_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, July 13, 2012

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...



வணக்கம் நண்பர்களே!... பல நாட்களாக இணையம் பக்கம் வரமுடியவில்லை, வேலை பளூ ஒரு பக்கம் இருந்தாலும் மன இறுக்கமும் ஒரு காரணம்தான்... என்னமோ இணையத்தில் எழுதிவைத்தால் இந்த சமுக அவலங்களையும், அநீதிகளையும் தட்டி கேட்டு விடமுடியும் என்ற எண்ணம் எனக்கு இல்லாமல் போய்விட்டது. அப்பறம் என்ன ஒரு பொழுதுபோக்காக எழுதி காலம் கடத்துவதும் பிடிக்கவில்லை. அப்படி எழுதுவதையும் வன்மையாக கண்டனம் செய்கின்றேன். இப்ப என்னதான் சொல்ல வந்தே என்று நினைகின்றீர்களா? என்னுள் கேட்கபடும் கேள்விகளை உங்களுள் கேட்டுப்பார்க்கலாம் என்ற நட்பாசைதான்.... தனி ஒருவனால் எந்த ஒரு மாற்றதையும் எதிர்பார்க்க முடியது. ஒரு சமூக புரட்சி கண்டிப்பாக தேவைபடுகின்றது. அப்படிப்பட்ட ஒரு சமுக புரட்சியை இட்டு செல்ல தன்னலமில்லா தலைவர்கள் இல்லாதது இந்தியாவிற்கே விட்ட சாபமோ என்னமோ!.... அது இருக்கட்டும் அந்த கேள்விதான் என்ன?..... ம்ம்ம்ம்ம் சொல்லுரேன்.

1. லஞ்சம்(கையூட்டு), லஞ்சம் என்று சொல்லுராங்க, அதை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுராங்க, அதற்கான சட்டமும், அரசு அமைப்பும்கூட இருக்கின்றது. அதற்காக பல சமூக அமைப்புகளும் போராடி வருகின்றது. இந்தியாவை பொருத்த வரை லஞ்சத்தை ஒழிக்க வாய்ப்புகள் இருக்கின்றதா? எப்படி? ஏன்?

2. லஞ்சம் பெருகி வருவதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதியா? அரசாங்க அதிகாரிகளா? அவர்களும் நம்மில் ஒருவர்தானே! இருந்தாலும் நம்மால் ஏன் ஒழிக்க முடிவதில்லை?

3. லஞ்சம் கொடுப்பது குற்றமா? வாங்குவது குற்றமா? அல்லது இரண்டுமே குற்றமா? ஒரு தனி மனிதன் இந்த சமூகத்தில் லஞ்சம் வாங்காமல், மேலும் கொடுக்காமல் இருக்க முடியுமா? அப்படி முடிவதில்லை என்றால் அதற்கு யார் (எது?) காரணம்? லஞ்சம் என்பது பணம் மட்டுமில்லை மேலிடத்து சிபாரிசும் லஞ்சம்தான்...

4.1947 க்கு பின் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக பிரகடனம் செய்யப்பட்டது.... இந்த 64 வருடங்களுக்கு பின் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முழு சுதந்திரம் கிடைக்கின்றதா? அந்த சுதந்திரம் முறையாக வழங்கப்படுகின்றதா? அது இருக்கட்டும் முழுமையான பாதுகாப்பை இந்த இந்திய அரசும், இந்திய சட்டமும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தருகின்றதா?

5. நேற்று நாம் குழந்தைகளாக இருந்த பொழுது அந்த தெருவே, ஏன் அந்த ஊரே நம்முடையதுதான். இன்று நம் பிள்ளைகள் பக்கத்து விட்டில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பபடுகின்றதா? பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பாகதான் இருகின்றது, என்று முழுமையாக நம்பப்படுகின்றதா? எத்தனை கோர சமூக அவலங்கள்... அத்தனைக்கும் சட்டம் பாதுக்காப்பாக இருக்கின்றதா? அப்படிப்பட்ட சமுக குற்றவாளிகளுக்கு இந்த இந்திய சட்டம் தகுந்த தண்டனையை கொடுக்க முடிகின்றதா? ஏன்?......

6.இன்று நம் பிள்ளைகளை பள்ளிகளுக்கு வேன், மற்றும் ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றோம். அது நம்முடைய வசதி என்று நினைக்கின்றீர்களா?.... தனியாக பிள்ளைகளை அனுப்ப முடிகின்றதா?.... பக்கத்து தெருவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நாமே சென்றுதான் விட்டு வருகின்றோம் ஏன்?.... அப்படிப்பட்ட சமூக அமைப்பு உருவாக காரணம் என்ன? சட்டமும், சட்ட அமுலாக்கமும் காரணமாக இருக்கும் என்று நினைக்கலாமா? அதற்கு முக்கிய காரணம் என்ன?

7.சட்டம் சரியாக இருந்தாலும், சட்ட அமுலாக்கம், சட்டபாதுகாப்பு ஏன் சரியாக அமைவதில்லை? அரசியல் தலையீடா? அரசு அதிகாரிகளின் சுயநலமும் மெத்தன போக்கு காரணமா? அதற்க்காக யார் போராட வேண்டும்.....

8. சட்டம் தெரிந்த வள்ளுனர்கள் செய்து வருவது தொழிலா? சேவையா? வக்கில்கள் செய்வது தொழில் என்றால் அதை ஏன் அரசு ஏற்று நடத்த வேண்டும்?

9. காவல் துறை மற்றும் காவலிகள் யாருக்கு பாதுக்காப்பாக இருக்கின்றார்கள்? காவலாலிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகலுக்கு சட்டம் தெரிய வேண்டுமா? அப்படி தெரிந்து வைத்துள்ளார்களா? அதனை பரிசோதித்து பார்பதுண்டா?

10. இந்த இந்திய மக்களுக்கு நாட்டை பற்றியோ? சமூகத்தை பற்றியோ? அக்கரை இருக்கின்றதா? இல்லை என்றால் ஏன்? அந்த அக்கரையை யார் வளரும் பிள்ளைகளுக்கு ஊட்டுவது? அந்த விடயத்தில் அரசு நம்பிக்கை இழந்துவிட்டதா?............

இன்னும் கேள்விகள் தொடரும்........
ஆ.ஞானசேகரன்