_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, July 30, 2008

மனிதனுக்கு தேவையும் சூழ்நிலையும் ......

மனிதனுக்கு தேவையும் சூழ்நிலையும் அமைந்தால் புதியக் கண்டுப்பிடிப்புகள் வந்துக்கொண்டேயிருக்கும். உதாரணமாக கோயம்புத்தூர் மாவட்டங்களில் நிலத்தடிநீர் மிகவும் ஆழத்தில்யுள்ளது. இரண்டு மோட்டார்கள் வைத்து நீர் எடுக்கவேண்டி வருகின்றது. இந்த தேவைதான் அங்கு புதிய வகை உயர்ந்த பம்ப்மோட்டார்கள் வளர்சியடைந்துள்ளது.

இப்படிதான் மிதிவண்டியும் மிதிவண்டியின் டயர் கண்டுப்பிடிப்பும். இன்று கொவை இளஞர் ஒருவர் தென்னை மரம் ஏற புதிய கருவி ஒன்றை கண்டுப்பிடித்து உலகிற்க்கு அழித்துள்ளார். இந்த இளஞருக்கு பராட்டுகளையும் வாழ்த்துகளையும் வலைபூ வழியாக தெரியப்படுத்துவதில் பெருமைபடுகிறேன்....



மேலும் விவரங்கள் தினமலர் சுட்டியை சுட்டவும்

இங்குச் சுட்டவும்//www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=4769&cls=row4&ncat=DI

Monday, July 28, 2008

நடிகை கோபிகாவின் திருமண புகைப்படம் சில

நடிகை கோபிகாவின் திருமண புகைப்படம் சில













Sunday, July 27, 2008

சாதிக ளில்லையடி பாப்பா

சாதிக ளில்லையடி பாப்பா



சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால
நீதிவழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கி லுள்ள படி
இது ஓளவையாரின் திருமொழி




சாதி இரண்டொழிய வேறிலை யென்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம்
நீதி நெறியினின்று பிறர்க் குதவும்
நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர்.

சாதிக ளில்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம்
இது பாரதியாரின் ஆசை வரிகள்
இப்படி ஓளவையார் காலம் முதல் பாரதி, பெரியார், டாக்டர் அம்பேத்கார் போன்றோர் சாதிக்கொடுமைகளை சாடியும் ,பேசியும், போராடியும் இருக்கின்றனர். இருப்பினும் தற்ப்பொது நவினக்காலத்தில் சாதியைப்பற்றி நம்மில் என்ன நினைக்கின்றோம்.
அனேக பதிவர்கள் சாதியைப்ப்ற்றி எழுதியும் வருகின்றனர். இருப்பினும் வலைப்பதிவர்களிடன் சாதிச்சண்டைகளும் சாடல்களும் காணமுடிகிறது.
மலேசியா, சிங்கபூர், இலங்கை பொன்ற வெளிநாட்டில் வாழும் நம்மவர்களிடமும் சாதிபூசல்கள் காணமுடிகிறது.
நம்மில் பலர் சதியைப்பற்றி என்னதான் நினைக்குறோம்.
80கள் வரை சாதியும் தீண்டாமையும் கொடூரமாக இருந்ததை பார்க்க முடியும் இது அனுபமுறையில் காணவேண்டும். கிராமங்களில் பொங்கல் தீபாவளி பொன்ற பண்டிகைகளில் தாழ்ந்த வகுப்பினர் உயர்ந்த பிரிவினர்க்கு, தான் வீட்டில் வளர்த்த கோழியை கொடுக்க வேண்டும் என்ற முறையிருந்தது. கோழியை வாங்கிவிட்டு அவர்கள் தன் வீட்டில் இருக்கும் மீதிமிச்ச பண்டங்களை கொடுப்பார்கள். இதை வாங்கும்போதும் காலில் விழுந்துதான் வாங்க வேண்டும்.(தஞ்சை மாவட்டங்களில் அதிகமாக இருந்தது) இந்த முறைகளை ஒழித்த பெருமை கம்னிஸ்டுகளைதான் சாரும். பிறகு" தீண்டமை" டீ கடைகளில் தனித் டம்லர் முறை இன்னும் கரூர் மாவட்டங்களில் சில இடங்களில் இருப்பதாக சன் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.
தற்ப்பொது தீண்டாமை இல்லை என்று சொல்வதற்கில்லை. மறைமுகமாக காணமுடிகிறது என்பதும் கொடுமைதான். தமிழகத்தில் புரட்சித் தலைவர் MGR அவர்கள் எல்லா கிராமங்களுக்கும் பேருந்து வசதி மற்றும் இலவச மின்சார ஒரு விளக்கு முறை அமுல்ப்படுத்தினார். இதனால் கிராமங்கள் நகராங்கலுடன் தொடர்பு அதிகமானதால், தனித் டம்லர் முறையில் எதிர்ப்புகள் அதிகமானது அதனால்தான் தற்ப்பொது பல இடங்களில் தனி டம்லர் இல்லை. மேலும் அரசு சட்டங்களும் காரணம்தான். ஆனால் தாழ்ததப்பட்டவர் நடத்தப்படும் கடைகளில் சாப்பிடுவது சிந்தித்து சொல்லுங்கள்.
என்னை பொருத்தவரை சாதிகள் இன்னும் ஒளிந்தபாடில்லை மறைமுகமாக எல்லா மனங்களிலும் இருக்கதான் செய்கின்றது. அதுவும் வெறித்தனமான வன்முறைகளும் காணமுடிகிறது.
விஜய் தொலைகாட்சியில் நடத்தப்பட்ட நீயா? நானா? நிகழ்ச்சியில் காதல் திருமணம் பெற்றோர்கள் பார்த்துவைப்பது விவாதத்தில், ஒரு பெண் சொல்வார் நான் அய்யங்கார் பெண் அய்யங்க்காரா பிறந்தது பூர்வஜென்ம பயன் என்றும் அய்யங்காரராய் பிறந்ததில் பெருமையும் அய்யங்கார பையனைதான் திருமணம் செய்வேன் என்று கூறுவார். இதிலிருந்து சாதி நம்மில் எந்த அளவிற்க்கு வேருன்றியிருப்பது தெரிகிறது.

