ஏன்? எதற்கு? எப்படி?....12
"உடலுக்கு ஒன்பது வாசல்
மனதிற்கு என்பது வாசல்"
மனிதன் உடல் ஒரு மிக பெரிய கூட்டு வேதிப்பொருள். மனித உடல் என்பது சதை, எலும்பு, நரம்பு ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளதாக அறிவியல் சொல்லுகின்றது. ஆனால் சித்தர்களும் ஞானிகளும் உடல் என்பது நீர், நிலம்,நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியுள்ளார்கள்.
உடலுக்கு 9 வாசல் என்பன இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத்துளைகள், வாய், மலவாய், சிறுநீர்பாதை. இப்படியாக சொல்லப்படுகின்றது. இப்படி சொல்லப்படும் கணக்கு சரிதானா? பெண்களுக்கும் இந்த கணக்கு ஒன்றுதானா? கண், காது, மூக்கு என்பது ஏன் இரண்டாக இருக்கின்றது? அப்படி இரண்டாக இருப்பதால் பாதகம் மற்றும் சாதகம் என்ன? என்பதுதான் இன்றைய ஏன்? எதற்கு? எப்படி?....
மனிதன் தன்னுடைய தாய் வயிற்றில் கருவாக உருவானதும் தாய்க்கும் கருவிற்கும் பாலமாக இருப்பதுதான் தொப்புள் கொடி. இந்த கொடியின் வழியாகதான் தாயிடமிருந்து உணவு சக்தி கருவிற்கு செல்கின்றது. ஆக கருவிலேயே உருவாகிய தொப்புள் கொடி வயிலை ஏன் கணக்கில் ஏற்றுக்கொள்ளவில்லை? அப்படி பார்த்தால் 10 வாசல் என்பது சரிதானே! மேலும் பெண்ணிற்கு இன்னும் கூடுதலாக மூன்று வாசல்கள் இருப்பதும் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? அதாவது பெண்ணிற்கு சிறுநீர் பாதையும், கருப்பை பாதையும் வேறு வேறாக இருப்பதும் மேலும் ஒரு வாசல் பெண்ணிற்கு உண்டும் என்பதும் உண்மைதானே!..... ஆக பெண்ணிற்கு 11 வாசல்லவா இருக்கின்றது. அதே போல் பிறந்த குழந்தைக்கு உணவாக பால் சுரக்கப்பட்டு ஊட்டுகின்றாளே பாற்காம்புகள் அதுவும் உடலிருந்து வெளிப்படும் வாசல்தானே! ஆக இந்த வாசல்களையும் பார்த்தால் பெண்ணிற்கு 13 வாசல்கள் இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும். ஓ... இப்படியே போனால் உடலில் இருக்கும் ஒவ்வொரு வேர்வை துளைகளும் உடலிருந்து வரும் வாசல்கள்தானே! இப்படிப்பட்ட கேள்விகள் உங்களை போல எனக்கும் இருக்கின்றது.
ம்ம்ம்ம்.... அது இருக்கட்டும் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத்துளைகள், இரண்டு பாற்காம்புகள் என ஏன் இரண்டு இரண்டுடாக இருக்கின்றது? அதனால் என்ன பயன்? ஒரு கண்களால் பார்க்க முடியாதா? ஒரு காதால் கேட்க முடியாதா? ஒரு மூக்குதுளையால் சுவாசிக்க முடியாதா? ஒரு பாற்காம்பால் பாலூட்ட முடியாதா? இப்படிப்பட்ட கேள்விகள் என்னையும் துளைத்தது.....
