_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, November 22, 2010

ஏன்? எதற்கு? எப்படி?....13

ஏன்? எதற்கு? எப்படி?....13

மூளை ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் கூட்டு செயல்பாடு. உயிரை முற்றிலும் கட்டுப்படுத்துவது இந்த மூளைதான். இது வரை நமது அறிவியல் முழுமையாக மூளையின் கட்டமைப்பை கண்டறியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மூளை செயலற்று போனால் அந்த உயிர் இறந்துவிட்டதாக சட்டமே சொல்லுகின்றது. மூளை செயலிழந்தால் சிறுக சிறிக அனைத்து உறுப்புகளும் செயலற்று போகும். இறுதியில் அந்த உயிர் இறந்துவிடும்.

நாம் ஒரு பொருளை குறிப்பார்த்து கல்லால் அடிக்கின்றோம் என்றால் கண்ணால் பார்க்கப்பட்ட அந்த பொருளை கையால் எப்படி சரியாக அடிக்கப்படுகின்றது? அதே போல எல்லோராலையும் அப்படி சரியாக அடிக்க முடிவதில்லையே ஏன்? கண்ணால் பார்க்கப்படும் பொருள் விழித்திரையில் படும்பொழுது அந்த பொருளின் தூரம் மற்றும் முப்பரிமாணம் மூளையால் கணக்கிடப்படுகின்றது. எந்த அளவிற்கு உற்று பார்க்கப்படுகின்றதோ அந்த அளவிற்கு அதன் கணிப்பும் சரியாக இருக்கும். அதனால்தான் எல்லோராலையும் சரியாக செய்ய முடிவதில்லை. இதற்கு தகுந்த பயிற்சி தேவையாகின்றது. உற்று நோக்குதல் மற்றும் ஒரு நிலைப்படுத்துதல் முக்கியம். அந்த நிலையை எட்ட மூளைக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். சமீபத்தில் வந்த ஆங்கில திரைப்படம் (The_karate_kid_2010) கராட்டே கிட் என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி "ஒரு பெண் பாம்பின் கண்களை உற்று நோக்கி பயிற்சி பெறுவதாக இருக்கும்"... இப்படிப்பட்ட பயிற்சிதான் மூளைக்கு தேவை. இந்த காட்சிதான் படத்தின் இறுதி காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.

ஒரு கண்ணாடி சன்னலுக்கு அருகில் மாங்காய் மரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம். சன்னலில் படாமல் மாங்காயை மட்டும் கல்லால் அடிக்க வேண்டும் என்றால் பல முறை கல் சன்னலை பதம் பார்த்துவிடும் ஏன்? சன்னலை அடிக்க கூடாது என்பது முக்கியமாக கருதுவதால் மூளை சன்னலைதான் அதிகமாக பதியவைக்கின்றது எனவேதான் கல் சரியாக சன்னலை பதம் பார்த்துவிடுகின்றது. மாங்காவை மட்டுமே மனதில் பதிய வைக்க முறையான பயிற்சி தேவையாகின்றது.


மேலும் சிந்தனைகளுடன்


ஆ.ஞானசேகரன்.

22 comments:

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் தோழர்களே!

ராமலக்ஷ்மி said...

அருமை. தொடருங்கள்.

காமராஜ் said...

வா என் அன்புத்தோழா .

மிக அருமையான இடுகை.
இன்னும் எவ்வளவு கேள்விகள் கேட்கப்படாமல் இருக்கிறது.

ஆனால் இன்னும் சூறாவளியைப் பேய்
என்று பதறும் ஜனங்கள் கூடிக்கொண்டே போகுது.
அடிக்கடி கேள்விகளைச்சொல்லுங்கள் தோழா.

ஆ.ஞானசேகரன் said...

//ராமலக்ஷ்மி said...
அருமை. தொடருங்கள்.

//
மிக்க நன்றிங்க...
உங்களின் அன்புக்கு மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

//காமராஜ் said...
வா என் அன்புத்தோழா .

மிக அருமையான இடுகை.
இன்னும் எவ்வளவு கேள்விகள் கேட்கப்படாமல் இருக்கிறது.

