_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, July 22, 2010

பெண்ணே நீயும் பெண்ணா?.... பெண்ணல்ல ஓவியம்!....

பெண்ணே நீயும் பெண்ணா?.... பெண்ணல்ல ஓவியம்!....

"பெண்களுக்கு ஏற்படும் வலிகளும் உணர்வுகளும் ஒரு பெண்ணால் புரிந்து உணர்ந்துக்கொள்ள முடியும். ஒரு ஆணால் கேட்டு புரிந்து தெரிந்துக்கொள்ள முடியும்.........."

வணக்கம் நண்பர்களே!
நான் வீட்டுக்கு வரும் வழியில் நான்கு பெண்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள், அதில் ஒரு பெண் கர்ப்பிணி. கர்ப்பிணி பெண்ணிடம் ஒரு பெண் " ஏங்க நீங்க உட்காந்து பேசுங்க எனக்கு கால் வலிப்பதுபோல இருக்கு" என்று சொன்னார்கள்.... அந்த நிமிடங்களில் எனக்கு ஒரு வித மகிழ்ச்சி வந்துசென்றாலும் சில சில வாங்கியங்கள் நினைவில் வந்து சென்றதை தவிற்க முடியவில்லை......... அதுவும் பெண்களிடமிருந்து வந்த வார்த்தைகள்தான்.
" என்னமோ இவ மட்டும் புள்ளதச்சியா இருப்பதாக நிணைச்சி இந்த ஆட்டு ஆட்டுரா.."
"நாங்களெல்லாம் புள்ளபெத்துகல இவ என்ன? இங்க நோவுது அங்க நோவுது என்று நடிக்கின்றா..."

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

என்னோடு வேலை செய்யும் சீன பெண் ஒருத்தி என்னிடம் ஒரு நாள் " இன்று காலை மருத்துவரை பார்த்தேன் மருத்துவர் உறுதிப்படுத்தினார்..... இது மூன்றாவது மாதம்" என்று சொல்லிவிட்டு எப்பொழுதும் போல அவள் வேலையை பார்த்துக்கொண்டுருந்தாள்..... இது அவளுக்கு முதல் குழந்தை.

பக்கத்து வீட்டில் தங்கிருக்கும் தம்பதினர் காலையில் வெளியில் சென்றனர்..... என்னை பார்த்துவிட்டு இருவரும் சிரித்துக்கொண்டே சென்றார்கள்.... பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பியதும் அவர் வீட்டிற்கு பொழுது போக்காக நான் சென்றேன். அந்த நண்பர் சமையல் அறையில் போராடிக்கொண்டிருந்தார். "என்ன சார் சமையல் எல்லாம் கலக்கலா இருக்கு" என்றேன். " ஆமாம் சார் காலையில் மருத்துவரை பார்க்க சென்றோம் மருத்துவர் உறுதி படுத்தினார்" என்றார். "அடடேய் வாழ்த்துகள் தலைவரே" என்றேன்....... " நன்றி சார் வீட்டுல மயக்கமா இருக்காங்க அதுதான் நான் சமையலுல இறங்கிட்டேன்" என்றார்..... "நல்லது விட்டுலயும் வாழ்த்து சொன்னதாக சொல்லிருங்க"... என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்....

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

பேரூந்தில் அன்று கும்பல் அதிகமாகவே இருந்தது அந்த நேரம் பார்த்து ஒரு கர்ப்பிணி பெண் வண்டியில் ஏறுகின்றாள்.... " ஏம்பா புள்ளதாச்சிக்கு யாராவது ஆம்பளங்க ஏந்திருச்சி உட்கார இடம் கொடுங்கப்பா...." முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் பெண் சொல்லுகின்றாள்.......