கண்களில் இரண்டால் மட்டுமே ஒரு பொருளின் முப்பரிமாணத்தை உணரமுடியும். ஒரு கண்ணால் அந்த பொருளின் முப்பரிமாணத்தை உணர்வது மிகவும் கடினமாக இருக்கும். அதே போல் ஒரு பொருள் எவ்வளவு தூரத்தில் எவ்வளவு அளவில் இருக்கின்றது? என்பதையும் கணிக்க இரண்டு கண்கள் தேவையாகின்றது. அதனால் இயற்கையே உயிர்களுக்கு இரண்டு கண்கள் கொடுத்துள்ளது. மனிதனுக்கு இரண்டு கண்களும் முகத்தில் நேராக வைக்கப்பட்டுள்ளது. மற்ற விலங்களுக்கு பக்கதிற்கு ஒன்றாக இருக்கும். எனவேதான் மற்ற விலங்குகள் ஒரு பொருளை பார்க்க தலையை ஆட்டி ஆட்டி பார்க்கும். மனிதன் கண்களில் நிறமி செல்கள் உள்ளது. ஆகவேதான் பொருளின் நிறத்தையும் உணர முடிகின்றது. மற்ற விலங்குகளுக்கு நிறமி செல்கள் இல்லை ஆகவே கருப்பு வெள்ளையாகவே அவைகளுக்கு தெரியும். ( என் காளை மாடுக்கு சிகப்பு கலர் புடிக்காது சிகப்பில் உடையணிந்தால் முட்டும் என்பதேல்லாம் கட்டுகதையே! ) ஆரோக்கியமான பார்வை என்பது இரண்டு கண்களும் சரியாக இருக்க வேண்டும்.
இரண்டு காதுகள் நம்முடைய உடலை சமசீராக வைத்துகொள்ள உதவுவதாக அறிவியல் சொல்லுகின்றது. காதின் சமச்சீர் குறைந்தால் வயிற்று போக்கு, வாந்தி ஆகையவை ஏற்படும். ஒரு காதில் அலைபேசி தொடர்ந்து பேசுவதாலும், ஒரு காதில் பாடல் கேட்பதும் இப்படிப்பட்ட குறைகள் வர வாய்புள்ளது. விமான ஓட்டுனர், பாராசூட்டில் குதிப்பவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு காதின் சமச்சீர் மிக முக்கியம். நாம் நேராக நடந்து செல்லவும் இந்த சமசீர் காதுகள் தேவையாகின்றது. இரண்டு காதுகள் இருப்பதினால் ஒலி வரும் திசை மற்றும் துரத்தை உணரமுடிகின்றது.
மூக்கு என்பது மனிதனின் சுவாசத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. மேலும் வாசனை அறியவும் பயனாகின்றது. இந்த மூக்கு முகத்தின் முன்பக்கம் நீட்சியாக இருக்கும். இதன் துவாரம் இரண்டாக பிரிந்து செல்லும்..... இதனால் மூச்சு காற்று சத்தமிடாமல் உள்சென்று வெளியாகின்றது. மேலும் மூச்சுக்காற்றை உள்ளிழித்து வெளியேற்ற மிக வசதியாக இருக்கின்றது. ஒரே துளையில் அப்படிப்பட்ட நிகழ்வு மிக கடினமாக இருக்கும். மூச்சு தினறல் இல்லாமல் காற்றுழுக்க இந்த இரண்டு துளைகள் பயனாகின்றது.
குழந்தைகளுக்கு பாலுட்டதான் முலைகாம்புகள் பயனாகின்றது. ஒரு பகுதியில் பாலுட்டும் பொழுது மறுபகுதியில் பால் சேகரிக்கபடுகின்றது. அதனால் தொடர்ச்சியாக குழந்தைக்கு பாலுட்ட முடிகின்றது.
மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.
Monday, October 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
37 comments:
நல்ல அலசல்... சில விசயங்களை ஏன்... எதற்கு.. எப்படி என்று கேட்க்கக் தோன்றினாலும்... முன்னோர்கள் வகுத்த சில வழிமுறைகளை நம்மால் மாற்றியமைக்க முடியாது என்பதும் உண்மையே,,,
//வெறும்பய said...
நல்ல அலசல்... சில விசயங்களை ஏன்... எதற்கு.. எப்படி என்று கேட்க்கக் தோன்றினாலும்... முன்னோர்கள் வகுத்த சில வழிமுறைகளை நம்மால் மாற்றியமைக்க முடியாது என்பதும் உண்மையே,,,//
வணக்கம் நண்பரே,
நீங்கள் சொலவதும் சரிதான்... ஆனாலும் பல மாற்றங்களும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
நல்ல அலசல்...தொடர்ந்து எழுதுங்க
// பிரியமுடன் பிரபு said...
