_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, January 21, 2010

தெரியாது என....

தெரியாது என...

வணக்கம் நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப்பின் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி. தமிழ்மணம் விருதுப்பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். வேலை பளு மற்றும் உடல் உபாதைகள் காரணமாக தொடர்ந்து இணையத்தில் வரமுடியவில்லை. இனி கொஞ்சம் கொஞ்சமாக வருவேன் என்று நினைக்கின்றேன்.

ஒரு செவிவழி கேட்ட கதை ஒன்னுங்க,... ஒரு இளைஞன் வேலைதேடி ஒரு பெரிய வெளிநாட்டு நிர்வாகத்திற்கு சென்றான். "அங்கு அலுவலகம் துப்பறவு பணி காலியாக இருப்பதாகவும் உடனே எங்கள் அலுவலகத்திற்கு ஒரு மின்னஞ்சல் செய்யுங்கள் அந்த வேலை உங்களுக்குத்தான்" என்று அங்குள்ள அதிகாரி சொன்னார். அதை கேட்டு மகிழ்ந்தான் ஆனால் தன்னிடம் மின்னஞ்சல் முகவரி மற்றும் அனுப்பும் முறையும் தெரியாததால் அலச்சியமாக இருந்துவிட்டான். அந்த வேலை வேறு ஒருவனுக்கு கிடைத்துவிட்டது. தனது குடும்பம் வறுமையை போக்க வேறு வழியின்றி பக்கத்து ஊரில் உள்ள மலிவான காய்களை வாங்கி அவன் ஊரில் விற்றதில் லாபம் ரூ20 கிடைத்தது. இதை இன்னும் கொஞ்சம் அதிகமாக காய்கள் வாங்கி விற்றான் லாபம் அதிகமாக கிடைத்தது. காய்கள் தேவை அதிகமானதால் தானே தோட்டமும் வாங்கி காய்கள் விவசாயமும் செய்து விற்பனை செய்தான் லாபமும் அதிகமாக கிடைத்தது. இவனிடம் 300 பேர் வேலைசெய்யும் அளவிற்கு பெரிய அளவில் இவனின் வியாபரம் பெருகியது. கணக்குகள் சரிபார்க்க கணனி மற்றும் வேலையாட்களும் இருந்தார்கள்.

இந்த அளவிற்கு பெரிய வியாபாரியாக இருந்தாலும் கணனியை பயன்படுத்த தெரியாதவனாக இருந்தான். அங்கிருந்த ஒருவர் " இவ்வளவு பெரிய வியாபாரியாக இருக்கும் உங்களுக்கு கணனியை பயன்படுத்த தெரியவில்லையே" என்று கேட்டார். அதற்கு அவன் "இது தெரிந்திருந்தால் நான் இன்னும் கூட்டிக்கொண்டுதான் இருந்திருப்பேன்" என்றார்.

அட ஆமாங்க எதும் தெரியாது என்று இருப்பது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லைங்க. முறையான முயற்சியும் தெளிவான சிந்தனையும் இருந்தாலே போதும் வாழ்க்கையில் முன்னோற முடியுமுங்க....

சென்ற முறை இந்தியா சென்ற பொழுது கல்லணைக்கு சென்றேன். காவிரி ஆற்றில் கட்டிய அணைகளிலேயே மிக பழமையான அணையாகும். கரிகால்ச்சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகின்றது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லும் களிமண்ணாலும் கட்டப்பட்ட இந்த அணை கிட்டதட்ட 19 நூற்றாண்டுகளாக நமது பாசனத்திற்கு பயன்பட்டுவருகின்றது எனபது மிக பெரிய ஆச்சரியம். சிறுவனாக சிறுவகளோடு விளையாடிக்கொண்டிருந்த கரிகாலனை பட்டத்து யானையால் மாலையிட்டு அரியணை ஏறிய இரண்டாம் நூற்றாண்டு சோழ மன்னனாவான். அப்படிப்பட்ட சிறுவன் தனக்கு தெரியாதென இருந்திருந்தால் இன்று நான்(நாம்) பார்த்த கல்லணை இருந்திருக்காது.

கல்லணை பற்றிய புகைப்படம் மேலும் இங்கே சுட்டவும்...