Saturday, July 26, 2008

கழிப்பிட வசதியில்லாமல் திறந்தவெளி தேடி ஒதுங்குவோர்

கழிப்பிட வசதியில்லாமல் திறந்தவெளி தேடி ஒதுங்குவோர்

கழிப்பிட வசதியில்லாமல் திறந்தவெளி தேடி ஒதுங்குவோர் எண்ணிக்கை சர்வதேச அளவில் 120 கோடி. இதில், 85 சதவீதம் பேர் 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தப் பட்டியலில் இந்தியா 'முன்னணி'யில் உள்ளது.இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு சர்வே நடத்தியது. பல நாடுகளில் இன்னமும் கழிப்பிட வசதி, அடிப்படை சுகாதார வசதி போதுமான அளவில் இல்லை. இதற்கு திறந்தவெளிக் கழிப்பிடங்களே ஆதாரமாக இருக்கின்றன என்று அறிக்கையில் கூறியுள்ளது.

என்று தினமலர் செய்தியில் கூறப்படுகின்றது. மனிதனின் முக்கிய தேவைகளின் முதன்மையானது கழிப்பிடம். இந்தக் கழிப்பிடம் சுகாதார முறையில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் கழிப்பிடமேன்றி திறந்தவெளி தேடிச் செல்ல வேண்டிய அவலம் உலகெங்கும் காணப்படுவது. மனிதன் வளர்ச்சியின் பின்னடைவை காட்டுகிறது.

கிராமங்களில் அதிகமாக திறந்தவெளி தேட வேண்டிய நிலையும், மேலும் நகரங்களிலும் இப்படிப்பட்ட நிலையும் காணப்படுவதும் உண்டு. இதில் அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாகவும் இல்லை. தேர்தல் வாக்குருதியில் டீவி தருகிறொம், தருசு நிலம் தருகிறோம் என்று ஏமாற்று வேலையில்தான் எல்லா கட்சினரும் செயல்படுகின்றனர். வருகிற தேர்தலில் முக்கிய வாக்குரியாக வீடுதோரும் கழிப்பிடம் மற்றும் பாதால சாக்கடையமைப்பு செய்து தருகிறோம் என்று சொல்லுவார்களா? ...........

தினமலரில் பார்க்க

சொடுக்கவும் //www.dinamalar.com/fpnnews.asp?News_id=1373&cls=row3


திறந்தவெளியில் ஒதுங்குவோர் 120 கோடி
புதுடில்லி: கழிப்பிட வசதியில்லாமல் திறந்தவெளி தேடி ஒதுங்குவோர் எண்ணிக்கை சர்வதேச அளவில் 120 கோடி. இதில், 85 சதவீதம் பேர் 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தப் பட்டியலில் இந்தியா 'முன்னணி'யில் உள்ளது.இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு சர்வே நடத்தியது. பல நாடுகளில் இன்னமும் கழிப்பிட வசதி, அடிப்படை சுகாதார வசதி போதுமான அளவில் இல்லை. இதற்கு திறந்தவெளிக் கழிப்பிடங்களே ஆதாரமாக இருக்கின்றன என்று அறிக்கையில் கூறியுள்ளது.

சர்வே அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வளரும், ஏழை நாடுகளில் இன்னமும் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. கணிசமான பேர், திறந்தவெளியை தான் கழிப்பறையாகப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அமெரிக்க, ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில், கழிப்பறை வசதிகள் 50 சதவீதம் கூட நிறைவடையவில்லை.எல்லா நாடுகளிலும் கணக்கெடுத்ததில், மொத்தம் 120 கோடி பேர், திறந்தவெளியை தான் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 85 சதவீதம் 13 நாடுகளில் உள்ளவர்கள்.நூறு கோடியைத் தாண்டிய இந்தியாவில் 66 கோடி பேர், திறந்தவெளியில், சிறுநீர், மலம் கழித்து வருகின்றனர்.

இந்தியாவை அடுத்து இந்தோனேசியாவில் ஆறு கோடியே 60 லட்சம் பேர், எத்தியோபியாவில் ஐந்து கோடியே 60 லட்சம் பேர், பாகிஸ்தானில் ஐந்து கோடி பேர், சீனாவில், மூன்று கோடியே 70 லட்சம் பேர், நைஜீரியாவில் இரண்டு கோடியே 90 லட்சம் பேர், பிரேசிலில் ஒரு கோடியே 90 லட்சம் பேர் திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றனர்.உலகம் முழுவதும் 18 சதவீதம் பேருக்குக் கழிப்பிட வசதி இல்லை; திறந்தவெளியில் தான் தங்கள் காலைக் கடனை கழித்து வருகின்றனர்.

திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவோரில் கிராமத்தினர் தான் அதிகம். 100 கோடிக்கு மேல் இப்படி பயன்படுத்துகின் றனர். நகர மக்களை விட ஆறு மடங்கு அதிகமாக கிராமத்தினர் அடிப்படை வசதியின்றி உள்ளனர்.கடந்த 1990ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டுக்குள் பல வளரும் நாடுகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. இந்தியாவில் 31 சதவீதம் பேர் திறந்தவெளியை கழிப் பிடமாகப் பயன்படுத்தி வந்தனர். 2006ம் ஆண்டில் இந்த சதவீதம் 23 ஆக குறைந்துள்ளது. எனினும், போதிய அளவில் கிராமங்களில் இன்னமும் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்படவில்லை பல தொற்றுநோய்களுக்குத் திறந்தவெளிக் கழிப்பிடப் பிரச்னை தான் காரணம் என்பதால், எல்லாருக்கும் கழிப்பிட வசதி அளித்து, அடிப்படை சுகாதாரத்தை மேற்கொள்ள எல்லா நாடுகளும் முன் வர வேண்டும். இவ்வாறு சர்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Thursday, July 24, 2008

கள்ளுக்கடைக்கு போகும் வழி என்னங்க?


கள்ளுக்கடைக்கு போகும் வழி என்னங்க?


