_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, December 21, 2009

அன்புடன் ஆ.ஞானசேகரன்...

Photobucket

வலை நண்பர்களுக்கு வணக்கம்..
வேலையிடத்து பணியழுத்தம் காரணமாக, பல நாட்கள் இணையம் பக்கம் வரமுடியவில்லை வந்தாலும் பின்னூட்டமிட இயலாத நிலைக்கு வருந்துக்கின்றேன். அதுபோல வரும் 24/12/2009 முதல் இரண்டு வாரங்களுக்கு இந்தியா செல்ல இருப்பதால் (திருச்சி அண்ணாநகர்) உங்களோடு பகிர்ந்துக்கொள்ளும் நேரம் கொடுக்க முடியாமைக்கு வருத்தமே ( திருச்சி பக்கம் வந்தால் குரல் கொடுங்கள் சந்திக்கலாம்). பகிர்ந்துக்கொள்ளும் நேரம் குறைவாக இருந்தாலும் நினைவுகள் அனைத்தும் மனதினுள் வந்துசெல்கின்றது.ஆங்கில வருடப் புத்தாண்டையும் , தமிழ் வருடப் புத்தாண்டையும்.... எதிர் நோக்கியுள்ளோம்

புதுவருட வாழ்த்துப்பா

புது மகளே! வருக வருக....
காட்டாற்று வெள்ளம் போல
கரைப்புரண்டு வருக!....

வரும் முன் நிற்க,
உன் வருகையின் நிமித்தம்.....
என் நண்பனுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
என் உறவினனுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
என் மனைவி மக்களுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
மாறாக,....
உனக்கு மட்டுமே என் வாழ்த்துகள்!

வாழ்த்துகளோடு உன்முன்...
கனிவான எச்சரிக்கை!
பொங்கும் புதுபொழிவோடு
வருவாய் என்று தெரியும்,...
நீ! சாக்கரதை..

வெள்ளம் என்று புயல் என்றும்
உன்னை சரித்திரத்தில்
பதித்து விடலாம்....

சுனாமி என்று பூகம்பம் என்றும்
உன்னை பக்கங்களில்
நிறப்பி விடலாம்....

வந்தார்கள் சுட்டார்கள் என்றும்
உன்னைப் பற்றி
கலங்கம் படுத்தலாம்...

பசி வந்தது பஞ்சம் வந்தது என்றும்
உன் நினைவலைகளை
நசுக்கப்பட்டு விடலாம்....

நோய் வந்தது நொடி வந்தது என்றும்
உன் பெயர்மேல்
அச்சடிக்கப் படலாம்...

வாழ்த்துகள் இருந்துவிட்டு போகட்டும்
உனக்கு என் எச்சரிக்கை!....
வரலாற்று சுவடுகள் உன் நினைவுகளை
சொல்லவேண்டும்...
உன்னோடு உன் நினைவுகளும் இனிதாக
இருக்கவேண்டும்...

புதுமகளே! உனக்குதான்
என் வாழ்த்துகள்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்Saturday, December 12, 2009

நீ! ஒரு நாயகன் 2 (புகைப்படங்கள்)

நீ! ஒரு நாயகன் 2 (புகைப்படங்கள்)

ஒரு நடிகனாக தொடங்கி பின் தமிழகத்தின் முதலமைச்சராக பத்தாண்டுகாலம் அதாவது சாகும் காலம் வரை பணிசெய்து மக்கள் தொண்டனாக இருந்தவர் டாக்டர் புரட்சித்தலைவர் M.G. ராமச்சந்திரன் ஆவார். அவர் மக்களின் நாயகனாகவே இருந்தார் என்பது அவரின் வாழ்நாட்களை கவணித்தவர்கள் சொல்லிட முடியும். இவரைப்பாற்றிய என் முந்தய இடுகை நீ! ஒரு நாயகன்...

அந்த நாயகனின் வாழ்நாள் புகைப்படங்கள் சில மின்னஞ்சலின் கிடைத்தது. இந்த புகைப்படங்கள் உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி.

பொன்மனசெம்மல்


நடிகர் திலகம் சிவாசி கணேசனுடன் MGRAVM சரவணனுடன் MGRகிருபாணந்தா வாரியாருடன் MGRதனது நண்பர் டாக்டர் கலைஞருடன் MGR..


