_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, August 15, 2010

இனியொரு விதி! 64 வது சுதந்திர தினம்...

இனியொரு விதி! 64 வது சுதந்திர தினம்...

Photobucket

இப்படி இருந்த நான்!..... இப்போ எப்படினு சொல்ல தெரியவில்லை. ஒன்று மட்டும் உண்மை மனதில் பல கேள்விகள் இல்லாமல் இல்லை. இந்தியா 64 வருடங்களுக்கு முன் வெள்ளையர்களிடம் அடிமைபட்டு இருந்தது. "அதனால் என்ன? இன்றுதான் சுதந்திரமாக இருக்கின்றோமே!... " அந்த சுதந்திரத்தில் தான் எனக்குள் இருக்கும் கேள்விகள். எப்படிப்பட்ட சுதந்திரம் நாம் அனுபவிக்கின்றோம்?

முறையாக அரசு சான்றிதழ்கள் பெற முடிகின்றதா?..... பிறப்பு, இறப்பு, சாதி, வருமானம் மற்றும் அரசு சார்ந்த சான்றிதழ்கள் பெற முடிகின்றதா?..... கையூட்டு கொடுக்காமல் வாங்க நினைக்கும் என்னால் குறித்த நேரத்தில் சரியான சான்றிதல் பெறமுடியாமல் தவிற்பதேன்? அட குடும்ப அட்டை பெறுவதில் எத்தனை சிக்கல்?..... எப்படிப்பட்ட உரிமை இந்த அரசு நமக்கு அழித்துள்ளது? முறையாக குடும்ப அட்டை இல்லாத குடும்பங்கள் எத்தனை? இதுதான் 64 ஆண்டுகால சாதனையா? இன்னும் நாம்முடைய பழைய அரசியல் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செல்வதால்தான் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு பெறுவதற்கும் சாதகமாக இருக்கு... சட்ட ஒழுங்கும் தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றது.

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு கேள்வி.... இந்தநாள் வரை கையூட்டு கொடுக்காமல் மற்றும் உயர் அதிகாரி சிபாரிசு செய்யாமல் நான் அரசிடமிருந்து எனது சரியான சான்றிதழ்கள், அரசு ஆவணங்கள் பெற்றுள்ளேன் என்று சொல்ல முடியுமா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கையூட்டு கொடுத்தவர்களாகவே இருக்கின்றோம்.......... இவற்றுக்கெல்லாம் காரணம் நம்முடைய அவசரம் மட்டும் காரணமாக சொல்ல முடியாது. அரசு தன் கடமைகளை சரியாக கவணிக்காமல் போகின்றது. சட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு சிறு மாறுதல்கள் செய்யாமல் இருப்பதனால் அதிகாரிகள் அவற்றை முறையின்றி பயன்படுத்துகின்றார்கள்.

இந்நாட்டின் மிக பெரிய சொத்து இடம் மனைகள். மனைகளை விற்க வாங்க எத்தனை சட்ட சிக்கல்கள். ஒரு இடத்தை பலருக்கு விற்பது. மற்றவர் இடத்தை வேறு ஒருவன் விற்பது. அப்படியே சரியாக விற்றாலும் அந்த இடத்திற்கான பட்டா முறைகேடாக இருப்பது. எல்லாமே இந்த அரசு அதிகாரிகளின் கையூட்டுதான் காரணமாக இருக்கு. இவற்றையெல்லாம் கடந்து நீதி மன்றம் சென்றால் அது இல்லை இது இல்லை என்று சொல்லி பாதிக்கபட்டவன் மீண்டும் பாதிக்கபடுகின்றான். இந்த நாட்டை ஆழ்பவர்கள் உண்மையில் தாதாக்களும் கட்டப்பஞ்சாத்துகாரர்களுமே..... அரசு ஒரு சும்மாதான்.... நீதி மன்றத்தில் கிடைக்கா பல நியாம் கட்டபஞ்சாயத்தில் கிடைப்பதாக மக்கள் நம்ப வேண்டிய சூழல்கள் இருக்கின்றதை மறுக்க முடிவதில்லை.... நீதி மன்றத்தில் குற்றவாளிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை தாதாக்களிடம் கிடைக்கும் என்றுதான் தோற்றம் உள்ளது. பல குற்றவாளிகள் சுதந்திரமாக வேளிவந்து விடுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் மகளிர்க்கெதிரான வன்முறை, பாலியல் கொடுமை, சிறார்களின் வன்கொடுமை என்று செய்திகளில் வருகின்றதே தவிற குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்களா? 15 நாட்களில் ஒப்புதலின் பேரில் வெளிவந்து மீண்டும் அதே தவறுகளுக்கு ஆய்த்தமாகின்றார்கள். அதனால்தான் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வெளியில் சொல்வதேயில்லை..... அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் நியாத்திற்காக நிதிமன்றம் சென்றால் நீதிமன்றத்தில் இடம் இருக்காது. அந்த அளவிற்கு குற்றம் மலிந்துள்ள சமூகமாக இருக்கின்றது....