எங்கள் வீடு தெருமுனையில்யுள்ளது. எங்கள் வீட்டை கடந்துதான் மற்ற பகுதிக்கு செல்லவேண்டும். எங்கள் தெரு எங்க வீட்டுக்குப்பிறகு மூன்றாக பிரிகிறது. பொதுவாக விலாசம் தேட எங்கள் வீட்டை நாடுவார்கள், எங்கள் வீட்டுக்கு பிறகு தெரு மூன்றுப் பகுதியாகயுள்ளதால் குழப்பத்தில் விசாரிப்பார்கள். ஒரு வீதிக் கடைசியில் கள்ளுக்கடையுள்ளது., அக்கம் பக்கத்து ஊர்களிடமிருந்தும் இங்கு வருவார்கள், சரக்கு நல்லாயிருக்கு என்று சொல்வார்கள்.


எதுஎப்படியோ? கள்ளுக்கடைக்கும் வழிக்கேட்டு வருவார்கள். ஓருசிலமுறை என்னை கள்ளுக்கடைக்கு எப்படி பொகவேண்டும்? என்று சிலர் கேட்ப்பதுமுண்டு. போக போக என்னை கள்ளுக்கடை வழிக்காட்டிப்பொல ஆக்கிவிட்டனர். என்னக்கொடுமை சார் பாவத்தில் பங்குபொட என்னையும் அழைப்பது. பலமுறை கொபம் வருவதும் அதனால் பலர் சண்டைமிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. யார் கள்ளுவிற்க? யார் வழிக்காட்டுவது? கள்ளுகுடிப்பவன் பாவத்தை நான் சுமக்க லாபத்தை கடைகாரன் சுமப்பதா? என்னை வழிக்கேட்ப்பது மருத்துவமனைக்கு இல்லை கள்ளுக்கடைக்கு!... மருத்துவமனைக்கு வழி சொன்னால் ஆத்ம திர்ப்தியாவது கிடைக்கும்.


இப்படிதான் ஒருநாள் அரை போதையில் ஒருவன் என்னிடம் கள்ளுக் கடைக்கு எப்படி போகனும் என்றான்., கையை மட்டும் காட்டினேன் மனமில்லாமல். வேரு வழியில் சென்று தேடியபின் என்னிடம் வந்து கடுமையான வார்த்தையில் திட்டினான். " வழி தெரியலனா ஏண்டா தெருமுனையில் வீட்டை கட்டின? " என்றான். நீங்களே சொல்லுங்க சரவணன், என் கொபத்தை என்ன செய்வது?


முதல் முறையாக சிங்கபூரிலிருந்து திருச்சிக்கு இண்டியன் ஏர்லைன் விமானத்தில் சென்றேன். சென்னையில் உள்நாட்டு விமானத்திற்கு மாற்ற வேண்டும். அதனால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு சென்றேன். அதிகாரியை விசாரித்ததில் திருச்சி உள்நாட்டு விமானம் வெளிநாட்டு விமானநிலயத்திற்கு செல்ல வேண்டும் என்றார். சரிஎன்று திரும்பி செல்லும்போது அருகில்யுள்ள ஒருவன் இந்த வழியில் போங்கசார் என்றான், சரியென்று தலையாட்டினேன் அவன் திர்ப்திக்காக. பிறகு அவன் ஐந்து டாலர் கொடுங்க சார் என்றான். எதற்கு? என்றேன், வழிச்சொன்னதற்கு என்றான். வந்தவனுக்கு வழித்தெரியாதா? போயா என்று திட்டினேன். அவனோ இதுக்குதான் தமிழனுக்கு வழிச்சொல்லக்கூடாது என்றான். என்னசார் வழி கேற்ப்பதும் வழி சொல்வதும் பிரச்சனையாக வருகிறது......


முக்கிய குறிப்பு: கருத்துக்காக நிகழ்வும் கலமும் மாற்றப்பட்டுயுள்ளது.



Wednesday, July 23, 2008

கலாச்சாரமும் மாற்றங்கலும் (வீடியோ)

கலாச்சாரமும் மாற்றங்கலும்(வீடியோ)

நமது கலாச்சாரம் காலம் மற்றும் அன்னியர்களின் படையெடுப்பு போன்றவற்றின் காரணியாக மாறிக்கொண்டே வருகிறது. இப்படி மாற்றம் பெற்ற கலாச்சரத்தை நாங்கள் காப்பாற்றியே தீருவொம். நக்கல் கலந்த சிந்தனை கமல் கூறும் வீடியோ!.....




Tuesday, July 22, 2008

புலவன் வாக்கு!....


புலவன் வாக்கு!....

என் நண்பனின் தந்தையை அந்த ஊரில் "புலவரே" என்றுதான் அழைப்பார்கள். எல்லா புலவர்கள் போல இவருக்கும் ஊரில் நல்லப்பெயர்தான். வெள்ளை வேட்டியுடன் திண்னையில் உற்க்காந்தி வெட்டி பேசி பேசி பொழுதை கழிக்கும் நல்லவரென்று. எப்பொழுதும் சலவை வேட்டி சட்டையில்தான் இருப்பார். என் வயதுக்கு அந்த அளவிற்க்கு புரியாது ஏதோ ஒன்றுரெண்டு வார்த்தை பேசுவேன்.


வேலைவெட்டியில்லாதவன் என்று பேசுபவர்கள் பலமுறை புலவரெ! ஒரு மனு எழுதனும் என்று கேட்டு வருவார்கள். இப்படி அவர் எழுதிய ஒரு விண்ணப்பத்தை நான் பார்க்க நேர்ந்தது அப்படியொரு நடை, சொற்க்கள், கோர்வை என்னை வியக்கவைத்தது. அன்றையிலிருந்து அவரை பார்க்க பேச தொடங்கினேன்.


அவர் சில புத்தகங்களூம் எழுதியுள்ளார் அவற்றை என்னிடன் காட்டி படிக்க சொல்வார். எனக்கு அந்த அளவிற்க்கு புரியாது. நல்ல கவிதைகள் சொல்வார், ஒருமுறை என்னிடம்


மழையென்னும் நங்கை,

மண்ணுலகில் வந்து..

