_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, December 17, 2008

மொழித்தெரியா ஊரில்.......

மொழித்தெரியா ஊரில்.......
நமக்கு கொடுக்கும் அடையாலமுனு சொன்னா நாம் பேசுர மொழிதான்னு எல்லோருக்கும் தெரியும். அப்படி நமக்கு புரியாத மொழி பேசுர ஊருல இருந்தா என்ன என்ன நடக்கும்.... ஜோதிகா மொழி படத்துல ஊமையும் செவிடாகவும் வாழ்ந்திருப்பார்(நடித்திருப்பார்), பிரகாஸ்ராஜ் ஜோதிகாவிடம் இசையை பற்றி உன்னுடைய புரிதல் என்னா? என்று கேட்ப்பார்,... அதற்கு ஜொதிகா உங்கள் எல்லாருக்கும் இசை ஒரு கலை, எனக்கு அது ஒரு மொழி அப்படிதான் நானும் உணர்கின்றேன் என்று கூறுவதுபோல மிக அழகாக சொல்லப்பட்டிருக்கும்... அப்படி மொழிப் புரியாத ஊரில தனி ஆளா இருந்தா அந்த மொழிக்கூட ஒரு நாடகமே நடக்க வேண்டிவரும்..

இப்படிதான் நான் 1994ல் மலேசியாவில் வேலைக்காக சென்றேன்। கோலாம்பூர் அருகில் பெட்டாலிங் ஜெயா எனற இடத்தில் தங்கி இருந்தேன் எனக்கோ தமிழ் மட்டும்தான் ஒழுங்காக தெரியும், கொஞ்சம் ஆங்கிலம் அவ்வளவுதான். இதை வைத்துக்கொண்டுதான் சமாளிக்க வேண்டும். மலேசியாவில் மலாய் மொழியில் பேசுவார்கள். நான் தங்கி இருக்கும் இடத்தில் ஆங்கிலம் துளிகூட தெரியவில்லை ஒன்று இரண்டு கூட மலாய்ல்தான் சொல்லுவார்கள்.

சாப்பிட ஒரு குறிப்பிட்ட கடைக்குதான் செல்வேன். ஒரு வித புரிதல் முறையில் ஒரு சில மலாய் வார்த்தைகள் மூலம் காலம் ஓட்டினேன். என்றும் போல அன்றும் கடையில் சாப்பிட்ட பிறகு காசு கொடுக்க செல்லும் பொழுது கல்லாப்பெட்டி அருகில் இருந்த கேக் நல்லா இருந்தது அதனால் ஒன்றை சாப்பிட்டு விட்டேன். பிறகு கேக்குக்கும் சேர்த்து காசு கொடுத்தேன். அந்த கடையில் இருந்த பெண் கேக்குக்கு காசு எடுக்கவில்லை. நான் கேக் எடுத்ததை அவள் பார்க்கவில்லை என்று நினைக்கின்றேன். அந்த கேக்கை காட்டி சத்து என்றேன்(சத்து என்றால் ஒன்று) . ஒன்றை மடித்து கொடுத்தாள்.... நான் no no மக்கான் என்றேன்( மக்கான் என்றால் சாப்பிடுதல்). அவள் சாப்பிட தட்டில் வைத்து கொடுத்தாள்.. நான் சாப்பிட்டுவிட்டதை எப்படி புரிய வைப்பது என்று புரியாமல் ஆங்கில வார்த்தைகளை சொல்லி பார்த்தேன் முடியவில்லை. கடைசியில் வெறும் வாயை மென்று முழுங்கி காட்டினேன்.. அவளோ ஓஓ சுடமக்கான் என்று சொல்லி காசை வாங்கி கொண்டாள். ( சுட மக்கான் என்றால் சாப்பிட்டாச்சு) அந்த "சுட" வை மறந்ததால் மொழியில் ஒரு கலையை காட்ட வேண்டியதாயிற்று...

அதேபோல் மற்றொரு சம்பவம் என்மனைவியின் அம்மா அப்பா கர்நாடகத்தில், வசிக்கின்றார்கள் பாகல்கோட் என்ற இடம். என்வீடு திருச்சிலிருந்து செனறால் ஒரு நாள் பயணம் ஆகும். என் மனைவியை அழைத்து வர நான் தனியாக செல்லவேண்டி இருந்தது. எனக்கு கன்னடமும் தெரியாது, ஹிந்தியும் தெரியாது. ஊப்பிலி வரை சென்றுவிட்டேன் அங்கிருந்து பாகல்கோட் பஸ்ஸில் செல்லவேண்டும்... இரவு சாமம் அப்போது அங்கு உள்ளவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை ஹிந்தி புரிந்துக்கொள்கின்றார்கள்... பஸ்ஸில் எல்லாம் கன்னடத்தில் எழுதியுள்ளார்கள்.. பாகல்கோட் பஸ் எது எங்கே என்றால் அவர்களுக்கு புரியவில்லை எனக்கு ஹிந்தியும் தெரியாது... எப்படியோ ஒரு சின்ன பையன்னுக்கு ஓரளவுக்கு ஆங்கிலம் புரிந்துக்கொண்டான்.. அவனிடம் பாகல்கோட் என்று கன்னடத்தில் எழுத சொன்னேன். அதை வைத்து பொருத்திப் பார்த்து பாகல்கோட் பஸ்ஸை பிடித்து ஊர்போய் சேர்ந்தேன்....

பாகல்கோட்டில் ஒருவாரம் தங்கி இருந்தேன். முடி வெட்ட வேண்டும்போல இருந்தது. நான் கடையில் சென்று முடி வெட்டிவிட்டு வீட்டுக்கு வந்தேன். என் மனைவிக்கு ஒரே ஆச்சரியம் மொழித்தெரியாமல் எப்படி முடிவெட்டிக்கொண்டு வந்தேன் என்று.... எப்படி என்று கேட்டாள்?, முடிவெட்டுற கடையில் சாப்பிடவா செல்வார்கள் முடிவெட்டதானே.. கடைக்கு சென்றேன், தலையில் கையை காட்டி நாற்காலில் உற்கார்ந்தேன், முடியை வெட்டி விட்டார்கள் இருபது ருபாய் கொடுத்தேன் மீதி கொடுத்தார்கள் வந்துவிட்டேன்.

மொழி படத்துல ஜொதிக்காவிற்கு இசை ஒரு மொழி போல, எனக்கு மொழித்தெரியா ஊரில் மொழி ஒரு கலையாக இருந்தது... இந்த கலை இருக்கும் வரை எல்லா ஊரும் நம்ம ஊருதான் போங்க!....

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

Saturday, December 13, 2008

பயத்தின் பரினாமமும் நடந்து முடிந்த தீவிரவாதமும்...

பயத்தின் பரினாமமும் நடந்து முடிந்த தீவிரவாதமும்...
பயம் என்பது நம்மை நிதானம் இழக்க செய்திடும், பயம் இன்றி யாரும் இருப்பதாக தெரியவில்லை... பத்மஸ்ரீ டாக்டர் காமலஹாசனும் நடிகர் நாசரும் குருதிபுனல் திரைப்படத்தில் பேசும் காட்சியில் வீரம் என்பது பயம் இல்லாதுபோல இருப்பதுதான்(நடிப்பது) என்று கூறுவார். பயம் கண்ணில் தெரிந்துவிட்டால் போதும் உன்னில் இருக்கும் தீவிரவாதம் வெளிப்படும்.. கண்ணொளி பார்க்க>>>>>>>
இதேபோல் இந்திய தேசத்தை நடுக்க வைத்த மும்பை தாக்குதலில் ஈடுப்பட்ட இளஞர்களின் கண்ணில் காணப்பட்ட பயமில்லா உணர்ச்சிதான்,... அவர்களால் இப்படிப்பட்ட கொடுஞ்செயல் செய்ய முடிந்தது... இதை நேரில் பார்த்த மும்பை ரயில் நிலையத்தின் அறிவிப்பாளார் சொல்வதும் அப்படித்தான்... அவர்கள் அப்பாவி மக்களை சுடும் பொழுது அவர்கள் முகத்தில் பயமோ பதற்றமோ காணவில்லை என்று சொல்லுகின்றார். இவர்களிடம் தோன்றிய பயமின்மை உயிரின் விலைத்தெரியாமல் போய்விட்டது. இரத்ததின் துளிகள் அவர்களை பயம்காட்டாமல் விட்டதுதான் இவர்களின் வன்முறைக்கு உதவியது.

இத்தனை வன்முறைக்கிடையில் தன் உயிர் துச்சமென எண்ணிய இந்திய கமோண்டோகளின் துணிவுதான், அவர்களின் வெற்றியின் பலம். எந்த பயமின்மை மானுடனை கொன்றதோ, அதே பயமின்மைதான் மானுடனை காத்தது. இந்த பயத்தின் பல பரினாமம்தான் உயிரைக் குடிப்பதும், உயிரை காப்பதும்.... மேலும் இந்த கண்ணோளியை பார்க்கவும்>>>

இந்த மண்ணில் நடக்கும் தீவிரவாதத்தின் மூலமும் இதே பயத்தின் அடிப்படையில் உண்டானதுதானே! தீவிரவாதம் என்றும் உருவாகிறதில்லை உருவாக்கப்படுகின்றது. பலச்சாலி ஒரு முடவனை குனியும் வரை கொட்டிதீர்க்க மூர்க்கம் கொண்டால், ஒரு எல்லைக்கு மேல் வெகுண்டு எழுவானாயின் அங்கேதான் தீவிரவாதம் உருவாக்கப்படுகின்றது... இதற்கு பொறுப்பு அந்த பலச்சாலிதானே!.. இந்த நூற்றாண்டுகளில் பல காட்சியமைப்புகள், கோர நிகழ்ச்சிகள், இந்திய வரலாற்றையே புரட்டி போட்ட சம்பவங்கள் அனைத்தும் எதோ ஒரு விபத்தாகவும் அல்லது உணர்ச்சியில் உண்டான நிகழ்வாகவும் சொல்வதற்கில்லை...

தீவிரவாதம் ஏதோ ஒரு இனத்தின் முட்டாள் செயல் என்று சொல்லிவிட முடியாது. அரசியல் ஆதாயத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் இந்திய மக்களை துண்டாடி வேடிக்கைப் பார்க்கும் சமுக விரோதிகளின் கொடிய செயல்தான் இன்றுவரை நடக்கும் எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தின் முன்னோடி. பாபர் மசுதி இடிப்புக்கு பின்னர்தான் தீவிரவாதம் கொடியேற்றி வைக்கப்பட்டது. பெரும்பான்மை இனத்தின் வன்முறையான தாக்குதல் சிறுபான்மையினரை பயம்கொள்ள வைக்கப்பட்டது. இந்த பயம்தான் எல்லைத்தாண்டிய தீவிரவாதத்தை வலிமையாக்கியது.

வயதில் முதியவன் ஒருவன் தன்னை விட மிக சிறுவனை அடித்தால், ஒரு நிலைக்கு மேல் அந்த சிறுவன் அவனை வாயால் கடிக்க ஆரம்பித்து விடமாட்டானா? அதேதான் இங்கேயும் நடந்துவிட்டது.... பாபர் மசுதி இடிக்கப்பட்டதும் அதன் தீர்ப்பு இன்னமும் முடிவுக்கு வராமல் இருப்பதும். அயோத்தி பிரச்சனைக்கு தொடர் பிரச்சனையாக இருப்பது கோத்ரா சம்பவமும் அதற்கு பின் நடந்த குஜராத் கலவரமும். இதன் தொடராகத்தான் நடக்கும் எல்லைத் தாண்டிய தீவிரவாதத்திற்கு வழிவகை செய்துவருகின்றது.
இதுபோன்ற வன்செயல்களால் நம்பிக்கை இழந்த சிறுபான்மைனர், பயத்தின் காரணமாக எல்லை தாண்டி கரம் கோருகின்றனர்.. அரசியல் ஆதாயத்திற்காகவும், பதவி சுகம் காணவும் பிரதமர் கனவில் இருக்கும் அத்வாணி பொன்றோர்களினின் பொறுப்பற்ற செயல்காளால் அப்பாவி மக்கள் வன்முறையில் பலியாகின்றனர். மோடி போன்றோர் தூண்டும் இனவெறியினால் அப்பாவிகள் செத்து மடிகின்றனர்.

இந்தியாவில் சிறுபான்மைனரால் நடத்தப்படும் தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டுமானால், அவர்களுக்கு நம்பிகையை உருவாக்க வேண்டும். அவர்களின் பயத்தை தெளிவாக்க வேண்டும்... ஏதோ 12 பேர் பாகிஸ்தானிலிருந்து வந்து மும்பையை தாக்கிவிட்டனர் என்று நினைத்தால் முட்டாள்தனம்.. இங்குள்ளவர்கள் உதவியதால்தான் அவர்களால் செயல்பட முடிந்தது.

நம் அருகில் உள்ள வன்முறையும், தீவிரவாதமும் தீர்க்கப்படாமல் போனால் சவகுழியில் விழுவோம் என்பதும் உண்மைதானே! பயம்மில்லா நிலையை எல்லா இன மக்கள் உணரப்படுமேயானால் எல்லைத்தாண்டிய தீவிரவாதம் முடிவுக்கு கொண்டுச் செல்ல முடியும் எனபது என் விருப்பமும் எண்ணமும்.

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

Monday, December 8, 2008

நாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்!....

நாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்!....

நான் படித்துகொண்டிருக்கும் பருவத்தில், 7-ம் வகுப்பு என்று நினைக்கின்றேன், எனது பள்ளி அருகில் ஒரு பெரியவர் ஒரு சிறிய துணிப்பையில் அரிசி குருனை எடுத்து வருவார். அந்த அரிசியை தான் போகும்மிடத்தில் உள்ள எறும்பு புற்றுகளில் அரிசி சிறிது பொட்டுக்கொண்டே செல்வார். சிறுதுளி அரிசியானாலும் இதனால் பல உயிர்களுக்கு உணவு கிடைத்துவிடுகின்றது. ஒரே நாளில் பல ஆயிரம் உயிர்களுக்கு உணவளித்த புண்ணியம் கிடைத்துவிடுகின்றது.

இதை பார்த்த நான் நாமும் இதேபோல் செய்யலாம் என்று நினைத்தேன். பள்ளிக்கு போகும்போது சட்டை பையில் கொஞ்சம் அரிசியை எடுத்துகொள்வேன், நடந்து போகும் பாதையில் எறும்பு, கரையான் கூட்டத்தை பார்த்தால் கொஞ்சம் அரிசியை போட்டுவிட்டு செல்வென். இப்படி பல தினங்கள் செய்துள்ளேன்.

ஒருநாள் என் விஞ்ஞான ஆசிரியர் உணவு வட்டம் பற்றி பாடம் எடுத்தார். இயற்கையின் சுழற்சியையும் உயிரணங்களின் உணவு பழக்கம் மற்றும் உணவு வட்டம் ஒரு சுழற்சியையும் விளக்கினார். ஒன்றின் அழிவு ஒன்றின் உணவாகின்றது, இப்படிதான் உணவின் வட்டம் சுழற்சியாகின்றது என்பதை உணர்த்தினார். புல்லின் அழிவு ஆட்டின் உணவு, ஆட்டின் அழிவு மனிதனின் உணவு, மனிதனின் அழிவு புல்லிற்கு உரமாகின்றது. இப்படி புல் மீண்டும் உணவாகின்றது... இந்த சுழற்சியின் பாதிப்பு இயற்கையை பாதிக்கும் என்று தோன்றுகின்றது.