"மக்களையும் மக்கள் வாழ்க்கை முறையும் பாதுக்காக்க வேண்டியது காவல்த்துறையின் கடமை". தனக்கும் தன்குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டி வேண்டுகோள் கொடுக்க எந்த ஒரு குடிமகனுக்கும் காவல் நிலையம் செல்ல துணிவுள்ளதா? அப்படி பட்ட சூழல் இருப்பதாக தெரிகின்றதா?... பாதுகாப்புக்காக மற்றொரு ரெளடியை நாட வேண்டியுள்ளது...... இவற்றையெல்லாம் காணும்பொழுது இந்த கொள்ளையர்களை விட அந்த வெள்ளையர்களே மேல் என்றல்லாவா தோன்றம் கொடுக்கின்றது.

எல்லோருக்கும் முறையான கல்வி கிடைப்பதில் அரசு கவணம் செலுத்தாமல், கல்வியை தனியாரிடம் கொடுத்து "காசுக்காக கல்வி" என்ற நிலையில் இன்று நாம்...... அனுபவிப்பது 64வது சுதந்திர தினம்.

விவசாயிகள் விளைவித்த தானியங்களை கொள்முதல் தனியாரிடம் கொடுத்துவிட்டு விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுவது...... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

நாளுக்கு குறைந்தது நான்கு மணிநேரம் மின்வெட்டு... பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் மின் வழங்குதல்..... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

தெற்கு எல்லையில் அவ்வப்போழுது சுட்டுக்கொள்ளும் தமிழக மீனவர்களை கண்டு கொள்ளாமல் மெத்தன இருப்பது..... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

சாதாரண குடிநீர் கொடுப்பதில் தன்நிறைவு பெற முடியாமல் வல்லரசு கனவில் நாம்.... காசு கொடுத்து தண்ணீர் பெறும் நிலையில்.... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

மனிதன் மலத்தை சக மனிதன் கையில் அள்ளிப்போடும் அவலமான நிலையில்தான் கணனியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ள நாம்.... அனுபவிப்பது 64வது சுதந்திர தினம்.

விளைநிலங்கள் எல்லாம் மனைகளாக மாற்றி பணம் பார்க்கும் கொள்ளையரை கண்டும் காணாமல் இருக்கும் அரசு...... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

இப்படி எண்ணற்ற சாதாரண கேள்விகளுக்கே பதில் கிடைக்காமல் போகின்றது. அப்படி பட்ட சூழ்நிலையில் இந்த 64 வது சுதந்திர தின உணர்வு தேவையா? என்ற கேள்வியும் எல்லோருக்கும் இருக்கலாம்..... என்னை பொருத்தவரை இப்படிப்பட்ட தேச உணர்வு இல்லாமல் இருப்பதே இந்த சுழல்களுக்கு காரணமாக இருப்பதாக சொல்வேன்.....

நாம்!...
நம் நாடு!....
நம் மக்கள்!....
என்ற உணர்வை நம் சந்ததினர்க்கு விட்டு செல்லாமல் இருந்தோமேயானால் மீண்டும் ஒரு சுதந்திர தினம் கொண்டாட வேண்டிய நிலமையும் வரலாம். அரசை தட்டி கேட்பது நமது உரிமை அதே சமயம் நாட்டையும் நாட்டின் உணர்வையும் மதிக்க வேண்டியது நமது கடமை...... உலகிலேயே மிக பெரிய முழு சனநாயக நாடு இந்தியா..... முறையான சட்டங்கள் இருந்தும் ஒழுங்கற்ற சூழல்களினால் தடம் புரண்டு ஓடுகின்றது. சரியான தலைமை இல்லாமல் இருப்பதும் நமது பாக்கியமின்மை. நல்ல தலைவர்களுக்காக இன்னும் எத்தனை காலம் காக்க வேண்டும் என்றுதான் தெரியவில்லை?....... அப்படிப்பட்ட நல்ல நாளை எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவன்..... வல்லரசு கனவை தூக்கி எரிந்துவிட்டு நல்லரசை காண விழைவோம். அந்த நல்லரசே வல்லரசாகும்......

