_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, October 20, 2011

ஏன்? எதற்கு? எப்படி?....14

ஏன்? எதற்கு? எப்படி?....14

வணக்கம் நண்பர்களே!.......
நீண்ட நாட்களாக ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி கேட்கபடாமலே போய்விட்டது. அதை தூசி தட்ட ஒரு வாய்ப்பு ஒரு நண்பர் வழங்கியுள்ளார். நேற்று ஒரு நண்பர் facebook ல் என்னுடைய தளத்தை படித்துவிட்டு மேலும் சில கேள்விகள் கேட்டிருந்தார். அதாவது உராய்வை பற்றி நான் எழுதியலிருந்து சந்தேகம் எழுந்ததாக சொல்லியுள்ளார்...
. அதன் சுட்டி ஏன்? எதற்கு? எப்படி?..... 4

அவர் கேட்ட கேள்வி. How to increase and decrease friction? அதாவது எப்படி உராய்வை அதிகப்படுத்துவது? மற்றும் குறைப்பது? இந்த கேள்விக்கு முன் உராய்வை பற்றி தெரிந்துக்கொள்ள சுட்டியை தட்டுங்கள் ஏன்? எதற்கு? எப்படி?..... 4 உராய்வு என்றால் என்ன என்பதை அறிந்துக்கொண்டோம். இரண்டு தளங்கள் அல்லது பரப்புகள் ஒன்றோடு ஒன்று உராயந்து நகரும் பொழுது உருவாகும் எதிர் விசைதான் "உராய்வு"(friction) என்று அழைக்கின்றோம். மேலே நண்பர் கேட்ட கேள்விக்கு முன் நாம் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது.... உராய்வினால் என்ன பயன்? உராய்வை ஏன் அதிகபடுத்த வேண்டும்? ஏன் குறைக்க வேண்டும்? அதன் பின் எப்படி குறைக்கலாம்?, அதிகப் படுத்தலாம்? என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

உராய்வு நடைபெறும் பொழுது இயக்காற்றல் வெப்பற்றலாக மாறுகின்றது. நாம் நடக்க, ஓட உராய்வு பயனாகின்றது. மேலும் எழுத, கார் ஓட்ட உராய்வு பயனாகின்றது...... இங்கே நாம் வேகமாக ஓட, நடக்க, எழுத, கார் ஓட்ட.... உராய்வு விசை தடையாக இருக்கின்றது. எனவேதான் மனிதன் சிந்தித்தான்... எப்படி உராய்வை குறைத்து வேகத்தை அதிகப்படுத்தலாம்? உராய்வு நடைபெறும் இடத்தில் உயவுநெய்கள், உயவு இளகிகள், மசகு,மசகெண்ணைகள் பயன்படுத்தினால்..... வேகம் அதிகமாகும் அதேபோல் தாங்கிகள் பயன்படுத்தும்பொழுது கார் மற்றும் எந்திரங்கள் வேகமும் அதிகப்படுத்த முடியும். இதிலிருந்து உராய்வை குறைக்க
உயவுநெய்கள், உயவு இளகிகள், மசகு,மசகெண்ணைகள்,தாங்கிகள் பயன்படுத்தபடுகின்றது.

அடுத்ததாக எப்படி உராய்வை அதிகப்படுத்தலாம்? அதிகபடுத்துவதால் என்ன பயன்? சொரசொரப்பான தளங்களை பயன் படுத்துவதின் மூலம் உராய்வை அதிகப்படுத்தலாம்.... உராய்வை அதிகப்படுத்துவதினால். ஓடும் வண்டியை நிறுத்தப்படுகின்றது. தீப்பெட்டியிருந்து தீக்குச்சியை உரசுவதினால் தீ உண்டாகின்றது.

மனிதனின் தேவைக்கெற்ப உராய்வை அதிகபடுத்தவோ! அல்லது குறைக்க செய்தோ! முழுமையாக பயன்படுத்துகின்றான்....


மேலும் கேள்விகளுடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்


Saturday, September 17, 2011

திருச்சியில் இன்று (16.09.2011) தீ விபத்து....

திருச்சியில் இன்று (16.09.2011) தீ விபத்து.....