எனக்கு நான் எறும்புக்கு உணவழிப்பதில் எதோ ஒரு குறை இருப்பதாக தோன்றியது. வீட்டு விலங்குகளை தவிர்த்து மற்ற விலங்குகளின் வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு உணவை தேடுவதும் பின் உண்பதும்தான். செயற்கையாக உணவழிப்பதின் மூலம் அவற்றின் இயற்கையான வாழ்கையை தடுப்பதாக தோன்றியது. மேலும் உணவுவட்டத்தில் தடுப்பு ஏற்ப்பட்டால் இயற்கை செய்யும் உயிர்களின் சமன்படுத்துதலில் பெரிய பாதிப்பு உண்டாகும் என்றே தோன்றியதால் அன்றிலிருந்து நான் எறும்புக்கு அரிசி கொடுப்பதை தவிற்த்தேன்.

மத்தேயு-6:26.(பைபிள்) ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?..... மேற்கண்ட பைபிள் எடுத்துகாட்டு கூட இயற்கையில் அவற்றிக்கு உணவுகள் இருப்பதாகவே சொல்கின்றது. இந்த உணவு வட்டம் மனிதனால் சிதைக்க படுமேயானால் கண்டிப்பாக பாதிப்பை சந்திக்கலாம் என்றே எனக்கு தோன்றியது.

இதேபோல் நான் வேலைசெய்யும் இடத்தில் தேனீர் இடைவேளையில் இரண்டு புறா வரும் அவற்றிக்கு சிலர் தான் சாப்பிடும் பண் மற்றும் பதார்த்தங்களை புறாகளுக்கு போடுவார்கள். தினமும் அதே நேரத்தில் வரும் சாப்பிடும்.... இந்த புறாக்கள் மற்ற புறாக்களைப் போல் இல்லாமல் சோம்பலாக சக்தியின்றி தெரிய ஆரம்பித்தது. சிலதினங்களுக்கு பின் அதை காணவில்லை. என்னை பொருத்தவரை மற்ற புறாக்களைபோல் மழைக்காலம் வேயில்காலம் போன்ற நாட்களில் உணவிற்காக போராட பழக்கம் இல்லததால் உணவுக்கிடைக்காமல் இறந்திருக்ககூடும் என்றே தோன்றுகின்றது. நாம் உணவு போட்டு பழக்கப்படுத்தி அவற்றை இயற்கையிலிருந்து பிரித்ததால் வந்த கொடுமை என்று என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது....

மேற்க்கூறிய என் கருத்துகள் முரன்பாடாக தோன்றலாம், சிறிது யோசித்தால் உண்மை புலப்படும். தான் அடைகாத்து ஈண்ட கோழிக்குச்சுகளை கொத்தி விரட்டி தானே இறைதேட ஆயித்தப்படுத்துமே தாய் கோழி, அதைதான் இங்கு சொல்கின்றேன்.

நாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்!...
இயற்கையாக இருக்கும்வரை பூமி சுற்றிக்கொண்டே இருக்கும்!...

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

Friday, December 5, 2008

பொய்யர்களாக இருப்பதேன்?

பொய்யர்களாக இருப்பதேன்?

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்த்த
நன்மை பயக்கு மெனின்.-குரள்

சாமி கும்பிட வைக்கப்பட்ட பாலை தன் மகள் காலால் தவறி தட்டிவிட்டாள், அம்மா, யார் இந்த பாலை கொட்டியது என்று மகளிடம் கேட்டாள். சின்ன பொன்னு பயத்தில் நான் இல்லை என்று சொல்லுகின்றாள். தாயோ கொபம் அடைகின்றாள். என்ன சின்ன வயசிலே பொய்சொல்லுகிறாய் என்று அடிக்கவும் செய்கின்றாள்.

வேலை முடிந்து அப்பா விட்டுக்கு வருகின்றார், வரும்போதே ஹெலோ செல்லம் விளையாடுகின்றாயா விஜய் மாமா கேட்டால் அப்பா இன்னும் வரவில்லை என்று சொல்லிவிடு, என்று சொல்லி குளியல் அரைக்கு சென்றுவிட்டார். குழந்தையும் அவ்வாறே சொல்லிவிடுகின்றது. ஒரு சில குழந்தைகள் அப்பா விட்டில் இல்லை என்று சொல்ல சொன்னார் என்று கூறுவதும் உண்டு.

அலுவலகத்திற்கு போக தாமதமானால் எதோ ஒரு பொய்யான காரணத்தை சொல்லி விடுகின்றோம். நண்பர் ஒருவர் கடனாக 100 ரூபாய் கேட்கின்றார். கொடுக்க மனமில்லாமல் நானும் கடந்தான் வாங்கியுள்ளேன் என்று பொய்யாக கூறுகின்றோம். நண்பர் ஒருவர் உங்கள் காரை ஒருநாள் இரவல் கேட்டால், காரில் ப்ரேக் சரியில்லை என்று சொல்லிவிடுகின்றோம். பொய் என்பது நமக்கும் தெரியும் கேட்ட நண்பர்க்கும் புரியும். அவருக்கு புரியும் என்பது தெரிந்தே பொய் சொல்லுகின்றோம்...

இப்படியே பொய்யாகவே வாழ்க்கையை நகர்த்துகின்றோம். கார் இரவல் கேட்ட நண்பரிடம் காரை கொடுக்க விருப்பம் இல்லை என்று சொன்னால் அவர் வருத்தப்படுவார் என்று நாம் பொய்யர் அவதேன்? நாம் பொய்தான் சொல்லுகின்றோம் என்பதும் அவருக்கும் புரியும் என்பது தெரிந்தே சொல்வதேன்? இப்படியே ஏதோ ஒரு காரணங்களுக்காக பொய்யர்களாவே வாழ்கின்றோம்.. இதற்கு யாரும் விதிவிளக்கு இல்லை என்றே தெரிகின்றது...

மீண்டும் ஒரு முக்கியமான பிரச்சனையுடன் சந்திக்கும்..

ஆ.ஞானசெகரன்

Sunday, November 30, 2008

இனிய இயந்திரா! நேற்று மும்பையில்..

இனிய இயந்திரா! நேற்று மும்பையில்..


இனிய இயந்திரா! கொடுக்கப்பட்ட கட்டளையை திரம்பட செய்தவனே! வணக்கம்!...... உனக்கு இதில் ஈடுபாடு இருக்கோ இல்லையொ? முதலில் வணக்கம் சொல்லி வைத்துக்கொள்வோம். பதிமவயதில் என்னா லாவகமாக துப்பாக்கியேந்தி போர்களம் பூண்டாய். உனக்குள் இருக்கும் மூளையின் பலத்தை எப்போதாவது அறிந்ததுண்டா? உன்னால் சுடப்பட்டவர்களின் இரத்தமும் சதையும் உனக்குள் இருக்கின்றதை அறிந்ததுண்டா?


உன்னை ஏவியவன் யாரென்பதும் உன்னால் புரிந்துக்கொள்ள முடியுமா? கொடுக்கப்பட்ட கட்டளையை தவிற உனக்காக எதையாவது புரிந்துக் கொண்டதுண்டா? நீ கொன்று குவித்த மானிடத்தின் இரத்த நாளங்களின் துடிப்பில் என்ன உணர்ந்தாய்?..... உனக்காக நாங்கள் வருந்துகின்றோம்.. ஏவியவன் எங்கோ இருக்க, அம்பை என்ன செய்யமுடியும்?


உன்னில் உள்ள வேகம் எங்களிடத்தில் இல்லை என்பதை ஒப்புகொள்கின்றோம். அதற்காக நாங்கள் ஏமாந்துவிட மாட்டோம். எத்தனை உயிர்களை பறித்தாலும் உன்னால் உன்னை புரிந்துகொள்ளமுடிந்ததா? சலவை செய்த முளையில் நீமட்டும் கரைபடிந்துள்ளாய். அதனால்தான் உயிருடன் பிடிப்பட்டாய். கவலைப்படதே நீ உன்னை புரிந்துக்கொள்ளும்வரை என்தேசம் ஒன்றும் செய்யாது.


உன்னால் பலியான அதிகாரிகளின் பிள்ளைகள் உன்னைபோல ஆதரவின்றி இருப்பார்கள் என்று உனக்கு புரிந்திருக்க முடியாது. நண்பர்களின் உடல் சிதைந்துபோனதை பார்த்த பிறகுதான் நீ வாழவேண்டும் என்பதும் உணர்ந்திருப்பாய். உன்போராட்டத்தின் நோக்கமாவது உனக்கு உண்டா? தேசமே உன்னை பார்க்க வைத்த அறிவை உனக்காக செலவு செய்ததுண்டா?


உன்னை சீர்திருத்த கல்விக் கொடுத்து மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதுதான் என் தேசத்தின் செயல்பாடு. ஆனால் நீ அதை எதிர்பாக்காதே? மனித உயிரை எடுக்க யாருக்கும் உரிமையில்லைதான்... ஆனால் உயிரின் முக்கியம் உன்னை போன்றவருக்கு புரிதல் வரவேண்டும். அந்த வேதியல் மாற்றம் உன் போன்ற மூளை சலவை பெற்றவர்களுக்கு புரியவேண்டும் என்பதும் என்போன்ற இந்தியர்களின் ஆசையும்.


நீ ஏற்ற பணியின் பொருப்புணர்வு என் தேச அரசியல்வாதிகளுக்கு வந்திருந்தால், நீ வளர்ந்திருக்கவே முடியாது? நீ உணர்வற்று செய்யும் கடமையை நாங்கள் உணர்வோடு மதம், சாதி, இனம் பேயரால் புதைத்துவிட்டோம். அதனால்தான் இன்னும் நீ உயிரோடு இருக்கின்றாய்... உன்னால் ஒரு உதவிமட்டும் நீ இறக்கும் முன் உன் பொருப்புணர்வை, கடமையின் வேகத்தை என் தேசத்திற்கு விட்டு செல்.


உன்னை பார்த்த பிறகாவது என்தேச மகன்களுக்கு கடமையின் உணர்வை புரிந்திருக்கும். உன் வேகம் பார்த்த பிறகாவது உளவுதுறையின் மெத்தன போக்கும், அரசின் அலச்சியமும் புரிந்திருக்கும். நாங்கள் திறமையற்றவர்கள் இல்லை, திறமையை விற்றவர்கள்.


உன்னை நம்பி யாரும் இருக்க மாட்டார்கள். உன்னை பிடித்த என் தேச வீரர்களுக்கு குடும்பம் உள்ளது. அதையும் பொருள்படுத்தாது உன்னை வென்றாகளே அவர்களுக்கு முன் நீ ஒரு தூசிதான். எங்களின் கவனகுறைவால் நீ முளைத்துவிட்டாய்,.... இனி வரும் காலம்...........இந்திய தேசமே நீயே சொல்!

நம்மை வெல்ல இங்கே யாருமில்லை!..

நம்மை வெல்ல இங்கே யாருமில்லை!..

மும்பையில் நவம்பர் 27 முதல் நவம்பர் 29 வரை நடந்த தாக்குதல்கள் சாதாரணம் இல்லை, இது ஒரு யுத்தம். இந்த 62மணி நேர தாக்கிதலில் 162 பேர் பலியாகியுள்ளனர், 239 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த யுத்தத்தில் 14 போலிஸ் அதிகாரிகளும் இருவர் தேசிய பாதுக்காப்பு படை சேர்தவர்கள் பலியாகியுள்ளனர். சுயநலம் பாராது தன் உயிரையும் கொடுத்து போராடிய அதிகாரிகள் அனைவருக்கும் இந்தியனின் வணக்கங்கள்!......

மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இந்திய பாதுக்காப்பு துறைக்கு ஒரு சாவலாக அமைந்துவிட்டது. உளவுதுறையின் மெத்தன போக்கும் கவனக்குறைவும் தெரிகின்றது. உளவுதுறை நவீன உத்திகள் கையாளவேண்டிய காலகட்டதில் உள்ளது.... இனி வரும் காலத்தில் முறைப்படுத்தாமல் விட்டால் இந்தியா மறுபடியும் அடிமை சாசனம் எழுதவேண்டிவரும்.

இந்த மூன்றுநாள் போராட்டத்தில் தன்நலம்பாராது போராடிய என்.எஸ்.ஜி. கமாண்டோக்களையும், பாதுக்காப்பு படைனருக்கும் ஒவ்வொரு இந்தியனின் வணக்களும் பாராட்டுகளும்... இந்தியா என்ற மாபெரும் தொடர் நாடகத்தில் உங்களின் பாத்திரம் பெருமையை தருகின்றது. நாங்கள் ஏற்ற பாத்திரத்தின் கவனக்குறைவினால் நல்ல அதிகாரிகளை பலியிட வேண்டியதாயிற்று. இந்த போராட்டத்தில் பலியான அதிகாரிகளின் குடும்பதினருக்கு எங்கள் அனுதாபத்தை தெருவிக்கின்றோம்...

இனிவரும் காலங்களில் கடுமையான சட்டங்களும் அதிரடி நடவடிக்கையும் வேண்டும் என்பதை இந்தியாவும், அதிகாரிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். சட்டம் மட்டும் போதுமான தீர்வாகாது. ஒவ்வொரு இந்தியனும் தான் ஏற்க்கும் பாத்திரத்தின் பொறுப்புணர்வை புரிந்த்துக்கொள்ள வேண்டும். பயங்கரவாதியின் பொறுப்புணர்வில் பாதியளவு நமக்கிருந்தால் இந்த தாக்குதலை நாம் சந்திக்க வேண்டி இருக்காது. பயங்கரவாதிகளை எதிர்த்து எந்த பலனையும் எதிர்பாக்காமல் போராடிய வீரனின் பாத்திர பொறுப்புணர்வு அரசியல் தலைவர்களுக்கு இருந்திருந்தால் இந்த பயங்கரவாதம் வந்திருக்காது என்பது உண்மை. போடா போன்ற சட்டங்களை சுயநலத்திற்க்கு பயன்படுத்துவதும் பொறுப்பின்மையை சொல்லுகின்றது.

இதுபோன்ற எல்லைதாண்டிய பயங்கரவாதம் தடுக்கப்பட வேண்டும். இதை ஒடுக்குவதே கொள்கையாக கொண்ட புலனாய்வு மற்றம் உளவுத்துறை ஏற்படுத்தவேண்டும். இவர்கள் அரசியல் தலையிடு இல்லாமல் சுயமாக வேலைச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் சாதி இனம், மதம் பாராது பொறுப்புணர்வுடன் நடந்துக்கொண்டால் நாளை இந்தியா நம் உள்ளங்கையில்.....

வாழ்க இந்தியா!
வாழிய மணிதிருநாடு!....

ஆ.ஞானசெகரன்.

Friday, November 28, 2008

அட போங்கடா!...


அட போங்கடா!...
கருவேலங்காட்டு வண்ணத்துப் பூச்சிகாளாய்!..


மனிதனை மனிதன் மாய்த்துக் கொண்ட
மானங்கெட்ட மானிடம்- இங்கே
சொரனை கெட்ட சென்மங்களுக்கு-இங்குதான்
மதமும் ஒரு கேடாம்... இல்லை கேடயமாம்..
எந்த மதம் கேட்டது! எந்த சாமி சொன்னது!
மானிடன் ரத்தமும் சதையும் வேண்டுமென்று!...


மானுடம் மதிக்காத மதம்,
மானிடம் ருசிக்காத மதம்,
இங்கெ இருதென்ன பயன்?
மனிதா! இரங்கல்பா சொன்னது போதும்..
இருக்கும் மதத்தை தூக்கி எரிந்துவிட்டு...
இந்தியனா வா!...


சாமியாம் கடவுளாம் மண்ணாங்கட்டி
உயிரை எடுக்க எந்த சாமி வரம் சொன்னது
உன்வீட்டு சகோதரனின்
உயிரை கொண்டு வர சொன்ன கடவுளை
தூக்கி எரிந்துவீட்டு
இன்றே இந்தியனா வா!