நாமும் இந்த நாட்டுக்கு என்ன செய்தோம்?, என்ன செய்துக்கொண்டுள்ளோம்?, என்ன செய்ய போகின்றோம்? என்று எண்ணிப்பார்க்கும் தருணமாக கருதுவோம்!... குற்றவாளிகளும் முறைகேடானவர்களும் நம்மில் ஒருவர்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றங்களை நம்மிலிருந்து தோடங்கலாமே!.....


64 வது சுதந்திரன தின வாழ்த்துகள் சொல்லிக்கொள்பவன்..
ஆ.ஞானசேகரன்.

20 comments:

நட்புடன் ஜமால் said...

சேகரிக்கப்பட்ட ஞானம் :)

சுதந்திர தின நல் வாழ்த்துகள்

கடைசி பத்தி மிக அருமை

ஆ.ஞானசேகரன் said...

// நட்புடன் ஜமால் said...

சேகரிக்கப்பட்ட ஞானம் :)

சுதந்திர தின நல் வாழ்த்துகள்

கடைசி பத்தி மிக அருமை//

நன்றி நண்பா,,,
உங்களுக்கும் என் சுதந்திர தின நல் வாழ்த்துகள்

கிடுகுவேலி said...

நீங்கள் இப்படி வருத்தப்படுகிறீர்கள் அய்யா....நாமோ இருளில் இருந்து ஒளிக்கு வந்த இந்தியா பல நாடுகளுக்கு ஒளியை வழங்கிய இந்தியா எமக்கு மட்டும் ஒரு நீதி வழங்கி இருளில் தள்ளியுள்ளது. பாரத மாதாவின் குழந்தை என்று நீங்கள் இந்திய சுதந்திர தினத்தில் பெருமை கொள்ளலாம். ஆனால் நாம்....வருத்தமே கொள்ள முடியும்..!

ஆ.ஞானசேகரன் said...

// கதியால் said...

நீங்கள் இப்படி வருத்தப்படுகிறீர்கள் அய்யா....நாமோ இருளில் இருந்து ஒளிக்கு வந்த இந்தியா பல நாடுகளுக்கு ஒளியை வழங்கிய இந்தியா எமக்கு மட்டும் ஒரு நீதி வழங்கி இருளில் தள்ளியுள்ளது. பாரத மாதாவின் குழந்தை என்று நீங்கள் இந்திய சுதந்திர தினத்தில் பெருமை கொள்ளலாம். ஆனால் நாம்....வருத்தமே கொள்ள முடியும்..!//

வணக்கம் கதியால்...
உங்களின் வ்ருத்தம் புரிகின்றது. அதே சமயம் மிக பெரிய முழுமையான சனநாயக நல்லவைகளுக்காக காத்திருக்க வேண்டிதான் இருக்கின்றது... நமக்கு உள்ள உரிமை போல எதிர் வாதங்களுக்கும் உரிமை இருக்கு அதுதான் அதன் பலமும் பலவீனமும்...

நன்றி நண்பா

அன்புடன் அருணா said...

நிறைய வருத்தங்களுடன்....

கார்த்திகைப் பாண்டியன் said...

தனிமனித ஒழுக்கத்தை எல்லாருமே பின்பற்றணும் நண்பா.. அப்பத்தான் நீங்க சொல்லி இருக்குற பிரச்சினைகள் எல்லாம் தீரும்..

தீரும் என்ற நம்பிக்கையுடன்..
இனிய சுதந்திர நல்வாழ்த்துகள்

குடந்தை அன்புமணி said...

இப்படி வருத்தப்படும் ஜீவன்கள் பல இருக்கின்றன. ஆண்டுகள் பலவாக தொடரத்தான் செய்கின்றன. தீர்ந்தபாடில்லை. கார்த்திகை பாண்டியன் சொல்வதுபோல் தனிமனித ஒழுக்கம் அவசியம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

கடைசி பத்தி மிக அருமை...

சுதந்திர தின நல் வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//அன்புடன் அருணா said...
நிறைய வருத்தங்களுடன்....//


வணக்கம் அருணா டீச்சர்

ஆ.ஞானசேகரன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
தனிமனித ஒழுக்கத்தை எல்லாருமே பின்பற்றணும் நண்பா.. அப்பத்தான் நீங்க சொல்லி இருக்குற பிரச்சினைகள் எல்லாம் தீரும்..

தீரும் என்ற நம்பிக்கையுடன்..
இனிய சுதந்திர நல்வாழ்த்துகள்//

வணக்கம் நண்பா,.... அந்த நாளை எதிர்பார்ப்போம்... நாமும் அதற்கு ஒரு காரணியாக இருக்கலாம்

ஆ.ஞானசேகரன் said...

