_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, December 15, 2010

FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் ....

FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் ....



ஆதிமனிதன் தனித்தனி குழுக்களாக வாழ ஆரம்பித்தப்பொழுது தன்னோடு சில வீட்டு பிராணிகளையும் சேர்த்துக்கொண்டான். அப்படி சேர்த்துக்கொண்ட பிராணிகளில் மிக முக்கியமான பிராணியாக நாய் இருந்தது. நாய்களை காவலுக்கும் வேட்டையாடவும் கற்றுக்கொடுத்து பயன்படுத்திக் கொண்டான். இன்றும் நாய்கள் மனிதனோடு மனிதனாக வாழ்கின்றது. அதிலும் பணக்கார வீடுகளில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள் அழகு பொருளாக வளர்த்து வருகின்றார்கள். இன்று அந்த நாய்களுக்கு பயிற்சிகள் கொடுத்து அதனை மற்ற நாய்களுடன் சேர்த்து dog show வும் நடத்தி வருக்கின்றார்கள். இதனை பலர் கவுரவமாகவும் நினைக்கின்றார்கள்.




சென்னையில் 11-12-2010 மற்றும் 12-12-2010 இரண்டு நாட்கள் Madras Canine club's சார்பாக தனது 9th & 10th FCI Internationl championship Dog show நடத்தியது. இதில் சிங்கப்பூர், தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகளிருந்து கலந்துக் கொண்டார்கள். இதற்கு நடுவர்களாக இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்ரியா, இஸ்ரேல், இங்லாந்து, ஜாப்பான் போன்ற நாடுகளிருந்து வந்திருந்தனர். இந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் தயாநீதிமாறன் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

இந்த போட்டியில் கர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகளும் கலந்துக் கொண்டார்கள். இந்திய நாட்டு நாய்களுக்கு நுழைவுக் கட்டணம் இலவசமாக வழங்கப்பட்டது. கர்நாடக விவசாயிகளுக்கு தங்களுடைய நாய்களை எடுத்து செல்ல சில சலுகைகள் அரசு வழங்கியதாக சொல்லப்படுகின்றது.

கல்கத்தா, பூனா, பஞ்சாப், மத்தியபிரதேசம் போன்ற இடங்களிருந்து பெரிய பெரிய பணக்காரர்கள் தங்களிடைய நாய்களை எடுத்து வந்து கலந்துக் கொண்டார்கள்.

அழகு நாய்கள் எதற்காக வளர்க்கின்றார்கள்? பெரும்பாலும் அழகுக்காக வளர்கின்றார்கள். சிலருக்கு நாய் வளர்ப்பு ஒரு பொழுது போக்காகவும் இருக்கின்றது. அதிலும் நாம் சொல்வதை அந்த நாய்கள் கேட்கின்றது என்றால் அந்த நாய்களுக்காக இவனும் வாழ பழகிகொள்கின்றான்.

விழாவின் இடையில் சில குழப்பங்களும் வந்தது. சில வக்கில்கள் நீதிமன்றத்தில் தடைக்கோரி விழாவை நிறுத்த சொன்னார்கள். பிராணிகள் வதைப்பு சட்டம் காரணமாகவும், வெளிநாடுகளிலிருந்து நாய்கள் இறக்குமதி செய்ய தடை செய்ய கோரியும் இது போன்ற விழாக்கள் தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்கள். வெளிநாடுகளில் நாய்கள் இறக்குமதி செய்வதால் இந்திய நாய்களின் இறையாண்மை பாதிப்பதாக கூறுகின்றார்கள்.

சில நாய்களின் விலை 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கின்றது. நாய் வளர்ப்பதினால் என்ன லாபம்? பொதுவாக இதன் குட்டிகள் விற்கப்படுகின்றது. பரிசுபெற்ற நாய்களின் குட்டிகள் விலை அதிகமாக இருக்கும்.

பெரிய பணக்காரர்கள் வீட்டில் நாய் வளர்ப்பதற்கும் அதற்கு பயிற்சி கொடுப்பதற்கும் பயிற்சியாளர்கள் அமர்த்தப்படுகின்றார்கள். சென்னை போன்ற நகரங்களில் பல பயிற்சியாளர்கள் இருக்கின்றார்கள். விழாக்களின் நாய்களை கையாள கையாளர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் ஒரு நாய்க்கு ஆயிரம் ருபாய் வரை வாங்குகின்றார்கள். இதுபோன்ற போட்டிகளில் 20 ஆயிரம் வரை சம்பாரித்துவிடுவார்கள். பலர் நாய் வளர்ப்பவர்களே கையாளர்களாகவும் இருக்கின்றார்கள்.