எந்நாட்டு அன்னியனுக்கும் இந்நாட்டில்
ஒருதுளி இடம்மில்லை
எத்தனை யுத்தம் வந்தாலும்..
யார் தடுப்பார்- இல்லை யார் கெடுப்பார்
என் தேசத்தின் வாழ்விதன்னை!...


சொரனை கெட்ட இந்தியனே!
இனியாவது விழித்திரு!
நீ பூசும் மதசாயம் தொலைத்துவிடு..
இந்தியனா இரு! -இல்லை
மதத்தை கட்டிக்கொண்டு செத்து தொலை.......

Thursday, November 27, 2008

முழுமையான தமிழை காணமுடியுமா?.. பகுதி-2

முழுமையான தமிழை காணமுடியுமா?.. பகுதி-2

தமிழ், தமிழ் என்று சொல்லும் பொழுது முடிவில் அமிழ்து என்ற ஒலியே முடியும். தமிழ் மொழி ஒரு அமுதம்தான் தமிழில் இல்லாத, வெளிப்படுத்தாத கருத்துகள் இல்லை என்றே சொல்லலாம். வேறு எந்த மொழியில் இந்த அளவிற்க்கு கருத்து கலஞ்சியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட நம்மொழிக்கு நாம் செய்யும் சேவைதான் என்ன? குறைந்தபச்சம் மொழிக்கலப்பை தவிற்கலாம் என்றே தோன்றுகின்றது.
தமிழ்நாட்டில் பல்லவர் காலத்தில்தான் தமிழ் மொழியில் வடமொழிச்சொல் கலப்பு ஆரம்பமானதாக வரலாறு கூறுகின்றது. மேலும் முகலாயர்கள் வருகையால் அரபு மொழியும் சேர்ந்தே கலப்பானதாக கூறுகின்றனர். பின்னர் ஆங்கிலேயர் படையெடுப்புக்கு பின் ஆங்கிலமும் தன்பங்கிற்கு கொலை செய்யும் அளவிற்க்கு தமிழை ட்தமிலாக்கியது. இதற்கு நம்முடைய பொறுப்பின்மையும் காரணம்தான். ட்தமில் பேசுவதை நாகரிகமாக நினைப்பவர்களும் இருப்பதை நினைக்கும் போழுது தமிழ் நம் காலத்திலேயே அழிந்துவிடும் என்றே தோன்றுகின்றது.

பல காலகட்டங்கலாக தமிழில் கலப்பு நடந்துவிட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் இதை முழுவதும் மாற்ற முடியாது என்றாலும் கூட குறைந்தபச்ச கலப்புமொழியை தவிற்ப்பதாலும், தமிழ் சொற்களை பாவிப்பதாலும் முழுமையான தமிழை நம் சந்நதிக்கு கொடுக்க முடியும் என்பதே என் நோக்கம்.

அச்சு இயந்திரங்கள் வந்த காலத்தில் வீரமாமுனிவர்(ஜோசப் பெஸ்கின்- சோசப் பெசக்கின்) வெண்பா, செய்யுள், கவிதை நடையிலிருந்து வேறுப்பட்டு உரைநடையில் நூலாக்கம் செய்தார். தமிழ் இலக்கிய மரபில் இது புது வரவு. தமிழ்மேல் கொண்ட அன்பால் தன் பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டார்...

டாக்டர் MG ராமச்சந்திரன் அவர்கள் முதவராக வந்தபின் பெரியாரின் சீர்திருத்த எழுத்துகளை செயல்வடிவம் கொடுத்து சட்டமாக்கினார். னா,ணா, னை,ணை, போன்ற எழுத்துக்கள் புது வடிவம் கொடுக்கப்பட்டது. இதை நாம் கனனிகளில் பயன் படுத்தும்பொழுது நன்மையாக படுகின்றது. இதுபோல சிரிதாயினும் மொழிக்கு காலத்திற்கேற்றவாறும் புதினங்களுக்காகவும் மாற்றத்தை கொண்டுவரவேண்டும். இப்படிப்பட்ட முயற்சிகளால் நம் சந்நதிகளுக்கு முழுமையான தமிழைக் கொடுக்கமுடியும் என்பதே என் நோக்கம்.

வடமொழிச்சொற்கள் தமிழில் கலந்துவிட்டதனால் கூடவே வடமொழி எழுத்தையும் கடன் வாங்க வேண்டியதாயிற்று. முழுமையான தமிழுக்கு வட எழுத்து தேவைப்படாது என்றே தோன்றுகின்றது. உதாரணமாக புஸ்பம் என்பதை மலர் என்றே சொல்லலாமே. விஷயம் என்பதை விடயம் என்றே சொல்லலாமே. இதுபோல ஆங்கில இடைசொருகலையும் தவிற்த்தால் முழுமையான தமிழை நம் சந்நதிக்கு கொடுக்க முடியும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.

ஸ், ஷ், ஸ்ரீ, ஹ் போன்ற வட எழுத்துக்கு இணையான எழுத்தை காண்பதில் அறிஞர்கள் செயல்பட அரசும் ஆவனைச் செய்தால் மேலும் தமிழுக்கு துணையாக இருக்கலாம். என் தமிழாசிரியர் (அருள்மொழிதேவன்) ஒருமுறை சொன்ன விவரங்கள், நம் மொழியில் கல்வெட்டுகளில் இன்னும் தமிழ் எழுத்துக்கள் புதைந்துள்ளது. இதை வெளிக்கொணர்ந்தால் தமிழ் மொழிக்கு எழுத்துகளை கடன் வாங்க தேவை இருக்காது என்றார். இதுபோல் கீழ் கண்ட எழுத்து 'f', fa. faa போன்ற ஒலி கொடுக்ககூடிய எழுத்துகள் உண்டு என்றும் ஆனால் முறைப்படுத்தாமல் இதற்காக வட எழுத்தை கடன் வாங்குகின்றோம் என்றார்.

உண்மையில் அரசும் அறிஞர்களும் முயற்சித்தால் புதினங்கள் உருவாக்க முடியும் என்பது தெளிவாகின்றது. எதோ ஒரு கவர்ச்சிக்காக அன்னிய மொழியில் கலப்பும் கடன் வாங்குவதும் தொடர்ந்தால் தமிழ் அழிவதைவிட தமிழ் பேசும் நாம் அழிவோம் என்பதும் உண்மை. மொழி என்பது மனிதனின் அடையாளம். மொழி என்பது மனிதனின் வாழ்க்கை முறை. மொழி என்பது பேசும் மனிதனின் கலாச்சாரம். எனவே மொழியை இழந்தால் அவனை இழப்பதோடு அவனின் அடையாளத்தை, வாழ்க்கை முறையை, கலாச்சாரத்தை இழக்க வேண்டும் என்பதும் உண்மை.

ஆங்கில பெயர்கள் மற்றும் பிறமொழி பெயர்கள் சொல்லும் பொழுதும் எழுதும் பொழுதும் அதற்கு தேவையான ஒலியும் எழுத்தும் தமிழில் குறைவு என்பதை ஒத்துகொள்ளகூடியதே. அதற்காக ஒரு ஆராட்சியும் தேவைப்படுவதும் உண்மைதான். அதற்காக முழுமையாக வட எழுத்துகளையும் சொற்களையும் கையாழுவது ஆரோக்கியம் இல்லை என்றே சொல்லலாம். எனவேதான் புதினங்கள் கலத்திற்கேற்றவாறு உருவாக்க வேண்டும் என்பதும் அரசும் , மொழி அறிஞர்களும் செய்யவேண்டியது. இப்படியே விட்டுவிட்டால் முழுமையான தமிழ் நம் கண்முன்னே சாகும்.

இன்றிலிருந்து நாம் செய்யவேண்டியது தமிழில் உள்ள சொல்களை பாவிக்க ஊக்குவித்தல். புதிய சொல்களை தமிழ் மொழிக்கு ஏற்றாவாறு உருவாக்குதல். புதிய சொல்கள் தமிழ் மொழி ஒலிக்கு ஏற்றவாறு பாவித்தல். அன்னிய மொழிச் சொல்லுக்கு ஏற்றவாறு உள்ள சொல் தமிழில் தேடுதல். தேடிய சொல்களை முறையாக பாவித்தல். மேலும் தமிழில் கலந்துவிட்ட கலப்பு மொழியை ஒவ்வொன்றாக கழைதல் என்பதும் முக்கியம்... முடிந்தவரை தமிழ் எழுத்துகளை பாவித்தல் மற்றும் புதிய எழுத்துகள் காணுதல். இதுபோல நாமும் அறிஞர்களும் செய்வதனால் முழுமையான தமிழை காண முடியும் என்பதை யாராலும் தடுக்க முடியாது..

வாழிய தமிழ்! வாழ்க தமிழர்!

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

Monday, November 24, 2008

முழுமையான தமிழை காணமுடியுமா?..

முழுமையான தமிழை காணமுடியுமா?..

பேசும் மொழிகளில் மொழிக் கலப்பு என்பது எல்லா மொழிகளிலும் இருக்கும் ஒரு பிரச்சனை. ஆங்கிலம் தற்போழுது எல்லா மொழிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. அதற்கு வலைதளம் மற்றும் கையடக்க தொலைபேசியில் தகவல் அனுப்புதல் போன்றவற்றில் ஆங்கிலம் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் அந்தந்த மொழிகளில் ஆங்கில கலப்பு சாதாரணமாக உள்ளது. இந்த மொழி கலப்பு பிரச்சனையை தீர்ப்பது மக்களின் கடமையா? இல்லை அரசும் இதற்கான பொறுப்பை தவற விட்டுவிட்டதா?

நாம் வலைதளங்களின் படிக்கும்பொழுதும் எழுதும் பொழுதும் கனனி, வலைதளம், விரிவாக்கு, ஏற்றம் செய் போன்ற வார்த்தைகள் பயன் படுத்துவது போல பேசுவதில் பயன் படுத்த முடியவில்லை, பயன்படுத்த முயல்வதும் இல்லை. இதுபோன்ற பல இடங்களில் தமிழ் மொழியில் ஆங்கில கலப்பு ஆதிக்கம் செய்து வருகின்றது. இப்படி பட்ட கலப்பு தேவைதானா? இப்படிபட்ட கலப்பு புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பதில்தான் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்த குறைபாட்டை தவிற்க்க புதிய கலைசொற்கள் உடனுக்குடன் உருவாக்க வேண்டும், அப்படி தவறவிட்டதால்தான் இந்த ஆங்கில கலப்பு காணப்படுகின்றது .
சீனர்கள் வலைதளங்களில் அவர்கள் மொழிதான் அதிகம் பயன்படுத்துகின்றனர், அவர்களுக்கும் வசதியாக உள்ளது. காரணம் அரசு அதற்கான வளர்ச்சியை கொடுக்கின்றது. கூகுள் நிர்வணம் தற்போது தமிழில் மின் அஞ்சல் சேவை கொடுத்துள்ளார்கள். புதிதாக இதை பயன் படுத்தும்போது மிகவும் சிரமபடவேண்டியுள்ளது. இதற்கு காரணம் நமக்கு சரியான பயிற்சி இல்லாமைதான். நம் பழக்கத்தில் இல்லாத வார்த்தைகள் புதிதாக படுகின்றது.

பொதுவாக தொழில் இடங்களில் ஆங்கில கலப்பு அதிகம் உள்ளது. இயந்திர தொழிற்சாலைகளில் ஆங்கில வார்த்தைகள்தான் பயன்பாட்டில் உள்ளது. உதாரணமாக டூலை எடுத்துவா, டூலை க்ரைண்டிங் பன்னு, மெசினை ஆன் பன்னு போன்றே பேசி வருகின்றோம். இதற்கான காரணங்கள் என்னை பொறுத்தவரை ஆரம்ப காலங்களில் தவறவிட்ட கலைசொல் உருவாக்கம்தான். இதற்கு அரசும் அறிஞர்களும்தான் பொறுப்பு ஏற்கவேண்டும். இப்படி தவறவிட்டுவிட்டு தற்போழுது தவிற்க முடியாத நிலையிதான் நாம் உள்ளோம். எழுதும்போழுது உள்ள மனம் பேசும்பொழுது தமிழை காணமுடிவதில்லை என்பதும் கவலைக்குறியது. இன்று நாம் நினைத்தால் கூட முழுமையான தமிழை பார்க்க பல நூற்றாண்டுகள் ஆகலாம் என்றே தோண்றுகின்றது.

என்னுடன் வேலை செய்யும் மலேசியா தமிழ் நண்பர்கள் சிலர், தமிழில் தொழில் வார்தைகள் பேசும்பொழுது ஆச்சரியமாகவும் வெட்கமும் படவேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நம்மால் பேசமுடியாமல் போனது ஏன்? இவர்கள் தமிழில் "கத்தி மலுங்கி விட்டது சாணை பிடிங்கள் " என்றும் "எந்திரம் பழுதாகிவிட்டது" என்றும் "கத்தியை லாவகமாக கட்டுங்கள்" என்றும் பேசிக்கொள்வதை வாழ்த்தாமல் என்ன சொல்வது. முதலில் கேட்கும்பொது நகைப்பாக இருந்ததும் உண்மைதான் பின்னர்தான் நம்மால் இயலாமை புரிந்தது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பேச்சு தமிழ் வேறுபாடு காணமுடிகின்றது. இதுபோன்று எல்லா மொழிகளுக்கும் உண்டு, உதரணமாக ஆங்கிலமும் லண்டனில் ஒரு சாயலும் அமெரிக்காவில் ஒரு சாயலும் பேசுவார்கள். அதுபோல தமிழும் அப்படிதான் இதுவும் தவிற்க முடியாது. இதற்கு ஒரு உதாரணம் ஞாபகம் வரும். மதுரையில் வாழை தோட்டதில் வாழைகாய் பறிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பப்படுகின்றது. பின்னர் திருச்சியிலிருந்து சென்னைக்கு அனுப்பபடுகின்றது. மதுரையில் வாழை காயாக உள்ளதால் மதுரையில் வாழைப்பழத்தை "வாளப்பளம்" என்று கூறுகின்றனர். திருச்சி வரும்போது காய் பழுத்துவிடுகின்றது எனவே வாழைப்பழமாகின்றது. பின்னர் சென்னைக்கு சென்றால்
பழம் கனிந்து கூழாகி குழறிவிட்டு "வாயப்பயம்" என்ற நிலையடைகின்றது. என்று கொஞ்சம் காமடியாக சொல்வதும் சிந்தனைக்குறியது.
எப்படியோ அன்னிய மொழி ஆதிக்கத்தாலும் நம் கவனகுறைவாலும் தமிழை ட்தமிலாகவும் சிதைத்துள்ளோம். சில இடங்களில் மொழிக்கலப்பு தேவைப்பட்டாலும் பல இடங்களில் தவிற்க்கப்பட வேண்டியுள்ளது. முடிந்தவரை தவிற்ப்பதால் நாளைய சந்நதிக்கு முழுமையான தமிழை நம்மால் கொடுக்க முடியும்.

வாழிய தமிழ்! வாழிய தமிழர்!
மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

Thursday, November 20, 2008

ம்ம்ம்ம்ம்ம்.. நாம் எங்கே போகிறோம்?..

ம்ம்ம்ம்ம்ம்.. நாம் எங்கே போகிறோம்?.

நடிகர் பத்மஸ்ரீ கமல் அவர்கள் "மகாநதி" படத்தில் ஒரு காட்சியில் 'நல்லவர்களுகே துன்பத்தை கொடுக்கின்றதே ஏன்? அதான் ஏன்? ' என்று காதலியுடன் புலம்புவதாக அமைத்திருப்பார்கள்.... இந்த காட்சி என்னை பல இடங்களில் நினைத்துப் பார்க்க தூண்டியது.


