_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, June 1, 2012

கண்ணீர் அஞ்சலி (திருப்பூர் சொல்லரசன்)

கண்ணீர் அஞ்சலி (திருப்பூர் சொல்லரசன்)
நமது பதிவுலக நண்பர் சொல்லரசன் என்கின்ற ஜேம்ஸ் சகாயராஜ் நேற்று (31.05.2012) காலை இயற்கை எய்தினார். அதன் பின் திருச்சி பாலக்கரையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் சிறிது காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டார். அண்ணாரின் குடும்பத்தாருக்கு பதிவுலகமே ஆழ்ந்த இரங்கல்களை தெரியப்படுத்துவோம்.

ஒரு நல்ல நண்பரை இழந்ததை நினைக்கின்ற பொழுது மனம் அழுத்தமாக உள்ளது. அவர் பழகுவதற்கு நல்ல மனிதர், பலமுறை நேரில் பார்த்ததால் அவரின் இழப்பு மிகவும் பாதிப்பாக இருக்கின்றது.

அவரைப்பற்றி அவரே சொல்லும் காணோளி (பழையது) .....

அவர் சொல்லரசன் என்ற தளத்தில் தனது கருத்துகளை பகிர்ந்துக் கொண்டார் அவருடைய தளம் செல்ல சொல்லரசன்