நடனமாடிச் சென்றாள்.....


இந்த மூன்று வரிகளும் இடமாற்றி போட்டாலும் இதன் பொருளும் மாறாது, சந்தமும் மாறாது என்று கூறினார்.

இப்படி நாட்கள் செல்ல நான் ஒரு லேத் பற்றரையில் வேலை செய்தேன் குறைந்த வருமாணம்தான். என்னிடம் வந்து 50ரூபாய் கேட்டார் நான் எதுவும் கேட்காமல் கொடுத்தேன். மிகவும் மகிழ்ந்துப்போனார் "இந்த புலவருக்கு எந்தவார்த்தையும்

கேட்காமல் 50ரூபாய் கேட்டேன் கொடுத்தாய் மறுமுறை நீ 500ரூபாய் கொடுக்கும்மலவுக்கு வளர்வாய் புலவனின் வாக்கு பொய்க்காது என்று கூறிச்சென்றார். "


இன்று சிங்கபூரில் போதிய வருமாணத்தில் வேலைச்செய்கிறேன். அவரைப்பார்த்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. 500ரூபாய் அவர் கெட்கவுமில்லை நான் கொடுக்கவும்மில்லை........

Sunday, July 20, 2008

அந்தகாலத்தில நாங்களெல்லாம்!....

அந்தகாலத்தில நாங்களெல்லாம்!....

வகுப்பாசிரியர் மாணவர்களுக்கு எப்படி சொல்லிகொடுத்தாலும் புரியாமலும், சொன்னப்படிக் கேக்காமலும் வாலுபன்னும் மாணவனை பார்த்து,. ஏண்டா இப்படி நடந்துக்கிருங்க, உங்கவயசுல நேரு எப்படி நல்லா படிச்சு சிறந்து விளங்கினார் தெரியுமா? நீங்கலும் இருகிங்களே.. என்று கடிந்துக் கொண்டார். அதற்கு அந்த மாணவன் " ஐயா" நேரு உங்கவயசுல இந்திய பிரதமரா இருந்தார் ஆனால் நீங்க வாத்தியாராதானே இருகீங்க என்றான்.

இப்படிதாங்க எல்லா பெரியவர்களும் நாங்க அந்தக்காலத்துல இப்படியா இருந்தோம், என்று ஆரம்பிப்பார்கள். என்னமோ நாமெல்லாம் தப்புசெய்ய வந்தவர்கள் மாதிரி பேசுவார்கள்,. அப்படியெல்லாம் இல்லிங்க இந்த காலத்து இளஞர்கள் வீட்டைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் நன்றாக தெரிந்தவர்கள். நன்கு உழைப்பாவர்கள். நீங்கள் உற்று கவனித்தீர்களேயானால் 70 வதுகளுக்கு முன் உள்ளவர்களிடம் எதாவது ஒரு கெட்டப்பழக்கம் இருக்கும். உதாரணமாக வெற்றிலை விடாது போடுதல், மது அருந்துதல், பொடி போடுதல் பிறகு அப்படி இப்படி என இருக்கும். வீட்டில் அம்மா, அப்பா, பிள்ளைகள் எல்லொரும் சேர்ந்து வெற்றிலை போடுவார்கள். வெற்றிலை கெட்டப்பழக்கம் என்று சொல்ல வரவில்லை விடாது மதுப்பழக்கம் பொல போடுவார்கள்.

ஆனால் இன்றைய இளஞர்களிடம் பொதுவாக அப்படிப்பட்ட பழக்கம் குறைவு, மேலும் அதற்கு அடிமையாகாமல் இருப்பதை பார்க்கமுடிகிறது. தன்னுடைய வாழ்கையை தானே முடிவு பன்னும் தகுதியும் இருக்கிறது. இன்றைய மக்கள் தொகை கணக்கில் பார்த்தால், தவறும் சதம் மிக சொற்ப்பமே. பெண்களும் இவற்றுக்கு பொருந்தும். மது, புகை, மற்றும் கெட்டப்பழக்கமில்லா இளஞர்களை தற்பொது சுட்டிக்காட்ட முடியும் ஆனால் அந்தகாலத்தில்.... எனக்கு சந்தேகமே?

என்மகள் Lkg படிக்கிறாள், தன்னுடைய பென்சிலை மேல்வகுப்பு பையன் எடுத்துக்கொண்டான். வீட்டுக்கு வந்ததும் என்மனைவியிடம் "அம்மா என் பென்சிலை ஒரு அண்ணன் எடுத்துக்கொண்டான்" என்று அழுதாள். சரி நாளை வந்து அந்தப்பையனை ஏண்டா எடுத்த அடிபேன் பாருன்னு சொல்லுரேன் என்று அவளை சமாதனப்படுத்த என்மனைவி சொன்னாள். அதற்கு என் மகள் அப்படி சொல்லாதமா அந்த அண்ணன் மேடமிடம் சோல்லிருவான், பாப்பா பாவம் பென்சிலை கொடுத்துருன்னு சொல்லு என்றாள்.

இப்படிதாங்க இந்தகாலத்தில் பிள்ளைகள் மிகதெளிவாக இருக்கிறார்கள். எனவே "அந்தக்காலத்துல" என்று கொக்கி போடாமல் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.. இன்றைய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்....


Friday, July 18, 2008

வம்பு!....

வம்பு!....

