப்பட்டிருக்கும் . இந்த குளத்தை குடிநீருக்காகவே பயன்படுத்துவார்கள். இந்த நீர் பார்ப்பதற்கு செம்மண் நிறத்தில் இருக்கும் ஆனால் அதன் சுவை தீத்திப்பாக இருக்கும். இந்த செம்மண் நிற தண்ணீரை மண்பாண்டத்தில் எடுத்துவந்து தேத்தாங் கொட்டையை பானையினுள் சிறிது நேரம் உரசுவார்கள் செம்மண் நிறம் திரிந்து வெளிராகும். பின்பு ஒரு துணியில் வடிக்கட்டி குடிநீராக பயன்படுத்துவார்கள். எங்கள் ஊருக்கு வருபவர்கள் தோத்தாங்கொட்டை தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி குடிப்பார்கள் அந்த அளவிற்கு சுவையாக இருக்கும். காலமும் நாகரிக வளர்ச்சியும் இப்படிப்பட்ட நிகழ்வுகளை மறக்கடிக்க செய்துவிட்டது என்று நினைக்கின்ற பொழுது கொஞ்சம் மனம் கலங்கத்தான் செய்யும்.

காலங்களின் வளர்ச்சினால் மனிதன் பெரிய பெரிய கட்டிடங்களிலும் தனித்தனி வீடுகளிலும் வசிக்க ஆரம்பித்தான். அதே போல் வீடுகளில் தனியாக குளியல் அறை, கழிவறை என்ற அமைப்புக்கு சென்றான். (இன்னும் கழிவறை இல்லா வீடுகளும் இருக்கு அதே போல் திறந்த வெளியில் மலம் போக்கும் நிலையும் இருக்கு என்பதும் கசப்பான உண்மை) இதனால் தண்ணீரின் பயன்பாடும் அதிகரித்தது அதனுடன் அதன் கழிவுகளும் அதிகரித்தது. இப்படி வரும் கழிவுகளை முறையற்ற நிலையில் மறுபடியும் நதிகளிலும் ஆறுகளிலும் கலந்துவிடுவதால் வந்த நிலைதான் இன்றைய சுகாதரமற்ற குடிநீருக்காண காரணங்கள்.

தாகம் என்று வருபவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதும் . தண்ணீர் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்வதும் மக்களின் பண்பாடாக இருந்தது. ஆனால் இன்று பணம் கொடுத்து வாங்கி தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை. இவற்றிக்காண காரணங்களை வரும் இடுகைகளில் யோசிப்போம்.....

அதுவரை அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

என் இடுகைக்கு பின்னர் வந்த தினமலர் செய்தி... கண்டிப்பாக படித்து தெரிந்துகொள்ள வேண்டியவை சுட்டியை அமுக்கி படிக்கவும்..





அழிவின் விளிம்பில் கொடைக்கானல் ஏரி

40 comments:

Suresh Kumar said...

காட்டாற்று தண்ணீரையும் நதிநீரையும் சேமிக்காமல் கடலில் கலக்க செய்துவிட்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை தீட்டுகின்றார்கள்.////////////////////

தொலை நோக்கு பார்வையற்ற ஆட்சியாளர்களால் இதை விட வேறு என்ன செய்ய முடியும் .

Suresh Kumar said...

நல்ல இடுகை நண்பா இது போன்ற மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த கூடிய இடுகைகள் மிக முக்கியம்

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

நல்ல இடுகை நண்பா இது போன்ற மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த கூடிய இடுகைகள் மிக முக்கியம்///

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

காட்டாற்று தண்ணீரையும் நதிநீரையும் சேமிக்காமல் கடலில் கலக்க செய்துவிட்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை தீட்டுகின்றார்கள்.////////////////////

தொலை நோக்கு பார்வையற்ற ஆட்சியாளர்களால் இதை விட வேறு என்ன செய்ய முடியும் .//

வருங்கால சன்னதிக்கு நாம் ஏதாவது விட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நமக்கும் இருக்கவேண்டும் நண்பா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல விழிப்புணர்வு பதிவு ஞானம்!

சொல்லரசன் said...

//என்னவென்றால் காட்டாற்று தண்ணீரையும் நதிநீரையும் சேமிக்காமல் கடலில் கலக்க செய்துவிட்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை தீட்டுகின்றார்கள். //

நதிகளின் குறுக்கே தடுப்பனை கட்டி அதில் குடிநீர்தேவைகளை மட்டும்மல்லாது
மின்சாரம் எடுக்க எம்,ஜி.ஆர் காலத்தில் திட்டம் தீட்டி மேட்டூஅனை முதல்
பவானி வரை காவேரி நதியில் நான்கு தடுபனை கட்டப்பட்டது.அதன்பின் வந்த‌
எந்த அரசும் இதை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

ஆ.ஞானசேகரன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல விழிப்புணர்வு பதிவு ஞானம்!//

வணக்கம் ஜோதிபாரதி..
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

/// சொல்லரசன் said...

