_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, January 11, 2011

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... ( அவசரசேவை 108)

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... ( அவசரசேவை 108)

1947 ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த சமையம் பண்டித் ஜவர்கலால் நேரு இந்தியாவில் பொருளியல் நிலைமை போதிய அளவு இல்லாததால் நாட்டு மக்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் கோரிகையிட்டார், " கல்வி மற்றும் மருத்துவத்திற்கு சேவைகள் செய்யுங்கள்" என்றார். அதன்படி சில அமைப்புகள் தனது சேவையை செய்தது. இதில் முக்கிய பங்கழித்தது கிருஸ்துவ அமைப்புதான் என்பது பாராட்டகூடியது. மருத்தவத்திற்கும் கல்விக்கும் இருந்த சேவை மனப்பன்மை இன்று இல்லை என்பது வருத்தப்படகூடிய ஒன்று. இன்றொ கல்வியும், மருத்துவமும் காசு சம்பாரிக்கும் இடமாக இருக்கின்றது.

மத்திய அரசின் முக்கிய திட்டமான அவசர சேவை ஆம்புலன் 108 அந்த வகையில் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்களின் சேவை மெச்சும்படியாக உள்ளது. அதை முறைப்படி அமுல்படுத்தும் தமிழக அரசுக்கும் ஒரு சலூட்...... ஒவ்வொரு அம்புலன்ஸிலும் பயிற்சிப்பெற்ற செவிலியர்கள் இருப்பதும் அவர்களுக்கு சமூக மனப்பாண்மை மற்றும் சேவை மனப்பாண்மை இருப்பது பாராட்டாமல் இருக்கமுடியாது. நூற்றுக்கு மேற்பட்ட பிரசவம் ஆம்புலஸிலேயே நடந்துள்ளது. அந்த அளவிற்கு வண்டியில் எல்லா வசதிகளும் பயிற்சி பெற்ற செவிலியர்களும் இருப்பது பாராட்டியே ஆகவேண்டும்...






மறைந்துவரும் சேவை மனப்பாண்மை இவர்களால் துளிர்விட்டுக்கொண்டுள்ளது. இவரைகளை பாராட்டுவதின் மூலம் இன்னும் இதுபோன்ற அமைப்புகள் வளர வாய்ப்பழிப்போம்...... இதில் முக்கியமாக நான் பார்த்தது கையூட்டும், அன்பளிப்பும் இவர்கள் எதிர்ப்பாக்கவில்லை.........

வாழ்த்துகள் 108
பாராட்டுகள் 108



அன்புடன்

ஆ.ஞானசேகரன்



19 comments:

ஆ.ஞானசேகரன் said...

பாராட்டுகள் 108

priyamudanprabu said...

வாழ்த்துகள் 108
பாராட்டுகள் 108

தமிழ் உதயம் said...

அருமை.

மாணவன் said...

//மறைந்துவரும் சேவை மனப்பாண்மை இவர்களால் துளிர்விட்டுக்கொண்டுள்ளது. இவரைகளை பாராட்டுவதின் மூலம் இன்னும் இதுபோன்ற அமைப்புகள் வளர வாய்ப்பழிப்போம்....//

வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...

பதிவிட்ட உங்களுக்கு நன்றி நண்பரே

sakthi said...

வாழ்த்துக்கள் நல்ல பகிர்வு
நட்புடன்
கோவை சக்தி

"உழவன்" "Uzhavan" said...

ஆம் நண்பா நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான். அவர்களுக்கு அனானி அழைப்புகளும் நிறைய வருவதாக வார இதழில் படித்தேன். இப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது கவலையளிக்கக்கூடிய செயல்.

காமராஜ் said...

மிகச்சரி நண்பா.
எனது ஊரில் மாட்டு வண்டிகட்டிக் கொண்டு போன நோயாளிகளும்,நிறைமாத கர்ப்பினிகளும் பட்ட அவஸ்தைகளை நேரில் பார்த்திருக்கிறேன்.சில மரணங்களும்கூட பின்பு டிராக்டர்.ஒரு நாள் ஊருக்குப்போகும்போது எதிரே இந்த 108 வந்தது.பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

உண்மையில் மனந்திறந்து பாராட்டவேண்டிய ஒன்று.

