_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, September 23, 2014

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 4

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 4

அட ஆமாங்க எங்க ஊரில் ஒரு பாணி பூரி கடை வைத்திருந்தார்கள்  பேருந்து நிலையம் ஓரமாய் இருந்தாலும் நல்ல ஓட்டம்,  சுவையும் பரவாயில்லை...   ஒரு சில நாட்களில்  அருகில் 10 கடை அதே பாணி பூரி கடைகள்  முளைத்துவிட்டது.    அடுத்த ஒரு வாரத்தில் 10 ம்   காணவில்லை.......!!!!!  ( ஒரு தொழில் ஆரம்பிக்கும்பொழுது சமுகவியல், பொருளாதாரம், சூழ்நிலை தெரிந்து செய்தால் நல்லதுதான்...  அவன் செய்யுரான் நானும் செய்யுரேன் என்பது    கேள்விதான்)

அப்படிதான் நம்ம ஊரின் படிப்பும் ஆங்காங்கே முளைக்கும்  கல்லூரிகள், அதில் படிக்கம் மாணவர்களும்.  இதையெல்லாம்  யார் முறைப்படுத்துவது? (அம்மா அப்பாவின் கேள்வி?)  அட போங்க சார்  அரசாங்கம் சாராய வியபாரம் செய்யுது அப்பரம் நாங்களெல்லாம் சும்மாவ இருக்க முடியும் அதுதான் கல்விக்கு தொண்டு செய்ய வந்துவிட்டோம்.  இப்பெல்லாம்  கல்வி நாயகர்களே  நாங்கதான்.  கல்வி கடவுள் என்று சொல்லிக்கொள்ளவும் ஆசைப்படுகின்றோம்.  (நாங்கள் நல்லவனா தெரியுறோம்,  அரசு சாராயம் விற்கிது) 

அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அவங்க அவங்க பேரை போட்டு கொள்ளுறாங்க,  சாரயக்கடைக்கு மட்டும்  அரசு சாரயக்கடைனு வைக்கிறாங்க!  ஏம்பா?  தப்புனு தெரிந்தே செய்யுறோம்......    நல்லவேலை  காந்தி சாரயக்கடைனு வைக்கம விட்டுடோமோ!!!!!!!  (ஹி ஹி  சும்மா ஒரு வைத்தெரிச்சல்) அரசுதான் யோசிக்கல நம கொஞ்சம் யோசிச்சி வைப்போம்...

மேலும் கேள்விகள் தொடரும்
ஆ.ஞானசேகரன்