குருவானவர் சொல்வதை செய்யுங்கள்,
செய்வதை செய்யாதீர்கள்!.....


http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=1308&cls=row4 (நன்றி தினமலர்)



கோவை பிஷப் ஹவுஸ் வளாகத்தில் மோதல்: பாதிரியாருக்கு அடி
ஜூலை 18,2008,00:00 IST
கோவை: கோவை பிஷப் ஹவுஸ் வளாகத்தில் நடந்த மோதலில், பாதிரியாருக்கு உதடு கிழிந்தது; டிரைவர் ஒருவருக்கு மண்டை உடைந்தது; நிர்வாகத்துக்கு எதிரான போராட்டம் மேலும் வலுத்து வருகிறது.கோவை, பெரியக் கடை வீதியில் புனித மிக்கேல் அதிதூதர் பேராலயம் உள்ளது. இதன் பின்பகுதியில், கோவை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் குடியிருப்பும், அலுவலகங்களும் அமைந்துள்ளன. தற்போது கோவை மறை மாவட்ட பிஷப்பாக தாமஸ் அக்வினாஸ் உள்ளார்.பிஷப்புக்கு அடுத்த அதிகாரம் பெற்றவராகக் கருதப்படும் முதன்மை குரு (விகர் ஜெனரல்) என்ற பொறுப்பில் குருசாமி என்ற பாதிரியார் உள்ளார்.
புகார் கிளம்பியது: கோவை கத்தோலிக்க மறை மாவட்டத்தில் 126 பாதிரியார்கள், பங்குத்தந்தை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ளனர்.இவர்களில் சமீபத்தில் 32 பேரை வேறு இடங்களுக்கு மாற்றி பிஷப் தாமஸ் அக்வினாஸ் உத்தரவிட்டார். இதற்கு அந்தந்த பங்குகளில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மாறுதல் உத்தரவுகளை வாபஸ் பெற பிஷப் ஹவுஸ் நிர்வாகம் மறுத்து விட்டது.இடமாறுதல் வழங்கியதில் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக பாதிரியார்கள் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. முதன்மை குருவுக்கு நெருங்கிய பாதிரியார்களை பெரிய பங்குகளிலும், மற்ற பாதிரியார்களை தொலைதூரப் பகுதிக்கும் மாற்றியதாக புகார் கிளம்பியது.
மடத்துக்குளம் பங்குத்தந்தையாக இருந்த மரியஜோசப் என்ற பாலு, துரை வில்லியம்ஸ் உள்ளிட்ட பல பாதிரியார்கள் தங்களது மாறுதல் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்; அவர்கள் பிஷப்பை சந்தித்து முறையிட கோவை பிஷப் ஹவுசுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு பங்குகளைச் சேர்ந்த பாதிரியார்களும் அங்கு கூடினர்.
அனைவரும் சேர்ந்து கடந்த திங்கட்கிழமையிலிருந்து உள்ளிருப்புப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் போன்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர். முதன்மை குரு, மறை மாவட்ட பொருளாளர் ஆகியோரால் மறை மாவட்ட நிர்வாகத்தில் ஏராளமான குளறுபடிகள் நடப்பதால், அவர்களை மாற்ற வேண்டுமென்று பகிரங்கமாக கோரிக்கை வைத்தனர். இதற்கு, பிஷப் ஒப்புக் கொள்ளவில்லை.பாதிரியார்களுக்கும் மறை மாவட்ட நிர்வாகத்துக்கும் இடையில் நடந்துவந்த மோதலில் தீர்வு ஏற்படாத நிலையில், புனித மிக்கேல் அதிதூதர் பேராலய பங்கைச் சேர்ந்த சிலர், பிஷப் ஹவுசுக்குள் புகுந்துள்ளனர். அங்கு போராட்டம் நடத்தி வந்த பாதிரியார்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, பாதிரியார் மரிய ஜோசப்பை சிலர் தாக்கியுள்ளனர். இதில் அவரது உதடு கிழிந்தது. தாக்குதலில் காயமடைந்த அவரை, மற்றவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பாபு என்ற டிரைவரும் மண்டை உடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாதிரியார் மரிய ஜோசப் கண்ணாடி டம்ளரை எறிந்ததால் மண்டை உடைந்ததாக பாபு புகார் தெரிவித்தார்.தகவல் அறிந்ததும், பேராலய வளாகத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குவிந்தனர்.
பிஷப் ஹவுஸ் சார்பில் பேராலய பங்குத்தந்தை ஆல்பர்ட் நெல்சன், அங்கு வந்தவர்களுக்கு விளக்கம் கொடுத்தார்.மறை மாவட்டத்தில் நடக்கும் தவறுகளை மறைத்து, தங்கள் மீது குற்றச்சாட்டுகளைத் திருப்புவதாகக் கூறும் பாதிரியார்கள், தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த மோதல் மேலும் வெடிக்கும் என்று தெரிகிறது.பாதிரியார்கள் பற்றி ஏற்கனவே ஏராளமான புகார்கள் வருகின்றன. புதிது புதிதாக பல சபைகள் உருவாகவும் இது முக்கிய காரணமாக உள்ளது.
இந்நிலையில், பதவி, அதிகாரம், போராட்டம், அடிதடி, மோதல் என, அரசியல்வாதிகளுக்கு இணையாக பாதிரியார்களும் நடந்து கொள்வது ரோமன் கத்தோலிக்கப் பிரிவில் உள்ள கிறிஸ்தவ மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.பழி வாங்கினரா பாதிரியார்கள்?: கோவை மறை மாவட்டத்துக்குச் சொந்தமாக ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பணி நியமனம் செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், முதன்மை குரு, பேராலய பங்குத்தந்தைக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமனம் தரப்படுவதாகவும், புகார்கள் கூறப்படுகின்றன.
புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளியில் ஆசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட மோதலில், மூன்றாண்டுகளுக்கு முன்பு, பல நாட்களாக புனித அந்தோணியார் தேவாலயம் பூட்டப்பட்டிருந்தது. பராமரிப்புப் பணி நடப்பதாகக் கூறி திருப்பலி, வழிபாடு எதுவும் நடக்கவில்லை. பாதிரியார் மரிய ஜோசப் அங்கு சென்று திருப்பலி நடத்தினார். அதிலிருந்து அவரை பழிவாங்க அதிகாரத்திலுள்ள சில பாதிரியார்கள் திட்டமிட்டதாகவும், தற்போது நடந்த மோதலைப் பயன்படுத்தி அவரைத் தாக்கியுள்ளதாகவும், புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
பங்குத்தந்தை ஆல்பர்ட் நெல்சன் ஏற்பாடு : பாதிரியார் மரிய ஜோசப்பிடம் கேட்டபோது, ""மறை மாவட்ட நிர்வாகத்தில் தவறுகள் நடப்பதை சுட்டிக்காட்டி, நிர்வாகத்தில் மாற்றம் செய்ய வேண்டுமென்று கோரி 80 பாதிரியார்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்தோம். இன்று காலையில் திடீரென சிலர் தாக்குதல் நடத்தினர். முதன்மை குரு ஆலோசனைப்படி, மிக்கேல் ஆலய பங்குத்தந்தை ஆல்பர்ட் நெல்சன் ஏற்பாடு செய்த ஆட்கள்தான் என்னைத் தாக்கியுள்ளனர்,'' என்றார்.
வாடிகன் தூதர் மறுப்பு: இது தொடர்பாக, பிஷப் ஹவுஸ் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட போது, பேராலய பங்குத்தந்தை ஆல்பர்ட் நெல்சன் கூறியதாவது:ஆண்டுக்கு ஒரு முறை பாதிரியார்களை மாற்ற பிஷப்புக்கு அதிகாரம் உண்டு. மொத்தம் 32 பாதிரியார்களை மாற்றியதில் 29 பேர் மாறிச் சென்றுவிட்டனர். மரியஜோசப் என்ற பாலு, துரை வில்லியம்ஸ் உட்பட மூன்று பேர் மட்டுமே பிரச்னை செய்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக 30 பாதிரியார்கள் உள்ளனர். முதன்மை குரு, பொருளாளரை மாற்ற வேண்டுமென இவர்கள் கோரிக்கை வைத்தனர். அதுபற்றி டில்லியிலுள்ள வாடிகன் தூதரை பிஷப் தொடர்பு கொண்டு கூறியபோது, அவர் மறுத்து விட்டார்.
பாதிரியார் பாலு, மதுரை, நெல்லை மாவட்டங்களின் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளராக இருப்பதால், ஆன்மிகப் பணிகளைக் கவனிப்பதில்லை. எனவேதான் அவரை எருத்தேன்பதிக்கு பிஷப் இடம்மாற்றினார்.இவ்வாறு பாதிரியார் ஆல்பர்ட் நெல்சன் தெரிவித்தார்.

