_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, August 29, 2008

வெற்றியின் ரகசியம் (பரமரகசியம்)

வெற்றியின் ரகசியம் (பரமரகசியம்)
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிக் காண்பதில்லை!
வெற்றிப் பெற்ற மனிதரெல்லாம் புத்திச்சாலியுமில்லை!....... (சந்திரபாபு)
எங்கள் ஊரில் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த சிறப்பு இப்பொழுது இல்லை என்பதும் வருத்தப்படவேண்டிய ஒன்று. பொங்கல் விழாவில் போட்டிகள் நடத்துவார்கள், போட்டிகளில் பங்கெடுப்பதும் பார்ப்பதும் தனி அலாதியான மகிழ்ச்சிதான்... இப்படிப்பட்ட போட்டிகளில் மிகமுக்கியமான போட்டி கபடி, மாட்டு வண்டி வேகப் பந்தயம் மற்றும் மிதிவண்டி வேகப்போட்டி.

மிதிவண்டி வேகப்போட்டியில் அதிகமான இளஞர்கள் கலந்துகொள்வார்கள். இந்த போட்டியில் இரண்டு மூன்று ஊரெல்லைகளை தொட்டு வரவேண்டியிருக்கும்.. இந்த போட்டியில் தொடர்ந்து மூன்று முறை ஒரு பெரியவர் வெற்றிப்பெற்றார். வேட்டியை கோவணமாக கட்டிக்கொண்டு தனது பழய மிதிவண்டியில் செல்லும் வேகமொ தனி புகழ்தான். ஒருமுறை அவரிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டேன், ... நான் வெற்றிப்பெறவேண்டும் என்று எண்ணத்துடன் கலந்துக்கொள்வதில்லை என்னுடைய பங்களிப்பை கொடுப்பதற்காகதான் கலந்துக்கொண்டேன். அதுபோல நான் செல்லும்போது வேகம் சீராக செல்லுவேன் பதட்டப்படமாட்டேன். எனக்கு முன் செல்லுவோரை பற்றி கவலைப்படாமல் அவரை முந்திசெல்ல முயற்சியும் செய்யமாட்டேன். எனக்கு பின் வருவோர் என்னை முந்தாமல் பார்த்துக்கொள்வதுடன்... என்னுடைய சீரான வேகம் குறையாமல் பார்த்துக்கொள்வேன். இதுவே என்னை வெற்றியடைய செய்கின்றது என்று கூறினார்..

ஆமங்க இந்த வெற்றியின் ரகசியம் போட்டிகளில் மட்டுமில்லைங்க, வாழ்கையில் வெற்றிப்பெறுவதற்கும் பொருத்தமாகதான் இருக்கும். இதுபோல என்னுடைய வெற்றியும் சிறப்புதானுங்க.. இந்த போட்டியில் வெற்றி எனக்கு மட்டுமே. என்னுடைய போட்டி ஒரு தனிக்கோடு இதில் போட்டி வைப்பவனும் போட்டியில் கலந்துக்கொள்பவனும் நானே! இங்கு வெற்றி பெறுவதும் நானே!.... போட்டி நேற்றைய நானுக்கும் இன்றைய நானுக்கும் நடக்கும், போட்டியில் வெற்றிப்பெறுவது இன்றைய நான். பின் இன்றைய நான் நாளைய நான்னுடன் போட்டியிட தயாராகும். இதில் வெற்றிப்பெறுவதும் நாளைய நானே!! எப்பொழுதும் வெற்றியின் மகழ்சியிலிருப்பதும் நானே!!!...

நீங்களும் உங்களுடன் போட்டியிட்டு வெற்றிப்பெற வாழ்த்துகளுடன் உங்களின் பிரியமான நான்...

விஜய்-ன் வில்லு

விஜய்-ன் வில்லு

குருவியின் தாக்குதலுக்கு பயந்த நடிகர் விஜய், பிரபுதேவா உதவியுடன் வில்லு டன் புறப்பட்டுள்ளார்...


Monday, August 25, 2008

சீனர்களின் நம்பிகையில்-என்பார்வை!

சீனர்களின் நம்பிகையில்-என்பார்வை!


மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்படும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. மக்கள் வளத்தை மட்டுமே நம்பி வளர்ந்து வரும் நாடு. இங்கு என்னுடன் இந்தியர், சீனர் மற்றும் மலாய் நண்பர்கள் வேலைசெய்து வருகின்றனர். சீனர்களிடம் கடவுள் நம்பிக்கையும் பிறவிப்பற்றிய பயமும் அதிகமாக இருக்கும்.சந்தர்ப்பசூல்நிலையில் சீனர்கள் யாரிடமும் சில்லாரை நாணயம் வாங்க நேர்ந்தால், அவற்றை மறுநாளே வாங்கியவரிகளிடம் கொடுத்து விடுவார்கள். 10 சென் நாணயமாக இருந்தாலும் சரி தாவறாமலும் மறவாமலும் கொடுப்பதை நான் பலமுறை பார்த்துள்ளேன். (இந்தியர்களிடம் இந்த போக்கு பொதுவாக இல்லை என்பது என் எண்ணம்) இந்த பழக்கம் மலாய் நண்பர்களிடம் இருப்பதையும் பார்த்துள்ளேன். அதுபோல் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நாம் உதவி செய்ய நேர்ந்தால்( உ-ம் காணாமல் போன பொருளை கண்டுபிடித்து கொடுத்தால்) அதற்காக குறைந்த பச்சம் தேனீர் வாங்கி கொடுப்பார்கள்.சீனர்கள் மறுப்பிறப்பில் நம்மிக்கையுள்ளவர்கள். ஆவி அதற்காக பூஜைகள் செய்யும் பழக்கமும் உண்டு. இந்தப் பிறவியில் நாம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் விட்டுவிட்டால், மறுபிறவில் அதன் வட்டியுடன் கொடுக்க வேண்டியதாக இருக்கும் என்ற நம்மிக்கையின் அடிப்படையில்தான் இப்பிறவில் உள்ள கடனை உடன் தீர்வு கொடுக்கின்றனர். மறுபிறவி என்பது இனிமையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. இந்த பிறவில் நாம் கொடுக்கவேண்டிய நிலையில் இருந்தால் அதற்கு காரணம் சென்றப்பிறவியின் கடனே என்பது அவர்களின் நம்பிக்கை.சூது என்பது சீனர்களின் பிறப்பில் தோன்றியது.. "சூதுயில்லா சீனன் இறப்புக்கு சமமானவன் என்பது பொருள்" என்ற எண்ணம் உள்ளது. தாய் மகன், தந்தை மகள், கணவன் மனைவி என்ற பாகுபாடுயின்றிதான் சூதாடுவார்கள்.. அதேபொல் தோற்றவர் முறைப்படி கொடுக்கவேண்டியதை கொடித்துவிடுவதும் சீனர்களின் பழக்கம்.... இதற்கும் மேற்சொன்ன காரணதான் இப்பழக்கத்தின் நம்பிக்ககை....

இவர்களின் நம்பிக்கை எதுவானாலும், வாங்கியதை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

ரஜினியின் "ப்ரியா" படத்தின் என்னுயிர் நீதானே என்ற பாடல்..
அக்கரைச் சீமை அழகினிலே என்றப் பாடல் கிடைக்கவில்லை

Friday, August 22, 2008

காசிக்கு போனாலும் சுட்டெரிக்கும் சொல்!...


காசிக்கு போனாலும் சுட்டெரிக்கும் சொல்!...

இந்தியாவின் தேசிய கவிஞராக புகழப்பட்டு வரும் ரவீந்திரநாத் தாகூர். இவர் வங்கமொழி கவிஞராவார். கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவி தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர்.