ஆனால் இன்னும் சூறாவளியைப் பேய்
என்று பதறும் ஜனங்கள் கூடிக்கொண்டே போகுது.
அடிக்கடி கேள்விகளைச்சொல்லுங்கள் தோழா
//

வணக்கம் தோழரே...
கேள்விகள் இன்னும் வரும்....
உங்களின் நட்புக்கு ஆயிரம் வணக்கங்கள்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ஹேமா said...

வணக்கம் ஞானம்.மூளையும் கல்லும் மாங்காயும் யன்னலும்...சொல்லிப் புரிய வைத்த விதம் அருமை !

CorTexT (Old) said...

//மூளை ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் கூட்டு செயல்பாடு//

இயற்கை என்பது ஒன்றே ஒன்று தான். அதில் அண்டங்கள், நட்சத்திரங்கள், பூமி, அனைத்து உயிர்கள், மூளை என அனைத்தும் அடங்கும். அதனை புரிந்தும் ஒரு முறை தான் அறிவியல். ஆனால் அது மிகவும் சிக்கலாக உள்ளதால், நமது மூளையின் ஆற்றலுக்கு ஏற்ப அதை பல்வேறு அடுக்குகளாக பிரித்து (வெங்காயத்தின் ஒவ்வொரு தோல் போல்) புரிந்து கொள்ள முயற்சிக்கின்றோம். அதில் மிகவும் அடிப்படை அடுக்கு இயற்பியல் - அது இயற்கையின் அடிப்படை கட்டமைப்பை விளக்குகின்றது. அந்த அடிப்படை கட்டமைப்பையிலிருந்து உருவான அணுவை, அதிலிருந்து உருவான மூலக்கூறுகளை இயற்பியல் அடிப்படையில் விளக்கினாலும், அதை எளிது படுத்தி வேதியல் என அதற்கு அடுத்த அடுக்கில் புரிந்து கொள்கின்றோம். அதே போல், அதற்கு அடுத்த அடுக்குகள்: உயிரியல் மற்றும் மனவியல். இதில் இயற்பியல் மற்றும் வேதியியல் என்ற கூட்டெல்லாம் இல்லை. மூளையை நம் தேவைக்கு ஏற்ப பல்வேறு அடுக்குகளில் புரிந்து கொள்ளலாம்; பொதுவாக வேதியியல், உயிரியல் மற்றும் மனவியல் அடுக்குகள் போதுமானது.

http://ecortext.blogspot.com/2010/04/sense-making.html
http://ecortext.blogspot.com/2010/11/universally-speaking.html
http://ecortext.blogspot.com/2010/06/science-science.html

கண்கள் ஒளி அலைகளை மின்னலைகளாக மாற்றி பின் மூளையிலுள்ள V1 என்ற பகுதிக்கு அனுப்புகின்றது. இதிலுள்ள 3 மற்றும் 4 வது படங்களை பார்க்கவும் (http://sites.google.com/site/artificialcortext/brain/visual-pathways-pics). அதிலிருந்து மூளையீன் மேல் நோக்கி மற்றும் கீழ் நோக்கி இரண்டு வழிகளில் மின்னலைகள் அனுப்பப்படுகின்றது. கீழ்-வழி பொருள்களை (மனிதர்கள் உட்பட) அறிய உதவுகின்றது. அதை என்ன-பார்வை-அமைப்பு எனலாம். இவ்வமைப்பு தான் நமக்கு பார்வையை தருகின்றது. மேல்-வழி பொருட்கள் உள்ள தூரம், அளவு முதலியவற்றை துள்ளியமாக அறிந்து, அதை எடுக்கவும், பயன்படுத்தவும், நீங்கள் கூறுவது போல் மாங்காய் அடிக்கவும் உதவுகின்றது. அதை எங்கே-பார்வை-அமைப்பு எனலாம். கீழ்-வழி மூளையில் (என்ன-பார்வை-அமைப்பு) சேதம் ஏற்பட்டால் அவர்கள் குருடர்களாக உணர்வார்கள், ஆனால் பல விசயங்களை அவர்களால் செய்ய முடியும். மேல்-வழி மூளையில் (எங்கே-பார்வை-அமைப்பு) சேதம் ஏற்பட்டால் அவர்களால் பார்க்க முடியும், ஆனால் எதையையும் சரியாக செய்ய முடியாது.

