_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, June 25, 2008

தசாவதாரமும் KFC யும்.......

தசாவதாரமும் KFC யும்......
வேலையின்மித்தம் 1993-ல் மலேசியா சென்றேன். அங்கு ஒருவருட காலம் வேலைச் செய்துவந்தேன். அங்குதான் நான் KFC (Kentucky fried chicken) சாப்பிட்ட முதல் அனுபவம். நண்பர் ஒருவர் சாப்பிட அழைத்து சென்றார், இரண்டு சிக்கன் துண்டு ஒரு டப்பாவில் முட்டைகொஸ்(coleslaw) அரைத்த உருலைக்கிளங்கு(whipped potato) என்னிடம் கொடுத்து சாப்பிட சொன்னார். எனக்கு எதை எப்படி சாப்பிடுவது புரியவில்லை. பிறகு அவர் சாப்பிடுவதை பார்த்து நானும் சாப்பிட முற்ப்பட்டேன். ஆனால் ஒன்றுகூட சாப்பிடமுடியவில்லை, உப்பு சப்பில்லா உணவாக, வாசனையும் பிடிக்கவில்லை. கோக் மட்டும் குடித்துவிட்டு வந்துவிடேன். மற்றும் சிலசமயம் சாப்பிடும்பொது சுவை பழகி பிடித்து விட்டது. அந்த உணவின் புது சுவையும் புரிந்துகொண்டது. பின்பு நண்பர்கள் செரும்பொது KFC தான் சாப்பிடுவோம். அந்த அளவிற்க்கு KFC பிடித்த உணவாக மனதில் மாற்றம் ஏற்ப்பட்டது.அதேபொல் 1997-ல் சிங்கபூர் வந்தேன், சிங்கபூர் வந்ததும் தேடிச்சென்று KFC சாப்பிட்டேன். சுமார் 10 வருடம் சிங்கபூரில் வேலைச்செய்துவருகின்றேன். தற்பொதும் KFC விரும்பிய உணவாகதான் சாப்பிடுகிறேன்.. என் நண்பர் ஒருவர் என்னுடன் KFC சாப்பிட விரும்பினார், இருவரும் சென்று சாப்பிட்டொம். அவர் சிக்கனை எடுத்து நுனி பல்லில் எடுத்து கடித்து சுவைத்தப்பின் என்னா நல்லாயிருக்கு என்று சொல்லி சொல்லி முழுவதும் முடித்துவிட்டார். பொதுவாக நம்முடைய உணவு வகை பல்சுவையுடையது சோறு, சாம்பார், காய், பொறியல், ரசம், மோர், வடை, பாயாசம் இப்படி சுவை கண்ட நாவிற்க்கு KFC ஒரு சாதாரண உணவாக தான் முதலில் தெரியும். போகபோகதான் KFC யும் ஒருவகை உணவுதான் என்பது அறியவரும். இப்படிதான் அந்த நண்பரும் சாப்பிட்ட முறையும், சிக்கன்65 சாப்பிட்ட நண்பருக்கு KFC சிக்கன் சுவையறிய காலதாமதமாகும். இப்படிதான் சுவை நாவில் உணரப்படும். நுனி பல்லில் சாப்பிட்ட நண்பர் தற்ப்பொது தன்னுடைய பிள்ளைகளுடன் அடிக்கடி சாப்பிட்டு வருகிறார் என்பதும் காலமறிந்த உண்மை.......இப்படிதான் தசாவதாரம் படமும்,.... பயோபாம் அதன்பிறகு சேசிங் அதற்க்கு பயன்படுத்தப்பட்ட பத்து முகங்களும்... காதல், பாசம், செண்டிமென்ட், சொகம் இப்படி பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு KFC பொல சேசிங் படம் ஒரு நுனி பல்லில் சுவைத்த KFC பொலதான், சிக்கன்65 எதிர்ப்பார்த்த பதிவினர்களுக்கு KFC ஒரு மொக்கை சொத்தைதான்,...
மீண்டும் ஒருமுறை முடிந்தால் எந்த ஒரு எதிபார்ப்புமில்லாமல் படம் பார்த்துவிட்டு மறுபதிவை கொடுக்கவும்,.. சுவை KFC ல் மட்டுமில்லை தசாவதாரத்திலும் இருப்பதை உணர்வீர்கள். தசாவதாரம் விமர்சனம் இங்கே கொடுக்கவில்லை நல்ல விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறோம்...