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் கிராமத்தில் சில பெண்கள் வேகமாக வயல் வெளிக்கு சென்றார்கள்.... சிறிது நேரத்திற்கு பின் அவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஒரு சிறு கைகுழந்தையுடன் வந்தார்கள்.... அவர்களுக்கு பின் மெதுவாக அந்த தாயும் வந்துகொண்டிருந்தாள்..... கழை எடுக்க சென்ற பெண் பிரசவ வலி எடுத்து அந்த வயல் மேட்டுலேயே பிள்ளை ஈண்றாள்....

=> " நான்கு மாசம் ஆச்சே ஸ்கேன் எடுத்தாச்சா?" ம்ம்ம்ம் எடுத்தாச்சி அக்கா நல்லாயிருக்குண்ணு சொன்னாங்க.........
=> "ஆறு மாசம் ஆச்சே ஸ்கேன் எடுத்தியா இல்லையா? ம்ம்ம்ம்ம் குழந்தை நல்லா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க.......
=> "ஒன்பது மாசம் ஆச்சா..... டாக்டர் என்ன சொன்னாங்க.? ம்ம்ம்ம்ம் டாக்டர் ஸ்கேன் எடுத்தாங்க குழந்த நல்ல வளர்ச்சியுடன் இருக்கு பயம் வேண்டாம் என்று சொன்னார்........
பிரசவ வலியில் அவள்.... டாக்டர் அவள் கணவனிடம் " குழந்தை திரும்பவில்லை உடன் அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் உங்களின் ஒப்புதலுக்காகத்தான் காத்திருக்கின்றோம்....... (செலவு ரூ.20,000)"

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

ஒரு சில நாட்களுக்கு முன் தினமலரில் வந்த செய்தி...... அது மறக்க வேண்டிய செய்தி அதனால் அதன் சுட்டியை சேமிக்கவில்லை இங்கே சுட்டியை கொடுக்க மனமுமில்லை.... 14 வயது மாணவி கழிப்பறையில் தானாக குழந்தையை பெற்றெடுத்து குப்பை தோட்டியில் வீசி வந்த கொடுமை........
இது எப்படி சாத்தியம் என்று மருத்துவ பதிவர்கள்தான் விளக்கம் சொல்லமுடியும்.... இதுபோல கழிவறையில் குழந்தை பெற்று வீசி எரிந்த சம்பவம் எல்லா நாடுகளிலும் இருப்பதாக பல செய்திகளில் பார்க்க முடிகின்றது.....

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை கண்டிப்பாக படிக்கவும்)

என் எண்ணங்களில் வந்து சென்ற விடயங்கள் யாரையும் புண்படுதுவதற்காக இல்லை....

நட்புடன்...
ஆ.ஞானசேகரன்.

19 comments:

ரோஸ்விக் said...

நமக்கு புரிஞ்ச அளவுக்கு... அவங்களுக்கு புரியலையோ... ;-)

"உழவன்" "Uzhavan" said...

பெண்களே சொல்கிறார்களே.. பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி என்று..
நல்ல பகிர்வு நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//ரோஸ்விக் said...
நமக்கு புரிஞ்ச அளவுக்கு... அவங்களுக்கு புரியலையோ... ;-)
//

வாங்க நண்பா,...
புரிந்தும் புரியாதா மாதுரி இருக்குமோ..

ஆ.ஞானசேகரன் said...

//"உழவன்" "Uzhavan" said...
பெண்களே சொல்கிறார்களே.. பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி என்று..
நல்ல பகிர்வு நண்பா
//

வணக்கம் உழவன்
மிக்க நன்றிபா

நிலாமதி said...

பூக்கள் பல் நிறம் அவை பூவினத்தை சேர்ந்தவை என்று சொல்வதில்லையா?
அது போல் பெண்கள் பல் நிறம். அவர்களும் பெண்கள் தான்.

ஆ.ஞானசேகரன் said...

//அன்புடன் அருணா said...
:(
//

வணக்கம் டீச்சர்,,,,
உங்களிடம் சில கருத்துகளை எதிர்ப்பார்த்தேன்.... படத்தை போட்டு ஏமாற்றிவிட்டீர்களே!