இவர்கள்தான் நம்மை வழிநடத்தி கடவுளிடம் ஒப்புதல் கொடுப்பவர்கள்..................................................... (ஒருவர்கொருவர் சமாதானத்தை எப்படி தெரியப்படுத்துவது கடவுளுக்கே வெளிச்சம்)

Tuesday, July 15, 2008

இமையங்கள்!

இமையங்கள்!



Saturday, July 12, 2008

பஸ் ஏற்றிவிட்டு வருகிறேன்டா!...

பஸ் ஏற்றிவிட்டு வருகிறேன்டா!..



ஏதோ படித்துவிட்டு, வேலை தேடிக்கொண்டிருந்த நாட்கள், எப்பொழுதும் நண்பர்கள் சேர்ந்து கூடி பேசிகொண்டேருப்போம். டீக்கடை, பாலம், ரோட்டோரம் எல்லா இடங்களிலும் அது ஒரு இனிமையான காலம். பேசுவதற்கு தலைப்பு வேண்டியதில்லை எல்லாம் பேசுவோம் வீட்டைப்பற்றி, நாட்டைப்பற்றி அப்படி இப்படி கடைசியில் பிகரில் முடிப்போம்.


என்றும்போல அன்றும் நண்பர்கள் பேசிகொண்டிருந்தோம், தூரத்தில் ஒரு பெண் (பிகர்) பட்டு சேலையில் அழகாக வந்துக்கொண்டிருந்தாள். எல்லொரும் பார்த்தோம் யார்? என்று தூரத்தின் காரணமாக தெரியவில்லை. எங்களின் ஒருவன் படுசுட்டி மிதிவண்டியை எடுத்து எதிரே முதலில் பார்க்க சென்றான். நாங்கள் அனைவரும் பார்த்துக்கொண்டேருந்தோம்... அவள் அருகில் சென்றான், பேசினான் பின் அவளையும் மிதிவண்டியில் ஏற்றி வந்துகொண்டிருந்தான். ஆஆ.. போனவுடனே மடக்கிட்டாண்டா!!!! நண்பரில் ஒருவன் சொல்லி கொண்டிருக்க அவனும் அவளுடன் வந்துவிட்டான். "டேய், எந்தங்கை காலேஜ் ஒரு விழாவிற்கு போகனுமா, நான் பஸ் எற்றிவிட்டு வந்துவிடுகிறேண்டா" என்று சொல்லியவாறு சென்றுவிட்டான். எங்கள் முகங்கள் சிறிது நேரத்தில் கறுத்துவிட்டது.......

Sunday, July 6, 2008

என் நண்பனின் பாட்டி சொன்னக்கதை!....



என் நண்பனின் பாட்டி சொன்னக்கதை!....

நண்பர்கள் இருவர் வெளியூர் சென்று கால்நடையாக வீடு திரும்புகின்றனர். இடைவெளியில் பெரிய காட்டுப்பகுதியை கடக்க வேண்டும், நேரமொ முன்னிரவை தாண்டிக்கொண்டுள்ளது. இருவரும் ஓய்வெடுத்து காலையில் செல்லலாம் என்று என்னுகின்றனர். எனவே அருகில் ஒரு பாழடைந்த கோவிலில் தங்கிசெல்ல முடிவெடுத்து செல்கின்றனர்.

நண்பர்களில் ஒருவன் கடவுள் பக்தியுள்ளவன், காலை மாலை தினமும் பூஜை செய்பவன், பெரியவர்களிடம் பனிவுடன் நடந்து கொள்வான் எல்லாம் கடவளின் கிருபையாகவே நினைப்பான். மற்றொருவன் தெளிந்த சிந்தனையும் பகுத்தறிவும் கொண்டவன். கடவுள் என்பது நம்மை ஏமாற்றும் வெலை, சோம்பேரிகளின் தனிப்பட்ட கொள்கை. "பசியும் சுண்டல் ருசியும் போனால் பக்தியில்லை பசனையில்லை" என்று அடிக்கடி சொல்வான். நேர்மையை விரும்புவான், எதையும் தெளிவுடன் சிறப்பாக செய்யக்கூடியவன்.