இந்த கவிஞர் கதை எழுதுவதிலும் வல்லமை பெற்றவர்.
ஒரு விதவை தாய் காசிக்கு சென்று கங்கையில் நீராடிவிட்டு கவலையெல்லாம் போக்கிகொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால் தன் பையனை பார்த்துக்கொள்ள ஆல்யில்லாதால் போகமுடியவில்லை. தன் வீட்டிற்கு அருகில்யுள்ள பெரியவரின் உதவியை நாடினாள்.. அந்த பெரியவரும் சரி என்று ஒப்புகொண்டார். ஆனால் பையனோ நானும் வருவேன் என்று ஆர்ப்பாட்டம் செய்தான்.. அந்த தாய் மிகவும் கோபம் கொண்டாள், அந்த பெரியவர் நாம் மூவருமே போகலாம் பையனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். அவளுக்கும் சரியென்றேப்பட்டது பையனை பெரிதும் கடிந்துக்கொண்டாள்.. வா! உன்னை கங்கையில் தலைமுழ்கிட்டு வந்துவிடுகிறேன் என்று பெரிதும் கடிந்தாள்.

மூவரும் புறப்பட்டனர், பொகும் வழியெல்லாம் பையனை கடிந்தவாரே சென்றாள். கடவுளை தரிசித்துவிட்டு கங்கையை கடந்து செல்ல படகில் சென்றனர்.. படகு பாதிதூரம் சென்றதும் கங்கை சீற்றம் கொண்டது எனவே படகு கவிழும் நிலை வந்தது. அப்பொழுது பெரியவர் சொன்னார் உன் வேண்டுதல் பாக்கியுள்ளது அதனால்தான் கங்கை கொபம் கொண்டுள்ளது என்றார். அந்த தாயோ நான் எல்லா வேண்டுதலையும் முடித்து விட்டேன் என்றாள். இல்லை நீ வரும்பொது உன்பையனை கங்கையில் தலைமுழ்கிட்டு வருவதாக சொன்னாய் ஆனால் செய்யவில்லை என்றார். நாம் இருவரும் கங்கையை கடக்கவேண்டும் என்றால் உன் பையனை கங்கையில் மூழ்கவேண்டும் என்றார். தாயும் ஆழ்ந்து யொசித்துவிட்டு பையனை கங்கையில் தள்ளிவிட்டாள். பின் அந்த பெரியவர் தன் வாக்கின்படி அந்தப் பையனை தான் பார்த்துக்கொள்ள முடியாமல் போனதால் தானும் கங்கையில் குதித்துவிட்டார்...

இப்படியாக கதையை சொல்லியிருப்பார்,.. நாம் சொல்லகூடிய வார்த்தை காற்றில் கலந்து துகள்களாக சம்மதம்பட்டவர்களிடம் சென்றடைகின்றது. இப்படி காற்றில் கலந்த வார்த்தைகள் மின்காந்த அலைகளாக அண்டத்தில் பரவலாக செயல்வடிவம் பெருவதற்காக காத்துக்கொண்டுள்ளதாகவும், வாய்ப்பு கிடைக்கும்போது செயல்வடிவம் பெருவதாகவும் சமயக்கொட்பாடும், மனொதியல் கோட்பாடும் கூறுகின்றது.

அனேக பெற்றொர்கள் தன் இயலாமையால் பிள்ளைகளை கடிந்து பேசிவிடுவார்கள். சிலர் சனியனே! என்றும், உனக்கு சாவு வராதா! என்றும், நீ உறுப்படவே மாட்டாய்! என்றும் பேசிவிடுவர்.... இப்படி பேசுவதனால் உங்களுக்கு என்ன நிம்மதியை தந்துவிடும், மாறாக மனம் உளைச்சலைத்தான் கொடுக்கும். மேற்சொன்ன கதை கர்ப்பனையாக இருந்தாலும் உங்களின் வார்த்தை உங்கள் நிம்மதியையும் பிள்ளைகளின் நிம்மதியையும் கெடுத்து அந்த வார்த்தை செயல்வடிவம் பெருவதும் உண்மைதான். வார்த்தையின் சுத்தம் வாழ்வில் இன்பந்தானே! இதன் அடிப்படையில்தான் வயதான பெரியோர்களிடம் நல்லவார்த்தை வாங்க வேண்டும் என்று சொல்வதும். என்ன கொடுமையோ தெரியாது சூழ்நிலைக் காரணமாக பலர் சாபமிடே சென்றுவிடுவர்..

இப்படிப்பட்ட கர்ப்பனையும் நம்பிக்கையும் வாழ்வில் நெறியை வழியுருத்துவதால் பெரியார் பொன்ற சமுதாய சிற்பிகள் குற்றம் கூறமாட்டார்கள் என்பதும் என் என்னமே! கடிந்து பேசுவது பெரியாருக்கும் உண்டு, சமுதாயத்தை சீரழிக்கும் சாதி சமய கர்ப்பனை புற்றை சாகடிக்கும் வேகம்தான் அது.....

கடிக்காக : எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள அம்மா எப்பொழுதும் காமடியாக பேசுவார்,... வழியில் செல்லும் மாணவர்களை எப்பொழுதும் கிண்டல் செய்வார்... அதேபொல் அன்று, ஏய் கோபி வா! என்ன நல்லா படிகிறீயா? ம்ம்ம்ம் என்று தலையசைத்தான். என்கே சானா சொல்லு அவன் சா என்பான். என்ன உனக்கு சாவே வராதா என்று கேட்ப்பார், ம்ம்ம்ம் வருமே என்பான் . அப்ப சாவு(இறப்பு) என்று கிண்டல் பன்னூவார்... அவன் சிரித்தவாரே சென்றுவிடுவான்..

அதி குளிர் சூழலில் கடவுளின் துகளைத் தேடும் பணி.இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறுகளிற்கான அடிப்படைக் கூறை (கடவுளின் துகளை) கண்டறிய என்று, பிரான்ஸ் - சுவிஸ் எல்லைகளூடு நிலத்தின் கீழே உருவாக்கப்பட்டுள்ள 27 கிலோமீற்றர்கள் பரிதியுடைய வட்டக் குழாய் வடிவ Large Hadron Collider இல் திரவ நிலைக் கீலியத்தையும் பல ஆயிரம் மின்காந்தங்களையும் பயன்படுத்தி ஆழமான விண்வெளியில் உணரப்படும் வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையை உருவாக்கி இருக்கின்றனர்.


இதில் உணரப்பட்ட வெப்பநிலை 1.9 கெல்வின் (K)(-271C; -456F) ஆக இருக்கிறது. விண்வெளியில் ஆழமான பகுதியில் வெப்பநிலை கிட்டத்தட்ட 2.7 கெல்வின் ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.


உலகிலேயே பிரமாண்டமான பெளதீகவியல் பரிசோதனைக் கூடமாக விளங்கும் இந்த Cern lab இல் அமைக்கப்பட்டுள்ள Large Hadron Collider (LHC) நடத்தப்படவிருக்கும் பரிசோதனையில், கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் எதிர் எதிர் திசைகளில் நேர் ஏற்றமுள்ள புரோத்திரன் (Proton)களை மோதவிட்டு அவை மோதிச் சிதறும் வேளையில் பிறக்கும் துகள்கள் பற்றி ஆராய இருக்கின்றனர்.


இத்துகள்களினை தன்மைகளை அடையாளம் கண்டுவிட்டால் பிரபஞ்சத்தில் சடப்பொருட்களை ஆக்கியுள்ள அணுக்கள் கொண்டுள்ள உப அணுத்துணிக்கைகளை ஆக்கியுள்ள பிரதான அடிப்படைக் கூறை அல்லது கூறுகளை இனங்காணலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இவற்றையே அவர்கள் கடவுளின் துகள் அல்லது துகள்கள் என்று கருதுகின்றனர்.


இதற்கிடையே இந்தப் பரிசோதனையால் செயற்கையான கறுப்போட்டை அல்லது கருந்துளை (Black hole) ஒன்று பூமியில் செயற்கையாக உருவாக்கப்படக் கூடிய சூழல் இருப்பதால் அது பூமிக்கு ஆபத்தாக அமையலாம் என்றும் சில விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.


