_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, October 11, 2010

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா? "I do weddings at Sentosa 2010 Singapore"

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா? "I do weddings at Sentosa 2010 Singapore"

"No love no life" காதல் இல்லையேல் சாதலே மேல் என்று சொல்லும் அளவிற்கு மனிதனும் அவனை சுற்றிய காதலும் இருக்கின்றது. அதற்கு அடுத்த கட்டமாக இருக்கும் கல்யாணம் என்ற நிபந்தனை அவனை இந்த காலக்கட்டத்தில் ஏனோ பயப்படுத்துகின்றது. இதில் பலர் சேர்ந்து வாழ்வோம் (live together) கல்யாணம் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மனவருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இப்படிப்பட்ட கலாச்சாரம் மேலைநாடுகளை தாண்டி இந்தியாவில் நகரங்களிலும் இருக்கதான் செய்கின்றது. " மனிதனின் பிறப்பின் முக்கியதுவம் தனது சந்ததிகளை விருத்தி செய்வது" எனற ஒரு தத்துவம் மறைந்து வெகுகாலமாகின்றது.

இந்த அவசரக்கால உலகில் கல்யாணம் மற்றும் குழந்தைகளை பெற்றல் என்பது ஊக்கப்படுத்த வேண்டிய கட்டாய சூழல் இருக்கின்றது. பலர் கல்யாணமே வேண்டாம் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழல் கடந்தால் நாளைய உலகம் பெரியவர் இல்லமாகத்தான் இருக்கும். இதை உணர்ந்த சில நாட்டில் அரசாங்கமே கல்யாணங்களுக்கு ஊக்கப்படுத்தி வருகின்றது. அப்படித்தான் சிங்கப்பூர் அரசும் கல்யாணம் செய்ய ஊக்கப்படுத்தியும் அதற்காண சந்தர்ப்பங்களை உருவாக்கியும் வருகின்றது.

அப்படி ஊக்கப்படுத்தும் விதமாக 10.10.2010 சிறப்பு தினமாக "I do" Wedding at sentosa 2010" என்ற ஒரு நிகழ்வை நடத்தியது. அதன்படி 140 க்கு மேற்ப்பட்ட ஜோடிகளுக்கு கல்யாணம் நடத்தியது. குறைந்த செலவில் நிறைவான மகிழ்வாக நடத்தியது சிறப்பாகும். இந்த கல்யாண வைபோவத்திற்கு நிர்வாக புகைப்பட கலைஞராக (Official Photographer) சென்றேன். அங்கு நான் எடுத்த புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சி.

கீழே சில புகைப்படங்கள் உங்களுக்காக ..... மேலும் அதிக படங்களை பார்க்க சுட்டியை தட்டுங்கள்.

பின் குறிப்பு: மேலை நாட்டு நாகரிகம் பல நாடுகளிடம் தொற்றிக்கொண்டு இருப்பது உண்மை. அதே போல் சிங்கப்பூரிலும் மேலை நாட்டு நாகரிகம் பல தொற்றியுள்ளது. அது பொல தொற்றிக்கொண்ட பழக்கம் ஒன்று கல்யாண சடங்கின் பொழுது முத்தமிடல். பதிவு திருமணத்தின் பொழுது முதலில் மோதிரம் மாற்றிக் கொள்கின்றார்கள் பின்னர் பதிவாளர் சொல்லின் பேரில் ஜோடிகள் முத்தமிடுவார்கள்... அந்த நிகழ்வைதான் இங்கு புகைப்படம் பதித்துள்ளேன். சில நண்பர்கள் சங்கடங்களின் பேரில் இந்த பின் குறிப்பு.


கல்யாண வைபோவம் புகைப்படங்கள்....

கல்யாண ஜோடிகளின் அணிவகுப்பு புகைப்படங்கள்....


அன்புடன்,...
ஆ.ஞானசேகரன்.

Monday, October 4, 2010

ஏன்? எதற்கு? எப்படி?....12

ஏன்? எதற்கு? எப்படி?....12

"உடலுக்கு ஒன்பது வாசல்
மனதிற்கு என்பது வாசல்"

மனிதன் உடல் ஒரு மிக பெரிய கூட்டு வேதிப்பொருள். மனித உடல் என்பது சதை, எலும்பு, நரம்பு ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளதாக அறிவியல் சொல்லுகின்றது. ஆனால் சித்தர்களும் ஞானிகளும் உடல் என்பது நீர், நிலம்,நெருப்பு,
காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியுள்ளார்கள்.

உடலுக்கு 9 வாசல் என்பன இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத்துளைகள், வாய், மலவாய், சிறுநீர்பாதை. இப்படியாக சொல்லப்படுகின்றது. இப்படி சொல்லப்படும் கணக்கு சரிதானா? பெண்களுக்கும் இந்த கணக்கு ஒன்றுதானா? கண், காது, மூக்கு என்பது ஏன் இரண்டாக இருக்கின்றது? அப்படி இரண்டாக இருப்பதால் பாதகம் மற்றும் சாதகம் என்ன? என்பதுதான் இன்றைய ஏன்? எதற்கு? எப்படி?....

