_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, January 7, 2011

இன்று ஒரு நாள் மட்டும்...

இன்று ஒரு நாள் மட்டும்...

எல்லோருக்கும் தெரிந்தது, "எங்கப்பன் குருதுகுள்ள இல்லை". கடன்காரனுக்கு பயந்த ஒரு தந்தை தன் மகனிடன் " ராமையா வருவான் வந்தால் அப்பா இல்லை என்று சொல்லிவிடு" என்று அவன் குருதுகுள் சென்று பதுங்கி விடுவான். ராமையா வந்து மகனிடன் " அப்பா எங்கே?" என்று கேட்டார். அவன் மகனோ "என் அப்பா குருதுக்குள் இல்லை" என்று சொல்லி உண்மையையும் போட்டு உடைத்துவிடுவான். இப்படிதாங்க நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு காரணங்களுக்காக நாட்களையும் சந்தர்ப்பங்களையும் கடத்தி வருகின்றோம். இன்று அல்லது இப்பொழுது இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்தால் போதும் என்ற மனபோக்கில் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க தவிர்க்கின்றோம். இப்படிப்பட்ட செயல்கள் ஒரு வகை விவேகம் என்று வைத்துக்கொண்டாலும் அதுவே நிரந்தர தீர்வாக இருக்க முடியுமா?

தற்கால சூழலில் அலைபேசி அலைப்பிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்க நினைக்கின்றோம்.
1. அலைபேசியை அணைத்து விடுவது.
2. அழைக்கும் நபரின் எண்ணை பார்தததும் அழைப்பை எற்றுக்கொள்ளாமல் இருப்பது.
3. தவறி எடுத்துவிட்டாலும் தொடர்பு சரியாக இல்லாது போல நடிப்பது.
4. அவசரமாக இருப்பது போல தொடர்பை துண்டிப்பது.

இன்னும் எத்தனையோ முறைகளில் பிரச்சனைகளை தவிற்க முயற்சிக்கின்றோம். எதிராளிகள் இன்னும் புத்திசாலியாக வேற்று எண்ணுடன் தொடர்புக்கொண்டு வாங்கு வாங்கு என்று வாங்கி விடுவதும் உண்டு. அழைப்பை ஏற்றுக்கொள்ள திரண் இல்லாமல் இருப்பது தொடர்புக்கொள்பவர்களுக்கு தெரியாமல் இருப்பதில்லை, பல நேரங்களில் அவர்களும் விட்டுக்கொடுப்பதால் பிரச்சனைகளிலிருந்து தற்காலிக விடுப்பு கிடைக்கின்றது. அதுவும் எவ்வளவு காலங்களுக்கு சமாலிக்க முடியும்? இப்படி தற்காலிகமாக தப்பிக்க நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை சரியாக பயன் படுத்தினால் நல்ல தீர்வுகளை நம்மால் செய்ய முடியும் என்பதை மறுக்க முடியாது. அவரால் நமக்கு பல உதவிகள் கூட கிடைக்க வாய்ப்புகள் இருக்கலாம். ஒன்று மட்டும் உண்மை நாம் ஒருவரை ஏமாற்றி விட்டால் அது அவருக்கு தெரியாது என்று நினைப்பது நமது முட்டாள்தனம்.

"தற்காலிகமாக பிரச்சனைகளை தள்ளி போடுவதை விட
முறையாக தீர்வு காண்பதே புத்திசாலிதனம்...."

இன்னும் உங்களுடன்
ஆ.ஞானசேகரன்.

25 comments:

Suresh Kumar said...

உண்மை தான் நண்பா இன்று சிந்திப்பவர்களில் பெரும்பாலானோர் தொலை நோக்கு பார்வையோடு சிந்திப்பதில்லை . இன்று கடந்தால் போதும் என்றே இருக்கின்றனர்

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

உண்மை தான் நண்பா இன்று சிந்திப்பவர்களில் பெரும்பாலானோர் தொலை நோக்கு பார்வையோடு சிந்திப்பதில்லை . இன்று கடந்தால் போதும் என்றே இருக்கின்றனர்//

வணக்கம் நண்பா
நீங்கள் சொல்வதும் சரிதான். இந்தியாவின் நிலையும் இதுதான்...

ஹேமா said...

"தற்காலிகமாக பிரச்சனைகளை தள்ளி போடுவதை விட
முறையாக தீர்வு காண்பதே புத்திசாலிதனம்...."

பிரச்சனையும் சொல்லித் தீர்வும் சொல்லிட்டீங்க ஞானம்.ஆனால் அந்த நேர அவதியில் யோசிக்க நேரமில்லை.தற்சமயம் பிரச்சனை தீர்ந்தால் சரி !

அடிக்கடி பதிவு போடுங்களேன் !

தமிழ் உதயம் said...

அப்போதைக்கு தப்பித்தால் போதும் என்கிற மனநிலை, நம்மை மிகப் பெரிய ஆபத்திற்கும் அழைத்து சென்று விடும். நல்ல பதிவு.