சுமார் 19 நூற்றாண்டுக்கு முன்னரே காவேரியின் போக்கை கட்டுப்படுத்தி அவற்றை முறையான பாசனத்திற்கு பயன்படுத்திய பாங்கு இன்றுவரை நம் அரசுக்கு தெரியாமல் இருப்பதேன்? அட அது போகட்டுங்க அந்த அணையையாவது பராமரித்து வருகின்றார்களா? என்றால் நாம் என்னதான் செய்துக்கொண்டுள்ளோம்? என்று கேட்க வேண்டியுள்ளது. கருநாடகத்தில் தண்ணீர் தரவில்லை, கேரளத்தில் தண்ணீர் தரவில்லை, ஆந்திராவில் தண்ணீர் தரவில்லை என்று அரசியல் நடந்தும் நம்ம அரசியல்வாதிகளால் கடலில் கலக்கும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்த என்ன செய்ய திட்டம் செய்துள்ளார்கள்? இங்கிலந்தை சேர்ந்த ஸ்டேன்லி என்ற பொறியாளர் முயற்சி இல்லை என்றால் மேட்டூர் அணையையும் நாம் கண்டுருக்க முடியாது? தஞ்சை விவசாயிகளின் போராட்டமும் முயற்சியும் இல்லாது இருந்திருந்தால் மேட்டூர் அணைக்கு அனுமதிம் கிடைத்திருக்காது. நமககு தெரியாது என இருந்திருந்தால் எதையும் நாம் சாதிக்க முடியாது. தெளிவான சிந்தனையும் முறையான முயற்சியும் நமக்கு இன்று தேவை.......

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

39 comments:

ராமலக்ஷ்மி said...

தெரியாது என.. நல்ல கதை. படங்கள் அருமை.

விரைவில் நலம் பெறுக.

வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ராமலஷ்மி..
மிக்க நன்றிங்க
வாழ்த்துகள் பல

Sangkavi said...

அழகான கதை, அழகான படங்கள்...

S.A. நவாஸுதீன் said...

வாங்க நண்பா! (ஊரில் எல்லோரும் நலமா)

ரொம்ப நாள் கழிச்சு ஒரு அருமையான இடுகையோடு வந்திருக்கீங்க.

நல்ல உதாரணத்துடன் தொடங்கி நம்ம கல்லனையும் தொட்டு நல்ல மெஸ்ஸேஜோட (வழக்கம்போல்) முடித்திருப்பது அருமை.

ஆ.ஞானசேகரன் said...

//Sangkavi said...

அழகான கதை, அழகான படங்கள்...//

வணக்கம் சங்கவி
உங்களின் வருகை மகிழ்ச்சிங்க

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

வாங்க நண்பா! (ஊரில் எல்லோரும் நலமா)

ரொம்ப நாள் கழிச்சு ஒரு அருமையான இடுகையோடு வந்திருக்கீங்க.

நல்ல உதாரணத்துடன் தொடங்கி நம்ம கல்லனையும் தொட்டு நல்ல மெஸ்ஸேஜோட (வழக்கம்போல்) முடித்திருப்பது அருமை.//

வணக்கம் நண்பா
ஊரில் வலமைபோல எல்லோரும் நலம்
தாங்களின் அன்பிற்கு முத்தங்கள்

♠ ராஜு ♠ said...

Welcome Back தல..!

♠ ராஜு ♠ said...

அந்த கதை நல்லாயிருந்த்து.

ஆ.ஞானசேகரன் said...

//♠ ராஜு ♠ said...
Welcome Back தல..!//

// ♠ ராஜு ♠ said...
அந்த கதை நல்லாயிருந்த்து//

நன்றியும் மகிழ்ச்சியும் நண்பா

பின்னோக்கி said...

அருமையான படங்கள், தகவல்களுடன் மீண்டும் வந்திருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

புகைப்படத்தில், கரிகால் சோழனால் கட்டப்பட்ட அணைப்பகுதி எது என்று என்னால் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை.

வினோத்கெளதம் said...

தல வாங்க வாங்க..:)

ஆ.ஞானசேகரன் said...

//பின்னோக்கி said...
அருமையான படங்கள், தகவல்களுடன் மீண்டும் வந்திருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

புகைப்படத்தில், கரிகால் சோழனால் கட்டப்பட்ட அணைப்பகுதி எது என்று என்னால் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை.//

வணக்கம் நண்பா,... மிக்க நன்றிங்க‌
கரிகாலனால் கட்டப்பட்டப்பகுதி முகவாயிலில் உள்ளது என்று நினைக்கின்றேன். இது நான்காவது புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது

ஆ.ஞானசேகரன் said...

//வினோத்கெளதம் said...
தல வாங்க வாங்க..:)//வணக்கம் நண்பா,.... உங்களின் வருகை மகிழ்ச்சிங்க‌

அன்புடன் அருணா said...