எதுஎப்படியோ European Organization for Nuclear Research (CERN) அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த LHC ஆய்வு கூடம் தனது கடவுளின் துளைத் தேடும் பரிசோதனையை செய்ய ஆரம்பித்துக் கொள்ள இருக்கிறது என்பதையே மேற்குறிப்பிட்ட அதி குளிர் சூழல் உருவாக்கம் உணர்த்தி நிற்கிறது. இந்தப் பரிசோதனையின் போது மிகப் பெருமளவிலான சக்தி உருவாக்கப்படுவதோடு.. பெருமளவு வெப்பமும் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால்.. ஆழமான விண்வெளியில் உள்ளது போன்ற இந்த அதி குளிர் சூழல் என்பது இப்பரிசோதனைக்கு முக்கியமான ஒன்றாகும்

Wednesday, August 20, 2008

சங்கு சார்! சங்கு!சங்கு சார்! சங்கு!
சிரிக்க முடிந்தால் சிரிங்க!>>>>>>>

ஒரு தொழிற்ச்சாலையில் தொழிளார் இருவர் பேசி கொண்டுள்ளனர்,....
ஒருவர்: வீட்டுக்கு அவசரமா போகனும் சார், சங்கு ஊத நேரம் ஆச்சா?
மற்றொருவர்: பொறுமையா இருப்பா, சங்கு ஊதுன பிறகு போகலாம்...
போன பிறகு சங்கு ஊதுனா நல்லாயிருக்காது...
ஹி ஹி ஹி.......

Tuesday, August 19, 2008

ஒருத் துளி! ஒரு துகள்! சிந்திக்காமல் சிதையும் உடல்கள்...

ஒருத் துளி! ஒரு துகள்! சிந்திக்காமல் சிதைம் உடல்கள்...ஒருத் துளி! ஒருத் துகளில்!...
உருவான உலகே! உன்னை,..
ஒருத் துளி ஒரு அணுவால்
உறுமாற்றத் துடிக்கும் மனிதன்!...

எத்தனை யுத்தம் கண்டாய்,..
எத்தனை சீற்றம் கண்டாய்...
யுத்த மில்லா உலகை,.
நீ எங்கே? கண்டாய்......

எனக்கு தெரியும்,..
நீமட்டும் பொறுமை யிலந்தால்!...
மானுடம் மடிந் தல்லவா போகும்!
அகிலமே ஆடிதான் போகும்!...

மதி கெட்ட மனிதா!
உன் மனம் கெட்டாப் போனது!,..
ஆக்கம் பெற்ற அணுவை,
அனல்கக்க ஏன்? வெடித்தாய்..

வெடித்த துகள்!...
வெந்து தின்ற குழந்தைகள்...
சிதறிய துகள்!...
சிதைந்துபோன பெண்மனிகள்....

உலக யுத்தம் காண,..
இன்னுமா? துடிக்கிறது மனம்..
அணு யுத்தம் காண,... இந்த
அண்டமெ!!! இருக்குமா சொல்ல்ல்ல்ல்...


Monday, August 18, 2008

பர்வேஸ் முஷாரப்க்கு அழகான அந்த மூக்கு கண்ணாடி

பர்வேஸ் முஷாரப்க்கு அழகான அந்த மூக்கு கண்ணாடி
9 ஆண்டுகள் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பதவியை முன்னாள் ஐ.எஸ்.ஐ. தலைவர் அஷ்பாக் பர்வேஸ் கியானியிடம் அவர் ஒப்படைத்தார்.dinamalarஇஸ்லாமாபாத் : பாகிஸ்த‌ான் அதிபர் பர்வேஷ் முஷராப் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார். உலகமே மிகவும் எதிர்பார்த்த கொண்டிருந்த விஷயம் முஷராப் பதவி விலகுவாரா மாட்டாரா என்பது தான். இந்நிலையில் பாக்., அதிபர் முஷராப் அவரது செய்தி தொடர்பாளர் அறிவித்திருந்தது போல் சரியாக 1 மணி முதல் பாகிஸ்தான் தொலைகாட்சியில் பேட்டி அளித்தார்


பர்வேஸ் முஷாரப்க்கு அழகே அந்த மூக்கு கண்ணாடிதான். அவருக்கு எதிராக பிரச்சனைகள் வந்தபொதெல்லாம், அவரின் எடுப்பான தோற்றம் அவரை காப்பாற்றிவிடும். அந்த எடுப்புக்கு முக்கிய பங்கு அவர் அணிந்திருக்கும் மூக்கு கண்ணாடியும் ஒன்று.. இந்தியா அவரைப்பற்றிய குற்றச்சாற்றுகளை உலகநாடுகளுக்கு கூறும் போதெல்லாம் அவருடைய எடுப்பான தோற்றம் காப்பாற்றிக்கொண்டே வரும்.

அப்படி சிறப்புமிக்க அந்த மூக்கு கண்ணாடி இன்று கசிய தொடங்கிதாக தெரிகின்றது.. படத்தில் பாக்கவும்,.....

Sunday, August 17, 2008

மர்மயோகியின் முதல் ஸ்டில் (Marmayogi's First still)

மர்மயோகியின் முதல் ஸ்டில் (Marmayogi's First still)


கமலஹாசனின் மர்மயோகி திரைப்படத்தின் முதல் ஸ்டில் மின்னஞ்சலில் வந்தது, நம்மினால் நம்புங்கள்..

கீழேயுள்ள ஸ்டில்கள் தசவதாரம் படத்திற்காக கொடுக்கப்பட்டது. இந்த ஸ்டில்க்கும் படத்திற்கும் என்ன தொடர்போ அதுபொலதான் இதுவும் என்று நினைக்கின்றேன்........மற்றவை உங்கள் தீர்வுதான்

Saturday, August 16, 2008

இந்நிலை எப்பொழுதும் மாறும்!

இந்நிலை எப்பொழுதும் மாறும்!


தன்நாடு, அந்நாட்டு மக்கள், மனைவி பிள்ளைகள், செல்வங்கள் அனைத்தும் அன்னியரின் படையெடுப்பால் இழந்த மாபெரும் சக்கரவத்தி மனம்நொந்து காட்டில் சென்றுகொண்டிருந்தார். எதிரே வந்த முனிவர் ஒருவர் சக்கரவர்த்தியின் சோகநிலையறிந்து என்னவென்று விசாரித்தார். தான் அன்னியரின் படையெடுப்பால் தன் நாடு நாகரமனைத்தும் இழந்தேன், தற்பொது எனக்கென்றும் ஒன்றுமில்லை அனாதயாக இந்தக் காட்டில் சென்றுக்கொண்டுள்ளேன் என்று முனிவரிடம் சொன்னார். அதற்கு அந்த முனிவர் கவலைப் படாதே! நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்லித்தருகின்றேன், அதை நீ சொன்னால் இழந்த செல்வங்கள் அனைத்தையும் நீ அடைவாய் என்று, ஒரு ஓலையில் அந்த மந்திர சொல்லை தந்தார். இதை தனியாக நீ படித்து பார் என்று சொல்லிவிட்டு அந்த முனிவர் சென்றுவிட்டார்.

அதன்படி சக்கரவத்தி அந்த ஓலையை படித்தார் " இந்நிலை எப்பொழுதும் மாறும் " என்றார்.... அதேபொல் முனிவர் சொன்னதுபொல இழந்த அனைத்து செல்வங்கள், நாடும் கிடைத்தது.... மிகவும் முனிவருக்கு நன்றியை சொல்லி நல்லாட்சி செய்துக்கொண்டு வந்தான்.... ஒருநாள் அந்த ஓலை அவன் கண்ணில் பட்டது, உடன் எடுத்து மகிழ்வுடன் படித்தான் " இந்நிலை எப்பொழுதும் மாறும்" என்றான்..... மீண்டு எல்லாச் செல்வங்களையும் இழந்து காடுச்சென்றான்.....

வாழ்வியலில் இன்பம் துன்பம், மகிழ்ச்சி சோகம், ஏற்றம் இறக்கம் அனைத்தும் இவ்வுலகில் நிரந்தரமில்லை. இந்த நிலை எப்பொழுதும் மாறும் அல்லது மாற்றப்படலாம் ......

Friday, August 15, 2008

இந்திய சுதந்திரப் போராட்டத்தில்

webdunia.com

இந்தியா- சில தகவல்கள்
தனது அபார முன்னேற்றத்தால் உலக நாடுகள் அனைத்தையும் இன்று தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்தியா.