இந்த விழாவில் நாய்களிடம் அன்பு வைப்பவர்களை பார்க்க முடிந்தது. நாய்களை அடிப்பதோ திட்டுவது பார்க்கவில்லை. உண்மையில் நாய் ஒரு செல்ல பிரணிதான்.....

உங்களின் பார்வைக்கு சில புகைப்படங்கள்
மேலும் புகைப்படங்கள் காண கடைசியில் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது. சுட்டியை தட்டி பாருங்கள்.




















மேலும் புகைப்படம் பார்க்க இங்கே கிளிக் பன்னுங்கள் =>
FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் புகைப்படங்கள்


அன்புடன்.
ஆ.ஞானசேகரன்

6 comments:

ஹேமா said...

ஞானம்...நீங்க சொல்றது உண்மை.ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்க்கவும்,
அவஸ்தைப்படவும் விருப்பமில்லை.
அதனால் தங்கள் தனிமைபோக்கவும் வீட்டுப் பிராணிகளை வளர்க்கிறார்கள்.

ஆனால் ஒரு குழந்தையை வளர்ப்பதைவிட அதன் செலவு அதிகம்.வைத்தியக் காப்புறுதிவரை செய்தே வைத்திருக்கவேண்டும்.
இறந்தால்கூட எங்களைப்போல அவர்கள் மயானத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும்.அதற்குக்கூட முன்கூட்டியே வாழ்நாளில் பணம் செலுத்தியிருப்பார்கள் !

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
ஞானம்...நீங்க சொல்றது உண்மை.ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்க்கவும்,
அவஸ்தைப்படவும் விருப்பமில்லை.
அதனால் தங்கள் தனிமைபோக்கவும் வீட்டுப் பிராணிகளை வளர்க்கிறார்கள்.

ஆனால் ஒரு குழந்தையை வளர்ப்பதைவிட அதன் செலவு அதிகம்.வைத்தியக் காப்புறுதிவரை செய்தே வைத்திருக்கவேண்டும்.
இறந்தால்கூட எங்களைப்போல அவர்கள் மயானத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும்.அதற்குக்கூட முன்கூட்டியே வாழ்நாளில் பணம் செலுத்தியிருப்பார்கள் !
//


மிக சரியாக சொல்லிட்டீங்க ஹேமா... இன்னும் இதைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது... நேரம் கிடைத்தால் எழுதுகின்றேன்

CorTexT (Old) said...

உயிர்கள் மாறிகொண்டே இருந்தாலும் அதில் ஒரு சில மாற்றங்கள் அதன் சுற்றுசூழலுக்கு ஏற்றதாக இருந்தால் அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு போகும். மற்றவை அழிந்து போகும். இதை இயற்கை-தேர்வு-முறை என்கின்றோம். ஆதி மனிதன் நரியை வீட்டில் வைத்து அதில் அவனுக்கு தேவையான மாற்றங்களை மட்டும் தேர்ந்தெடுத்தில் வளர்ச்சி அடைந்தது தான் நாய். இதை செயற்கை-தேர்வு-முறை என்கின்றோம். நீங்கள் சுட்டிக்காடியது போல், நாய்கள் மறைமுகமாக நம் வளர்ச்சியையும் தேர்வு செய்கின்றன.

வேலன். said...

நாயாக பிறந்தாலும் பணக்கார வீட்டுநாயாக பிறக்கவேண்டும் போல இருக்கு....ம்....!!!!

வாழ்க வளமுடன்.

வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

// CorTexT said...

உயிர்கள் மாறிகொண்டே இருந்தாலும் அதில் ஒரு சில மாற்றங்கள் அதன் சுற்றுசூழலுக்கு ஏற்றதாக இருந்தால் அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு போகும். மற்றவை அழிந்து போகும். இதை இயற்கை-தேர்வு-முறை என்கின்றோம். ஆதி மனிதன் நரியை வீட்டில் வைத்து அதில் அவனுக்கு தேவையான மாற்றங்களை மட்டும் தேர்ந்தெடுத்தில் வளர்ச்சி அடைந்தது தான் நாய். இதை செயற்கை-தேர்வு-முறை என்கின்றோம். நீங்கள் சுட்டிக்காடியது போல், நாய்கள் மறைமுகமாக நம் வளர்ச்சியையும் தேர்வு செய்கின்றன.//


உங்களின் வருகைக்கு மிக்க் நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// வேலன். said...

நாயாக பிறந்தாலும் பணக்கார வீட்டுநாயாக பிறக்கவேண்டும் போல இருக்கு....ம்....!!!!

வாழ்க வளமுடன்.

வேலன்.//

வணக்கம் வேலன் சார்
இதெல்லம் சரிதானா என்பது என் குழப்பம்.....