வழக்கம் போல் மெஸேஜுடன் தகவல்கள்....அருமை!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தெரிந்து கொண்டோம்

ஆ.ஞானசேகரன் said...

//அன்புடன் அருணா said...
வழக்கம் போல் மெஸேஜுடன் தகவல்கள்....அருமை!
//

வணக்கம் அருணா,... வாங்க வாங்க மிக்க நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
தெரிந்து கொண்டோம்
//

வணக்கம் டாக்டர்... மிக்க மகிழ்ச்சிங்க‌

கார்த்திகைப் பாண்டியன் said...

வணக்கம் தல.. உடம்புக்கு இப்போ கொஞ்சம் பரவாயில்லையா?

கல்லணை.. ஆறு மாசத்துக்கு முன்னாடி போயிருந்தேன்.. வயித்தெரிச்சல்..

ஆ.ஞானசேகரன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
வணக்கம் தல.. உடம்புக்கு இப்போ கொஞ்சம் பரவாயில்லையா?

கல்லணை.. ஆறு மாசத்துக்கு முன்னாடி போயிருந்தேன்.. வயித்தெரிச்சல்..
//

வணக்கம் கார்த்திகைப் பாண்டியன்,.. தற்பொழுது நலம்..

கல்லணை ஒரு சுற்றுளதலமாக இருந்தாலும் அரசு கவனிப்பாரற்று கிடப்பது உண்மையில் வயித்தெரிச்சல்தான்ங்க..... என்ன செய்வது நம்மால் எழுததான் முடிகின்றது.

பிரியமுடன் பிரபு said...

அட ஆமாங்க எதும் தெரியாது என்று இருப்பது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லைங்க. முறையான முயற்சியும் தெளிவான சிந்தனையும் இருந்தாலே போதும் வாழ்க்கையில் முன்னோற முடியுமுங்க....
///

சரியா சொன்னீக

பிரியமுடன் பிரபு said...

க்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Photobucket
இவர்களால்தான் நான் உற்சாகமாக இருக்கிறேன்
Thursday, January 21, 2010
தெரியாது என....
தெரியாது என...

வணக்கம் நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப்பின் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி. தமிழ்மணம் விருதுப்பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். வேலை பளு மற்றும் உடல் உபாதைகள் காரணமாக தொடர்ந்து இணையத்தில் வரமுடியவில்லை. இனி கொஞ்சம் கொஞ்சமாக வருவேன் என்று நினைக்கின்றேன்.

ஒரு செவிவழி கேட்ட கதை ஒன்னுங்க,... ஒரு இளைஞன் வேலைதேடி ஒரு பெரிய வெளிநாட்டு நிர்வாகத்திற்கு சென்றான். "அங்கு அலுவலகம் துப்பறவு பணி காலியாக இருப்பதாகவும் உடனே எங்கள் அலுவலகத்திற்கு ஒரு மின்னஞ்சல் செய்யுங்கள் அந்த வேலை உங்களுக்குத்தான்" என்று அங்குள்ள அதிகாரி சொன்னார். அதை கேட்டு மகிழ்ந்தான் ஆனால் தன்னிடம் மின்னஞ்சல் முகவரி மற்றும் அனுப்பும் முறையும் தெரியாததால் அலச்சியமாக இருந்துவிட்டான். அந்த வேலை வேறு ஒருவனுக்கு கிடைத்துவிட்டது. தனது குடும்பம் வறுமையை போக்க வேறு வழியின்றி பக்கத்து ஊரில் உள்ள மலிவான காய்களை வாங்கி அவன் ஊரில் விற்றதில் லாபம் ரூ20 கிடைத்தது. இதை இன்னும் கொஞ்சம் அதிகமாக காய்கள் வாங்கி விற்றான் லாபம் அதிகமாக கிடைத்தது. காய்கள் தேவை அதிகமானதால் தானே தோட்டமும் வாங்கி காய்கள் விவசாயமும் செய்து விற்பனை செய்தான் லாபமும் அதிகமாக கிடைத்தது. இவனிடம் 300 பேர் வேலைசெய்யும் அளவிற்கு பெரிய அளவில் இவனின் வியாபரம் பெருகியது. கணக்குகள் சரிபார்க்க கணனி மற்றும் வேலையாட்களும் இருந்தார்கள்.

