_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, June 16, 2018

"மகிழ்ச்சி"

"மகிழ்ச்சி"
இது மூளையுடன் தொடர்புடையது. பணத்தால் மற்ற காரணிகளால் மகிழ்வை கொடுக்க முடியாது. மகிழ்வை உணர சில காரணிகள் தேவைபடலாம். அதில் ஒன்று பணமாக கூட இருக்கலாம்.
பணம்தான் மகிழ்வை கொடுக்க முடியும் என்ற நிலை உங்களுடையது என்றால், அதற்கு எய்ட்ஸ் வந்து சாகலாம்.
பணம் இருந்தால் மகிழ்ச்சி தன்னால வரும் என்ற நினைப்பு சிலருக்கு இருக்கலாம். முற்றிலும் தவறான எண்ணம். மகிழ்வு என்பது துக்கம், பயம், ஆச்சரியம், கோபம் போன்ற உணர்வலை சம்பந்தபட்ட நிலை.
மகிழ்ச்சி மட்டுமே குறைந்த அதிர்வை கொடுக்கும் உணர்வு. ஆகவே அதை எல்லோரும் விரும்புகின்றோம். அதற்கும் மட்டுமே அதிகம் ஆற்றல் தேவைபடாது. கோபத்திற்கு அதிக ஆற்றல் தேவைபடுவதால் விரைவில் சோர்வடைகின்றோம். கோபத்திற்கு எப்படி பணம் தேவையில்லையோ அதுபோலதான் மகிழ்ச்சிக்கு தேவைபடாது.
நம் முன்னோர்கள் தியாண நிலையில் மகிழ்ச்சியை உணர்திருக்கின்றார்கள். அந்த மகிழ்ச்சியில் ருசி அதிகமாகவும் நிரந்தரமாகவும் இருப்பதை சொல்லிவிட்டு போய்யுள்ளார்கள். (தியாணம் என்பது கடவுள் சார்ந்த விடயம் இல்லை அறிவு சார்ந்த விடயம்)
சிரிப்பூட்டும் வாயுமூலம் சிரிக்க முடியும் என்றால் ஏன் பணத்தால் மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கமுடியும் என்று எண்ணுகின்றோம்....
சேவல் இல்லாமல் கோழியால் குப்பையை கிழருதல் மூலம் முட்டையிட முடியும். அப்படியிருக்க பணம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க கற்றல் நன்று.
மீண்டும் ஒரு தூண்டலுடன்
ஆ.ஞானசேகரன்