இந்தியாவில் இந்த நூற்றாண்டுகளில் பல காட்சியமைப்புகள், கோர நிகழ்ச்சிகள், இந்திய வரலாற்றையே புரட்டி போட்ட சம்பவங்கள் அனைத்தும் எதோ ஒரு விபத்தாகவும் அல்லது உணர்ச்சியில் உண்டான நிகழ்வாகவும் சொல்வதற்கில்லை... பல நேரங்களில் திட்டமிட்ட சதிகள் அப்பலதிற்கு வந்தாலும் அரசும், மக்களும் ஒன்றுமே கண்டுகொள்ளாதது கமலின் மகாநதி புலம்பல்தான் என்னை ஞாபக படுத்தும். இதில் பத்திகைகளில் வியாபார புத்தியை நினைதாலே கேவலமாக தோன்றும். கோரக் காட்சிகளை வரிசைப்படுத்தி மக்களை தூண்டும் விதமாகவும் உண்மைகள் திசை திரும்பவும் விதமாகவும் இருப்பதை பார்த்தால் பத்திரிகை சுதந்திரம் பாதை மாறிப் செல்வதும் தெரிந்து விடும்..

செங்கலை பார்த்தாலே எனக்கு முதலில் பொரித்தட்டுவது அயோத்தி கலவரம்தான். இந்த கலவரம் இன்றுவரை இந்தியாவின் நிம்மதியை கெடுக்கும் ஒரு நிகழ்வு. இன்றும் இதை வைத்து அரசியல் லாபம் காணும் ஓட்டு பொரிக்கிகள். அன்று என் வயசுக்க்கும் அனுபவத்திற்கும் என்னால்கூட இதை ஒரு விபத்தாக நினைக்க முடியவில்லை இதுவும் ஒரு திட்டமிட்ட சதி என்றே தோன்றியது. இன்றுவரை இந்த வழக்கு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பதும் அரசியல் ஆதாயம்தான் என்று சொல்ல தோன்றாமல் இருப்பது அதிசயம்.

பின் அயோத்தி பிரச்சனைக்கு தொடர் பிரச்சனையாக இருப்பது கோத்ரா சம்பவமும் அதற்கு பின் நடந்த குஜராத் கலவரமும். அயோத்தியில் நடந்த "தூண் தான" நிகழ்ச்யில கலந்துகொண்டு திரும்பிகொண்டிருந்த கரசேவகர்களில் கோத்ரா எனும் இடத்தில் வியாபாரிகளிடம் கைகலப்பில் ஈடுபட்டனர். அதன் பின் ஏற்பட்ட தீ விபத்தால் 58 பேர் கோத்ரா எனும் இடத்தில் தொடர்வண்டியிலேயே கருகி உயிரிழந்தனர். இஸ்லாமியர்கள்தான் விரைவு வண்டியை எரித்ததாக கூறப்பட்டது. இதை குஜராத் முதல்வர் மோடி பகிரங்கமாக இஸ்லாமியர்களை குற்றம் சாட்டி குஜராத் கலவரத்திற்கு பச்சை கொடி அசைத்தார். சுமார் மூன்று நாட்கள் நடந்த இந்த படுகொலையில் குஜராத் அரசின் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும். இந்நிகவுகளை ஒரு விபத்து என்றும் அல்லது உணர்ச்சில் உண்டான நிகழ்வு என்றும் கூறினால் கண்ணிருந்தும் குருடர்களேயாகும்.

மேற்கண்ட நிகழ்வின் சந்தேகமாக கூறப்பட்ட உதாரணம் மகாத்மா காந்தியை கொலைசெய்யும் பொழுது கொலைகாரனான கோட்சேவின் கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக்கொண்டான். அதே முறையை கோத்ரவிலும் சங்கபரிவாரங்கள் உபயோகப்படுதியிருக்கும் என்பது நியாயமான சந்தேகம் என்றே நினைக்க தோன்றுகின்றது.

இந்திராகாந்தி படுகொலைக்கு பிறகு நடந்தேறிய சீக்கிய கொலைகள். தற்போது ராகுல் காந்தி அந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்ததும் குறிப்பிடதக்கது.

மெலும் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விசுவ இந்து பரிஷத்தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி சுவாமி படுகொலை செய்யப்பட்டதால் வன்முறை வெடித்தது. இதன் தொடர்பாக கிறிஸ்துவர்களுக்கு எதிராக கலவரம் தூண்டி படுகொலைகளும் கற்பழிப்பும் அரங்கேற்றியது. ஒரு இன கலவரத்திற்கு முறையற்ற சுழல்களை உருவாக்கப்பட்டதும் எல்லோருக்கும் புரிந்திருக்கும். அதன் தொடராக கர்நாடகத்திலும் தமிழ் நாட்டிலும் மாதா கோவில்களில் கலவரம் எற்பட்டது.

இதேபோல சாதியின் பெயராலும் மதத்தின் பெயாரலும் வன்முறைகள் தூண்டிவிடப்பட்டு முறைகேடான அரசியல் வியபாரிகள் லாபத்தை அனுபவிற்கின்றனர். இதில் எந்த அரசியல் கட்சிகளும் விதிவிளக்கல்ல எனபதும் இதயத்தில் பீச்சிய துப்பாக்கி ரவை. சமிபத்தில் நடந்த சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும், மற்றொரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய சம்பவம்....

மேற்கண்ட கொடுமையான நிகழ்வுகளை ஏன் வரும் முன் தடுக்க முடியவில்லை? திட்டமிட்ட இந்த நிகழ்வுகள் அரசு நினைத்திருந்தால் தடுக்க முடியும் ஆனால் செய்யவில்லை. நேற்றய கலவரத்தை பத்திரிகைகள் வரிசைப் படுத்தி (டிசிட்டல் போட்டொகள்) காட்டியுள்ளார்கள். தொலைகாட்சியில் பின்னனி இசையில் வெளிப்படுத்தினார்கள். இப்படி செய்து மேலும் கலவரத்தை உருவாக்கி பெருசுப்படுத்தி லாபம் சம்பாரிக்க வேண்டுமா என்ன? பத்திரிகைக்கு ஒரு தர்மம் உண்டுங்க ... குழந்தைகள் படம், பூக்கள் படம் தெளிவாக இருக்கனும் ஆனால் கோர சம்பவம் படங்கள் கொஞ்சம் தெளிவற்ற நிலையிதான் இருக்க வேண்டும். இதுதான் ஞாயமுள்ள பத்திகைகள் செய்ய வேண்டியது. (அப்படிப்பட்ட நிலையில் "இந்தியா டுடே" எழுதிய விதமும் கொடுக்கப்பட்ட படம் பாராட்டலாம்) இந்த மாணவர் கலவரம் பெரிய அளவில் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே, ... வாழ்க தமிழகம்! வாழ்க தமிழர்கள்!...

இதுபோன்ற கலவரம் மற்றும் கோரச் சம்பவங்களுக்கு வேடிக்கை பார்த்த அரசு, ஒப்புகாக‌ ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும்வண்ணம் ஒரு கமிஷன் ஏற்பாடாகும். பின் கமிஷனும் முடியாது கலவரமும் தொடரும்.. இன்னமும் அயோத்தி கலவர கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுத்தமில்லா யுகம்காண மாணவர்கள் ஒன்றுபடட்டும்!...............

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,

ஆ.ஞானசேகரன்.

Sunday, November 16, 2008

ஊக்கப்படுத்தி உச்சாகமாகலாம்...

ஊக்கப்படுத்தி உச்சாகமாகலாம்...
என்னடா வாழ்கை கருவேலங் காட்டில்
புகுந்த வண்ணத்து பூச்சிபோல- என்றோ எங்கேயொ கேட்ட கவிஞனின் வார்த்தைகள்(கவிஞர் அறிவுமதி என்று நினைக்கின்றேன்)

ஒவ்வொருவரின் வாழ்கையிலும் வெவ்வேறு பிரச்சனைகள். பிரச்சனையே வாழ்க்கையாகாது, வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்...
வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோரும் வேதனை இருக்கும் ........
..... வந்த துன்பம் எது வந்தாலும்
நடக்கும் வாழ்வில் நிம்மதி தேடு!... (கண்ணதாசனின் வரிகள்)
வாழ்வியியல் பற்றி பல அறிஞர்களும் கவிஞர்களும் சொல்லியவை கோடிகள். என்னதான் நாம் நிதானமாக இருந்தாலும் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகள், மற்றும் நண்பர்கள் பொருத்துதான் நம்மனநிலையின் அமைப்பும் காரணமாக அமையும். இப்படி காரணிகள் பல இருந்தும் நம்மை நாமே ஊக்கப் படுத்துவதினாலும், நண்பர்கள் ஊக்கத்தினாலும் ஒவ்வொரு நாளும் உச்சாகமாக இருக்க முடியும்.

என்னுடன் வேலை செய்யும் நண்பன் ஒருவன், பார்க்க நல்ல அழகு என்றே சொல்லலாம். காலையில் வெலையிடத்தில் சந்திக்கும் போது வணக்கத்துடன் நல்ல புன்முருவல் கொடுப்பார். பின் என்னை தொட்டு இந்த சட்டையில் நீங்கள் பொருத்தமாக இருக்கின்றீகள் என்று காலரை சரிசெய்து விடுவார். உண்மையில் சட்டை எனக்கு பொருத்தமாக இருக்கோ இல்லையோ! என்னை உச்சாக படுத்தியது. வேலையிடத்தில் சின்ன சின்ன நல்ல வார்த்தைகள் புத்துணர்வை கொடுக்கும். இப்படி ஒருவரை உச்சாக படுத்த விலையேதும் கொடுக்கவேண்டியது இல்லை, நல்ல மனம் மட்டுமே போதும்.

உன்னால் முடியும் என்று சொல்லும் போது, நம்மால் முடியும், என்னால் முடியும் என்ற மந்திரமும் உள்ளடங்கியே இருக்கின்றது. எனவே நீங்கள் மற்றவரை ஊக்கப் படுத்துவதனால் நீங்களும் உச்சகமாக இருக்கின்றீர்கள் இதுதான் வாழ்வியியலின் எதார்த்தம். உங்களை ஊக்கப்படுத்திய வார்த்தைகளை உங்கள் நண்பர்களுக்கும் கொடுங்கள். உங்களின் நண்பனின் உச்சாகம் உங்களையும் மகிழ்விக்கும்.

ராணுவத்தில் வீரர்கள் வட்டமாக நின்று ஒருவர் முதுகை ஒருவர் அமுக்கி கொடுத்து இளப்பாற்றுவார்களாம். இதைதான் நாம் மற்றவர்களுக்கும் மற்றவர் நமக்கும் கொடுக்கவேண்டும். வீண்புகழ்ச்சி ஒருவனை பாதாளத்தில் கொண்டுபோய் விடும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே போல் சின்ன சின்ன புகழ்ச்சி வார்த்தைகள் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் உச்சாக படுத்தும் என்பதும் உண்மையே!........

ஊக்கப்படுத்துங்கள்! உச்சாகமாக இருங்கள்!

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

Wednesday, November 12, 2008

மகிழ்வை கொண்டாடுவோம்!...

மகிழ்வை கொண்டாடுவோம்!...

வீடு, மனைவி, மக்கள், வசதிகள் அனைத்தும் இருந்தும் இவரிடம் ஒரு குறையாக தெரிவது மகிழ்ச்சிதாங்க. இந்த மகிழ்ச்சியை எங்கிருந்து பெருவது? மகிழ்ச்சியை கொடுப்பது எது? எங்கே விளைக்கொடுத்து வாங்க முடியும்?

இயக்குனர் பாரதிராஜாவின் "கருத்தம்மா" படத்தில் பெரியார் தாசனும் சுந்தராஜனும் பேசும் வசனம் நினைவுக்கு வருகின்றது. பெரியார் தாசன் பாமர விவசாயியாக இருப்பார். சுந்தராஜன் அந்த ஊர் ஆசிரியாராக வருவார். பெரியார்தாசன் தன் மகனுடன் வயலில் வேலை செய்துகொண்டு இருப்பார். சுந்தராஜன் அவரிடம் ஏங்க உங்க மகனை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பலாமே என்பார். வேலைக்கு போயி என்னப்பன்னுறது என்று கேட்பார் பெரியார்தாசன். வேலைக்கு போயி பணம் சம்பாரித்து மகிழ்ச்சியா இருக்கலாம் என்பார் சுந்தராஜன். இப்ப என்ன நாங்கள் மகிழ்ச்சி இல்லாமலா இருக்கோம் போயி உன்வேலை பாரு என்று வாயடைத்து சொல்லுவார் பெரியார் தாசன்.

மகிழ்ச்சியா இருந்தா படிக்க வேண்டியதில்லை என்று சொல்வதிற்கில்லை. நமக்கு தேவையின் எல்லையே இந்த மகிழ்ச்சி தானே. உங்கள் அருகிலேயே இருக்கும் மகிழ்ச்சியை தொலைத்து விட்டு தேடி அழைவோர் பலர். மகிழ்ச்சியாக இருக்க பெரிய காரணம் நேரம் தேவையில்லை. மகிழ்ச்சிக்கு தேவை தொடரும் பயிற்சியே.

சிலர் மகிழ்ச்சியை பிரிதொரு காரணங்களுக்காக தள்ளிப் பொடுவார்கள். பரிச்சையில் நல்ல மதிப்பெண் பெற்றால் மகிழலாம் என்பார்கள், நல்ல மதிப்பெண் பெற்றதும் நல்ல கல்லூரி கிடைத்தால் மகிழ்ச்சியா இருக்கும் என்று நினைப்பார்கள். நல்ல கல்லூரியும் கிடைக்கும் பின் நன்றாக படித்து வேலைக்கு போனால் மகிழ்ச்சியா இருக்கும் என்று நினைப்பார்கள். வேலையும் கிடைக்கும் பின் வேலை உயர்வு கிடைத்தால் மகிழ்ச்சியா இருக்கும் என்று நினைப்பார்கள்........ இப்படியே இன்று கிடைக்கும் மகிழ்வை அனுபவிக்காமல் தள்ளிப்போட்டு தன்னை சோர்வு நிலைக்கு தள்ளி மற்றவர்களின் மகிழ்வையும் கெடுத்து விடுவதும் உண்டு..

நல்ல மகிழ்வுக்கு நல்ல பயிற்ச்சிதாங்க.... மகிழ்ச்சியாக இருக்க பெரிய காரணம் தேவையில்லை..... இயற்க்கையை பார்த்து, அதன் அழகை பார்த்து மகிழலாம். இன்று கிடைக்கும் சிறு வெற்றியும் மகிழ்ச்சிதானே, இதை இந்த சந்தர்ப்பத்தை விட்டால் கிடைக்காமல் போகலாம் எனவே இதையும் மகிழ்வாக ஏற்றுகொள்ளுங்கள். உங்கள் மகிழ்ச்சி மற்றவரையும் மகிழப்படுத்தலாம்....

மனிதனுக்கு மகிழ்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தேவையற்ற தொடர் மகிழ்ச்சி மனநிலை பாதிப்பாக இருக்கும். மகிழ்ச்சியா இருக்க வேண்டிய இடத்தில் மட்டுமே மகிழ்வா இருங்கள். "துன்பம் வரும்போது சிரிங்க" என்பதற்காக தாய் தன் பிள்ளையை இழந்து அழுகின்ற இடத்தில் சிரிக்க முடியுமா என்ன?