இந்த அளவிற்கு பெரிய வியாபாரியாக இருந்தாலும் கணனியை பயன்படுத்த தெரியாதவனாக இருந்தான். அங்கிருந்த ஒருவர் " இவ்வளவு பெரிய வியாபாரியாக இருக்கும் உங்களுக்கு கணனியை பயன்படுத்த தெரியவில்லையே" என்று கேட்டார். அதற்கு அவன் "இது தெரிந்திருந்தால் நான் இன்னும் கூட்டிக்கொண்டுதான் இருந்திருப்பேன்" என்றார்.

அட ஆமாங்க எதும் தெரியாது என்று இருப்பது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லைங்க. முறையான முயற்சியும் தெளிவான சிந்தனையும் இருந்தாலே போதும் வாழ்க்கையில் முன்னோற முடியுமுங்க....

சென்ற முறை இந்தியா சென்ற பொழுது கல்லணைக்கு சென்றேன். காவிரி ஆற்றில் கட்டிய அணைகளிலேயே மிக பழமையான அணையாகும். கரிகால்ச்சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகின்றது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லும் களிமண்ணாலும் கட்டப்பட்ட இந்த அணை கிட்டதட்ட 19 நூற்றாண்டுகளாக நமது பாசனத்திற்கு பயன்பட்டுவருகின்றது எனபது மிக பெரிய ஆச்சரியம். சிறுவனாக சிறுவகளோடு விளையாடிக்கொண்டிருந்த கரிகாலனை பட்டத்து யானையால் மாலையிட்டு அரியணை ஏறிய இரண்டாம் நூற்றாண்டு சோழ மன்னனாவான். அப்படிப்பட்ட சிறுவன் தனக்கு தெரியாதென இருந்திருந்தால் இன்று நான்(நாம்) பார்த்த கல்லணை இருந்திருக்காது.

கல்லணை பற்றிய புகைப்படம் மேலும் இங்கே சுட்டவும்...

சுமார் 19 நூற்றாண்டுக்கு முன்னரே காவேரியின் போக்கை கட்டுப்படுத்தி அவற்றை முறையான பாசனத்திற்கு பயன்படுத்திய பாங்கு இன்றுவரை நம் அரசுக்கு தெரியாமல் இருப்பதேன்? அட அது போகட்டுங்க அந்த அணையையாவது பராமரித்து வருகின்றார்களா? என்றால் நாம் என்னதான் செய்துக்கொண்டுள்ளோம்? என்று கேட்க வேண்டியுள்ளது
/////////

நங்கதான் இலவசாம அரிசி தருகிறோம் சமைது சாப்பிடுகொண்டே இலவச டீவி பாருங்கோ வேறு என்ன இன்னும் செய்யனும்??????? -கலைஞர்

cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன்

உடல் நலம் தேறியது மகிழ்ச்சி

சந்திக்க இயலவில்லை

முறையான பயிற்சியும், முயற்சியும், தெளிவான சிந்தனையும் இருந்தால் சாதிக்கலாம். உண்மை.

நல்லதொரு இடுகை - நல்வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

[[ பிரியமுடன் பிரபு said...

அட ஆமாங்க எதும் தெரியாது என்று இருப்பது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லைங்க. முறையான முயற்சியும் தெளிவான சிந்தனையும் இருந்தாலே போதும் வாழ்க்கையில் முன்னோற முடியுமுங்க....
///

சரியா சொன்னீக]]

வணக்கம் பிரபு.. மிக்க மகிழ்ச்சிங்க

[[நங்கதான் இலவசாம அரிசி தருகிறோம் சமைது சாப்பிடுகொண்டே இலவச டீவி பாருங்கோ வேறு என்ன இன்னும் செய்யனும்??????? -கலைஞர்]]

என்னபன்னுறதுங்க அப்படிதான் போயிகொண்டுள்ளது... தொலைநோக்குப்பார்வை வேனும் என்பதை எப்பொழுது புரிந்துக்கொள்ளபோகின்றோம்????

ஆ.ஞானசேகரன் said...

//cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன்

உடல் நலம் தேறியது மகிழ்ச்சி

சந்திக்க இயலவில்லை

முறையான பயிற்சியும், முயற்சியும், தெளிவான சிந்தனையும் இருந்தால் சாதிக்கலாம். உண்மை.

நல்லதொரு இடுகை - நல்வாழ்த்துகள்//

வணக்கம் ஐயா,.. அடுத்த முறை கண்டிப்பாக சந்திக்கலாம். மிக்க நன்றிங்க....

பிரபாகர் said...

கல்லணை பற்றிய தகவல் அருமை... வெல்கம் பேக்...

பிரபாகர்.

ஆ.ஞானசேகரன் said...