அன்புடன் நான் said...

மிக நல்ல கருத்து நண்பா.... நான் சிங்கை வந்துவிட்டேன்...
உங்களுக்கு தொடர்பு கொண்டேன் தொடர்பு கிடைக்கவில்லை?

பகிர்வு யதார்த்தம் பாராட்டுக்கள்.

அன்புடன் நான் said...

இந்த நிமிடமும் தொடர்பு கொள்கிறேன்.... தொடர்பு கிடைக்க வில்லையே ஏன் .... சிங்கையில்தானே இருக்கின்றீர்கள்?

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...

"தற்காலிகமாக பிரச்சனைகளை தள்ளி போடுவதை விட
முறையாக தீர்வு காண்பதே புத்திசாலிதனம்...."

பிரச்சனையும் சொல்லித் தீர்வும் சொல்லிட்டீங்க ஞானம்.ஆனால் அந்த நேர அவதியில் யோசிக்க நேரமில்லை.தற்சமயம் பிரச்சனை தீர்ந்தால் சரி !

அடிக்கடி பதிவு போடுங்களேன் !//

வாங்க ஹேமா மிக்க நன்றிங்க
பதிவு போட முயற்சிக்கின்றேன்ங்க

ஆ.ஞானசேகரன் said...

// தமிழ் உதயம் said...

அப்போதைக்கு தப்பித்தால் போதும் என்கிற மனநிலை, நம்மை மிகப் பெரிய ஆபத்திற்கும் அழைத்து சென்று விடும். நல்ல பதிவு.//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//சி. கருணாகரசு said...

மிக நல்ல கருத்து நண்பா.... நான் சிங்கை வந்துவிட்டேன்...
உங்களுக்கு தொடர்பு கொண்டேன் தொடர்பு கிடைக்கவில்லை?

பகிர்வு யதார்த்தம் பாராட்டுக்கள்.///

மிக்க நன்றி நண்பா
தற்பொழுது திருச்சியில் இருக்கின்றேன்...

மாணவன் said...

//"தற்காலிகமாக பிரச்சனைகளை தள்ளி போடுவதை விட
முறையாக தீர்வு காண்பதே புத்திசாலிதனம்...."//

அருமை நண்பரே மிக யதார்த்தமாகவும் சிறப்பாகவும் சொல்லியிருக்கீங்க

தொடரட்டும் உங்கள் பணி

நன்றி
நட்புடன்
மாணவன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா...

அன்புடன் அருணா said...

சரியாச் சொல்லியிருக்கீங்க!

உமா said...

//"தற்காலிகமாக பிரச்சனைகளை தள்ளி போடுவதை விட
முறையாக தீர்வு காண்பதே புத்திசாலிதனம்...."//

உண்மை, அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்,
தொடர்வோம்.

ஆ.ஞானசேகரன் said...

[[ மாணவன் said...

//"தற்காலிகமாக பிரச்சனைகளை தள்ளி போடுவதை விட
முறையாக தீர்வு காண்பதே புத்திசாலிதனம்...."//

அருமை நண்பரே மிக யதார்த்தமாகவும் சிறப்பாகவும் சொல்லியிருக்கீங்க

தொடரட்டும் உங்கள் பணி

நன்றி
நட்புடன்
மாணவன்]]

வணக்கம் நண்பா,...
உங்களின் வருகை மகிழ்ச்சி மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

[[ வெறும்பய said...

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா...]]

மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

[[அன்புடன் அருணா said...

சரியாச் சொல்லியிருக்கீங்க!]]

வணக்கம் மேடம் மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

[[ உமா said...

//"தற்காலிகமாக பிரச்சனைகளை தள்ளி போடுவதை விட
முறையாக தீர்வு காண்பதே புத்திசாலிதனம்...."//

உண்மை, அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்,
தொடர்வோம்.]]

வணக்கம்ங்க உமா...
மிக்க நன்றிங்க
தொடர்வோம்
ஆ.ஞானசேகரன்

காமராஜ் said...

எழுத்தை அந்தரத்தில் சஞ்சரிக்கவிடாத படிப்பினைகள் அன்புத்தோழா உங்கள் பதிவுகள்.புத்தாண்டுவாழ்த்துக்கள்.

sakthi said...

நண்பரே வணக்கம் ,
இது எல்லாம் சரி அப்புறம் ஏன் என் கை பேசி எண்ணை பார்த்தால் எடுப்பதில்லை .
ஹி ஹி ஹி
நடிப்புடன் ,
கோவை சக்தி

Anonymous said...

நச்சுன்னும் இருக்கு நறுக்குன்னும் இருக்கு சேகர்..

மனித இயல்புகளில் இதுவும் ஒன்று...

ஆ.ஞானசேகரன் said...

// காமராஜ் said...

எழுத்தை அந்தரத்தில் சஞ்சரிக்கவிடாத படிப்பினைகள் அன்புத்தோழா உங்கள் பதிவுகள்.புத்தாண்டுவாழ்த்துக்கள்//

வணக்கம் தோழரே! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

[[sakthi said...

