_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, October 11, 2010

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா? "I do weddings at Sentosa 2010 Singapore"

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா? "I do weddings at Sentosa 2010 Singapore"

"No love no life" காதல் இல்லையேல் சாதலே மேல் என்று சொல்லும் அளவிற்கு மனிதனும் அவனை சுற்றிய காதலும் இருக்கின்றது. அதற்கு அடுத்த கட்டமாக இருக்கும் கல்யாணம் என்ற நிபந்தனை அவனை இந்த காலக்கட்டத்தில் ஏனோ பயப்படுத்துகின்றது. இதில் பலர் சேர்ந்து வாழ்வோம் (live together) கல்யாணம் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மனவருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இப்படிப்பட்ட கலாச்சாரம் மேலைநாடுகளை தாண்டி இந்தியாவில் நகரங்களிலும் இருக்கதான் செய்கின்றது. " மனிதனின் பிறப்பின் முக்கியதுவம் தனது சந்ததிகளை விருத்தி செய்வது" எனற ஒரு தத்துவம் மறைந்து வெகுகாலமாகின்றது.

இந்த அவசரக்கால உலகில் கல்யாணம் மற்றும் குழந்தைகளை பெற்றல் என்பது ஊக்கப்படுத்த வேண்டிய கட்டாய சூழல் இருக்கின்றது. பலர் கல்யாணமே வேண்டாம் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழல் கடந்தால் நாளைய உலகம் பெரியவர் இல்லமாகத்தான் இருக்கும். இதை உணர்ந்த சில நாட்டில் அரசாங்கமே கல்யாணங்களுக்கு ஊக்கப்படுத்தி வருகின்றது. அப்படித்தான் சிங்கப்பூர் அரசும் கல்யாணம் செய்ய ஊக்கப்படுத்தியும் அதற்காண சந்தர்ப்பங்களை உருவாக்கியும் வருகின்றது.

அப்படி ஊக்கப்படுத்தும் விதமாக 10.10.2010 சிறப்பு தினமாக "I do" Wedding at sentosa 2010" என்ற ஒரு நிகழ்வை நடத்தியது. அதன்படி 140 க்கு மேற்ப்பட்ட ஜோடிகளுக்கு கல்யாணம் நடத்தியது. குறைந்த செலவில் நிறைவான மகிழ்வாக நடத்தியது சிறப்பாகும். இந்த கல்யாண வைபோவத்திற்கு நிர்வாக புகைப்பட கலைஞராக (Official Photographer) சென்றேன். அங்கு நான் எடுத்த புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சி.

கீழே சில புகைப்படங்கள் உங்களுக்காக ..... மேலும் அதிக படங்களை பார்க்க சுட்டியை தட்டுங்கள்.

பின் குறிப்பு: மேலை நாட்டு நாகரிகம் பல நாடுகளிடம் தொற்றிக்கொண்டு இருப்பது உண்மை. அதே போல் சிங்கப்பூரிலும் மேலை நாட்டு நாகரிகம் பல தொற்றியுள்ளது. அது பொல தொற்றிக்கொண்ட பழக்கம் ஒன்று கல்யாண சடங்கின் பொழுது முத்தமிடல். பதிவு திருமணத்தின் பொழுது முதலில் மோதிரம் மாற்றிக் கொள்கின்றார்கள் பின்னர் பதிவாளர் சொல்லின் பேரில் ஜோடிகள் முத்தமிடுவார்கள்... அந்த நிகழ்வைதான் இங்கு புகைப்படம் பதித்துள்ளேன். சில நண்பர்கள் சங்கடங்களின் பேரில் இந்த பின் குறிப்பு.










கல்யாண வைபோவம் புகைப்படங்கள்....

கல்யாண ஜோடிகளின் அணிவகுப்பு புகைப்படங்கள்....


அன்புடன்,...
ஆ.ஞானசேகரன்.

27 comments:

எஸ்.கே said...

புகைப்படங்கள் மிக நன்றாக உள்ளன. உங்கள் தொழில் நேர்த்தியை அவை காண்பிக்கின்றன.

ஆ.ஞானசேகரன் said...

// எஸ்.கே said...

புகைப்படங்கள் மிக நன்றாக உள்ளன. உங்கள் தொழில் நேர்த்தியை அவை காண்பிக்கின்றன.//

வணக்கம் நண்பா...
மிக்க நன்றிங்க

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

கோவி.கண்ணன் said...

படங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

செந்தோசாவில் தண்ணீர் பஞ்சமா ? வாயை வச்சு இப்படி (பொது இடத்தில்) உறிஞ்சுறாங்களே......!