//குடந்தை அன்புமணி said...
இப்படி வருத்தப்படும் ஜீவன்கள் பல இருக்கின்றன. ஆண்டுகள் பலவாக தொடரத்தான் செய்கின்றன. தீர்ந்தபாடில்லை. கார்த்திகை பாண்டியன் சொல்வதுபோல் தனிமனித ஒழுக்கம் அவசியம்.//


வணக்கம் அன்பு நலமா? தீரும்.... தீரவேண்டும் என்ற நம்பிக்கையில் சுதந்திரதின வாழ்த்துகள் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//வெறும்பய said...
கடைசி பத்தி மிக அருமை...

சுதந்திர தின நல் வாழ்த்துகள்//


வாங்க நண்பா,... வணக்கங்கள் உங்களுக்கும் என் நல் வாழ்த்துகள்... நன்றிபா

அன்புடன் நான் said...

பதிவு மிக தீர்க்கமா இருக்குங்க நண்பா.

நம் நாட்டில் ஏன் இவ்வளவு சீர்கேடுகள் என்ற கோபத்துடன் இருந்தேன்.... ஆனால் நம் நாட்டை விட்டுகொடுக்க முடியாது என்ற எண்னத்திற்கு மீண்டும் கொண்டு வந்துட்டிங்க.....

இனிய விடுதலை நாள் வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

//சி. கருணாகரசு said...
பதிவு மிக தீர்க்கமா இருக்குங்க நண்பா.

நம் நாட்டில் ஏன் இவ்வளவு சீர்கேடுகள் என்ற கோபத்துடன் இருந்தேன்.... ஆனால் நம் நாட்டை விட்டுகொடுக்க முடியாது என்ற எண்னத்திற்கு மீண்டும் கொண்டு வந்துட்டிங்க.....

இனிய விடுதலை நாள் வாழ்த்துக்கள்!//

மிக்க மகிழ்ச்சி நண்பா,... இனிய வாழ்த்துகள் உங்களுக்கும்

ராமலக்ஷ்மி said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

// குற்றவாளிகளும் முறைகேடானவர்களும் நம்மில் ஒருவர்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றங்களை நம்மிலிருந்து தோடங்கலாமே!.....//

நன்று.

ஆ.ஞானசேகரன் said...

[[ ராமலக்ஷ்மி said...
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

// குற்றவாளிகளும் முறைகேடானவர்களும் நம்மில் ஒருவர்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றங்களை நம்மிலிருந்து தோடங்கலாமே!.....//

நன்று.]]

மகிழ்ச்சியும் நன்றியும்ங்க..... உங்களுக்கும் என் இனிய சுதந்திரதின வாழ்த்துகள்...

Anonymous said...

karuththu sollum urimai kooda illai ithai paditha peragu,,,,,irupinum iniya suthanthira nal vazhthukkal,,,,,

ஆ.ஞானசேகரன் said...

//தமிழரசி said...

karuththu sollum urimai kooda illai ithai paditha peragu,,,,,irupinum iniya suthanthira nal vazhthukkal,,,,,//

ம்ம்ம் வாங்க தமிழ்
இனி வாழ்த்துகள் உங்களுக்கு

Muniappan Pakkangal said...

Well said Gnanaseharan,the country has been spoiled by the politicians & officers-i agree.But how many people bother about others ? Most of the present people are self oriented & that is the reason for the present scenario.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Well said Gnanaseharan,the country has been spoiled by the politicians & officers-i agree.But how many people bother about others ? Most of the present people are self oriented & that is the reason for the present scenario.//

வணக்கம் டாக்டர்... நீங்கள் சொல்வதை போல எல்லோருக்கும் சுயநலம்தான் அதிகமாக இருக்கு. தற்போது உள்ள கல்வி முறையும் அதைதான் கற்பிக்கின்றது. கல்வி என்பது ஒரு முதலீடாகதான் எண்ணப்படுகின்றது. படித்து முடித்ததும் காசுபார்க்க வேண்டும் அது எந்த வழியானாலும் பரவாயில்லை.... இந்த போக்குதான் கையூட்டு அதிகமாக காரணம் என்று கூட சொல்லலாம்ம்.... அதே போல் வாத்தியார் தொழிலும், மருத்துவ தொழிலும் சேவை மனப்பான்மை இழந்து வெகு நாட்கள் ஆகின்றது. இந்த தலமுறையில் மாற்றம் கொண்டு வர முடியாது என்றே தோன்றுகின்றது... அடுத்த தலமுறையாவது சரியான பாதைக்கு இட்டு செல்லவேண்டும் என்பதே என் ஆசைகள்.. மிக்க நன்றி டாகடர்
அன்புடன் ஆ.ஞானசேகரன்