//என்னவென்றால் காட்டாற்று தண்ணீரையும் நதிநீரையும் சேமிக்காமல் கடலில் கலக்க செய்துவிட்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை தீட்டுகின்றார்கள். //

நதிகளின் குறுக்கே தடுப்பனை கட்டி அதில் குடிநீர்தேவைகளை மட்டும்மல்லாது
மின்சாரம் எடுக்க எம்,ஜி.ஆர் காலத்தில் திட்டம் தீட்டி மேட்டூஅனை முதல்
பவானி வரை காவேரி நதியில் நான்கு தடுபனை கட்டப்பட்டது.அதன்பின் வந்த‌
எந்த அரசும் இதை கண்டுகொண்டதாக தெரியவில்லை.///

உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி சொல்லரசன்.... போதிய அளவு திட்டங்கள் தற்போதைய அரசிடம் இல்லை என்பது வருத்தப்படக்கூடியது.. அதேபோல் தோலைநோக்கு பார்வையில் தண்ணீர் பற்றாக்குறையை தவிற்க்க எந்தவித விழிப்புணர்வும் கொண்டுவரவில்லை என்பது கசப்பான ஒன்று

மிக்க நன்றி சொல்லரசன்

குறை ஒன்றும் இல்லை !!! said...

பல நல்ல விசயங்களை தருகிறீங்க.. வாழ்த்துக்கள்..

பனையூரான் said...

நல்ல கருத்துக்கள்

பனையூரான் said...
This comment has been removed by the author.
ஆ.ஞானசேகரன் said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...

பல நல்ல விசயங்களை தருகிறீங்க.. வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//பனையூரான் said...

நல்ல கருத்துக்கள்//

மிக்க நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா சொல்லி இருக்கீங்க நண்பா

பா.ராஜாராம் said...

நல்ல,விசாலமான பார்வையும் பதிவும் சேகர்...

Muniappan Pakkangal said...

Nice info Gnanaseharan.

கிரி said...

சமூக அக்கறை உள்ள பதிவு ..தண்ணீருக்காக அனைவரும் அடித்துக்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை

ஆ.ஞானசேகரன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நல்லா சொல்லி இருக்கீங்க நண்பா//

மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்

ஆ.ஞானசேகரன் said...

//பா.ராஜாராம் said...
நல்ல,விசாலமான பார்வையும் பதிவும் சேகர்...//



உங்களின் வருகைக்கும்.... கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பாரே

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...
Nice info Gnanaseharan.//



வணக்கம் சார். மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// கிரி said...
சமூக அக்கறை உள்ள பதிவு ..தண்ணீருக்காக அனைவரும் அடித்துக்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை//

உண்மைதான் கிரி.. அதற்கு முன் ஒரு தொலைநோக்கு பார்வையில் நாமும் ஏதாவது செய்ய வேண்டியது நம் கடமை... மிக்க நன்றி கிரி

sakthi said...

தாகம் என்று வருபவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதும் . தண்ணீர் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்வதும் மக்களின் பண்பாடாக இருந்தது. ஆனால் இன்று பணம் கொடுத்து வாங்கி தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை.

மிகவும் கொடுமையான விஷயம் இது தான் சேகரன்

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...
தாகம் என்று வருபவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதும் . தண்ணீர் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்வதும் மக்களின் பண்பாடாக இருந்தது. ஆனால் இன்று பணம் கொடுத்து வாங்கி தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை.

மிகவும் கொடுமையான விஷயம் இது தான் சேகரன்//

வணக்கம் சக்தி.
உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க‌

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே

ஹேமா said...

//முன்பெல்லாம் ஊர் திருவிழாக்களில் தண்ணீர் பந்தல் வைப்பார்கள். எனக்கு தெரிந்து கோடைக்காலங்களில் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் தண்ணீர் பந்தல் ஒரு சேவையாக செய்வார்கள். ஆனால் இன்று குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதுதான்
இன்றைய மிகப்பெரிய கவலை.//

எங்கள் ஊரிலும் இதே நிலைமைதான்.மிகவும் கவலையான விடயம்.உங்கள் சமூக அக்கறை வெளிப்பாடு மனதைத் தொட்டே நிற்கிறது.ஆனாலும் பழைய நிலைமை திரும்பவும் வருமா என்பது பெரியதொரு கேள்விக்குறியே.
இருப்பதையாவது இன்னும் அழியவிடாமல் செம்மைப்படுத்தலாம்.

