_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, January 28, 2010

ஏன்? எதற்கு? எப்படி?..... 10

ஏன்? எதற்கு? எப்படி?..... 10

பல் போனால் சொல் போச்சுனு சொல்லுவாங்க, ஆமாம் "சொல்லுனா" என்னாங்க? வரையறுக்கப்பட்ட ஒலி என்று சொல்லலாமா!.... தமிழ் இலக்கணத்தில் சொல் என்பதை "ஒரு பொருளை கூறும் மொழிக்கூறு" என்று சொல்லுவதுண்டு. அதேபோல் சொல் என்பது ஒரு ஒலி வடிவம். இந்த ஒலி வடிவம் வாய்வழியில் உருவாகி காதுகளால் உணரப்படுகின்றது. அப்படியானால் மொழி என்பது என்ன? ஒலியையும் சைகைகளையும் மூலகூறுகளாக கொண்ட இலக்கணங்கள் அடங்கிய சொற்களை மொழி என்று கூறலாம்.

ஒலி என்பதை விஞ்ஞானம் எப்படி அழைக்கின்றது? ஒலி என்பது காதுகளால் கேட்டு உணரகூடிய அதிர்வுகளை குறிக்கும். அதாவது ஒலி என்பதை அழுத்தம் மாற்றம், துகள் நகர்வு அல்லது துகள்களின் திசை வேகம் என்று கூறலாம்.

ஒலி எவ்வாறு கடத்தப்படுகின்றது அல்லது பரவுகின்றது? ஒலி அலைகளாக கடக்கின்றது. அதாவது எல்லாத்திசைகளிலும் சரியான விகிதத்தில் அலைகளாக பரவுகின்றது. அந்த அலையில் வேகம் மற்றும் அதிர்வெண்ணை பொருத்து தூரம் கடக்கின்றது. ஒலி பரவ ஊடகம் தேவை, காற்று மற்றும் வாயுக்களில் நெட்டலைகளாக ஒலி பரவுகின்றது. சில உலோகம் மற்றும் திடப்பொருள்களிலும் பரவும் ஆனால் பொருளின் தன்மைகேற்ப அதன் வேகம் குறையும் (உதாரணமாக கண்ணாடியில் ஒலியின் வேகம் குறைவு). வெற்றிடத்தில் ஒலி அலைகள் பரவாது. ஆனால் மின்காந்த அலைகள் வெற்றிடத்தில் வேகமாக பரவும். ஈரக்காற்றில் ஒலியின் வேகம் அதிகமாக இருக்கும்.

ஒலி எவ்வாறு உருவாகின்றது? பொருள் அதிவுருவதால் ஒலி உண்டாகின்றது. முறுக்கப்பட்ட கம்பியில் உண்டாக்கப்படும் அதிர்வுகளால் வீணை மற்றும் வயலினில் ஒலி உருவாகின்றது. காற்று மூலகூறுகளில் அதிர்வால் புல்லாங்குழலில் ஒலி உருவாகின்றது. முறுக்கப்பட்ட கம்பி அதிர்வுகளை கைகளால் கட்டுப்படுத்தி இசையாக வெளியாகின்றது. காற்றின் அதிர்வை பூல்லாங்குழலின் துளைகளை கட்டுப்படுத்தப்பட்டு நாதம் உருவாக்கப்படுகின்றது.

நாம் எவ்வாறு ஒலி எழுப்பி பேசுகின்றோம்? மனிதன் தன் குரல்வளை மூலம் ஒலி எழுப்புக்கின்றான். நுரையீரல்களிலிருந்து வரும் காற்றின் உதவியால் குரல்வளையில் உள்ள உள்நாக்கு அதிர்வடைந்து ஒலி உருவாகின்றது. அந்த ஒலி நாக்கு, உதடு, பல், வாய், தொண்டை குழி அகியவற்றின் அதிர்வளைகளால் ஒலி மாற்றம் அடைந்து சொல்லாக மொழியாக வெளிவருகின்றது. இப்படிப்பட்ட ஒலி அதிர்வைதான் சொல் என்கின்றோம். இலக்கணவரையறுக்கப்பட்ட சொல்லை மொழி என்று சொல்லுகின்றோம். மொழியானது உயிர் மற்றும் மெய்யொலிகளால் உருவாகின்றது. இவ்வாறு ஒலி சொல்லாக மாறுவதை ஒலிமாற்றம் என்று அழைக்கப்படுகின்றது.