சுதந்திரம் அடைந்தபோது வறுமையிலும், உணவுப் பற்றாக்குறையிலும் தள்ளாடிய நம் பாரதம், படிப்படியாக முன்னேற்றம் கண்டு இன்று ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்று, மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

தன்னிடம் உள்ள மனித வளத்தை சரியான வகையில் பயன்படுத்தி, உலக அளவில் தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், விஞ்ஞானம் என்று தனது பங்களிப்பை விரிவுபடுத்திக் கொண்டே வருகிறது.

இத்தகைய நமது இந்தியாவைப் பற்றி மேலும் சில தகவல்கள் உங்களுக்காக..

* தமிழரின் பெருமையை உலக்கு பறைசாற்றும் உலகப்பொதுமறை திருக்குறளை இப்புவிக்கு தந்தது தனது மாண்பை உயர்த்திக் கொண்டது பாரதம்.

* அகிம்சையின் வலிமையை முதன்முதலில் உலகுக்கு உணர்த்தியதும் நம் நாடு தான.

* பூஜ்யத்தையும், எண் கணிதத்தையும் உலகுக்கு தந்தது இந்தியா தான். ஆர்யபட்டா தான் பூஜ்யத்தின் மதிப்பை கண்டுபிடித்தார்.

* கடந்த 10 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் வேறெந்த நாட்டையும் ஆக்கிரமிக்காது, அமைதி முறையை நாம் கடைபிடித்து வருகிறோம். ( ஆனால், பலரால் நாம் ஆக்கிரமிக்கப்பட்ட கதை வேறு!)

*உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு. எந்தவித நெருக்குதலும் இன்றி நமது தேர்தல் ஆணையும் சுதந்திரமாகச் செயல்பட்டு, மிகப்பெரும் தேர்தலை எவ்வித குழப்பமுமின்றி வெற்றிகரமாக நடத்தி ஜனநாயகத்தின் மாண்பை போற்றி வருகிறது.

* உலகின் அதிக அஞ்சல் நிலையங்கள் இந்தியாவில் தான் உள்ளன. மிகக் குறைந்த செலவில் நாட்டின் எந்தவொரு மூலையில் இருந்தும், மற்றொரு இடத்திற்கு கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன.

* நாடு சுதந்திரம் பெற்றபோது 22653 அஞ்சல் நிலையங்கள் இருந்தன. 2000 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,53,454 அஞ்சல் நிலையங்கள் உள்ளன.

* உலகிலேயே இரண்டாவதாக மிக அதிகமான பணியாளர்கள், நீண்ட ரயில் போக்குவரத்து, அதிக பயணிகள் என்று, நமது ரயில்வே துறை பெரியதொரு நிர்வாக அமைப்பாக இயங்கி வருகிறது.

Thursday, August 14, 2008

ரஜினியின் சுதந்திரதின அறிக்கையும்!... கமலின் சொதப்பலும்!..

ரஜினியின் சுதந்திரதின அறிக்கையும்!... கமலின் சொதப்பலும்!.


நாளை ஆகஸ்டு 15.
62ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமெல்லாம் மகிச்சியுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டுள்ளொம்..

தினமலர் சென்னை நகரைச் சுற்றி போலீஸ் குவிப்பு * முதல்வருக்கு குண்டு துளைக்காத ஜீப் தயார்........
தினமலர்

தினத்தந்தி தீவிரவாதிகளின் மிரட்டலை சமாளிக்க அதிரடி நடவடிக்கை நாளை நடைபெறும் சுதந்திரதின விழாவுக்கு வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு சென்னை கோட்டையில், கருணாநிதி கொடி ஏற்றுகிறார்.
தினத்தந்தி


Thats Tamil சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு.....
தட்ஸ் தமிழ்

இப்படி சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இப்படிப்பட்ட விழாவிற்கு ரஜினியின் அறிக்கையும், கமலின் சொதப்பலையும் விமர்சிக்க தயாராக இருக்கின்றோம்...

இந்திய நாட்டின் சுதந்திர தினம் பாலத்த பாதுகாப்புடன் முற்றிலும் சுதந்திரமாக கொண்டாடப்படுகின்றது... நாமெல்லாம் தொலைகாட்சி பெட்டியில் சிறப்பு பட்டிமன்றம் ( தலைப்பு: நமிதாவிற்கு சேலை அழகா? சுடிதார் அழகா? ) பார்த்து விடுமுறை மகிழ்சியுடன் இருப்போம்... அதன் பிறகு புதிய நடிகையின் சிறப்பு பேட்டி ( திரைப்பட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டு வாழ்த்துகளை கூறுவார்). மற்றும் திரைக்கு வந்த சிலநாட்களேயான நாய்க்கு கல்யாணம் திரையிடப்படும்....


பின் குறிப்பு: பதிவர்களுக்கு வேண்டுகோள் நாளை திரைப்படம் தவிர்த்து விடுதலை போராட்ட சிறப்பு பதிவாக வரவேண்டுமாய் உறுதியளிப்போம்....

பிடிக்காத ரோஜாபூ!.....

பிடிக்காத ரோஜாபூ!.....
நண்பர் கோவி.கண்ணன் நேற்றைய பதிவில் ரோஜா பற்றியது
சுட்டிப்பார்க்க . ரொஜா என்பதும் என்நினைவில் எப்பொழுதும் வந்து போகும் நிகழ்வு

திருச்சியில்யுள்ள ஒரு நல்ல தொழிச்சாலையில் வேலை செய்யும் காலத்தில், தினமும் காலையில் நான் வேலைச் செய்யுமிடத்தில் பூச்சாடியில் பூக்கள் வைப்பது வழக்கம். அன்று என்வீட்டுத் தோட்டத்தில் பெரியதான ரோஜா இருந்தது. அதை பறித்து எடுத்துக்கொண்டு வழக்கம்போல பூச்சாடியில் வைத்தேன். என்னுடன் வேலைச் செய்யும் என் பிரியமான நண்பன் வந்து ரோஜா வைத்தது எனக்கு பிடிக்கவில்லை என்றார், ஏன் என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். ( என் நண்பன் சிறுவயதில் தாயில்லாமல் தந்தையின் அன்பில் வளர்ந்தவன், காலம் அவனை வஞ்சித்து தந்தையும் இழக்க நேர்ந்தது.) அவன் சொன்னான் என் தந்தைதான் எனக்கு உயிர் அவர் மறைவு என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கதறி கதறி அழுதேன். என்தந்தையை மாலையணிவித்து முற்றத்தில் வைத்திருந்தனர். எல்லோரும் சோகத்தில் என்னையே பார்த்தவண்ணம் இருந்தனர், நான் என் அப்பாவை கட்டிப்பிடித்து போகாதேப்பா! போகாதேப்பா! என்று அழுதேன். அப்பொழுது என்அப்பாவின் அலங்கரித்த ரோஜாமாலை என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.. அந்த ரோஜாவின் வாசனை என்னை அடிப்பது பொலவும் இருந்தது. என் அப்பாவையிழந்த அந்த நாளிருந்து என்னைப்பார்த்து சிரித்த ரோஜாவை பிடிப்பதில்லை, ரோஜாவின் வாசனை வந்தாலே அப்பாவின் நினைவு என் இதயத்தை கனக்க வைத்து விடும். என்று கண்ணில் நீர்கசிய சொன்னதும் என்னால் அன்று வேலைச்செய்ய முடியவில்லை. அன்றிலிருந்து ரோஜா பூவை நான் அங்கு வைப்பதில்லை. அன்பின் சின்னம் ரோஜாவை சூல்நிலைக் காரணமாக என் நண்பனுக்கு பிடிக்காமல் போனது ரோஜாவின் குற்றமா? காலத்தின் குற்றமா?

Tuesday, August 12, 2008

பாட்டுதன் காதிலே தேனைவார்க்க! ஆட்டமும் கண்ணிலே நீரைவார்க்க!....ஷ்ருதிஹாசன்

பாட்டுதன் காதிலே தேனைவார்க்க! ஆட்டமும் கண்ணிலே நீரைவார்க்க!.... ஷ்ருதிஹாசன்
Monday, August 11, 2008

நாடு! அதை நாடு!......