நல்ல அலசல்...தொடர்ந்து எழுதுங்க//
நன்றி பிரபு
மிகவும் சிறப்பானப் பதிவு நேர்த்தியான எழுத்து நடையில் அருமை . புகைப்படம் அசத்தல் . பகிர்வுக்கு நன்றி நண்பரே
// !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
மிகவும் சிறப்பானப் பதிவு நேர்த்தியான எழுத்து நடையில் அருமை . புகைப்படம் அசத்தல் . பகிர்வுக்கு நன்றி நண்பரே
//
நன்றி நண்பா
வணக்கங்கள் பல
நல்லாயிருக்குங்க
//VELU.G said...
நல்லாயிருக்குங்க//
உங்களின் வருகை மகிழ்ச்சிங்க
மனிதன் கண்களில் நிறமி செல்கள் உள்ளது. ஆகவேதான் பொருளின் நிறத்தையும் உணர முடிகின்றது. மற்ற விலங்களுக்கு நிறமி செல்கள் இல்லை ஆகவே கருப்பு வெள்ளையாகவே அவைகளுக்கு தெரியும்.
புதிய தகவல் சேகரன்
நல்ல பதிவு
நண்பர் ஞானம் ,
நல்ல சிந்தனை அருமை .நல்ல நேர்த்தியான வரிகள் சூப்பர் .தொடரட்டும் .நாங்களும் கூடவே வருகிறோம்
அன்புடன் ,
கோவை சக்தி
// sakthi said...
மனிதன் கண்களில் நிறமி செல்கள் உள்ளது. ஆகவேதான் பொருளின் நிறத்தையும் உணர முடிகின்றது. மற்ற விலங்களுக்கு நிறமி செல்கள் இல்லை ஆகவே கருப்பு வெள்ளையாகவே அவைகளுக்கு தெரியும்.
புதிய தகவல் சேகரன்
நல்ல பதிவு.//
வணக்கம் சக்தி நல்லாயிருக்கின்றீர்களா?
மிக்க நன்றிங்க
// sakthi said...
நண்பர் ஞானம் ,
நல்ல சிந்தனை அருமை .நல்ல நேர்த்தியான வரிகள் சூப்பர் .தொடரட்டும் .நாங்களும் கூடவே வருகிறோம்
அன்புடன் ,
கோவை சக்தி//
வணக்கம் நண்பா.... உங்களின் ஊக்கம் மிக்க பயன்
நன்றி சக்தி...
அடுத்து அடுத்து சக்தி..
இருவரும் கோவைதான்... மகிழ்ச்சி
ஞானம் நிறைவான பதிவு.தெரியாத விஷயங்கள் எங்கள் மொழியில் படித்துப் புரிந்துகொள்வது நிறைவான மனத்திருப்தி.
தோப்புல்(தொப்புள்),மு(மூ)க்கு...
இப்படியான பிழைகள் நிறையத் தெரியுது முழுப்பதிவையும் ஒரு தரம் கவனியுங்க.
//ஹேமா said...
ஞானம் நிறைவான பதிவு.தெரியாத விஷயங்கள் எங்கள் மொழியில் படித்துப் புரிந்துகொள்வது நிறைவான மனத்திருப்தி.//
மிக்க நன்றிங்க ஹேமா... உங்களின் தொடந்த பாராட்டு மகிழசெய்கின்றது
//தோப்புல்(தொப்புள்),மு(மூ)க்கு...
இப்படியான பிழைகள் நிறையத் தெரியுது முழுப்பதிவையும் ஒரு தரம் கவனியுங்க//
நன்றி ஹேமா முடிந்தவரை திருத்தியமைத்துள்ளேன்....
அருமையான அலசல்
நலமா நண்பா?
சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படி போல அருமையான தகவல்கள் அடங்கிய பதிவு
வாழ்த்துக்கள்
விஜய்
Nice post Gnanaseharan.
வியர்வை சுரப்பதும் துவாரத்தில் தான், நமக்கு உடெம்பெல்லாம் துவாரம்!
நல்ல அற்புதமான அலசல்!
அன்பின் ஞான்ஸ். கொழுத்திட்டீங்க தோழா.
கூடவே இருக்கும் விலைமதிப்பற்றவற்றை
அறியச்செய்யும் விளக்கம் இது.ஒவ்வொரு வரியும்
கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும்
பயணிக்கச்செய்வதே எழுத்து.