ஆ.ஞானசேகரன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே//

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

/// ஹேமா said...

//முன்பெல்லாம் ஊர் திருவிழாக்களில் தண்ணீர் பந்தல் வைப்பார்கள். எனக்கு தெரிந்து கோடைக்காலங்களில் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் தண்ணீர் பந்தல் ஒரு சேவையாக செய்வார்கள். ஆனால் இன்று குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதுதான்
இன்றைய மிகப்பெரிய கவலை.//

எங்கள் ஊரிலும் இதே நிலைமைதான்.மிகவும் கவலையான விடயம்.உங்கள் சமூக அக்கறை வெளிப்பாடு மனதைத் தொட்டே நிற்கிறது.ஆனாலும் பழைய நிலைமை திரும்பவும் வருமா என்பது பெரியதொரு கேள்விக்குறியே.
இருப்பதையாவது இன்னும் அழியவிடாமல் செம்மைப்படுத்தலாம்.///

வாங்க ஹேமா,
உங்களின் க்ருத்துரைக்கும் மிக்க நன்றி.
நீங்கள் சொல்வது போல இருப்பதையாவது அழியவிடாமல் இருக்க நாம் ஏதாவது செய்தே ஆகவேண்டும்...
மீண்டும் நன்றி ஹேமா

வலசு - வேலணை said...

உண்மைதான்!
ஆனால் தண்ணீரை விற்றுப் பிழைப்பு நடத்துபவர்கள் அப்படிச் செய்வதை அரசியல்வாதிகளைக் கொண்டு தடுத்து விடுவார்களே!

ஆ.ஞானசேகரன் said...

///வலசு - வேலணை said...

உண்மைதான்!
ஆனால் தண்ணீரை விற்றுப் பிழைப்பு நடத்துபவர்கள் அப்படிச் செய்வதை அரசியல்வாதிகளைக் கொண்டு தடுத்து விடுவார்களே!///

நீங்கள் சொல்லுவதும் சரி என்றாலும் நீரின் ஆதாரங்களை இன்று காப்பாற்றவில்லை என்றால் நாளைய சன்நதினருக்கு கிடைப்பது இந்த பூமி சுடுகாடாக இருக்கலாம்

Anonymous said...

நல்ல இடுகை நண்பா

பா.ராஜாராம் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சேகர்!

Admin said...

நல்லதொரு பதிவு மட்டுமல்ல அவசியமான பதிவும் கூட தொடருங்கள்...

Admin said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

ஆ.ஞானசேகரன் said...

// கடையம் ஆனந்த் said...

நல்ல இடுகை நண்பா//

மிக்க நன்றி நண்பா.... கொஞ்சம் நாளா காணவில்லை..

ஆ.ஞானசேகரன் said...

// பா.ராஜாராம் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சேகர்!//

நன்றி நண்பா.. உங்களுக்கும் என் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

நல்லதொரு பதிவு மட்டுமல்ல அவசியமான பதிவும் கூட தொடருங்கள்...///


மிக்க நன்றி நண்பா

// சந்ரு said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..//

உங்களுக்கும் என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் தோழா

பழமைபேசி said...

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்

என்பார்கள். ஞானியாரே உமது எழுத்தும் சிந்தனையும் நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது. வாழ்த்துகள், அமைதியாய்ப் புரட்சி படைத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் இளைஞர்கள். பெருமையாய் இருக்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

// பழமைபேசி said...

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்

என்பார்கள். ஞானியாரே உமது எழுத்தும் சிந்தனையும் நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது. வாழ்த்துகள், அமைதியாய்ப் புரட்சி படைத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் இளைஞர்கள். பெருமையாய் இருக்கிறது.///

வாங்க பழம..
மிக்க மகிச்சி...
நன்றிபா

உமா said...

அருமை அருமை ஞானசேகரன். தினமலர் செய்தியோடுதந்திருப்பது இந்தகட்டுரையின் மு்கியத்துவத்தை எடுததுக்காட்டுகிறது. வாழ்த்துக்கள். மிக அவசியமான பதிவு,சுவையாக முழுதும் படிக்கும் வகையில்.

ஆ.ஞானசேகரன் said...

// உமா said...

அருமை அருமை ஞானசேகரன். தினமலர் செய்தியோடுதந்திருப்பது இந்தகட்டுரையின் மு்கியத்துவத்தை எடுததுக்காட்டுகிறது. வாழ்த்துக்கள். மிக அவசியமான பதிவு,சுவையாக முழுதும் படிக்கும் வகையில்.//

மிக்க நன்றிங்க உமா