மிக்க நன்றிங்க அருணா

ஆ.ஞானசேகரன் said...

//நிலாமதி said...
பூக்கள் பல் நிறம் அவை பூவினத்தை சேர்ந்தவை என்று சொல்வதில்லையா?
அது போல் பெண்கள் பல் நிறம். அவர்களும் பெண்கள் தான்.
//

வாங்க நிலாமதி...
சில அடிப்படையான குணங்கள் மாறாமல் இருத்தல் நல்லது என்று நினைக்கின்றேன்... மிக்க நன்றிங்க

sakthi said...

onnum solrathuku illai pa

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...
onnum solrathuku illai pa
//

வணக்கம் சக்தி....

S.Gnanasekar said...

"பெண்களுக்கு ஏற்படும் வலிகளும் உணர்வுகளும் ஒரு பெண்ணால் புரிந்து உணர்ந்துக்கொள்ள முடியும். ஒரு ஆணால் கேட்டு புரிந்து தெரிந்துக்கொள்ள முடியும்.........."

ஆண்களும் வலியை உணர்ந்துகொள்ள முடியாவிட்டாலும் ஒரு வகை வேதனை இருக்கும்.

CorTexT (Old) said...

மூளையின் பரிணாம வளர்ச்சியில், கீழ் மட்ட உயிரனங்கள் சுற்றுப்புற வினைகளுக்கு ஏற்ப எதிர்வினைகளை (தன்னிச்சை செயல் போல்) ஏற்படுத்தும். அடுத்த கட்ட வளர்ச்சியில், மூளை சுற்றுப்புற (உலக) மாதிரியை ஏற்படுத்தி, அதற்கு ஏற்ப மேலும் தகுந்த எதிர்வினைகளை உருவாக்க ஆரம்பித்தது. அடுத்த கட்டமாக, இந்த மாதிரிகளை கொண்டு நடக்காத ஒன்றை உருவகப்படுத்தி அதன் பலவிதமான விளைவுகளை அறிந்து கொண்டு அதில் சிறந்தவற்றை எதிர்வினைகளாக பயன்படுத்த ஆரம்பித்தது. கனவுகள் இப்படிப்பட்ட உருவகப்படுத்துதல் தான். திட்டமிடுதல் இப்படிப்பட்ட உருவகப்படுத்துதல் தான்.

அடுத்தவர் சில சூழ்நிலைகளுக்கு எப்படி உணர்வார் என்பதை நாம் உணர்வதும் இப்படிப்பட்ட உருவகப்படுத்துதல் தான். ஆனால் மூளையின் அமைப்பும் அது உருவாக்கிய மாதிரிகளும் ஒன்றாக இருந்தால் இந்த உருவகப்படுத்துதல் சரியாக இருக்கும். எனவே இது ஒவ்வொருவருக்கும் வேறாக இருக்கும். பொதுவாக ஒரு பெண் மற்றொரு பெண்ணை ஒரு ஆணை விட சரியாக உருவகப்படுத்துதலாம். ஒரே மொழி, இன, கலாச்சார அமைப்பை கொண்ட இருவர் மற்றொருவரை விட சரியாக உருவகப்படுத்துதலாம்.

உருவகப்படுத்துதலை பற்றிய என்னுடைய பதிவு:
http://icortext.blogspot.com/2009/11/blog-post_06.html

ஆ.ஞானசேகரன் said...

// S.Gnanasekar said...

"பெண்களுக்கு ஏற்படும் வலிகளும் உணர்வுகளும் ஒரு பெண்ணால் புரிந்து உணர்ந்துக்கொள்ள முடியும். ஒரு ஆணால் கேட்டு புரிந்து தெரிந்துக்கொள்ள முடியும்.........."