நரிக்குறவர்களுடன் MGR. "ஒளிவிளக்கு" எனற திரைப்படத்தில் நரிகுறவன் வேடம் கொண்டு நடித்து அவர்களின் மனங்களில் இடம் பிடித்தவர்.. தனது ஆட்சிக் காலத்தில் செய்ய தவறிய ஒன்று இவர்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து தாழ்த்தப்பட்ட பிரிவுக்கு மாற்றாமல் விட்டது.இரும்பு மனிதர் ராஜாஜியுடன் MGR

சகலகலா வல்லவர் MGR இவர் நடிகர் என்றாலும் எல்லா துறைகளிலும் திரண் கொண்டவராக இருந்தார். இவர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தனது சத்துணவு திட்டத்தின் முன்னோடி காமராஜ் அவர்களுடன் MGR


டாகடர் கலைஞருடன் MGR


நகைசுவை மன்னன் நாகேஷ் அவர்களின் திரையரங்கம் திறப்பு விழாவில் MGRஅறிஞர் அண்ணாவுடன் MGRகவிஞர் கண்ணதாசனுடன் MGR


சந்திர பாபுவுடன் MGR

நாகேஷ் மற்றும் அசோகனுடன் MGRஇந்திரா காந்தியுடன் MGR மத்திய அரசுடன் நல்ல இணக்கம் கொண்டவர்.


விடுதலை புலிகளின் தலைவன் வேலைப்பிள்ளை பிரபாகரனின் சந்திப்புமக்கள் கலைஞன் MGR


பெரியாருடன் MGRமூத்த நடிகர், இயக்குனர் சாந்தா ராம் (ஹிந்தி) அவர்களுடன் MGR தமிழக அரசியலில் காலில் விழும் கலாச்சரம் இவர் மூலம்தான் ஆரம்பமாகி இருக்கலாம். செல்வி ஜெயலலிதா அவர்கள் இதில் கொடிக்கட்டி பறப்பவர்.போப்வுடன் MGR இவர் ஒரு நாத்திகராக இருந்தாலும் மதத்தலைவர்களுக்கு மரியாதைக் கொடுப்பவர்.சாண்டோ சின்னப்பத்தேவருடன் MGR


முப்பெரும் தலைவர்கள் நெடுஞ்செழியன், கலைஞர் மற்றும் MGRஅறிஞர் அண்ணாவுடன் சீடர்கள்....NT ராமாராவ் வுடன் MGR

Tuesday, December 8, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 9

ஏன்? எதற்கு? எப்படி?..... 9

சென்ற ஏன்? எதற்கு? எப்படி? இடுகையில் வட்டம் மற்றும் வட்டம் சார்ந்த இயக்கங்களின் மனிதன் கண்டுபிடிப்பை பார்த்தோம். அதே போல் பூமியும் தன்னைத்தானே சுற்றும் இயக்க கோடும் ஒரு வட்டம்தான், ஏனெனில் பூமியும் கோளவடிவத்தில் இருக்கின்றது. பூமி தன்னைத்தானே சுற்றிவர ஆகும் காலம் ஒரு நாள் என்று கணிக்கப்படுகின்றது. துள்ளியமாக சொன்னால் பூமி தன்னை ஒரு அச்சில் சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் 23 மணி 56 நிமிடம் 4 வினாடி ஆகும். அப்படியென்றால் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகத்தை ( பூமியில் சுற்றளவு/23.56.4 மணி) கொண்டு கணக்கிடலாம்.


செயற்கைக்கோள்கள் என்பன பூமியை சுற்றுகின்றதா? அது எவ்வாறு சுற்றுகின்றது? செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றுகின்றன என்று சொல்வதை விட பூமியை இடம் வகிக்கின்றது என்பதுதான் சரியாக இருக்கும். பூமி தன்னைதானே இடம் சுழியாக சுற்றுகின்றது. அதாவது நாம் பூமியின் மேல் இருப்பதாகக் கொண்டால் நாம் மேற்கிலிருந்து கிழக்காக செல்கின்றோம். அதனால்தான் நிலையாக உள்ள சூரியன் நம் கண்ணுக்கு கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றதாக தெரிகின்றது. பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் 66,600 கி.மீ/மணிக்கு என்று கணகிடப்பட்டுள்ளது. அந்த வேகம் ஒவ்வொரு புள்ளிக்கும் மாறுபடும், காரணம் வட்டசார்பு இயக்கம் ஆரம் மாறுகின்றபொழுது வேகமும் மாறுபடும்.

செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து 350 கி.மீட்டர் உயரத்தில் சுற்றுகின்றது. சில 600 கி.மிட்டர் உயரத்திலும் சில 36,000 கி.மீட்டர் உயரத்திலும் அமைந்தப்படி சுற்றுகின்றது. இப்படி பல சுற்றுப்பாதைகளில் 800 செயற்கைகோள்களுக்கு மேலாக சுற்றுகின்றதாக தெரிகின்றது. பல செயற்கைக்கோள்கள் மனிதன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருப்பதும் உண்டு. இவற்றை செயலிழந்த செயற்கைக்கோள் என்று குறிப்பிடுகின்றனர். செயலிழந்த செயற்கைக்கோள் என்றால் என்ன? என்பதை பின்னர் பார்க்கலாம்.

பெரும்பான்மையான செயற்கைக்கோள்கள் மேற்கிலிருந்து கிழக்காக பூமி சுழற்ச்சியோடு சேர்ந்தே சுற்றுகின்றது. அவைகள் பூமியின் வேகத்தையும் செயற்கை கோளின் உயரத்தையும் துள்ளியமாக கணக்கிட்டு பூமியின் இடம் வகிக்கின்றது. அதாவது இந்தியா அனுப்பிய "கல்பனா" செயற்கைக்கோள் இந்தியாவை நோக்கி பார்த்தபடியே இருக்கின்றது. "கல்பனா" செயற்கைக்கோள் பூமியிலிருந்து 36,000 கி.மீட்டர் உயரத்திலிருந்து தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு, வானிலை போன்றவற்றிக்கு பயன்பட்டு வருகின்றது.

இவ்வகை செயற்கைக்கொள்கள் ஒருமுறை பூமியை வலம் வர பூமியை போலவே
23 மணி 56 நிமிடம் 4 வினாடி எடுத்துக்கொள்வதால் அவைகள் நிலையாக இருப்பதுபோல இருக்கும். 36,000 கி.மீட்டர் உயரத்தில் இருக்கும் செயற்கைகோள் பூமியை 23 மணி 56 நிமிடம் 4 வினாடி சுற்றிவர மணிக்கு 11,000 கி.மீட்டர் வேகத்தை எடுத்துக்கொள்கின்றது.

பெருன்பான்மையான செயற்கைக்கோள்கள் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றினாலும் சில வகை செயற்கைக்கோள்கள் வடக்கிலிருந்து தெற்காகவும் சுற்றுகின்றது. இந்தியா அனுப்பிய ஐ.ஆர்.எஸ் செயற்கைக்கோளும் இவ்வாறே சுற்றுகின்றது. ரஷ்யா,நார்வே,கனடா போன்ற நாடுகள் அனுப்புகின்ற செயற்கைக்கோள்கள் வடக்கிலிருந்து தெற்காக சுற்றும் பாதையைதான் தேர்வு செய்யப்படுகின்றது. அதற்கு காரணம் அதன் புவியியல் அமைப்பாகும்.

இப்படி செயற்கைக்கோள்கள் பூமியை சரியான வேகத்தில் சுற்றிவர எரிப்பொருள் தேவையா? ஆம் என்றாலும் செயற்கைக்கோள்கள் சுற்றுவதற்கு எரிபொருள் பயன்படுத்தவில்லை. செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றது. அந்த ராக்கெட்களுக்கு எரிபோருள் தேவை. ராக்கெட்கள் நியூட்டனின் விதிப்படி "எந்த ஒரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு" என்ற தத்துவத்தில் இயங்குகின்றது. செயற்கைக்கோள்களை ராக்கெட்டுடன் அமைக்கப்பட்ட நுட்பமான அமைப்புகள் அதன் சுற்றுப்பாதையில் உந்திவிடப்படுகின்றது. அப்படி உந்தப்பட்ட செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் தொடர்ந்து சுற்றுகின்றது. செயற்கைக்கோள்கள் சுற்றும் பாதை வெற்றிடமாக தேர்வுசெய்துள்ளதால் அது தொடர்ந்து சுற்றிவருகின்றது. அதாவது நியூட்டனின் மற்றொரு விதிப்படி "எந்த ஒரு புறவிசை தாக்காவிடின் அசையா பொருள் அசையாமலும் அசையும் பொருள் அசைந்துகொண்டே இருக்கும்". அப்படி பார்த்தால் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதை வெற்றிடமாக இருப்பதால் புறவிசைகள் இல்லை எனவே உந்தம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும். ஆகவே எரிப்பொருள் தேவைப்படவில்லை.

