_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, January 27, 2009

இயற்கை இயற்கையாக!...

இயற்கை இயற்கையாக!....
இதற்கு முன் இயற்கையையும் மனிதனால் வரும் மாற்றங்களைப் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன். இந்த பதிவிற்கு அந்த பதிவும் ஏற்றவையாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்... படிக்காதவர்கள் சுட்டியை சுட்டவும்....

இந்த முறை திருச்சி என் வீட்டிற்கு செல்லும் பொழுது பக்கத்து வீட்டில் இரண்டு கிளி வளர்த்து வந்தார்கள். மிகவும் நல்ல கிளி, கொஞ்சம் தமிழும் கொஞ்சம் சிங்களமும் கலந்து பேசுமாம் நான் பார்த்ததில்லை. ஒருநாள் ஒரு கிளி வெளியில் பறந்து சென்று விட்டது என்று மிகவும் வருத்தப்பட்டார். நான் பரவாயில்லை விடுங்கள் அது சந்தோசமாக இருந்துவிட்டு போகட்டும் என்றேன். அவர் சொன்னார் இல்லை சார் அந்த கிளி எங்கள் வீட்டில் 10வருடம் இருந்துவிட்டது வெளியில் சென்றால் மற்றகிளிகளுடன் போராட பழக்கமில்லாமல் இறந்துவிடும் "அதுதான்" வருத்தமாக இருக்கின்றது என்றார்...........???????
இதுதானுங்க நம்முடைய சின்ன சந்தோசத்திற்காக இயற்கையாக வாழும் பறவைகளையும் விலங்குகளையும் நாம் நசுக்கி விடுகின்றோம்... இயற்கையில் அவைகள் வாழ கற்றுக்கொண்டுவிடும். நாம் அதற்கு உணவழிப்பதன் மூலம் அவைகள் போராட பலம் இழந்தைவையாக இறக்க வேண்டி வரும். பறவைகளும் விலங்குகளும் இயற்கையின் சொந்தகாரர்கள் அவைகளுக்கு இயற்கையே உணவழிக்கும். அந்த உணவில்தான் அவைகள் நோய்களில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்கின்றது. இந்த இயற்கையான வட்டத்தை கெடுத்தமேயானால் அவைகள் உலகிலிருந்து அழிந்தேபோகும்....

கிழே உள்ள படத்தை பார்க்கவும்....(சிங்கபூர் தேசிய பூங்காவில் வைக்கப்பட்டது...)

மேற்கண்ட படத்தின் சாரம், ... உங்களின் உணவு அவைகளுக்கு ஏற்றவையாக இல்லை என்பதை குறிக்கும்... சிங்கபூரில் இயற்கையான விலங்கினங்களுக்கு உணவழித்தால் அபதாரமும் விதிக்கப்படுகின்றது..

மனிதன் இயற்கையின் அங்கமாக இருந்தாலும் அவனின் ஆறரறிவு இயற்கையை ரசிக்கலாமே தவிற அவற்றை தடுக்கவோ கெடுக்கவோ செய்வானாயின், தீவிறமான பாதிப்பை சந்தித்தே ஆகவேண்டும்.. அந்த இயற்கையின் அழகிற்கு இயற்கையே சொந்தகாரன்..... அந்த இயற்கையின் அழகில் (படம் பார்க்க.....) கல்லை கக்கத்தில் வைத்துக்கொண்டு வளரும் மரம்,....... மர கிளைகளில் பூத்தும் காய்த்தும் சிரிக்கும் மரம்,...... முயலின் முக சாயலில் இருக்கும் பூ..... இப்படி இயற்கை இயற்கையாக இருக்கும் வரை அவைகள் அழகுடனும் நம்மோடு வாழும் என்பதே என் எண்ணம்!.......

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்., ஆ.ஞானசெகரன்.

8 comments:

Anonymous said...

திரு.லீ,நாய் கதை போல்...!

ஆ.ஞானசேகரன் said...

//தனபால் said...
திரு.லீ,நாய் கதை போல்...!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
திரு.லீ,நாய் கதையை படிக்கவில்லை முடிந்தால் சுட்டியை கொடுக்கவும்...
நன்றி

ஆ.ஞானசேகரன் said...

தனபாலு நீயா!!!

நன்றிபா!!!!!

ஆ.ஞானசேகரன் said...

அம்மாம் தனபாலு சார்..... லீ-யின் நாய் கதையை நானும் கேட்டேன்...
கட்டிப்போட்டு வீட்டில் வளர்த்த தன் நாய் ஜோடி நாயுடன் இன்ப உறவுகூட செய்ய தெரியாமல் எதோ செய்த்தாக கூறுவார்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பன்னுவது... இயற்கையை வாழ்விடுவோம்!..

தேவன் மாயம் said...

மனிதன் இயற்கையின் அங்கமாக இருந்தாலும் அவனின் ஆறரறிவு இயற்கையை ரசிக்கலாமே தவிற அவற்றை தடுக்கவோ கெடுக்கவோ செய்வானாயின், தீவிறமான பாதிப்பை சந்தித்தே ஆகவேண்டும்.. அந்த இயற்கையின் அழகிற்கு இயற்கையே சொந்தகாரன்..///

நல்ல கருத்துங்க!!!

ஆ.ஞானசேகரன் said...

///thevanmayam said...
மனிதன் இயற்கையின் அங்கமாக இருந்தாலும் அவனின் ஆறரறிவு இயற்கையை ரசிக்கலாமே தவிற அவற்றை தடுக்கவோ கெடுக்கவோ செய்வானாயின், தீவிறமான பாதிப்பை சந்தித்தே ஆகவேண்டும்.. அந்த இயற்கையின் அழகிற்கு இயற்கையே சொந்தகாரன்..///

நல்ல கருத்துங்க!!!///


வணக்கம்! thevanmayam உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் பல

வினோத் கெளதம் said...

இயற்கயயை போற்றி பாதுகாக்க வேண்டும். நல்ல பதிவு..
Photos superb..

ஆ.ஞானசேகரன் said...

//vinoth gowtham said...
இயற்கயயை போற்றி பாதுகாக்க வேண்டும். நல்ல பதிவு..
Photos superb//

உங்களின் கருத்துரைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றிகள்....