குரல்வளையால் உருவாக்கிய ஒலி மற்றும் சொல்லை நாம் எவ்வாறு உணருகின்றோம்? அதாவது எப்படி கேட்கின்றோம்? காதுகளால் உணரப்படுகின்றது. பாலுட்டிகளுக்கு பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு காதுகள் உள்ளது. காதினுல் இருக்கும் திரவ குடத்தில் மிதக்கும் சுருள் போன்ற அமைப்புதான் குரல்வளையில் உருவாக்கப்பட்ட ஒலி அதிர்வுகளை உணர்ந்து அதன் ஒத்த அதிர்வுகளை மூளைக்கு அனுப்பி அதன் அதிர்வுகளை சொல்லாக மொழியாக நமக்கு மூளை உணர்த்துகின்றது.

இப்படிப்பட்ட ஒலி அதிர்வுகள்தான் நம்முடைய தொடர்பிற்கு மிகவும் பயனாக இருக்கின்றது. ஒலியின் அதிர்வுக்கு தகுந்த எழுத்துகளை உருவாக்கி எழுத்துகள் மூலமாகவும் செய்திகளை தொடர்புக்கொள்கின்றோம். மொழி என்பது தொடர்பிற்கு மட்டும் இல்லாது கலாச்சார நிகழ்வுகளை பதிவு செய்யும் ஊடகமாகவும் இருக்கு என்பதும் உண்மை.

மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........


இன்னும் செய்திகளுடன்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Thursday, January 21, 2010

தெரியாது என....

தெரியாது என...

வணக்கம் நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப்பின் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி. தமிழ்மணம் விருதுப்பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். வேலை பளு மற்றும் உடல் உபாதைகள் காரணமாக தொடர்ந்து இணையத்தில் வரமுடியவில்லை. இனி கொஞ்சம் கொஞ்சமாக வருவேன் என்று நினைக்கின்றேன்.

ஒரு செவிவழி கேட்ட கதை ஒன்னுங்க,... ஒரு இளைஞன் வேலைதேடி ஒரு பெரிய வெளிநாட்டு நிர்வாகத்திற்கு சென்றான். "அங்கு அலுவலகம் துப்பறவு பணி காலியாக இருப்பதாகவும் உடனே எங்கள் அலுவலகத்திற்கு ஒரு மின்னஞ்சல் செய்யுங்கள் அந்த வேலை உங்களுக்குத்தான்" என்று அங்குள்ள அதிகாரி சொன்னார். அதை கேட்டு மகிழ்ந்தான் ஆனால் தன்னிடம் மின்னஞ்சல் முகவரி மற்றும் அனுப்பும் முறையும் தெரியாததால் அலச்சியமாக இருந்துவிட்டான். அந்த வேலை வேறு ஒருவனுக்கு கிடைத்துவிட்டது. தனது குடும்பம் வறுமையை போக்க வேறு வழியின்றி பக்கத்து ஊரில் உள்ள மலிவான காய்களை வாங்கி அவன் ஊரில் விற்றதில் லாபம் ரூ20 கிடைத்தது. இதை இன்னும் கொஞ்சம் அதிகமாக காய்கள் வாங்கி விற்றான் லாபம் அதிகமாக கிடைத்தது. காய்கள் தேவை அதிகமானதால் தானே தோட்டமும் வாங்கி காய்கள் விவசாயமும் செய்து விற்பனை செய்தான் லாபமும் அதிகமாக கிடைத்தது. இவனிடம் 300 பேர் வேலைசெய்யும் அளவிற்கு பெரிய அளவில் இவனின் வியாபரம் பெருகியது. கணக்குகள் சரிபார்க்க கணனி மற்றும் வேலையாட்களும் இருந்தார்கள்.