Sunday, June 22, 2008

சமைத்து பார்க்கலாம் வாங்க! சமையல் பற்றிய சிறப்பு!...

சமைத்து பார்க்கலாம் வாங்க! சமையல் பற்றிய சிறப்பு!...


மனிதன் நெருப்பை கட்டுப்படுத்தி தன்வசப்படுத்திய "காலம்" நாகரிகத்தின் பொற்க்காலம். நெருப்பை பயன்ப்படுத்தி உணவுப்பொருளின் சுவை, பண்பு, தொற்றம் அகியவற்றின் விரும்பியப்படி மாற்றப்படுவதுதான் சமையல். இவ்வாறு சூடுப்படுத்துவது மூலம் தீங்குவிளைக்கும் கிருமிகளை அழிக்கப்படுகிறது.

அரிசி, உப்பு, பருப்பு, காய்கள், எண்ணெய் எல்லாம் இருக்கலாம், இருப்பினும் சமையலுக்கு தேவையானதுதான் என்ன? நல்ல சமையலுக்கு ஆர்வமும் பொறுமையும் முதலில் தேவை. சமைத்த உணவுக்கு "சுவை" அன்பும் பரிமாரும் உணர்வும்தான் சுவையுட்டுகிறது. இப்படிபட்ட அன்பும் பொறுமையும் இயற்கையாகவே பெண்ணிகளிடம் காணப்படுவதால்தான், இல்லந்தோரும் அரசிகள் சமைக்கின்றனர்.

என்மகன் என்மனைவியின் சமையலைதான் சுவைத்து உண்பான். நான் என் அம்மாவின் சமையல் ருசிப்பேன். என் தந்தை என் பாட்டியின் சமையலை சிறப்பாக சொல்வார். உண்மையில் அம்மாக்காளின் சமையல் சுவைப்பது ஏன்? உலகில் சிறந்த உணவு அம்மா சமைத்ததுதான் என்று சொல்லும்பொது சுவை என்பது உணவிலா? அல்லது அம்மா சமைத்தது தானா?

சுவை என்பது உணர்வு சார்புடையது, சுவை நாவால் அறியப்படுகிறது. எனவே சுவை எங்குள்ளது? சுவை உணவிலா? நாவிலா? உணவில் என்று வைத்துக்கொண்டாள் எல்லொருக்கும் ஒரே நிலையில் சொல்லவேண்டும். அப்படியில்லையெனில், சுவை நாவால் உணர்நிலையடைகிறது.

நாசுவைபடவேண்டும் எனக்கொண்டால், அதற்க்கு தேவை அன்பும் பரிவும்தான். நல்ல ஸ்டார் ஹொட்டலில் சாப்பிட்டால் அழகாயிருக்கும், சுவையாக இருக்கும் என்று சொல்லமுட்டியுமா? அழகும் சுவை கூட்டும் என்றாலும் பரிவுயின்றி பரிமாறும் ஊணவு சுவைப்பதும் கடினமே என்பதும் என் என்னம். பக்கத்திலிருக்கும் அக்கா மெஸ்க்கு சென்றால் அக்கா விசாரிப்பும் உபசரிப்பும்தான் சாப்பாட்டின் சுவையுட்டுகிறது. என்ன தம்பி உடம்பு சரியில்லையா? கொஞசம் ரசம் சாப்புடுப்பா என்று பரிமாரும்பொது அம்மாவின் சமையல்தான் மனதில் தொன்றும். எந்த தொழிலுக்கும் தேவையில்லாத பண்பும் பரிவும் சாப்பாட்டு கடைக்கு தெவையென்பதும் என் என்னமே!


மனிதனின் வாழ்க்கைக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு தேவையென்பது பழமொழி. உணவின்றி வாழ்வது முடியாத ஒன்று. இப்படிப்பட்ட உணவை பரிமார வாய்ப்புள்ள அனைவரும் பாக்கியவான்களே!!...


நான் எதைகொடுத்தாலும் சாப்புடுவேன் என்று சொல்லும் ஒருவர்.