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில்யுள்ள ஹோட்டல் சித்திரா கட்டிடத்தில் இன்று (16.09.2011) மாலை 4.30 மணி அளவில் நான்காவது மாடியில் தீ ஏற்பட்டு புகை வெளிவரத் தொடங்கியது.. அதனை தொடர்ந்து தீயணைப்பு மையத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மாலை 4.45 முதல் இரவு 7.50 வரை போராடி அணைத்தனர். தீக்காண காரணம் சரியாக தெரியவில்லை. ஆனால் கட்டத்தில் பழைய கட்டில் மற்றும் மெத்தைகள் இருந்ததால் தீ அணைப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. நான்காவது மாடி என்பதால் தீ அணைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அந்த அளவிற்கு வசதிகள் திருச்சி தீயணைப்பு மையத்தில் இல்லை என்றே தெரிகின்றது. இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி அணைத்தனர். அதில் ஒரு வீரர் 10 அடி பள்ளத்தில் விழுந்துவிட்டார், அவரின் சேவையின் காரணத்தாலும் தலை கவசம் அணிந்த காரணத்தாலும் அந்த விபத்திலிருந்து தப்பித்துக்கொண்டார்..... தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குடி நீர் வண்டிகளும் நீருக்காக பயன்படுத்தப்பட்டது.

தெரிந்துக்கொள்ள வேண்டியது.....
தீவிபத்தை தவிற்க முன்னேற்ப்படுகள் செய்யப்பட வேண்டும்..
தீயணைப்பு சிறு கருவிகள் பெரிய கட்டிடங்களில் பார்வையில் வைக்கப்பட வேண்டும்...
பெரிய கட்டிடங்களில் வாயில்கள் மற்றும் மாடிப்படிகள் வசதியாகவும் பார்வை படும்படியாகவும் இருக்க வேண்டும்...
தீயணைப்பு வண்டியுடன் மருத்துவ அம்புலன்ஸ்சும் வரவேண்டும்...
அவசர வழிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்....
மாடிக்கட்டிடங்களில் தீ வண்டி தண்ணீர் குழாய்கள் இணைக்க வசதியாக தண்ணீர் குழாய்கள் அமைத்தால் விபத்தை காப்பாற்ற வசதியாக இருக்கும்...

மேலும் புகைப்படங்கள் பார்வைக்காக..........
புகைப்படம் அணைத்தும் செல் போனில் எடுக்கப்பட்டது...

All Photos By
"Lighthouse photos"
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Thursday, September 8, 2011

வேண்டாம்! வேண்டாம்!.... சிதிக்க ஒரு துளி!

வேண்டாம்! வேண்டாம்!.... சிதிக்க ஒரு துளி!

நேற்று புது டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்து 11 பேர் பலி........ 76 பேர் படுகாயம். அதை பெருமையாக , "ஹர்கத் - அல் - ஜிகாதி இஸ்லாமி' என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

மேலும் நம் நாட்டில் நடந்த முக்கிய குண்டு வெடிப்புகள் (நன்றி தினமலர்)


93 மார்ச் 12: மும்பையில் 13 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 259 பேர் பலி, 713 பேர் காயம்.

1998 பிப்., 14: கோவையில் 11 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 200 பேர் காயம்.


1998 பிப்., 27: மும்பையின் விகார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலி.


2003 மார்ச் 13: மும்பையின் முலுந்த் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி, 65 பேர் காயம்.


ஆக., 25: "கேட்வே ஆப் இந்தியா' மற்றும் ஜாவேரி பஜாரில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 160 பேர் காயம்.


2005 அக்., : டில்லியின் மார்க்கெட் பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 62 பேர் பலி.


2006 மார்ச்: வாரணாசியில் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோவிலில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 20 பேர் பலி.


2006 ஜூலை 11: மும்பையின் புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 181 பேர் பலி, 890 பேர் காயம்.


2006 செப்., : மாலேகான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலி. 100 பேர் காயம்.


2007 பிப்., 19: பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 66 பயணிகள் பலி.


2007 ஆக., : ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர் பலி.


2008 மே 13: ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 68 பேர் பலி.


ஜூலை 25: பெங்களூரு குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.


ஜூலை 26: ஆமதாபாத்தில்

நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 57 பேர் பலி.

செப்., 13: டில்லியில் ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 26 பேர் பலி.


அக்., 21: மணிப்பூரில் போலீஸ் கமாண் டோ காம்ப்ளக்சில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலி.


நவ., 26: தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், சத்ரபதி ரயில்வே ஸ்டேஷன், காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலி.


2010 பிப்., 13: புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலி.


2011 ஜூலை 13: மும்பை ஓபரா ஹவுஸ், தாதர் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலி.


செப்., 7: டில்லி ஐகோர்ட் வாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி. 76 பேர் காயம்.


மக்கள் கருத்து: இப்படி பட்ட கோர சம்பவங்கள் கண்டிப்பாக கண்டிக்கக்கூடியது. அப்படி செய்த நாசகாரர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு பல கோடி செலவு செய்து பாதுகாக்கப்பட வேண்டும். அதே சமயம் அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் மனிதபிமான அடிப்படையில் செய்து தரவேண்டும். அப்பொழுதுதான் உலக நாடுகள் நம்மை பாராட்டும்.... அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை, மரண தண்டனை கண்டிப்பாக கொடுக்ககூடாது.... ஏனனில் "அவர்களால் மரணித்தவர்கள் அதிகம் இருக்க மேலும் எதற்கு மரணம்". இந்தியாவில் மரணதண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்... அந்த அதிகாரம் நாச வேலைக்காரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.......

