_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, December 8, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 9

ஏன்? எதற்கு? எப்படி?..... 9

சென்ற ஏன்? எதற்கு? எப்படி? இடுகையில் வட்டம் மற்றும் வட்டம் சார்ந்த இயக்கங்களின் மனிதன் கண்டுபிடிப்பை பார்த்தோம். அதே போல் பூமியும் தன்னைத்தானே சுற்றும் இயக்க கோடும் ஒரு வட்டம்தான், ஏனெனில் பூமியும் கோளவடிவத்தில் இருக்கின்றது. பூமி தன்னைத்தானே சுற்றிவர ஆகும் காலம் ஒரு நாள் என்று கணிக்கப்படுகின்றது. துள்ளியமாக சொன்னால் பூமி தன்னை ஒரு அச்சில் சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் 23 மணி 56 நிமிடம் 4 வினாடி ஆகும். அப்படியென்றால் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகத்தை ( பூமியில் சுற்றளவு/23.56.4 மணி) கொண்டு கணக்கிடலாம்.


செயற்கைக்கோள்கள் என்பன பூமியை சுற்றுகின்றதா? அது எவ்வாறு சுற்றுகின்றது? செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றுகின்றன என்று சொல்வதை விட பூமியை இடம் வகிக்கின்றது என்பதுதான் சரியாக இருக்கும். பூமி தன்னைதானே இடம் சுழியாக சுற்றுகின்றது. அதாவது நாம் பூமியின் மேல் இருப்பதாகக் கொண்டால் நாம் மேற்கிலிருந்து கிழக்காக செல்கின்றோம். அதனால்தான் நிலையாக உள்ள சூரியன் நம் கண்ணுக்கு கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றதாக தெரிகின்றது. பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் 66,600 கி.மீ/மணிக்கு என்று கணகிடப்பட்டுள்ளது. அந்த வேகம் ஒவ்வொரு புள்ளிக்கும் மாறுபடும், காரணம் வட்டசார்பு இயக்கம் ஆரம் மாறுகின்றபொழுது வேகமும் மாறுபடும்.

செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து 350 கி.மீட்டர் உயரத்தில் சுற்றுகின்றது. சில 600 கி.மிட்டர் உயரத்திலும் சில 36,000 கி.மீட்டர் உயரத்திலும் அமைந்தப்படி சுற்றுகின்றது. இப்படி பல சுற்றுப்பாதைகளில் 800 செயற்கைகோள்களுக்கு மேலாக சுற்றுகின்றதாக தெரிகின்றது. பல செயற்கைக்கோள்கள் மனிதன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருப்பதும் உண்டு. இவற்றை செயலிழந்த செயற்கைக்கோள் என்று குறிப்பிடுகின்றனர். செயலிழந்த செயற்கைக்கோள் என்றால் என்ன? என்பதை பின்னர் பார்க்கலாம்.

பெரும்பான்மையான செயற்கைக்கோள்கள் மேற்கிலிருந்து கிழக்காக பூமி சுழற்ச்சியோடு சேர்ந்தே சுற்றுகின்றது. அவைகள் பூமியின் வேகத்தையும் செயற்கை கோளின் உயரத்தையும் துள்ளியமாக கணக்கிட்டு பூமியின் இடம் வகிக்கின்றது. அதாவது இந்தியா அனுப்பிய "கல்பனா" செயற்கைக்கோள் இந்தியாவை நோக்கி பார்த்தபடியே இருக்கின்றது. "கல்பனா" செயற்கைக்கோள் பூமியிலிருந்து 36,000 கி.மீட்டர் உயரத்திலிருந்து தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு, வானிலை போன்றவற்றிக்கு பயன்பட்டு வருகின்றது.

இவ்வகை செயற்கைக்கொள்கள் ஒருமுறை பூமியை வலம் வர பூமியை போலவே
23 மணி 56 நிமிடம் 4 வினாடி எடுத்துக்கொள்வதால் அவைகள் நிலையாக இருப்பதுபோல இருக்கும். 36,000 கி.மீட்டர் உயரத்தில் இருக்கும் செயற்கைகோள் பூமியை 23 மணி 56 நிமிடம் 4 வினாடி சுற்றிவர மணிக்கு 11,000 கி.மீட்டர் வேகத்தை எடுத்துக்கொள்கின்றது.