நல்ல ருசியாகயிருந்தது ஒருவெட்டு வெட்டிடேன் என்று சொல்லும் ஒருவர்.

எனக்கு பிடித்தால்தான் சாப்புடுவேன் என்று சொல்லும் ஒருவர்.

இப்படிப்பட்ட நிலை உணவுப்பற்றிய நிலையுள்ளவர்களும் இருக்கிறார்கள். மனிதன் உயிர்வாழ உணவு அவசியமே தவிர, உணவுக்காக வாழ்கிறோம் என்ற அர்த்தமில்லை. வயிற்றுக்கு கொஞ்சம் உணவு, உணவுக்கு கொஞ்சம் ருசி, ருசிக்கு பரிவும் உபசரிப்பும் தேவை. எதை கொடுத்தாலும் சாப்புடுவதும், ருசித்ததால் சாப்புடுவதும். பிடித்தால் மட்டுமே சப்புடுவதும் ஆரொக்கியத்திற்க்கு வம்புதான்.

Wednesday, June 18, 2008

"மனிதன்" சிந்தனையின் வேகம் என்ன?..

"மனிதன்" சிந்தனையின் வேகம் என்ன?..


நண்பர் ஒருவர் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டுறிந்தார். தொலைபேசி மணியடித்ததும் பேசினார், எதிர் முனையில் அவர் மனைவி என்னங்க! எனக்கும் பையனுக்கும் காலையிலிருந்து வயிற்றுபொக்கு அதிகமாகயுள்ளது என்னபன்னுறது என்று அவர் மனைவி கேட்டது என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. அதற்க்கு அவர் உடனே பையனை டாக்டரிடம் அழைத்துப்போ, பையன் ஒரு மாத்திரையும் நீ இரண்டு மாத்திரையும் சாப்பிடு, பிறகு போன் பன்னு என்று சொல்லிவிட்டு வேலையை கவனிக்கதொடங்கினார்.........

Monday, June 16, 2008

ஆண் விபச்சாரம்,.........

ஆண் விபச்சாரம்,.........
உலகில் தொன்றிய முதல் தொழில் "விபச்சரம்" என்று ஆய்வு கூறுகின்றது.. இவர்க்களுக்கு தாசிகள் என்றும், இது அவர்கள் கடவுளுக்கு தொண்டாகவும் கருதினர்.
மனிதன் தொன்றியது முதல் மண்ணுக்கும் அந்த மண்ணின் பெண்ணிற்க்கும்தான் சண்டையிட்டு வந்தனர். அவ்வாறு கைப்பற்றிய பெண்ணை தாசிகளாக்கி சுவைத்தனர்.

விபச்சாரம் என்பது காசுகொடுத்து உடல்கொள்வது. காசு இருபாலுக்கும் தெவைதானே, இருப்பினும் பெண் ஈடுபடுவதும் பெண்ணை ஈடுப்படுத்துவதும் எதனால்? இயற்கையின் சதிதான் என்ன? கவர்ச்சி என்பது ஆணுக்கும் உண்டு பெண்ணுக்கும் உண்டு இருப்பினும் பெண்கள்தான் விபச்சாரத்தில் உள்ளனர். தற்ப்பொது ஆண் விபச்சாரனும் காணப்படுகிறது,
தற்பொதைய சில ஆய்வுகளில் விருப்பபடாமல் பெண் விபச்சாரம் செய்தாலும், பலர் விரும்பி வருவதாக தெரியப்படுத்தியது. முக்கிய நகரங்களில் ஆண் விபச்சாரன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது .
ஆண் விபச்சாரம் எந்த அளவுக்கு சாத்தியம்.. இயற்க்கை எந்தளவுக்கு சரியாகயுள்ளது?.... உண்மையில் ஒரு பெண் விருப்பம் இல்லாமல் உடல் உண்ர்வு கொள்ளாமல் உடல்கொள்ள முடியும் ( சிறிய பிரச்சனைகல் இருபினும் காலத்தால் சரியாகிவிடும்) ஆனால் ஆண்தான் உணர்வு கொண்டால் தான் உடல்கொள்ள முடியும் (உடல் சக்தி பொருத்து மாறுபடும்)
எத்தனை முறை காசுக்காக செய்துவிடமுடியும். இயற்கையில் மிகவும் சிரமம்தான் ( மாத்தரை ஊசி முலம் கொஞ்சம் முயற்ச்சிக்கலாம்) எனவேதான்
ஆண் பெண்ணை விபாச்சாரத்திற்க்கு தன் சொந்தங்களை உற்ப்படுத்துகிறான் மற்றும் கட்டாய படுத்துகிறான். தனனால் முடியும் என்றால் தானும் காசுக்காக செய்யலாமே!!!