ஆ.ஞானசேகரன் said...

// கோவி.கண்ணன் said...

படங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

செந்தோசாவில் தண்ணீர் பஞ்சமா ? வாயை வச்சு இப்படி (பொது இடத்தில்) உறிஞ்சுறாங்களே......!//

வாங்க கண்ணன்
மிக்க நன்றி
செந்தோசாவில் உப்பு தண்ணியா இருக்கு அதுதான்...

Anonymous said...

படங்கள் நல்லாயிருக்கு சேகர்...

ஆ.ஞானசேகரன் said...

//தமிழரசி said...

படங்கள் நல்லாயிருக்கு சேகர்...//

மிக்க நன்றிங்க

நட்புடன் ஜமால் said...

ஏன் கட்டிகிட்டு ஓடி போகனும்

ஓடி போய் தானே கட்டிகிடனும் :P

நைஸ் நண்பா

priyamudanprabu said...

super nanba

ஆ.ஞானசேகரன் said...

// நட்புடன் ஜமால் said...

ஏன் கட்டிகிட்டு ஓடி போகனும்

ஓடி போய் தானே கட்டிகிடனும் :P

நைஸ் நண்பா//

வணக்கம் நண்பா....
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...

super nanba//

நன்றி பிரபு

CorTexT (Old) said...

படங்கள் நன்று!

சிங்கப்பூர், ஐரோப்பா போன்ற சில நாடுகளில் மக்கள் தொகை குறைகின்றது. அது அதன் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லதல்ல என்பதால் இது போன்ற சில திட்டங்கள். ஆனால் உலகம் முழுவதுமாகப் பார்த்தால்( முக்கியமாக இந்தியா, சைனா) இயற்கையின் ஆரோக்கியமான நிலையை தாண்டி மக்கள் தொகை எங்கோ சென்று விட்டது. அதை திடீரென குறைப்பதால் தான் வரும் வினை தான், அதிகமான பெரியவர்கள். ஆனால் மனித வாழ்வு வளம் பெற, இயற்கை வளம் பெற, மனித உயிரின் மதிப்பு உயர மக்கள் தொகையை வெகுவாக குறைக்க வேண்டும்.

ஆ.ஞானசேகரன் said...

//Blogger CorText said...

படங்கள் நன்று!//

மிக்க நன்றி...


/// சிங்கப்பூர், ஐரோப்பா போன்ற சில நாடுகளில் மக்கள் தொகை குறைகின்றது. அது அதன் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லதல்ல என்பதால் இது போன்ற சில திட்டங்கள். ஆனால் உலகம் முழுவதுமாகப் பார்த்தால்( முக்கியமாக இந்தியா, சைனா) இயற்கையின் ஆரோக்கியமான நிலையை தாண்டி மக்கள் தொகை எங்கோ சென்று விட்டது. அதை திடீரென குறைப்பதால் தான் வரும் வினை தான், அதிகமான பெரியவர்கள். ஆனால் மனித வாழ்வு வளம் பெற, இயற்கை வளம் பெற, மனித உயிரின் மதிப்பு உயர மக்கள் தொகையை வெகுவாக குறைக்க வேண்டும்.///

ம்ம்ம்ம்கும்
கல்யாணத்தில் ஒரு பிடிப்பு வர இருக்கலாம் என்று நினைக்கின்றேன்... மக்கள் தொகையை கட்டுப்படுத்த இன்னும் வேறு வழிகள் இருக்கின்றதே! தற்பொழுது மக்களே கற்றுக்கொண்டார்கள்..... எல்லாமே கட்டுப்பாடுதா...


மிக்க நன்றி

CorTexT (Old) said...

//கல்யாணத்தில் ஒரு பிடிப்பு வர இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.//

//இதில் பலர் சேர்ந்து வாழ்வோம் (live together) கல்யாணம் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மனவருத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.//

அப்படி என்னத்தை கல்யாணத்தில் கண்டீர்கள்? அப்படி என்ன மனம் வருந்தும் படியான குறையை சேர்ந்து வாழ்வதில் கண்டீர்கள்? நேற்று கூட்டு குடும்பங்களுக்கு அடித்து கொண்ட மனிதன், இன்று வேறு ஒன்றுக்காக. எல்லோரையும், எல்லாவற்றையும் ஒரேவற்றிலில் திணிக்க தேவையில்லை; பன்மயம் (diversity) சமூகத்திற்கு ஆரோக்கியமானது.

Balakumar Vijayaraman said...

nice photos.

"உழவன்" "Uzhavan" said...