வாழ்க ஜனநாயகம்!

வாழ்க பாரதம்!......என்ன? கொடுமை சரவணன் சார்!................


ஆ.ஞானசேகரன்

Monday, August 22, 2011

மண்டல அளவிளான கால்பந்து போட்டி(திருச்சி) ஒரு கண்ணோட்டம்...

மண்டல அளவிளான கால்பந்து போட்டி(திருச்சி) ஒரு கண்ணோட்டம்...

"ஒனறுபட்ட முயற்சி ஒப்பில்லா வெற்றி!" என்ற சொல்லழகிற்கு எற்றது போல திருச்சி மாவட்டம் துப்பாக்கித்தொழிற்சாலை நண்பர்கள் ஒன்றுப்பட்ட முயற்சியாக மணடல அளவிளான கால்பந்து போட்டி 2011 ஆகஸ்டு 18 முதல் 21 வரை மிக சிறப்பாக நடைபெற்றது. அதில் நேற்று (21.08.2011) நடைபெற்ற கடைசி நாள் இறுதி போட்டி ( JAMAL MOHAMED COLLEGE TRICHY ) ஜமால் முகமது கல்லூரி திருச்சி அணியும், (SPORTS HOSTEL TRICHY) விளையாட்டு விடுதி திருச்சி அணியும் மோதியது. அதற்கு முன் மூன்றாம் பரிசுக்காண போட்டி M.A.M. TIGER திருச்சி அணிக்கும், NATIONAL COLLEGE திருச்சி அணிக்கும் நடைபெற்று மூன்றாம் பரிசை M.A.M. TIGER திருச்சி அணி தட்டி சென்றது.
கடைசிநாள் பரிசளிப்பு விழாவிற்கு திருச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு பா.குமார் Bsc,. B.L., MP. அவர்களும் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு S.செந்தில் குமார் D.E.E.E., M.L.A. அவர்களும் மற்றும் கும்பகுடி திரு T. கோவிந்தராஜ் A.D.M.K. தலைவர் அவர்களும் விழாவை சிறப்பித்து பரிசுகளும் வழங்கினார்கள்.... விழா எதிர்பார்த்த அளவிற்கு மேல் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சியான விடயம். விழாவின்பொழுது "திரு பா.குமார் Bsc,. B.L., MP. அவர்கள் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு ஊக்கபடுத்தும் விதமாக எல்லா உதவிகளையும் கேளுங்கள் செய்ய நானும் இந்த அரசும் தயாராக இருக்கின்றது" என்று கூறினார்....போட்டியின் இறுதி ஆட்டம் ரசிகர்களின் ஆர்வத்திற்கு விருந்தாக இருந்தது. போட்டியின் பொழுது ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை கரகோசம் செய்து வெளிப்படுத்தினார்கள்... அதற்கு மேல் சிறப்பாக ஆடிய வீரார்களை உச்சாக படுத்தினார்கள். அதிகபடியான பாராட்டை திருச்சி விளையாட்டு விடுதி வீரர் பிரதாப் பெற்றார்,... மற்றும் பிரதாப் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்ய பெற்றார்.
முதல் பரிசுக்காண இறுதி ஆட்டத்தில் தன்னை எதிர்த்து விளையாடிய (SPORTS HOSTEL TRICHY) விளையாட்டு விடுதி திருச்சி அணிணரை 2:1 என்ற புள்ளி கணக்கில் ( JAMAL MOHAMED COLLEGE TRICHY ) ஜமால் முகமது கல்லூரி திருச்சி அணி வெற்றிப்பெற்றது.


இரண்டாம் பரிசை (SPORTS HOSTEL TRICHY) விளையாட்டு விடுதி திருச்சி அணி தட்டி சென்றது....


மூன்றாம் பரிசு M.A.M. TIGER திருச்சி அணி எடுத்து சென்றது...

விழா சிறப்பாக அமைந்தது ரசிகர்கள்தான் முதல் காரணம்..... இருப்பினும் விழா குழுவினரின் உழைப்பை யாராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.... மேலும் இது போன்ற கால் பந்து போட்டிகள் நடத்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்......

All Photos By
Lighthouse photo
Trichy-620026.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்


மேலும் இந்த நான்கு நாள் நடைபெற்ற விளையாட்டுகளின் சிறப்பான புகைப்படம் இன்னும் சில தினத்தில் கண்டதும் சுட்டதும் என்ற தளத்தில் காணலாம்