மெலும் இங்கே, வரதச்சனை என்ற பெயரில் "காசுக்காக" தானே விபச்சாரன் ஆகுகின்றான். அல்லது குடும்பதாரால் அக்கப்படுகிறான்...
சுலபமாக காசு சம்பாரிக்க எளிய வாழியாக தேர்ந்தெடுப்பதுதான் விபச்சாரம். இவர்கள் செய்வது சரிதானா? தெவையா? சில நாடுகள் முறைபடித்துவது எதனால்? எல்லாம் நாம் சிந்தனைக்கு விட்டுவுள்ளேன்,..........

Sunday, June 15, 2008

எய்ட்ஸ் பற்றி மறைக்கப்பட்ட உண்மையை சொல்லும் கமல்!

எய்ட்ஸ் பற்றி மறைக்கப்பட்ட உண்மையை சொல்லும் கமல்!

தசவதாரம்(இது படம் விமர்சனம் இல்லை) கமலின் புதிய படைப்பு, படமோ வேகம், வேகம் ... அப்படி ஒரு வெகம். கமலின் திரைகதைக்கு சூப்பர் சலுயுட்...... இடையிடையே சொல்லும் யதார்த்த வசனம் அருமை சிந்திப்பதற்க்குள் படத்தின் வேகம் மிரளவைக்கிரது. அன்பே! சிவம்! படத்தில் சொல்லப்பட்ட சுனாமி, தசவதாரத்தில் காட்டப்படுகிறது( கிராப்பிக்ஸ் நிஜத்தை கொண்டுவருவது அருமை) அன்பே! சிவத்தில் சொல்லப்பட்ட நாத்தீக வசனம் தசவதாரத்தில் தெளிக்க பட்டுள்ளது. கடவுள் இருந்தால் நல்லாருக்கும் சொல்லும் கமலின் யதார்த்த கமல் வெளிப்படுகிறான். எனக்கு பிடித்தது இந்த ஹீரொ கமல்தான். கதையின்படி 2004-ஆம் ஆண்டு டிசம்பரில் அமேரிக்காவில் கொண்டுவரப் படுகிறது, விஞ்ஞானி டாக்டர் கோவிந்த் நடத்தும் ஆராய்ச்சியும், அவரின் ஆராய்ச்சியின் வெற்றியில் உருவாக்கப்பட்ட உலகத்தையே அழிக்கும் வைரஸும். ஹிரொ கமல் இந்த வைரஸை அழிக்கசொல்வதும், இதேபொல்தான் எய்ட்ஸ் கிருமியும் உருவாக்கப்பட்டதையும் சொல்லதுணிகின்றார் (மறைக்கப்பட்ட உண்மை சொல்லும் கமலூக்கு கரம் கொடுப்போம்).

20 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்க கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்நோய், இன்று உலகெங்கும் பரவி வருகிறது. இந்நோய் முற்றுவதைத் தாமதப்படுத்த மருந்துகள் உண்டு என்றாலும், இதை முன் கூட்டியே தடுக்கவோ குணப்படுத்தவோ மருந்துகள் இல்லை. எய்ட்ஸ் எச்.ஐ.வி எனும் அதி நுண்கிருமியால் ஏற்படுகிறது.
ஒருவர் தானே பெற்ற நோய்த் தடுப்பாற்றல் குறைபாட்டு கூட்டு அறிகுறி எனப் பொருள் தரும் எய்ட்ஸ் (AIDS-Acquired Immunodeficiency Syndrome அல்லது Acquired Immune Deficiency Syndrome) என்பது மனித நோய்த் தடுப்பாற்றல் இழப்பைக் குறிக்கும் நோயாகும். பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் நிலைதான் எய்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

கிருமி பரவும் விதம்
பெரும்பாலும் எயிட்ஸ் பாதுகாப்பற்ற உடலுறவினாலேயெ பரவுகின்றது. ஒருவருடன் பாதுகாப்பற்ற யோனியூடான உடலுறவில் அல்லது மலவாசலினூடான உடலுறவினூடாகப் பரவுகின்றது. ஆண்களிடம் இருந்து பெண்களிற்குத் தொற்றும் வீதமானது பெண்களிடம் இருந்து ஆண்களிற்குத் தொற்றும் வீதத்தை விடக் குறைவானது.

கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவிற்க்கு எச். ஐ. வி பரவ வாய்ப்புண்டு

பரிசோதனை செய்யப்படாத எச். ஐ. வி தொற்றுள்ள ஒருவரின் இரத்தத்தை இன்னொருவருக்கு தானமாக ஏற்றுவது
ஒருவர் பயன்படுத்திய மருந்து ஊசிகளை முறையாக சுத்திகரிக்காமல் இன்னொருவர் பயன்படுத்துவது ஹெச். ஐ. வி தொற்றுள்ள இரத்தம் மூலம் எய்ட்ஸ் பரவ வழி வகுக்கும்.

இப்படித்தான் இந்தநுண்கிருமி பரவ வாப்புள்ளது, இக்கிருமி காற்றில் உயிர்வாழ முடியாது, ஒரு துளி வினாடியில் அழிந்துவிடும். இப்படி பரவ குறைந்த வாய்ப்புள்ள இந்நோய் பலகொடி மக்களை எப்படி அடையமுடியும் என்ற கேள்விதான் தசவதாரத்தில் கமல் கேட்ட கேள்வி?

ஆப்பிரிக்க பொன்ற ஏழைநாடுகளில் பலலட்சம் பேர்களுக்கு கொடுக்கபடும் சோதனை மருந்து முலம் தான், இதுபோன்ற நுண் கிருமி பரவ வாய்ப்புள்ளது, 20ம் நூற்றாண்டில் கொடிக்கப்பட்ட சோதனை மருந்து முலம்தான் உலகம் எச்.ஐ.வி க்கு அடிமைப்ப்ட்டுள்ளது. விஞ்ஞானி டாக்டர் கோவிந்த் பொன்றவர்கள்தான் இதுபொன்ற தவற்றை தடுக்கமுடியும் என்ற நம்மிக்கையில் வாழ்ந்து வருகிறொம்..........
இந்தியாவிலும் இதுபொன்று சொதனை மருந்து கொடுக்கப்படுவத்தும், பாதிக்கப்படுவதும் செய்திகளில் அறிவது வேதனை கொடுக்கப்படுகிறது. இதையும் தடுக்க விஞ்ஞானி டாக்டர் கோவிந்த் வருவாறா?,........................................


Friday, June 13, 2008

ஆசையில்லாதவன் அரைமனிதன்! எல்லையில்லா ஆசை நிறைவு பெராது!!

ஆசையில்லாதவன் அரைமனிதன்! எல்லையில்லா ஆசை நிறைவு பெராது!!
கி.மு.566-கி.மு.486 ல் வாழ்ந்த புத்தரின் முக்கிய பொதனைகளில்,..
ஆசை/பற்று: துன்பத்துக்கான காரணம்.
துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.


நான் வாழவேண்டும், என்ற ஆசையின்றி எப்படிதான் வாழ்வை தொடங்கமுடையும். ஆசைபடுகிறவன் வாழ்ந்து வருகின்றான், ஆசை படுகிறவன் வெற்றிபெருகின்றான். ஆசையில்லாதவன் அரை மனிதன் (பத்தியக்காரன்) , மனிதனின் முதல் முக்கிய கண்டுபிடிப்பு வட்டம். இந்த வட்டத்திற்க்குப்பின்தான் உலகம் வந்துகொண்டுள்ளது.

"பெண்மீது ஆசைக்கொண்டு மணமுடிக்கிறான்,

மழலைமீது ஆசைக்கொண்டு குழந்தை பெருகின்றான்,

அவன்மீது ஆசைக்கொண்டு வாழ்ந்து வருகின்றான்,

என்மீது ஆசைக்கொண்டு கடவுள் என்னைப்படைத்தான்.