பாற்காம்புகள் ஒன்று உபயோகத்திலிருக்கும்போது
இன்னொன்று தயரிக்கிறது என்கிற விளக்கம்
ஒரு அரை நுற்றாண்டுக்கு
பின்னிழுத்துப்போகிறது.
// அன்பரசன் said...
அருமையான அலசல்//
வாங்க அன்பரசன்,
மிக்க நன்றிங்க
// விஜய் said...
நலமா நண்பா?
சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படி போல அருமையான தகவல்கள் அடங்கிய பதிவு
வாழ்த்துக்கள்
விஜய்//
வணக்கம் விஜய்
நான் நலம் நாடலுமதே!
மிக்க நன்றிங்க..
நான் இந்த தலைப்பை வைக்கும் பொழுது சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி ஞாபகம் வரவில்லை... பின்னர்தான் இரண்டும் ஒன்றான தலைப்பு என்றி அறிந்தேன்...
பரவாயில்லை என்க்குள் இருக்கும் கெள்விகளின் தொகுப்பாகதான் கொடுக்கின்றேன்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
// Muniappan Pakkangal said...
Nice post Gnanaseharan.//
மிக்க நன்றி டாக்டர்
//வால்பையன் said...
வியர்வை சுரப்பதும் துவாரத்தில் தான், நமக்கு உடெம்பெல்லாம் துவாரம்!//
வணக்கம் நண்பா.... நலமா?
// தேவன் மாயம் said...
நல்ல அற்புதமான அலசல்!//
நன்றி டாக்டர்... உங்களிடமிருந்து கிடைத்த பாராட்டு மகிழசெய்கின்றது..
// காமராஜ் said...
அன்பின் ஞான்ஸ். கொழுத்திட்டீங்க தோழா.
கூடவே இருக்கும் விலைமதிப்பற்றவற்றை
அறியச்செய்யும் விளக்கம் இது.ஒவ்வொரு வரியும்
கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும்
பயணிக்கச்செய்வதே எழுத்து.
பாற்காம்புகள் ஒன்று உபயோகத்திலிருக்கும்போது
இன்னொன்று தயரிக்கிறது என்கிற விளக்கம்
ஒரு அரை நுற்றாண்டுக்கு
பின்னிழுத்துப்போகிறது//
வணக்கம் தோழரே
மிக்க நன்றிங்க....
//சித்தர்களும் ஞானிகளும் உடல் என்பது நீர், நிலம்,நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியுள்ளார்கள்.//
உடல் மட்டுமல்ல, ஐம்பூதங்கள் உலகத்திலுள்ள அனைத்திற்குமான அடிப்படை பொருட்கள் என்று முன்னோர்கள் கருதினர். இன்று அறிவியல் மூலம் நாம் கற்றுக்கொண்டது உலகிலுள்ள அனைத்தும் அடிப்படை துகள்களால் ஆனது (http://sites.google.com/site/artificialcortext/others/physics/elementary-particle).
//இரண்டு காதுகள் நம்முடைய உடலை சமசீராக வைத்துகொள்ள உதவுவதாக அறிவியல் சொல்லுகின்றது. காதின் சமச்சீர் குறைந்தால் வயிற்று போக்கு, வாந்தி ஆகையவை ஏற்படும்.//
பல மற்ற விலங்குகளை போல், மனிதனுக்கு ஏழு (குறைந்த பட்சம்) புலன்-உணர்வுகள் உண்டு. புலன்-உணர்வு = வெளி சுற்றுப்புறத்திலிருந்து மூளை அறியும் உணர்வு (Input; senses). அவைகள்:
1. ஓளி-உணர்வு (பார்த்தல்; கண்),
2. ஒலி-உணர்வு (கேட்டல்; காது),
3. காற்றில்-கலந்துள்ள-சில-வேதிப்பொருட்களை-அறியும்-உணர்வு (மணம்; மூக்கு),
4. நாக்கில்-படும்-சில-வேதிப்பொருட்களை-அறியும்-உணர்வு (சுவை; நாக்கு),
5. அழுத்தத்தை-அறியும்-உணர்வு (தொடு-உணர்வு; தோல்),
6. வெப்பநிலையை-அறியும்-உணர்வு (வெப்ப-உணர்வு; தோல்),
7. புவியீர்ப்பு-விசையை-அறியும்-உணர்வு (சமன்நிலை-உணர்வு; காது - காதின் உள்ளே உள்ள திரவத்தின் நிலையை கொண்டு).