அவசியமான நிகழ்வு.. படங்கள் அருமை நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

[[ CorText said...

//கல்யாணத்தில் ஒரு பிடிப்பு வர இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.//

//இதில் பலர் சேர்ந்து வாழ்வோம் (live together) கல்யாணம் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மனவருத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.//

அப்படி என்னத்தை கல்யாணத்தில் கண்டீர்கள்? அப்படி என்ன மனம் வருந்தும் படியான குறையை சேர்ந்து வாழ்வதில் கண்டீர்கள்? நேற்று கூட்டு குடும்பங்களுக்கு அடித்து கொண்ட மனிதன், இன்று வேறு ஒன்றுக்காக. எல்லோரையும், எல்லாவற்றையும் ஒரேவற்றிலில் திணிக்க தேவையில்லை; பன்மயம் (diversity) சமூகத்திற்கு ஆரோக்கியமானது.]]


ஒவ்வொருவரின் கருத்துகள் மாறுதல் இருக்கலாம். ஆனால் தனிமைபட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுதல் நல்லதாக இருக்கும்....( பாம்பு திண்ற ஊருக்கு போனால் நடு துண்டு நமக்கு)

ஆ.ஞானசேகரன் said...

// வி.பாலகுமார் said...

nice photos.//

நன்றி நண்பா,...

ஆ.ஞானசேகரன் said...

//உழவன்" "Uzhavan" said...

அவசியமான நிகழ்வு.. படங்கள் அருமை நண்பா..//

வணக்கம் உழவன்..
மிக்க நன்றிங்க

CorTexT (Old) said...

//ஒவ்வொருவரின் கருத்துகள் மாறுதல் இருக்கலாம். ஆனால் தனிமைபட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுதல் நல்லதாக இருக்கும்//

நீங்கள் வருத்தப்படுவது அடுத்தவரின் சுய-நன்மைக்கு, அடுத்தவரின் நன்மையை நீங்கள் புரிந்து கொண்டதாக நினைத்து கொண்டு. இது Socialism (சமவுடமை பொருளாதாரம்) Vs. Capitalism (தனியுடமை பொருளாதாரம்) போன்றது. இதில் தனியுடமை பொருளாதாரம் தான் நடைமுறைக்கு ஏற்றதென்று புரிவதில் உள்ள குழப்பம்.

இன்று இந்தியாவில் ஒரு நாளைக்கு 6000 குழந்தையில் பசியால் சாகின்றார்கள். உங்கள் மனவருத்தத்தை இதில் காட்டுங்கள். இதற்கு நடைமுறைக்கு சாத்தியமான தீர்வு என்ன? நாளை குடிக்கும் தண்ணீருக்கு அடித்து கொள்ளலாம். அதற்கான தீர்வு என்ன? நாளை மனித ஆற்றலுக்கெல்லாம் மதிப்பே இல்லாமல் போகலாம். அப்பொழுது ஏற்படும் அவலங்கள்... அதற்கான நடைமுறை தீர்வு என்ன?

http://www.articlesbase.com/causes-and-organizations-articles/two-million-children-in-india-die-because-of-hunger-3277979.html

http://ibnlive.in.com/news/in-booming-india-hunger-kills-6000-kids-daily/62220-17.html

Muniappan Pakkangal said...

Nice post & info with photos.You r an official Photographer-nice.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
Nice post & info with photos.You r an official Photographer-nice.//

Thanks sir

sakthi said...

அன்பு நண்பர் ஞானா ,
உங்களுக்கும் அங்கேயே கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு தோணுதா ?ஹா ஹா ஹா ஹா
நட்புடன்,
கோவை சக்தி

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...
அன்பு நண்பர் ஞானா ,
உங்களுக்கும் அங்கேயே கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு தோணுதா ?ஹா ஹா ஹா ஹா
நட்புடன்,
கோவை சக்தி//

வணக்கம் சக்தி
எங்க வீட்டுலதான் கேட்கனும் ஹிஹிஹி

மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//ஈரோடு தங்கதுரை said...
Supper//

thanks

ஆ.ஞானசேகரன் said...

//சசிகுமார் said...
nice
// thanks sasi

ஹேமா said...

கல்யாணப் பதிவா.
நல்லாயிருக்கு ஞானம் !

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
கல்யாணப் பதிவா.
நல்லாயிருக்கு ஞானம் !//


வணக்கம் ஹேமா..
கொஞ்சம் வேலை அதுதான் உங்கள் பக்கம் வரமுடியவில்லை
மிக்க நன்றிங்க