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
வணக்கம் ஞானம்.மூளையும் கல்லும் மாங்காயும் யன்னலும்...சொல்லிப் புரிய வைத்த விதம் அருமை //

வணக்கம் ஹேமா...
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

ஆ.ஞானசேகரன் said...

[[CorText said...
//மூளை ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் கூட்டு செயல்பாடு//

இயற்கை என்பது ஒன்றே ஒன்று தான். அதில் அண்டங்கள், நட்சத்திரங்கள், பூமி, அனைத்து உயிர்கள், மூளை என அனைத்தும் அடங்கும். அதனை புரிந்தும் ஒரு முறை தான் அறிவியல். ஆனால் அது மிகவும் சிக்கலாக உள்ளதால், நமது மூளையின் ஆற்றலுக்கு ஏற்ப அதை பல்வேறு அடுக்குகளாக பிரித்து (வெங்காயத்தின் ஒவ்வொரு தோல் போல்) புரிந்து கொள்ள முயற்சிக்கின்றோம்>>>>>>}}]]



மிக்க நன்றிங்க CorText உங்களின் விளக்கம் பயனுள்ளதாக இருக்கின்றது.

மாணவன் said...

அருமை சார்,

தெளிவாகச் சிந்திக்கக்கூடிய தகவல்களை அழகாக பதிவு செய்துள்ளீர்கள் அற்புதம்...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
மாணவன்

வாழ்க வளமுடன்

மாணவன் said...

சிங்கையில எங்க சார் இருக்கீங்க,

நானும் சிங்கையிலதான் பணிபுரிகிறேன்...

தொடர்புக்கு:
simbuthirukkonam@gmail.com
ph:83452798

ஆ.ஞானசேகரன் said...

//மாணவன் said...

அருமை சார்,

தெளிவாகச் சிந்திக்கக்கூடிய தகவல்களை அழகாக பதிவு செய்துள்ளீர்கள் அற்புதம்...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
மாணவன்

வாழ்க வளமுடன்//

வணக்கம் நண்பரே..
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

//மாணவன் said...

சிங்கையில எங்க சார் இருக்கீங்க,

நானும் சிங்கையிலதான் பணிபுரிகிறேன்...

தொடர்புக்கு:
simbuthirukkonam@gmail.com
ph:83452798//

மன்னிக்கவும் தற்பொழுது திருச்சியில் இருக்கின்றேன்.. சமயம் கிடைத்தால் சந்திக்கலாம்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

வேலன். said...

நீங்கள் கண்ணாடி ஜன்னலுடன் மாங்காய் மரம் காண்பியுங்கள். மாங்காய் சரியாக அடிக்கின்றேன்பாருங்கள்.(10 முறை ஜன்னலை உடைத்தவுடன்)

வாழ்க வளமுடன்.
வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

//வேலன். said...
நீங்கள் கண்ணாடி ஜன்னலுடன் மாங்காய் மரம் காண்பியுங்கள். மாங்காய் சரியாக அடிக்கின்றேன்பாருங்கள்.(10 முறை ஜன்னலை உடைத்தவுடன்)

வாழ்க வளமுடன்.
வேலன்.//

வாங்க வேலன் சார்.... நல்லாதான் பயிற்சி பெற்றுள்ளீர்கள்...

மிக்க நன்றிங்க

சொல்லரசன் said...

நல்ல கட்டுரை

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லரசன் said...
நல்ல கட்டுரை//

வாங்க சொல்லரசன்... மிக்க நன்றிங்க

venkat said...

//மூளை ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் கூட்டு செயல்பாடு//
அருமை. தொடருங்கள்.

Muniappan Pakkangal said...

Nice thoughts Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

[[ venkat said...
//மூளை ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் கூட்டு செயல்பாடு//
அருமை. தொடருங்கள்.
]]

மிக்க மகிழ்ச்சிங்க
நன்றியுடன்
ஆ.ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
Nice thoughts Gnanaseharan.//

நன்றி டாக்டர்

மாதேவி said...

நல்ல பகிர்வு.

ஆ.ஞானசேகரன் said...

// மாதேவி said...

நல்ல பகிர்வு.//

மிக்க நன்றிங்க