அதேபொல நாளை வரபோகும், அல்லது வராமலே போகும் துன்பத்திற்காக இன்றய மகிழ்வை விட்டு விடாதீர்கள்.. நல்ல பயிற்ச்சியே மகிழ்வுக்கு வழிகாட்டி. ஒரு படத்தில் நாகேஷ் ஊர் பண்ணையாராக அந்த ஊர் திருமண விழாவிற்கு செல்வார். சிறிது நேரத்தில் நாகேஷ் மணமகளை பார்த்து அழுவார். அதை பார்த்த மணமகள் அழுவார் பின் மணமகளை பார்த்து மணமகன் அழுவார். மணமக்கள் அழுவதை பார்த்து திருமணத்திற்க்கு வந்தவர்கள் அனைவரும் அழுதுக்கொண்டு இருப்பார்கள். புதிதாக வந்த ஒருவர் ஏன் எல்லோரும் அழுகின்றனர் என்று விசாரிப்பார்.. மணமக்கள் அழுகின்றார்கள் எனவே நாங்கள் அழுகின்றோம் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என்பார்கள். பின் மணமகனை கேட்டால் மணமகள் பண்ணையாரை பார்த்து அழுதாள் இவர்களுக்கு முன் தொடர்பு இருக்குமோ என்று நினைத்து அழுதேன் என்பார். பின் மணமகளை கேட்டால் பண்ணையார் அழுதார் பாவம் என்ன கவலையோ என்று நினைத்தேன் அழுகை வந்தது என்பாள். எல்லோரும் பண்ணையார் நாகேஷ்சை கேட்பார்கள். அதற்கு நாகேஷ் மணமகள் பக்கத்தில் ஒரு விளக்கு எரிகின்றது, அதன் நெருப்பு மணமகளின் சேலையில் பட்டால் அவள் எரிவாள் பின் இந்த மேடையே எரியும் அதை நினைத்துதான் மணமகளை பார்த்து அழுதேன் என்பார்....(படம் தெரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள்)

இந்த படநிகழ்வு காமடியாக இருந்தாலும் இல்லாத ஒரு நிகழ்வை நினைத்து தன்னுள் உள்ள மகிழ்வை இழக்கவெண்டாம் என்பதும் புரிந்து இருக்கும். மகிழ்ச்சியாக இருக்க பணம், பதவி, மாளிகை எதுவும் தேவையில்லை நல்ல எண்ணமும் தகுந்த பயிற்ச்சியும் இருந்தாலே போதும் மகிழ்வா இருக்கலாம்.......


மகிழ்வை கொண்டாடுவோம்!....
மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

Monday, November 10, 2008

வேலையில் குறைந்து வரும் நேர்மை! தமிழர்களிடம் தொற்றி வரும் அபாயம்....

வேலையில் குறைந்து வரும் நேர்மை! தமிழர்களிடம் தொற்றி வரும் அபாயம்........

வளர்ந்து வரும் விஞ்ஞானம், உலகமயமாக்கல், நவீன தொலைதொடர்பு உலகத்தை சுருக்கிவிட்டது. நம்ம சுப்பனுக்கும் குப்பனுக்கும் உள்ள பிரச்சனை வெள்ளை மாளிகை வரை தெரிந்துவிடுகின்றது.

நாங்கள் நால்வர் ஒருநாள் பீர் குடிக்கலாம் என்று பேசிகொண்டோம். அதில் ஒருவர் நான் வரவில்லை என்றார். அவரிடம் நான் காமடிக்காக ஒரு கதைச் சொன்னேன்....... அதாங்க எல்லோருக்கும் தெரிந்த மீன் கதை, நண்பர்கள் இருவர் சாமி கும்பிட கோயிலுக்கு சென்றனர். போகும் வழியில் ஒரு குட்டையில் மீன் அதிகமாக இருந்தது. இருவருக்கும் ஒரே குழப்பம் மீன் பிடிக்கலாமா? கோயிலுக்கு போகலாமா? ஒருவன் மீன் பிடிப்பதாக முடிவெடுத்தான். மற்றொருவன் இல்லை நான் சாமி கும்பிட போரேன் என்று சென்றுவிட்டான். ஆனால் இருவரின் மனதில் எண்ண ஓட்டங்கள், மீன் பிடிப்பவன் மனதில் கடவுளின் எண்ணமே அதிகம் இருந்தது. இதில் சாமி கும்பிட போனவன் மனம் முழுவதும் மீன் பிடிப்பதிலேயே இருந்தது.

மேற்கண்ட கதையில் மனதூய்மையை அடிகோல் காட்டுகின்றது. எந்த ஒரு செயல்பாட்டிற்கும் மன ஈடுபாடும் தூய்மையும் முக்கியம். அதேபோல தொழிலிலும் நேர்மை என்பது மிக முக்கியமானது. நேர்மையற்ற முறையினால் பணம் வருவதுபோல தெரிந்தாலும் முடிவில் அந்த தொழிலே நசுங்கும்..

ஆதிமனிதனின் முதல் தொழில் விபச்சாரம் என்று சொல்லப்படுகின்றது. விபச்சாரம் என்பது எனனை பொருத்தவரை ஆண்களால் பெண்களுக்கு அழிக்கபடும் அநீதி என்று சொல்வதிற்கில்லை. இது சமுகத்தால் அழிக்கப்படுகின்றதாகவே நான் கருதுகின்றேன். காசுக்காக தான் பெண்கள் விபச்சாரம் செய்வதும், மற்றும் ஈடுபடுத்த படுவதும். இது ஆண்களால் முடியும் என்றால் கண்டிப்பாக ஆண் விபச்சாரமும் சமுகத்தில் இருக்கும் என்பது நிச்சயம். ஆண் விபச்சாரம் பற்றிய என் முந்தய பதிவு ஆண் விபச்சாரம்,........ வடிகாலுக்காக இளஞன் விபச்சாரியை தேடி வருகின்றான். பணமும் கொடுக்கப்படுகின்றது அந்த பெண் தன்னை முழுமையாக அவனுக்கு அழிக்கவில்லை என்றால் அங்கே நடப்பது ஏமாற்றம். இதை கலாச்சாரம் என்ற போர்வையில் ஞாயப்படுத்த வேண்டாம். விபச்சாரம் சரியா? தாவறா? என்று கூற வரவில்லை ( இதை சமுகம் பதில் சொல்லட்டும்) நேர்மையின்மையை கூறுகின்றேன்.

மேற்சொன்ன எடுத்துக்காட்டு விரசமாக இருந்தாலும், தொழிலில் நேர்மையின்மை பாதிப்பு உணர்வு பூர்வமாக இருக்கும் என்று நம்புகின்றேன். தமிழர்களிடம் விபச்சாரம் என்பது மிக மிக குறைவு கலாச்சாரம் என்ற போர்வையில் நடக்கும் நேர்மையின்மையும் ஒரு காரணம். இந்த தொழில் நசியுற்றால் சமுகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை விட்டுவிடலாம்.

ஆனால் இன்று தமிழர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வைகை தொழிகளிலும் நேர்மை குறைந்து வருவது அபாயத்தை கொடுக்கின்றது. மலேசியா, சிங்கபூர் நாடுகளில் பொதுவாக தமிழர்கள்தான் வேலைக்கு வருவார்கள். தற்போது தவிற்க படுகின்றது எனபது வெளிப்படையாக தெரிகின்றது. இதற்கு தொழில் நேர்மையின்மை மற்றும் குற்றம் செயல்கள் முக்கிய காரணம். முன்பெல்லாம் தொலை தொடர்பு துறையில் தமிழர்கள் அதிகமாக வருவார்கள். தற்போது ஆந்திரா மற்றும் வடஇந்தியர்கள் அதிகம் காணமுடிகின்றது. இதற்கு தமிழர்கள் ஞானம் குறைந்துவிட்டது என்பதில்லை, நேர்மையின்மைதான் காரணம்.

வெளிநாட்டில் மட்டும் இல்லை, உள்நாட்டு வேலைகளிலும் நேர்மையின்மை காணமுடிகின்றது. இதை தொழிலதிபர்கள் வெளிப்படையாகவே சொல்கின்றனர். தொழிலதிபர் தமிழராக இருந்தாலும் தமிழனை வேலைக்கு அமர்த்துவதில்லை காரணம் குறைந்து வரும் நேர்மை. தமிழகத்தில் நடக்கும் கட்டிட வேலை, சாலைப்பணிகளில் வடமாநிலங்களிலிருந்து ஒப்பந்த பேரில் ஆள் எடுத்து வேலை செய்கின்றனர். தமிழ் நாட்டில் ஆள் இல்லையா? இல்லை எல்லோரும் தன்நிறைவு பெற்றுவிட்டனறா? பிச்சை எடுக்கும் சோம்பேரிகள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கின்றது. வெளிப்படையாக தெரியும் இந்த தொழில் நேர்மையின்மையை உடன் கழையவில்லை என்றால் தமிழருக்கு உலகில் இடமில்லாமல் போகலாம்....

எந்த தொழிளாகட்டும் நேர்மையும் தூய்மையும் இல்லை என்றால் காலபோக்கில் நசுங்கும். நவின உலகில் எல்லோரும் எல்லா வேலையும் செய்ய நேரமில்லை அதற்காக புரோக்கர்கள் தேவையாகின்றது. தற்போது தமிழகத்தில் நடந்துவரும் ரியல் எஸ்டேட் தொழிலில் நேர்மை எந்த அளவிற்க்கு இருக்கின்றது என்பதும் பல வழக்குகளில் தெரிய வருகின்றது. ஒரே இடத்தை பலருக்கு விற்று பணம் பார்த்தும் இருக்கின்றார்கள். இவற்றுக்கு மேலெ சொன்ன விரசமான எடுத்துக்காட்டு பொருத்தமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் மிக மோசமான நிலைக்கு விவசாயம் தள்ளப்பட்டு வருகின்றது. இதற்க்கு வேலைக்கு ஆல் இல்லாதது மேலும் வேலையில் ஈடுபாடு இல்லாமை, நெர்மையின்மையும் காரணங்கள்.. பணம் ஒன்றெ குறிக்கோலாக இல்லாமல் நேர்மையுடன் செய்தால்தான் நாம் நினைக்கும் எதிர்கால இந்தியாவை காணமுடியும் என்பது உண்மை..........

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்
ஆ.ஞானசேகரன்

Saturday, November 8, 2008

ஜார்ஜ் புஷ்ஸை சந்தித்து ரஜினி பேசியது என்ன?

ஜார்ஜ் புஷ்ஸை சந்தித்து ரஜினி பேசியது என்ன?

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்குப் பிறகு, அப்பதவியை வகிக்கவுள்ள பராக் ஒபமாவிற்கு வாழ்த்துகள். அமெரிக்கா இந்தியாவிடம் நல்லுரவு காணும் வேலையில் ஒபமாவின் வருகை நலமாக இருக்கும் என்றே நம்புவோம்.ரஜினிசார் பேரைச் சொல்லி, அவரின் செய்தியை வெளியிட்டும் பணம் பார்க்கும் பத்திரிக்கைகள், அரசியல் வாதிகள் மத்தியில் நானும் கொஞ்சம் அவர் பெயரை பயன் படுத்தி ...........ஹி ஹி ஹி
எந்த பத்திரிகைகள் அவர் பெயரை சொல்லி பணம் பார்க்கின்றதோ அதே பத்திரிகைதான் அவருக்கும் அவர் நடிக்கும் படத்திற்கும் விளம்பரமும், புகழும் கொடுக்கின்றது என்பதை ரசிகர்கள் மறந்து பேசலாம். ஆனால் ரஜினி சார் மறக்க முடியாது, அப்படியே மறந்தாலும் நியாமும் இல்லை. (சிவாஜி படத்திற்கு பெயர் வைக்க நடிகர் திலகம் வீட்டில் அனுமதி வாங்கினார்களாம் என்று விளம்பரம் கொடுக்கவில்லையா என்ன?)

ரஜினி , கமல் பற்றி அவர்கள் ரசிகர்கள் என்ன நினைக்கின்றார்களோ எனனவோ? அவர்களின் நட்பு இன்றும் பாரட்டகூடியதாக உள்ளது. இதில் கமலை விட ரஜினின் எதார்த்தம் அதிகமாகவே தெரிகின்றது. கமலின் கொள்கையில் கருத்து வேறுபாடு கொஞ்சம் அதிகமாக இருப்பதால் நட்பை நேரடியாக காட்ட தவறிவிடுவார்.....

Tuesday, November 4, 2008

பசியும்! ருசியும்!.....

பசியும்! ருசியும்!.....

பொதுவாக உயிர்களுக்கு தன்னை தனக்கு ஞாபகப் படுத்துவதே இந்த பசிதாங்க. பசியில்லனா வாழ்வியலில் ருசியேதுங்க!......
பசியும் சுண்டல் ருசியும் போனால்!...
பக்தியில்லை பசனையில்லை- சுத்தமான
சோம்பேரிகளின் வேசத்திலே -----என்று சவுக்கால் அடித்த வரிகளை சொன்னவன் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்,....

பசி மனித உடலின் ஆரோக்கியம்! பசி சக்தியின் வேண்டுகோள்! பசி என்பது அமிலங்களின் எரிச்சலும் தூண்டுதலும். மனிதன் உயிர்வாழ சக்தி தேவைப் படுகின்றது, அந்த சக்தி உணவிலிருந்து எரித்து எடுத்துகொள்ளப்படுகின்றது. அந்த உணவை மனிதன் சமையல் செய்து உண்பதுதான் அவனுக்கு தேவை ருசி.

சமையல் என்பது உணவுப் பொருளை சுவை, தோற்றம், ஊட்டச்சத்துக்கள், போன்றவற்றை தான் விரும்பும் வைகையில் வெப்பத்தை பயன்படுத்தி மாற்றுவதே சமையல் என்று அழைக்கின்றோம்... வெப்பம் பயன்படுத்துவதன் மூலம் கிருமிகளும் அழிக்கப் படுகின்றது.

சமையலுக்கு வெப்பம் அவசியம் தேவைப்படுகின்றது. இந்த வெப்பத்தின் அளவை பொருத்து சமையலின் வகைகள் மற்றும் சமையலின் ருசிகள் நிர்ணயக்கப் படுகின்றது. இப்படி வெப்பத்தை பயன் படுத்துதல் முறையில் சமையலின் வகைகள் கீழ்கண்டவாறு சொல்லப்படுகின்றது.
1.ஆவியில் வேகவைத்தல்
2.நீரில் வேகவைத்தல்
3.தழலில் சுடுதல்
4.பாத்திரத்திலிட்டுச் சுடுதல்
5.வறுத்தல்
6.காய்ச்சுதல்
7.பொரித்தல்
8.வெதுப்புதல்
_ இப்படி வெப்ப அளவை பொருத்துதான் சமையல் வகைப் படுத்தப்படுகின்றது. இந்த வெப்ப நிலை சமன் படுத்த நீர் மற்றும் எண்ணெய் பயன் படுத்துகின்றோம்.... இப்படி வகைப்படுத்தப்பட்ட சமையல் ருசியும் மாறுபடுகின்றது.

வெண்ணெய் மற்றும் நெய்க்கு ருசி கிடையாது. இவற்றின் வாசனை நம்மை சாப்பிட தூண்டும் (இது வேதியியல் கோட்பாடு) அதுபோல் சமையல் எண்ணெய் மற்றும் மாமிச கொழுப்பிற்க்கு ருசி என்பது இல்லை இதன் வாசனை ருசிப்பதுபோல தோன்றும். நாவிற்க்கு ருசியை தூண்டுவது நிறம் மற்றும் வாசனை..... அண்ணாசி பழத்தின் வாசனை நல்ல ருசியின் உணர்வை கொடுக்கும் ஆனால் சாப்பிட்டால் எதிர்பார்ப்பு குறையும்.

