_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, April 29, 2011

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா?

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா?

ஏழை என்றால் என்ன? வறுமை கோடு எப்படி கணக்கிடுகின்றார்கள்? ஏழை ஏழையாக இருபதன் காரணம்தான் என்ன?

இந்தியா மற்றும் சீனாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது(நன்றி தினதந்தி). இந்தியாவில் ஒரு நாளைக்கு வருமானம் ரூபாய் 50 க்கும் குறைவாக இருந்தால் அவன் ஏழை என்று உலக வங்கி கணக்கிடுகின்றது. அப்படி பார்த்தால் 30லிருந்து 40 விழுக்காடு மக்கள் இன்னும் தன்னிறைவு அடையாமல் இருக்கின்றார்கள். இன்னும் இது அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை நம்மை சிந்தனைகுள்ளாக்கியுள்ளது. ஏழை ஏழையாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும். தனிமனிதனின் சேம்பேறித்தனமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்த வறுமை அதிகரிக்க வாய்புள்ள இடங்கள் என்ன? உணவு பொருள்களின் விலை ஏற்றம் மற்றும் பற்றாகுறை, அதன் தொடர்பில் உள்ள கச்சா எண்ணெய் விலையேற்றமாகும். கடந்த இரண்டு மாதங்களாக உணவு பொருளிகள் விலையேற்றம் 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால் ஏழைகளின் விழுக்காடு அதிகரிக்கும் என்ற எச்சரிக்கைதான் நம்மை சிந்திக்கவைக்கின்றது.

ஒரு நாட்டின் பணவீக்கம் அந்த நாட்டின் வறுமையை எந்த அளவிற்கு கட்டுபடுத்தும்? புள்ளியல் அளவில் கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் உண்மையில் வறுமை போக்க வழியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியானால் உணவு பொருள்களின் உற்பத்தி அதிகப்படுத்த வேண்டும். அதைவிட மிக முக்கியம் அந்த உணவு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல செலவும் குறைவாக இருக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலையும் கட்டுப்பாடாக இருந்தால்தான் அதும் சாத்தியம்.

ஒரு நாட்டின் மக்கள் சோம்பேறிகளாக இருந்தால் அந்த நாட்டின் வளமும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கிபோகும். அரசும் மக்களை மறைமுகமாக உழைக்க கட்டாயப்படுத்த வேண்டும். இலவசம் மற்றும் மானியங்களை தவிற்த்து வேலைக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். வேலைக்கேற்ற கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். இதையெல்லம் செய்யாமல் இலவசங்களை மட்டுமே நம்பியிருந்தால் நாளை நம் நாடு ஏழையாகதான் இருக்கும்..............

பணம், பொருள் எல்லாம் ஒரே இடத்தில் சேரும் நிலையை கட்டாயம் கண்காணிக்க வேண்டும். முறையற்ற சொத்து குவிப்பு தண்டனைக்கு உற்படுத்த வேண்டும்.

இந்த மண் மண்ணின் மைந்தனுக்குதான்,... தனி ஒருவனுக்கு அல்ல!

சிந்தனைக்கு
ஆ.ஞானசேகரன்..