_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, February 22, 2011

சாமானியனின் சந்தேகங்கள்- காசேதான் கடவுளட.......

சாமானியனின் சந்தேகங்கள்- காசேதான் கடவுளட.......

கூடுகின்றது பாராளுமன்றம், 28ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றது..... ம்ம்ம்ம் எபொழுதும் போல அதே பஞ்சாங்கம்தான் பட்ஜெடில் பணபற்றாகுறை. அப்பறம் என்ன பணவீக்கம் அதிகமாகிவிட்டது மற்றும் விலைவாசி ஏற்றம் கண்டது என்
று அறிக்கை விடுவார்கள்.

ஆமா
ம் பணம் என்றால் என்ன? பணத்தை யார் படைத்தார்கள்? அதற்கு ஏன் வீக்கம் ஏற்படவேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகள் எல்லோரையும் போல எனக்கும் தான். இன்னும் இதைப்பற்றி தெரிந்துக்கொள்ள எனது முந்தய பதிவை சுட்டுங்கள்....

சாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு..

ஒரு பொருளுக்கு மதிப்பு கூடுவதும் குறைவதும் அந்த பொருளின் கிராக்கியை பொருத்தது. அப்படி கிராக்கியுள்ள பொருள் உண்மையில் மனிதனுக்கு தேவையான பொருளா என்றால் அப்படியேதும் இல்லை என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக தங்கத்தை சொல்லலாம். உலக பொருளாதாரமே தங்கத்தை முன்னனியில் வைத்துள்ளதுதானே!

எப்பொழுதுமே பட்ஜெட் போடும்பொழுது பணம் பற்றாகுறையாகவே இருக்கும். அதனால் பணவீக்கமும் அதிகரிக்கும். பட்ஜெட்க்கு முன் இந்திய வங்கிகளில் சேமிப்பு வட்டி விகிதம் அதிகப்படுத்தியுள்ளார்கள்.. இவற்றையும் கவணிக்க வேண்டும். வங்கியில் பண சேமிப்பின் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்தாலாம் என்பது அறிஞர்களின் கருத்து. இவற்றை காணும்பொழுது இந்த பட்ஜெட்டில் பணபற்றாக்குறை அதிகமாக இருக்கும் என்றே எண்ணம் தோன்றுகின்றது. இந்த பற்றாகுறையை எப்படியேல்லாம் சமன் செய்யலாம்... இலவச திட்டங்களை குறைக்கலாம் மற்றும் தனியார் துறைக்கு கொடுக்கும் மானியத்தை தவிற்கலாம்.


ஆமாம் பணவீக்கம் என்றால் என்ன? அதனால் என்ன நன்மை தீமை? ஒரு நாட்டின் பொருளாதாரமே இந்த பணவீக்கத்தை பொருத்தே இருக்கும். பொதுவாக பணவீக்கம் அதிகப்படலாமா? அல்லது குறையலாமா? பொதுவாக ஒரு நாட்டின் பணவீக்கம் சீராக இருப்பதுதான் அந்த நாட்டுக்கு நல்லது. பணவீக்கம் என்பது விலைவாசி ஏற்றம் இறக்கத்தை பொருத்தது. சென்ற ஆண்டு ஒரு பொருளை 100 ருபாய்க்கு வாக்கியதாக இருந்தால் அதே பொருள் இந்த ஆண்டின் விலை 120 ரூபாய்க்கு வாங்கினால் பணவீக்கம் 20 தாக இருக்கும்.