சமையல் வகைகளை எண்ணெய் முக்கிய இடத்தில் உள்ளது. உதாரணமாக ஒன்றை எடுத்துக்கொள்வோம்.. கோதுமை

கோதுமையை நீரில் வேகவைத்தால்: கோதுமை சோறு நிலையடையும் நீரில் சீராக வெப்பம் உயர்ந்து 100 C* அடையும் (நீரில் பூரி சுட முடியாது குறைந்த வெப்பத்தில் மாவு கூழாகும் பூரிக்கு 100 C* மேல் வெப்பம் தேவை)

ஆவில் வேகவைத்தல்: நீரை கொதிக்கவிட்டு அதன் மேல் துணியில் வேடுக்கட்டி அதன் மேல் வேகவைப்பது இதற்கு புட்டு நிலை என்பர் நீர் அதிகம் சேராமல் ஆனால் வெப்பம் 100 C* ல் வேகவைப்பது( இதில் சோறு நிலை அடையாது ஏனனில் 100*C க்கு குறைந்த வெப்பநிலையில் இருப்பதில்லை)

பாத்திரத்தில் இட்டு சுடுதல்: கோதுமை மாவை தட்டி நெருப்பின் இடையில் பாத்திரம் வைத்து தட்டிய மாவை சுடுதல், இது சப்பாத்தி மற்றும் ரொட்டி நிலை 100 C* மேல் சமசீர்ரற்ற வெப்பநிலையில் சுடுதல்( இப்படி சுடும் உணவு கொழுப்பற்ற ஆரோக்கியமான உணவாகும்)

வருத்தல்: வருத்தல் பொதுவாக எண்ணெய் சிறிது பாத்திரத்தில் இட்டு சமைப்பது நீரும் சேர்ப்பதால் 100 C* மற்றும் கொஞ்சம் அதிகமான வெப்பநிலையில் சமையல் செய்வது( இதில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் பலருக்கு நல்லது இல்லை ஆனால் எண்ணெய் வாசனை சாப்பிட தூண்டும்)

பொரித்தல்: கொதிக்கும் எண்ணெய்யில் நேரடியாக இட்டு சமைத்தல் (பூரி நிலை.. மொரமொரப்பான உணவுப் பொருள்) 100 C* க்கு அதிகமான அதே வேலையில் வழவழப்பான திரவத்தில் சமையல் செய்வது....

மேற்கண்ட விளக்கங்கள் மூலம் சமையல் என்பது வெப்பத்தில் அளவு மற்றும் நீரின் அளவை பொருத்து மாறுப்படுகின்றது என்பதை கண்டோம். இது ஒரு அறிவியல் கட்டுறை இல்லை அனுபவ விளக்கம் மட்டுமே.

பசி ருசியறியாது என்பர் உண்மைதான், அதிக பசித்த ஒருவன் சாப்பிடும்போது ருசி தெரிவதில்லை அது ஒரு சில வினாடிகள்தான்.. அதன் பின் உப்பில்லதது தெரிந்துவிடும்.

ருசி மற்றும் பசி சார்ந்த பொன்மொழிகள்
1.உப்பில்லா பண்டம் குப்பையிலே
2.உப்பிட்டவரை உயிருள்ளவரை நினை
3.வசதிப் படைத்தவன் தரமாட்டான் வயிறுப் பசித்தவன் விடமாட்டான்
4.சாண் வயிற்று உணவில்லை எனில் இந்த சகத்தினை அழிப்போம்!
5.பசி ருசியறியாது...
இன்னும் பல..............

இதற்கு தொடர்புடைய மற்றொரு பதிவு

Sunday, November 2, 2008

இதயமே! என் இதயமே!...

இதயமே! என் இதயமே!...

இதயமில்லாதவனை இரக்கமில்லாதவன் என்று சொல்கின்றொம், இரக்கதிற்கும் இதயத்திற்கும் தொடர்புயில்லை என்றாலும் தொடர்ச்சியான இதயத் துடிப்புதான் மனிதனை இயங்க வைக்கின்றது. பாதுகாப்பற்ற உணவு முறை, தூக்கமின்மை, மன அழுத்தம், ஊக்கமின்மையால் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வர வாய்ப்புள்ளதாக மருத்துவ உலகம் சொல்கின்றது.

வருகின்ற 2020ம் ஆண்டில் இந்தியாவில் வெகுவாக இதயநோய் பாதிக்கும் என்று எச்சரிக்கை சொல்கிறது. இந்தியாவில் கொள்ளை நோய்பொல இதயநோய் பரவகூடும் என்று உலக சுகாதர நிறுவனம் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹெட்போன் பயன் படுத்துவதும் இதயம் பாதிக்கும் என்றும் ஆராட்சியாளர்கள் சொல்கின்றனர். ஹெட்போன் பயன்படுத்துவதால் தூக்கமின்மை, மன எரிச்சல் உண்டாகின்றது அதனால் பலருக்கு இதய அழுத்தம் மற்றும் இதய அடைப்பு ஏற்ப்படும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்...

லண்டனில் உள்ள வெல்கம் பவுண்டேஷனும், பிரிட்டிஷ் இதய அமைப்பும் இணைந்து `பாலிபில்' என்ற மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளன. இந்த மாத்திரையானது அனைத்து வகையான இதய நோய்களையும் குணப்படுத்தக்கூடியது என்பதும் மகிழ்சியான விடயம். மேலும் ஆஸ்பிரின் மாத்திரையை நடுத்தர வயதுடையவர்கள் அன்றாடம் எடுத்துக் கொள்வதால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் ஏற்படுவதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்... ஆஸ்பிரின் எல்லொரும் எடுத்துகொள்ளலாம் என்றாலும் தகுந்த மருத்துவர் அலோசனை பேரில் எடுப்பதுதான் நல்லது.

இதநோயால் பாதிக்கப்பட்டு மாற்று இதயம் பொருத்தபடுவதும் சமிபத்தில் இந்தியாவில் வெற்றியடைகின்றது. ஆனால் மாற்று இதயம் கிடைப்பது அரிதான விடயம். மாற்று இதயம் வேண்டி காத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. மூளைச்சாவு அடைந்தவர் மட்டுமே இதயம் கொடுக்கமுடியும். இதற்கான விழிப்புணர்வு இந்தியாவில் இன்னும் வரவில்லை.... இப்படிபட்ட நிலையில் தற்போது மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான விடயம் வெற்றிப்பெற்றால் வருகின்ற காலங்களின் இதயநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கையை குறைக்கலாம்.. இப்படி மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்வதில் ஒரு மனமகிழ்சியுடன்... இத்துடன் இணைத்துள்ளேன்....


விலங்கு இழையங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது முழுமையான செயற்கை இருதயம்

மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

இருதய இயக்கம் பாதிக்கப்பட்ட,இருதய மாற்று சிகிச்சையொன்று சாத்தியமற்ற நோயாளிகளுக்கு இந்த செயற்கை இருதயமானது வரப்பிரசாதமாக அமையும் என மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பிரான்ஸின் பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான மருத்துவ கலாநிதி அலெய்ன் கார்பென்ரியர் தெரிவித்தார்.

கடந்த 15வருடகால ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இருதயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு பாரிஸில் இடம்பெற்றது."உயிரியல் இரசாயன இழையங்களைப் பயன்படுத்தி முழுமையான செயற்கை இருதயம் உருவாக்கப்படுவது உலகில் இதுவே முதற்றடவையாகும்"என மேற்படி இருதயத்தை உருவாக்கியுள்ள உயிரியல் மருத்துவக் கம்பனியான "கார்மட்"இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பற்றிக் கொலம்பியர் தெரிவித்தார்.

"இந்த உயிரியல் இரசாயன இழையங்களானது விலங்குகளின் இழையங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டமையால் அவற்றை மனித உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவுள்ளது"என அவர் கூறினார்.கார்மட் நிறுவனமானது,பொது மற்றும் இராணுவ பாவனைக்கான விமானங்கள்,எறிகணைகள்,விண்கலங்கள் என்பனவற்றை உருவாக்கி சந்தைப்படுத்தி வரும் விண்வெளி மற்றும் விமானப் பாதுகாப்பு கம்பனியால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் 15புதிய செயற்கை இருதயங்களை உருவாக்க கம்பனி திட்டமிட்டுள்ளது.இந்த இருதயங்களை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மனிதர்களுக்கு பொருத்தும் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.1980களிலிருந்து செயற்கை இருதயங்களை உருவாக்குவதற்கான அநேகஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.அவற்றில் அநேகமானவை இருதய மாற்று அறுவைச் சிகிச்சை வரை நோயாளியின் உயிரை தக்க வைப்பதற்கு உபயோகிக்கப்பட்டன.

எனினும்,அவை எதுவுமே நீண்டகால அடிப்படையில் மாற்று இருதயமாக இயங்கும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை.அந்த செயற்கை இருதயங்களைப் பொருத்துவதால் ஏற்படும் ஒவ்வாமை எதிர் விளைவுகள் மற்றும் குருதி உறைதல் போன்ற பிரச்சினைகள் காரணமாகவே அவற்றினை நோயாளிக்கு நிரந்தரமாக உபயோகிப்பது சாத்தியமற்று இருந்தது.ஆனால்,இப்புதிய மிருக இழையங்களால் உருவாக்கப்பட்ட செயற்கை இருதயமானது குருதி உறையும் அபாயம் குறைந்தது என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
29 Oct 2008

Friday, October 31, 2008

பயம் என்னை வென்றதா?

பயம் என்னை வென்றதா?

வணக்கம்!
சின்ன வயசு நினைவுகளை பற்றி சொல்லனும்னா ஒரு மகிழ்ச்சியான மனசுதாங்க வரும். அதிலும் பால்ய வயசு நினைவுகள் சொல்லவே வேண்டாம்.. இப்படி எல்லாமே ஒரு சுகமான நினைவாக வந்து செல்வது பிடித்தமான ஒரு விடயம். சின்ன வயசுல நடந்த பல விடயம் காரணமே புரியாமல் இருக்கும்.


சின்ன வயசு நினைவுகளை சொன்னால் இயக்குனர் தங்கர்பச்சன் சாரோட "அழகி" படம் எல்லோருக்கும் வந்து போகும். அப்படி ஒரு இயல்பான நிகழ்வை கொடுத்து இருப்பார். அதில் பார்த்திபன் சார் தன் குழந்தையின் மதிப்பெண் அட்டையில் கையெழுத்து போடும்போது சொல்லும் இயல்பு ரொம்பவும் எதார்த்த வார்த்தை....


இப்படி அசைபோட்ட நிகழ்வு ஒன்று........ 4வது படித்துக்கொண்டிருந்த நேரம் என் நண்பன் ஒருவன் என்னிடம் டேய்! உனக்கு சாமிக்கு பயமா? எனக்கு பயமா? என்றான், நான் சாமிக்கு பயம் என்றேன். அவன் என் கண்முன்னே கையை வேகமாக ஆட்டினான், நான் கண்ணை சிமிட்டினேன். இதோ எனக்கு பயந்துடே! என்றான். பிறகு இல்லை இல்லை உனக்கு பயபுடுவேன் என்றென், மறுபடியும் கையை கண்முன் ஆட்டினான் என் கண்கள் சிமிட்டியது. இப்பொ சாமிக்கும் பயந்துடேன்.......


இப்படி பயம் என்பது எப்படியும் வெற்றிப் பெற்றது. மனிதன் வாழ்கை ஒன்றை சார்தே இருப்பது பொல் பயமும் மனிதனை சார்ந்து உள்ளது. ஆனால் பயம் இருக்கும் நிலை பொருத்துதான் அவனை அடையாலம் காணமுடிகின்றது.


பரினாம வளர்சியில் மனிதன் மனிதனாக வாழத்தொடங்கியதும், தன்னை சுற்றி நிகழும் இயற்கை புதுமைகள் எல்லாம் தன்னை அடக்கியாலும் சக்தியாக நினைத்தான். அவைகள் நமக்கு அப்பாற்பட்ட சக்தியாக எண்ணியதால், இவன் மீது இயற்கை ஆழ்மைக் கொண்டதன் உணர்வுதான் பயம் உண்டாக்கியது. இயற்கையின் மீது கொண்ட பயம்தான் மனிதனால் கடவுளை உண்டாக்க முடிந்தது. அது இன்றுவரை தொடந்து வரும் படைப்புகள். மனிதனை கடவுள் படைத்தான் என்று மனிதன் கடவுளை படைத்துக் கொண்டே இருக்கும் நிலைதான்..........???????.....!!!!!!....(எந்த குறியை எங்கே பொடுவது தெரியவில்லை)

இப்படி மனிதன் கடவுளுக்கு பயப்புடுகின்றானா என்றால்? ... தெரியவில்லை. நடந்துவரும் கோர நிகழ்வுகள் இல்லை என்றே சொல்லிவிடும். தனி மனிதன் பயமின்றி வாழ்வது இயலாத ஒன்று. ஏதோ ஒரு நிகழ்வுக்கு பயந்தே அகவேண்டிய நிலை எப்பொழுதும் உண்டு. உதாரணமாக மாபெரும் வீரன் சதாம் உசேன் சிறையில் இருந்தபோது தன் துணிகளுடன் மற்றவர்களின் துணிகளையும் காய வைத்த நிலைமை இருந்ததால் கிருமித் தொற்றினால் தனக்கு எய்ட்ஸ் வந்துவிடுமோ என்று பயந்தாராம். இதை அவரே தன்னுடைய ஜெயில் டைரியில் எழுதியிருக்கிறார் . இப்படி மனிதன் உணர்வுகளில் மிக முக்கிய இடத்தில் இருப்பது இந்த பயம் தான்.


பயம் மனிதனை வழிநடத்தும் கைகாட்டி.... எந்த பயத்தை எதற்கு பயன் படுத்துவது என்பதில் தான் நல்லது கெட்டது உருவாக்க முடியும்.... விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிந்தனைதுளியில் பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு; கோழைத்தனதின் தோழன்; உறுதியிக்கு எதிரி; மனித பயங்களூக்கெல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணப் பயத்தை கொன்றுவிடுபவன் தன்னை வென்றுவிடுகின்றான்; அவந்தான் தனது மனசிறையிலிருந்து விடுதலை பெறுகிறான்.


இப்படி பயத்தை வென்றவன் எதற்க்கு பயந்து வாழ்கின்றான். இப்பொழுதுதான் இன்றய சிந்தனையில், நான் என் நண்பனுக்கு பயப்புடுகின்றேனா? இல்லை கடவுளுக்கு பயப்புடுகின்றேனா? எப்படியும் பயம் என்பது மனிதன் உணர்வுகளில் ஒன்றுதான். வாழ்நாள் முழுவதும் பயம் இன்றி வாழ்வது முடியாத காரியம். எதற்கு?, எப்படி?, ஏன்? நம்மை பயம் ஆழ்கின்றது என்பதுதான் மனிதனை வழிநடத்தும் கரு.


புரட்சி தலைவர் MGR ன் என் அண்ணன் பட பாடலில்
"அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோலைக்கு இல்லம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு

நீ கொண்டு வந்தது என்னடா, மீசை முறுக்கு"
என்று பயத்தை போக்கும் வார்த்தைகள் சொல்லப்படும்...


மருத்துவியலில் தொடர் பயம் என்பது ஒரு மனநோய்.. உடன் கவணிக்க வேண்டியது என்று கூறுகின்றது. அப்படிப் பட்ட பாத்திரத்தில் பத்மஸ்ரீ கமலஹாசன் "தெனாலி" என்ற படத்தில் நடித்துருப்பார். கண்டிப்பாக கண்ணொளியை பார்க்கவும்யாமிருக்க பயம் ஏன்? கடவுளின் தத்துவம்

பயமின்றி வாழ்வதா? இல்லை பயத்தை வென்று வாழ்வதா? முடிவை நம் பக்கம் வைத்து விட்டு தேவையற்ற பயத்தை வென்று மனிதனாக வாழ வாழ்த்துகள் !