நண்பரே வணக்கம் ,
இது எல்லாம் சரி அப்புறம் ஏன் என் கை பேசி எண்ணை பார்த்தால் எடுப்பதில்லை .
ஹி ஹி ஹி
நடிப்புடன் ,
கோவை சக்தி]]

ம்ம்ம் அது வேர மேட்டர் நேரில் பேசிக்கலாம்... ஹிஹ்ஹி

மிக்க நன்றி சக்தி

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

நச்சுன்னும் இருக்கு நறுக்குன்னும் இருக்கு சேகர்..

மனித இயல்புகளில் இதுவும் ஒன்று...//

வணக்கம் தமிழ்
மிக்க நன்றிங்க

CorTexT (Old) said...

அடுத்தவர் பார்வையில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள, அடுத்தவர் மனதின்-மாதிரி நம் மூளையில் உருவாக வேண்டும். இந்த திறன் குரங்கு, மனிதன் போன்ற ஒரு சில விலங்குகளால் மட்டுமே முடியும். குழந்தைகளுக்கு அது வளர ஒரு குறிப்பிட்ட வயதாகின்றது. அதனால் தான் சிறுவன், "எங்கப்பன் குருதுகுள்ள இல்லை" என்று தந்தையின் பார்வையை தவறவிட்டு விடுகின்றான். குழந்தைகளின் மனம், வெள்ளை மனம் என்று நாம் கூறுவதும், இந்த திறன் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருப்பதே காரணம். ஒரு குழந்தை தேர்ச்சியாக ஏமாற்றும் போது அதன் அறிவு நன்றாக வளருகின்றது என்று அர்த்தம் :-)

ஆனால், அடுத்தவர் பார்வை நன்றாக தெரிந்தும், அதாவது ஏமாற்ற தெரிந்தும், (தேவையில்லாமல்) ஏமாற்றமல் இருக்க மேலும் அறிவு தேவைப்படுகின்றது. நடிக்க தெரிய அறிவு வேண்டும்; ஆனால் நடிப்பது போல் நடிக்க இன்னும் அறிவு வேண்டும்.

//நாம் ஒருவரை ஏமாற்றி விட்டால் அது அவருக்கு தெரியாது என்று நினைப்பது நமது முட்டாள்தனம்.//

யார் கண்டார், ஒரு வேளை அவர் நடிப்பது போல் நடிக்கின்றாரோ? அப்பொழுதாவது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று... :-)

நீங்கள் கூறுவதெல்லாம் சரிதான். ஆனால் அடுத்தவர் ஏமாற்றுகின்றார் என்று நாம் (தப்பாக புரிந்து கொண்டு) ஏமாறாமல் பார்த்துக் கொள்வதும் நல்லது.

ஆ.ஞானசேகரன் said...

{{ CorTexT said...

அடுத்தவர் பார்வையில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள, அடுத்தவர் மனதின்-மாதிரி நம் மூளையில் உருவாக வேண்டும். இந்த திறன் குரங்கு, மனிதன் போன்ற ஒரு சில விலங்குகளால் மட்டுமே முடியும். குழந்தைகளுக்கு அது வளர ஒரு குறிப்பிட்ட வயதாகின்றது. அதனால் தான் சிறுவன், "எங்கப்பன் குருதுகுள்ள இல்லை" என்று தந்தையின் பார்வையை தவறவிட்டு விடுகின்றான். குழந்தைகளின் மனம், வெள்ளை மனம் என்று நாம் கூறுவதும், இந்த திறன் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருப்பதே காரணம். ஒரு குழந்தை தேர்ச்சியாக ஏமாற்றும் போது அதன் அறிவு நன்றாக வளருகின்றது என்று அர்த்தம் :-)

ஆனால், அடுத்தவர் பார்வை நன்றாக தெரிந்தும், அதாவது ஏமாற்ற தெரிந்தும், (தேவையில்லாமல்) ஏமாற்றமல் இருக்க மேலும் அறிவு தேவைப்படுகின்றது. நடிக்க தெரிய அறிவு வேண்டும்; ஆனால் நடிப்பது போல் நடிக்க இன்னும் அறிவு வேண்டும்.}}

தாங்களின் அறிவியல் சார்ந்த விளக்கத்திற்கு மிக்க நன்றி CorTexT

//நாம் ஒருவரை ஏமாற்றி விட்டால் அது அவருக்கு தெரியாது என்று நினைப்பது நமது முட்டாள்தனம்.//

யார் கண்டார், ஒரு வேளை அவர் நடிப்பது போல் நடிக்கின்றாரோ? அப்பொழுதாவது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று... :-)

நீங்கள் கூறுவதெல்லாம் சரிதான். ஆனால் அடுத்தவர் ஏமாற்றுகின்றார் என்று நாம் (தப்பாக புரிந்து கொண்டு) ஏமாறாமல் பார்த்துக் கொள்வதும் நல்லது.

((உண்மைதான் உங்களின் கருத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்}}