இருவரும் பாழடைந்த கோவிலை அடைந்தனர், சிறிய இடம் இருவரும் தங்க கொஞ்சம் கடினமாக இருந்தது. கடவுள் பக்தியுள்ளவன் கடவுளை வணங்கி ஒரு மூலையில் ஒரமாக சுருங்கி படுதுக்கொண்டான். மற்றொருவனோ கடவுளின் தலையில் காலை வைத்து நிம்மதியாக உறங்கினான். கோவம்முடைந்த கடவுள் பக்தியுள்ள நண்பனின் கனவில் தோன்றி, எந்தலையிலிருந்து உன் நண்பனை காலை எடுக்க சொல் என்று சொன்னது!>>>>>


Darvin_Lewis. மரபியல் தந்தை

Thursday, July 3, 2008

தமிழ் திரைப்படத்திற்க்கு பாடல் எந்தவகையில் தேவைப்படுகிறது...

தமிழ் திரைப்படத்திற்க்கு பாடல் எந்தவகையில் தேவைப்படுகிறது...


19ம் நூற்றாண்டில் லூமியெர சகோதரர்களால் நகரும்படம் கண்டுப்பிடிக்கப்பட்டது. 1897 ஆம் ஆண்டு சென்னை நகரில் "எட்வர்டு" என்ற ஆங்கிலெயரால் நகரும் படம் காட்டப்பட்டது, இவ்வகை நகரும் படம் பேச்சின்றி காட்டப்பட்டது.


1931 ம் ஆண்டுதான் முதல் தமிழ் பேசும் படம் காட்டப்பட்டது. இந்தப்படம் (குறத்திப்பாட்டும் டான்சூம்) வெறும் நான்கே அடிகல் கொண்ட குறும்படம். பிறகு முழுநீலப்படமாக "காளீதாஸ்" வெளிவந்தது . இதன்பிறகுதான் திரைப்படத்தின் வளர்ச்சி நவீனத் தொழில்நுட்பம் கொண்டதாக திரையிடப்படுகிறது.


ஆரம்பாகாலங்களில் இலக்கியநடையாக பேசப்பட்டு பாட்டும் முக்கிய பங்காக காட்டாப்பட்டது. பிறகு இரவல் குரல் கொடுக்கும் தொழில்நுட்பம் வந்தபின் மேலும் வண்ணப்பட வளர்ச்சியும் பாடலுக்கு மெருகேற்றி திரைப்படத்திற்க்கு பாடலின் அவசியத்தை ஏற்ப்படுத்தியது.


தற்போதய காலகட்டத்தில் இந்திய மொழி படங்களில் மட்டுமே பாடல்கள் இடம்பெறுகின்றது. ஐரோப்பிய, ஆங்கில படங்களில் பாடல்கள் அமைக்கப்படுவதில்லை. பாடல்கள் தனியாக வெளிவருகின்றது (ஆல்பம்) திரைப்படத்துடன் வருவதில்லை..


தமிழ் மொழிப்படங்கள் பாடல்களை திரைக்கதையுடன் தொடர்புள்ளவையாக அமைக்கப்படுகிறது. இவ்வகை பாடல்களைதான் ரசிகர்கள் விருப்புகின்றார்கள்.. தனியாக எடுக்கப்படும் (ஆல்பம்) பாடல் தொகுப்பு வெற்றிபெருவதில்லை, ஒரு சில மட்டும் வெற்றிபெருகின்றது. மேலும் பாடல்களினால் திரைப்படமும் சுவைக்கூடி வெற்றிபெறுகிறது. எனவே பாடல்கள் தமிழ்த்திரைப்படங்களில் முக்கியத்துவம் பெருகிறது

தமிழ்த்திரைப்படத்தில் பாடல்கள் எந்தவகையில் சிறப்பாக இருக்கின்றது என்று ஒரு சில பாடல் காட்சிகளை பார்ப்போம்........


இயக்குனர் மணிரெத்திணம் படம் என்றாலே பாடல் சிறப்பாகவும் நயம்படவும் எடுக்கப்பட்டுருக்கும். திருடா திருடா படத்தில் வீரப்பாண்டிக்கொட்டயிலே பாடல், அந்தப்பாடலில் ஒரு பெரிய கதையை சொல்லுமளவு எடுக்கப்பட்டுருக்கும்.........





கிராமத்து இயக்குனர் பாரதிராஜாவின் முதல்மரியாதை இசைஞானியால் இசையமைத்த பூங்காற்று திரும்புமா, பாடல் படத்துடன் கதை சொல்லிகொண்டுவரும்...........




சமிபத்தில் வெளியான பத்மஸ்ரீ கமலஹாசனின் தசாவதரம் படத்தில் கல்லை மட்டும் கண்டால்... என்ற பாடலில் ஒரு திரைக்காவியத்தை காணமுடியும்.....



இதைப்போன்று குனா திரைப்படதில் கண்மனி அன்பொடு என்ற பாடல் காதல் கதை சொல்லிகொண்டு வரும்,.....




ஆஸ்கர் விருதிற்க்கு பரிந்துரை செய்யப்பட்ட நாயகன் படத்தின் தென்பாண்டிசீமையிலே எனற பாடல் படத்தின்கூடவே உணர்வை தூண்டிகொண்டே வரும்...




கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒருதெய்வம் தந்த பூவே! என்ற பாடலின் மூலம் தாயின் அன்பையும் குழந்தையின் ஏக்கமும் காட்டி திரைப்படத்தின் கருவை தாங்கி வரும்,,....

இப்படி பாடல்கள் திரைப்படத்தோடும், திரைப்படத்தின் உணர்வோடும் வருவதால்.... நம்மால் எப்பொழுதும் ரசிக்கமுடிகிறது. எனவே பாடல்கள் திரைப்படத்திற்க்கு தேவையாக உணரப்படுகிறது. இப்படிப்பட்ட பாடல்கள் வளர்ச்சி பெருமேன்றி தவிர்க்கப்படாது,..........

ஓலைக்கால் சீலைக்கால்!......

ஓலைக்கால் சீலைக்கால்!......