நாடு! அதை நாடு!......
உலகின் பல்வேறு நாடுகளை அந்நாட்டின் செல்வங்களை தன்வசப்படுத்தி எடுத்து செல்லும் நோக்கதுடன் போரிட்டு அந்நாடு மக்களை அடிமைகளாக்கி ஆண்டு வந்தனர். ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஜப்பானியர்கள் என்று அவாரவர் பங்குக்கு பலநாடுகளை கட்டுப்படுத்தி வந்தனர். காலப்பொக்கில் பொராட்டங்கள் அதிகமாகி அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் நாடுகளை அவர்களுக்கே விட்டு சென்றனர். அந்த நாளை தேசிய தினமாக கொண்டாடப்படுகின்றது.
இந்தியாவின் சுதந்திர நாள் ஆகஸ்டு-15 1947
சிங்கபூரின் தேசிய நாள் ஆகஸ்டு-9 1965
மலேசியாவின் தேசிய நாள் ஆகஸ்டு-31 1957
இந்தொனேசியாவின் தேசிய நாள் ஆகஸ்டு-17 1945

நம் தேசிய தலைவர்களின் போராட்டங்களின் விளைவாகதான் இந்த சுதந்திர காற்று சுவாசிக்கப்படுகின்றது. அவர்கள் சிந்திய குருதியால் தான் இந்த சுதந்திர காற்று சுவாசிக்கமுடிகின்றது. அப்படிப்பட்ட தியாகிகளின் தினம்தான் இந்த தேசிய தினம்.

1970 வதுகளில் இந்திய தேசியதின கொண்டாட்டங்கள் பள்ளிகளில் அந்த ஒரு மாதம்(ஆகஸ்ட்) சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியில் அனைத்து மாணவர்களும் ஊர்வலமாக எல்லா வீதிகளுக்கும் செல்வோம். "மகாத்மா காந்திக்கு ஜே! இந்தியா வாழ்க! வளமான இந்தியாவை உருவாக்குவோம்! என்ற கோசங்கள் சொல்லியவண்ணம் சென்ற நினைவு இன்னும் இருக்கின்றது.. அந்த உண்ர்வுள்ள கொண்டாட்டங்கள் இன்று காண முடியாதது வருத்தப்படதான் முடிகிறது.. இன்றைய சுதந்திர தினம் டீவி சேனல்களின் பட்டிமன்றம், நடிகையின் பேட்டி, திரைக்கு வந்த சிலநாட்களேயான திரைப்படம் என்று முடிந்து விடுகின்றது.

கமலஹாசன் ரஜினியை அறிந்த நம்பிள்ளைகளுக்கு மகாத்மா காந்தியவொ! ஜவர்கலால் நேருவைவோ தெரியவில்லை...
விஜ்ய் அஜித்தை தெரிந்த நம்பிள்ளைகளுக்கு சுபாஸ் சந்திரபொஸொ, கோபாலகிருஷ்ண கொக்கிலேவொ தெரியவில்லை ..
சிரெயா அசின் தெரிந்த அளவிற்க்கு நம்பிள்ளைகளுக்கு ஜான்சி ராணியை தெரியவில்லை..

"அதிருதுல்ல'' என்று சொல்லும் பிள்ளையை பார்த்து மகிழ்ந்த நம்மால் இந்திய வரலாற்றை சொல்லித்தர மறந்துவிட்டொம்.

முன்பெல்லாம் பள்ளி ஆண்டு விழாக்களில் பாரதியார் தேசியப்பாடல்களும், பகஸ்திங் நாடகங்களும் இருக்கும். இன்று குத்துப்பாட்டும் கும்மாளமும்தான்,...

குருதிசிந்தி அடைந்த இந்த சுதந்திரத்தை நம்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கும் வாய்ப்பாக இந்த வருட தேசிய தினத்தை கொண்டாட உறுதிக்கொள்வோம்..

இந்திய தேசிய தின அணிவகுப்பு புகைப்படம்...
சிங்கபூர் 2008 தேசிய தினம் கொண்டாட்ட களம் புகைப்படம் மற்றும் அணிவகுப்பு புகைப்படம்...


இந்தோனேசியா தேசிய தின அணிவகுப்பு பள்ளி மாணவர்களின் முன்னேற்பாடு புகைப்படம்......

மலேசியாவின் தேசிய தின அணிவகுப்பு புகைப்படம்...

Friday, August 8, 2008

நல்ல முதலீட்டை வீனடிக்காதீர்!.....

நல்ல முதலீட்டை வீனடிக்காதீர்!.....
அனைவரும் இவரை பிள்ளைக்குட்டிகாரன் என்று அழைப்பார்கள். அப்படி அழைப்பதும் பொருத்தமாகதான் இருக்கும். இவர் வீட்டுப்பக்கம் சென்றால் நஞ்சானும் குன்சானுமாக பிள்ளைகள் அப்படி இப்படி விளையாடிக்கொண்டு இருப்பார்கள்... உண்மைதான் இவருக்கு பத்து பிள்ளைகள் ஒன்பது ஆண் பிள்ளை மற்றும் ஒரு பெண் பிள்ளை. நல்ல வசதியான குடும்பம் என்று சொல்ல முடியாது, விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.. பலசமயங்களில் சாப்பாட்டுக்கே கடினமான நிலையும் வருவதுமுண்டு. எப்படியோ எல்லா பிள்ளைகலும் வளர்ந்துவிட்டது. ( மரம் வைத்தவன் தண்ணிர் ஊற்றி விட்டான் -பி.கு அவன் கஷ்டம் அவனுக்குதான் தெரியும்)
பெரிய பையன் முதலில் ஒரு தொழிச்சலைக்கு கூலி வேலைக்கு சென்றான். குடும்பதில் ஒரளவிற்க்கு கஷ்டங்களை சமாளிக்கப்பட்டது, பிறகு அவனது திறமையால் தனியாக வேலை எடுத்து செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டான். தன் தம்பிகளையும் அங்கு வேலைக்கு அமர்த்தினான். பணம் குடும்பத்திற்கு வந்தவண்ணம் இருந்தது, மிக செழிப்பாக வாழ்ந்தனர். திருவிழா பண்டிகை சமயங்களில் அந்தக்குடுப்பத்தில் குதுகலம் மற்றவர் கண்படும்..

பெரியவன் திருமணத்திற்கு பிறகு, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக எல்லொரும் தனித்தனியாக பிரிந்தனர். அத்தோடு குடும்ப செல்வாக்கும் செழிப்பும் அழிந்தது, அல்லது அழிக்கப்பட்டது... இப்படியாக குடும்ப ஒற்றுமையின்மையின் விளைவையும் காணமுடிந்தது.

ஒரு நாட்டின் முக்கிய சொத்து அந்நாட்டின் பிள்ளைகள். இப்பிள்ளைகள் முறைப்படுத்தாமல் முதலீடு செய்யப்படுமானால் அப்படிப்பட்ட முதலீடு வறுமைதான் கொடுக்கும். ஒரு நாட்டின் வறுமை அந்நாட்டின் மக்கள் தொகை ஒரு காரணாமே இல்லை என்பது என் எண்ணம். ஒரு பிள்ளை வளர்ந்து தன் கைக் கால்களை இந்நாட்டை வாழப்படுத்த பயன் படுத்தப்படுகின்றது. இந்நாட்டை பாதுக்காக்க எல்லையில் துப்பாக்கியேந்துகின்றது.. இப்படிப்பட்ட வளம் இப்பிள்ளைகலால் கொடுக்க முடியும். இந்தியா வளமிக்க இளஞர்கள் வாழும் நாடு, இந்நாட்டின் வளம் இவர்கள் கையில்தான்யுள்ளது.. மக்கள் தொகை ஒருநாட்டின் சிறந்த முதலீடுதான். மக்கள்தொகையின் பாதிப்பை சமநிலைப்படுத்த மக்கள் நெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமேயோழிய மக்கள் தொகையை காரணம் சொல்ல முடியாது.

கிராமங்கள் அதிகமாகயுள்ள இந்தியாவில் கிராமங்களிலிருந்து பிழைப்புக்காக நகரங்கள் நோக்கி மக்கள் சென்றவண்ணம் இருப்பது, சமமான இந்திய வளர்ச்சியை பாதிக்கும் என்பது உண்மையே!. கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத நிலை அரசுதான் பொருப்பாக வேண்டும்.

