கூடுகின்றது பாராளுமன்றம், 28ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றது..... ம்ம்ம்ம் எபொழுதும் போல அதே பஞ்சாங்கம்தான் பட்ஜெடில் பணபற்றாகுறை. அப்பறம் என்ன பணவீக்கம் அதிகமாகிவிட்டது மற்றும் விலைவாசி ஏற்றம் கண்டது என்று அறிக்கை விடுவார்கள்.

சாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு..
ஒரு பொருளுக்கு மதிப்பு கூடுவதும் குறைவதும் அந்த பொருளின் கிராக்கியை பொருத்தது. அப்படி கிராக்கியுள்ள பொருள் உண்மையில் மனிதனுக்கு தேவையான பொருளா என்றால் அப்படியேதும் இல்லை என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக தங்கத்தை சொல்லலாம். உலக பொருளாதாரமே தங்கத்தை முன்னனியில் வைத்துள்ளதுதானே!எப்பொழுதுமே பட்ஜெட் போடும்பொழுது பணம் பற்றாகுறையாகவே இருக்கும். அதனால் பணவீக்கமும் அதிகரிக்கும். பட்ஜெட்க்கு முன் இந்திய வங்கிகளில் சேமிப்பு வட்டி விகிதம் அதிகப்படுத்தியுள்ளார்கள்.. இவற்றையும் கவணிக்க வேண்டும். வங்கியில் பண சேமிப்பின் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்தாலாம் என்பது அறிஞர்களின் கருத்து. இவற்றை காணும்பொழுது இந்த பட்ஜெட்டில் பணபற்றாக்குறை அதிகமாக இருக்கும் என்றே எண்ணம் தோன்றுகின்றது. இந்த பற்றாகுறையை எப்படியேல்லாம் சமன் செய்யலாம்... இலவச திட்டங்களை குறைக்கலாம் மற்றும் தனியார் துறைக்கு கொடுக்கும் மானியத்தை தவிற்கலாம்.
ஆமாம் பணவீக்கம் என்றால் என்ன? அதனால் என்ன நன்மை தீமை? ஒரு நாட்டின் பொருளாதாரமே இந்த பணவீக்கத்தை பொருத்தே இருக்கும். பொதுவாக பணவீக்கம் அதிகப்படலாமா? அல்லது குறையலாமா? பொதுவாக ஒரு நாட்டின் பணவீக்கம் சீராக இருப்பதுதான் அந்த நாட்டுக்கு நல்லது. பணவீக்கம் என்பது விலைவாசி ஏற்றம் இறக்கத்தை பொருத்தது. சென்ற ஆண்டு ஒரு பொருளை 100 ருபாய்க்கு வாக்கியதாக இருந்தால் அதே பொருள் இந்த ஆண்டின் விலை 120 ரூபாய்க்கு வாங்கினால் பணவீக்கம் 20 தாக இருக்கும்.
விலைவாசி ஏற்றம் கொண்டதால் அந்த பொருள் 120 ருபாயாக இருக்கின்றது. விலைவாசி ஏற்றம் கொண்டால் உற்பத்தியாளர்களுக்கு லாபம்தானே! உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைத்தால் வேலை வாய்ப்பு அதிகபடும், கூலியும் அதிகமாகும். இங்கு கூலி அதிகமாகுபொழுது சாமானியனின் வாங்கும் சக்தியும் அதிகமாகும். வாங்கும் சக்தி அதிகமாகும்பொழுது ஒரு பொருளின் கிராக்கியும் அதிகமாகும். கிராக்கி அதிகமாகும்பொழுது பொருளின் விலையேற்றம் அதிகமாகும். பொருளின் விலையேற்றம் எல்லோராலும் வாங்கும் நிலை இழக்கும். வாங்கும் நிலை இழக்கும்பொழுது வேலைவாய்ப்பு குறையும். இப்படிதாங்க ஒரு சுழற்சி நடைபெறுகின்றது. எனவேதான் பணவீக்கம் சீராக இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் சொல்லுகின்றார்கள். தீடீர் என்று பணவீக்கம் அதிகமாகவோ அல்லது குறைவதோ நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதில்லை.
பணவீக்கம் மிக குறையும் பொழுது அது பணசுறுக்கம் அடைந்துவிடும். அப்படி பணசுறுக்கம் அடையும்பொழுது, பல நேரங்களில் பொருளின் விலை தரைமட்டமாக்கப்படும். அந்த நிலையில் பொருளை ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு எடுத்துசெல்ல முடியாமல் போகும் அந்த அளவிற்கு அதன் விலை குறைந்துவிடும். அப்படிதான் பல நேரங்கலில் உற்பத்தி இடத்திலேயே அந்த பொருளை அழித்துவிடுவதுமுண்டு. சமீபத்தில் தக்காளியின் விலை சரிந்து அந்த வயல்வெளியிலேயே அழித்துவிட்டார்கள்.
இந்தியாவின் பணவீக்கம் தற்பொழுது அதிகமாகின்றதாக சொல்லப்படுகின்றது. பொதுவாக இந்தியாவின் பணவீக்கம் 4.5 ல் இருந்தால் பொருளாதாரம் நன்றாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் பற்றாகுறையை சாமாளிக்க அதிகமாக பணத்தை அச்சடித்துவிடுவார்கள். அப்படி செய்வதினால் பணவீக்கம் அதிகமாகும். இந்த நிலை ஆரோக்கியமானதாக இருக்காது.
தனியார்துறைக்கு அதிகமாக குறைந்த வட்டிக்கடன் கொடுத்தால், பணவீக்கம் எப்படிபோகும்? தனியார்துறைக்கு கடன் கொடுப்பதன்மூலம் பணப்புழக்கம் அதிகமாகி பணவீக்கமும் அதிகமாகும். ஏன் பணவீக்கம் அதிகமாகின்றது? பணபுழக்கம் அதிகமானால் சாமானியனுக்கு வாங்கும் சக்தியும் அதிகமாகும் அப்படி வாங்கும் சக்தி அதிகமாகும்பொழுது பொருளின் விலையும் ஏற்றம் காணும். அதனால் பணவீக்கம் அதிகப்படும்.
எதுவானாலும் பணவீக்கம் என்பது சீராக இருப்பதே நல்லது. நம்நாட்டின் கருப்பு பணத்தை வெளிகொணர்ந்தாலே பணவீக்கம் சீராக வைத்துக்கொள்ளலாம். அது நடக்குமா??????????..........
மீண்டும் ஒரு சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்