பெருன்பான்மையான செயற்கைக்கோள்கள் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றினாலும் சில வகை செயற்கைக்கோள்கள் வடக்கிலிருந்து தெற்காகவும் சுற்றுகின்றது. இந்தியா அனுப்பிய ஐ.ஆர்.எஸ் செயற்கைக்கோளும் இவ்வாறே சுற்றுகின்றது. ரஷ்யா,நார்வே,கனடா போன்ற நாடுகள் அனுப்புகின்ற செயற்கைக்கோள்கள் வடக்கிலிருந்து தெற்காக சுற்றும் பாதையைதான் தேர்வு செய்யப்படுகின்றது. அதற்கு காரணம் அதன் புவியியல் அமைப்பாகும்.

இப்படி செயற்கைக்கோள்கள் பூமியை சரியான வேகத்தில் சுற்றிவர எரிப்பொருள் தேவையா? ஆம் என்றாலும் செயற்கைக்கோள்கள் சுற்றுவதற்கு எரிபொருள் பயன்படுத்தவில்லை. செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றது. அந்த ராக்கெட்களுக்கு எரிபோருள் தேவை. ராக்கெட்கள் நியூட்டனின் விதிப்படி "எந்த ஒரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு" என்ற தத்துவத்தில் இயங்குகின்றது. செயற்கைக்கோள்களை ராக்கெட்டுடன் அமைக்கப்பட்ட நுட்பமான அமைப்புகள் அதன் சுற்றுப்பாதையில் உந்திவிடப்படுகின்றது. அப்படி உந்தப்பட்ட செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் தொடர்ந்து சுற்றுகின்றது. செயற்கைக்கோள்கள் சுற்றும் பாதை வெற்றிடமாக தேர்வுசெய்துள்ளதால் அது தொடர்ந்து சுற்றிவருகின்றது. அதாவது நியூட்டனின் மற்றொரு விதிப்படி "எந்த ஒரு புறவிசை தாக்காவிடின் அசையா பொருள் அசையாமலும் அசையும் பொருள் அசைந்துகொண்டே இருக்கும்". அப்படி பார்த்தால் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதை வெற்றிடமாக இருப்பதால் புறவிசைகள் இல்லை எனவே உந்தம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும். ஆகவே எரிப்பொருள் தேவைப்படவில்லை.

அப்படி உந்தப்பட்ட செயற்கைகோள்களின் வேகம் சீராகவே இருக்கவேண்டும். ஆனால் பலக்காரணங்களால் அதன் வேகம் சிறிது மாறுபடலாம் அவற்றை எப்படி சரிசெய்யப்படுகின்றது? செயற்கைக்கோள்களில் எல்லா புறங்களிலும் எரிப்பொருளுடன் கூடிய சிறியவகை ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் இவற்றை பீச்சிட செய்து செயற்கைக்கோளை முன்னும் பின்னும் நகர்த்தி சரிசெய்யப்படுகின்றது. இவற்றை எதிர் ராக்கெட்டுகள் என்று கூறுவதுண்டு. இப்படி எதிர் ராக்கெட்டுகள் கணனி மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது. எதிர் ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிப்பொருள் இருக்கும் வரைதான் நம்மால் கட்டுப்படுத்த முடியும். அப்படி எரிப்பொருள் தீரும் பச்சத்தில் அந்த செயற்கைக்கோள்
செயலிழந்தாக கருதப்படுகின்றது. ஒரு செயற்கைக்கோள் ஆயுள் என்பது அதன் எரிப்பொருள் தேவையை பொருத்தே இருக்கின்றது. எரிப்பொருள் முடிந்ததும் அந்த செயற்கைக்கோளின் ஆயுளும் முடிந்துவிடுகின்றது.

மேலும் ஒரு துண்டு செய்தி: செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதை வெற்றிடமாக இருக்க வேண்டும் எனவேதான் அவற்றினை பூமியிலிருந்து 350 கி.மீட்டர் உயரத்திற்கு மேல் உந்திவிடப்படுகின்றது. ரஷ்யா, நார்வே, கனடா போன்ற நாடுகளின் புவியில் அமைப்பு பூமியின் சுற்றுமையத்திற்கு அருகில் இருப்பதால்தான் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதையை வடக்கிலிருந்து தேற்காக தேர்வு செய்யப்படுகின்றது. மேலும் இவ்வகை சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவர 12 மணி நேரம் எடுத்துக்கொள்கின்றது. எனவே இரண்டு மூன்று செயற்கைக்கோள்கள் மூலம் பணியை சரியாக செய்ய பயன்படுத்துகின்றனர். ஒரு செயற்கைக்கோள் அந்த நாட்டை 8 மணி நேரம் அதன் பகுதியில் இருந்து அதன் பணியை செய்யும்.