தமிழ்நாட்டில் நகரங்களின் மக்கள் நெருக்கம் அதிகமாகயுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரம் "சென்னை" மாநிலத்தின் வடதுருவத்தில்யுள்ளது.

முக்கிய அலுவலகம் இந்நகரத்தை சார்ந்தேயுள்ளது. எந்த ஒரு வளர்ச்சியும் தென்மாவட்டகளடைய காலதாமதமாகின்றது. மாநிலத்தின் மையப்பகுதியில் முக்கிய அலுவாலகங்கள் மாற்றப்பட்டால், மக்கள் நெருக்கத்தை குறைக்கமுடியும் அதே வேலையில் எல்லாமக்களுக்கும் வளர்ச்சிப் பணிகள் சென்றடைய வசதியும் கிடைக்கப்படும்........ மறைந்த முதல்வர் டாக்டர் எம். ஜீ.ராமச்சந்திரன் கனவுகளின் ஒன்று திருச்சிராப்பள்ளிக்கு தலைநகரத்தை மாற்றுதல்,... மருத்துவ கல்லூரி, தொழிநுட்பக் கல்லூரி, விவசாய கல்லூரி மூன்றும் ஒரேயிடத்தில் திருச்சிராப்பள்ளியில் அமைப்பது... அரசியல் காரணமாக செயல்படுத்த முடியாமலே பொனதும் வருந்தக்கூடியது.
நாட்டின் செல்வத்தை சரியான முறையில் பயன்படுத்தாமல் பொகுமேயானால், மெல்ல மெல்ல வறுமையை வாங்கவேண்டி வரும் என்பதும் உண்மை..........
பின்குறிப்பு: எத்தனை சட்டங்கள் இருந்தும் குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு மற்றும் சீர்திருத்தமும் நடைமுறைச் செயல்பாடுகள் குறைகளாகவே இருக்கின்றது........

Wednesday, August 6, 2008

நீ! ஒரு நாயகன்...

நீ! ஒரு நாயகன்...

மக்கள் மத்தியில் தலைவராக இருப்பவர்கள் பலர், ஆனால் அவர் அந்த தலமைக்கு தகுதியானவரா, பொருத்தம் கொண்டவாரா என்று அவர்கள் நினைத்து பார்ப்பதில்லை.

அதிலும் சினிமா துறையில் புகழ்பெற்றவர்களை தலைவர் என்று சொல்வதும், கடவுள் என்றே நினைப்பதும் வாடிக்கையான வேடிக்கை... இவரை விட்டால் வேறுரொவரை உலகில் பார்க்க முடியாது என்பதுபொல நினைப்பவர்களை பார்க்கும்பொது சிரிப்பு சிரிப்பாதான் வரும்..

இப்படிப்பட்ட தலைவர்கள் தன்னை அதற்கு, அந்த பொறுப்பிற்கு தகுதியாக்கிக் கொள்கின்றார்களா? என்றால் இல்லையென்றே சொல்லலாம். இப்படிப்பட்டவர்கள் மத்தியில் முற்றிலும் மாறுபட்டவராக, மக்களின் தொண்டனாக, புரட்சி தலைவனாக, ஏழைகளின் தோழனாக தொன்றியவர்தான் புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன்.

இவர்மேல் பைத்தியமாக அன்புகொண்டவர்கள் ஏராளம் ஏராளம்.. இவர் புகைப்படத்தை திருமணம் செய்துக் கொண்டவர்கள் கூட உண்டு . இவருக்காக உயிர் விடுவார்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்... இவற்றை பார்த்த எனக்கு இவர்மேல் வெறுப்பும், கொபமும் வருவதுண்டு.. காலபொக்கில் இந்த தலைவன் இவர்களுக்காக என்ன செய்கின்றான் என்று காணும்பொழுது நானும் ரசிகனானேன் என்பதில் ஆச்சரியமில்லை.... இதை சொல்வதற்கு வெட்கபடவில்லை.

இயக்குனர் மணிரெத்தினம் இயக்கத்தில் வந்த நாயகன் படத்தை பார்க்கும்போது, எனக்குள் தோன்றிய எண்ணம் MGR ன் பாதைதான் நினைவுக்கு வந்தது. நாழுபேருக்கு நல்லது செய்யானும்னா! எதுவேனாலும் செய்யாலாம்.. எதற்காக? எப்படி செய்யப்படுகிறது? என்பதுதான் நீ! ஒரு நாயகன்.

மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாக இலங்கையில் பிறந்து அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் கும்பகோணத்தில் வாழ்ந்து வந்தார். குடும்பச் சூல்நிலையின் காரணமாக தனது படிப்பை மூன்றாம் வகுப்பிலே நிறுத்திவிட்ட இவர் அண்ணனுடன் நாடகத்தில் சேர்ந்தார். பிறகு இவரில் அயராத உழைப்பால் திரைபடதுரையில் 1936ல் சதிலீலாவதி படத்தின் மூலம் அறிமுகமாகி 1978 வரை மதுரைமீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் கொடிக்கட்டி பறந்தார்.

இவர் ஒரு மலையாளியாக இருந்தும் தமிழ் தேசியத்தில் இணைந்தவராகவும், திராவிட முன்னேற்ற கழக முக்கிய உறுப்பினராகவும், அக்கட்சியின் பொருளராகவும் நீண்டகாலம் பணியாற்றினார். அறிஞர் அண்ணாவின் மறைவிற்க்கு பின் டாகடர் கலைஞர் முதலமைச்சரானார்., அதன் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக MGR தனிக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1972ல் ஆரம்பித்து அதில் பெருவாரியாக வெற்றியும் பெற்று 1977ல் முதலமைச்சரானார். 1984ல் இவர் கடுமையான நோய்வாய் பட்டும் 1987 வரை சாகும்வரை முதலமைச்சராய் 10 ஆண்டுகள் இருந்தார். இவர் மறைவிற்குபின் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது.


இவர் சிறுவயது முதல் இவர் குடும்பம் சாப்பாட்டுக்கே இல்லாமல் வறுமையில் வாடியது. இவர் வாழ்க்கையில் துண்பங்கள் எண்ணில்லடங்காதது. இதன் காரணமாக இவர் வாழ்நாளெல்லாம் ஏழைகளின் தொண்டனாகவே வாழ்ந்தார். இவர் முதலமைச்சராக உள்ள காலத்தில் ஏழ்மையை கருத்தில் கொண்டே திட்டங்கள் தீட்டினார். சத்துணவு திட்டம் இவரின் கனவு திட்டமாக இருந்தது. சத்துணவுக்காண நிதியில்லா நிலையிலும் அரசு ஆடம்பரங்களை குறைத்துக்கொண்டு தொடர்ந்து நடத்தினார்.

திட்டங்களை தீட்டுவதுடன் நின்றுவிடாமல், திட்டம் செயல்படுத்துவதில் வல்லமையுள்ளவர். தன்னுடன் பணிபுரியும் அதிகாரியுடன் மரியாதையாகவும், கண்டிப்பும் கொண்டவர்.

மூன்றாம் வகுப்பு வறை படித்தாலும், தனிதிறமையால் தமிழும் ஆங்கிலமும் வல்லமை பெற்று காணப்பட்டவர்.

இவர் காவல்த்துறை தன் பொறுப்பில் வைத்திருந்தார். காவல் துறையினர் முறைகேடாக பயன்படுத்தி வந்த சந்தேகதுடன் கைது செய்தல் விலக்கிக்கொள்ளப்பட்டது. மிதிவண்டியில் இருவர் செல்வதை அனுமதிக்கப்பட்டது.

இவர் காலத்திட்டங்களில் எனக்கு மிகவும் பிடித்தது கிராமந்தோரும் பேருந்து வசதி கொடுக்கப்பட்டது. குடிசைகளூக்கு இலவச ஒரு மின்விளக்கு திட்டம் வழங்கியது. இது அந்த சூழ்நிலையில் தெவையான திட்டமாக நான் கருதுகின்றேன். இந்த திட்டங்களின் செயல்பாடும், விரைவு தன்மையும் இன்றுவரை நான் பார்க்கவில்லை. இன்னும் இந்ததிட்டங்கள் செயல்வடிவில் இருக்கின்றது என்பதும் இதன் தனிசிறப்பு.