அப்படி உந்தப்பட்ட செயற்கைகோள்களின் வேகம் சீராகவே இருக்கவேண்டும். ஆனால் பலக்காரணங்களால் அதன் வேகம் சிறிது மாறுபடலாம் அவற்றை எப்படி சரிசெய்யப்படுகின்றது? செயற்கைக்கோள்களில் எல்லா புறங்களிலும் எரிப்பொருளுடன் கூடிய சிறியவகை ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் இவற்றை பீச்சிட செய்து செயற்கைக்கோளை முன்னும் பின்னும் நகர்த்தி சரிசெய்யப்படுகின்றது. இவற்றை எதிர் ராக்கெட்டுகள் என்று கூறுவதுண்டு. இப்படி எதிர் ராக்கெட்டுகள் கணனி மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது. எதிர் ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிப்பொருள் இருக்கும் வரைதான் நம்மால் கட்டுப்படுத்த முடியும். அப்படி எரிப்பொருள் தீரும் பச்சத்தில் அந்த செயற்கைக்கோள்
செயலிழந்தாக கருதப்படுகின்றது. ஒரு செயற்கைக்கோள் ஆயுள் என்பது அதன் எரிப்பொருள் தேவையை பொருத்தே இருக்கின்றது. எரிப்பொருள் முடிந்ததும் அந்த செயற்கைக்கோளின் ஆயுளும் முடிந்துவிடுகின்றது.

மேலும் ஒரு துண்டு செய்தி: செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதை வெற்றிடமாக இருக்க வேண்டும் எனவேதான் அவற்றினை பூமியிலிருந்து 350 கி.மீட்டர் உயரத்திற்கு மேல் உந்திவிடப்படுகின்றது. ரஷ்யா, நார்வே, கனடா போன்ற நாடுகளின் புவியில் அமைப்பு பூமியின் சுற்றுமையத்திற்கு அருகில் இருப்பதால்தான் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதையை வடக்கிலிருந்து தேற்காக தேர்வு செய்யப்படுகின்றது. மேலும் இவ்வகை சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவர 12 மணி நேரம் எடுத்துக்கொள்கின்றது. எனவே இரண்டு மூன்று செயற்கைக்கோள்கள் மூலம் பணியை சரியாக செய்ய பயன்படுத்துகின்றனர். ஒரு செயற்கைக்கோள் அந்த நாட்டை 8 மணி நேரம் அதன் பகுதியில் இருந்து அதன் பணியை செய்யும்.

முக்கிய குறிப்பு: நான் படித்த, அறிந்தவைகளை தொகுத்துள்ளேன் தவறுகள் இருக்கலாம். சாதரணமான என்னால் புரிந்த அளவிற்கு சொல்லியுள்ளேன். தவறுகள் இருந்தால் தாரளமாக சுட்டிக்காட்டுங்கள் திருத்திவிடலாம். ( கட்டுரை நீண்டுவிட்டது, முக்கியமான செய்திகளாக நான் கருதியதால்)

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

Friday, December 4, 2009

உனக்கென்ன? எனக்கென்ன?....... எனக்கென்ன? உனக்கென்ன?....... உன் அப்பனுகென்ன??????....

உனக்கென்ன? எனக்கென்ன?....... எனக்கென்ன? உனக்கென்ன?....... உன் அப்பனுகென்ன??????....

சமூகம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள், சாதி /மதம் / இனம் என்று மனிதனை கூறுபோடும் பிரச்சனைகள், குழந்தைகள் மற்றும் மகளிர்களுக்கு சமூகத்தால் கொடுக்கப்படும் அவலங்கள் இப்படி எல்லா வகைப்பிரச்சனைகளையும் சொல்லியும் பேசியும், எழுதியும் வருகின்றோம். இதெல்லாம் இருக்கட்டும் நமக்குள் இருக்கும் சின்ன சின்ன கேவலமான செயல்களை, இச்சைகளை, சின்னபிள்ளைதனமுன்னு சொல்லுவாங்களே அதுபோல மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் செயல்களை நாம் கவணிக்கின்றோமா? அல்லது அதை தவிர்க்க ஏதாவது சிந்தனைகளை எடுத்துக்கொள்கின்றோமா? என்றால் இல்லை.... இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படிதான் ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் மருந்தகம் சென்றேன். மருத்துவர் வரும் நேரம் இன்னும் ஆகவில்லை அருகில் உள்ள இருக்கையில் உட்கார்ந்து காத்திருந்தேன். காய்ச்சல் என்பதால் மற்றவர்களுக்கு தோந்தரவாக இருக்க வேண்டாமே என்று ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன். இளம் வயது மதிக்கதக்க ஒருவன் வந்தான், மருந்தக‌ அலுவலகத்தில் விசாரித்துவிட்டு அவனும் காத்திருக்க இருக்கையில் அமர என் அருகில் வந்து காலை அகட்டி எனக்கேன்னா? என்று அமர்ந்தான். என்னை உரசிக்கொண்டே இருந்தான் எனக்கோ உடல்நிலை சரியில்லாமல் மேலும் எரிச்சலை உண்டாக்கியது. நான் அவனை ஒரு ஏக்கத்துடன் பார்ப்பதைக்கூட அவனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. வேறு வழியில்லாமல் வேறு இடம் சென்று அமர்ந்தேன்.