//பிரபாகர் said...

கல்லணை பற்றிய தகவல் அருமை... வெல்கம் பேக்...

பிரபாகர்.//

வணக்கம் பிரபாகர்
மிக்க நன்றிங்க

ஹேமா said...

வாங்கோ...வாங்கோ ஞானம்.தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் எல்லாம் கொண்டாடிக் களைச்சு வந்தாலும் அருமையான தொடக்கத்தோட தன்னம்பிக்கையோட பதிவு தொடங்கிட்டீங்க.இனி அசத்துங்க.வாழ்த்துக்கள் சகோதரா.

வால்பையன் said...

//எதும் தெரியாது என்று இருப்பது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லைங்க. முறையான முயற்சியும் தெளிவான சிந்தனையும் இருந்தாலே போதும் வாழ்க்கையில் முன்னோற முடியுமுங்க....//

ரொம்ப சரியா சொன்னி(னா)ங்க

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
வாங்கோ...வாங்கோ ஞானம்.தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் எல்லாம் கொண்டாடிக் களைச்சு வந்தாலும் அருமையான தொடக்கத்தோட தன்னம்பிக்கையோட பதிவு தொடங்கிட்டீங்க.இனி அசத்துங்க.வாழ்த்துக்கள் சகோதரா.//

வாங்க ஹேமா, வணக்கங்க
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

ஆ.ஞானசேகரன் said...

[[வால்பையன் said...
//எதும் தெரியாது என்று இருப்பது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லைங்க. முறையான முயற்சியும் தெளிவான சிந்தனையும் இருந்தாலே போதும் வாழ்க்கையில் முன்னோற முடியுமுங்க....//

ரொம்ப சரியா சொன்னி(னா)ங்க]]

வாங்க தல மிக்க நன்றிபா

" உழவன் " " Uzhavan " said...

வணக்கம் நண்பா.. எப்படி இருக்கீங்க? :-)

ரோஸ்விக் said...

சிந்தனை தூண்டிய கதை.

கல்லணை கவனிப்பாரற்றுக் கிடப்பது மிகுந்த வருத்தமானது தான். :-(

இதையும் அவர்கள் சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

புகைப்படங்கள் மிகத் துல்லியம். வாழ்த்துகள்.

சரியாக உடல் நலம் பேணவும்.

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...
வணக்கம் நண்பா.. எப்படி இருக்கீங்க? :-)//

வணக்கம் நண்பா,.. நலம்.. மிக்க மகிழ்ச்சிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

// ரோஸ்விக் said...
சிந்தனை தூண்டிய கதை.

கல்லணை கவனிப்பாரற்றுக் கிடப்பது மிகுந்த வருத்தமானது தான். :-(

இதையும் அவர்கள் சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

புகைப்படங்கள் மிகத் துல்லியம். வாழ்த்துகள்.

சரியாக உடல் நலம் பேணவும்.//

வணக்கம் ரோஸ்விக்,... எப்படியிருக்கீங்க? மிக்க நன்றிபா

சொல்லரசன் said...

ஞானசேகரன் நலமா? இந்த முறை திருச்சியில் உங்களை சந்திக்கமுடியாமல் போனது வருத்தமே.

//அரசியல்வாதிகளால் கடலில் கலக்கும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்த என்ன செய்ய திட்டம் செய்துள்ளார்கள்? //

அதில் கமிஷன் அதிகம் வராது என்பதால் விட்டுவிட்டார்கள்

ஆ.ஞானசேகரன் said...

[[சொல்லரசன் said...
ஞானசேகரன் நலமா? இந்த முறை திருச்சியில் உங்களை சந்திக்கமுடியாமல் போனது வருத்தமே.

//அரசியல்வாதிகளால் கடலில் கலக்கும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்த என்ன செய்ய திட்டம் செய்துள்ளார்கள்? //

அதில் கமிஷன் அதிகம் வராது என்பதால் விட்டுவிட்டார்கள்]]
வணக்கம் சொல்லரசன்,.. நான் நலம்.. நீங்கள்? கமிஷன் வராது என்பது சரிதான் என்னபன்ன்னுரது.....?????

விஜய் said...

நலமா நண்பா

சரியான சிந்தனை

வாழ்த்துக்கள்

விஜய்

ஆ.ஞானசேகரன் said...

//விஜய் said...
நலமா நண்பா

சரியான சிந்தனை

வாழ்த்துக்கள்

விஜய்//

வாங்க நண்பா,.. வணக்கம்
மிக்க நலம்..

நன்றி நண்பா..

henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here