Monday, October 27, 2008

விளக்கமான விளக்கு....

விளக்கமான விளக்கு.....
"விளக்கு" ஒரு பெயர் சொல், இது ஒரு வினைச் சார்ந்த பெயராக இருப்பதால் "விளக்கு"(விளக்கம் சொல்) என்பதும் வினைச்சொல்லாகவும் செயல்படுகின்றது.

பூமி தன்னை தானே சுற்றி சூரியனையும் சுற்றுகின்றது. பூமி தானே சுற்றுவதால் இரவு பகல் எற்படுகின்றது. இதில் பகல் என்பது சூரிய ஒளியால் பூமி வெளிச்சம் அடைகின்றது. ஒளி அல்லது வெளிச்சம் என்பது நிறங்களின் கூட்டு. ஒளி ஏழு நிறங்களின் கூட்டு என்பதாகும். வெள்ளை என்பது ஒரு நிறமே இல்லை நிறங்களின் கூட்டு.

ஒரு பொருளை உணரவேண்டுமானால் தொட்டுப் பார்த்து அறியலாம். ஆனால் ஒரு பொருளை பார்க்க வேண்டுமானால் அங்கேதான் வெளிச்சம் (ஒளி) தேவைப்படுகின்றது. இருளில் உள்ள பொருளை பார்க்க முடிவதில்லை. ஆனால் தொட்டு உணர முடியும்.

பகலில் சூரிய வெளிச்சத்தால் நம்மால் பார்க்க முடிகின்றது. ஒரு பொருள் நம் கண்ணுக்கு தெரிகின்றது என்றால் அந்த பொருளில் படும் வெளிச்சம்(ஒளி) நம் கண்ணை வந்து அடைகின்றது என்று பொருள். அப்படி அந்த பொருளில் படும் வெளிச்சம் நம் கண்ணை அடையாமல் தடுக்கப் படுமேயானால் அந்த பொருள் நமக்கு தெரியாது. இதில் பொருளின் தூரம், அமைப்பு, பொருளின் இயற்பியல் குணம் அடிப்படையில் நம் கண்ணால் காணப்படுகின்றது. இதில் ஒளியின் வேகமும் தூரமும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும்.


ஒவ்வொருப் பொருளுக்கும் நிறத்தை உற்கிரகரிக்கும் தன்மை உண்டு. இதிலிருந்து ஒரு பொருள் சிகப்பு நிறத்தில் இருப்பதாக கண்ணுக்கு தெரிகின்றது என்று வைத்துக் கொண்டால் அந்த பொருள் ஒளியில் உள்ள எல்லா நிறத்தையும் உற்கிரகரித்துவிட்டு சிவப்பு நிறத்தை மட்டும் வெளிவிடுகின்றது. எனவேதான் அந்த பொருள் நம் கண்ணுக்கு சிவப்பு நிறமாக தொன்றுகின்றது. உண்மையில் அந்த பொருளில் சிவப்பு நிறம் இல்லை என்பது இயற்பியல்.

மனிதனின் முக்கிய கண்டுபிடிப்பு "விளக்கு". இருளில் பொருளை காணவேண்டுமானால் வெளிச்சம் தேவை. அந்த வெளிச்சம் உருவாக்க பயன் பட்டதுதான் இந்த விளக்கு. இருளில் உள்ளப் பொருளை நம் கண்ணிற்கு விளக்குவதால் தான் அந்த பொருளுக்கு பெயர் விளக்கு என் பெயர் வந்தது.

மனிதனில் செயல்பாடுகளை அதிகப்படுத்தியதின் பெருமை இந்த விளக்கையே சாரும். நெருப்பை கண்டுபிடிச்ச அந்த கனமே விளக்கும் பயன் படுத்த பட்டது. முதலில் தீப்பந்தம் பிறகு விளக்கு எனப்படும் கருவிகள் பயன்பாடுகள் வரத்தொடங்கின.

விளக்குகள் முதலில் எண்ணெய் விளக்குகள், பின் படிப்படியாக மின் விளக்கு அதன் பிறகு விஞ்ஞான மாற்றம் செய்யப்பட்ட ஆவி விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்தன. எண்ணெய் விளக்குகள் தாவர எண்ணெய், விலங்கூகளின் கொழுப்பு மற்றும் நெய்கள்,அதன் பின் மண்ணெய் (பெட்ரோலிய எண்ணெய்) பயன் பட்டது.

எண்ணெய் விளக்குகள் ஒளி தரவும் அழகூட்டவும் நீண்ட காலமாகப் பயன்படுகின்றன. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மண், பித்தளை முதலிய உலோகங்கள் விளக்குகளை உருவாக்க மரபு வழியாகப் பயன்படும் பொருட்களாகும். இந்திய மரபில் எண்ணெய் விளக்கு ஏற்றுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

விளக்குகள் அகல் விளக்கு, குத்து விளக்கு, தூண்டாமணி விளக்கு, சட்ட விளக்கு, பாவை விளக்கு. என இன்றும் பயன் பாட்டில் இருப்பதை காணலாம். இதில் ஆர்கண்ட் விளக்கை அய்மே ஆர்கண்ட் என்பவர் கண்டுபிடித்தார். ஆர்கண்ட் விளக்கு மேன்படித்திய விளக்காகும். முதலில் ஆர்கண்ட் விளக்கில் திமிங்கில எண்ணெய்யும் பின் மண்ணெயையும் பயன் படுத்தும்படி வடிவமைக்கப்பட்டது. சமிக்ஞை விளக்கு தொடர்பு கொள்ள பயன் படுத்தும் விளக்கு. இவற்றை லாந்தர் விளக்கு எனவும் சொல்லப்பட்டது. மேலும் கலங்கரை விளக்கம், கலங்கரை விளக்கத்தில் பயன்படும் ஒளிமூலம் விளக்கு எனப்படும். இது மின் விளக்காகவோ எண்ணெய் விளக்குகளாகவோ இருக்கலாம். இவற்றிலிருந்து வெளியாகும் ஒளி வில்லைகளை பயன்படுத்திக் குவியச் செய்யப்படுகின்றன. தொடக்ககாலக் கலங்கரை விளக்கங்களில் திறந்த தீச்சுவலைகள் பயன்பட்டன பின்னர் மின்விளக்கு பயன்ப்பாட்டுக்கு வரத்தொடங்கின.

விளக்குகளில் மின்விளக்கு ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கியது. 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே முயற்றிகள் செய்யப்பட்டு வந்தது. 1879 இல் கார்பன் நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 40 மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரவிட்டதன் மூலம் மின் விளக்கைக் கண்டு பிடித்த பெருமை தாமஸ் ஆல்வா எடிசனுக்கு கிடைத்தது.

மின் விளக்குகள் 1. வெள்ளோளிர்வு (Incandescent lamp) 2. உடனொளிர்வு (Fluorescend lamp) 3. உலோக ஹேலைட்டு விளக்கு(Medtal Halide lamp) 4. தங்ஸ்தன் அலன் விளக்கு (Tungstan-Halagen lamp)5. பாதரச ஆவி விளக்கு(Mercury Vapour lamp) 6. சோடியம் ஆவி விளக்கு(Sodium Vapour lamp) பயன்பாட்டுக்கு இருக்கின்றன.

மேலும் விஞ்ஞானிகள் சூரிய ஒளியை மிக பெரிய கண்ணாடி மூலம் உலகில் இரவிலும் வெளிச்சமூட்ட ஆராய்ந்து வருகின்றனர். இப்படியாக நம் கண்ணுக்கு பொருளை விளக்குவதால் தான் விளக்கை அவ்வாறாக அழைக்கின்றோம்.....

Thursday, October 23, 2008

மனிதம் காக்க கொண்டாடுங்கள்..தீபதிருநாள்!

மனிதம் காக்க கொண்டாடுங்கள்..தீபதிருநாள்!

வந்துவிட்டது திருவிழா! தீப திருநாள் "தீபாவளி" வந்துவிட்டது.
மனம் அழுத்தம், வேலையின் பழு, குடுப்பத்தில் குழப்பம், நாட்டில் மின் தட்டுபாடு போன்ற பிரச்சனைக்கு மத்தியில் மனிதன் சிறிதேனும் மனம் இழப்பாற இது போன்ற திருவிழாக்கள் தேவையான ஒன்றுதான்.

இதில் தீபாவளி தமிழனுக்கு தேவையா? தீபாவளியின் பொருள் மற்றும் கொண்டாடும் காரணம் என்ன? என்ற கேள்விகளும் வருவதிலிருந்து தீபாவளியின் நோக்கம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதும் தெளிவாகின்றது. என்னை பொருத்தவரை மனிதம் பேசாத, மனித நேயம் சொல்லாத, மனிதத்தை பிரித்து பார்க்கும் விழாக்கள் தேவையே இல்லை. (சரியான வரலாற்று காரணம் இருந்தாலும் கூட). தற்பொது தமிழ்நாட்டை கவ்வும் விழாக்களில் ஒன்று விநாயகர் சதூர்த்தி. முஸ்லிம் சகோதரனின் கொட்டத்தை அடக்க வந்த விழாவாக கொண்டாடப்படுவது சிந்திக்க வேண்டிய ஒன்று. இதற்காக பலத்த பாதுகாப்பு அத்துமீறும் வன்முறை இதுதான் நாம் காணும் நல்விழாவா?... இதைதான் மனிதம் சொல்ல வந்த கொண்டாட்டமா?

அது இருக்கட்டும், நாம் அவலோடு எதிர்பார்க்கும் தீபாவளின் கொண்டாட்டத்தின் வரலாற்று காரணம் பலவும் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்.

கோவி. கண்ணனின் தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா ? ஆய்வு கட்டுரையாக இருக்கட்டும்...

சு'னா 'பா'னா வின் இன்றளவும் மானமில்லா மக்களே தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்பது.........

இருபெரும் ஆய்வு கட்டுரைகளில் அவரவர் வாதத்தை ஞாயபடுத்தி சொன்னாலும்...
தீபாவளி ஒரு அர்த்த மற்ற பண்டிகையானாலும் சரி. வரலாற்று காரணங்களால் சமுக பண்டிகையானாலும் சரி. இன்று நான், நாம் அர்த்தமுடன் கொண்டாடுகின்றேனா? சமூக நல்லிணக்கம் கொடுக்கும் எண்ணதில் கொண்டாடுகின்றோமா என்பதில்தான் தீபாவளிக்கு அர்த்தம் கொடுக்குமேயொழிய உங்கள் வரலாற்று காரணங்கள் ஒன்றும் செய்வதிற்கில்லை. மனிதனுக்கு விழாக்கள் தேவையற்றது என்ற போக்கும் ஞாயமற்றது. விழாக்களுக்கு காரணம் சரியாக இருக்க வேண்டும் என்பதும் முடியாத காரியம். ஆனால் கொண்டாடப்படும் தீபாவளி போன்ற விழாக்களை மனிதம் ஒளிப்பட நாம் செய்யலாமே!!!!

1. ஆதரவற்ற குழந்தகளுக்கு நாம் செய்யும் உதவிகளை அதிக படுத்தலாம்.
2. முதியோர்களின் இல்லங்களுக்கு உணவழிக்கலாம்.
3. பெற்றோர்களால் கைவிடப்பட்ட எய்ஸ் நோயால் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு திருவிழா பதார்த்தங்கள் கொடுக்கலாம்( அடுத்த தீபாவளிக்கு இவர்கள் இருப்பார்களா என்பது?????) திருச்சி தஞ்சை மாவட்டங்களில் மட்டும் 45 குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்பட்டும், அனாதைகளாகவும் இருப்பதாக அறிந்தேன்.
4. படிக்க வசதியில்லா குழந்தைகளுக்கு ஒரு சிறு உதவிகள் செய்யலாம்.

பின்குறிப்பு: பக்கத்து வீட்டார் மெச்சும் 1000 வாலா சரவெடி தவிற்த்து உதவிகள் செய்யலாமே!!!!

நான் ஒருவனால் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற எண்ணத்தை எடுத்து விடுங்கள். நீங்கள் செய்யும் சிறு உதவி பல மாற்றங்களை ஏற்படுத்தும். தீபாவளி கொண்டாட்டங்களை அர்த்தமுடையதாக்குங்கள்... போலி வேதாந்தங்களை ஞாயப்படுத்த வேண்டியதில்லை. தீபாவளி தேவையோ? இல்லையோ? உதவிகள் செய்யும் சந்தர்ப்பமாக பயன்படுத்தினால்... அர்த்தமற்ற தீபாவளியை அர்த்தமுள்ள விழாவாக்கலாமே!! அப்படியே அர்த்தமுல்ல தீபாவளியானால் மேலும் அர்த்தமுல்ல விழாவாக ஆக்கலாமே!!!!

வாருங்கள் மனிதம் காப்போம்!
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வோம்!!!!!........

அடிமனதை ரணமாக்கும் செய்தி
ஆறு மாத பெண் குழந்தையை உயிருடன் சுடுகாட்டில் புதைக்க முயற்சி :செய்தி தினமலர்

Tuesday, October 21, 2008

நலம்பெறுமா? நல்லீணக்கம்!....

நலம்பெறுமா? நல்லீணக்கம்!....

"யாதும் ஊரே யாவரும் கேளீர்! "

நெற்றியில் குறிப்பார்த்து துப்பாக்கி முனையில் சுட்டெரிக்கும் கணியன் பூங்குண்றனாரின் வைரவரி இது. நாடு, இனம், மொழி, மதம் கடந்து மனிதனைக் காட்டும் முத்தான வரி இது. ஆஆஆஆஆ என்று கதரும் மனிதத்தை காக்கும் மகிமை வரியல்லவா இது.

நான் வசிக்கும் ஊர் மலைக்கோட்டை நகரம் திருச்சினாப்பள்ளியிலிருந்து 20கி மீ தூரதில் இருக்கும் அண்ணாநகர் திருச்சி-26.(இன்னும் கூகுல் மேப்பில் இடம்பெறவிலை). நான் வசிக்கும் ஊரைப்பற்றி சொல்வதிற்க்கு காரணம் உண்டு.

ஒருமுறை டாக்டர் புரட்சி தலைவர் M G ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராய் இருந்த சமயத்தில் ரஷ்யா சென்றாராம் அங்கு அவர் பார்த்த நகரத்தின் பெருமைதான் நான் வசிக்கும் அண்ணாநகர். அவர் பார்த்த நகரத்தில் எல்லா தர மக்களும் ஒரே இடத்தில் ஏற்ற தாழ்வின்றி குழுமி வசிக்குபடியான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. அதை பார்த்ததும் நம்நாட்டில் இதேபோல் ஒரு நகரம் அமைக்க வேண்டும் என்று கனவில் ஏற்ப்பட்ட ஊர்தான் நான் வசிக்கும் அண்ணாநகர்.

தென்கிழக்கில் பாரத் மிகுமின் தொழிற்சாலை, கிழக்கில் துப்பாக்கித் தொழிற்சாலை, வடகிழக்கில் ஹெவி அலாய் பெனிரேட் தொழிற்சாலை, வடக்கில் பன்னாட்டு விமான நிலையம், வடமேற்கில் பொன்மலை ரயில்பெட்டி தொழிற்சாலை என்று புடைசூழ அமைந்த ஊர்தான் நான் வசிக்கும் அண்ணாநகர் திருச்சி-26. 1984 ம் ஆண்டு டாக்டர் புரட்சி தலைவர் M G ராமசந்திரன் அவர்களால் தமிழ்நாட்டு வீட்டு வசதித் துறையினால் துவங்கப்பட்ட ஊர்தான் அண்ணாநகர் திருச்சி-26.