விலைவாசி ஏற்றம் கொண்டதால் அந்த பொருள் 120 ருபாயாக இருக்கின்றது. விலைவாசி ஏற்றம் கொண்டால் உற்பத்தியாளர்களுக்கு லாபம்தானே! உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைத்தால் வேலை வாய்ப்பு அதிகபடும், கூலியும் அதிகமாகும். இங்கு கூலி அதிகமாகுபொழுது சாமானியனின் வாங்கும் சக்தியும் அதிகமாகும். வாங்கும் சக்தி அதிகமாகும்பொழுது ஒரு பொருளின் கிராக்கியும் அதிகமாகும். கிராக்கி அதிகமாகும்பொழுது பொருளின் விலையேற்றம் அதிகமாகும். பொருளின் விலையேற்றம் எல்லோராலும் வாங்கும் நிலை இழக்கும். வாங்கும் நிலை இழக்கும்பொழுது வேலைவாய்ப்பு குறையும். இப்படிதாங்க ஒரு சுழற்சி நடைபெறுகின்றது. எனவேதான் பணவீக்கம் சீராக இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் சொல்லுகின்றார்கள். தீடீர் என்று பணவீக்கம் அதிகமாகவோ அல்லது குறைவதோ நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதில்லை.

பணவீக்கம் மிக குறையும் பொழுது அது பணசுறுக்கம் அடைந்துவிடும். அப்படி பணசுறுக்கம் அடையும்பொழுது, பல நேரங்களில் பொருளின் விலை தரைமட்டமாக்கப்படும். அந்த நிலையில் பொருளை ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு எடுத்துசெல்ல முடியாமல் போகும் அந்த அளவிற்கு அதன் விலை குறைந்துவிடும். அப்படிதான் பல நேரங்கலில் உற்பத்தி இடத்திலேயே அந்த பொருளை அழித்துவிடுவதுமுண்டு. சமீபத்தில் தக்காளியின் விலை சரிந்து அந்த வயல்வெளியிலேயே அழித்துவிட்டார்கள்.

இந்தியாவின் பணவீக்கம் தற்பொழுது அதிகமாகின்றதாக சொல்லப்படுகின்றது. பொதுவாக இந்தியாவின் பணவீக்கம் 4.5 ல் இருந்தால் பொருளாதாரம் நன்றாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் பற்றாகுறையை சாமாளிக்க அதிகமாக பணத்தை அச்சடித்துவிடுவார்கள். அப்படி செய்வதினால் பணவீக்கம் அதிகமாகும். இந்த நிலை ஆரோக்கியமானதாக இருக்காது.

தனியார்துறைக்கு அதிகமாக குறைந்த வட்டிக்கடன் கொடுத்தால், பணவீக்கம் எப்படிபோகும்? தனியார்துறைக்கு கடன் கொடுப்பதன்மூலம் பணப்புழக்கம் அதிகமாகி பணவீக்கமும் அதிகமாகும். ஏன் பணவீக்கம் அதிகமாகின்றது? பணபுழக்கம் அதிகமானால் சாமானியனுக்கு வாங்கும் சக்தியும் அதிகமாகும் அப்படி வாங்கும் சக்தி அதிகமாகும்பொழுது பொருளின் விலையும் ஏற்றம் காணும். அதனால் பணவீக்கம் அதிகப்படும்.

எதுவானாலும் பணவீக்கம் என்பது சீராக இருப்பதே நல்லது. நம்நாட்டின் கருப்பு பணத்தை வெளிகொணர்ந்தாலே பணவீக்கம் சீராக வைத்துக்கொள்ளலாம். அது நடக்குமா??????????..........

மீண்டும் ஒரு சிந்தனைகளுடன்

ஆ.ஞானசேகரன்

Friday, February 18, 2011

ஓடும் ஓடும்...... வேகம்!

ஓடும் ஓடும்...... வேகம்!

ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் அந்த நாட்டின் போக்குவரத்து காரணிகளை பார்த்தாலே தெரிந்துவிடும். அந்த வகையில் நம் நாட்டின் (இந்தியா) சாலை மற்றும் போக்குவரத்து உலக தரம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். கடந்த பத்தாண்டுகளாக உலக வங்கியின் கடன் உதவியுடன் சாலை சீரமைப்பு மற்றும் மேன்படுத்துதல் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. பல இடங்களில் முடியும் தருவாயில் இருக்கின்றது. இப்படிப்பட்ட சீரமைப்பு பணிக்காக மத்திய மாநில அரசுகளை பாராட்டியே ஆகவேண்டும்..... அதைவிட முக்கியம் ஒரு துறையின் வளர்ச்சி என்பது அதனை சார்ந்த துறைகளின் வளர்ச்சியையும் கவணிக்கவேண்டும். அப்படி கவணிக்காத வகையில் விபத்துகளை சந்திக்க நேரிடும், அப்படிதான் சாலை மேன்பாடும், சாலைகளை மேன்படுத்தும்பொழுது வாகனங்களின் வேகமும் அதிகரிக்க செய்கின்றது. வேகம் அதிகரிக்கும் பொழுது சாலை பாதுகாப்பும் சேர்ந்தே வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். அப்படி சாலை பாதுகாப்பை கவணம் கொள்ளாத வளர்ச்சி பேராபத்தை கொடுக்கும்...
சாலை பாதுக்காப்பை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்பது ஒரு கவலையாக இருந்தாலும்.... அரசு அதற்கான விழிப்புணர்வை சரியாக செய்யவில்லை என்பது தினம் நடக்கும் சாலை விபத்தை பார்த்தாலே தெரிந்துவிடும். வானோலி மற்றும் தொலைக்காட்சியை இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. நொந்த படத்தையும் பிஞ்ச படத்தையும் காட்டி காட்டி நல்லபடமாக மாற்றும் தந்திரத்தை ஏன் சாலை விழிப்புணர்வுக்கு பயன்படுத்தவில்லை. இதுவரை பாதைசாரிகளுக்காண (zebra crossing) யை முறையாக பயன்படுத்தியுள்ளார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதை பற்றி தெரிந்து வைத்துள்ளார்களா என்றாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்படிப்பட்ட விழிப்புணர்வை மக்களிடம் கொடுக்க தவறிய அரசுக்கும் அதனை சார்ந்த அதிகரிகளுக்கும் கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்.... மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடு என்பதால் எந்த பாதுகாப்பை பற்றி கண்டுக்கொள்ள வேண்டாம் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு உயிரும் நாளைய நம்பிக்கை தூண்களாக இருக்கும். அப்படிப்பட்ட நம்பிக்கை தூண்கள் சாதரணமாக இழக்க முடியாது.

சாலைப் பயணம் என்பது சாகசம் செய்யும் கலம் இல்லை. சாலைகள்தோரும் இருக்கும் குண்டு குழியை எப்போழுதுதான் சரிசெய்கின்றார்களோ தெரியவில்லை. இதனை பார்வையிட, பராமறிக்க இருக்கும் துறைகள் செயல் வடிவில் இருக்கின்றாதா? அப்படி ஒரு துறை, பிரிவு இருக்கின்றதா? என்பதும் தெரியவில்லை. இத்தனை இடற்பாடுகள் இருந்தும் வாகன ஓட்டிகள் வண்டி ஓட்டும் பொழுது அலைபேசியை பயன்படுத்துதல், மது அறிந்துவிட்டு வண்டி ஓட்டுதல், போன்ற தகாத செயல்பாடுகள் இருக்கின்றது. சுயக்கட்டுபாடும், தனிமனித ஒழுக்கம் இல்லாத இடத்தில் அரசை மட்டும் குறை சொல்லி புண்ணியமில்லையே

அன்புடன்

ஆ.ஞானசேகரன்

Tuesday, February 15, 2011

பிஞ்சுக்கைகள்....

பிஞ்சுக்கைகள்....