விரைவாக செல்ல ஆசைக்கொண்டு புகைவண்டி கண்டான்,

வின்னில் பறக்க ஆசைக்கொண்டு விமானம் கண்டான்,

வின்னை தொட ஆசைக்கொண்டு ராக்கட் கண்டான்,

எதன் மீது ஆசைக்கொண்டு உலகை பிரித்தான்?......................."

பிள்ளை வரம்வேண்டி ஆசைப்பட்டு, பேருகாலத்தில் துன்புற்று, பெற்றெடுத்த பிள்ளையோ பேரின்ப மகிழ்ச்சி. இடைப்பட்ட துன்பம் சுகமான சுமைதான் கடினமில்லை. ஆசைக்கும் கனவுக்கும் உருவம் ஒன்றுதான். டாக்டர். அப்துல் கலாம் இளஞர்களை கனவுகான சொன்னது மனிதனின் வளர்ச்சிக்குதான், துன்பட இல்லை. அவனின்றி அனுவும் அசையாது! ஆசையின்றி ஒன்றும் செய்திட முடியாது.

ஆசையின்றி ஒன்றும் செய்திடமுடியாது, எல்லையற்ற ஆசை நிறைவுபெரா பெராசையாகும்.

"பணம் வேண்டும் என்பது எல்லையில்லை,
ஒரு இலட்சம் ஒரு வருடத்தில் வேண்டும் என்பது ஆசையாகும். "

ஆசைப்பட்ட ஒரு இலட்சம் உன்னால் அடையமுடியும். ஆனால் பணம் வேண்டும் என்பது பேராசையால் துன்பதை கொடுக்கும்.

எந்த ஒரு ஆசைக்கும் எல்லை கொடுத்தால், துன்பம் தலைதெரிக்க ஓடிவிடும்.......


பின்குறிப்பு: தமிழ்மீது ஆசை கொண்டு வலைபூ படைத்தேன்.........Wednesday, June 11, 2008

தந்தைக்கு பணம் அனுப்பவேண்டாம்!.......

தந்தைக்கு பணம் அனுப்பவேண்டாம்!.......

அப்பொழுது, ஏழாம் வாகுப்பு படித்து வந்தேன். தமிழாசிரியர் பாடவெலையில் தினமும் கரும்பலகையில் ஒரு வாக்கியாம் எழுதவேண்டும். எல்லொரும் தினம் ஒரு வாக்கியம் எழுதுவார்கள். அவைகள் சிரிப்பும், சிந்தனையும் கலந்து இருக்கும், ஒருமுறை நானும் எழுதினேன் "தீயோரிடமும் பலக கற்ப்பொம்!" என்று எழுதிவைத்தேன்.

ஆசிரியர் வந்தார் படித்தார் பின்பு யார் எழுதியது என்று விளக்கமும் கேட்டார். தீயோர்களுக்கு தீயது எது என்று சரியாக புரியும், மேலும் நம்மை புரிந்த நண்பனாக இருந்தால் தீயதுலிருந்து தடுத்து காப்பர் என்றேன்.
ஆசிரியர் ஓரளவுக்கு சரியான விளக்கம் ஆனால், கொஞ்சம் கடினபாதை என்றார். பிறகு ஒரு முனிவர் கதையும் சொன்னார்.

" ஒரு குரு தன் சீடர்களுக்கு மூன்று அறிவுரை சொன்னார் 1. படுத்து உறங்காதே, 2. தாய் சொல்லை கேட்காதே, 3. தந்தைக்கு பணம் அனுப்பாதே அப்பொது சீடர்களோ புரியாது விளக்கம் கேட்டனர். ஒன்று படுத்து உறங்குவது சொம்பேரி தனம் எனவே துக்கம் வரும்போது படுக்க சொன்னார். அதுவரை வெலையில் இடுபடவேண்டுமாம். இரண்டு தாய் சொல்ல கேட்க வேண்டாம், அவள் சொல்லும் முன்பே செய்து முடித்து விட்டு, முடித்தேன் என்று மறுப்பு சொல்ல வேண்டும் என்றார். தந்தைக்கு பணம் அனுப்பாமல் அனைத்தும் தந்தையிடம் கொடுத்து பின் அவரிடம் நீ பெற்றுகொள்வாய் என்று சொன்னார். சீடர்களும் சரி என்றனர்."