அப்படி என்னதான் நான் வசிக்கும் ஊரின் பெறுமை. இது ஒரு கனவு நகரம்... மக்களின் மனிதநேயம் உருவாக்கும் பட்டரை. இங்கு கிறிஸ்துவ தெரு, முஸ்லீம் தெரு, இந்துக்கள் தெரு என்பது கிடையாது. இங்கு பறையன் தெரு, பல்லன் தெரு, கள்ளன் தெரு, நாடார் தெரு என்று சாதிப் பேர் சொல்லும் சாக்கடை கிடையாது. இங்கு மேலோர் கீலோர் என்ற பாகுபாடுயின்றி ஓரிடத்தில் வசிக்கும்படி அமைக்கப்பட்ட வடிவம்தான் இதன் தனி சிறப்பு. எங்கள் தெருவில் மாரியம்மனின் பல்லக்கும் வரும், மாதாவின் சப்பரமும் வரும், முஸ்லிம் சகோதரின் சமய ஊர்வலமும் வரும். எது வந்தாலும் எல்லா இனத்தவரும் வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு வரவேற்ப்பதும் எங்கள் வழக்கம்.

இதை எதிபார்த்துதான் புரட்சி தலைவர் இந்த ஊரை உருவாக்கினார். மேலும் அவர் கண்ட கனவு இங்கே ஒரே இடத்தில் மருத்துவம், பொறியியல், விவசாயம் என்ற கல்லூரிகள், பள்ளி விலாகங்கள் எல்லாம் ஒர் இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்றும் எண்ணம் கொண்டார். அதன்படி தொடக்க நிலையும் ஆரம்பமாகின. காலதின் ஓட்டம் அவர் 1987 ல் டசம்பர் 24 நாள் காலமானார். அதன் பின் வந்த அரசியல் மாற்றங்கள் தன்னிடம் உள்ள தரிசு நிலங்கள் பணமாக்க கல்லூரிகள் இடம் மாற்றப்பட்டன. இப்படி சிறப்பான ஊரை மேன்படுத்த முடியாத அரசுதான் மதச்சண்டைகளில் குளிர்காய்கின்றது. இன கலவரத்தில் ஒப்பாரி நாடகம் ஆடுகின்றது. மதநல்லிணக்கம், இன நல்லிணக்கம், உருவாக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. மாறாக வேற்றுமையில் அரசியல் நடத்தும் கேவலத்தில் இருப்பதும்....." யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற வரிகள் காணாமல் பொகின்றது.
பின்குறிப்பு: இப்படி மதநல்லிணக்கம் கொண்ட ஊரை அரசு கவனிப்பாரற்று சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள அவலம். அவ்வப்போது பெய்யும் மழையில் வெள்ளம் நீர் வீடுகளில் வந்து விடுவதும், பின் மக்கள் போராட்டத்தில் இடுபடுவதும் அதன் பின் அதிகாரிகள் வந்து வாக்கு சொல்வதும் இன்றும் நடக்கும் சடங்கு ....... பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டு மதம், இனம், சாதி என்ற போர்வையில் இருக்கும் ஊர்களை மாற்றி மேன்படுத்தி அண்ணாநகர் பொன்ற நகரங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு யதார்த்தமான உள்ளங்கள் உருவாக்கும் பட்டரைகள் வளம்வர அரசு அவனம் செய்தால் நாளைய நம் நாடு மக்கள் நல்லிணத்திற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும் என்பது என் எண்ணம்.

Saturday, October 18, 2008

மந்திரக்கோல்

மந்திரக்கோல்
உயரத்தில் பறக்கும் பறவைகளில் ஒன்று பருந்து. பருந்து எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் தன் கூறிய கண்களால் கீழே போகும் பாம்பு, கோழிக்குஞ்சு போவது தெரிந்துவிடும். பருந்துக்கு கோழிக்குஞ்சு என்றால் கொல்லை பிரியம். பருந்து கோழிக்குஞ்சை பார்த்ததும் மின்னல் வேகத்தில் வந்து லபக் என்று எடுத்து சென்றுவிடும். இப்படி வரும் பருந்தை பொராடி விரட்டும் கோழிகள். இப்படி காப்பாற்றி மீதம் உள்ள குஞ்சுதான் கோழியாகும்.

பருந்து கூடுக்கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இனம். பருந்து கூடு மிக உயரமான மரகிளையில் (உச்சானிக் கொம்பில்) கூட்டை கட்டும். இக்கூட்டைப் பற்றிய சிறப்பு, இதன் கூட்டை எதிரிகள் யாரும் நெருங்க முடியாதாம் உயரமும் ஒரு காரணம். இதன் கூடு முள் குச்சியினால் கட்டி அதன் மேல் சில புல்களை வைத்து அதன் மேல்தான் முட்டையிடும். மேலும் நம்பிகையற்ற சிறப்பு என்னவென்றால், இதன் கூட்டில் ஒரு முக்கிய வகை குச்சி ஒன்றை வைக்குமாம். இந்த குச்சியை ஏழு கடல் ஏழு காடு தாண்டி எடுத்து வந்த குச்சியாம். இந்த குச்சிதான் இந்த கூட்டிற்கு பாதுக்காப்பு. பருந்து எங்கே சென்றாலூம் கூட்டை பற்றிய எல்லாம் இந்த குச்சிதான் தகவல் சொல்லுமாம் (இணைய வழி தகவல் தொலைத் தொடர்பு). இதன் மூலம் தன் குஞ்சிகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி கொள்ளும் என்பது நாட்டுபுற வலக்கு. மேலும் இந்த குச்சிக்கு ஒரு அபூர்வ சக்தி இருக்குமாம். இந்த குச்சியை வைத்து எல்லா வகையான பூட்டையும் சாவியின்றி திறக்க முடியுமாம். இந்த குச்சியை வைத்துதான் திருடர்கள் பூட்டை திறக்க பயன்ப்படுத்துகின்றனர் என்பது ஒரு நம்பிகையற்ற வலக்கு. ஆனால் அந்த குச்சியை எடுப்பது அவ்வளவு எழிதான காரியமில்லை. உயரம் மற்றும் பருந்து நம்மளை சும்மா விடாது.

இப்படிப்பட்ட மந்திரக்கோலை (பாரதிராஜாவின் முதல்மரியாதை காதலர்கள் போல) நானும் ஒருநாள் இந்த மர உச்சனிக்கு போயி அந்த மந்திர குச்சியை எடுத்து வந்து எல்லா பூட்டையும் திறப்பேன். என்ற கனவு இன்னும் தொடுவானத்தை பிடிப்பது போல உள்ளது எனக்கு.

இந்தக்கால நவீன திருடர்கள் கையில் கடவுசொல் திறக்கும் குச்சி வைதிருப்பார்கள் போல. பெருகி வரும் "இணையத்தில் வழிப்பறி" வங்கி கணக்குகளை மோசடிமுறையில் கைமாற்றம் செய்து ஏப்பம் விடுவது. உலகில் முதல் பத்து இடங்க்களுக்குள் இந்தியா இருப்பதும் வருத்த படவைக்கிறது. இதற்கான தடுப்பு சட்டங்கள் சரியாக இல்லை என்பது மேலும் கவலையை கொடுக்கின்றது. இதனை தடுக்க நாம் கவனத்துடன் பயன்ப்படுத்துவதுதான் சிறந்த முறை. தேவையில்லாமல் பொழுதுபோக்காக இணைய வங்கி பயன்ப்படுதுவதையும் தவிற்கலாம்.

இப்படிதான் சென்றமாதம் என் தோல்ப்பையில் வைத்திருந்த 4GB Memory stick with reader காணவில்லை நூதன முறையில் களவாடி விட்டார்கள். சென்றது சென்றதுதானே. என் வருமாணத்தில் மற்றொன்று வாங்க முடியும் இருப்பினும் அந்த மன அதிர்வு இன்னும் நீங்கவில்லை. இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். இதற்கு கோவி. கண்ணனை (காலம்) வம்புக்கு இழுக்கவில்லை . அல்லது (அறிவகம்)த்திடம் புகார் சொன்னால் காலச்சக்கரத்தை பின்சுழற்றி திருடனை கண்டுபிடிக்க முடியுமா? பார்க்கலாம்.

இருப்பினும் நாம் கவனத்துடன் இருப்பதுதான் சிறந்ததாக உள்ளது. அதற்காக எல்லொரையும் சந்தேக படவா முடியும். அதுக்குதான் நானும் ஒருநாள் அந்த மர உச்சானிக்கு போயி அந்த மந்திரக்குச்சி எடுத்து வந்து எங்க வீட்டு அடுப்புல வச்சி சாம்பலாக்குவேன்......

Friday, October 17, 2008

தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நினைவு கூர்ந்த விஞ்ஞானிகள்

தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை போன்று நினைவு கூர்ந்த விஞ்ஞானிகள்..

தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் : "நாட்டிலுக்கா' அழிவில் அரங்கேற்றம் : தசாவாதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், கண்ணாடி குடுவையில் உள்ள வைரஸ் கிருமி (கடல் தண்ணீரில் விழுந்தால்) காற்றில் கலந்தால் அது கண்மூடி திறப்பதற்குள் பல மடங்கு அதிகரித்து உலக அழிவை ஏற்படுத்தும் என்பதால் அந்த குடுவையை கைப்பற்றும் முயற்சியில் போலீஸ் அதிகாரியாக நடித்த கமல் ஈடுபட்டிருப்பார். இருப்பினும் வில்லனால் அந்த குடுவை கடல் தண்ணீரில் விழுந்து வைரஸ் கிருமிகள் வெளியேறும். அப்போது மழை பெய்வதோடு சுனாமி ஏற்பட்டு அந்த வைரஸ் கிருமிகளுக்கு முற்றுபுள்ளியை ஏற்படுத்தும். அதேப்போன்று தற்போது மன்னார் வளைகுடாவிற்கு ஏற்படவிருந்த மிகப்பெரிய அழிவு மழையினால் தடுக்கப்பட்டுள்ளது. தனது பரப்பளவை அதிகரித்துக் கொண்டிருந்த "நாட்டிலுக்கா' கனமழையினால் காணாமல் போனது. அதேப்போன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த சிப்பிகள், மீன்கள் அனைத்தும் கடல் அலைகளால் இழுக்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விட்டன. இதனால் கடற்கரை தூய்மையாக்கப்பட்டுள்ளது. தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை போன்று இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதை நினைவு கூர்ந்த விஞ்ஞானிகள் இயற்கைக்கு என்றும் அழிவில்லை என்ற கருத்தை உறுதிபடுத்தினர்.

மேலும் அதிகப்படியான செய்தியைப் படிக்க தினமல்ர் சுட்டியை சுட்டவும் நன்றி தினமலர்

Thursday, October 16, 2008

அப்பத்தாவும் அம்மாவாசையும்!..

அப்பத்தாவும் அம்மாவாசையும்!..
ஏல பொன்னுதாயி, அப்பத்தா எப்படியிருக்கு? இன்னும் அப்படியேதான் இருக்கு சித்தப்பு, இந்த அம்மாவாசை வந்தா தெரியும் பாக்கலாம்.... நல்ல மவராசி ரொம்ம சிரமபடுது பொறந்த புள்ளைக்கு சொல்லியனுப்பி இந்த அம்மாவாசைக்கு எண்ணெய் தேச்சி விடலாமில்ல சொல்லும் சித்தப்பு. ஆமாம் சித்தப்பு அப்பாதான் வேணாங்குது... எத்தனை நாளைக்குதான் வேலை வெட்டி போகாம சிரமப்படுரது....

இப்படி கிராமபுறங்களில் பெசிக்கொள்வதை கேட்டுயிருக்கலாம். அப்பத்தாவிற்கும் அம்மாவாசைக்கும் என்ன தொடர்பு? அப்பத்தாவிற்கு என்ன பிரச்சனை, எதற்காக எண்ணெய் தெய்க்க வேண்டும்? மனிதன் வயதாவதும் முதுமையை அடைவதும் இயற்கைதானே! இந்த முதுமையின் கொடுமை மரணத்தை எதிர்நோக்குவது. இப்படி மரணத்தை நோக்கி செல்லும் அப்பத்தாவை பற்றிதான் இவர்கள் பேசிக்கொள்வது.

இந்த அப்பத்தா 80 வயதை தொட்டவள், இப்பொது உயிர் மட்டுமே இருக்கு. அவளுக்கு எந்த நினைவுகளும் இல்லை ஏதொ கொஞ்சம் எப்பொதாவது பால் மற்றும் நீர் உணவு, கழிப்பிடம் எல்லாமே அதே இடம்தான். படுத்த நிலையில் இருப்பதால் உடம்பெல்லாம் புண்ணாகி எறும்புக்கு உணவாகி கொண்டிருக்கின்றாள்.. எப்போதாவது உடலில் அசைவு வரும். இந்த மரண அவஸ்தையை பற்றிதான் இப்படி ஒரு பேச்சி.

அம்மாவாசையை எதிர்பார்ப்பது, இவளின் முழுநித்திரைக்குதான். அம்மாவாசையன்று சூரியனின் கதிர்கள் சற்றே தடுக்கப்படுவதால் நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறையும் என்பது விஞ்ஞானம். (குறைந்த விஷத்தன்மை பூச்சி கடித்தவர்களுக்கு அம்மாவாசையன்று தடிப்பதும் இந்த எதிர்ப்பு தன்மை குறைவால்தான்).

எண்ணெய் தேய்ப்பது எதனால்? நம்மில் பலர் மாதம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குழிப்பார்கள் உடம்பில் உள்ள சூடு குறையும் என்பது நம்பிக்கை. ஆனால் எண்ணெய் தேய்த்து குழிப்பதனால் எந்த பயனும்மில்லை என்பது நவீன மருத்துவம். எண்ணெயிட்டு குழிப்பதனால் உடலின் எதிர்ப்பு சக்தி தற்காலியமாக குறைகின்றது. இதனால்தான் உடல் சோர்வும் தூக்கமும் வரும் என்பது விஞ்ஞானம். இந்த சோர்வு பெரிதாக பாதிப்பு ஒன்றுமில்லை. அம்மாவசையன்று அப்பத்தாவிற்க்கு எண்ணெய் தேய்த்து குழிப்பதனால் ஏற்படுவதுதான் நிரந்தர நித்திரை.....

மரணப்படுக்கையில் சிரமப்படும் முதியோர்களுக்கு செய்யும் கருணை கொலைதான் அம்மாவாசையில் எண்ணெய் தேய்த்து குழிப்பாட்டுவது. அம்மாவசையில் எதிர்ப்பு சக்தி குறைந்த நேரத்தில் எண்ணெயிடுவதால் மேலும் சக்தியிலந்து மரணத்தை தொட்டுவிடுகின்றது.

இந்திய சட்டத்தில் இன்னும் கருணைக் கொலைக்கு அனுமதியில்லை, பரிந்துரை நிலையிதான் உள்ளது. இந்த எண்ணெய் தேய்ப்புக்கு விஞ்ஞான அதாரம் இல்லை ஆனால் இன்னும் சில இடங்களில் நடத்தப்படுகின்றது.

ஒரு சில: முதல்மரியாதை திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் முதுமை மரணகாட்சியை நம் கண்முன் காட்டுவார். மரணப்படுகையில் இருப்பவர் ஆசையை தவிற்காமல் இருந்தால் மரண சிரமம் நீடிக்கும் என்பதும் நம்பிக்கை. சிவாஜியின் ஆசை தன் காதலி ராதவை பார்த்துவிடவேண்டும், ராதா சிறையிலிருந்து வந்து பார்த்ததும் மரணம் சம்பவிக்கும்படி காட்சி இருக்கும்... இன்றும் மனதை தொட்ட காட்சி...