ஆண்களும் வலியை உணர்ந்துகொள்ள முடியாவிட்டாலும் ஒரு வகை வேதனை இருக்கும்.//

வணக்கம் ஐயா...
நீங்கள் சொல்வதும் சரிதான்... அது எல்லோருக்கும் இருக்குமா? என்பதுதான் என் சந்தேகம்

மிக்க நன்றி ஐயா..

ஆ.ஞானசேகரன் said...

//CorText said...

மூளையின் பரிணாம வளர்ச்சியில், கீழ் மட்ட உயிரனங்கள் சுற்றுப்புற வினைகளுக்கு ஏற்ப எதிர்வினைகளை (தன்னிச்சை செயல் போல்) ஏற்படுத்தும். அடுத்த கட்ட வளர்ச்சியில், மூளை சுற்றுப்புற (உலக) மாதிரியை ஏற்படுத்தி, அதற்கு ஏற்ப மேலும் தகுந்த எதிர்வினைகளை உருவாக்க ஆரம்பித்தது. அடுத்த கட்டமாக, இந்த மாதிரிகளை கொண்டு நடக்காத ஒன்றை உருவகப்படுத்தி அதன் பலவிதமான விளைவுகளை அறிந்து கொண்டு அதில் சிறந்தவற்றை எதிர்வினைகளாக பயன்படுத்த ஆரம்பித்தது. கனவுகள் இப்படிப்பட்ட உருவகப்படுத்துதல் தான். திட்டமிடுதல் இப்படிப்பட்ட உருவகப்படுத்துதல் தான்.

அடுத்தவர் சில சூழ்நிலைகளுக்கு எப்படி உணர்வார் என்பதை நாம் உணர்வதும் இப்படிப்பட்ட உருவகப்படுத்துதல் தான். ஆனால் மூளையின் அமைப்பும் அது உருவாக்கிய மாதிரிகளும் ஒன்றாக இருந்தால் இந்த உருவகப்படுத்துதல் சரியாக இருக்கும். எனவே இது ஒவ்வொருவருக்கும் வேறாக இருக்கும். பொதுவாக ஒரு பெண் மற்றொரு பெண்ணை ஒரு ஆணை விட சரியாக உருவகப்படுத்துதலாம். ஒரே மொழி, இன, கலாச்சார அமைப்பை கொண்ட இருவர் மற்றொருவரை விட சரியாக உருவகப்படுத்துதலாம்.

உருவகப்படுத்துதலை பற்றிய என்னுடைய பதிவு:
http://icortext.blogspot.com/2009/11/blog-post_06.html//

மனம் சார்ந்த விளக்கம் அருமை..
மிக்க நன்றி CorText

ஹேமா said...

புரிதலுக்கு மிக்க நன்றி ஞானம்.சில பெண்கள் பிறப்பில் விதிவிலக்கு.
அவர்களைப் பற்றிப் பேச்சு வேண்டாமே !

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

புரிதலுக்கு மிக்க நன்றி ஞானம்.சில பெண்கள் பிறப்பில் விதிவிலக்கு.
அவர்களைப் பற்றிப் பேச்சு வேண்டாமே !//

ம்ம்ம்... சரி நீங்களே சொல்லும்பொழுது வேறு என்ன செய்யமுடியும்....

Anonymous said...

Genial fill someone in on and this mail helped me alot in my college assignement. Thanks you on your information.

ஆ.ஞானசேகரன் said...

//Anonymous said...
Genial fill someone in on and this mail helped me alot in my college assignement. Thanks you on your information.//
மிக்க மகிழ்ச்சிங்க.... உங்கள் பெயரை சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்..

அன்புடன் நான் said...

வணக்கம் நண்பா... நலமா?
உங்க அலசல் நல்லாயிருக்கு நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

//சி. கருணாகரசு said...
வணக்கம் நண்பா... நலமா?
உங்க அலசல் நல்லாயிருக்கு நண்பா.//
வணக்கம் கருணாகரசு,..
வருகைக்கு மகிழ்ச்சி... மிக்க நலம்....வேலையில் காரணமாக அடிக்கடி வர இயலவில்லை...