முக்கிய குறிப்பு: நான் படித்த, அறிந்தவைகளை தொகுத்துள்ளேன் தவறுகள் இருக்கலாம். சாதரணமான என்னால் புரிந்த அளவிற்கு சொல்லியுள்ளேன். தவறுகள் இருந்தால் தாரளமாக சுட்டிக்காட்டுங்கள் திருத்திவிடலாம். ( கட்டுரை நீண்டுவிட்டது, முக்கியமான செய்திகளாக நான் கருதியதால்)

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

30 comments:

S.A. நவாஸுதீன் said...

அருமையான தகவல்கள் நண்பா. கொஞ்ச நேரம் கோள்களோடு சேர்ந்து சுற்றி வந்ததுபோல் ஒரு உணர்வு. நிறைவான இடுகை. பாராட்டுக்கள்.

வால்பையன் said...

தெரிந்து கொள்ள விரும்பிய தகவல்கள்!

நன்றி நண்பரே!

வால்பையன் said...

செயற்கைகோள்கள் இயங்க சூரியஒளியிலிருந்து தேவையான சக்தியை எடுத்து கொள்கிறது!

Anonymous said...

அறிவுப்பூர்வமான தகவல் தெரிந்துக் கொள்ளவேண்டியதும் கூட...உங்கள் படைப்புகள் இப்போதெல்லாம் தனித்துவம் வாயுந்தாக உள்ளது சேகர் வாழ்த்துக்கள்....

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

அருமையான தகவல்கள் நண்பா. கொஞ்ச நேரம் கோள்களோடு சேர்ந்து சுற்றி வந்ததுபோல் ஒரு உணர்வு. நிறைவான இடுகை. பாராட்டுக்கள்.//

வணக்கம் நண்பா,.. மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

தெரிந்து கொள்ள விரும்பிய தகவல்கள்!

நன்றி நண்பரே!//

மகிழ்ச்சி மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

செயற்கைகோள்கள் இயங்க சூரியஒளியிலிருந்து தேவையான சக்தியை எடுத்து கொள்கிறது!//

ஆம் நண்பா,... ஆராய்ச்சி கருவிகள் இயங்க சக்தியை சூரிய ஒளியிலிருந்து எடுத்துக்கொள்கின்றது.

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

அறிவுப்பூர்வமான தகவல் தெரிந்துக் கொள்ளவேண்டியதும் கூட...உங்கள் படைப்புகள் இப்போதெல்லாம் தனித்துவம் வாயுந்தாக உள்ளது சேகர் வாழ்த்துக்கள்.//

வாங்க தமிழ்... மிக்க நன்றிங்க

பிரியமுடன் பிரபு said...

Cards & Log-ins

பிரியமுடன் பிரபு said...

அருமையான் தகவல்கள்
தெரியாதவர்ரை தெரிந்துகொண்டேன்

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...

Cards & Log-ins
Blogger பிரியமுடன் பிரபு said...

அருமையான் தகவல்கள்
தெரியாதவர்ரை தெரிந்துகொண்டேன்///


வாங்க பிரபு மிக்க நன்றிங்க

ராமலக்ஷ்மி said...

செயற்கை கோள்களைப் பற்றி அழகாக விளக்கியுள்ளீர்கள். நன்றி ஞானசேகரன்.

ஹேமா said...

ஞானம் படிக்கிற காலத்திலகூட இவ்வளவு பொறுமையா விளக்கமா சொல்லித் தரல.அவ்ளோ விளக்கமா புரிஞ்சுக்கிற அளவுக்கு சொல்லித் தாறீங்க.நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...
செயற்கை கோள்களைப் பற்றி அழகாக விளக்கியுள்ளீர்கள். நன்றி ஞானசேகரன்.
//

வணக்கம் ராமலக்ஷ்மி,.. மிக்க நன்றிங்க‌

தேவன் மாயம் said...