தீண்டாமை கொடுமைக்கு சட்டம் கடிமையாக்கப்பட்டது. தாழ்த்தபட்ட பிரிவினர்களுக்கு வசதி மேன்படுத்துதல். அரிசியின் விலை கட்டுப்படுத்துதல், மேலும் அரிசியின் விலை எல்லா மாவட்டங்களுக்கும் நிலைப்படுத்துதல். மாவட்டதொரும் உள்ள அரிசி நெல் தடுப்பு சாவுடிகளை நிக்கி சமநிலை படுத்தப்பட்டது.. இதனால் சிலப்பகுதி மட்டும் பஞ்சம் என்ற நிலை மாறியது. இப்படி ஏழைப்பங்காளியாக இவர் செயல்ப்பட்டார் என்று சொல்லிக்கொண்டே பொகலாம்..

"நான் முதல் மந்திரியாக இருந்தாலும் மக்கள் சேவகன். மக்கள் வாழ்வே என் வாழ்வு" இது எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக ஆன பிறகு, அவர் சொன்ன வார்த்தைகளும், எண்ணமும் இது தான்.

அதிகாரிகளிடமும், பத்திரிகை நிருபரிடமும் பாசதுடன் பழகுவார். எல்லோரையும் சார் சார் என்று அழைப்பார்.. தனகுண்டான மனகுறை வெளிகாட்டமாட்டார், எப்பொழுதும் புன்சிரிப்புடன் காணப்பட்ட பொன்மனச்செம்மல் டாக்டர் MGR. இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக கொள்கையுள்ளவராயிருந்தும்,இவரை மக்கள் கடவுளாகவே கருதினர். தன் தாயின் மேல் கொண்ட அன்பின் காரணமாக தன் தாய்க்கு கொயில் கட்டி வணங்கியவர் புரட்சி தலைவர்.

இப்படி எல்லா வகையிலும் தலைவன் என்ற தகுதிக்கு தன்னை தயார்ப்படுத்தி கொண்டார் மக்கள் தலைவன். தான்மட்டுமில்லாது தன்னுடன் இருக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் அறிவுரைகள் வழங்குவார் " எல்லாம் நம் கையில் இல்லை மக்கள் கையில் தான் இருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து கொண்டு இருந்தால் போதாது மக்கள் மனதில் குடிபோக வேண்டும். அவர்கள் நாம் எப்போதும் சந்தித்து கொண்டே இருக்கணும். இந்த கட்சிக்கு நீங்கள் எல்லாம் எப்படி என்னை தலைவராக தேர்ந்து எடுத்துள்ளீர்களோ! அதே போல் தான் நாம்மை அனைவரையும் மந்திரிகளாக இருந்து ஆட்சி நடத்த மக்கள் தேர்ந்து எடுத்து உள்ளார்கள். நான் சினிமாவில் புகழ் அடைந்தேன் என்றால் அது மக்களால்தான். நான் அப்பவே மக்களுக்கு நண்பன் ஆகிவிட்டேன். நான் இப்போ ஒரு பெரிய அளவில் வளர்ந்து உள்ள அரசியல் கட்சிக்கு தலைவனாகவும் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராகவும் இருக்க முடிந்தது. அதனாலே நாம் எல்லாம் மக்கள் மனதில் இருக்கனும்."
இது முக்கியமாக மற்ற மந்திரிகளுக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கும் மக்கள் திலகம் அடிக்கடி சொல்லும் அறிவுரைகள்.

இவற்றையெல்லாம் நாம் பார்க்கும்பொது, புரட்சித்தலைவர் டாக்டர்
எம். ஜி. இராமச்சந்திரன் ஒரு நாயகன்தான். நீ! ஒரு நாயகன்.......


Sunday, August 3, 2008

ரஜினி சார்க்கு சில கேள்விகள்.

ரஜினி சார்க்கு சில கேள்விகள்.
சென்னை: ""யார் வன்முறையில் ஈடுபடுகிறார்களோ அவர்களை உதைக்க வேண்டும் என்று நான் சொல்லியிருந்தால், இவ்வளவு பிரச்னை வந்திருக்காது. நான் பேசிய பேச்சில் ஒரு பெரிய பாடம் கற்றுக் கொண்டேன்,'' என்று ரஜினி பேசினார்.

"குசேலன்' படத்தில் நடித்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நடிகர் ரஜினி மற்றும் இயக்குனர் வாசு, தயாரிப்பாளர்கள் சார்பில் நிதி வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இயக்குனர் கே.பாலச்சந்தர் பேசியதாவது: கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக ரஜினியைப் பற்றி ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ரஜினி மன்னிப்பு கேட்கவில்லை; வருத்தம் தான் தெரிவித்துள்ளார். "உதைக்க வேண்டும்' என்ற வார்த்தையை பயன்படுத்தியது தான் மொத்த பிரச்னையே. அதற்காகத் தான் ரஜினி வருத்தம் தெரிவித்துள்ளார் என்றார்.

ரஜினி பேசியதாவது: குசேலன் படத்தை போல இனி வரும் என் படங்கள் அனைத்திலும் இதுபோன்ற நிதி உதவி வழங்குவது தொடரும். இப்போது நடக்கும் விஷயம் பற்றி பாலச்சந்தர் இங்கே சொன்னார். அதற்கு மேல் நான் பேச விரும்பவில்லை. மேலும் யூகங்களை அதிகரிக்க விரும்பவில்லை. அன்று நான் பேசிய பேச்சில் ஒரு பெரிய பாடம் கற்றுக்கொண்டேன். யார் வன்முறையில் ஈடுபடுகிறார்களோ அவர்களை உதைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்காது. இவ்வாறு ரஜினி பேசினார்.