மாறிவரும் சூழலில் நாம் எங்கேயோ சிக்கி தவிப்பதுபோல உள்ளது. ஆயிராமாயிரம் வளர்ச்சிகள் கண்டபொழுதும் மனம் ஏதோ ஒன்றை இழந்த தோற்றம் உள்
ளது என்பதை எல்லோரும் உணரமுடிகின்றது. அப்படிதான் மாணவர்களும் அவர்களின் மனநிலையும். சமீபத்தில் மட்டும் நான்கிற்கு மேற்பட்ட தற்கொலைகள் மாணவர்களாக இருப்பது சிந்திக்க தோன்றுகின்றது. இதில் மாணவர்கள் மனநிலை போதிய அளவிற்கு பக்குவம் இல்லையா? அல்லது மாணவர்களை கண்டிக்கும் முறையில் தவறுகள் நடக்கின்றதா? என்பதில்தான் நாம் இன்று சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஒரு சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். நான் என் நண்பனின் வீட்டிற்கு சென்றேன், என் நண்பனின் மகனுக்கு 10 வயது அவன் "இரண்டு நாட்களாக சாப்பாடு சரியாக சாப்பிடவில்லை இரவில் ஏதோ பிதற்றல் செய்கின்றான்" என்று என்னிடம் சொன்னார்கள். அவனிடன் தனியாக விசாரித்ததில் அவன் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு மாலை நேர சிறப்பு வகுப்பிற்கு சென்றுள்ளான். அங்கு அவர்களின் அலைபேசி காணவில்லை நீண்ட இடைவெளிக்கு பின் தேடியதில் பகுதி பகுதியாக கிடைத்துள்ளது. அதில் ஒரு பகுதியை இவன் தேடி எடுத்துள்ளான், அதனால் இவன் எடுத்துள்ளான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். அவர்கள் இவனை தனியாக மிரட்டியுள்ளார்கள் (அவர்களுக்கும் இவன் வயது பிள்ளை இருக்கின்றது என்பது குறிப்பிடதக்கது...... இவன் பிள்ளைக்கு எந்த நல்லொழுக்க சான்றிதல் வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை!). போலீஸ்க்கு போவேன், உன் வகுப்பாசிரியரிடம் வந்து சொல்லுவேன் என்று மிரட்டியதில் பயந்துள்ளான். அந்த திகில் இன்னும் அவன் மனதை வீட்டு செல்லவில்லை. நான் அவர்களிடன் விசாரித்து நிலைமையை விளக்கியும் அவர்களால் புரிந்துகோள்ள முடியவில்லை " ஆறாயிரம் ருபாய் அலைபேசி காணவில்லை நாங்கள் அப்படிதான் மிரட்டுவோம் என்றார்கள்". சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களை ஆலோசிக்காமல் தனி நபராக இப்படி செய்வதை பற்றி உங்களின் கருத்துகளுக்கு விட்டுவிடுகின்றேன்.


இப்படிப்பட்ட சம்பவங்கள் ஒருபுறம் இருக்க மாணவர்களின் மனநிலை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. சின்ன சின்ன தோல்விகளை கூட தாங்கிகொள்ள முடியாத நிலைக்கு மாணவர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளார்கள். இன்றைய வளர்ப்பு முறையிலும், கல்வி முறையிலும் அவர்களுக்கு தன்நம்பிக்கை இல்லாத நிலைதான் உள்ளது. கல்வி என்பது அவர்கள் சாம்பாரிக்க உதவும் ஒரு முதலீடாகத்தான் வைத்துள்ளோம். நேற்றய சின்ன சின்ன விளையாட்டுகள் இன்று இல்லை, எல்லாமே வீட்டோடு இருக்கும் விளையாட்டுகள் இதில் வெற்றி தோல்வி அவன் நிர்ணயப்பதுதான். அதனால்தான் தோல்வியை அவனால் தாங்கிகொள்ள முடிவதில்லை. தோல்வி என்பது வெற்றியின் படிகள் என்பதை படிப்பதோடு நின்றுவிட்டது. மாணவர்களுக்கும், ஆசிரியருக்கும், பேற்றோர்களுக்கும் ஆலோசானை மையம் தேவையாகின்றது.

நாளைய உலகம் இன்றைய மாணவர்களிடம் உள்ளது என்பதை நாமெல்லாம் உணரவேண்டிய தருனம் இது. அந்த மாணவர்களின் மனநிலையை திடப்படுத்த எல்லொரும் ஆலோசிப்போம்...... அங்கொன்று இங்கொன்று நடக்கும் தற்கொலைகளை தடுக்க அவனசெய்வோம்..... அதற்கு அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது எல்லொருடைய ஆசைகள்...


அன்புடன்

ஆ.ஞானசேகரன்.