இந்த அளவிற்கு பெரிய வியாபாரியாக இருந்தாலும் கணனியை பயன்படுத்த தெரியாதவனாக இருந்தான். அங்கிருந்த ஒருவர் " இவ்வளவு பெரிய வியாபாரியாக இருக்கும் உங்களுக்கு கணனியை பயன்படுத்த தெரியவில்லையே" என்று கேட்டார். அதற்கு அவன் "இது தெரிந்திருந்தால் நான் இன்னும் கூட்டிக்கொண்டுதான் இருந்திருப்பேன்" என்றார்.

அட ஆமாங்க எதும் தெரியாது என்று இருப்பது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லைங்க. முறையான முயற்சியும் தெளிவான சிந்தனையும் இருந்தாலே போதும் வாழ்க்கையில் முன்னோற முடியுமுங்க....

சென்ற முறை இந்தியா சென்ற பொழுது கல்லணைக்கு சென்றேன். காவிரி ஆற்றில் கட்டிய அணைகளிலேயே மிக பழமையான அணையாகும். கரிகால்ச்சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகின்றது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லும் களிமண்ணாலும் கட்டப்பட்ட இந்த அணை கிட்டதட்ட 19 நூற்றாண்டுகளாக நமது பாசனத்திற்கு பயன்பட்டுவருகின்றது எனபது மிக பெரிய ஆச்சரியம். சிறுவனாக சிறுவகளோடு விளையாடிக்கொண்டிருந்த கரிகாலனை பட்டத்து யானையால் மாலையிட்டு அரியணை ஏறிய இரண்டாம் நூற்றாண்டு சோழ மன்னனாவான். அப்படிப்பட்ட சிறுவன் தனக்கு தெரியாதென இருந்திருந்தால் இன்று நான்(நாம்) பார்த்த கல்லணை இருந்திருக்காது.


கல்லணை பற்றிய புகைப்படம் மேலும் இங்கே சுட்டவும்...

சுமார் 19 நூற்றாண்டுக்கு முன்னரே காவேரியின் போக்கை கட்டுப்படுத்தி அவற்றை முறையான பாசனத்திற்கு பயன்படுத்திய பாங்கு இன்றுவரை நம் அரசுக்கு தெரியாமல் இருப்பதேன்? அட அது போகட்டுங்க அந்த அணையையாவது பராமரித்து வருகின்றார்களா? என்றால் நாம் என்னதான் செய்துக்கொண்டுள்ளோம்? என்று கேட்க வேண்டியுள்ளது. கருநாடகத்தில் தண்ணீர் தரவில்லை, கேரளத்தில் தண்ணீர் தரவில்லை, ஆந்திராவில் தண்ணீர் தரவில்லை என்று அரசியல் நடந்தும் நம்ம அரசியல்வாதிகளால் கடலில் கலக்கும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்த என்ன செய்ய திட்டம் செய்துள்ளார்கள்? இங்கிலந்தை சேர்ந்த ஸ்டேன்லி என்ற பொறியாளர் முயற்சி இல்லை என்றால் மேட்டூர் அணையையும் நாம் கண்டுருக்க முடியாது? தஞ்சை விவசாயிகளின் போராட்டமும் முயற்சியும் இல்லாது இருந்திருந்தால் மேட்டூர் அணைக்கு அனுமதிம் கிடைத்திருக்காது. நமககு தெரியாது என இருந்திருந்தால் எதையும் நாம் சாதிக்க முடியாது. தெளிவான சிந்தனையும் முறையான முயற்சியும் நமக்கு இன்று தேவை.......

அன்புடன்
ஆ.ஞானசேகரன்