மேலே சொன்னது போல பலர் ( அவர்கள் நம் நண்பர்களாய் கூட இருக்கலாம்) பேருந்தில், தொடருந்தில், மற்றும் பொது இடங்களில் உட்காரும் பொழுது கிட்டதட்ட இரண்டு இருக்கைகளை ஆக்ரமித்துக்கொண்டும் அதே சமயம் பக்கத்தில் ஒரு சீவன் இருப்பதாக நினைத்துக்கூட பார்க்கமுடியாமல் அப்படி இப்படி ஆடிக்கொண்டே இருப்பார்கள். இது போன்ற சம்பவங்கள் எனக்குமட்டும் இல்லை எல்லோருக்கும் வந்திருக்கும். அருகில் இருக்கும் சக மனிதனின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடியாத இவர்களால்தான் சமூக அவலங்களை சீர்தூக்கிப்பார்த்து களைய முடியும் என்று எதிர்ப்பார்கின்றோமா?


எத்தனை பேர்களால் நரிக்குறவர்கள் அருகில் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்ய முடிகின்றது? எத்தனை பேர்களால் ஒரு நீக்ரோவின் கைபிடித்து குழுக்கும்பொழுது மனம் சலனம் இல்லாமல் இருக்க முடிகின்றது? எத்தனை மனிதர்களால் சக நண்பனின் புண்ணிற்கு மருந்திட முடிகின்றது? எத்தனை பேர்கள் முதியோர்களின் தோலினை பார்த்து முகம் சுழிக்காமல் இருக்க முடிகின்றது? இதெல்லாம் முடியாத நம்மால்தான் இந்த சமூக அவலைங்களை களை எடுக்க முடியும் என்று நம்புகின்றோமா? நமக்கு இழைக்கப்படும் அவலங்களை வேரெடுக்க குரலெழுப்பும் அதே சமயம் நம்மால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் அவலங்களை கண்டுகொள்கின்றோமா? சிறிதுதேனும் எண்ணிப்பாருங்கள் மக்களே!....

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றபொழுது என் ஆசிரியர் ஒருவர் (பெயர் சித்திரமூர்த்தி திருவெறும்பூர் ஒன்றியம்) எங்களை குடியரசு தின விழாவிற்கு தேவராயநேரி குறவர் காலணிக்கு அழைத்து சென்றார். நாங்கள் 20வது பேர் அங்கு சென்றோம். நரிகுறவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி வர வேண்டும் என்ற நோக்கத்தில் எங்களை அந்த ஆசிரியர் அங்கு அழைத்து சென்றார். அங்கு பல விளையாட்டு போட்டிகள் எங்களோடு சேர்ந்து நடத்தி பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் எல்லோருக்கும் சத்துணவும் வழங்கினார்கள், எங்களில் சிலர் சாப்பிட மறுத்துவிட்டார்கள், நான் சாப்பிட்டேன் ஆனால் என்னால் மனம் சலனப்படாமல் இருக்க முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். சிங்கபூரில் சில சீனர்கள் இந்தியர்கள் அருகில் உட்கார சங்கடப்படுகின்றார்கள்( தற்பொழுது குறைந்துள்ளது, இல்லை என்று சொல்லும் அளவிற்கு என்றால் சிங்கப்பூர் அரசிற்கு நன்றி சொல்ல வேண்டும்) என்று பார்த்த பொழுது முதலில் கோபம் வந்தாலும் எனக்குள் இருந்த அந்த சம்பவம் என்னை செம்மைப்படுத்தியது.

நம்மை ஒருவர் அடக்கியாழும் பொழுது நமக்கு வலி எடுப்பது உண்மை என்றால் அதே போல நாம் நமக்கு கீழ் உள்ளவர்களை ஆளுமை படுத்தும்பொழுது அவர்களுக்கும் அதே வலிதான் இருக்கும் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் இல்லாமல் எந்த மாற்றத்தையும் இந்த சமூகத்தில் உருவாக்கிட முடியாது......

உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளாமல் சமுகம் எந்த மாற்றத்தையும் காணாது...


அன்புடன்
ஆ.ஞானசேகரன்.