நிருபர்களிடம் "எஸ்கேப்': விழா முடிந்த நிலையில், செய்தியாளர்கள் மேடையில் ஏறி ரஜினியை சுற்றிவளைத்து கேள்விகளை எழுப்பினர். "உங்களிடம் விளக்கம் கேட்கப்படும் என, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளாரே' என்ற ஒரு கேள்வியை மட்டும் நின்று கேட்ட ரஜினி, ஒரு நொடி யோசித்துவிட்டு, "வேண்டாமே' என்று தனது பாணியில் ஸ்டைலாக சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் துவங்கினார். தொடர்ந்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. "பேசவேண்டியதை எல்லாம் விழாவிலேயே பேசிவிட்டேனே' என சொல்லிவிட்டு ரஜினி அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பேனர்கள் கிழிக்கப்பட்டது பற்றி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணாவிடம் கேட்டபோது, ""கோவையில் ரஜினி ரசிகர்கள் யாரும் இவ்வாறு செய்யவில்லை. வேறு யாரோ குடிபோதையில் செய்திருக்கலாம். ரஜினியின் கருத்தை ரசிகர்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வித கோபமும் இல்லை. எனக்கு கிடைத்த தகவல்படி எங்கும் ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,'' என்றார்.
தினமலரில் பார்க்க சுட்டவும்
ரஜினி சார்க்கு சில கேள்விகள்.
1. நீங்கள் குப்பனோ, சுப்பனோ அல்ல பல்லாயிரம் ரசிகர்கள், பொதுமக்கள் கவனிக்கும் மனிதன் என்பது உங்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும் உணர்சிவசப்பட்டு தவறான வார்ததை எப்படி சொல்ல முடியும்?
2. அப்படி சொன்ன வார்த்தையின் தவற்றை இரண்டுமாதங்களுக்கு பிறகு,. உங்கள் படப்பிரச்சனையில்தான் புரிந்துக்கொள்ள முடிந்ததா?
3. இமையமலைக்கு சென்று தியாணம் மேற்க்கொள்ளும் உங்களால் எப்படி உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்யமுடியும்?
4. உங்களை தெரிந்தோ தெரியாமலோ தலைவர் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். அந்த தகுதியை ஏற்பதும் முடியாததும் உங்கள் விருப்பம், இருப்பினும் அந்த தகுதிக்கேற்ப நடந்துக்கொள்ள முயற்ச்சிக்க கூடாதா?
5. சிறுவானாயிருந்த கரிகாலன் யானையின் மூலம் அரசனாக்கியதும், அவன் அதன்பிறகு அரசனாகி நல்லாட்சி செய்து இன்று கூட செய்திடாத கல்லணையை கட்டினான். தலைவா என்று அழைக்கும் உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் செய்ததுதான் என்ன? உங்கள் வியாபாரயுத்தியில் முட்டாளாக்கி நலன் அனுபவிக்கின்றீர்களா?.
6. வருதப்படுவதும், மன்னிப்பு கேட்பதும் அதிக வித்யாசம் தெரியாது, . கன்னட மக்களுக்கு வருத்தம் தெரியப்படுத்தின உங்களால் மனம்நொந்த தமிழ் ரசிகர்களுக்கு வருத்தமோ, விளக்கமோ தெரியப்படுத்த முடியவில்லை ஏன்? //கேள்வியை மட்டும் நின்று கேட்ட ரஜினி, ஒரு நொடி யோசித்துவிட்டு, "வேண்டாமே' என்று தனது பாணியில் ஸ்டைலாக சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் துவங்கினார்.// இதுதான் உங்கள் பாணி என்றால் இதுவும் ரசிகனின் தலையெழுத்தா?
7. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நிதி வழங்குதல் திட்டமிட்டதா? இந்தப் பிரச்சனைக்கு காட்டும் பொம்மலாட்டமா?
8. அன்று பேசியது தவறு என்று கூறும் உங்களால் இன்று பேசியதில் தமிழர் மனம் புண்படும் என்று புரியாதா? யாரும் தெரியப்படுத்தவில்லையா?
9. உங்களின் விபாரத்திற்காக மன்னிப்பு கேட்டதும், அதனால் இயக்குனர் தயாரிப்பாளர் பயன்ப்படுவதால் நன்றியை தெரியப்படுத்திகின்றேன். இருப்பினும் உங்களை நம்பி கெட்டொழியும் ரசிகர்களுக்கு நீங்கள் கிலிச்சதுதான் என்ன?
//ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,'' என்றார்.// இவர்கள் சிந்திக்காத வரைதான் உங்கள் காலடியில் கோடிகள். தமிழ் ரசிகர்களே இன்னும் எத்தனை நாட்களுக்கு விசிலடிச்சானாக இருக்கபோரிங்க.... உங்கள் பொலப்பை பாருங்க சார்.

Friday, August 1, 2008

அந்தர்ப் பல்டி! ஆகாசப் பல்டி!

அந்தர்ப் பல்டி! ஆகாசப் பல்டி!

சென்னை: ஒகேனக்கல் பிரச்னை குறித்து, சென்னையில் திரைப்படத் துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் "தண்ணீரைக் கூட பிரச்னையாக்குபவர்களை உதைக்க வேண்டாமா?' என ஆவேசமாக பேசிய ரஜினிகாந்த், "குசேலன்' திரைப்படம் வெளியிடுவதற்காக கன்னட மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில், தமிழ்த் திரைப்படத் துறையினர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், "கர்நாடக - தமிழக மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனால், சிலர் இந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் தூண்டி விடுகின்றனர். குடிக்கிற தண்ணியில கூட பிரச்னை கிளப்புறவங்களை உதைக்க வேண்டாமா?' என ஆவேசமாக பேசினார். ரஜினியின் இந்த பேச்சு கன்னட அமைப்புகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. "கர்நாடகாவில் ரஜினி சினிமாக்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என எச்சரிக்கப்பட்டது.

இந்தப் பிரச்னை அமுங்கியிருந்த நிலையில், ரஜினி நடித்த "குசேலன்' திரைப்படம் இன்று வெளியாகிறது. கர்நாடகாவில் தனது திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா பிலிம் சேம்பருக்கு கடிதம் எழுதியுள்ளார் ரஜினிகாந்த். அதில், "எனது பேச்சு கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தியதை நான் அறிவேன். எனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளேன்; இனிமேல் இதுபோல் பேசமாட்டேன். எனது திரைப்படத்தை தமிழ், கன்னட ரசிகர்கள் உட்பட அனைத்து ரசிகர்களும் பார்த்து மகிழ்கின்றனர். எனவே, "குசேலன்' திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். இதையடுத்து, இன்று "குசேலன்' திரைப்படத்தை வெளியிட கர்நாடகா பிலிம் சேம்பர் அனுமதித்தது.


இதை அறிந்த கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள், கர்நாடகா பிலிம் சேம்பர் முன் கூடி, "ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை "குசேலன்' திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என்று கோஷமிட்டனர். "ரஜினி, கன்னடர்களை அவமரியாதையாக பேசியுள்ளார். எனவே, அவர் நேரடியாக மக்களிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்' என "வாட்டாள்' நாகராஜ் கூறினார்
இதுகுறித்து கர்நாடகா பிலிம் சேம்பர் துணைத் தலைவர் ராக்லைன் வெங்கடேஷ் கூறும்போது, ""ரஜினி ஏற்கனவே "டிவி' சேனல்கள் மூலமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தற்போது கடிதம் மூலமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரது திரைப்படத்தை இன்று வெளியிட அனுமதித்துள்ளோம்,'' என்றார்.ஆனாலும், கன்னட அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி "குசேலன்' திரைப்படம் இன்று வெளியாகுமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


ரஜினி உருவப்படம் தீ வைப்பு: கன்னட அமைப்பினர் போராட்டம் : நடிகர் ரஜினி நடித்த "குசேலன்' படத்தை திரையிட அனுமதித்ததைக் கண்டித்து கர்நாடகா ஃபிலிம் சேம்பர் முன் கன்னட அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினி உருவப் படம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.


ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு, கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியபோது, தமிழ் சினிமா நடிகர்கள் அனைவரும் இணைந்து சென்னையில் போராட்டம் நடத்தினர். அதில் நடிகர் ரஜினியும் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியது, கன்னட வெறியர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் ஆத்திரத்தில் இருந்த கன்னட வெறியர்கள், ரஜினியின் குசேலன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கர்நாடகாவில் 18 திரையரங்குகளில் குசேலன் படம் வெளியிட அனுமதி தரப்பட்டது. அதையடுத்து கன்னட அமைப்பைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ், நாராயண கவுடா, பிரவீன் ஷெட்டி ஆகியோர் தலைமையில் நேற்று கர்நாடகா பிலிம் சேம்பர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.அப்போது ரஜினி உருவப் படத்தை தரையில் போட்டு அதைச் சுற்றி செருப்புகள் வைத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து அப்படத்தை எடுத்து வாட்டாள் நாகராஜ் தீ வைத்து கொளுத்தினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குசேலன் திரைப்படம் வெளியிடும் தியேட்டர்கள் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலு விவரங்களுக்கு சுட்டவும்
இங்கே சுட்டவும்www.dailythanthi.com/article.asp?NewsID=429170&disdate=8/1/2008&advt=1
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=1420&cls=row4

மனிதன் உணர்சிவசப்பட்டு பேசும்பொது தவறுதல் இயற்கைதான்,. அதிலும் இமயமலை சென்று தியாணம் பன்னும் அறிவு ஜிவிகள் தவறுபன்னதான் செய்வார்கள்.. இவர்கள் ஞானம் மிக்கவர்கள் பணமே குறிகோளாகா கொண்டவர்கள். , தமிழர்களின் பணத்தை சுரண்ட ஆசையற்றவர்கள்' . தமிழக முதலமைசருக்கு முற்றிலும் தகுதியானவர்கள். ஒகேனக்கல் பிரச்னை நடந்தது இரண்டுமாதங்களுக்கு முன் ஆனால் தற்ப்பொதுதான் ஞானம் பிறந்து மன்னிப்பு கேட்பார்கள். பணமே எண்ணம் கொண்ட இவர்களுக்கு எல்லாம் சாத்தியமே.. தமிழ் மாக்களுக்கு தலைவராக தகுதியானவர்கள்.. இவர் ஒருமுறை சொன்னா! நூறு முறைச்சொல்ல நாங்கள் இருக்கிறோம்... நாங்களும் மன்னிப்பு கேட்கின்றொம்...