மனிதன் தன்னுடைய தாய் வயிற்றில் கருவாக உருவானதும் தாய்க்கும் கருவிற்கும் பாலமாக இருப்பதுதான் தொப்புள் கொடி. இந்த கொடியின் வழியாகதான் தாயிடமிருந்து உணவு சக்தி கருவிற்கு செல்கின்றது. ஆக கருவிலேயே உருவாகிய தொப்புள் கொடி வயிலை ஏன் கணக்கில் ஏற்றுக்கொள்ளவில்லை? அப்படி பார்த்தால் 10 வாசல் என்பது சரிதானே! மேலும் பெண்ணிற்கு இன்னும் கூடுதலாக மூன்று வாசல்கள் இருப்பதும் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? அதாவது பெண்ணிற்கு சிறுநீர் பாதையும், கருப்பை பாதையும் வேறு வேறாக இருப்பதும் மேலும் ஒரு வாசல் பெண்ணிற்கு உண்டும் என்பதும் உண்மைதானே!..... ஆக பெண்ணிற்கு 11 வாசல்லவா இருக்கின்றது. அதே போல் பிறந்த குழந்தைக்கு உணவாக பால் சுரக்கப்பட்டு ஊட்டுகின்றாளே பாற்காம்புகள் அதுவும் உடலிருந்து வெளிப்படும் வாசல்தானே! ஆக இந்த வாசல்களையும் பார்த்தால் பெண்ணிற்கு 13 வாசல்கள் இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும். ஓ... இப்படியே போனால் உடலில் இருக்கும் ஒவ்வொரு வேர்வை துளைகளும் உடலிருந்து வரும் வாசல்கள்தானே! இப்படிப்பட்ட கேள்விகள் உங்களை போல எனக்கும் இருக்கின்றது.

ம்ம்ம்ம்.... அது இருக்கட்டும் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத்துளைகள், இரண்டு பாற்காம்புகள் என ஏன் இரண்டு இரண்டுடாக இருக்கின்றது? அதனால் என்ன பயன்? ஒரு கண்களால் பார்க்க முடியாதா? ஒரு காதால் கேட்க முடியாதா? ஒரு மூக்குதுளையால் சுவாசிக்க முடியாதா? ஒரு பாற்காம்பால் பாலூட்ட முடியாதா? இப்படிப்பட்ட கேள்விகள் என்னையும் துளைத்தது.....

கண்களில் இரண்டால் மட்டுமே ஒரு பொருளின் முப்பரிமாணத்தை உணரமுடியும். ஒரு கண்ணால் அந்த பொருளின் முப்பரிமாணத்தை உணர்வது மிகவும் கடினமாக இருக்கும். அதே போல் ஒரு பொருள் எவ்வளவு தூரத்தில் எவ்வளவு அளவில் இருக்கின்றது? என்பதையும் கணிக்க இரண்டு கண்கள் தேவையாகின்றது. அதனால் இயற்கையே உயிர்களுக்கு இரண்டு கண்கள் கொடுத்துள்ளது. மனிதனுக்கு இரண்டு கண்களும் முகத்தில் நேராக வைக்கப்பட்டுள்ளது. மற்ற விலங்களுக்கு பக்கதிற்கு ஒன்றாக இருக்கும். எனவேதான் மற்ற விலங்குகள் ஒரு பொருளை பார்க்க தலையை ஆட்டி ஆட்டி பார்க்கும். மனிதன் கண்களில் நிறமி செல்கள் உள்ளது. ஆகவேதான் பொருளின் நிறத்தையும் உணர முடிகின்றது. மற்ற விலங்குகளுக்கு நிறமி செல்கள் இல்லை ஆகவே கருப்பு வெள்ளையாகவே அவைகளுக்கு தெரியும். ( என் காளை மாடுக்கு சிகப்பு கலர் புடிக்காது சிகப்பில் உடையணிந்தால் முட்டும் என்பதேல்லாம் கட்டுகதையே! ) ஆரோக்கியமான பார்வை என்பது இரண்டு கண்களும் சரியாக இருக்க வேண்டும்.

இரண்டு காதுகள் நம்முடைய உடலை சமசீராக வைத்துகொள்ள உதவுவதாக அறிவியல் சொல்லுகின்றது. காதின் சமச்சீர் குறைந்தால் வயிற்று போக்கு, வாந்தி ஆகையவை ஏற்படும். ஒரு காதில் அலைபேசி தொடர்ந்து பேசுவதாலும், ஒரு காதில் பாடல் கேட்பதும் இப்படிப்பட்ட குறைகள் வர வாய்புள்ளது. விமான ஓட்டுனர், பாராசூட்டில் குதிப்பவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு காதின் சமச்சீர் மிக முக்கியம். நாம் நேராக நடந்து செல்லவும் இந்த சமசீர் காதுகள் தேவையாகின்றது. இரண்டு காதுகள் இருப்பதினால் ஒலி வரும் திசை மற்றும் துரத்தை உணரமுடிகின்றது.

மூக்கு என்பது மனிதனின் சுவாசத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. மேலும் வாசனை அறியவும் பயனாகின்றது. இந்த மூக்கு முகத்தின் முன்பக்கம் நீட்சியாக இருக்கும். இதன் துவாரம் இரண்டாக பிரிந்து செல்லும்..... இதனால் மூச்சு காற்று சத்தமிடாமல் உள்சென்று வெளியாகின்றது. மேலும் மூச்சுக்காற்றை உள்ளிழித்து வெளியேற்ற மிக வசதியாக இருக்கின்றது. ஒரே துளையில் அப்படிப்பட்ட நிகழ்வு மிக கடினமாக இருக்கும். மூச்சு தினறல் இல்லாமல் காற்றுழுக்க இந்த இரண்டு துளைகள் பயனாகின்றது.

குழந்தைகளுக்கு பாலுட்டதான் முலைகாம்புகள் பயனாகின்றது. ஒரு பகுதியில் பாலுட்டும் பொழுது மறுபகுதியில் பால் சேகரிக்கபடுகின்றது. அதனால் தொடர்ச்சியாக குழந்தைக்கு பாலுட்ட முடிகின்றது.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.