அறிவியலை வெற்றிகரமாகச் சொல்லி வருகிறீர்கள்- வாழ்க நவீன சுஜாதா!!

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
ஞானம் படிக்கிற காலத்திலகூட இவ்வளவு பொறுமையா விளக்கமா சொல்லித் தரல.அவ்ளோ விளக்கமா புரிஞ்சுக்கிற அளவுக்கு சொல்லித் தாறீங்க.நன்றி.//

வாங்க ஹேமா,.. நமக்கு சொல்லி தந்த ஆசிரியர்களுக்கு பல விடயங்கள் அவர்களுக்கே புரியாமலே சொல்லித்தந்துள்ளார்கள்.. அதனால்தான் நமக்கும் பல விடயங்கள் புரியாமலே இருக்கு. அப்படிதான் எனக்கு கிடைத்த ஆங்கில அறிவும்.... மிக்க நன்றி ஹேமா..

ஆ.ஞானசேகரன் said...

//தேவன் மாயம் said...
அறிவியலை வெற்றிகரமாகச் சொல்லி வருகிறீர்கள்- வாழ்க நவீன சுஜாதா!!
//


வாஙக தேவன் சார்... மிக்க நன்றிங்க‌

மாதேவி said...

செயற்கை கோள்களின் இயக்கம்பற்றிய அறிவுபூர்வமான தகவல் அறிந்து கொண்டோம். நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

மாதேவி said...
செயற்கை கோள்களின் இயக்கம்பற்றிய அறிவுபூர்வமான தகவல் அறிந்து கொண்டோம். நன்றி.

வாங்க மாதேவி,... உங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றிங்க‌

சந்ரு said...

நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்..

ஆ.ஞானசேகரன் said...

//சந்ரு said...
நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்.//

வணக்கம் சந்ரு, மிக்க நன்றிங்க‌

நசரேயன் said...

நிறைய பயனுள்ள தகவல்கள்

ஆ.ஞானசேகரன் said...

// நசரேயன் said...
நிறைய பயனுள்ள தகவல்கள்//


வணக்கம் நண்பரே!
வருகைக்கு மகிழ்ச்சி

ரோஸ்விக் said...

தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் நண்பரே! நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

.// ரோஸ்விக் said...

தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் நண்பரே! நன்றி.//

மிக்க நன்றிங்க ரோஸ்விக்
எனக்கு ஒரு மின்னஞ்சல் பன்னுங்க

ஜோதிஜி said...

நன்றி, அதிகம் ஓட்டு போட்டு சுமந்து வந்த மின் அஞ்சலுக்கு. எதிர்பார்த்து கிடைக்காத தகவல்கள். வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

// ஜோதிஜி said...
நன்றி, அதிகம் ஓட்டு போட்டு சுமந்து வந்த மின் அஞ்சலுக்கு. எதிர்பார்த்து கிடைக்காத தகவல்கள். வாழ்த்துக்கள்//


வணக்கம்ங்க ஜோதிஜி... முதலில் நன்றிகள்... "எதிர்பாராத தகவல்கள்" என்றுதான் சொல்லியிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.. "எதிர்பார்த்து கிடைக்காத தகவல்கள்". இதில் ஏதோ பிழைபோல் தெரிகின்றது, உங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றிங்க‌

jothi said...

நல்ல இடுகை. இது போல நானும் எழுத நினைத்ததுண்டு. ஆனால் அதை செயல்படுத்ததான் முடியவில்லை

ஆ.ஞானசேகரன் said...

//jothi said...
நல்ல இடுகை. இது போல நானும் எழுத நினைத்ததுண்டு. ஆனால் அதை செயல்படுத்ததான் முடியவில்லை//


வாங்க நண்பா, மிக்க நன்றிங்க..... நேரம் கிடைக்குபொழுது கண்டிப்பா எழுதுங்க.. விரைவில் எதிர்பார்கின்றேன்..

Padukai Net Cash said...

Super Post ....

Wanna Make Money VIA this Simple Posts ... No More Times for this work ... Just add this ads in your blog and get Money ...

And Upgrade you Blogspot to Own Domain like ammaappa.com and upgarde more special with this online job money...

More details visit my forum

www.padukai.com


http://forum.padukai.com


Thanks Lot ...

By
selva
9003032100
Tamil Nadu.