_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, January 27, 2012

ஏன்? எதற்கு? எப்படி?....15

ஏன்? எதற்கு? எப்படி?....15

ஒரு பொருள் ஒரே இடத்தில் இருக்கின்றது என்றால் என்ன காரணமாக இருக்கலாம்? அந்த பொருளை வேறு நிலைக்கு மாற்ற என்ன தேவைப் படுகின்றது?


வணக்கங்க,.. நாம் நடக்கின்றோம், ஓடுகின்றோம், அதற்கு நம்முடைய கால்கள் தேவையாகின்றது. கால் மட்டும் இருந்தால் போதுமா? நாம் நடக்க, ஓட வேறு என்ன காரணிகள் தேவையாகின்றது. " அவனின்றி ஒரு அணுவும் அசையாது" என்பார்கள். ஆனால் ஆற்றல் இன்றி இங்கு ஒன்றுமே இல்லைங்க. அந்த ஆற்றல்தால் கடவுளாக சொல்லுகின்றார்களோ என்னவோ? இந்த அண்டம் என்பது ஆற்றலின் கூடாரம். நாம் அண்டத்தில் உள்ள எல்லா ஆற்றல்களையும் முழுமையாக பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. ஆற்றலை பற்றி முன்பே சொல்லியுள்ளோம். அதன் சுட்டி இதோ ஏன்? எதற்கு? எப்படி?..... 2

இப்போ! ஒரு பொருள் நிலையாக இருக்கின்றது என்றால் என்ன அர்த்தமாக இருக்கும்? அந்த பொருள் இடம் மாற வேண்டும் என்றால் அந்த பொருளுக்கு என்ன தேவையாகின்றது? அந்த பொருளை இடம் மாற்ற வேண்டும் என்றால் தள்ளுகின்றோம், இழுக்கின்றோம். அந்த தள்ளுதல், இழுத்தல் 'விசை'யின் அடிப்படையாக உள்ளது. ஒரு பொருள் இடம் மாற வேண்டும் என்றால் அந்த பொருளுக்கு விசை தேவையாகின்றது.

ஆமாம் விசை என்றால் என்ன? அதை காண முடியுமா? விசையை பார்க்கவோ, ருசிக்கவோ முடியாது. அதன் விளைவை மட்டுமோ உணரமுடியும். ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு உண்டாக்கும் விளைவைதான் காணமுடியும். அதன் மூலம்தான் விசையை விளக்க முடியும். அதேபோல ஒரு பொருள் நிலையாக இருக்கின்றது என்றால் அந்த பொருளின் மேல் எந்த புறவிசையும் தாக்காமல் இருக்கின்றது என்பது அர்த்தம். தொடர் இயக்க நிலையில் இருக்கும் பொருளும் நிலையான பொருள் என்றுதான் சொல்ல வேண்டும். இயக்க நிலையில் உள்ள பொருளை நிறுத்தவோ அல்லது திசை மாற்றவோ விசை தேவையாகின்றது. நிலையாக இருக்கும் பொருளில் எப்பொழுதுமே நிலையான உராய்வு விசை செயல்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த உராய்வு விசைக்கு சாமமான புறவிசை செயல்படும்பொழுது அந்த பொருள் நிலையாகவே இருக்கின்றது.

விசையை பற்றி கலிலியோ, நீயூட்டன் இருவரும் பல ஆய்வுகள் செய்து விசையை பற்றிய விதிகளும் சொல்லியுள்ளார்கள். ஒரு பொருளின் மீது விசை செயல் படாதவரை அந்த பொருள் மாறாத வேகத்தில் இயங்குவதாக கலிலியோ கூறியுள்ளார். நியூட்டன் தம் பங்கிற்கு விசையை பற்றி மூன்று விதிகளையும் கூறியுள்ளார். அதை நீயூட்டன் விதி என்று அழைக்கின்றோம்.

விசையை பற்றி ஓரளவிற்கு புறிந்துகொண்டோம்...... ஒரு சின்ன கேள்வி நாம் காரில் (மகிழுந்து) செல்கின்றோம், ஓட்டுனர் திடீர் என்று காரை நிறுத்தும் பொழுது நாம் ஏன் முன்னோக்கி சாய்கின்றோம்?

மேலும் ஏன்? எதற்கு? எப்படி?... தொடரும்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Monday, January 23, 2012

எல்லை தாண்டி......

எல்லை தாண்டி......