பின்குறிப்பு: நானும் தந்தைக்கு பணம் அனுப்புவதில்லை, காசோலையாக அனுப்புகின்றென்....... அப்ப நீங்கள்?...

Monday, June 9, 2008

நெத்தியடி கொடுத்தவள்!......

நெத்தியடி கொடுத்தவள்!......
எப்பொழுதும்பொல என் மகளுடன் விளையடிக்கொண்டிருந்தேன், அவளிடம் உன்க்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?.. என்னை பிடிக்கும் என்று சொல்வாள் நம்பிக்கையில் கேட்டேன். ஆனால் அவள் எனக்கு அம்மா பிடிக்கும், அப்பா பிடிக்கும், அண்ணன் பிடிக்கும், தாத்தா பிடிக்கும், ஆயா (என் அம்மா) பிடிக்கும்...... என்று ஒரு தொடரை சொன்னாள்.

ஒன்று மட்டும் சொல்லவேண்டும் என்றேன், அவள் அப்படியெல்லாம் சொல்லமுடியது? என்றாள்..

மறுபடியும் உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? என்னை பிடிக்கும் என்பாள் என்ற நம்பிக்கையில் அவளிடம் கேட்டேன்,.. மீண்டும் அதே தொடரை சொன்னாள். ஒருவரை மட்டும் சொல்லு என்று ஒரு நட்பாசையில்
கெட்ட்டேன், அப்படியெல்லாம் சொல்லகூடாது என்றாள்.

இப்பொழுதுதான் நான் கேட்ட கேள்வியின் தவற்றை புரிந்துகொள்ளமுடிந்தது.
ஒரு குழைந்தையிடம் கேக்ககூடாத கேள்வியை உண்ர்ந்துகொள்ள முடிந்தது.
நமக்கு பிறந்த பிள்ளைக்கு, நாம் எல்லோரையும் பிடிக்கவேண்டுமே தவிர என்னை மட்டும் பிடிக்க வேண்டும் என்ற குருகிய மனம் எங்கிருந்து வந்தது,.

இப்படிதான் குழந்தைகளிடம் பாரபச்சம் ( நமக்கு தெரிந்தோ! தெரியாமாலோ!) காட்டிக்கொண்டுள்ளொம். பெற்றப்பிள்ளைகளிடம்
பெரியவர் சிறியவர் பாரபச்சம், நிறத்தில் பாரபச்சம், படிப்பில் பாரபச்சம், ஆண் பெண் பாரபச்சம்,... இப்படியாக எல்லாவகையிலும் பாரபச்சம் காட்டுவது எந்தவகையில் சரியானது? .. விஜய் டீவி நிகழ்ச்சி (நீயா? நானா?) ஒன்றில்
பிள்ளைகள் தங்களிடம் பெற்றொர் காட்டும் பாரபச்சம் பற்றி கொட்டி தீர்த்தார்கள்.

பிள்ளைகள் நம்வழி வந்தவர்களெ தவிர நமக்காக வந்தவர்கள் அல்ல!. இதை
முற்றிலும் தெளிவுப்படவேண்டும். நம் கனவுகளை அவர்களிடம் தினிப்பதில் எந்தவகையில் சரியானது? நம்மைவிட பிள்ளைகள் மிக தெளிவாக நடைபொடுகின்றார்கள். அவர்களுக்கு வழிவிட வேண்டுமே தவிர தடையாக இருக்க வேண்டாம்.

Sunday, June 8, 2008

தசாவதாரம் கதை என்ன?

தசாவதாரம் கதை என்ன?