எங்கள் ஊரில் மில்ரிமாமா என்று அனைவராலும் அழைக்கப்படுவார், எனக்கும் மிகவும் பிடிததவர். அவர் எப்பொழுதும் ராணுவ கதைகள் சொல்லுவார். 1971 இந்தியா பாகிஸ்தான் சண்டைப்பற்றி அடிக்கடி சொல்லுவார். எனக்கு புரியாத வயது இருப்பினும் புரிந்தது போல தலையாட்டுவேன். அவர் அந்த சண்டையில்தான் தனது வலது காலில் எதிரியின் துப்பாக்கி சுவைத்தால் கொஞ்சம் தாங்கி தாங்கி நடப்பார். பிறகு மருத்துவ அனுமதியில்லாததால் தொடர்ந்து ராணுவத்தில் வேலைச் செய்ய முடியாமல் ஓய்வுப்பெற்றவர்.



இந்தியா சுதந்திரத்திற்க்கு பிறகு நாட்டின் பாதுக்காப்பிற்க்காக திடமான ஆண்களை ராணுவராக்கினார்கள். அவர்களில் படித்தவர்கள் படிக்காதவர்கள் பணியில் அமர்த்தி பயிற்ச்சி கொடுத்து திறமையான ராணுவராக்கினர். ஆரம்பக்காலங்களில் பயிற்ச்சியின்பொது Left and Right பதிலாக ஒரு காலில் ஓலையும் மறுகாலில் சீலை துணியும் கட்டிவைத்து, பயிற்ச்சியின் போது நடக்கையில் "ஓலைக்கால் சீலைக்கால்" என்று சொல்லியவாறு பயிற்ச்சிக்கொடுக்கப்பட்டதாம். பிறகுப் படிப்படியாக "வலது இடது" என்றும் தற்ப்பொது "Left Right" என்றும் பயிற்ச்சி கொடுக்கப்படுகின்றது என்பார்....



நான் தற்போது நினைப்பது, ராணுவத்திற்க்காகவும் மற்றும் அதனையொத்த பயிற்ச்சிக்காகவும் கொடுக்கப்படும் கட்டளை வார்த்தைகள் நம் தமிழ் மொழியில் எவ்வாறு காணக்கிடைக்கிறது. பொதுவாக ஆங்கில மொழிதான் பயன்படுத்தப்படுகிறது. நம் வழக்கத்திலும் கட்டளை வார்த்தைகளை ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்துகின்றோம். அதிகாரபூர்வா கட்டளை சொல் ஆங்கில வழியாகதான் பயன்படுத்துகின்றொம். உதாரணமாக left right, stop, hands up , run fast, மெலும் ராணுவ அனைத்துக்கட்டளைகள்.



தமிழ் மொழியின் இனிமை கட்டளை வார்த்தைகளுக்கு ஒலியின் அடர்த்தி குறைவாகதான் இருக்கின்றது. அதே வார்த்தைகள் ஆங்கிலத்தில் ஒலியின் அடர்த்தி மிக அதிகமாக உணரப்படுவதும் உண்மைதான். அதனால் பயிற்ச்சிக்கு தேவையான வெகம் கிடைக்கிறது, மெலும் அவசரகாலங்களில் பயன்படும் வார்த்தையும் ஆங்கிலம்மாக இருக்கிறது ( உ.ம் stop, run, close it ) . இதுபொல தமிழில் கடிந்து பேசுதலும் இனிமையைதான் கொடுக்கிறது. இப்படி எல்லாவகையிலும் இனிமையை கொடுக்கும் தமிழ் சில இடங்களில் பயன்படுத்த முடியாமை எப்படி? இதற்க்கு தீர்வு காணலாமா? வேண்டாமா? தீர்வு இருக்கின்றதா? இல்லை தமிழின் இனிமை தொடரட்டுமா!!!......

Wednesday, July 2, 2008

திரைப்பட ஸ்டில் (Still)

திரைப்பட ஸ்டில் (Still)

திரைப்பட ஸ்டில் ஒரு படத்தின் வாசலாக இருக்கிறது. ஒரு சிலர் முகவாட்டம் ஸ்டில்க்கு அழகா இருக்கும் உதாரணமாக ரஜினி சார். ரஜினிசார் ஸ்டில்ஸ் அந்த படத்திற்கே ஏணிப்படியாக அமையும். சிவாஜி திரைப்படத்தின் ஸ்டில்ஸ் ரஜினியை இளமையாக காட்டியது. தற்ப்பொது வரவிற்க்கும் குசேலன் திரைப்பட ஸ்டில்ஸ் இன்று கலக்கிக்கொண்டுள்ளது




சிவாஜி பட ஸ்டில் ஒன்றை நான் ரசித்ததை போட்டோசாப் உதவியுடன் என் மகன் முகத்துடன் ஒப்பிட்டு பார்த்து ரசித்தேன்.
சும்மா ஒரு குறும்புக்காக



குசேலன் திரைப்பட ஸ்டில்ஸ் சில (நன்றி தினமலர்)

ரஜினியின் ஸ்டில் பொதுவாக ஸ்டில்க்காக படம் அமைக்கப்பட்டது பொல இருக்கும். படத்தின் மையம் கூருவது பொல பாலச்சந்தர் சார் படத்தில் ஸ்டில் வெளிப்படும். நாயகன், கன்னத்தில் முத்தமிட்டால், அன்பேசிவம், மறுபடியும் பொன்றதிரைப்படங்களின் ஸ்டில்ஸ் படத்தின் கதைக்கலமே கண்முன் காட்டிவிடும்.

ஒரு திரைப்படத்திற்க்கு ஸ்டில் வியாபர படிக்கல்.. திரைப்படம் பார்க்க தூண்டும் பூஸ்ட் கருவி. ஸ்டில்லையும் மிகநேர்த்தியாக நம் கலைஞர்கள் செய்கின்றார்கள்.



தற்ப்போது வெளிவந்த தசாவதாரம் திரைப்பட ஸ்டில் படத்தை பார்க்க துண்டும்படி கொடுக்கப்பட்டது. இப்பொழுது குசேலன் திரைப்ப்பட ஸ்டில்ஸ் ஆர்வத்தை தூண்டுகிறது..