* எல்லை தாண்டி வந்ததாக கூறி, இந்திய மீனவர்கள் 31 பேர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டனர்
* படகு பழுதானதால் தவித்துக் கொண்டிருந்த ராமேசுரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு (இலங்கை கடற்படை அட்டூழியம்)
* ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் (வலைகளை அறுத்து மீன்களை அள்ளி சென்றனர்)

ஆதிமனிதன் பெண்ணிற்கு பின்னால் ஒரு குடும்பமாக, பின்னர் குழுக்களாக வாழத்தொடங்கினான். அந்த குழுக்கள் பெரும் குழுக்களாகவும் மாறியது. வலிமையுள்ளவர்கள் குழுவின் தலைவராக இருந்தனர். ஒவ்வொரு குழுவும் தாங்கள் வாழும் இடத்தை எல்லைகளாக வகுந்துக்கொண்டனர். எல்லை தாண்டி வேற்று குழுவினர் வந்தால் அங்கேதான் பிரச்சனை ஆரம்பமானது. எல்லை தாண்ட காரணிகளாக இருப்பது, உணவிற்காக அதற்கு மேல் மண்ணிற்கும் பெண்ணிற்கும்தான்.

இந்த எல்லை தாண்டிய பிரச்சனையின் தீர்வுதான் என்ன? இரு குழுக்களும் பேசி வகுத்த கட்டுப்படுகள்தான். அந்த கட்டுப்படுகளை மீறும் பொழுது பிரச்சனைகளும் உருவாகின்றது. சின்ன சின்ன குழுக்கள் இன்று கிரமமாக, நாடக, கண்டமாக உருவாகியுள்ளது. வலியவன் நாட்டாமையாகின்றான், மக்களே! மக்கள் தேர்தெடுத்து நாட்டை ஆழ அதிகாரம் கொடுக்கவும் செய்ய தொடங்கிவிட்டான்......

இப்படி இருக்கும் நிலையில் மேலே கண்ட செய்தி நம் சிந்தனையை தூண்டுகின்றது. எல்லை தாண்டிய பிரச்சனை தினம் ஒரு செய்தியாக இருக்கின்றது. நம் நாட்டு மீனவர்கள் தினம் தண்டிக்கப்படுகின்றார்கள். இதை நம் அரசு இன்னுமும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஏன்? நம் நாட்டின் எல்லையை கடந்து கள்ள நோட்டுகள் மூலம் பொருளாதரத்தையே நசுக்க பார்கின்றபொழுதும், இன்னும் நம் அரசு மெளனமாக இருக்கின்றது ஏன்?

மீனவர்கள் உண்மையில் எல்லையை கடந்துவிடுகின்றார்களா? நமது எல்லை காவல் படையினர் அதற்கான பாதுகாப்பு எச்சரிக்கை சொல்லவில்லையா?

நமது மீனவர்கள் எந்த காரணிகளால் எல்லையை கடக்க வாய்புள்ளது? அதை நமது அரசு சிந்தித்து அதற்கான விழிப்புணர்வையும், நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை?

மீனவர்கள் எல்லை தாண்ட பல காரணிகள் இருந்தாலும், 1. வழிதவறி செல்ல வாய்புள்ளது. 2. மீன்களை தேடி எல்லையும் தாண்ட வாய்புள்ளது. அரசு அதற்காக என்ன என்ன நடவடிக்கை எடுக்கலாம், எல்லையை அறிந்துக்கொள்ள அனைத்து மீனவர்களுக்கும் எல்லையை கண்டறியும் கருவிகள் வழங்கலாம். நமது மீன் வளத்தை பெருக்க விஞ்ஞான முறைப்படி நடவடிக்கைகள் எடுக்கலாம். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளணமாக இருப்பது நம்மை நாமே அடகு வைப்பதற்கு சமமாகும். நமது எல்லை காவல் படையை நவீனத்துவம் செய்யும் காலகட்டத்தில் இருக்கின்றோம். நம் மீனவர்கள் எல்லை கடப்பது நமது காவல் படைக்கு தெரியாமல் இருப்பது நம்முடைய பலவீனம்தான்...... இந்த பலவீனம் நாட்டின் பாதுகாப்புகே பிரச்சனைதான். உடனே இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பார்களாக!


--------------------------------------------@-------------------------------------------

"தமிழுக்கு அமிழ்தென்று பெயர்"

தமிழ் மழலையில் இன்னும் அழகாக இருக்கின்றது...

"கவிதை" எனற வார்த்தையில் எந்த ஒரு எழுத்தையும் நீக்கினாலும் ஒரு பொருளை கொடுக்கும்.... ( நண்பர்களிடம் அறிந்துக்கொண்டது)

விதை- விதை
விதை- கதை
கவிதை- கவி
கவிதை- தை
விதை- ( ஒன்றை குறிக்கும், பிரமன், அக்னி என்ற பொருளும் உண்டு)

டிஸ்கி : பாகிஸ்தானிலிருந்து எல்லைத்தாண்டி கள்ள நோட்டுகளை புழங்கவிட உடந்தையாக இருந்த இந்திய குடிமகனுக்கும் , அதிகாரிகளுக்கும் என்ன நடவடிக்கை எடுக்கலாம்?....... எடுக்கப்படும்?......