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...

வாழ்த்துகள் 108
பாராட்டுகள் 108//
உங்களின் பாராட்டும் வாழ்த்தும் அவர்களை மென்மைபடுத்தும்

ஆ.ஞானசேகரன் said...

// தமிழ் உதயம் said...

அருமை.///

நன்றி நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

[[CorTexT said...

நல்ல சேதி! நன்று!

//கையூட்டும், அன்பளிப்பும் இவர்கள் எதிர்ப்பாக்கவில்லை//

கொடுத்து பழக்கி விடாமல் இருந்தால் சரி.]]

நானும் மகிழ்ந்தேன்....

ஆ.ஞானசேகரன் said...

[[மாணவன் said...

//மறைந்துவரும் சேவை மனப்பாண்மை இவர்களால் துளிர்விட்டுக்கொண்டுள்ளது. இவரைகளை பாராட்டுவதின் மூலம் இன்னும் இதுபோன்ற அமைப்புகள் வளர வாய்ப்பழிப்போம்....//

வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...

பதிவிட்ட உங்களுக்கு நன்றி நண்பரே]]


நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

[[sakthi said...

வாழ்த்துக்கள் நல்ல பகிர்வு
நட்புடன்
கோவை சக்தி]]

மிக்க நன்றி சக்தி

ஆ.ஞானசேகரன் said...

// "உழவன்" "Uzhavan" said...

ஆம் நண்பா நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான். அவர்களுக்கு அனானி அழைப்புகளும் நிறைய வருவதாக வார இதழில் படித்தேன். இப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது கவலையளிக்கக்கூடிய செயல்.//

வணக்கம் நண்பா... இதை வன்மையாக கண்டிக்க வேண்டும்...
இதற்கு ஒவ்வொருவரும் பொருப்பேற்க வேண்டும்..

ஆ.ஞானசேகரன் said...

[[காமராஜ் said...

மிகச்சரி நண்பா.
எனது ஊரில் மாட்டு வண்டிகட்டிக் கொண்டு போன நோயாளிகளும்,நிறைமாத கர்ப்பினிகளும் பட்ட அவஸ்தைகளை நேரில் பார்த்திருக்கிறேன்.சில மரணங்களும்கூட பின்பு டிராக்டர்.ஒரு நாள் ஊருக்குப்போகும்போது எதிரே இந்த 108 வந்தது.பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

உண்மையில் மனந்திறந்து பாராட்டவேண்டிய ஒன்று.]]]

மகிழ்ச்சியான பகிர்வு தோழரே!

Anonymous said...

"ஆம் நண்பா"மறைந்துவரும் சேவை மனப்பாண்மை இவர்களால் துளிர்விட்டுக்கொண்டுள்ளது "வாழ்த்துக்களும் பாராட்டுகளும்"

ஆ.ஞானசேகரன் said...

// Anonymous said...

"ஆம் நண்பா"மறைந்துவரும் சேவை மனப்பாண்மை இவர்களால் துளிர்விட்டுக்கொண்டுள்ளது "வாழ்த்துக்களும் பாராட்டுகளும்"//

மிக்க மகிழ்ச்சி நண்பா... தாங்களின் பெயர் சொல்லியிருக்கலாமே!

Muniappan Pakkangal said...

108 is a boon Gnanaseharan.

கார்த்திகைப் பாண்டியன் said...

பகிர்வுக்கு நன்றி தலைவரே.. இந்த மாதிரி ஆங்காங்கே நடக்கும் சில திட்டங்கள்தான் இன்னும் நம்பிக்கையை மிச்சம் பிடித்து வைக்கின்றன..

priyamudanprabu said...

ennappa vera pathivaiye kanom ???1

(poda enakku mail pannunga,,,....)