இந்த சமன்நிலை-உணர்வை கொண்டு தான், நாம் மேல், கீழ் உணர்கின்றோம். அதை கொண்டே நடக்கவும், பிறகு ஓடவும், மிதிவண்டி ஓட்டவும் கற்றுக்கொள்கின்றோம். சமன்நிலை-உணர்வு மற்ற உணர்வுகளுடன் (முக்கியமாக ஓளி-உணர்வான பார்த்தல்) முரண்படும்போது, மூளை குழப்பமடைந்து நமக்கு மயக்கம், வாந்தி, போன்றவை உண்டாகின்றது.
இப்போதுள்ள கையடக்க-தொலைபேசிகளில் மணம், சுவை தவிற மற்ற உணர்வுகள் உண்டு. மேலும் இவற்றிக்கு, சில பறவைகளை போல், புவி-காந்த-புலத்தை-கொண்டு-அறியும் திசை-உணர்வும், உயரநிலை-உணர்வும் (நீர்-மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளோம்) உண்டு.
நன்றி @ CorText said...
உங்களின் விளக்கம் அருமையாக உள்ளது.. உணர்வுகளின் பட்டியலும் அழகு
மிக்க நன்றிங்கjo
நல்ல பகிர்வு ஞானசேகர். இது உண்மையாகவே வித்தியாசமான கோணம்
// mrknaughty said...
நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life //
மகிழ்ச்சியும் நன்றியும்
// jothi said...
நல்ல பகிர்வு ஞானசேகர். இது உண்மையாகவே வித்தியாசமான கோணம்//
வணக்கம் ஜொதி
மிக்க நன்றிங்க
யாருக்கும் இதுவரை தோன்றாத வித்தியாசமான அலசல்கள்.... நன்றாக இருக்கிறது. நன்றி.
//Kousalya said...
யாருக்கும் இதுவரை தோன்றாத வித்தியாசமான அலசல்கள்.... நன்றாக இருக்கிறது. நன்றி.//
வருகைக்கு மகிழ்ச்சிங்க
நன்றி
// denim said...
மிக நல்ல பதிவு
http://denimmohan.blogspot.com///
மிக்க நன்றிங்க
"உடலுக்கு ஒன்பது வாசல்
மனதிற்கு என்பது வாசல்"
மனிதனின் உடல் அறிவியல்படி சதை, எலும்பு, நரம்பால் ஆனது என்றாலும் சித்தர்கள் ஞானிகள் உடல் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இதுவும் அறிவியல்தான். நமது முன்னோர்கள் உடலுக்கு ஒன்பது வாசல் என்பதை உடலில் நிறைய ஓட்டை இருக்கலாம் ஏதோ காரன காரியமாகத்தான் உடலுக்கு ஒன்பது வாசல் என்று கூறியுள்ளார்கள்.ஒவ்வொரு உறுப்பையும் இரண்டாகவோ ஒன்றாகவோ, ஒவ்வொரு அமைப்பாக அமைந்துள்ளது.
சோ.ஞானசேகர்..
// S.Gnanasekar said...
"உடலுக்கு ஒன்பது வாசல்
மனதிற்கு என்பது வாசல்"
மனிதனின் உடல் அறிவியல்படி சதை, எலும்பு, நரம்பால் ஆனது என்றாலும் சித்தர்கள் ஞானிகள் உடல் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இதுவும் அறிவியல்தான். நமது முன்னோர்கள் உடலுக்கு ஒன்பது வாசல் என்பதை உடலில் நிறைய ஓட்டை இருக்கலாம் ஏதோ காரன காரியமாகத்தான் உடலுக்கு ஒன்பது வாசல் என்று கூறியுள்ளார்கள்.ஒவ்வொரு உறுப்பையும் இரண்டாகவோ ஒன்றாகவோ, ஒவ்வொரு அமைப்பாக அமைந்துள்ளது.
சோ.ஞானசேகர்..//
உங்களின் கருத்துரை மிக்க மகிழ்ச்சி ஐயா....
Post a Comment