(சுட்டது viduppu.com)


கலைஞானி கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் உலகம் முழுவதும் வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக ரிலீஸ் ஆகிறது.
12ம் தேதி அமெரிக்கா, இங்கிலாந்து, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ரிலீஸாகிறது. 13ம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது.
தமிழகம் முழுவதும் ஜூன் 8ம் தேதி ரிசர்வேஷன் தொடங்குகிறதாம். சென்னையில் (நகரில் மட்டும்) மொத்தம் 20 தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. இந்தத் தியேட்டர்களில் 74 காட்சிகள் தசாவதாரம் திரையிடப்படவுள்ளது. புறநகர்களையும் சேர்த்தால் 30 தியேட்டர்களைத் தாண்டும்
படத்திற்கு 1000 க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போடப்படவுள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, இந்தியிலும் தசாவதாரம் ரிலீஸாகிறது.
படம் ஜூன் 13ம் தேதி ரிலீஸாவது உறுதி என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
இதற்கிடையே தசாவதாரம் படத்தின் கதை குறித்த தகவல் லீக் ஆகியுள்ளது.
அந்த 10 வேடங்கள்:
நம்பி என்ற வைணவர், பத்தடி உயர கலிஃபுல்லா, அமெரிக்க புஷ், பாடகர் அவதார் சிங், அமெரிக்க விஞ்ஞானியாக, ஜப்பானியராக, மூதாட்டி கிருஷ்ணா பாட்டி, ஆப்பிரிக்க நீக்ரோ, வழக்கமான ஹீரோ, கஸ்டம்ஸ் அதிகாரி பல்ராம் நாயுடு.

படத்தின் கதை..:
இதுதான் தசாவதாரம் படத்தின் கதையாம் .. அமெரிக்க அணு மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானி கமல், அணுப் பிளவு தொடர்பாக மிகப் பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த கண்டுபிடிப்பை திருட முயல்கிறது ஒரு கேங். இந்த வில்லன் கும்பலுக்கு தலைவர் இன்னொரு கமல்.
இதையடுத்து விஞ்ஞானி கமல், அணுப் பிளவு ரகசியத்தை பத்திரப்படுத்த முடிவு செய்து, அதை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த ரகசியம், 90 வயதுப் பாட்டி ஒருவரிடம் (பாட்டியும் கமலே) வந்து சேருகிறது.
இதையடுத்து பாட்டியிடம் ரகசியத்தை அபகரிக்க வில்லன் கும்பல் முயலுகிறது. அது நிறைவேறுகிறதா, என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸாம்.
படத்தில் ஜார்ஜ் புஷ், ஆப்பிரிக்க நீக்ரோ உள்ளிட்ட வேடங்களில் கமல் அசத்தியுள்ளாராம். அவரது பத்து அவதாரங்களும் ரசிகர்களுக்கு நல்ல வேட்டையாக இருக்குமாம்.
படத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் கூட இருக்கிறார்கள். அதாவது ஒரு காட்சியில் வந்து போகிறார்கள். இவர்கள் கமல் போட்ட கெட்டப் அல்ல, நிஜ கருணாநிதி, ஜெயலலிதாதான்.
உலக சினிமாவில் ஒரு நடிகர் 10 வேடங்கள் போட்டிருப்பது இதுவே முதல் முறையாம். படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளதால் பட்ஜெட் ரூ. 65 கோடியைத் தொட்டு விட்டதாம்.காதல் தோல்வி இதயத்தை பாதிக்கின்றதா?......மனதிற்கு பிடித்தவனிடம் அல்லது பிடித்தவளிடம் காதல் வயப்பட்டு, தோல்வியுற்றால் இதயம் பாதிக்கபடுமா? பலரின் அனுபவத்தில் இதயம் பாதிக்கப்படுகின்றது. மனம் மூளைக்கு தொடற்புயுடையது ஆனாலும் இதயம்தான் முதலில் பாதிக்கபடுகிறது. பிறகுதான் மூளையை தாக்கி மனநொய்க்கு உற்படுதுகிறது. இதயம் திரைப்படத்தில் முரளி காதலின் தொல்வியால் இதயநோய் பாதிக்கப்படுவதாக காட்டப்பட்டுள்ளது. எனவே மனம் என்பது இதயம் தொடற்புள்ளதா?
மூளைதான் மனதை வெளிப்படுத்துகிறது என்றாலும், இதயத்தை பாதிக்கதான் செய்கிறது. பாதிக்கபடும் இதயத்தை தொட்டு பார்ப்பது இயல்புதானே. எனவேதான் மனம் என்று சொல்லுபொது இதயத்தை தொடுகின்றோம். மனம் மூளை கட்டுபாட்டில்லிருந்தாலும் இதயத்தை தொட்டு சொல்வது ஏற்புடையதகின்றது.